கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 5, 2013

28 கதைகள் கிடைத்துள்ளன.

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி

 

  இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய் கடைசியில் முயற்சியைக் கைவிட்ட பிறகு ஞாபகம் வந்து தொலைக்கும். ஆனால் பாட்டியை முதன்முதலாகப் பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கிறேன் (அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பா?). நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த இடத்தின் பெயர் ஹெல்த் கேம்ப். வெள்ளைக்காரர்களோ அல்லது அவர்களது இந்திய குமாஸ்தாக்களோ வைத்த பெயர். பசும்புல் நிறைந்த மேட்டுப்பகுதி. தாசில்தார்


குட்டச்சி

 

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்; சாப்பிட வாருங்கள்’ ஒலிப்பெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். அழைப்பு விடுத்த நேரம் நண்பகல் இரண்டு மணி. குடிசைக்குள் முடங்கிக் கிடந்த குட்டச்சி எழுந்து கொண்டாள். நாக்கின் சுவை மொட்டுகள் ருசியான பதார்த்தங்களுக்காக ஏங்கின. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவதை தவிர, அவளால் வேறொன்றையும் செய்ய முடியாத நிலை. ஊர் ஜனமான சொந்த பந்தங்கள்


ஊற்று வற்றாத மண்

 

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர், எதிர் சீட்டில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தார். கையில் ஒரு புத்தகம், மூன்றுபேர் அமர்வதற்கான அந்த இருக்கையில் அவர் மட்டுமே இருந்தார். மற்ற இருக்கைகளில் யாரேனும் ஓசூரில் ஏறலாம் அல்லது காலியாகவே இருக்கவும் சாத்தியமென்பதால்,


சாமிக்கெடா

 

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி சோறு போடுறது… கோயிலுக்கு வந்த சனமெல்லாம் பொழுதோட ஊர் போய் சேர வேண்டாமா…” பூசாரியிடம் கோபித்துக் கொண்டார் சம்பந்தி. வருடா வருடம் ஆடி மாதம் பொண் வீட்டில் அவர்கள் குல தெய்வத்துக்குப் படையல் போடுவது வழக்கம். பொண்ணும், மாப்பிள்ளையும் கூப்பிட்டதால்தான் தட்டாமல் வருவார்கள். அது மட்டுமில்லை. மாப்பிள்ளை கரகம் வேறு எடுப்பதால் சம்மந்தி வரவேண்டும் என்பது


புதுமைப்பெண்களடி!

 

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ வாங்கிக் குடித்துக் கொண்டு சாலை போடும் தொழிலாளர்களை விரட்டிக் கொண்டிருந்தான். பத்து லட்ச ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிஞ்சிப் போனால் ஏழு லட்சம் தான் செலவாகும். பாக்கி மூன்று லட்சம் அரசுப் பணத்தில், யூனியன் சேர்மனுக்கு ஒரு லட்சம். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு தலா ஐந்தாயிரம் போக ஒன்றரை தேறும். பஞ்சாயத்துத்