இரண்டு கோணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,392 
 

கோணம் சூ1

கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து, படிப்பு முடிந்த கையுடன் நல்ல வேலை எடுத்து, இன்று, சிறந்த ஒரு எலெக்ட்ரிகல் இ;ஞ்சினீயராக, கை நிறைய சம்பளம் எடுக்கின்றேனென்றால், என்னுடைய புத்திசாலித்தனமே காரணம். நான் குள்;ளமாக, கொஞ்சம் குண்டாக இருப்பது கிரிக்கட்டில் வேண்டுமானால் எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கலாம், ஆனால் என்னுடன் செஸ்ஸோ, கார்ட்ஸோ விளையாடினால் தெரிந்து கொள்வீர்கள் என்னுடைய புத்திசாலித்தனத்தைப் பற்றி. என்னோடு செஸ் விளையாடியவர்களில் ஒருத்தரும் தோற்காமல் போனதில்லை. சில நேரங்களில் நானும் தோத்திருக்கிறேன், ஆனால் 99மூ, ஒம் 99மூ நான்தான் வெல்கிறனான். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு ©ச்சி – ஒரு புளு – எனக்கு புத்திசாலித்தனம் காட்ட வந்து, இன்று பரிதவித்துக் கொண்டிருக்கிறது என்ற பரிதாபகரமான உண்மையை, அந்தப் புளுவின் மடமையை உங்களிற்கு காட்டுவதற்குத்தான்.

சிவா என்ற இந்தப் புளு என்னோடு ஐந்து ஆறு வருடங்களாகப் பழகி வந்திருந்தும், என்னுடைய மகிமையை அறிந்திருந்தும், இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்குமா, என்று எனக்குக் கூட முதலில் சந்தேகமாக இருந்தது. ஆனால் ஒரு முட்டாள் முட்டாள்தனமான காரியத்தைத்தானே செய்வான்! இவன் என்னிலும் பார்க்க ஆறு, அல்லது ஏழு வயது இளமை. என்னிலும் கொஞ்சம் கூட உயரம்;. நல்ல நிறம்.

இந்த சிவா என்னுடை வீட்டிற்கு முந்தியிலிருந்தே அடிக்கடி வந்திருந்தாலும், நான் கல்யாணம் கட்டியதிலிருந்து இன்னும் கூட வரத்தொடங்கினான். அப்பவே எனக்கு சாடையாக சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் நான் இவனுடைய நட்பை பெரிதாக நினைத்ததால், ஒன்றும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இவன் ஏன் அடிக்கடி என் வீட்டிற்கு வந்தவன் என்று உங்களில் புத்திசாலிகளிற்கு ஏற்கெனவே விளங்கியிருக்கும்: என்னுடைய பெண்சாதியின் வடிவுதான் காரணம்.

என்னுடைய படிப்போ, வேலையோ, சம்பளமோ இருந்திருக்காவிட்டால், அப்படி ஒரு வடிவான பெண்ணை நான் கனவிலும் கட்டியிருக்க முடியாது. எனக்குத் தெரியும் நான் வடிவில்லையென்று. என்னுடைய ஐந்தடி நாலங்குல உயரமோ, முன்னால் கொஞ்சம் மொட்டையால் இருப்பதால் பரந்த நெற்றியோ (இது அறிவைக் குறிக்குமென்பார்கள்), அல்லது மாநிறமான தோலோ அவர்;களைக் கவர்ந்ததால், அவர்களுடைய மகளைத் தரவில்லை என்று எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், அதே சமயத்தில், அழகை மட்டும் வைத்து சுகம் காண முடியாதென்ற உண்மை அவர்;களுக்கும், எனக்கும் நல்லாவே தெரிந்திருந்தது. அதனால்தான் லதாவை சந்தோஷமாக எனக்கு கலியாணம் செய்து தந்தார்கள். சீதனம் கொஞ்சம் குறைவுதான். (எவ்வளவு என்று இங்கு சொல்ல நான் விரும்பவில்லை). அவள் கூட சந்தோஷமாகவே இருந்தாள். பெண்களுக்கு பணம்தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம். அவளைப் பொருத்த வரையில் வீக்-எண்ட்களில் நடக்கும் பார்ட்டிகளிற்குப் போய், அங்கு வரும் மற்ற பெண்களுக்கு

தன்னுடைய சாறியை, நகைகளை காட்டுவதில்; அல்லது எங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு, புதிதாகப் போடப்பட்டிருக்கும் கார்பெட், வோல்பேப்பர், சோஃபா செட் போன்றவற்றைக் காட்டுவதிலேயே, என்னைக் கட்டியதன் அர்த்தமும், சுகமும் கிடைத்து விடுகிறது. வருகிறவர்கள், “லதா, அந்த சாரி நல்லாயிருக்குது; கன காசு செலவாயிருக்கும். என்ன?” என்று கேட்க் இவள் அதன் விலையை சொல்ல் கேட்டவர்கள் வாயை மூட மறந்து, கொஞ்சம் பொறாமையுடன் இவளைப் பார்க்;க – அவளைப் பொறுத்தவரை, அதுதான் அவளுடைய ஓர்காஸம்! பலர் இதையே திரும்பத் திரும்ப ஒரே இரவில் கேட்டால், மல்;டிபிள் ஓர்காஸம்!

அல்லது, அப்படித்தான் நான் சில மாதங்களிற்கு முன்னர் வரை நினைத்திருந்தேன். அப்போதுதான் எனக்கு உண்மையான சந்தேகம் சிவா மேல் வர காரணமாயிருந்த சில சம்பவங்கள் நடந்தன.

ஒரு நாள் நான் என்னுடைய ஃப்ரென்ட் ஒருத்தனை சந்திப்பதற்காக, வேலை முடிய முதலே, இரண்டு மணி போல், ஜெரார்ட் ஸ்டரீட் பக்கமாகப் போக, இவளும் சிவாவும் அங்கே ஒரு சாரிக் கடைக்குள் போவதைக் கண்டேன். எனக்கு ஒரே டென்ஷனாகி விட்டது. ஆனாலும், நான் ஒன்றும் செய்யாமல், என்னதான் நடக்கிறது பார்போம் என்று அங்கங்கே மறைந்து நின்று பார்தேன். அவன் ஏதோ சொல்ல இவள் சிரிக்கிறதும்; பிறகு, அவள் ஏதோ சொல்ல இவன் சிரிக்கிறதுமாக நேரம் போனது. சில நேரங்களில் அவளின் கையை சிவா பிடித்து கொண்டு நின்றான். அதற்கு மேல் அங்கு நின்றால் ஏதாவது நடந்து விடும் என்று நான் அங்கிருந்து போய்விட்டேன்.

இப்படி சிவாவுடன் ஷொப்பிங் போவதாக லதா எனக்கு முதலே சொல்லவில்லை; போனதாக பிறகும் சொல்லவில்லை. அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

இது நடந்தது ஒரு புதன் கிழமையன்று. அடுத்த சனி இரவு ஒரு சின்ன பார்ட்டி நடத்துவதாகச் சொல்லி, சிவாவை வரச் சொல்லியிருந்தேன். இப்படியான நேரங்களில் வேளைக்கே வந்து சமைக்க, வேறு ஒழுங்குகள் செய்ய ஒத்துழைப்பான். இந்த வீடு எடுத்து வந்த போதும் இவன்தான் சாமான்களைக் கொண்டு வர, வீ;ட்டை ஒழுங்கு செய்ய, பெயின்ட் அடிக்க உதவி செய்தான். ஆனால், இப்ப யோசிக்கும் போது தான், இவன் விழுந்து, விழுந்து உதவி செய்ததன் உள்நோக்கம் என்ன என்று விளங்குகிறது.

மற்றவர்களிற்கு உதவிகள் செய்வதைத் தவிர, இவனிடம் உள்ள இன்னுமொரு அ©ர்வமான பழக்கம்;: மற்றவர்களுடன் கதைக்கும் போது அவர்;களைத் தொட்டுத் தொட்டு கதைப்பது. முந்தியிருந்தே அவனிற்கு இந்தப் பழக்கம் இருப்பதாக பலர் எனக்கு சொன்ன போதிலும், எனக்கென்னவோ அவன் வதாவிடம் கதைக்கும்போதுதான் அப்படி செய்வதாக சந்தேகம். அல்லது, திட்டமிட்டே முந்தியிலிருந்து இதை ஒரு இயல்பு போலக் காட்டுவதற்காக செய்து வந்திருக்காம்.

அந்த மறக்க முடியாத சனிக்கிழமை இரவன்று, பார்ட்டி முடிந்து விருந்தினர்கள் எல்லோரும் போனாற் பிறகு, மிச்சமிருந்த கொனியாக்கை நானும், அவனும் குடித்துக்கொண்டு, அவளுடன் டீ.வீ. பார்த்துக் கொண்டிருக்கையில்தான், எனக்கு அவன் அவளை அடிக்கடி தொடுவது தெரிந்தது. அன்றிரவு, நான் அவனை நல்லா குடிக்கவிட்டு, பிறகு அவனிடமிருந்து கதை எடுப்பது என்று திட்டம் போட்டிருந்தேன்.

“அக்கா, நீங்கள் இன்டைக்கு வைச்ச கோழிப் பொரியல் அந்த மாதிரி இருந்தது! எங்கடை அம்மா கூட அக்கா இப்படித்தான் அளவா, பதமா பொரிப்பா,“ என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், பக்கத்திலிருந்து லதாவை தோளிலும் கையிலும் தொட்டுவிட்டான்.

“நீர் ஓராள்தான் சிவா என்னுடைய சமையலைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தையாவது சொல்கிறது . . .”

“நான் இப்படி எல்லோருக்கும் சொல்கிறதில்லை, அக்கா. உங்கடை சாப்பாடு சாப்பிட்டவுடனே ஏதாவது உங்களிற்கு சொல்லாட்டி எனக்கு செமிக்காது, அக்கா.” இவன் கதைக்கும்போது, அவள் பக்கத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவன், என்னவோ அவள் இவனுடைய கதையைக் கேட்காமல் வேறெங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பது போலவும், அவளுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக தொடுவது போலவும், நிமிடத்திற்கு குறைந்தது இரண்டு தரமாவது தொட்டுக் கொண்டிருந்தான்.

“நீர், சிவா, இன்றைக்கு வேளைக்கு வந்து வெட்டித் தந்திருக்காவிட்டால் நான் இன்னும் சமைத்து முடித்திருக்க மாட்டேன். உம்மைக் கலியாணம் கட்டுகிறவள் லக்கி. கொடுத்து வைத்தவள்.” இது என்னை நக்கலடிப்பது போலிருந்தாலும், நக்கல் இல்லை. என்னுடைய மனிசி என்னில் நல்ல மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறாள். அவள் ஒரு வெகுளி – எல்லாரையும் இலகுவாக நம்பிவிடுவாள். அவள் நினைக்கிற மாதிரி, கலியாணம் கட்டினால், அவன் ஒன்றும் தன்னுடைய மனிசிக்கு சமைத்துப் போடப் போவதில்லை. அவன் என்னுடைய மனிசிக்கு மட்டும்தான் வாலையாட்டிக் கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு உதவி செய்வான். அதே நேரத்தில், நான் அவளுக்கு சமைக்க உதவி செய்கிறனான் என்று சொல்ல வரவில்லை: சமைப்பது பெண்களின் வேலை.

“ஏன் சிவா உமக்கும் வயசாகிக் கொண்டு வருகிறது தானே? ஒரு கலியாணத்தைச் செய்யலாமே?”

“இல்லை, அக்கா. நானும் அண்ணை மாதிரி கொஞ்சம் காசு சேர்த்துப் போட்டுத்தான் கலியாணப் பேச்செடுக்கிற பிளான்.”

என்னை மாதிரிக் காசு சேர்க்க இவனுக்கு புத்தியோ, ஒழுங்கான வேலையோ இல்லை. எங்கேயோ ஒரு ரெஸ்டோரன்டில் வேலை செய்து கொண்டு, என்னை மாதிரிக் காசு சேர்க்கப் போகிறானாம். கலியாணம் நடந்த மாதிரிதான். இப்போதைக்கு நடக்காதென்று தெரிந்துதான் என்டை மனிசிக்கு வாலாட்டுகிறான். கள்ள நாய்!

“என்னத்தை சேர்க்கப் போகிறீர்? உம்மடை வடிவுக்கு சீதனத்தை அள்ளிக் கொண்டு வந்து கியூவில் நிற்பாளவே? அதை வாங்கி பாங்கிலே போட்டாலே உமக்கு காணும். சும்மா யோசிக்காமல் கலியாணத்தைக் கட்டுகிற வழியைப் பாரும். இளமை இருக்கேக்கையே கலியாணம் கட்டிவிட வேண்டும். இல்லாட்டி, உம்மடை அண்ணை மாதிரி (நான்தான்) மொட்டை விழுந்து, தொந்தி வைத்த பிறகு – ஆனால் அவருக்கு படிப்பும், வேலையும் இருந்ததாலே பிரச்சினையில்லாமல் போய்விட்டது. உமக்கு உம்மடை வடிவுதான் பிளஸ் பொயின்ட். அதற்கு மேலே உம்மடை நல்ல குணத்திற்கு – உம்மை மாதிரி பொம்பிளைகளை மதிக்கிற ஆட்கள் இங்கே எவ்வளவு பேர் சொல்லும் பார்ப்பம்? ஒன்றும் யோசிக்காமல் கலியாணத்தை முடித்து சந்தோஷமாக வாழுகிற வழியை பாரும்.”

“இல்லை, அக்கா . . . காசு தவிர, நல்ல பொம்பிளையாகவும் வேணும், என்ன? உங்களை மாதிரி வடிவா, நல்ல குணத்தோடுள்ள ஒருத்தியைக் கொண்டு வந்தால், காசையும் பார்க்காமல் இந்த நிமிசமே கலியாணம் கட்டி விடுவேன். ஆனால், எங்கே – ஒன்று வடிவாயிருந்தா நல்ல குணமில்லாமலும், குணமிருந்தா வடிவில்லாமலும்… உங்களை மாதிரி ஒரு பொம்பிளையைக் கட்ட புண்ணியம் செய்திருக்க வேணும்.”

கொனியாக் திடீரென்று ச+டாகி, குடலையெரிப்பது போல் எனக்குள் உணர்ந்தேன். கட்டுக்கடங்காமல் கோபம் வந்ததால், எனது மௌனத்தைக் குலைத்து, “ஏன் அக்காவையே கலியாணம் கட்டேன்?” என்றேன். இது ஏதோ பெரிய பகிடி போல் இரண்டு பேரும் சிரித்தார்கள். “டேய்! உண்டை நாடகம் எனக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டியோ? நான் ஹோனர்N;ஸாடு டிகிறி எடுத்தனான்டா. நீ எனக்கு நாடகம் போடுகிறாய், ஆ?” இரண்டு பேரும் சத்தம் போடாமல், என்னையே பாரத்துக் கொண்டிருக்க, “என்ன? நாடகம் முடிந்துட்டுதோ?” என்றேன்.

“இப்ப என்ன நடந்ததென்று, இப்படி -” என்று லதா தொடங்க, “லதா, நீ சும்மா இரு. உனக்கு இவனைப்பற்றிக் தெரியாது. உனக்கு உதவி செய்வது, உன்னை

“அக்கா, அக்கா,“ என்று கூப்பிடுவது எல்லாம் நாடகம். உன்டை வடிவிலே மயங்கித்தான் இப்படிச் செய்கிறான், சபலக்கேஸ். உன்னை ஏன் நெடுகத் தொடுகிறான், சொல்லு பார்ப்பம்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவன் சோபாவில் இருந்து, மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்களிற்கு என்ன விசரே? அல்லது, வெறியோ? சிவாவிற்கு இந்தத் தொடுகிற பழக்கம் இருக்குது என்று உங்களிற்கு மறந்து போச்சோ? உங்களோடு கதைக்கேக்கையும் தொடுகிறது தானே?”

“ஓம், ஆனால், இவன் எல்லாம் திட்டம் போட்டுச் செய்கிறான். உன்னை மட்டும் தொட்டால் பிரச்சினை என்றுதான் என்னையும் தொடுகிறான். அப்பதானே இது தன்னுடைய இயல்பு என்று சாக்கு சொல்லாம். நான் யார்? நான் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். எப்பவோ நான் இவனை செக் பன்னியிருக்கலாம். ஆனால், நான் இவனை செக் மேட் பன்ன வேண்டும் என்றுதான், நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பாரத்து, விட்டு வைத்திருந்தனான்.

“என்னத்தை செக் மேற் பண்ணினீங்கள்? இப்ப சிவா என்ன செய்தது என்று… இப்படி – கொஞ்சம் கூட மானர்ஸ் இல்லாமல்-”

“இப்ப என்ன செய்து போட்டானோ? அவன் கதைத்ததைக் கேட்டனியே? அக்கா மாதிரி இருந்தா உடனே கட்டி விடுவாராம் – தொட்டுத் தொட்டு சொல்கிறான் பாவி! மற்றது, அன்டைக்கு உன்னை ஜெரார்ட் ஸ்ட்ரீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன-”

“ஓம்! நான்தான் கேட்டனான் – கூட்டிக் கொண்டு போகச் சொல்லி. உங்களைக் கேட்டால் வேலையென்று முடியாதென்றுவீங்கள். அதான் சிவாவைக் கேட்டனான்.”

“ஏன் என்னட்டைச் சொல்லேலை?”

“சந்தர்ப்பம் வரேலை -”

“இல்லை, நீ சொல்லாட்டி பரவாயில்லை. இவன் ஏன் என்னட்டைச் சொல்லேலை? உன்னை – என்டை மனிசியை – கூட்டிக்கொண்டு போயிருக்கிறான் – நான் இல்லாத நேரத்திலே வேறே. ஏன்டா என்னட்டை சொல்லேலை?”

சத்தம் போடாமல் கார்பெட்;டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சிவா ஏன் உங்களிட்டை சொல்ல வேணும்? நான்தானே கூட்டிக்கொண்டு போகச் சொன்னான். நான்தான் உங்களிட்டை சொல்லியிருக்க வேனும், ஆனால் நான் சொல்ல மறந்திட்டேன்.”

“நீங்கள் இரண்டு பேரும் அந்த உடுப்புக் கடைக்குள் நிற்கிறதைப் பார்த்தனான். இவன் உன்டை கையைப் பிடித்ததையும், உன்னைத் தொடுகிறதையும் பார்த்தனான். உனக்கு வேண்டுமானால் அது சகஜமாகத் தெரியலாம், ஏனென்றால் இவனை நல்லவனென்று நம்பியிருக்கிறாய். ஆனால் இவன் ஒரு கெட்ட நாய்.”

“சும்மா அந்தப் பெடியனை பேசாமல் இருங்கோ பார்ப்பம். என்னவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கொள்ளலாம். நீங்கள் இப்ப நிதானமில்லை போலிருக்குது.”

நான் பேசாமல் கொஞ்ச நேரம் டீவீயைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் இவன் ஒரு வார்த்தை கூடக்கதைக்கவில்லை. அப்போதுதான் எனக்கொரு திட்டம் உதித்தது. என்னுடைய புத்திசாலித்தனம் என்றுமே என்னைக் கைவிட்டதில்லை.

“சிவா, நான் சொன்னதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. நான் வெறியிலே, நிதானமிழந்து ஏதேதோவெல்லாம் சொல்லி விட்டேன். ஜம் சொறி, ஓகே?”

பரவாயில்லை, அண்ணை என்று அவன் சொல்ல, அவன் கன்னத்தில் கண்ணீரொழுகுவதைக் கவனித்தேன். என்னுடைய திட்டம் வேலை செய்யும் என்ற நம்பிக்கை வலுத்தது. லதா என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

“சரி, வா, நான் உன்னை வீட்டிலே கொண்டு போய் விடுகிறேன்,“ என்று நான் சொல்ல, அவன் கண்களில் மீண்டும் பயம் தெரிந்தது. பலியாடுபோல, மௌனமாக என்னோடு வந்து, காருக்குள் ஏறினான். நான் காரை ஸ்டார்ட் பண்ணி, கொஞ்ச நேரம் மௌனமாக டிரைவ் பண்ணி, ஒரு ஒரமாக நிறுத்தினேன்.

“சிவா . . . நான் உன்னைக் கண்டபடியெல்லாம் திட்டிவிட்;டேன். மன்னித்துவிடு – ஆனால், உனக்கு விளங்க வேணும் என்னுடைய கோபத்தைப் பற்றி. உன்னை நான் ஒரு கூடப் பிறந்த தம்பி மாதிரித்தான் ட்ரீட் பண்ணினான். ஆனால் நீ இப்படி செய்வாய் என்று – உனக்கு என்னைப் பற்றித் தெரியும் என்ன? எனக்கு நீ என்ன செய்கிறாய், எப்படி செய்கிறாய் என்றெல்லாம் தெரியும். இப்ப, நீயா, நீ சபலத்தாலேதான் லதாவைத் தொட்டனி, அவளிற்கு உதவிகள் செய்கிற மாதிரி நடித்தனி என்று ஒப்புக் கொள். உனக்கும் எனக்கும்தான் இந்த விஷயம் தெரியவரும். லதா ஒரு வெகுளி. அவள் உன்னை நம்புகிறாள். நீயும் அவளுடைய நம்பிக்கைiயைக் குழப்ப விரும்பேலை என்று நினைக்கிறேன். அதனாலே, நீ செய்ததை இப்ப ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கேட்பியானால், நான் ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்லப்போறதில்லை. இல்லாட்டா, உன்னைப் பற்றி இல்லாததெல்லாம் சொல்லுவன்.”

அவன் காருக்கு வெளியே, ஸ்னோ பெய்வதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தான்.

“உனக்கும், எனக்கும், சிவா, இந்தக் கலியாணம் நடக்க முதலே பழக்கம். நீ எனக்கு – எங்களிற்கு – கனக்க உதவிகள் செய்திருக்கிறாய். நீ நல்லவன், இழகிய மனம் படைத்தனி என்று எனக்குத் தெரியும். ஏதோ சபலத்தாலே, சந்தர்ப்ப ச+ழ்நிலையாலே இப்படி செய்திட்டாய். லதாவினுடைய வடிவும், உன்னுடைய வயசும் இப்படி உன்னை செய்ய வைத்திட்டது என்று எனக்கு நல்லாத் தெரியும். ஆனால், அதை நீ இப்ப ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கேள். அவ்வளவுதான் நான் கேட்கிறது.”

“அண்ணை, உண்மையாக நீங்கள் நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் செய்யேலை… என்டை அம்மா மேலே சத்தியமா சொல்கிறேன் – லதாக்கா என்டை சொந்த அக்கா மாதிரி, அண்ணை. என்டை அக்கா, அண்ணை,“ என்று அழுது கொண்டே சொன்னான்.

“சிவா, உனக்குத் தெரிய வேணும் என்னைப் பற்றி. என்னோடு எத்தனை தரம் செஸ் விளையாடியிருக்கிறய்?”

“கனதடவை அண்ணை”

“எத்தனை தரம் வென்றிருக்கிறாய்?”

“ஒருக்காலும் வெல்லேலை”

“ஏன்?”

“. . . எனக்கு சரியா விளையாடத் தெரியேலையென்று-”

“அப்படி இல்லை. உனக்கு புத்தி குறைவு. அல்லது எனக்கு புத்தி கூட. எனக்கு?”

“புத்தி கூட.”

“ரைட்! நான் புத்திசாலி! அது உனக்குத் தெரியும். இப்ப நடக்கிறதும் ஒரு செஸ் கேம்தான். நான் உன்டை கிங்கை சுத்தி வளைத்திட்டேன். நீ ட்ரோ பண்ணப் பார்க்கிறாய்; நான் செக் மேற் பண்ணப் பார்க்கிறேன். நீ செய்ததை ஒப்புக் கொண்டால், ஒரு பிரச்சினையுமில்லாமல் இந்த கேமை முடிக்கலாம். என்ன சொல்கிறாய்.?”

“அண்ணை, சத்தியமா-”

“டேய்! லுழர அழவாநச! என்டை பொறுமையை சோதிக்காதே. எனக்குத் தெரியும் நீ சபலத்தாலேதான் செய்தனி என்று. ஒப்புக் கொள்!”

மௌனமாக இருந்தான்.

“அண்டைக்கு ஜெராட் ஸ்ட்ரீட்டிற்கு இரண்டு பேரும் போனீங்கள், இல்லையோ? அப்ப நீதானே அவளைக் கூட்டிக் கொண்டு போனி?”

“இல்லை, அண்ணை. அக்காதான் கேட்டவா.”

“அவள் அப்படித்தான் சொன்னவள். உன்னை நம்புகிறதாலே அப்படி சொன்னவள். ஆனால், நீதான் கேட்டுக் கூட்டிக் கொண்டு போனி. பிறகு, அவள் மேல் கை போட்டு, பிளான் போட்டு செய்தனி.”

“இல்லை – சத்தியமா இல்லை, அண்ணை.”

“டேய், நீயா ஒப்புக் கொள். இல்லாட்டி, என்னட்டை இருக்கிற புரூவ்களைக் காட்டி, உன்னுடைய வண்டவாளத்தை எல்லோருக்கும் காட்டுவன்.”

“. . . அண்ணை . . . நீங்கள் நினைக்கிற மாதிரி . . . அக்கா நல்லவா இல்லை. நீங்கள் இல்லாத நேரமெல்லாம் . . . அவா . . . கதைக்கிற முறையே சரியில்லை. என்னோடு ஃபிளேர்ட் பண்ணுகிறா. கதைக்கக் கூடாதெல்லாம் கதைக்கிறா.”

இவன் சொன்னதைக் கேட்டுவிட்டு அவனை நீங்கள் நம்பியிருந்தால், உங்களை நான் முட்டாள் என்பது முழுக்கப் பொருந்தும். இவன் தன்னை பாதுகாக்க அவளைக் குற்றஞ் சாட்டுகிறான். செஸ்ஸில் கூட நீங்கள் தோற்கும் தருவாயில் இந்த ஸ்ராடெஜியை உபயோகப்படுத்தியிருப்பீர்கள். அதாவது, உங்களின் ராஜாவை எதிராளி ச+ழ்ந்திருக்க, நீங்களோ வேறெங்கேயாவது காய்களை நகர்த்தி எதிராளியின் கவனத்தை திசை திருப்பப் பார்ப்பீர்கள். அதைத்தான் சிவா இங்கு செய்ய முயற்சித்தான். ஆனால், நான் யார்? தவிர, லதாவைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவள் ஒரு வெகுளி. அவளிற்கு காசும் வசதியும்தான் முக்கியம். மேலும், அவளிற்குத் தேவையானதெல்லாம் நான் கொடுக்கிறேன்தானே. இவன்தான் காய்ந்து போய் – பொய் சொல்கிறான். இருந்தாலும், என்னதான் சொல்கிறான் என்று பார்க்க, “மெய்யா?” என்றேன்.

“ஓமண்ணை. நான் உங்களிற்குள்ளே பிரச்சினை வரக்கூடாதென்றுதான் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்தனான். ஆனால், நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீங்கள் என்பதாலே, உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியேலை. அண்டைக்கு, ஜெரார்ட் ஸ்டரீட்டிற்குப் போன போதும், அவதான் என்டை கையைப் பிடித்தவா. ஒரு மாதிரியெல்லாம் கதைத்தவா-”

“அப்பிடி என்ன கதைத்தவள்?”

“என்டை கை ரஃப்வாக இருக்குதாம். ஆம்பிளைகளிற்கு உடம்பு ஹார்ட்டாக இருக்கிறதுதான் நல்லதாம். பெண்களிற்கு அதுதான் பிடிக்குமாம். தனக்கும் அதுதான் பிடிக்குமாம் . . . ஆனால் . . . ஆனால் . . .”

“ம்! என்னவாயிருந்தாலும் பயப்படாமல் சொல்லு.”

“ஆனால், உங்களிற்கு ஒரே வண்டியும் தொந்தியும் என்பதாலே தனக்குப் பிடிக்கிறதில்லையாம்-”

“வேறென்ன என்னைப் பற்றிச் சொன்னவள்?”

“அவாவிற்கு உங்களில் ஒரு துளியும் விருப்பமில்லை, அண்ணை. அவா உங்கடை காசுக்காகத்தான் உங்களோடு இருக்கிறவாம். மொட்டை, கறுப்புப் பண்டி என்றெல்லாம் உங்களைப் பகிடி பண்ணுகிறவா, அண்ணை.”

“ஸோ, நீ ஒரு பிழையும் செய்யேலை என்கிறாய், அப்படித்தானே?”

“நான் இதை உடனேயே உங்களிட்டை சொல்லாமல் விட்டது தப்புத்தான், அண்ணை.” “டேய், டேய், எனக்குப் புத்திசாலித்தனம் காட்டாதே. நீ, உன்னுடைய சபலத்தாலே, ஒரு தப்பும் செய்யேலை?”

“ . . . இல்லை, அண்ணை.”

“அப்ப, லதாதான் எல்லாம் செய்தது; நீ ஒரு தப்பும் செய்யேலை. ஓ.கே. அப்ப ஏன் நீ அவளைத் தொடுகிறனி?”

“அது, அண்ணை, என்னுடைய இயல்பு – பழக்கம்.”

“சும்மா சொல்லக் கூடாது – நல்லாவே கதை சொல்கிறாய். கடைசியில், நீ ஒரு பிழையும் செய்யேலை என்றாகிவிட்டது.”

“நான் ஒரு பிழையும் நானறிந்து செய்யேலை, அண்ணை. உங்கள் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்.”

“நீ இதுவரைக்கும் சொன்னது முழுக்கப் பொய். என்டை மனிசியைப் பற்றி நீ எனக்கு சொல்லாதே. எனக்குத் தெரியும் அவளைப் பற்றி. அவளிற்கு காசும், வசதியும்தான் முக்கியம். இப்படி, உன்னை மாதிரி, விடலைத்தனமா ஒன்றும் செய்யக் கூடியவள் இல்லை. ஆனால் உனக்குத்தான் அந்த தேவை இருக்குது. அதனால்தான் எங்கே என்று அலைகிறாய். அவள் ஒரு வெகுளி என்பதால்தான் உன்னை நம்பினவள். நான் புத்திசாலி. ஸோ எனக்குப் நீ புத்தி காட்டாதே. சரியோ? இப்ப, நீ உன்னுடைய குற்றத்தை ஒத்துக் கொள். நான் பேசாமல் உன்னைப் போகவிடுகிறேன். நீ வீட்டுப் பக்கம் பிறகு வராதே. ஒருத்தருக்கும் உன்டை விஷயம் போகாது. ஒத்துக் கொள்கிறாயோ?”

“அண்ணை, நான் ஒன்றும் செய்யாமல்-”

“டேய்!” – டாஷ்போர்டிலிருந்த ஒரு பெரிய ஸ்குரூ டிரைவரை எடுத்து – “இப்ப உண்மையை ஒத்துக் கொள், இல்லாட்டி குத்திக்கிழித்து விடுவேன்,“ என்று வெருட்டினேன்.

“அண்ணை, ப்ளீஸ், அண்ணை – சரி, நான்தான் செய்தனான். நான்தான் எல்லாப் பிழைகளையும் செய்தனான்.”

“என்னென்ன பிழைகள் என்று சொல்லு.”

“அக்காவை ஜெரார்ட் ஸ்ட்ரீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனது; தொட்டது; கையைப் பிடித்தது . . .”

“உதவிகள் செய்து, நல்ல பிள்ளை மாதிரி நடித்தது.”

“நடித்தது.”

“முழுக்கச் சொல்லு.”

“நல்ல பிள்ளை மாதிரி நடித்து – உதவிசெய்தது.”

“ரைட்! எல்லாம் நான் செய்த குற்றங்கள்; என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லு.”

“எல்லாக் குற்றத்திற்கும் நானே காரணம். மன்னித்துவிடுங்கோ, அண்ணை.”

ஓ.கே. இப்ப என்ன செய்கிறாய்: நீ சொன்னதையெல்லாம், செய்த குற்றங்களையெல்லாம் இதிலே எழுதி, உன்னுடைய கையெழுத்தைக் கீழே போடுகிறாய்,“ என்று அவனிடம் ஒரு நோட்புக்கையும், பேனையையும் கொடுத்தேன். அவன் வாங்கி ஒன்றும் எழுதாமல் என்னையே பார்த்தான். “ம்! எழுது!” என்று ஸ்குரூ டிரைவரைக் காட்டி வெருட்ட, கொஞ்சம் யோசித்து விட்டு, சொன்னதையெல்லாம் எழுதி கையெழுத்திட்டான்.

“சரி, இப்ப, மெதுவாகக் கதவைத் திறந்து, திரும்பிப் பார்க்காமல் ஓடு. வீட்டுப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்காதே. சரியே? ஓடு!”

அவன் கதவைத் திறந்து, ஸ்னோவில் வேகமாக ஓடமுடியாமல், கஷ்டப்பட்டு ஓடுவதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. கடைசியாக செக்மேட் பண்ணிவிட்டேன். நானென்பதால், அவன் லதாவைப் பற்றிச் சொன்ன கதையெல்லாம் கேட்டு நம்பாமல், பதட்டப்படாமல் இருந்தேன். வேறு யாராவதென்றால் நிச்சயம் அவனுடைய பொறிக்குள் விழுந்து, கோபப்பட்டு, பதட்டப்பட்டு அவன் இவர்களை செக் மேட் பண்ண வழி பண்ணியிருப்பார்கள். எப்போதும் புத்தி முக்கியம் – அதற்குமேல், நிதானம்.

நான் வீட்டுக் கதவைத் திறக்க, அவள் மாடியில் உள் பெட்ரூமிலிருந்து ஓடி வந்தாள். இவளைப் போய் நடத்தை கெட்டவள் என்று சொன்னானே, மடையன்! எனக்கும், லதாவுக்குமிடையில் ஒரு ரகசியமும் என்றும் நாங்கள் வைத்திருந்ததில்லையென்பதால், நான் அவளிற்கு நடந்தவைகளை மறைக்காமல் சொன்னேன். அவள் ஒன்றும் பேசாமல் கேட்டாள்.

“. . . கடைசியிலே, வேறொரு டிஃபென்ஸ{ம் இல்லையென்றவுடனே, உன்னை நடத்தை கெட்டவள் என்றிட்டான். நீ அவனோடு ஃபிளேர்ட் பண்ணுகிறியாம். எப்படிக் கதை?” என்று சொல்லிச் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.

“இப்ப யோசித்துப் பார்க்கத்தான் தெரியுது: இவனெல்லாம் பிளான் பண்ணித்தான் செய்திருக்கிறானென்று. இவன் நெடுக, “அக்கா, அக்கா,“ என்கிறதிலே, நானும் எண்டை சொந்தத் தம்பி மாதிரி, பாசத்தோடு பழகினான். எப்படி வேஷம் போட்டிருக்கிறான்? அண்டைக்கு சாறிக் கடைக்குள்ளே என்னுடைய கையைப் பிடிக்கேக்கை எனக்கு ஒரு மாதிரி இருந்தது, ஆனால் இவன் ஒரு குழந்தை மாதிரிக் கதைக்கிறவன், பழகிறவன் என்று நான் பேசாமல் இருந்திட்டேன். என்ன மாதிரி நடித்திருக்கிறான்? இவன் தொட்டதை, கையைப் பிடித்ததை நினைக்க, எனக்கு உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இருக்குது. இப்படியும் மனிசர் இருக்கினமோ? ஷ் . . . ஷ் – எப்படி உங்களிற்கு சந்தேகம் வந்தது?”

“என்னை ஏமாத்த முடியுமோ? எனக்குப் புத்தி காட்ட வந்திருக்கிறான் இவன்! எனக்கு முதலிலிருந்தே சந்தேகம், லதா. ஆனால் உடனே ஏதாவது கேட்டால், சாக்கு சொல்லி சமாளித்து விடுவான் என்றுதான், வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனான். ஒழுங்கான புரூவ் இல்லாட்டி அவன் சமாளித்து விடுவான் என்றுதான் – அதுதான் நான் உனக்குக் கூட இவனைப் பற்றிச் சொல்லேலை. நீயும் அவனை நல்லா நம்பினதாலே, நான் புரூவில்லாமல் சொன்னால் நம்பமாட்டாயென்று தெரிந்துதான், உனக்குச் சொல்லேலை. இண்டைக்கு, அவன் உன்னைப் போலப் பெட்டையென்றால் உடனே கலியாணம் கட்டுவேன் என்று சொன்னதைக் கேட்டவுடனே, கோபம் வந்து, நிதானமிழந்து கத்திவிட்டேன். இன்னும் கொஞ்சம் விட்டுப் பிடித்திருக்க வேணும். ஆனால், நான் என்பதால், என்னுடைய புத்தியைப் பாவித்து ஆளை மடக்கிவிட்டேன். இங்கே பார்: எல்லாத்தையும் எழுதி, கையெழுத்துக் கூட அவனிடமிருந்து வாங்கிவிட்டேன்.”

அவள், ஆச்சரியத்தோடு அவன் எழுதியிருந்ததை வாசித்துவிட்டு, சிரித்தாள். “நீங்கள் கெட்டிக்காரர்தான். அவனை ஒட்ட நறுக்கிட்டீங்கள்; இனிமே வாலாட்டான். நான் ஒரு டியூப் லைட். இப்படி இவனை நம்பி ஏமாந்திட்டேன். என்றாலும், இவ்வளவு கெதியா எல்லாத்தையும் ஒத்துக் கொள்ள வைத்திட்டீங்கள், என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

பிறகு, “பாத்திரங்கள் எல்லாம் ஸிங்கிலே போட்டிருக்கிறேன். கழுவி விடுங்கோ. எனக்கு ஒரே டையர்டா இருக்குது. நான் போய்ப் படுக்கப் போகிறேன்,“ என்று சொல்லிவிட்டு மேலே போனாள்.

எனக்கு ஒரு சந்தோஷமாக இருந்தது. செக்மேட் பண்ணிவிட்டேன். மடையன் என்னை ஏமாத்த முடியும் என்று . . . மெதுவாக விசிலடித்தபடி பாத்திரங்களைக் கழுவினேன்.

கோணம் சூ2

மேலே, அவன் மனைவி தன்னுடைய ஹாண்டபாக்கிலிருந்து இரண்டு சிறிய பக்கெட்டுக்களை எடுத்து, பாத்ரூமிற்குள் சென்று, டொய்லெட்டிற்குள் போட்டு ஃபிளஷ் பண்ணினாள். சின்னதாக, தட்டையாக, மினுங்கிய உறையைக் கொண்டிருந்த அந்த அழகான பக்கெட்டுக்கள், தண்ணீரில் சுற்றி, சுழன்று மெதுவாகத் தாழ, அவள் முகத்தில் புன்னகை பரவியது. டொய்லெட்டிற்குள் குனிந்து பார்த்தவள், திரும்பவும் ஒருமுறை ஃபிளஷ் பண்ணிவிட்டு பெட்ரூமிற்குள் போய்ப்படுத்தாள். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்தவள், அவன் படியேறி வரும் சத்தத்தை, விசிலடித்தபடி வருவதைக் கேட்டதும், மெதுவாகக் குறட்டை விட்;டபடி, ஆழமாக சுவாசித்துக் கொண்டு, கண்களை மூடியபடி படுத்திருந்தாள்.

(சரிநிகர் ரூ தாயகம், 1996)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *