கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

246 கதைகள் கிடைத்துள்ளன.

சின்னப் பையன் !

 

 அடர்ந்த காட்டில் உள்ள புல்வெளியில், தனக்கு சொந்தமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். பன்றிகள் எல்லாம் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி மேய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அந்தக் காட்டுப் பக்கம் எப்பிராயீம் என்ற சிறுவன் வந்தான். அங்கே ஆனந்த் நிற்பதைக் கூட கவனிக்காத அந்த சிறுவன், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளின் மீது தன் பார்வையை செலுத்தினான். தனக்குத் தேவைப்படுகிற மூலிகைச் செடிகளைப் பறிக்கத் தொடங்கினான். அப்போது அவன் பின்னால் நின்று நன்றாக சிரிக்கத் தொடங்கினான்


ஏன் வந்தாய் ?

 

 அந்த மலைச்சாரலில், ஓர் அத்தி மரம் உண்டு. அது கப்பும், கிளையுமாக அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வாசம் செய்தது. இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று தீனி தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த தீனியில், கொஞ்சம் அவற்றுக்கென்று கொடுத்து வந்தன. அந்தத் தீனியைத் தின்றே அவை வாழ்ந்து வந்தன. ஒருநாள், பூனை ஒன்று


உண்மை விளம்பி !

 

 சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, “யோகி உண்மை விளம்பி’ என வர்ணித்தனர். “மெய் உயர்வைத் தரும்; பொய் தாழ்வைத் தரும்’ என்பதுதான் அவரின் தாரக மந்திரம். ஆகவே, அதையே உபதேசித்தும் வந்தார். ஒருசமயம் நதி ஓரத்தில் தன் சிஷ்யர்களோடு செல்லும்போது, ஒருவன் தான் பிடித்த ஆமையைக் கொல்ல அதன் முதுகின்


நான் சாகமாட்டேன் !

 

 பண்டைக் காலத்தில் சீன நாட்டில் ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐவரும் ஒரே மாதிரியாக இருப்பர். உடல் தோற்றத்தை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமே. ஆனால், அவர்களின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. முதல் மகன் கடலையே குடித்து விடுவான். இரண்டாம் மகனுடைய கழுத்து இரும்பைப் போல் வலுவானது. அடுத்தவனின் ஆற்றல் என்ன தெரியுமா? அவசியம் ஏற்பட்டால் அவன் தன் கால்களின் நீளத்தை அதிகப்படுத்தி கொள்வான். அந்த நீளத்திற்கு வரம்பே


அவரவர் விதி !

 

  இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், “”காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!” என்றார். இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர்