கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

 

 வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “ பூனையாய் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து “ கண்ணம்மா ..கண்ணம்மா.. “ என்றது. இந்த சமயத்தில் கைபேசியை எடுத்து பேசி விடக்கூடாது. எடுக்கவில்லையென்றால் வகுப்பில் இருப்பதாக நினைத்துக் கொள்வர்.அது சவுகரியம்.எடுத்து விட்டால் கல்லூரியில் இல்லை


கோகிலாவின் வருகைக்குப் பின்னால்…

 

 மனிதர்களை எப்படி புரிந்து கொள்வது என்பது இறுதி வரை புலப்படாமல் போய்விடுமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொருளாதார அளவில் வாழ்க்கையில் மேலெழுவதும் கீலெழுவதும் மனிதர்களுக்கு நடந்திருக்கிறது என்பதில் அவ்வளவு வியப்புகள் ஏற்படுவதில்லை. அவை பற்றிய நிறைய கதைகளையும் அனுபவங்களையும் நேரில் கண்டதாலோ கேட்டதாலோ இருக்கலாம். ஆனால் உறவுகளில் ஏற்படும் முரண்களைப் பற்றிதான் புரிந்துகொள்ளவும் இயலவில்லை. அதிகமாக யோசிக்கவும் செய்கிறேன். நர்ஸ் கோகிலா கருவேலம்பாடு கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிக்காக கோவையிலிருந்து வந்திருந்தாள். ஆரம்ப சுகாதார நிலையங்களையும்


சகோதரிகள் இருவர்

 

 “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு


உத்தரவின்றி அள்ளிக்கொள்

 

 மகள் அழுதுகொண்டே அருகில் வந்தாள். “ஏம்மா?, ஏம்மா அழரே, இப்ப விளையாடிக்கிட்டு தானே இருந்தே, எங்கேயாவது அடிபட்டதா?” இதை சொல்லிக்கொண்டே அவளை தடவிக்கொடுத்து அன்பாக கேட்டேன். “அண்ணன் அடிச்சிட்டான், அவன் தினமும் அடிக்கிறான்….” இது அவள் கூறி புலம்புவது, தினமும் இரு பிள்ளைகளும் ஒருத்தொருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் டெய்லி அலவான்ஸ் மாதிரி. பெண் பிள்ளை என்றால், நம் குடும்பத்தில் அனைவருக்கும் அலாதி ஆசை. செல்லமும் அதிகமாக இருக்கும். “ஏண்டா அடிச்சே பிள்ளையை, சும்மா தானே விளையாடிக்கொண்டிருந்தா…” அண்ணனை விரட்டவில்லை


ஒகனேக்கல்

 

 பாஸ்கர் சொல்கிறான்: அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்கள்தான், பாவம் திவ்யாவின் வாழ்க்கை முடிந்துவிடும். எவரும் சந்தேகப் படாத வகையில் அவளை ஓகனேக்கல் அருவியின் உச்சிக்கு அழைத்துச் சென்று ‘ஹோ’ வென இரைந்து பொங்கிவிழும் அருவியினுள் தள்ளிவிடப் போகிறேன். உடனடியாக அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்று, என் அன்பு மனைவி பாறையிலிருந்து தவறி அருவியினுள் விழுந்து விட்டாள் என


வளர்மதி டீச்சர்

 

 வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி” தலைமையாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி “குட்மார்னிங் சார்” என சொல்ல மெல்ல தலையசைத்து என் நாற்காலியில் உட்கார்ந்தேன். மணி! கொஞ்சம் பேனை போடு என்று சொல்லிவிட்டு சுழலும் காற்றாடியின் காற்றை அனுபவித்து …ஸ்..அப்பாடி வாய் விட்டு சொன்னேன், வாசலில் நிழலாடியது மெல்ல தலையை திருப்பி வாசலை பார்த்தேன், கல்பனா டீச்சர் நின்று கொண்டிருந்தார்கள், உள்ளே வாங்க டீச்சர்.. கல்பனா டீச்சர், கொஞ்சம்


முன்னேற்றம்!

 

 “என்னங்க!…….இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?….எங்களோட தினசரி ‘வாக்கிங்’ வரற சுந்தரிக்கு இன்று என்ன நடந்தது தெரியுமா?” “ சொன்னாத் தானே தெரியும்?….” “ சுந்தரியின் கழுத்து செயினை இன்னைக்கு அறுத்திட்டுப் போயிட்டாங்க!…..” “இதில் என்னடி அதிசயம் இருக்கு?….நம்ம கோயமுத்தூரிலே இது தினசரி நடக்கிறது தானே?…” “ என்னங்க அநியாயமா இருக்கு!…எட்டுப் பவுன்….கெட்டிச் செயினுங்க… செயினை அறுக்க ஒரு கத்தியைப் பயன் படுத்தியிருக்காங்க…அது ஆபரேஷன் தியேட்டர் கத்தி மாதிரி இருந்ததாம்!…..இரண்டு பேருமே ஹெல்மெட் போட்டிருந்தாங்களாம்! ….வண்டி ஒரு நொடி தான்


பாகீரதி… பாகீரதி…

 

 ‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர்


புலம்(பல்) பெயர்தல்!

 

 மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்……இந்த நகரில்,காலநிலையை ‘கோடை’யாகி விட்டதே,இனி,எல்லா நாளும் வெப்பமாகவே இருக்கும்!.. என்று உடனே ஒரேயடியாய் சொல்லி விட முடியாது.நேற்று,சிறிது கூதலை ஏற்படுத்தியது, இன்று,எரிக்கிற நாளாக வாட்டப் போகிறது. திலகன்,(10வயசு) தனது மகள் இருக்கும் சக்கர நாற்காலியை,தள்ளிக் கொண்டு பல்கணிக்கு வந்தான். மனைவியின் ரசனை காரணமாக பூத்தொட்டிகள் சில வாங்கி ஓரமாக வைத்திருந்தாள். அவற்றில்,ஊதா,சிவப்பு,மஞ்சள் என பூக்கள் …பூத்திருந்தன. சிறிலங்காவில், அங்காங்கே பூத்துக் கிடக்கிற அழகழகான ‘பத்தைப் பூக்களை’யெல்லாம் இங்கே தொட்டிகளாக்கி.. வீடுகளில் காட்சிப்படுத்துகிறார்கள். மாடி, மாடியாய்


கணிதம்….!

 

 ஆறு மாதம் பிரிந்திருந்த வருத்தம் துளிக் கூட இல்லை என்று தோன்றியது. அட, வருத்தம் வேண்டாம்…அந்த உணர்வு கூடவா இருக்காது? ஒரு வேளை அதை வெளிக் காட்டுவது கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறாளோ? கட்டிய கணவனிடம் என்ன கௌரவம்? அவனிடமும் கெத்தாகக் காட்டிக் கொள்ள வேண்டும். என்ன மனநிலை இது? எவ்வளவோ சண்டைகள், சச்சரவுகள், மனத் தாங்கல்கள், வருத்தங்கள்….எல்லாமும் காலப் போக்கில் விலையில்லாமல்தானே போயின? புருஷன் பெண்டாட்டிக்குள்ள எதுக்குதாண்டா விலை இருக்கு? – எப்போதோ அம்மா சொல்லி