கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2012

39 கதைகள் கிடைத்துள்ளன.

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்

 

 மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும் லாரியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, சாரலாய் அவன் மேல் அடித்தது. குண்டும் குழியுமான ஆரோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நீள்போக்கில் பயணப்படும் சாதாரண பாதசாரிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரன அதோ கதிதான் அவனுக்கு ஏற்பட்டது. இது இரவு நேரம். நல்ல நேரங்களிலேயே காணாமல் போகும் அரசு மின்சாரம் ராகுகால எமகண்டங்களில் இயற்கை அல்லது செயற்கை மரணங்களுக்கு தப்பிவிட முடியாது. அப்படி


வனதேவதை

 

 கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு என்று கேட்டது ஒரு எலிக்குஞ்சை. காண்டாமிருகத்தையல்ல, மிஞ்சியிருந்தால் அந்த எலி ஒரு அங்குலம் இருக்கும், கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட காட்டுப் புலியை பார்த்ததுபோல் பயப்பட அவளால்தான் முடியும், “தொடாத,,, தொடாத,,, கடிக்கும, சனியனை கீழே விடு,,,” என்று கத்தினாள், என் மனைவியே. அது உயிர், உன்னைப் போல் என்னைப் போல் அதுவும் ஒரு உயிர், அது


நீரடிசொர்க்கம்

 

 ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான் சொல்றத கேக்க போறதில. ஒரே நிமிசம். ஏங்க நமக்கு ஆண்டவன் ஒரே வாயும் ரெண்டு காதும் ஏன் படைச்சான்னு உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே… தெரியாதா? சொல்லறேன். அடுத்தவங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. மனசு கனத்துப்போய் மனுசங்க பித்துபிடிச்சி அலையறாங்க. பிரச்சனை பாரம் தாங்க முடியாம இருக்காங்க. அந்த பாரத்தை மனசுக்குள்ள வச்சி புழுங்கப் புழுங்க இன்னும்தான்


சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை

 

 காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள். சிலர் எழுந்ததும் கேடு கெட்ட முகத்தில் விழித்தால் அன்றைக்கு பூராவும் நல்லதே நடக்காது என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். அது மூட நம்பிக்கை என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் கடிகாரத்தை பார்ப்பது இன்னும் எத்தனை நேரம் நாம் தூங்கலாம் என்பதை பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் நிம்மதியாக தூங்கலாமே அதற்காகத்தான். காலையில் எழுந்ததும் கடிகாரத்தை பார்ப்பேன்.


பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும்

 

 “இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா…?” சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது, அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று அந்த குழந்தை எதிர்பார்க்கவில்லை பாவம், வீட்டின் மூத்த பிள்ளை தலையில் அடி வாங்கியதும் மற்ற பிள்ளைகள் பேசாமல் பிசுபிசுப்பாய் தட்டில் கருத்து உருண்டிருந்த களியை. உப்பும் காரமும் குறைச்சலான புளியங்காய் புளிப்புடன் ஒரு மார்கமாக கீரைக் குழம்பு என்று பெயர் எடுத்த பச்சை திரவத்தில் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தன, “நான் நாலு மகாராணிங்கள பெத்து போட்டிருக்கேன்,


கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு

 

 ஓரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், ஐந்தறிவு உயிர்கள் தெரிகிறது. நாம் ஆறறிவு உயிர்கள். ஐம்புலன்கள் தெரிகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம்புலனால் அறியப்படுவது ஐந்தறிவு. ஆறாம் அறிவு எது பகுத்தறிவா? அதென்ன பகுத்ததறிவு அதற்கான புலன் எங்கே இருக்கிறது? அறிவா? அறிவும் புலனும் ஒன்றா? இப்படியாக ஒரு கூட்டம் கோயில் பஜனை மடத்தில் உட்கார்ந்து வெகு நேரம் வாதாடிக் கொண்டிருக்கும். இந்த சர்ச்சையில் அநேகமாக குட்டிப்பையனும் மணியும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள். ஐம்புலனும் ஐந்தறிவும் ஒன்று


கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை

 

 இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள் என்னை வித்தியாசமாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாதபடி ஆண்டவன் எனக்கு காதுகளை காதுகள் போலவும், கண்ணை கண் போலவும், ரத்தத்தை ரத்தம் போல சிவப்பாக இருக்கும்படியும் படைத்தான். என்றாலும், நான் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஆகிவிட்டது. சாதாரண மனிதர்கள் போல தோற்றத்திலும், உள்ளுக்குள் நிறைய ஓட்டை உடைசலுடனும் நிறைய


ஓடும் செம்பொன்னும்

 

 படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும் விசயமாக இருந்தது அவனுக்கு. அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள்


புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்

 

 என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல் பேசுவார். பல சமயம் நம்மை பேக்குகளாக்கிவிடுவார். வெளிப்புறத் தோற்றம் சகிக்கும்படி இருக்காது. அவர் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியும்படியும் இருக்காது ஏன் என்று துருவிக் கேட்டால். அந்த வார்த்தை அர்த்தத்தின் சொரூபங்கள் தாங்கும்படியும் இருக்காது, அவர் பேச்சு புதிரானது சில வேளை புரியும், பலவேளை புரியாது, நமக்கு புரியவில்லை என்பதற்காக எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்று


ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

 

 “அப்பா நானு…” என்ற குழந்தைக்கு முத்தம் தந்துவிட்டு “நான் ரொம்ப தூரம் போறேன்… இங்கயே இருடா” என்று சொல்லி செருப்பை மாட்டிக்கொண்டேன். குழந்தையின் பார்வையில் தங்கிய விரோதம் கலந்த விரக்தியை கவனித்தேன். இன்னொரு “அப்பா நானு…” என்றால் அறை விழும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். ரெண்டரை வயதில்லையா? எனக்கு பாவமாய்போய் என் கால்கோடி பெறுமானமுள்ள முத்தமொன்றை வாரி வழங்கி, பக்கத்தில் நின்றிருந்த மனைவியை சினிமாவில் வருகிற புருசன் போல் அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். சினிமா மனைவியாக