ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 2,806 
 

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

உடனே ராமநாதன் வாத்தியாருக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,அவருக்கு தக்ஷனையை கொடுத்து அனுப்பினார்.

ராமாநாதன் டெல்லிக்குக் கூப்பிட்டு அந்த மாமி ‘போனி’ல் வந்ததும் “நமஸ்காரம்,எங்க வாத் தியார் ரெண்டு ஜாதகமும் ரொம்ப பொருத்தமா இருக்குன்னு சொல்லிட்டார்” என்று முடிக்க வில்லை அந்த மாமி “எங்க வாத்தியாரும் ரெண்டு ஜாதகமும் பொருந்தி இருக்கு”என்று சொன்னதும்,ராமநா தன் “ரொம்ப சந்தோஷம்.நீங்க சென்னைக்கு வந்து என் பொண்ணே பாக்கவறேளா” என்று கேட்ட தும் “நாங்க வர புதன் கிழமை மத்தியானம் பன்னண்டு மணிக்கு கிளம்பற ‘ஏர்’லே வந்து உங்க ஆத்து க்கு வந்து,உங்க பொண்ணே பாத்துட்டு,அன்னிக்கே சாயங்காலம் ஏழு மணிக்கு டெல்லிக்கு தரும்பிப் போறோம்”என்று சொன்னதும் ராமநாதன் சந்தோஷப்பட்டு “நீங்க வாங்கோ.நாங்க ரெடியா இருக் கோம்” என்று சொல்லி ‘போனைக்’ ‘கட் பண்ணீனார்.

டெல்லியில் இருந்து அந்த மாமி சொன்ன சமாசாரத்தை ராமநாதன் மங்களத்துக்கும், ரமாவுக்கு சொன்னார்.மூவரும் சந்தோஷப் பட்டார்கள்.

பையனின் அம்மா ராஜம் தன் பணக்கார தம்பியைக் கேட்டு தனக்கும்,தன் கணவருக்கும், பையன் சுரேஷூக்கும் டெல்லியிலே இருந்து சென்னைக்கு போய் வர ‘ஏர் டிக்கட்’வாங்கிக் கொண்டு சென்னைக்குப் போக ரெடியாக இருந்தாள்.

ராஜம் தம்பி டெல்லியிலே மூனு கம்பனி வைத்துக் கொண்டு,ரெண்டு பங்களாவும் வைத்துக் கொண்டு இருந்தான்.அவனுடைய ஒரே பையன் அமொ¢க்காலே MS படித்து விட்டு,அமொ¢க்காவில் ஒரு பெரிய ‘சாப்ட் வேர்’ கம்பனியிலே வேலை செய்து வந்தான்.

அந்த கமபனியிலே வேலே செய்துக் கொண்டு வந்த ஒரு இந்திய பெண்ணை காதலிச்சு கல்யா ணம் பண்ணிக் கொண்டான்.அந்த வார புதன் கிழமை மூனு மணிக்கு பையனும் அவன் அம்மா அப்பாவும் ரமாவை ‘பொண்ணு பார்க்க’ ராமநாதன் வீட்டுக்கு வந்தார்கள்.

பையன்,அவனுடைய அம்மா,அப்பா மூவரும் ரமாவைப் பார்த்து விட்டு ”எங்களுக்கு உங்க பொ ண்ணே பிடிச்சு இருக்கு” என்று சொன்னார்கள்.

‘பொண்ணு பிடிச்சு இருக்கு’ என்று சொல்லவே ராமநாதன் பையனின் அம்மா அப்பபாவை பார் த்து “எங்க முதல் பொண்ணு சுதா ஒரு வேறே ஜாதி பையனை காதலிச்சு அவனுடன் ஆத்தே வீட்டு ஓடிப் போயிட்டா.நாங்க வேணம்ன்னு சொல்லியும்,அவ கேக்கலே.இந்த சமாசாரம் உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கணும்ன்னு தான் ரமா நான் கல்யாணத்துக்கு முன்னாடியே இதே சொல்றேன்.இந்த சமாசாரம் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தும்,நீங்கோ என் ரெண்டாவது பொண்ணே கல்யாணம் பண் ணிக்க சம்மதம் சொல்றேளா” என்று கூனி குறுகிக் கொண்டு கேட்டார்.

வந்து இருந்த பையனின் அம்மா “எங்களுக்கு,உங்க முதல் பொண்ணு பண்ணினதே பத்தி கவ லை இல்லே.எங்க மூனு பேருக்கும் ரமாவை ரொம்ப பிடிச்சு இருக்கு.நாங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றோம்” என்று சொல்லவே ராமநாதன் தங்கள் பெண் ரமா அவர்கள் பையனுடன் தனியாக பேச அனுமதி கேட்டார்.

பையனையும் பெண்ணையும் தனியே பேச அனுமதித்தார்கள் பையனுடைய அம்மாவும் அப்பா வும்.ரமாவும் அந்த பையனும் தனியே சந்தித்து பேசினார்கள்.

பேச்சின் நடுவே ரமா தன் ஆசையை அந்த பையனிடம் பயத்தோடு வெளிப் படுத்தினாள். பையன் ஒரு பந்தாவும் பண்ணிக் கொள்ளவில்லை.ரமா அந்த பையனிடம் “எனக்கு’சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆகணும்னு ஆசை.நீங்கோ என்னே படிக்க ‘அலவ்’ பண்ணுவேளா” என்று கேட்டாள்.உடனே அந்த பையன் ”நீ நிச்சியமா படிக்கலாம்.உன் இஷ்டப்படி நீ மேலே படிச்சு ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதி கலெக்டர் ஆக நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.அதுக்கு உறு துணையாகவும் இருப்பேன்” என்று சொன்னான்.

ஒரு அரை மணி நேரம் அவனிடம் பேசினாள் ரமா.சுரேஷ் ஒரு ‘கண்டிஷனும்’ போடவில்லை.

சுரேஷ் மனம் திறந்து பேசினது ரமாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.ரமா மிகவும் சந்தோஷப் பட்டாள்.சுரேஷிடம் கல்யாணத்திற்கு தன் சம்மதத்தை தெரிவித்தாள் ரமா.
ரூமை விட்டு வெளியே வந்த சுரேஷ்,அவன் அம்மா அப்பாவிடம் கல்யாணத்திற்கு தன் சம்ம தத்தைச் சொன்னான்.

ரமா அவள் அம்மா அப்பாவை தனியாக அழைத்து “அம்மா,அப்பா,நான் கேட்டதுக்கு அவர் எனக்கு பூரண சம்மதம் தந்தார்.கூடவே காலம் பூராவும் என் மனம் கோணாம அவர் நடந்துக் கொள்வ தாயும்,நான் ஆசை பட்ட பிரகாரம் மேலே படித்து ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி கலெக்டர் ஆக தான் முழு ஒத்துழைப்பு தருவதாவும்,உறுதுணையா இருக்கேன்னும் சொன்னார்” என்று சந்தோஷத்து டன் சொன்னாள்.

மங்களமும் ராமநாதனும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராமநாதன் ரமாவைப் பார்த்து “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரமா.நீ ஆசைப் பட்டதே பண்ண அந்த பிள்ளையாண்டான் ஒத்துண்டுட்டார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீ ரைத் துடைத்துக் கொண்டார்.மங்களம் “நீ கேட்டதுக்கு இந்தப் பிள்ளையாண்டான் ஒத்துண்டு இருக் கார்.நீ சந்தோஷமா அவரை கல்யாணம் பண்ணீண்டு நீ ஆசை பட்டாப் போல ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி கலெக்டர் ஆகணும்.அதுக்கு அந்த அம்பாள் தான் அனுக்கிரஹம் பண்ணனும்”என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

ஹாலில் பையனுடைய அம்மா ரொம்ப ‘பந்தா’ பண்ணிக் கொண்டு இருந்தாள்.தன் பெருமை யை பீற்றிக் கொண்டு இருந்தாள்.பையனின் அப்பாவும்,சுரேஷூம் ரொம்ப அமைதியாக அதிகம் பேசா மல் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தார்கள்.

பையனின் அம்மா “நீங்கோ ரமாவுக்கு காதுகளுக்கு வைரத்தோடும்,மூக்குக்கு வைர மூக்குத் தியும் போட்டுட்டு,ஒரு இருபது சவரனுக்குக் குறையாம நகைகள் போடுங்கோ” என்று கொஞ்சம் கண் டிப்பான் குரலில் சொன்னாள்.

‘ரமா மேலே படிக்க பையன் ஒத்துக் கொண்டு விட்டான்’ என்று சந்தோஷப் பட்டு, ராமநாதன் பையன் அம்மா சொன்ன எல்லா ‘கண்டிஷன்களு’க்கும் ஒத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தார்.

உடனே ராமநாதன் அவர்களைப் பார்த்து “நான் எங்காத்து வாத்தியாரேக் கூப்பிட்டு கல்யாண த்துக்கு ஒரு நல்ல நாளாப் பாத்து சொல்லச் சொல்றேன்.அவர் சொன்னதும் நான் உங்களுக்கு அந்த முஹூர்த்த நாளை சொல்றேன்.நீங்க உங்க பக்க ஏற்பாட்டை எல்லாம் பண்ணிக்க வசதியா இருக்கும்” என்று சொன்னதும் பையனின் அம்மா ராஜம்“சரி, அப்படியே பண்ணுங்கோ”என்று சொல்லி விட்டு, தன் கணவரையும் சுரேஷையும் அழைத்துக் கொண்டு ‘ஏர்’ போர்ட்டுக்குக்கு கிளம்பினாள்.

ராமநாதனும் மங்களமும் அவர்களை வாசல் வரைக்கும் கூட போய் அனுப்பி வைத்தார்கள்.

ராஜம் ஏழு மணிக்கு கிளம்பும் ‘ப்லைட்டி’ல் டெல்லிக்கு தன் கணவனையும்,பையனையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு வந்து சேர்ந்தாள்.

அவர்கள் கிளம்பிப் போனவுடனே மங்களம் “ரமா ரொம்ப குடுத்து வச்சவ.பொண்ணு பாக்கவே அவா ‘ஏர்’லே வந்து போறா.அவா நிச்சியமா அவ ரொம்ப பணக்காராளா தான் இருக்கணும்.பையனும் பாக்க நன்னா இருக்கான்.நிறைய படிச்சும் இருக்கான்” என்று சொன்னதும் ரமாவும் ராமநாதனும் மிக வும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த நாள் ராமநாதன் ஆத்து வாத்தியாரை கூப்பிட்டு ரமா சுரேஷ் கல்யாணத்திற்கு ஒரு நல்ல முஹூர்த்த நாள் பார்க்க சொன்னார்.அவர் பார்த்து சொன்னதும் ராமநாதன் சந்தோஷப் பட்டு அவருக்கு தக்ஷணையை கொடுத்து அனுப்பி விட்டு,வாத்தியார் சொன்ன முஹூர்த்த நாளை டெல்லி க்கு ‘போன்’ பண்ணிச் சொன்னார்.

ராமநாதன் தம்பதிகள் கல்யாணத்திற்கு வேண்டிய ஜவுளிகளை எல்லாம் வாங்கினார்.கல்யாண த்திற்கு ஒரு பெரிய மண்டபத்தையும் ஏற்பாடு பண்ணி,எல்லா வேளைக்கும் சமையல் பண்ண ஒரு சமையல் ‘கண்ட்ராக்டரை’யும் ஏற்பாடு பண்ணினார்.

மங்களம் உடனே ரகுராமனுக்கு ‘போன்’ பண்ணினாள்.

ரகுராமன் ‘போனில்’ வந்தவுடன் மங்களம் “ரகுராமா,ரமாவுக்கு ஒரு நல்ல இடமா அமைஞ்சு இருக்கு.பையன் ஆத்துக்காரா எல்லாம் டெல்லிலே இருக்கா.அத்திம்பேரும் நானும் இந்த இடத்தை ஒத்துண்டு ரமாவுக்கு கல்யாண ஏற்பாடுகளே எல்லாம் பண்ணீ வறோம்.ரமா கல்யாண முஹூர்த்த நாள் வர மாசம் இருபதாம் தேதி.நீ அம்மாவை அழைச்சுண்டு கல்யாணத்துக்கு வந்துட்டுப் போ.ரமா வுக்கு நீ ஒத்தன் தான் மாமான்னு உறவிலே இருக்கே.மறக்காம அம்மாவை அழைச்சுண்டு நீயும் ரெ ண்டு நாள் முன்னாடி ரமா கல்யாணத்துக்கு வந்துட்டுப் போ,என்ன” என்று சொன்னாள்.

உடனே ரகுராமன் “அக்கா ரமா கல்யாணத்துக்கு நான் அம்மாவை அழைச்சுண்டு வர முடியா து.நானே உனக்கு ‘போன்’ பண்ணி சொல்லணும்ன்னு இருந்தேன்.நேத்திக்குத் தான் கண் டாக்டர் அம்மா கண்களே ‘ஆபரேஷன்’ பண்ணி முப்பது நாள் ஆன பிற்பாடு ‘செக் அப்’ பண்ணிப் பாத்தார். அம்மாவுக்கு ரெண்டு கண்ணும் நன்னாவே தெரியலே.நான் டாக்டரைப் பாத்து கோவமா ‘டாக்டர் அம் மாவை ரெண்டு கண்ணுக்கும் ‘ஆபரேஷன்’ பண்ண அழைச்சுண்டு வந்தப்ப ‘நீங்கோ ஆபரேஷன் பண்ணா ரெண்டு கண்ணும் நன்னாத் தெரியும்ன்னு சொன்னேள்.ஆனா அம்மா இப்ப ரெண்டு கண் ணும் சரியா தெரியலே’ ன்னு சொல்றாளே.நீங்க அம்மாவுக்கு சரியா ‘ஆபரேஷன்’ பண்ணலையா’ன்னு கேட்டேன்’.அதுக்கு அவர் ‘நான் உங்க அம்மாவுக்கு ‘ஆபரேஷன்’ எல்லாம் சரியாத் தான் பண்ணேன் நீங்க ‘ஆபரேஷனு’க்கு உங்க அம்மாவை அழைச்சு கிட்டு வந்தப்ப,உங்க அம்மா ரெண்டு கண்லேயும் ‘காட்ராக்ட்’ ரொம்ப முத்திப் போய் இருந்திச்சு.‘காட்ராக்ட்’ முத்திப் போய் இருந்து,’ஆபரேஷன்’ பண் ணா,கண் சுமாராத் தான் தெரியும்.ரொம்ப நல்லாத் தெரியாது.நீங்க உங்க அம்மாவே ரொம்ப வருஷம் ‘காட்ராக்ட்டை’ முத்த வச்சிட்டு இருந்து இருக்கீங்க’ன்னு சொல்லிட்டாரு” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.
ரகுராமன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனாள் மங்களம்.

”என்னடா சொல்றே ரகுராமா.ஆபரேஷன் பண்ணியும் அம்மாவுக்கு ரெண்டு கண்ணும் ரொம்ப சுமாராத் தான் தெரியறதா” என்று கேட்டதும் ரகுராமன் “ஆமாம்க்கா.சாயங்காலம் மணி ஐஞ்சடிச்சா அம்மாவுக்கு ரெண்டு கண்ணும் ரொம்ப மங்கலாத் தான் தெரியறதுன்னு சொல்றா.நீயும் அத்திம்பே ரும் ரமா கல்யாணத்தே நன்னா பண்ணி முடியுங்கோ.என் ஆசீவாதமும்,அம்மா ஆசீர்வாதமும் ரமாவு க்கு என்னைக்கும் உண்டு” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

கொஞ்ச நேரமானதும் ”நான் சமையல் வேலே செய்யற பணக்காரா ஆத்லே ஆறு பேர் இருக்கா. அவா ஆறு பேறுக்கும் வித விதமா சமைக்கணும்.சின்னவாளுக்கு காரம், புளி போட்டு சமைக்கணும் பெரியவாளுக்கு காரம்,புளி எல்லாம் கம்மியாப் போட்டு சமைக்கணும்.அவா எனக்கு லீவும் தரமாட்டா. அதைத் தவிர அம்மாவுக்கும் சென்னைக்கு வந்து போறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.என்னே மன்னி ச்சிடுக்கா.எனக்கு அம்மாவுக்கும் ரமா கல்யாணத்துக்கு வற குடுப்பணே இல்லே.நான் அம்மா கிட்டே நீ ரமா கல்யாணத்தே பத்தின எல்லா சந்தோஷ சமாசாரத்தே எல்லாம் விவரமா சொல்றேன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.

ரகுராமன் சொன்ன விஷயத்தைக் கேட்டு மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டே மங்களம் தன் கணவா¢டம் ரகுராமன் சொன்ன எல்லா சமாசாத்தையும் சொல்லி அழுதாள்.
உடனே ராமநாதன் “அழாதே மங்களம்.அந்த கண் டாக்டர் சொன்னது ரொம்ப சரி.கண்லே ‘காட்ராக்ட்’ ரொம்ப முத்திப் போய் ஆபரேஷன் பண்ணா,கண் ரொம்ப சுமாராத் தான் தெரியும்.பாவம் ரகுராமன்.பணக் கஷ்டத்தாலே உங்க அம்மா கண்ணுக்கு ரொம்ப லேட்டா ஆபரேஷன் பண்ணி இருக் கான்.உங்க அம்மாவும் தனக்கு கண் கொஞ்சம் மங்கலா தெரிய ஆரம்பிச்சப்ப அப்பவே, ரகுராமன் கிட் டே சொல்லி இருக்கணும்.உங்க அம்மாவும் தப்பு பண்ணிட்டா.இப்ப எந்த அளவுக்கு உங்க அம்மாவுக் கு கண்கள் தெரியறதோ அதே வச்சுண்டு தான் அவ காலம் பூராவும் இருந்துண்டு வரணும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

உடனே ரமா ”பாவம்மா.அவா ரெண்டு பேரும்.பணக் கஷ்டத்தாலே இருந்துண்டு வறா.நாம குடுத்து வச்சது அவ்வளவு தான்.மாமாவாலேயும்,பாட்டியாலேயும்,என் கல்யாணத்துக்கு இப்போ வர முடியலே” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

மங்களம் “பெரிய பொண்ணு சுதாவுக்கு இந்தாத்லே கல்யாணமே நடக்கலே.அவ ஒரு கிருஸ்த வனோடு ஓடிப் போயிட்டா.ரமாவுக்கு நாம கிரமமா கல்யாணம் பண்ணப் போறோம்.ஆனா அவ கல்யா ணத்துக்கு என் அம்மாவாலேயும்,தம்பியாலேயும் வர முடியலே.ரமா சொல்றதே போல நாம குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்று சொல்லி விட்டு,தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

குறிப்பிட்ட முஹூர்த்த நாளுக்கு முன் தினம் ராஜம் தன் கணவன்,சுரேஷ்,பணக்கார தம்பி ராமசாமி,அவன் மணைவி நளினீ இவர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தாள்.

முஹூர்த்த நாளில் ராமநாதன் தம்பதிகள் ரமா சுரேஷ் கல்யாணத்தை வெகு விமா¢சையாக செய்து முடித்தார்கள்.கல்யாணத்திற்கு ராமநாதன் நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்து அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த ‘கிப்ட்டைக் கொடுத்து விட்டு கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டார்கள்.

ராமநாதன் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் போட்டு செலவு செய்து கல்யாணத்தை முடி க்கப் பார்த்தார்.ஆனால் கடைசியில் எல்லா செலவுக்கும் அவருக்கு பணம் போதவில்லை.அதனால் கல்யாணத்திற்கு வந்து இருந்ததன் ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ ரமணியைக் கேட்டு, ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கி ஒரு வழியாய் சமையல் காரனுக்கும்,சத்திர மானேஜருக்கும்,மேளக்காரனுக்கும் பணம் பட் டுவாடா பண்ணி கல்யாணத்தை ஒரு ‘ப்ராப்லெம் இல்லாமல்’ செய்து முடித்தார் ராமநாதன்.

கல்யாணம் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பிற்பாடு ரமாவும்,மங்களமும் அவரை மிகவும் திட்டினார்கள்.

”உங்களுக்கு எதையும் சிக்கனமாக பண்ணவே தெரியாதா.இப்படி கடன் வாங்கி பண்ணனுமா. நாளைக்கு நாம தானே இந்த கடனை அடைச்சாகனும்.கல்யாண செலவை இன்னும் கொஞ்சம் குறை ச்சு பண்ணி இருக்க கூடாதா” என்று கத்தினாள் மங்களம்.

“ரமா நம் ஒரே பெண் கலயாணம் இல்லையா மங்களம்.தவிர கல்யாணம் பண்ணிக்கப் போற பிள்ளையாண்டான் ரமா ஆசை பட்டாப் போல அவளை மேலே படிக்க அனுமதி குடுத்து இருக்கான். நான் ஆசையா நிறைய இழுத்துப் போட்டுண்டு பண்ணிட்டேன்.கல்யாண செலவு கொஞ்சம் அதிகமா தான் ஆயிடுத்து.பரவாயில்லே.நான் மெல்ல எப்படியாவது சமாளிச்சு கடனை அடைச்சுடறேன்”என்று அவர்களுக்கு பதில் சொன்னார் ராமநாதன்.

கல்யாணம் நல்ல படியாய் முடிந்ததும்,ராஜம் தன் தம்பி வாங்கின ‘ஏர் டிக்கட்டில்’தன் கணவன், சுரேஷ்,ரமா,ராமசாமி,நளினி இவர்களுடன் மங்களத்தையும்,ராமநாதனையும் அழைத்துக் கொண்டு சென்னை ‘ஏர் போர்ட்டு’க்கு வந்து, ’ப்ளேன்’ ஏறி டெல்லிக்கு வந்து சேர்ந்தாள்.

’ஏர் போர்ர்ட்டில்’ இருந்து ராஜம் தம்பி ராமசாமி அவன் மணைவி நளினியை அழைத்துக் கொ ண்டு அவர்கள் காரில் கிளமபிப் போய் விட்டார்கள்.

ராஜம் ரெண்டு கார்களை ஏற்பாடு பண்ணிக் கொண்டு தன் தம்பி பங்களாவுக்கு வந்தாள்.

‘ஏர் போர்ட்டில்’ இருந்து அவர்கள் ஏறி வந்த கார்,நிறைய பங்களாக்கள் இருந்த ஒரு பெரிய ரோடு வழியாக வந்து ஒரு பெரிய பங்களா முன்பு வந்து நின்றது.
காரை விட்டு கீழே இறங்கி பங்களாவுக்குள் சென்றார்கள் எல்லோரும்.

ரமாவும் அவள் பெற்றோர்களும் அந்த வீட்டை சுற்றிப் பார்த்தார்கள்.

கீழே பெரிய ஹால்,’டைனிங்க் ஹால்’,’லிவிங்க் ரூம்’ இதெல்லாம் இருந்தன.மாடியில் பெரிய ஐந்து ரூம்கள் இருந்தன.கீழே, மாடி,பூராவும் தரையில் மெத்தை விரிக்கப் பட்டு இருந்தது.வீடு பூராவு ம் பளிச்சென்று பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது.’சோபா செட்’,‘டைனிங்க் டேபிள்’ அலங்கார அலமாரிகள்,அலங்கார விளக்குகள்,பெரிய ‘ப்ரிட்ஜ்’ ‘மியூசிக் செட்’,சுவற்றில் ஐம்பத்து ஒன்னு அங்குல பெரிய ‘டீவி’யும் இருந்தது.எல்லா ரூம்களிலும் ஏ.ஸி.பொருத்தி இருந்தது. ஒன்று இருந்து ஒன்று இல்லாமல் இல்லை அந்த பங்களாவில்.

இதைத் தவிர ஓரு வேலைக்காரியும்,ஒரு சமையல்காரியும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

ரமாவுக்கும் அவள் பெற்றோருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

‘நாம நம்ம பொண்ணை நல்ல இடத்தில் தான் கல்யாணம் பண்ணிக் குடுத்து இருக்கோம்’ என்று சந்தோஷப் பட்டார்கள் ராமநாதனும் மங்களமும்.ரமாவும் நாம ஒரு பணக்கார ஆதிலே தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து இருக்கோம்” என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

ரெண்டு நாள் ஆனதும் இரு குடும்பத்தாரும் ஆசை படவே வாத்தியாரைக் கூப்பிட்டு சுரேஷ் ரமா ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண ஏற்பாடு பண்ணீனார்கள்.

ராமநாதனும் மங்களமும் சந்தோஷப் பட்டார்கள்.

வாத்தியார் பூஜையைப் பண்ணி விட்டு இரவு கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அவரது ‘தக்ஷணை’யை வாங்கிக் கொண்டு போனார்.மங்களம் ரமாவுக்கு ஒரு புது புடவையை கட்டி அவளை ‘சாந்தி முஹூர்த்த’ அறைக்குள் அனுப்பினாள்.

ரமா அப்பா,அம்மா,மாமனார் மாமியார் எல்லோருக்கும் நமஸ்காரத்தை பண்ணி விட்டு,ஒரு வெள்ளிச் சொம்பில் சூடாக காய்ச்சின பாலை கையிலே எடுத்துக் கொண்டு பயந்துக் கொண்டே ‘சாந்தி முஹூர்த்த’ அறைக்குள் போனாள்.

உள்ளே வந்த ரமாவைப் பார்த்து சுரேஷ் “வா ரமா” என்று அவளை வரவேற்றான்.ரமாவும் பய ந்துக் கொண்டே உள்ளே போனாள்.

சுரேஷ் உடனே ‘ரூம்’ கதவில்,தொங்கிக் கொண்டு இருந்த ‘ஸ்க்ரீனை’ இழுத்து கதவை நன்றா க மூடி,தாழ்ப்பாள் போட்டான்.

சுரேஷ் ரமாவைப் பார்த்து “ரமா உக்காரு.ரெண்டு பெரியவாளும் நம்ம ரெண்டு பேருக்கும் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண வாத்தியாரை ஏற்பாடு பண்ணீ,உன்னே இங்கே அனுப்பி இருக்கான்னு உனக்கு நன்னாத் தெரியும்.ஆனா உனக்கும்,உங்க அம்மா அப்பாவுக்கும் தெரியாத மொத்த விஷயத் தையும்,நான் இப்போ உனக்கு சொல்லப் போறேன்.நான் சொல்றதே எல்லாம் நீ முழுக்கக் கேட்ட பிற் பாடு நீ ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணிக் கொள்ள இஷ்டப் பட்டா,நாம் பண்ணிக் கொள்ளலாம்.உனக் கு வேணம்ன்னு தோனித்துன்னா பண்ணீக்க வேணாம்.ஆனா நான் ‘ரூம்’ விளக்கை அணைக்கிறே னேன்னு நீ கொஞ்சம் கூட பயப் பட வேணாம்.வெளிலே இருக்கற பெரியவாளுக்கு ஒரு நம்பிக்கை வரத் தான் நான் ‘ரூம்’ விளக்கை அணைக்கிறேன்.உன் சம்மதம் இல்லாம் நான் சத்தியமா உன்னே தொடக்கூட மாட்டேன்” என்று சொல்லி விட்டு ‘ரூம்’ விளக்கை அணைத்தான்.

‘இவர் என்னமோ பூர்வ பீடிகைப் போடறாரே.என்னடா வம்பு இது.நம்ம அப்பா அம்மா வெளியே தூங்கிண்டு இருப்பாளே.இவர் சொல்லப் போவதை நாம காத்தாலே தானே அவா கிட்ட சொல்ல முடி யும்.அது வரைக்கும் நாம என்ன பண்றது’ என்று நினைத்து ரமா பயந்துப் போனாள்.

சுரேஷ் விளைக்கை அணைத்து விட்டு அந்த ரூமில் இருந்த ஒரு சின்ன ‘டார்ச்சை’ எடுத்து ‘ஆன்’ பண்ணினான்.’ரூமில்’ மங்கலாக வெளிச்சம் வந்தது.

ரமாவுக்கு இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது.

சுரேஷ் தன் கிட்டே இருந்து ரெண்டு அடி தூரம் தள்ளி உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

சுரேஷ் தன் தொண்டையை கனைத்துக் கொண்டு “ரமா,நான் உனக்கு எங்க குடும்ப உண்மை நிலைமையை பத்தி முதல்லே சொல்றேன்.ரமா,என்னை மன்னிச்சிடு.இந்த ‘டிராமா’ எல்லாம் முழுக்க முழுக்க என் அம்மாவின் ஏற்பாடு.நான் எவ்வளவு சொல்லியும் என் அம்மா கேக்காம,எங்க பணக்கார மாமாவின் ஆத்லே நம்மை இந்த நாலு நாள் தங்க வச்சுட்டு,நாங்க ரொம்ப பண வசதி உள்ளவான்னு உன் அப்பா அம்மாவுக்கு காட்டி இருக்கா.என் அம்மா அவ தம்பியின் பண ‘ஹோதா’வை வச்சுண்டு இப்படி பண்ணி வறா.நானோ என் அப்பாவோ ஒன்னும் செய்ய முடியாத நிலைமைலே இருக்கோம். ’நெட்லே’ போட்டு இருந்தது போல நான் ‘எம்.பீ.ஏ.’ இல்லே.வெறும் ’பீ.ஏ.’ தான் பாஸ் பண்ணி இருக் கேன்.இங்கே ஒரு பெரிய கம்பெனிலே ‘அப்பர் டிவிஷன் க்ளார்க்காக’த் தான் வேலை பாத்து வறேன். நான் சொல்றது உனக்கு ஒரு பேரதிர்ச்சியாத் தான் இருக்கும்.நான் இல்லேன்னு சொல்லலே.என் அம்மா உன்னே பொண்ணு பாக்க வந்தப்ப அழைச்சுண்டு வந்தப்ப,எங்க குடும்ப உண்மை ஒன்னை யும் சொல்லக் கூடாதுன்னு சொல்லித் தான் என்னையும் என் அப்பாவையும் உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்தா” என்று சொல்லி விட்டு தன் தொண்டையை கனைத்துக் கொண்டான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டு ரமா பயந்துப் போனாள்.

சுரேஷ் தொடர்ந்தான்.”ஆனா ஒன்னு மட்டும் நிச்சியம் ரமா.நான் உனக்கு சத்தியம் பண்ணிக் குடுக்கறேன்.உன்னை பொண்ணு பாக்க வந்த போது நான் சொன்னபடி உன்னை வாழ் நாள் பூராவும் கண் கலங்காம பாத்துக்கறேன்.நீ மேலே படிக்க நான் முழு ஒத்துழைப்பு தரேன்.இதில் ஒருவரும் குறுக்கே வராம நான் பாத்துக்கறேன்.இந்த பங்களா எங்க பங்களாவே இல்லே.எங்க மாமாவோட பங்க ளா.எங்க வீடு இங்கே இருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்லே இருக்கு.அது ஒரு ‘சிங்கள் ரூம் ப்லாட்’ தான்.அங்கே தான் நாம குடித்தனம் பண்ணீ வரணும்.எங்க குடும்ப உண்மை,என்னை பத் தின உண்மை எல்லாம் உனக்கு இப்ப தெரிஞ்சு இருக்கும்.நீ சம்மதப்பட்டா நாம ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணீக்கலாம்.உனக்கு சம்மதம் இல்லேன்னா நான் உன்னே தொடக் கூட மாட்டேன்.இது சத்தியம் ரமா” என்று சொல்லி விட்டு ‘பாத் ரூமு’க்குப் போனான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டதும் ரமாவுக்கு அதள பாதாளத்தில் விழுவது போல இருந்தது. அவள் அழுதாள்.

அவளுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனாள்.

சுரேஷ் ‘பாத் ரூமில்’ இருந்து வந்த பிறகு ரமா அவனைப் பார்த்து கோவமாக” எங்களே இப்படி ஏமாத்திக் கல்யாணம் பண்ணீண்டுட்டேளே.இது உங்களுக்கே நன்னா இருக்கா.உங்களே தான் தனி யா சந்திச்சு பேசினேனே,அப்போதாவது நீங்க என் கிட்டே நான் ‘நான் ‘எம்.பீ.ஏ.’ இல்லே.வெறும் ’பீ.ஏ.’தான் ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.ஒரு பெரிய கம்பெனிலே ‘அப்பர் டிவிஷன் க்ளார்க்காக’த் தான் வேலே பண்ணீண்டு வறேன்னு சொல்லி இருக்க கூடாதா.உங்க குடும்பம் ஒரு பணக்கார குடும்பம், நீங்க ‘எம்.பீ.ஏ.’படிச்சு இருக்கேள்.ஒரு பெரிய உத்யோகத்லே இருக்கேள்ன்னு நம்பி தானே என் அம் மா அப்பா இந்த இடத்லே சம்மந்தம் பண்ணீண்டா.நீங்க ’என்னே மேலே படிக்க வக்கிறேன்,காலம் பூராவும் கண் கலங்கா வச்சுக்கறேன்’னு சொன்னதே, நான் என் அம்மா அப்பா கிட்டே சொன்னேன். அவா சந்தோஷப்பட்டு இந்த கல்யாணத்தே பண்ணீ வச்சா” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமா “எங்க அப்பா தன் கையிலே இருந்த மொத்த பணத்தை எல்லாம் போட்டு உங்க அம்மா கேட்ட எல்லா நகைகளையும் எல்லா பண்ணா.கல்யாணம் முடிஞ்ச பிறகு, அப்பா கையிலே இருந்த பணம் போறாம அவர் தன் ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ ஒருத்தர் கிட்டேஇருந்து ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கி எல்லாருக்கும் பட்டுவாடா பண்ணார்ன்னு உங்களுக்கு தெரியுமா.இனிமே அவர் கொஞ்ச கொஞ்சமா தனக்கு வரும் சம்பளத்லே அந்த ஒரு லக்ஷ ரூபாய் கடனை அடைச்சுண்டு வரணும்ன்னு உங்களுக்குத் தெரியுமா.இன்னொரு முக்கியமான விஷயம்.எங்க அப்பா இன்னும் நாலு வருஷத்லே ரிடையர் ஆகப் போறார்” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.

கொஞ்ச நேரமானதும் ரமா ”எங்க அப்பாவும் அம்மாவும் என் அக்கா கல்யாணத்தே கிரமா ஒரு பிராமணப் பையனுக்கு பண்ணிக் குடுக்கணும் ரொம்ப ஆசைப் பட்டா.ஆனா என் அக்கா அவா சொல் றதே கேக்காம ஒரு கிருஸ்தவ பையனோடு ஓடிப் போயிட்டா.இப்போஎ ன் அம்மா,அப்பா காதிலே என் கல்யாணமும்,ஒரு ஏமாத்தல் குடும்பத்லே நடந்து இருக்குன்னு கேள்விப் பட்டா,அவா ரெண்டு பேரும் உடனே உசிரே மாய்ச்சுண்டு விடுவா.அவாளாளே இந்த துக்கத்தே தாங்கிக்கவே முடியாது”
என்று சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த சுரேஷ் ரமா கையை பிடித்துக் கொண்டு “தப்பு தான் ரமா எங்க அம்மா பண்ணது.ரொம்ப தப்பு தான்.என்னே பத்தின ஒரு விஷயமும் சொல்லக் கூடாதுன்னு சொல்லித் தான் என அம்மா என்னையும் அப்பாவையும் உங்காத்துக்கு ‘பொண்ணு பாக்க’ வரும்போது அழைச்சுண்டு வந்தா.நாங்க என்ன பண்ணட்டும் சொல்லு.அதானால்லே தான் நாங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க வேண்டியதாய் போச்சு.நான் பண்ணது ரொம்ப தப்பு தான்” என்று சொல்லி அவனும் அழுதுக் கொண்டு இருந்தான்.

“இப்போ எனக்கு எல்லாம் நன்னா புரிஞ்சுப் போச்சு.உங்க அம்மா உங்களே ‘பொண்ணு பாக்க’ வரும் போது ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி அழைச்சுண்டு வந்து இருக்கா.நீங்க என்ன பண்ணுவேள் பாவம்.நீங்க அழாதேள்.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி விட்டு தன் கையை விடுவித்துக் கொண்டு கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொள்ள சுரேஷ் ‘பாத் ரூமு’க்குப் போனான்.

ஒரு முடிவுக்கு வந்தாள் ரமா.

‘நடந்தது என்னவோ நடந்து போச்சு.இனிமே இந்த குடும்ப உண்மைகளை எல்லாம் நம்ம அம் மா அப்பா கிட்டே போய் சொல்லிக்க்கிறதிலே ஒரு லாபமும் இல்லே.அப்பா அவர் ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ கிட்டே ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கி இந்த கல்யாணத்தே செஞ்சு முடிச்சு இருக்கார்.அவா ரெண்டு பேர் மனசும் நோகக் கூடாது.நம்ம பொண்ணுக்கு ‘சாந்தி முஹூர்த்தம் ஆயிடுத்துன்னு சந்தோஷப் பட்டுண்டு,ரெண்டு நாள் இங்கே இருந்துட்டு சென்னைக்குப் போகட்டும்.நாம தான் இந்த நிலைமை யை சமாளிச்சுண்டு வரணும்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது சுரேஷ் ‘பாத் ரூமை’ விட்டு வெளியே வந்தான்.

ரமா அழுதுக் கொண்டே சுரேஷைப் பார்த்து “எனக்கு இப்போ மனசு ரொம்ப சரியே இல்லே. நீங்க எனக்கு ரெண்டு உதவி பண்ணனும்” என்று சொல்லி முடிக்கவில்லை,சுரேஷ் உடனே “என்ன உதவி வேணும் சொல்லு ரமா.நான் நிச்சியமா பண்றேன்” என்று சொன்னான்.

ரமா அழுதுக் கொண்டே “நான் இப்படி கீழே ஒரு ஓரமா படுத்துக்கப் போறேன்.நீங்க ‘பெட்லே’ படுத்துக்கோங்கோ.என் மனசு சரியானப் புறமா நாம ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணிக்கலாம்.இன்னைக் கு வேணாம்.நாம ரெண்டு பேரும் காத்தாலே எழுந்து ‘பெட் ரூமே’ விட்டு வெளியே போகும் போது, பெரியவா உங்களே கேட்டா ‘எங்களுக்கு எல்லாம் நல்ல படியா ஆச்சுன்னு சொல்லுங்கோ.நானும் அப் படியே சொல்றேன்.எங்க அம்மாவும் அப்பாவும் சந்தோஷமா சென்னைக்குப் போகட்டும்.அப்புறமா நாம ரெண்டு பேரும் யோஜனை பண்ணி பண்ணலாம்” என்று சொன்னதும் சுரேஷ் “சரி ரமா,நீ சொன் னபடியே பண்றேன்” என்று சொன்னதும் ரமா “உங்களுக்கு ரொம்ப ’தாங்க்ஸ்’ “என்று சொல்லி விட்டு ‘பெட்’ மேலே இருந்த ஒரு போர்வையை எடுத்து தரையில் போட்டுக் கொண்டு படுக்கப் போனாள் ரமா.அவளுக்கு இரவு பூராவும் துக்கம் வரவில்லை.
ரமா இரவு பூராவும் தூங்காமல் யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தாள்.

சுரேஷ் ‘பெட்டின்’ மேலே படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்ததும் ரமாவும் சுரேஷூம் சந்தோஷமாக இருப்பது போல எல்லோர் முன்னிலை யிலும் நடந்துக் கொண்டார்கள்.ரமா தன் பெற்றோர்களிடம் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *