கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 5, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மாவு மிஷின் தாத்தா

 

 மாவு மிஷினின் சத்தம் காதைப் பிளந்தது. கனகராஜ் தாத்தா பல்லைக் கடித்தபடி மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது. நல்ல கறுத்த உடல். மிஷினில் உட்காருவதற்கு முன் கழற்றப்பட்ட சட்டை மாவு ஆலை மாலை ஏழு மணிக்கு மூடப் படும் போது தான் மீண்டும் அவர் உடலில் ஏறும். காலை எட்டு மணிக்கு வேலையை ஆரம்பித்தார் என்றால் இரவு ஏழு ஏன் சில சமயம் எட்டு வரை கூட நீண்டு விடும். மாவாலை முதலாளி இவருக்கு


காரல்மார்க்சும் காயத்ரியும்

 

 அன்றும் வேலை கிடைக்காமல்தான் ரூமிற்கு திரும்பினேன், தோழர் ரூமில்தான் இருந்தார், ஆம் அவரை நாங்கள் தோழர் என்றுதான் அழைப்போம், நாங்கள் என்றால் நான், எங்கள் காலேஜில் உள்ளவர்கள் எங்கள் ஏரியா நண்பர்கள் எல்லோரும். முதலில் என்னை பற்றி , நான் இந்த வருடம் தான் இன்ஜினியரிங் முடித்து வேலை தேடி சென்னை வந்திருக்கிறேன், இல்லை ஏன் அப்பாவால் அனுப்பிவைக்கபட்டேன். தோழர் …. என் கல்லூரி சீனியர், என் ஏரியா, இருவரும் ஒரே பேருந்து, ஆனால் அவருடனான என்னுடைய


விரல் ஆட்டும் வேட்பாளர்

 

 நாங்கள், மாடிவீட்டு ஒன்றில், வாடகையில் குடியிருந்தோம். நாங்க குடிப்போன வேலை, நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு; வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஓட்டு சேகரப்பில், தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் குடியிருந்த பகுதிக்கும், அன்று ஒரு வேட்பாளர், திறந்த வெளி ஜீப்பில் வந்துக்கொண்டிருந்தார். அவர் வரும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டு, நான் மாடியில் இருந்து எட்டிப்பார்தேன். அவர் கீழே இருந்து என்னைப் பார்த்தார். அவர் கையைக் காண்பித்தார். நானும் என் கையைக் காண்பித்தேன். அவர் இரு விரல்களை மட்டும் மடக்காமல் பிற


பாத பூஜை

 

 உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை கேட்க, அவள் அமர்ந்திருக்கும் நேரம் சுகமான ஓர் அந்தி மாலைப் பொழுது. கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே இறை வழிபாடு முடித்துக் கொண்டு வந்த தெய்வீக உயிர் சிற்பமாக அவர். அவரை நேரிலே பார்த்தால், , ஒழுக்கம் தவறாத அசல் பிராமண குலத்து உத்தம புருஷன் போல முகத்தில் தீர்க்கமான ஆதர்ஸக் களையுடன், ஒரு வழிபாட்டு


செய்யாமையாலும்…

 

 “”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில் ஊறிக் கிடந்த அழுக்குத் துணிகளை அள்ளிப் படித்துறையில் போட்டாள் சிவனி ஆச்சி. துணிகளுக்குச் சோப்புப் போட்டுக் கொண்டிருந்த மயிலாள், சிவனி ஆச்சியை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு, மீண்டும் தனது பணியைத் தொடரலானாள். “”நீ நாகரீகமாச் சோப்புப் போடுத. நான் பழைய பஞ்சாங்கம். சலவைக்காரத்துல துணிகளை முக்கி, ஆத்தாங்கரை வரைல சுமந்துக்கிட்டு வந்து தொலைக்கிறேன். சோப்பு