நெளிகோட்டுச்சித்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 6,288 
 

இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறிய கணம் அது சடைப் பைக் குள்ளாய் பயணித்து பத்து ரூபாய் தாள் ஒன்றை கையில் எடுக்கிறது.

இளம்மஞ்சளிலும்,அடர் பிஸ்கட்கலரிலுமாய் இருந்த அது கண்டக் டரின் கைக்கு மாறிய நேரம் இருபது ரூபாய் பைக்குள்ளாய் சென்று தஞ்சம் புகுவதாக இளவயதை உடலில் காட்டிய கண்டருக்குநன்றாயிருந்தால் 30குள் ளாய்இருக்கலாம் வயது. ஒடிந்துசிவந்தவராயும், வளர்ந்துமாய் காணப்படுகிறார்.அவரது நிறத்திற்கும், உயரத்திற்கும் காக்கிக் கலர் உடை அவரது உடலில் ஒட்டாமல் கையிலிருந்த டிக்கெட் இளம்மஞ்சளில், ரோஸில், பச்சையில் என கலர் காட்டி செல்கிறது,கூடவே தன் விலை சொல்லியுமாய்.

கட்டணம் கூடத்தான் இங்கிருந்து இங்கு சென்று விடுகிற தூரத்திற்கு என பஸ்க் கட்டண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி போராடியும்,கருத்துப்பிரச்சாரம் செய்தவர்களின் வேண் டு கோள் களை நிராகரித்து நிர்ணயித்த கட்டணம் காட்டி தாங்கி யிருந்த கலர் டிக்கெட்டுகளை தலையெழுத்தே என பஸ்ஸிலிருந்த அனை வரும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்கள் என எழுதப்பட்டிருந்த வரிசையில் பெண்களும்,பெண்கள் என எழுதப்பட்டிருந்த வரிசையில்ஆண்களும்,முதியோர்கள் என எழுதப்பட்டிருந்தவரிசையில் இளைஞர்களுமாய் அமர்ந்திருந்தார்கள்.

வரிசைகாட்டி நின்ற பஸ்சின் சீட்கள்அமரும் இடம் பச்சையாயும், முதுகு சாய்கிற மேல்ப்புறம் ப்ரவ்ன் கலர் காட்டியுமாய்.

அடர் பிரவ்ன் கலர் காட்டி பஸ்ஸின் உள் நின்ற கம்பிகள்.பஸ்ஸின் வெளி பிரவ்ன் நிறத்திற்கு சீட்க்கலர் மட்டும் ஒத்துப்போயிருந்தால் சமன் சரியாய் இருந்திருக்கும் என உரத்துச்சொன்னதாய்ப் படுகிறது.

டிக்கெட்கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,இருக்கையில் அமர்ந்திருந்த பயணி கள், நின்று கொண்டிருந்த சிலர் பஸ்சை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் என அனை வரையுமாய் தழுவி பயணித்த பார்வை இவன் பிடித்துக்கொண்டு நின்ற கம்பியின் ஆட்டத்தை கவனிக்க மறந்துபோகிறது. கம்பியின்அடிப்புறத் தில் கம்பியைசுற்றிஊனப் பட்டிருந்த ஸ்குருகளில் இரண்டு லூசாக ஆட்டம் காட்டயவாறு.இவன்அது தன்னைபோல இருக்கும் என நினைத்துக் கொள்கிறான்.

பின் வாசலை அண்மித்து நின்ற இவன் முன்னால் நின்ற நண்பரை அப்பொழுதான் பார்க்கிறான், சப்தம் போட்டு கூப்பிட விருப்பமி ல்லை.அடுத்தடுத்தாய் நின்றவர்கள் மூலமாய் சைகை யில் சொல்லி விட்டு அவரை திரும்பிப்பார்க்கச் செய்கிறான். திரும்பிப் பார்த்தவ ன் அருகில் வருகிறார் அவர் கூட்டம் பிளந்து அவருடன் பஸ்ஸின் வெளிப்புறமாய் ரோட்டில் தெரிந்த சாலை யோர மரம் ஒன்று உடன் சேர் ந்து வருவதாக தன் மெல்லிய மலர்கள் உதிர்த்து/கூடவே சாலையில் விரைந்த சைக்கிளும், பஸ்ஸீம், இருசக்கரவாகனமும், சாலையோரத்து மனிதர்களையும் அவர் உடன் அழைத்து வருவது போலொரு பிரமை உண்டாகிப்பபோகிறது.

மரம்,மனிதர்கள்,பஸ்,பயணிகள், எல்லாம் கடந்த பார்வை அருகில் வந்த நண்பனில் நிலைத்த போது ஆரம்ப விசாரிப்பு முடிந்து டிக்கெட் எடுத்து விட்டீர்களா என்கிற உடன் விசாரணையில் வந்து நிலை கொள்கிறதாக அவர் சொல்கிறார்,பஸ்சினுள் நுழைகையிலே எதிர்ப்பட்ட கண்டக் டரிடம் உடனே வாங்கி விட்டேன் ஒரே ஒரு டிக்கெட், அதுவும் எனக்கானது,அப்போதே பார்த்திருப்பேனேயா னா ல் உங்களுக்கும் சேர்ந்து வாங்கியிருக்கக்கூடும் என வார்த்தை வரைந்து முடிக் கிறார்.

இப்பொழுது அவருக்குமாய் சேர்த்து எடுத்த இருபதுரூபாய் நோட்டு சட்டைப் பையினுள்ளாக போய் விட்டு பத்து மட்டும் வெளியே வருகிறதாக ஊதாக்கலரில் நீள,நீளமாக கோடுகள் இறங்கி ஓடிய சட்டை அது. அணிந்து கொள்ள மாற்றுச் சட்டைகள் அவ்வளவாய் இல்லாத வேளையில் அவசரம் சுமந்த மனதுடன் போய் பிஸ்மில்லா ரெமேட்ஸில் எடுத்த சட்டை அது.

மாமா,ஒங்க நெறத்துக்கும்,ஹைட்டுக்கும் இதுதான் சரியா இருக்கும் எனவேறெதையும் யோசி க்க விடாமல் கடையின் உரிமையாளர் மடித்துகொடுக்க வாங்கி வந்த சட்டை.என்ன சைஸ் 42க்குப் பதில் 40எடுத்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் பிட்டாகவும் பார்க்க நன்றாகவும் இருந் திருக்கும்.

அது ஒரு காலம்,அரைக்கை முழுக்கை எதுவான போதிலும் சரி லூசாகத்தான் தைத்துப் போடு வான்.கேட்டால் தனக்குள்ளாகவோ அல்லது கேட்பர்களிடமோ பெரிய அளவிலாய் ஒன்றும் விவரிக் காமல் பேண்ட் சட்டை போட்ட பின்பாக கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து நிற்ப தில்லை. சட்டையின் முதல் பட்டனை வீட்டு ற்குள்ளாய் மாட்டிக் கொண்டு கடைசி பட்டனை வீட்டின் படியிறங்கும் போதுதான் கைமாட்டும் என்பான்.

தவிர பேண்ட்,சர்ட்டில் லக்கி என எதையும் தனியாய் ஒடுக்கி வைத்ததில்லை.அல்லது அப்படி ஒதுக்கி வைக்கத் தெரிந்ததில்லை. இவனைப் பொருத்தவரை தன்னிடம் இருந்த மூன்று செட் பேண்ட் சர்ட்டுகளையுமே லக்கியாகவே நினைத்துப்பழகிப் போனான்.

ஆனால் இவன் வைத்திருந்த மஞ்சளில் கட்டம் போட்ட சட்டையை மட்டும் விதி விலக்காகக் கருதி அடிக்கடி அணிகிற பழக்கம் கொண்டிருந்தவனாக அந்த சட்டை அணிகிற நேரமெல்லாம் இவனிடம் கருப்புப்பேண்ட் வந்து உருக்கொள்ளும்.

அப்போதெல்லாம் ரெடிமெட் ஸர்ட்டுகள் அவ்வளவாய் பிரபலமா யிருக்காத நேரமும், துணி எடுத்து குறிப்பிட்ட டெய்ல ரிடம் மட்டு மே கொடுத்து தைக்கிற பழக்கத்தை கைக் கொண்டிருந்த வேளையும் ஆகும்.

அந்த மஞ்சள் சட்டையும் துணி எடுத்து தைத்ததுதான். கோயம் புத்தூர் ட்ரெய்னிங்போன போது ட்ரெனிங் சென்டர் இருந்த சாலையில் ஒரு பிரபல மில்லினுடைய ஷோரூமில் எடுத்தது . உடன் வந்த ரஹ்மத்தான் சொன்னான்.கோயம்புத்தூர் வந்ததற்கு அடை யா ளமாய் ஏதாவது ஒன்றுஇங்கிருந்து கொண்டுபோக வேண்டும் என அப்பொழுது டீக்குடித்துகொண்டிருந்த கடையில்தோன்றிய யோச னை அது. கடைக்காரர்தான் சொன்னார். எதிர்த்தாற்ப்போல் இருக் கிற ஒரு மில்லின் ஷோ ரூமைக்காட்டி.இங்கு துணிகள் நன்றாக இருக்கும்,விலை குறைவாகவும்/போய்ப்பாருங்கள் .பிடித்தால் எடுத் துக் கொள்ளுங் கள்என. அவர் சொன்னது போலவே அமைந்து போனது.பின்னே மீட்டர்13ரூபாய்என்றால், ரஹ்மத்தான் சொன்னான்.நாமெல்லாம் அரசு உத்தியோகஸ்தர்கள், போயும்,போயும்13ரூபாய்க்கா துணிஎடுப்பது? மீட்டர்40,50ற்கு எடுக்க வேண்டாமா என/அதை விடுத்து ,,,,என்றவனை ஏறிட்டு விட்டும்அவனதுபேச்சை புறந்தள்ளி விட்டு மாய்எடுத்து வந்த துணியது. இதையெல்லா ம் பார்த்த ரஹ்மத் கடையை வேடிக்கை பார்ப்பது போல பார்வையை மாற்றி கொண்டான். ரஹ்மத் இவனது ட்ரெனிங் மேட் மட்டுமல்ல.ரூம் மேட்டும் கூட ட்ரெயினிங் சென்டர் அருகிலேயே ரூம் எடுத்துத்தங்கி யிருந்தார் கள்.அது ட்ரெனிங் சென்டரு க்கு அருகில் இருந்தது என்பதற்காக மட்டுமல்ல.வாடகை குறைச்சல் என்கிற உள்ச்சொல் ஒனறும் ஒளிந்து கிடந்தது அதனுள்ளாக ஆனால் வாடைகுறைச்சலில் எத்தனை வம்பு வந்து சேரும் என்பது அன்று இரவே ருசுவாகிப் போனது.

அன்று மழையாய் இருந்ததால் ரூம் பாயிடம் சொல்லி நால்வரு க்குமாய் டிபன் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டி ருந்தவேளை. இவனும்,ரஹ்மத்தும்தங்கியிருந்த அறையின் பக்க த்து அறையில்தான்உடன்ட்ரெனிங் வந்த இருவரும் தங்கியிருந்தார்கள்.

பெரும்பாலான நா ட்களிலும்,உடல் சோம்பல் அதிகாகிபோன தினங்களிலுமாய் இப்படி டிபன் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு விடுகிற பழக்கம் உண்டாகிப் போனது. ஊர்ப்போகிற வரை பசிக்கென ஏதாவது சாப்பிட வேண்டுமே.என்கிற கட்டாயத்தில் சாப்பிடுவதாய்ச் சொன்னான் இவன் சக நண்பர்களிடம். அவர்க ளும் அதையேவும்,,,,,, இன்னும்கூட சேர்த்துச் சொன் னார்கள். அன்றும்அப்படித்தான்வெளியேபெய்துகொண்டிருந்தமழையின் மென் சப்தத்தையும், மண் வாசனையையும் நுகர்ந்தவாறே சாப்பிட் டுக் கொண்டிருந்த வேளை போலீஸ்க்காரர் ஒருவருடன் லாட்ஜ் மேனேஜர் வந்தார். இவன்தான் போய் என்னவென கேட்டான். ”இந்த வரி சையில் நான்காவது ரூமிலிருந்தவரின் பணம் காண வில்லை.எங்களிடம் சொல்லிப் பார்த்த அவர் நேரடியாய் போலீஸ் ஸ்டேஷன் போய் விட்டார்,அவர்கள் விசாரணைக்கு வந்திருக் கிறார்கள்.இதற்காக விசாரிக்கப்படுகிறவர்களில் இப்போது நீங்கள் நான்காவது ஆள்” என்றார் லாட்ஜ் மேனேஜர்.

அவர்சொல்லிகொண்டிருந்தவேளையிலேஒழுக்கமாஉண்மைய ஒத்துகங்க, இல்லதூக்கி உள்ள வச்சி செதச்சிருவோம்,செதச்சி,,,,, என்றார்.

இவன்தான் சொன்னான்.சார் நாங்கள் காலை போனால் மாலை யில் வருகிறவர்கள். தவிர நாங்கள் மாதச்சம்பளம் வாங்குகிற மிடில் கிளாஸ்,எங்களை இப்படி சந்தேகம் கொள்வது காலனுக்கே அடுக்காது என்கிறஇவனது உரையை புறகணித்த போலீஸ்க்காரர் எந்திரிங்கடா எல்லாரும் போலீஸ்ஸ்டேசனுக்கு என்றார்.

இவன்தான் அப்பொழுதும் உள்ளேவிழுந்துபேசித்தடுத் தான்.உண் மையைச் சொல்கிறோம். பிடித்து க் கொண்டு போவேன் என்கிறீ ர்கள்.நாங்களும் சரியென வருவதாய் ஒத்துக்கொண் டாலும் கூட நாளை பிரச்சனை வேறு மாதிரியாய் போய்விடும் எனச்சொல்லி விட்டு லாட்ஜிக்கு எதிராய் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் போர்டையும்,அதற்கு அருகாமையாய் நின்றிருந்த கொடிக் கமபத் தையும் காட்டி லாட்ஜ் மேனேஜரிடம் மெதுவான குரலில் பேசிய தும் லாட்ஜ் மேனேஜர் போலீஸ்க்காரரை கூட்டிக் கொண்டு போய்விட்டார். போலீஸ்க்காரர் இவனையும் கூட இருந்தவர் களை யும் முறை த்துக்கொண்டே சென்றார்.

மறுநாள் ட்ரெயினிங் முடிந்து டீக்கடையில் நின்ற வேளை முந்தைய தினம் லாட்ஜிக்கு வந்து மிரட்டிய அதே போலீஸ்க்காரர் ஸ்னேக மாய் ப்பார்த்துச்சிரித்தார்.டீக்கடையின் அருகிலிருந்த பூந்தொட்டி யில் பூக்கள் தெளிந்து மலர்ந்தது போலானதொரு உணர்வு/ எதற்கும் இருக்க ட்டுமே என இவனும் ஒரு மென் சிரிப்பை தந்து விட்டுக்கேட்டான் ஏன் நேற்று அப்படி வந்தீர் கள் என/இந்தச் சாலையில் இருகிற பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் திருட்டுப்போய் விட்டதாக வும், அதற்கான விசாரணையில் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாகிப்போனது உங்களிடம் என வருத்தம் தெரிவித்தார் .மற்றபடி போலீஸ்க்காரர் வந்து போன நாளன்று நான்காவது ரூமில் ரூபாய் காணாமல் போன து ஒரு தற்செயல் ஒற்றுமையே இத்தனையும் பேசிய அன்று இரவு எடுத்து வந்ததந்த மஞ்சள்க்கட்டம்போட்ட துணி. நன்றாக இருந்தால் அது தைத்து முடிக்கப்பட்ட நாளிலிருந்து பத்து தடவைதான் போட்டிருப்பான் அந்த சட்டையை.துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்த குளிர் நாளின் இரவொன்றில் சட்டையின் வலப்புறத்தில் கையோரமாய் எலிகடித்து குதறியிருந்தது,என்ன இது எலி,,,,?ஒரு விவஸ்தை கிடையாதா அதற்கு?இப்படியா புதுச்சட்டையை கடித்துக்குதற வேண்டும்,ஒரு எலியின் நடமாட்டம் வீட்டில் இருக்கிற போதே சொன்னேன், கேட்கவில்லை நீங்கள், இப்பொழுது கூட்டம் சேர்ந்து கும்மாளம் போடுகிறது.ஊர்காரியத்துக்காக அலைகிற உங்களு க்குவீட்டைபற்றிய நினைவும் அக்கறையும் எப்படி இருக்கும் என மனைவி சொன்னநாட்கள் இன்னும்மனதினுள்ளாய் பெரும் உருவெடுத்து.

அவள்சொல்லிலும்தப்பில்லை.அவளும் என்னதான் செய்வாள் பாவம், பச்சாதாபம் மேலிட அவளிடம்மனம்வருந்துகிற நாட்களில் அதனா லென்ன,,உங்களுக்கு நேரமில்லை பாவம் நீங்க ளும் தான் என்னசெய்வீர்கள் என இவனுக்கும் சேர்த்து வருத்தபட்டுக் கொள்வாள்.

அப்படியாய்அவள் வருத்தம்தெரிவித்த வெயில்க்கால பொழுதொன்றில் இன்னொரு சட்டை ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள் புதிதாக எனச்சொல்கிறாள் மனைவி.அமையுமா இனி அந்த மஞ்சள்க் கலர் மாதிரி, என்கிற எதிர்பார்ப்பைத்தேக்கி போய் எடுத்து வந்த சட்டை ஊதாக் கலரில் நீண்டிறங்கிய கோடுகள் ஓடியக்காண்பித்ததாய் கோடுகளை வரைந்த கைகளும்,துணியை நெசவிட்ட மனதும், அதைதைத்து சட்டையாக்கிய அன்புள்ளமும் யாருக்குச் சொந்தமா னதாய் இருந்த போது கூட அதை கொஞ்சமும் நினைத்துப் பார்ப்ப தில் லை.அப்படிப்பார்ப்பவர் இங்கு அரிதே சட்டைப்பையினுள் புகுந்த இருபதை வலது கை பத்திரப்படுத்திய நேரம் பஸ்சிற்குள்ளாய் இருந்த வயதான மூதாட்டி தன் பேரன் வயதிருந்த ஒருவனிடம் கைபிதுக்கி எண்ணிய சில்ல றைகளைக்கொடுத்து டிக்கெட் வாங்கச்சொல்கிறாள்,கண்டக்டர் டிக்கெட்டிற்கு காணாது இது. இன்னும் வேண்டும் இரண்டு ரூபாய்கள் என அவர் சொன்ன வேளை வலது கை பத்திரப்படு த்திய ரூபாயை இடது கை வெளியில் எடுக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *