கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

244 கதைகள் கிடைத்துள்ளன.

எழுதிச் செல்லும் விதியின் கைகள்

 

 சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனை கிளுக்கினேன். “உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி; அடுத்து “கிளிக்”, வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க ஸ்ரீ தனலக்ஷ்மி எந்திரம் வாங்கு என்று ஆலோசனை சொன்னது அடுத்த வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி; மீண்டும் “கிளிக்”, இங்கே ஏதோ ஒரு பாட்டுக்கு சீருடையில் ஒரு கூட்டமே


சந்தியா அல்லது சரண்யா

 

 குருவும் சந்தியாவும் எதிரெதிர் வீட்டில் வசித்தாலும் இருவருக்கும் அவ்வளவாக பரிட்ச்சயம் கிடையாது. பத்து வருடங்களாக இப்படிதான் இருந்தது. சந்தியாவுக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்பது கனவு. அந்த கனவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். குடும்ப பொருளாதாரம் அதற்கு வழிவகுக்கவில்லை என்றாலும் தன் சுய முயற்சியில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுசுகளுக்கு ட்யூஷன் நடத்தி சமாளித்துக் கொண்டிருந்தாள். ( *yes*… நீங்க படிச்சு சலிச்சுபோன அதே பழைய காதல் கதை


தோற்றப்பிழை

 

 “இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான் நம்ம தலையெழுத்து. என்ன பண்றது?.” சமீபத்தில் மதுரைப் பக்கம் நடந்த சாதிச் சண்டையில் நாலைந்து பேர் செத்துப் போனதைப் பற்றி பேச்சு வந்த போது மதிவாணன் என்கிற எங்கள் மதிப்பிற்குரிய மதி சார் இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். நாங்கள் என்பது மணி ஆகிய நான், நண்பர் தினகர், அப்புறம் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான எழுத்தாளரும்,


யெல்லோ கார்ட்

 

 திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்தபோது மணி 10:10 ஆகியிருந்தது. கல்யாணம் எந்த மண்டபத்தில்? தெரியவில்லை. பத்திரிக்கையில் போட்டிருந்தது இப்போது நினைவில்யில்லை. பத்திரிக்கையை எடுத்து வந்திருக்கலாம்… சை.. இந்த பத்திரிக்கையால் இன்னொரு தொல்லை. ஒரு வாரத்திற்கு முன். மீண்டும் மீன்டும் மொக்கையாகும் அரியர் ரிசல்ட் பார்த்துவிட்டு அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைந்தபோது, “யார்டா அந்த நந்தினி?” என்று அம்மா கேட்டபோது தூக்கிவாரிப்போட்டது. பக்கத்தில் அனிதா சிரித்துக் கொண்டிருந்தாள். அடிப்பாவி! என்னோட ஏ.ஜி-ய எடுத்து படிச்சுட்டு, அதுல எவனாவது எதையாவது


ராட்சஸம்

 

 தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என நான்கு பெரிய வர்ணத் துண்டுகள். சாரம் முன்பே கட்டப்பட்டுவிட் டது. துண்டுகளை ஒட்டுப் போட் டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி. பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளைக் காலை யில் கூட்டம். விடிவதற்குள் முடித் தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில்