Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2015

58 கதைகள் கிடைத்துள்ளன.

பால்பன்

 

 இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு. ஆமாம் அதற்கென தனி ஊருக்குத்தேடிப்போய்வாங்கு என்கிறான் நண்பன், இருக்காதாபின்னே,,?இப்படியானதை வாங்க அப்படித்தானே போக வேண்டியிருக் கிறது பஸ் ஏறியோ,அல்லது இரு சக்கர வாகனம் கொண்டோ/ இரண்டு,அறுபது போடவேண்டும்என்றார்கடைசியாய் இரு சக்கரவாகனத்தை சர்வீஸ்பார்த்தஒர்க்ஷாப்க்காரர், அதற்கர்த்தம் இரண்டு லிட்டர் பெட்ரோலும்,அறுபது மில்லிஆயிலும்போடவேண்டும்என்பதே/அவரதுசொல்லைஅமலாக்கினால் அது வந்துவிடுகிறது150ரூபாய் கணக்கிற்கு. இருசக்கரவாகனத்தைநகர்த்தினாலே இரண்டுலிட்டர்பெட்ரோல்,60மில்லி ஆயில்,,,,,,,எனகணக்கில்வந்துவிடுகிறது. மில்லியைநினைக்கையில்ஹெஹெஹே,,,,,,,சிரிப்புத்தான்வருகிறது,,,,நேற்றை க்குமுன்தினம்டீக்குடிக்கப்போன இடத்தில்பரபரப்பு கொஞ்சம் மட்டுப் பட்டுத்தெரிந்தமாதிரிஇருந்தது. டீக்கடைக்குஎதிர்த்தாற்ப்போல்இருக்கிறஒயின்ஷாப்அன்றைக்குத்திறந்திருக்கவில்லை,காரணம்கேட்டபோதுநண்பர்சொன்னார்.கேலியாக””அதைஏன் நீங்க கேக்குறீங்கஇப்ப,ஒங்களுக்கும்அதுக்கும்என்னசம்பந்தம்,தண்ணியிலஒட்டாத தாமரையெலபோலஇருக்குறநீங்க எதுக்கு,,,,?”என்றவாறே” வாங்க ஒங்களுக்குன்னு


முடிவல்ல ஆரம்பம்

 

 “கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில் பாலுவின் கையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பியிருந்தால் பரவாயில்லை! பாலுதான் இவர் கையையும் பார்த்து சொல்லுங்கள் என்று இவன் கையை பிடித்து நீட்டினான்.இவனும் நம்பிக்கையில்லாமல் ஜோசியரிடம் கையை நீட்டினான். உங்களுடைய வாழ்க்கை தனிக்கட்டையாகத்தான் இருக்கும் என்று ஜோசியக்காரர் சொன்னவுடன் பார்த்தாயா எவ்வளவு கரெக்டாக சொல்லுகிறார் என்று கண்களாலே ஜாடை காண்பித்தான்


செம்பக வனம்

 

 “சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”. நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு இன்னும்


முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்

 

 பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை ஸ்மார்ட்டாக சிரித்துக் கொண்டிருந்தார். அவளுக்குப் பிடித்திருந்தது. பூஜாவின் அப்பா இரண்டு ஜோசியர்களிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னார். மாப்பிள்ளை நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பாதிப்பதாகவும், வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடு போய்வர வாய்ப்பிருப்பதாகவும் அப்பா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “இந்த வரன் பூஜாவுக்கு வாய்க்கணும், அவருக்கு


மறக்க நினைத்தது

 

 “ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட காட்டிப் பாரேன்!” பக்கத்திலேயே மருமகள் மேசையைப் பளப்பளப்பாகத் துடைத்துக் கொண்டிருந்ததை சட்டை செய்யாது, கரிசனமாகக் கேட்டாள் தாய். “இவ மலடி இல்லேம்மா!” அதை வாய்விட்டுச் சொல்லவா முடியும்! கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான். சுருங்கிய முகத்துடன், தன்னுடைய படபடப்பை அடக்கவென, வேகமாக இயங்கிய அவளது கரங்களும் கண்ணில் பட்டன. அவள்மீது இரக்கமும், கூடவே கோபமும் எழுந்தது. அப்போதைக்குத்