கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

மதங்களின் சங்கமம்!

 

  “”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத் திறந்தாள் ஜோதி. “”அன்வர்பாய், கையில் பேரனை தூக்கியபடி நிற்க, அவருடன் இன்னும், நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். “”அம்மா… டாக்டரை சீக்கிரம் வரச் சொல்லுங்க. நல்லா விளையாடிட்டிருந்த பிள்ளை திடீரென்று கை, கால் வெட்டி, மயக்கமாக கீழே விழுந்துட்டான்.” கண்களில் கண்ணீர் வழிந்தோட, பதற்றத்துடன் கூறினார் அன்வர் பாய். அவசரமாக வெளியே வந்தான்


நேயர் விருப்பம்

 

 ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம் படிக்கும் அவள், மூன்றாம் பருவத் தேர்வுகள் எழுத வந்திருந்தாள். முந்தின நாள் இரவு வந்து, அவளை விட்டு, விட்டு, மறுநாள் ஊர் திரும்பி போய் விட்டான் கணவன். தொடர்ந்து ஆறு நாட்கள், மாலையில் தேர்வு. அப்பா ரகுநந்தனும், அம்மா ஜெயந்தியும், ஆறு நாட்களும் மகளை சிறப்பாக கவனித்து அனுப்ப திட்டமிட்டிருந்தனர். நான்கு மாதங்களுக்கு பின் வந்திருக்கும்


அம்மாவுக்காக…

 

 கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண் திறக்க முடியாமல் கிடந்தாள். நொய் கஞ்சி காய்ச்சி, வலுக்கட்டாயமாக, அரை டம்ளர் குடிக்க வைத்து, மாத்திரையை போட்டு படுக்க வைத்திருந்தாள் சுதா. அவளுக்கு நினைவு தெரிந்து, நோய் என்று அம்மா ஒருபோதும் படுத்ததில்லை. எப்போதாவது, தலைவலி, காய்ச்சல் வரும். பெட்டிக் கடையில் ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டு, வேலைக்கு கிளம்பி விடுவாள். “”ஏம்மா… உடம்புக்கு முடியாத


அன்பால் வெல்லலாம்!

 

 மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. “”இன்னைக்கு வெதர் டெலி-காஸ்டில், ஈவினிங் ஸ்நோபால் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நீங்க சீக்கிரம் வந்துடுங்க சங்கர்.” “”ஓ.கே., ஹேமா… உனக்கு தான், நாலு நாளைக்கு ரெஸ்ட்; என்ஜாய் பண்ணு… பை.” ஜெர்கினை போட்டபடி காரில் ஏறி, சங்கர் செல்ல, குளிருக்கு இதமாக கைகளை கட்டியபடி வெளியே பார்த்தாள். ஊரிலிருக்கும் அம்மா ஞாபகம்


மவுனத்தின் குரல்!

 

 மனோகருக்கு, “விர்’ ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது ஏதாவதொரு சந்தோஷமான கனவு என்ற அளவில் தான் நினைவு இருந்தது. ஏனென்றால், அவன் எதற்காகவோ, மகிழ்ச்சியுடன் கனவில் சிரித்த போதுதான், இந்த வீரிட்டு அலறிய அலாரம், அவன் கனவு, சிரிப்பு எல்லாவற்றையும் சிதைத்தது. “சை…’ என்று அ<லுத்தபடி, அலாரத்தை நிறுத்தி, எழுந்து அமர்ந்தான். பத்மா, அருகில் இல்லை. அவள் எழுந்து, சமையலறையில் வேலை செய்வது, நீளமாக