ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,506 
 

அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

அப்பாவும்,அம்மாவும் இல்லாத அந்த வீடு ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் சூன்யமாக இருந் தது.பிறகு ரமாவின் ஞாபகம் வரவே ‘இந்த பொண்ணுக்காக நாம வாழ்ந்து வரணுமே’ என்று நினைத்து இருவரும் மெல்ல தங்களை தேற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ரமா மிகவும் நன்றாகப் படித்து வந்தாள்.

ரமா வருடாந்திர பரி¨க்ஷகளை எல்லாம் எழுதி விட்டு வீட்டில் இருந்தாள்.

அன்று இரவு மங்களம் தன் கணவரைப் பார்த்து “ஏன்னா,ரமா B.Com ‘பாஸ்’ பண்ணவுடனே, அவளுக்கு காலா காலத்லே ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சிடலாமா.எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு.ரமாவும் நாலு புருஷ பசங்களோட ஒன்னா படிச்சுண்டு வறா.இவளும் ஒரு நாளைக்கு சுதா சொன்னா மாதிரி சொல்லிண்டு வந்து நின்னா,நான் என்ன பண்றது.நீங்கோ இதே யோஜனைப் பண்ணேளா.நீங்கோ என்ன அபிபியாயப் படறேள்” என்று கவலையுடன் கேட்டாள்.

உடனே ராமநாதன்” மங்களம் உனக்கு மட்டுமா அந்த பயம் இருக்கு.எனக்கும் அந்த பயம் ரொ ம்பவே இருக்கு.ஏற்கெனவே நாம ஒரு தடவை சுதா விஷயத்லே நன்னா சூடு போட்டுண்ட்டோம்.ரமா விஷயத்லே நாம் அந்த தப்பே பண்ணிகூடாது.அவ B.Com ‘ரிஸல்ட்’ வரட்டும்.நாம் ரெண்டு பேரும் நம்ம பயத்தே அவ கிட்டே சொல்லி அவளுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சிடலாம்” என்று சொன்னார்.

“அப்பாடா எனக்கு இப்போ தான் நிம்மதியா மூச்சு விட முடியறது.எங்கே நீங்கோ ‘அவ மேலே படிக்கட்டுமே மங்களம்’ன்னு சொல்லப் போறேளோன்னு நான் ரொம்ப பயந்துண்டு இருந்தேன்.நாம ரமாவுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சுட்டா நிம்மதியா இருந்துண்டு வரலாம்.இல்லை யா சொல்லுங்கோ” என்று கேட்டாள் மங்களம். “ஆமாம் மங்களம், இந்த வசிலே நமக்கு நிம்மதி ரொம்ப முக்கியம்” என்று சொல்லி ஒரு பெரு மூச்சு விட்டார்.

அன்று B.Com ரிஸல்ட் வரும் நாள்.ராமாவுடன்,மங்களமும் ராமநாதனும் அவள் கல்லூரிக்குப் போனார்கள்.

B.Com.’கோர்ஸிலே’ சென்னை மாநகரத்திலேயே ‘பஸ்ட் ராங்க்’ வாங்கி இருந்தாள்.ரமா கல்லூ ரி பிரின்ஸிபால் மிகவும் சந்தோஷப் பட்டு ரமாவை மிகவும் பாராட்டி விட்டு அவளுக்கு அந்த கல்லுரி யிலே M.Com.படிக்க ஒரு ‘சீட்’ கொடுத்து,அவளுக்கு முழு ‘ஸ்காலர்ஷிப்பையும்’ கொடுத்தார்.

ரமா ஓடி வந்து தன் அப்பா அம்மாவிடம் “நான் ‘ஸ்டேட் பஸ்ட் ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.என் காலேஜ் பிரின்ஸிபால் எனக்கு M.Com.படிக்க ஒரு ‘சீட்’ குடுத்து,முழு ‘ஸ்காலர்ஷிப் பையும்’ குடுத்து இருக்கார்”என்று சொன்னதும் இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

“எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு ரமா.நீ ‘ஸ்டேட் பஸ்ட் ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கியா.’கங்கிராட்ஸ்’ ரமா” என்று சொல்லி இருவரும் ரமாவின் கையைக் குலுக்கி னார்கள்.மங்களம் “ரமா,நான் வெறுமனே ‘டெந்த்’ தான் பாஸ் பண்ணி இருக்கேன்.அப்பா வெறுமனே B.Com தான் ‘பாஸ்’ பண்ணீ இருக்கா.ஆனா நீ இவ்வளவு ‘இண்டெலிஜெண்டா’ இருந்து B.Com. ‘ஸ்டேட்ஸ்’லெ ‘ப்ஸ்ட்’’ராங்க்’ வாங்கி,இப்போ M.Com. படிக்க முழு ‘ஸ்காலஷிப்’ வாங்கி இருப்பதை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாவும்,சந்தோஷமாகவும் இருக்கும்மா” என்று சொல்லி ரமாவைக் கட்டிக் கொண்டாள்.

ராமநாதனும் மங்களமும் ரமாவின் ‘பிரின்ஸிபாலை’ப் பார்த்து தங்கள் நன்றியை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அன்று இரவே மங்களம் தன் கணவா¢டம் “ஏன்னா,நாம ரெண்டு பேரும் ரமா B.Com படிச்சு முடிச்சவுடனே,அவளுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி முடிச்சிடலாம்ன்னு சொல்லிண்டு இருந்தோம் ஆனா இப்போ M.Com படிக்க முழு ‘ஸ்காலஷிப்பை’ வாங்கிண்டு வந்து இருக்காளே.எப்படி நாம அவளுக்கு கல்யாணத்தே பண்ணப் போறோம்.அவ M.Com படிச்சு முடிக்க இன்னும் ரெண்டு வரு ஷம் ஆகுமே.அது வரைக்கும் நான் நெருப்பை வயித்லே கட்டிண்டு தான் வந்துண்டு இருக்கணுமா” என்று அழ மாட்டாத குரலில் கேட்டாள்.

ராமநாதன் ரெண்டு நிமிஷம் மௌனமாய் இருந்தார்.” ஏன்னா,நான் இத்தனை கவலைப் பட்டு ண்டு கேக்கறேன்.நீங்கோ என்னவோ மௌனமா இருந்துண்டு வறேளே.உங்களுக்கு நான் படற கஷ் டம் புரியலையா.இல்லே என்னே அழ வச்சுப் பாக்கணும் ஆசைப் படறேளா” என்று கேட்டதும் “மங்க ளம்,உன்னே அழ வச்சுப் பாக்கறதுலே எனக்கு என்ன சந்தோஷம் சொல்லு.அன்னைக்கு சொன்னா மாதிரி எனக்கும் தானே நீ பட்டுண்டு வர பயம் இருக்கு.அவ காலேஜ் பிரின்ஸிபால், அவளுக்கு M.Com ‘அட்மிஷன்’ குடுத்து,முழு ‘ஸ்காலஷிப்பையும்’ குடுத்து,எங்க காலேஜ்லே நீ படின்னு சொன ன பிற்பாடு, நாம எப்படி அவ கிட்டே ‘ரமா,நானும் உன் அம்மாவும் ரொம்ப பயப் படறோம்.உனக்கு நாங்க ஒரு கல்யாணத்தே பண்ணி வக்க ஆசைப் படறோம்’ன்னு சொல்றது.அதேத் தான் நான் யோ ஜனைப் பண்ணீண்டு இருந்தேன்” என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் கழித்து ராமநாதன் “மங்களம்,ரமாவுக்கு ‘சரஸ்வதி கடாக்ஷம்’அமோகமா இரு க்கு.அதான் அவ B.Com லே ‘ஸ்டேட் பஸ்ட்டா பாஸ்’ பண்ணீ,இப்போ M.Com படிக்க அட்மிஷ னையும்,முழு ‘ஸ்காலர்ஷிப்பையும்’ வாங்கிண்டு வந்து இருக்கா.அவ மேலே படிக்கட்டும். இவ்வளவு ‘இண்டெலிஜெண்ட்’ பொண்ணே பாத்து,நாம ‘ரமா நீ மேலே படிக்கக் கூடாது.ஓரு கல்யாணத்தே பண்ணிண்டே ஆகணும்.எனக்கும் அம்மாவுக்கும் ரொம்ப பயமா இருக்கு’ன்னு சொல்லி, அவ மேலே படிக்கறதே எப்படி வேணாம்ன்னு சொல்றது.சொல்லு பாக்கலாம்” என்று கேட்டார்.

மங்களம் பதில் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.தன் கணவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்றது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“மங்களம் எனக்கு என்னவோ ரமா,சுதா பண்ணா மாதிரி ‘நான் இவரே காதலிக்கறேன்’’அவரே காதலிக்கறேன்’ன்னு சொல்லிண்டு வந்து நிக்க மாட்டா.அவ படிப்புக்கு முக்கியத்துவம் குடுத்துண்டு வந்து இருக்கா.அதனால்லே,நீ பயப் படாம இருந்துண்டுவா.அவ அந்த மாதிரி பொண்ணு இல்லேன் னு நேக்கு படறது” என்று சொன்னதும் மங்களத்துக்கு கொஞ்சம் ¨தா¢யம் வந்தது.

உடனே அவள் ”நீங்கோ சொன்னா சா¢யா இருக்கும்.எனக்கு அதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு.ஆனா நான் தினமும் அந்த அம்பாளை வேண்டிண்டு வறேன்” என்று சொல்லி விட்டு தூங்கப் போனாள்.

வருடாந்திர லீவு முடிந்து அன்னைக்கு கல்லூரி திறக்கும் நாள்.

ரமா காலையிலே எழுந்துக் குளித்து விட்டு சுவாமியை வேண்டிக் கொண்டு வந்து ‘டைனிங்க் டேபிளில்’ வந்து உடகார்ந்துக் கொண்டள்.ராமநாதனும் குளித்து விட்டு சுவாமியை வேண்டிக் கொ ண்டு வந்து ‘டைனிங்க்’ டேபிளில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்.

உடனே மங்களம் தான் பண்ணி இருந்த பொங்கல் சட்னியை எடுத்துக் கொண்டு வந்து ரெண்டு பெருக்கும் தட்டைப் போட்டு பறிமாறினாள்.

பயந்துக் கொண்டே ரமாவைப் பார்த்து ”ரமா,நீ B.Com. முடிச்சுட்டு,இன்னியிலே இருந்து M.com ‘கோர்ஸ்’ சேந்து படிக்கப் போறே.அந்த ரெண்டு வருஷமும் நீ உன் பாடத்லே மட்டும் கவனம் செலுத்தி வந்து M.com ‘கோர்ஸை’ நல்ல விதமா ‘பாஸ்’ பண்ணு.இதுக்கு நடுவிலே நீ எந்த காரணம் கொண்டும் எந்த புருஷ பையன் சகவாசத்தையும் வச்சுண்டு வந்து,அவனுடன் பழகி வந்து,அவனை உனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குன்னு,சுதா மாதிரி சொல்லிண்டு வந்து நிக்காதே.அந்த அம்பாள் அனுக்கிரஹத்தாலே உன் படிப்பு,நல்ல விதமா முடுடிஞ்ச புறம்,நாங்க ரெண்டு பேருக்கும் உனக்கு ஒரு நல்ல பிராமணப் பையனாப் பாத்து கிரமமா ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கணும் ரொம்ப ஆசை ப் படறோம்.எங்க ஆசையிலே மண்ணேப் போட்டுடாதே” என்று கண்களில் கண்ணீர் துளும்பச் சொன்னாள் மங்களம்.

ராமநாதன் ‘நாம இவ்வளவு சொல்லியும் மங்களத்துக்கு இன்னும் திருப்தி வறலே பாவம்.பெத்த மனசு இல்லையா.அவ தன் மனசிலே இருக்கிற சந்தேகத்தைக் கேட்டுண்டு நின்னுண்டு இருக்கா’ என்று நினைத்துக் கொண்டு ரமா என்ன பதில் சொல்லப் போறாண்ணு அவள் வாயையையே பர்த்துக் கொண்டு இருந்தார்.

ரமா நிதானமாக “அம்மா,நான் அப்படி எல்லாம் பண்ணவே மாட்டேன்.நீ பயப் படாம இருந்து ண்டு வா.நான் B.Com.படிக்கும் போது கூட நிறைய புருஷப் பசங்க கிட்டே பேசிண்டு வந்து இருக் கேன்.நான் M.com.படிச்சு முடிச்சுட்டு,நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஆசைப் படறா மாதிரி, நான் நீங்க பாக்கற ஒரு பிராமணப் பையனை,கிரமமா கல்யாணம் பண்ணிக்கறேன்.அம்மா வாழ்க்கையிலே என் குறிகோளே வேறேம்மா.நான் போக போகச் சொல்றேன்.இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு அம்மா போட்ட பொங்கல் சட்னியை சாப் பிட்டு விட்டு,தன் கைகளை கழுவப் போனாள்.

கைகளை கழுவிக் கொண்டு வந்த ரமாவைக் கட்டிக் கொண்டு மங்களம்” ரமா எங்க ரெண்டு பேர் வயித்லேயும் நீ பாலை வாத்து இருக்கே” என்று சொல்லி கட்டிக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.பிறகு ரமா தன் கல்லூரி பையை முதுகில் மாட்டிக் கொண்டு “அம்மா,அப்பா, நான் காலேஜ் போயிட்டு வறேன்.நான் M.Com ‘கோர்ஸிலும்’ நன்னா படிச்சு B.Com.லே ‘ஸ்டேட் பஸ்ட்’ ராங்க் வாங்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கேட்டதும், மங்களமும், ராமநாதனும் ரமாவின் தலையைத் தொட்டு “ரமா,நீ நிச்சியமா M.Com.கோர்ஸிலே ‘ஸ்டேட் பஸ்ட்’ ராங்க்’ வாங்கு வேம்மா” என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணீனார்கள்.

ரமா சந்தோஷமாக M.Com கோர்ஸ் சேர்ந்து படித்து வந்தாள்.ரமா B.Com படிக்கும் போது, படிச்சு வந்த போது அவள் பாடங்களை படித்து வந்ததை விட,இன்னும் அதிக நேரம் கண் விழித்து பாடங்களை எல்லாம் படித்து வந்தாள்.

ரெண்டு வருஷம் நன்றாகப் படித்து வந்து, M.Com கோர்ஸை முடித்தாள் ரமா.

ரெண்டு மாச லீவு முடிந்த பிறகு அன்றைக்கு ரமா M.Com கோர்ஸ் ‘ரிஸல்ட்’ வரும் நாள்.

ரமாவுடன்,மங்களமும் ராமநாதனும் அவள் கல்லூரிக்கு போனார்கள்.காலேஜ் ‘ஹாலில்’ எல்லா பொற்றேர்களுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.

மணி பத்தடித்து பத்து நிமிஷம் ஆனதும்,பிரின்ஸிபால் தன் ரூமை விட்டு வெளியே வந்து எல்லோரும் எதிரில் மேடையில் நின்றுக் கொண்டு “இந்த M.Com ‘கோர்ஸிலும்’ ரமா தான் ‘ஸ்டேஸ் பஸ்ட்’ வந்து, நம்ம கல்லுரிக்கு பெருமையைத் தேடி குடுத்து இருக்கா” என்று சொல்லி விட்டு மேடை யை விட்டு கீழே இறங்கி வந்து ரமாவிம் கைகளைப் பிடித்துக் கொண்டு” கங்கிராஜுலேஷன்ஸ் ரமா,நீ M.Com ‘கோர்ஸ்லே’ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ பாஸ் பண்ணி இந்த கல்லுரியின் கொடியை உயரே பறக்க வச்சு இருக்கே.நான் உனக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ சொல்லணும்” என்று சொல்லி விட்டு தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ரமாவுக்கு ‘க்லாஸ்’ எடுத்த எல்லா ‘ப்ரோப்சர்கள்’ எல்லாரும் ரமாவின் கையைப் பிடித்துக் கொ ண்டு “’கன்கிராட்ஸ்’ ரமா.நீ B.Com பரி¨க்ஷயிலும்,M.Com.பரி¨க்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து எங்க எல்லோருக்கும் பெருமையைத் தேடி குடுத்து இருக்கே.’யூ ஆர் அ வொ¢ ‘இண்டெலிஜெண்ட்’ வுமன்’.வீ ஆல் விஷ் யூ அ ஹாப்பி லைப்’ “என்று சொல்லி ரமாவை புகழ்ந்து விட்டு, வாழ்த்தும் சொன்னார்கள்.

பிறகு ரமாவோட படித்த தோழிகளும்,மாணவர்களும் ரமாவின் கையைப் பிடித்து ”’கன்கிராட்ஸ்’ ரமா.’யூ ர் ரியலி ஏ வொ¢ இண்டெலிஜெண்ட் யுமன்.விஷ் யூ ஆல் தி பெஸ்ட் இன் லைப்’ ”என்று சொல்லி புகழ்ந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் போன பிறகு மங்களம் “நீ M.Com.பரி¨க்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’, வந்து எங்க ரெண்டு பேருக்கும் பெருமையைத் தேடிக் குடுத்து இருக்கே.இத்தனை பேர்கள் உன்னே புகழந்து பேசுவதைக் கேட்டதும் ‘நம்ம வயித்திலே இத்தனை புத்திசாலியான பொண்ணு பொறந்து இருக்கா’ன்னு நினைச்சா என் உடம்பு புல்லா¢கிறது ரமா” என்று சொல்லி ரமாவைக் கட்டிக் கொண்டாள்.

ராமநாதனும் ரமாவைப் பார்த்து “நீ ஆசைப் பட்டா மாதிரி நீ M.Com.பரிக்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து இருக்கே.எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.பிறகு மூன்று பேரும் ஒரு ஹோட்டலுக்குப் போய்,‘வடை பாயசந்தோடு ஒரு ‘ஸ்பெஷல் சாப்பாட்டை’ சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

ஒரு வாரம் ஆயிற்று.

தினமும் ராத்திரி மங்களம் தன் கணவனைப் பார்த்து “ஏன்னா,ரமா தான் இப்போ M.Com. பரி¨க்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ பாஸ் பண்ணி விட்டா.நீங்கோ அவ கல்யாண பேச்சே சித்தே ஆரம் பியுங்களேன்.அவளுக்கு வயசாயிண்டு இருக்கே” என்று நச்சா¢த்துக் கொண்டு வந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.ரமா வீட்டிலே இருந்தாள்.மத்தியானம் சாப்பிட்ட விட்ட பிறகு ராமநாதன் ரமாவைப் பார்த்து “ரமா,உனக்கு வயசாயிண்டே இருக்கு.அம்மாவும் ரொம்ப ஆசைப் படறா.நான் உன் கல்யாணத்துக்கு ஒரு நல்ல பையனா பாக்க ஆரம்பிக்கப் போறேன்.நீ கல்யா ணத்துக்கு உன்னே ரெடி பண்ணிண்டு வா” என்று சொன்னதும் உடனே “அம்மா,அப்பா நான் உங்க கிட்டே அன்னைக்கு என் குறி கோளே வேறேன்னு சொன்னது ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கி றேன்.நான் ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயை எழுதி விட்டு ஒரு கலெக்டர் ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன். நான் ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயை எழுதி ஒரு IAS ஆறனே” என்று கேட்டாள்.

ரமா சொன்னதை கேட்ட ராமநாதனும் மங்களமும் ஆடிப் போய் விட்டார்கள்.

உடனே இருவரும் “என்னம்மா சொல்றே.உன் ஐடியா எனக்கும் பிடிச்சு இருக்கு.நீ IAS படிச்சு ஒரு கலெக்டர் ஆனா,அப்புறமா நாங்க உனக்கு ஒரு IAS படிச்சு ஒரு கலெக்டர் ஆன ஒரு பையனைத் தானே உனக்குத் தேடணும்.நம் அந்தஸ்து என்ன.நான் ஒரு கலெக்டர் பையனுக்கு உன்னை கல்யா ணம் பண்ணனும்ன்னா பையன் ஆத்லே நிறைய சீர் செனைத்தி எல்லாம் கேப்பாளே.நம்ம கிட்டே அவ்வளவு பணம் இல்லையே.யோஜனை பண்ணும்மா ரமா.நம்ம அந்தஸ்துக்கு மீறின இடத்தில் நான் உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும் கண்ணு” என்று கெஞ்சினார் ராமநாதன்.

ஆனால் ரமாவோ “எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா.நான் ’சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதி நான் கலெக்டர் ஆக ஆசைப் படுகிறேன்.நான் ஒரு கலெக்டர் ஆன பிற்பாடு எனக்கு கல்யாண ம் பண்ணலாமேப்பா” என்று கெஞ்சினாள்.

மங்களம் “இதோ பார் ரமா.நீ சொல்றது இந்த ஆத்லே நடக்கதும்மா.நம்மாத்லே அப்பா சம்பளம் ஒன்னு தான் வந்துண்டு இருக்கு.உன் படிப்புக்கு ஏத்த ஒரு பையனா நாங்க பாத்தாலே உன் கல்யா ண செலவு ரொம்ப ஒடிப் போயிடும்.உன் கல்யாணத்திற்கு அப்புறமா நானும் அப்பாவும் எங்க வயசான காலத்தை கழிச்சுண்டு வரணும்.அப்பா இன்னும் நாலு வருஷம் ஆனா ரிடையர் ஆயிடுவா.’விரலுக்கு தக்கின வீக்கம் வீங்கினா’த் தான் தாங்கிக்க முடியும்.பேசாம அப்பா சொல்றது போல ஒரு கல்யாணத் தே பண்ணிக்கோ.வீணா பிடிவாதம் பிடிச்சு வறாதே” என்று கண்டிப்பாக சொன்னாள்.

கொஞ்ச நேரம் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்த ராமநாதன் “ரமா,நீ ஒரு IAS ஆனா, IAS பையன் ஆத்லே சம்மதம் சொல்லி உன்னே நிச்சியமா கல்யாணம் பண்ணிப்பா.நான் இல்லென் னு சொல்லலே.அந்த IAS பையனுடைய அப்பா,அம்மா,B.Com படிச்ச என்னையும்,வேறுமனே ‘டென்ந்த்’ மட்டும் படிச்ச அம்மாவை ‘சம்மந்திகள்’ன்னு சொல்லிக்க பிரியப்பட மாட்டாளே.IAS படிக் க வச்ச பையனோட அம்மாவும்,அப்பாவும் நிறைய படிச்சு இருப்பாளே.காரும் பங்களாவும் அவா கிட்டே இருக்கும்.அவா நம்மாத்தே பாத்தா என்ன நினைச்சுப்பா.எல்லாத்துக்கும் மேலே ‘சுதா சமா சாரத்தே’ அவா கிட்ட சொல்ல முடியாம இருக்காது.இதே எல்லாம் யோஜனைப் பண்ணினா எனக்கு என்னமோ நீ M.Com படிச்ச படிப்பு போறும்ன்னு,உன் மனசே மாத்திண்டு ஒரு கல்யாணத்தே பண் ணிக்கறது தான் உசிதம்ன்னு படறது”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடை த்துக் கொண்டார்.

அப்பா சொன்னதை கேட்டா ரமாவுக்கு அவள் மனம் இதற்கு இடம் கொடுக்கவில்லை.

அவளுக்கு ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதி,தான் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருந்தது.அதனால் அவள் பிடிவாதமாக இப்போ ‘எனக்கு கல்யாணம் வேண்டாம்’ என்று சொல்லி விட்டாள்.

ஒரு வாரம் சென்றது.

மெல்ல அம்மா “ரமா,நீ ஒரு கல்யாணத்தே பண்ணிக்கோ.அப்புறமா மெல்ல மாப்பிள்ளை கிட் டே உன் ஆசையை சொல்லி நீ ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதேன்.எனக்கு என்னவோ அவா இது க்கு ஒத்துப்பான்னு படறது.கல்யாணம்னு ஒன்னு ஆயிட்டா அப்புறம் பரவாயில்லை.நீ ஒரு கலெக்ட ரா ஆனா அவாளுக்கு தானே பெருமை.எனக்கு என்னவோ இந்த ‘ஐடியா’ தான் ‘பெஸ்ட்னு’ படறது. நீங்கோ என்ன சொல்றேள்”என்று கணவனைக் கேட்டாள் மங்களம்.

“நீ சொல்றது நல்லா ‘ஐடியா’ மங்களம்.ஆனா பிள்ளை ஆத்லே இதுக்கு ஒத்துக்கனுமே.இவளு க்கும் ஒரு ‘கலெக்டர்’ ஆணும்ன்னு அவ தலைலே எழுதி இருக்கணும்.பாக்கலாம் போகப் போக.என்ன நடக்கணுமோ அது நடந்தேத் தீரும்” என்று வேதாந்தமாக பேசினார் ராமநாதன்.

ரெண்டு பேரும் பேசுவதில் இருந்து ஒன்று புரிந்துக் கொண்டாள் ரமா.

‘இவா பேசறதைப் பாத்தா,ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி நம்மே ஒரு கலெக்டர் ஆக விட மாட்டா.நாம தான் நம்ம சாமர்த்தியதை உபயோகப் படுத்தி ‘சிவில் சர்விசஸ்’ பரி¨க்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆக முயற்சி பண்ணனும்.இவா நமக்கு கல்யாணம் பண்ணி வக்கறதிலே தான் குறியா இருக்கா.என்ன பண்ணலாம்’ என்று யோஜனை பண்ணினாள் ரமா.

அவளுக்கு வழி ஒன்றும் தெரியவில்லை.

‘தனக்கு ஒரு நல்ல குணமுள்ள ஆடவனை ஆம்படையான் அமையணும்,கூடவே தான் ஒரு கலெக்டராவும் ஆகணும்’என்கிற ரெண்டு ஆசைகளும் இருந்தது ரமாவுக்கு.
இந்த இரண்டு ஆசைகளும் நடக்க வேண்டும்.இதில் ஒன்று கூட குறையக் கூடாது என்று முடிவு பண்ணினாள்.ஆனால் ‘எப்படி அந்த ரெண்டு ஆசைகளையும் அடையப் போறோம்’ என்று தா ன் அவளுக்கு புரியவில்லை.அவள் மனம் சஞ்சலப்பட்டது.

பெற்றோர்களுக்கு ஒரு முடிவையும் சொல்லாமல் அவள் மட்டும் இவை இரண்டையும் முடிக்க வழி தேடினாள்.
‘கலெக்டர் பையனை மணம் பேசி முடிப்பது என்பது அப்பா வசதிக்கு அப்பாற்பட்டது’ என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.பண வசதி குறைவு,தனக்கு வயது ஏறி வரும் சூழ்நிலை,தன் பெற் றோர்களுக்கு வயது ஏறி வருவது,இன்னும் நாலு வருஷத்திலே அப்பா ரிடையர் ஆகப் போறது,’சுதா சமாச்சாரம்’ எல்லாம் ஒன்று சேர்ந்து அவள் மனதை கலக்கியது.

வேறு வழி தெரியாமல் அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள்.

ஆனால் எப்படியாவது தன் இரு ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வழி தேடிக் கொண்டு இருந்தாள் ரமா.அதிலே குறியாய் இருந்தாள்.அன்று இரவு பூராவும் தன் மூளையை கசக்கி பிழித்துக் கொண்டு இருந்தாள்.ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று காலையில் எழுத்ததும் ரமா ”அம்மா,அப்பா நீங்கோ எனக்கு ஒரு நல்ல பையனா பாருங் கோ.அவா வந்து ‘பொண்ணு பாக்கட்டும்.அவா எங்களுக்கு பொண்ணேப் பிடிச்சு இருக்குண்ணு சொன்னா,நான் எனக்கு வரப் போற ஆத்துக்காரர் கிட்டே என் ஆசையை சொல்லி,என்னை அவர் ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுத ‘அலவ்’ பண்ணுவாறான்னு கேக்கப் போறேன்.அவர் ஒத்துண்டார்ன்னா நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கறேன்…..”என்று சொல்லி முடிக்கவில்லை,உடனே மங்களம் “ஏண்டி ரமா,பாக்க தங்க விக்ரகமாட்டம் இருக்க உன்னே அவா பிடிக்கலேன்னு சொல்லப் போறாளா என்ன” என்று சொல்லும் போது ரமா “அது இல்லேம்மா,அவா என்னே பிடிச்சு இருக்குன்னு சொன்னா மட்டும் போறாது,கல்யாணம் ஆன பிற்பாடு என்னை அவர் ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுத ‘அலவ்’ பண்ணுவாறான்னு கேக்கணும்’ என்று பிடிவதமாக சொன்னாள்.
உடனே மங்களம் “ரமா,நானும்,அப்பாவும் எத்தனை ராத்திரியா ‘இந்த ரமாவும் சுதாவை போல பிடிவாதம் பிடிச்சுண்டு வறாளேன்னு.’பகவானே அவ மனசிலே கொஞ்சம் பூந்து ’நான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்ல வைப்பா’ன்னு வேண்டிண்டு வந்து இருக்கோம் தெரியுமா.அந்த பகவான் தான் உன் மனசிலே பூந்து உன்னே இப்படி சொல்ல வச்சு இருக்கார்” என்று சொல்லி ரமாவை கட்டிக் கொண்டு பகவானுக்கு தன் நன்றியைச் சொன்னாள்.

ராமநாதன் தன் கண்களில் வழிந்துக் கொண்டு இருக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “ரமா,அம்மா சொல்றது ரொம்ப நிஜம்.நாங்க ரெண்டு பேரும் ‘நீ எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். நான் ஒரு கலெக்டர் ஆன பிற்பாடு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சுதா பிடிவாதம் பிடிச்சா மாதிரி பிடிவாதம் பிடிசுண்டு வறப் போறயேன்னு ரொம்ப பயந்தோம்.நீ இப்போ எங்க ரெண்டு பேர் வயத்லேயும் பாலை பாத்து இருக்கே.நீ சொன்னா மாதிரி எந்த ஆத்லே பையனும்,அவன் அம்மாவும் அப்பாவும் உன் ‘கண்டிஷனுக்கு’ ஒத்துக்கறாளோ,அந்த இடத்லே நான் உன்னே கல்யாணம் பண்ணீ வக்கிறேன்” என்று சொன்னதும் ரமா உடனே “ரொம்ப ‘தாங்ஸ்’ப்பா” என்று சொன்னாள்.

அந்த வார கடைசியிலே ராமநாதன் பிள்ளையின் வீட்டுக்குப் போய் ரமாவின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு பிள்ளையின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.

ஆத்து வாத்தியாரிடம் ரெண்டு பேருடைய ஜாதகங்களையும் கொடுத்து ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்கச் சொன்னார் ராமநாதன்.வாத்தியாரும் ரெண்டு ஜாதகங்களையும் ஒரு அரை மணி நேரம் ஆலசிப் பார்த்து விட்டு “ஜாதகங்கள் நன்றாகப் பொருந்தி இருக்கு” என்று சொன்னார்.உடனே ராமநா தன் சந்தோஷப் பட்டு,அந்த வாத்தியாருக்கு தக்ஷணையை கொடுத்து அனுப்பினார்.

வாத்தியார் ‘ஜாதகங்கள் நன்றாகப் பொருந்தி இருக்கு’என்று சொன்னதைக் கேட்டு மங்களம் சந்தோஷப் பட்டாள்.

ராமநாதன் இந்த சந்தோஷ சமாசாரத்தை பிள்ளை வீட்டார் கிட்டே‘போனில்’ சொல்லி,அவர்க ளை ‘பொண்ணு பார்க்க’ வர அழைத்தார்.

சொன்ன தினத்தன்று பையனின் அம்மாவும்,அப்பாவும்,பையனும் ராமநாதன் வீட்டுக்கு வந்து ரமாவை பொண்ணு பார்த்து ரமாவை ‘பிடித்து இருக்கு’என்று சொல்லவே, ராமநாதன் பையனின் அம் மா அப்பாவைப் பார்த்து,ரமாவை பையனோடு ஒரு பத்து நிமிஷம் தனியாக பேச அனுமதி கேட்டார் .

அவர்களும் ஒத்து கொள்ளவே, ரமா அந்த பையனுடன் ஒரு ‘ரூமு’க்குள் போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,அப்புறம் அவள் ஆசையைச் மெல்ல சொல்லி “நீங்களும்,உங்க அம் மாவும் அப்பாவும் நான் ஆசைப் படறதே பண்ண ‘அலவ்’ பண்ணுவேளா” என்றுபயந்துக் கொண்டே கேட்டாள்.

”இந்த ‘கண்டிஷனுக்கு’ நானும் ஒத்துக்க மாட்டேன்,என் அம்மா அப்பாவும் ஒத்துக்க மாட்டா” என்று ‘பட்’டென்று சொல்லி விட்டு ‘ரூமை’ விட்டு வெளியே வந்து விட்டான்அந்தப் பையன்.

ரமா மனம் ஒடிந்துப் போனாள்.

பையன் ‘ரூமை’ விட்டு வெளியே வந்ததும்,ரமாவும் ‘ரூமை’ விட்டு வெளியே வந்து அம்மா அப் பாவிடம் “அவர் நான் கேட்டதுக்கு ஒத்துக்கலே” என்று அழமாட்டாத குரலில் சொன்னாள்.

பையனும் அவன் அம்மா அப்பாவிடம் ரமா கேட்டதையும்,அவன் சொன்ன பதிலையும் சொன் னான்.உடனே பையனும்,அவன் அம்மாவும்,அப்பாவும் கிளம்பிப் போய் விட்டார்கள்.

ஒரு வாரம் போனதும் ராமநாதனும் இன்னும் இரண்டு ஜாதகம் பொருந்தி இருக்கவே அவர்க ளை ‘பொண்ணு பார்க்க’ அழைத்தார்.

அவர்களும் வந்து ‘பொண்ணைப் பார்த்து’ பிடித்து இருக்கிறது என்று சொல்லவே,ரமா அந்தப் பையனை ரூமுக்குள் போய் அழைத்துப் போய் நோ¢டையாகவே தன் ‘கண்டிஷனை’க் கேட்டாள். முதலில் வந்த பையன் சொன்ன மாதிரியே சொன்னதால் ரமாவுக்கு கல்யாணம் நடக்கவில்லை.ராம நாதனும் மங்களமும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

அன்று இரவு மங்களம் தன் கணவரைப் பார்த்து “ஏன்னா,பொண்ணு பாக்க வரவா எல்லாம், பொண்ணு பிடிச்சு இருக்குன்னு சொல்றாளே ஒழிய ரமா கேக்கற ‘கண்டிஷனுக்கு’ ஒத்துக்க மாட்டே ன்னு சொல்றாளே.இப்படியே போனா எப்போ ரமாவுக்கு கல்யாணம் ஆகும்.ரமா ‘நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’ சொன்னாளேன்னு நாம ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப் பட்டோமே.ஆனா ரமா கல்யாணம் நடக்க நமக்கு எந்த பையன் ஆத்லே ஒத்துக்கப் போறா.எனக்கு ரொம்ப கவலையா இருக் கே.உங்களுக்கு என்ன தோண்றது” என்று அழ மாட்டாத குரலில் கேட்டாள்.

“மங்களம்,ரமாவுக்குன்னு ஒத்தன் இந்த உலகத்லே நிச்சியமா பொறந்து இருப்பான்.நீ கவலை ப்படாம அந்த பகவானை வேண்டிண்டு வா.யாராவது ஒரு பையன் ஆத்லே நிச்சியமா ரமா கேக்கற ‘கண்டிஷனை’ஒத்துப்பா.எனக்கு என்னவோ ரமாவுக்கு அந்த மாதிரி இடம் சீக்கிரமா கிடைக்குன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்துண்டு வறேன்” என்று சொன்னதும்,மங்களம் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு “நீங்க சொல்ற வேளை,உங்க வாய் முஹ¥ர்த்தம் சீக்கிரமா பலிச்சு, ரமாவுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் ஆகணும்.நான் விடாம அந்த அம்பாளை தினமும் வேண்டிண்டு வறேன்” என்று சொல்லி கொஞ்சம் நிம்மதி அடைந்தவளாய் மங்களம் தூங்கப் போனாள்.
ராமநாதன் விடாமல் ரமா சொல்லும் ‘கண்டிஷனுக்கு’ ஒத்துக் கொள்ளும் ஒரு வரனாகத் தேடி வந்தார்.

அவருக்கு ‘நெட்டில்’ டெல்லியிலே வசித்து வரும் ஒரு நல்ல இடம் தெரியவே,உடனே மங்களத் தையும்,ரமாவையும் கூப்பிட்டு,”இந்த இடத்தை நம்ம ரமாவுக்குப் பாக்கலாமா”என்று கேட்டதும் மங்க ளம் அந்த இடத்தைப் படித்து விட்டு “பையன்,MBA படிச்சு இருக்கான்,ஒரு பெரிய கம்பனியிலே மே னேஜரா வேலே செஞ்சுண்டு வறான்,வயசு முப்பது தான் ஆறது,ரமாவுக்கு பொருத்தமா இருக்கும். நீங்கோ அவளுக்கு ‘போன்’ பண்ணுங்கோ” என்று சொன்னாள்.

ரமா ஒன்னும் சொல்லாம சும்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.

ராமநாதன் நெட்டில் போட்டு இருந்த ‘போன்’ பண்ணினார்.அடுத்த பக்கம் ‘போனை’ எடுத் துப் பேசினாள்.”யார் பேசறது” என்று கேட்டதும் ராமநாதன் “நான் சென்னையிலே இருந்து பேசறேன். என் பேர் ராமநாதன்.’நெட்’டில் உங்க பிள்ளையின் கல்யாண ‘அட்வர்ட்டை’பாத்தேன்.எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.அவ பேர் ரமா.அவ M.Com.’ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ பாஸ் பண்ணி இருக்கா.அவளு க்கு வயசு இப்போ இருபத்தி ஐஞ்சு¤ ஆறது.நீங்கோ உங்க பையன் ஜாதகத்தே இன்னிக்கு ‘கொரிய யர்லே’அனுப்ப முடியுமா.நானும் என் பொண்ணு ஜாதகத்தே இன்னிக்கே ‘கொரியர்லே’ அனுப்பறேன்” என்று சொல்லி அவர் வீட்டு விலாசத்தை சொன்னார்.அவர்களும்”நாங்க பையன் ஜாதகத்தே உங்களு க்கு இன்னிக்கே அனுப்பறோம்” என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணினார்கள்.

சொன்னபடி ராமநாதன் ரமா ஜாதகத்தே அன்னிக்கே ‘கொரியர்’லே அனுப்பி விட்டார்.அடுத்த நாளே பிள்ளை வீட்டார் அனுப்பிய ஜாதகம் ராமநாதனுக்கு கிடைத்தது.
உடனே ராமநாதன் ஆத்து வாத்தியாரை கூப்பிட்டு ஆத்துக்கு வரச் சொன்னார்.

வாத்தியார் வந்ததும் ராமநாதன் ரெண்டு ஜாதகத்தையும் அவா¢டம் கொடுத்து பொருத்தம் பார் க்கச் சொன்னார்.வாத்தியார் தன் மூக்கு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ரெண்டு ஜாதகத்தையும் ஒரு அரை மணி நேரம் நன்றாகப் பார்த்து விட்டு “ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்தி இருக்கு. நீங்கோ அந்தப் பையனுக்கு உங்க பொண்ணே தாராளமா கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம்” என்று சொன்னார்.ராமநாதனும், மங்களமும்,ரமாவும் சந்தோஷப் பட்டார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *