கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 8, 2012

14 கதைகள் கிடைத்துள்ளன.

மூ(டா) நம்பிக்கை

 

 “மேலும் ஒரு மர்ம சாவு!, சாத்தான் வளைவில் மர்ம சாவு தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் சுந்தர் . “என்ன மச்சி என்ன விஷயம்?” என்று வினவினான் இளங்கோ. “இல்லை இளங்கோ அங்கு விபத்தில் இறந்த ஒருவன் இரவில் ஆவியாக அலைவதாகவும், அந்த ஆவி தான் மக்களை காவு கொள்வதாகவும், அந்த வட்டத்தில் வாழும் மக்கள் நம்புகிறார்கள் . அவர்கள் நம்பிக்கையை மெய்பிக்கும் விதமாக, அங்கு இது வரை பத்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. போலீசுக்கும்


வியூகம்

 

 தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஒரு மண்ணுந்தெரியல. “ஆரது.” “அக்ரி ஆபீஸர்.” “ம்..ம்..ம்..பயிர் பச்சை டாக்டரா?.” ——ஆபீஸர் சிரித்தார்.கிட்டே சென்றார். கிழவன் உட்காருமாறு திண்ணையைத் தட்டவும்,உட்கார்ந்தார். “என்னவோ புதுசு புதுசா நெல் ரகங்கள கொண்டாந்து இங்க பயிர் பண்ண வெக்கறீங்க. ஒண்ணும் புண்ணியமில்லை .மூட்டைமூட்டையாய் உரமும்,மருந்தும் கொட்டி கொட்டி, கிழவி புள்ளை பெத்த கதையாப் போச்சுது. சவலைப் புள்ளையாப் போயி


வாழ் கனவு

 

 எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ முகாமில் இருந்து அடிக்கின்ற ஷெல் வீட்டுக்கு மேலால் கூவிக்குகொண்டு போய் விழுந்து வெடித்து அதன் சிதறல்களால் வீட்டுச் சுவர்களில் காயம் வரும், சில வேளை வீட்டிலேயே ஷெல் விழுந்து சமையலறையும், சாமி அறையும் சிதறிப் போய்க் கிடக்கும், உலங்கு வானூர்த்தி வானுக்கு மேலே வட்டமிட்டு தன் கண்ணுக்கு தெரிகின்ற ஆட்களை எல்லாம் 50 கலிபர் ரக துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளும். எல்லாம்


பொம்மலாட்டம்

 

 (பார்வையாளர்களின் கோணத்திலிருந்து பார்க்கையில், மேடையிலிருந்து இடது வலது ஆக ஒரு வீதியிருக்கும். இந்த வீதி மேடையில் சற்று பின்தள்ளி இருக்கும். வீதிக்கும் மேடை விளிம்பிற்குமிடையில் ஒரு “பள்ளம்” இருந்தாக வேண்டும். பார்வையாளர்களிற்கு இந்தப் பள்ளம் தெரியத் தேவையில்லை. பள்ளத்திற்கும், பார்வையாளர்களிற்குமிடையில் ஒரிரு செடிகளை புதர்மாதிரி வைக்கலாம். பார்வையாளர்களிற்குத் தெரிய வேண்டியது ஒரு கை மட்டுமே. உடம்பு பள்ளத்திற்குள் இருப்பது போலவும், கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பது போலவும் இருக்க வேண்டும்.) இருவர் பள்ளத்தின் விளிம்பில் நின்று கொண்டு,


நான் பைத்தியம் இல்லை

 

 (இது முருகதாஸ் ராஜாராமன் என்றொரு இளம் வாலிபரின் சமீபத்திய அனுபவத்தையும், அதன் பின் விளைவுகளையும் விபரிக்கும் உண்மைக் கதை. முருகதாஸ் எம்மை மிகவும் விரும்பிக் கேட்டபடியாலும், அவருக்கு இலங்கைத் தமிழர்களான நாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயும்தான், அவருடைய கதையை இங்கு பிரசுரிக்கிறோம். இக்கதையை முருகதாஸ் எமக்கு சொன்னபடியே முடிந்தவரை எழுதியிருக்கிறோம். உங்களால் முடிந்த உதவியை இவருக்கு செய்யும்படி முருகதாஸின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். நன்றி -ஆசிரியர் குழு.) அண்ணை எனக்கு சொந்த ஊர் உரும்பிராய். அங்கே


போலிகள்

 

 வு.ஏ. இல் நியூஸ் வாசிக்கிற பெட்டை அடிக்கடி, தேவையில்லாமல் பல்லைக் காட்டியது எனக்கு விசரேத்தியது. இவளவைக்கு ஏன் இநதத் தேவையில்லாத வேலை. நியூஸ் வாசிக்க வந்தால், நியூஸை வாசித்து விட்டுப் போறதுக்கு சும்மா போலித்தனமாக நடித்துக்கொண்டு… போலி நாய்கள்! எல்லாருமே போலிகள்! இண்டைக்கு எனக்கொரு பொன்னான நாளாய் அமையப்போகுது என்று ராத்திரி படுக்கேக்கை நினைத்துக் கொண்டனான். ஆனால், விடியக்காத்தாலை இந்தப் பெட்டை நாய் பல்லைக்காட்டி விசரேத்துது. இண்டைக்குத்தான் தேவகியை ஆறேழு மாதத்திற்குப் பிறகு பார்க்கப் போகிறேன். நான்


இரண்டு கோணங்கள்

 

 கோணம் சூ1 கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து, படிப்பு முடிந்த கையுடன் நல்ல வேலை எடுத்து, இன்று, சிறந்த ஒரு எலெக்ட்ரிகல் இ;ஞ்சினீயராக, கை நிறைய சம்பளம் எடுக்கின்றேனென்றால், என்னுடைய புத்திசாலித்தனமே காரணம். நான் குள்;ளமாக, கொஞ்சம் குண்டாக இருப்பது கிரிக்கட்டில் வேண்டுமானால் எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கலாம், ஆனால் என்னுடன் செஸ்ஸோ, கார்ட்ஸோ விளையாடினால் தெரிந்து


முகம்

 

 மாயவன் ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக் கடந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். கூப்பிடு தூரத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தும், நான் மட்டுமே அங்கிருப்பது போல் ஒரு உணர்வு. முகம் தெரியாத சிலர் இன்னும் சில முகம் தெரியாதவர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டு செல்ல, வேறு சிலர் தூரப் பார்வையுடன், யோசனைகளுடன் அவசரமாகச் செல்ல, நான் தற்காலிகமாக மறைந்து போனேனோ என்று சந்தேகமாயிருந்தது. வீடியோ கடைக்


தாகம்

 

 அம்மாவும் நானும் இரவு சாப்பாட்டை முடித்துப்போட்டு வாசற்படியில் இருந்;து அம்புலிமாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நிலா நிலா ஓடி வா பாட்டை நான் பாடினேன். அப்பா வந்து அம்மாவைப் பேசினார். நீ ஏன் அவன் ஆனந்தன் வீட்டை போனி. உனக்கெத்தனை தரம் சொல்கிறது அந்த நன்றி கெட்ட நாய்களோடு கதைக்க வேண்டாம் என்று. ஆ. அம்மா என்னுடைய தலையைத் தடவிக் கொண்டு பேசாமல் இருந்தா. ஏன் நான் ஒருத்தன் இங்கை கதைக்கிறது கேக்கவில்லையோ. ஏன் உப்ப கத்துகிறீங்கள். அம்மாவுக்கும்


மீன் தொட்டி

 

 “அப்பா..” “என்னடா..” “எனக்கு வேனும்பா..” “திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா..?” “எல்லா பிரண்ட்ஸ் வீட்லேயும் இருக்கு..” “இந்தா..பாரு.. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.. படிக்கிற பையன் நீ… அதையே பாத்துக்கிட்டு இருப்பே… படிப்புக் கெட்டுப் போகும்… தெரியுதா?..” மோகன் ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிற பையன். நன்றாகப் படிப்பான். தன் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பான். கூடப்பிறந்தது ஒரு தங்கை மட்டும். அப்பா, தேவா, ஈபீ ஆபீஸில் கிளார்க். அம்மா, பாக்கியம், வீட்டோடு. சொந்த வீடு. எளிய இனிமையான