கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

90 கதைகள் கிடைத்துள்ளன.

மோஹன்தாஸ் காந்தி

 

 (இதற்கு முந்தைய ‘வெள்ளைச் சிட்டை வியாபரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சந்திரன் தன்னை எப்போதாவது எதிர்பாராமல் தெருவில் நேருக்கு நேர் பார்த்துவிட்டால் மட்டும் சிவராமன் சின்னதாக அளவுடன் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். அதைச் சிரிப்பிலும் சேர்த்துக் கொள்ளலாம்; சிரிக்காததிலும் சேர்த்துக் கொள்ளலாம்! சந்திரனை தெருவில் பார்க்கிற போதெல்லாம் சிவராமனின் மனக்கண் அவரின் உள் கால்சட்டையின் பாக்கெட்களில் கவனமாக இருக்கும்! ஆரம்பத்தில் சந்திரனுக்கு சிவராமனின் குடும்பம் கொஞ்சம்கூட ஒட்டி உறவாடாமல் தள்ளியே இருந்து


தேவதை!

 

 நேர்த்தியாக வகுந்தெடுத்து சீவப்பட்ட தலையில் மல்லிகையை வைத்துக்கொண்டு அவசரமாய் கிளம்பினாள். அம்மா! நேரமாச்சு வேகமா சாப்பாடு எடுத்து வை , ஏம்மா பூ வாசம் இல்லாம இருக்கு?!. ஆமாடி, உனக்கு மட்டும் எல்லாமே குறையாத்தான் தெரியும், மாவட்டத்துக்கே மண்டபம் மல்லிதான் பேமசு, உனக்கு அதுலயும் குறையா?!. இந்தா மதியத்துக்கு தயிரை பிரட்டி உருளைகிழங்கு வச்சிருக்கேன் நேரத்துக்கு சாப்பிடு. சரி சரி, நேராமாச்சு நான் பாத்துக்குறேன். வாசலில் நின்றவாறு போயிட்டு வரேன் அம்மா என்றாள் வெண்பா!.. வழக்கத்தைவிட இன்று


எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை

 

 நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை. ஆனால் எங்களுக்கு யாருக்குமே அழைப்பில்லை.அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார்.பையனும் ஐ.டி. கம்பெனியில் நன்றாக சம்பாதிக்கிறான்.ஆனாலும் இந்த கல்யாணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கிறார் . கோவிலில் திருமணம்.அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு.மொத்தமே நூற்றைம்பது பேர்தான்.அதனால் தானோ என்னவோ அவரோடு நடைப்பயிற்சி செய்யும் எங்களுக்கு அழைப்பில்லை.நாங்கள் ஒரு பத்து பேர் வழக்கமாக நடைப்பயிற்சி முடித்து அரைமணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடமே


முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை

 

 கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது நடுவில் ஆறு ஒன்று செல்கிறது. ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரை தாண்டி அந்தப்பக்கம் எப்படி செல்வது? திருவிழாவைக் கொண்டாடுவது எப்படி என்று யோசணை செய்தாள். அப்போது ஆற்றங்கரையில் எதிர்முனைக் கரையில் மலைமுகட்டில் ஒருவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அந்தக் குழல் இசைக்கு அப்பெண் மயங்கிப் போனாள். அவனுடைய குழலில் வருகின்ற இசையையே இவ்வளவு அழகாய்


இந்தியை ஆதரிப்பேன்

 

 அந்த இளைஞன் திராவிடக் கட்சிகளின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். ஏனென்றால் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து, திராவிடக் கட்சிகள் செய்த போராட்டங்களால் இந்தி மொழி இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டதேயாகும். அதன் விளைவாக அந்த இளைஞனால் இந்தி படிக்க முடியவில்லை, அதனால் அவனால் இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்குள் சென்று விட்டு, மகிழ்ச்சியாகத் திரும்பி வர முடியவில்லை. இந்தி பேசத் தெரியாதவன் என்ற ஏளனத்தோடு மட்டுமே அவனை இந்தி பேசுகிற மக்கள் பார்த்திருக்கிறார்கள். இது அந்த