கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 1,901 
 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3

அரக்கு மாளிகை 

பீம்சேன்னுடைய தேக பலத்தையும், அருச்சுனனுடைய சாமர்த்தியத்தையும் கண்டு துரியோதனனுக்குப் பொறாமை வள ர்ந்து கொண்டே போயிற்று. து ரியோதனனுக்குக் கர்ணனும்  சகுனியும் சதியாலோசனைக்காரர்களாக அமைந்தார்கள். 

தகப்பன தருதராஷ்டிரன் அறிவு படைத்தவன். தம்பியின் மக்களிடத்தில் பிரியம் உண்டு. ஆனால் தன் மக்களிடத்தில் பற்று அதிகம். மனோ பலம் கிடையாது: தெரிந்தே துரியோதன னுக்காகத் தவறான வழியில் செல்வான். துரியோதனன் அநேக உபாயங்கள் செய்து பாண்டவர்களைக் கொல்லப் பார்த்தான். விதுரனுடைய ரகசியமான உதவியைக்கொண்டே பாண்டவர்கள் உயிர் தப்பி வந்தார்கள். 

நகரத்து ஜனங்கள் பாண்டவர்களைப் புகழ்ந்தார்கள். நாற் சந்திகளிலும் சபைகளிலும் யுதிஷ்டிரனே ராஜாவாகத் தகுந்த வன் என்று பேசிவந்தார்கள். “திருதராஷ்டிரன் பிறவிக் குருடன் ஆகையால் அவன பட்டாபிஷேகம் பெறவில்லை. ராஜ்யத்தைத் தன் சுவாதீனத்தில் இப்போது அவன் வைத்துக் கொண்டிருப்பது நியாய மில்லை. பீஷ்மர் சத்திய சந்தர்: ராஜ்யம் தனக்கு வேண் டாம் என்று சபதம் செய்து விட்டவர். ஆகையால் யுதிஷ்டிர னுக்கே பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும். அவனே கெளர வர்கள் வம்சத்தையும் நாட்டையும் தருமமாக நடத்துவான்’ இவ்வாறு எங்கே பார்த்தாலும் ஜனங்கள் கூடிக் கூடிப் பேசி வந்தார்கள். துரியோதனனுக்கு இந்தப் பேச்சைச் சகிக்க முடிய வில்லை. மனக்கொதிப்ப அடைந்தான். 

திருதராஷ்டிரனைத் தனியாகப் பார்த்து அவனிடம் சொன் னான்: “பிதாவே! நகரத்து ஜனங்கள் தாறுமாறாகப்பேசுகிறார்கள். உம்மையும் பீஷ்மரையும் கூட அவர்கள் மதிக்கவில்லை. யுதிஷ்டிர னுக்கு உடனே ராஜ்யாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். இது நமக்குப் பேராபத்தாக முடியும். கண் தெரி யாமையால் நீர் ராஜ்யம் இழந்தீர். உமது தம்பி அரசனானான். அவனுக்குப் பின் யுதிஷ்டிரன் பட்டம் பெற்றால், பிறகு எங்களு க்கு என்றென்றைக்கும் ராஜ்யம் கிடையாது. அவனுக்குப் பின் அவன் மகனுக்கே போகும். நாங்களும் எங்கள் மக்களும் உலகத் தில் அவமதிக்கப்பட வேண்டியதுதான். அன்னத்திற்குக் கூடப் பிறரை அண்டவேண்டியதாகும். அதைவிட நரகமே மேலாகும். 

இதைக் கேட்ட திருதராஷ்டிரன் சிந்திக்கலானான். “மகனே! நீ சொல்வது சரி. ஆயினும் யுதிஷ்டிரன் தருமம் தவறாதவன். எல் லாரிடத்திலும் அன்பு வைத்திருக்கிறான். அவனுடைய தகப்பனாரைப் போலவே சிறந்த குணமுள்ளவன். ஜனங்கள் எல்லோ ரும் அவனை நேசிக்கிறார்கள். அவ னை நா ம் எவ்வாறு எதிர்க் கக் கூடும்? அவனுக்குச் சகாயம் அதிகமாக இருக்கிறது. தம்பி பாண்டு இருந்த காலத்தில் மந்திரிகள் எல்லாரும் அவனால் நன்றாக ஆதரிக்கப்பட்டார்கள். சேனைத் தலைவர்களும் வீரர் களும் அவர்கள் குடும்பத்தார்களும் அவ்வாறே பாராட்டப்பட் டனர். பாண்டுவோடு பழகின ஜனங்கள் எல்லாரும் யுதிஷ்டி ரன் சார்பாகத்தான் இருப்பார்கள். நாம் அவர்களை எதிர்த்து வெல்ல முடியாது. நாம் அதர்மம் செய்தால் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் நகரத்து ஜனங்களே கொல்வார்கள். அல் லது ஊரை விட்டு வெளியேற்றி விடுவார்கள். நாம் உலகத்தின் பழியைச் சம்பாதிப்போம்” என்றான். 

துரியோதனன், “நீர் பயப்படுவது சரியல்ல. பீஷ்மர் எந் தக் கட்சியிலும் சேர மாட்டார். அசுவத்தாமன் எனக்கு வேண்டி யவன். துரோணர் தம்முடைய புத்திரனை விட்டு விட்டு வேறு கட்சிக்குப் போகமாட்டார். அசுவத்தாமனுடைய மாமனாகிய, கிருபரும் நம்முடைய பக்கத்தில் தான் இருப்பார். விதுரர் நம்மை வெளிப்படையாக எதிர்க்க முடியாது. அவருக்கு நம்மை எதிர்க்கும் சாமர்த்தியம் இல்லை. பாண்டவர்களை இப்போதே வாரணாவதத்திற்கு அனுப்பிவிடும். இதில் ஒன்றும் தவறு நேராது. என் துக்கத்தை நான் பொறுக்க முடியாது: உள்ளத்தைப் பிளக் கி றது. இரவில் தூக்கம் இல்லாமல் செய்கிறது. நான் உயிரு ன் இருக்க முடியாது. இவர்களை வாரணாவதத்துக்கு அனுப்பி விட்டு நாம் நம் கட்சியைப் பலப்படுத்திக் கொள்வோம்’ என்றான். 


பிறகு சில ராஜநீதி நிபுணர்களையும் தன் கட்சிக்குச் சேர்த் துக் கொண்டு அவர்களையும் தகப்பனிடம் சொல்லி வைத்தான். முக்கியமாகச் சகுனியின் மந்திரியாகிய கனிகன் என்பவன் துரியோதனுடைய ஆலோசனைக்கு ஆதரவாக திருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தான். சொல்ல வேண்டியதையெல்லாம் உதா ரணங்களுடனும் பிரமாணங்களுடனும் சொல்லிவிட்டு, “ராஜாவே!  செல்வம் உள்ளவன்தான் சிறந்தவன். பாண்டு புத்திரர்களிட மிருந்து உம்மைக் காத்துக்கொள்ளும். பாண்டவர்கள் உம்மு டைய சகோதரனுடைய புத்திரர்கள். ஆனாலும் பின்னிட்டு வருத் தப்படாமல் இருக்குமாறு முன்ஜாக்கிரதையாக இருப்பீராக. அர சனே! அவர்கள் மிகுந்த பலமுள்ளவர்கள்’ என்றான். 

“நான் சொன்னதைக் கேட்டு என் மேல் கோபம் கொள்ளத் தகாது. அரசன் எப்போதும் தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக் கொண்டிருக்கவேண்டும். தன் பலத்தைப் பிறர் குறை க்க இடம் கொடுக்கக் கூடாது.ராஜ காரியங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு காரியத்தை ஆரம்பித்த பிறகு, அதைச் செவ்வையாக நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது. தைத்த முள்ளைச் சரியாக எடுக்காமற் போனால் நீடித்த புண்ணை ண்டாக்கும். பராக்கிரமமுள்ள விரோதிகளை அழித்து விட வேண்டும். பலவீனானாக இருந்தாலும் சத்துருவை அலட்சியம் செய்யக் கூடாது. சிறிய நெருப்பு வனம் முற்றிலும் பரவி எரிந்துவிடும். உபாயங்களினால் சத்துருவைக்கொன்று விட வேண்டும். தயை காட்டத் தகாது. அரசனே! பாண்டு புத்திரர்களிட மிருந்து உம்மைக் காத்துக்கொள்ளும். அவர்கள் மிகுந்த பல முள்ளவர்கள்” என்று சகுனியின் மந்திரி மேலும் மேலும் விடா மல் போதித்தான். 

துரியோதனன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான் “நான் ராஜ சேவகர்களுக்குத் திரவியமும் வெகுமதிகளும்கொடுத்துச் சந் தோஷப் படுத்தி யிருக்கிறேன். அவர்கள் நமக்கு சகாயமாகவே இருப்பார்கள். எல்லா மந்திரிகளும் என் சுவாதீனத்தில் இருக்கச் செய்திருக்கிறேன்.நீர் நயமாகச் சொல்லிப்பாண்டவர்களை வாரணா வதம் அனுப்பிவிட்டால் பிறகு நகரமும் நாடும் நம்முடைய முழுச் சுவாதீனமாகும். எல்லாரும் நம்முடைய கட்சிக்கு வந்துவிடுவார்கள். இராஜ்யம் நன்றாக நம்முடைய கையில் நிலையாக நிலைத்த பிறகுபாண்டவர்கள் திரும்பி வரலாம். அப்போது நமக்கு அவர்களால் அபாயம் ஏதுமில்லை”. 

இவ்வாறெல்லாம் பலர் ஒரேவிதமாகச் சொல்லவும் திருத ராஷ்டிரன் மன உறுதியிழந்து மகனுடைய ஆலோசனைக்குச் சம்மதித்தான். வேண்டிய ஏற்பாடு நடந்தது. 

பாண்டவர்களுடைய காதில் விழும்படி வாரணாவத நகரத் தின் அழகைப் பற்றி மந்திரிகள் பேசலானார்கள். அவ்விடம் சிவபெருமானுக்குப் பெரிய உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும் என்பதையும் எடுத்துச்சொன்னார்கள். அங்கே போக வேண் டும் என்று பாண்டவர்களே கேட்கும்படி செய்தார்கள். 

“கட்டாயம் போய் உத்ஸவத்தைப் பார்த்து விட்டு வாருங் கள். அவ்விடமுள்ள ஜனங்களும் உங்களைப் பார்க்கப் பிரியப் படுகிறார்கள். அவர்களையும் திருப்தி செய்து வாருங்கள்” என்று திருதராஷ்டிரனும் மிக்க அன்பு பாராட்டுவதைப் போலச்சொன் னான். பீஷ்மர் முதலிய பெரியோர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் வார ணவதம் போனார்கள். 

துரியோதனனுக்குப் பேரானந்தம். குந்தியையும் அவள் புத்திரர்களையும் வார ணவதத்தில் தொலைத்து விடச் சகுனியும் கர்ணனும், துரியோதனனும் ஆலோசனை செய்தார்கள். புரோசனன் என்னும் மந்திரியை வரவழைத்து அவனுடன் கலந்து ஆலோசித்து ரகசியமான முடிவுக்கு வந்தார்கள். அவனும் எல் லாம் செய்து முடிப்பதாக வாக்குக் கொடுத்துப் போனான். 

பாண்டவர்கள் வாரணாவதம் போய்ச் சேருவதற்கு முன்ன மேயே புரோசனன் வேகமாக வாகனம் ஏறிச் சென்று அந்த நக ரம் போய்ச் சேர்ந்தான்.பாண்டவர்களுக்கென்று ஓர் அழகான மாளிகை நிருமானித்தான். சணல், குங்கிலியம், மெழுகு, நெய், எண்ணெய், கொழுப்பு,அரக்கு இவைகளோடு மண்ணக் கலந்து தீப்பிடிக்கத் தக்க சரக்குகளையே சேர்த்து மாளிகையைக் கட்டி னான். சுவருக்குட் பூசிய பூச்சும் தீப்பிடிக்கத் தக்கதாகவே செய்தான். அங்கங்கே எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும்படியான பொருள்களைச் சாமர்த்தியமாகப் பல இடங்களில் வைத்து நிரப்பினான். மனத்தைக் கவரும்படியான ஆசனங்களும் சயனங்களும் ஏற்பாடு செய்தான். மாளிகை முற்றிலும் தயாராகும் வரையில் பாண்டவர்கள் ஊரில் சந்தேகமின்றித் தங்கியிருக்க வசதிகளும் செய்தான். பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் வந்து தங்கி இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதற்குத் தீ வைத்து விடத் தீர்மானித்தான். பல நாட்கள் சுகமாக மாளிகையில் அவர்கள் இருந்த பின் ஊராருக்கு எவ்விதத்திலும் தெரியாதபடி வீட் டுக்கு நெருப்பு வைத்துவிட்டு அவர்களைத் தீக்கிரையாக்கிவிட்டால் தற்செயலாக நடந்தது என்று ஜனங்கள் நம்புவார்கள். கெளரவர்கள் பேரில் யாரும் பமி சொல்ல மாட்டார்கள் என்பது துரி- யோதனனுடைய திட்டம். 

பாண்டவர்கள் தப்பியது 

பெரியோர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து சமமான வயதாயிருந்தவர்களைத் தழுவி விடைபெற்றுக் கொண்டு பாண்ட வர்கள் வார ணவதம் சென்றார்கள். நகரத்து ஜனங்கள் பாண்ட வர்களுடன் வெகுதூரம் நடந்து சென்று திரும்பிப் போக மன மில்லாமல் திரும்பினார்கள். விதுரன் யுதிஷ்டிரனுக்கு மர்மமாக அந்நிய பாஷையில் எச்சரிக்கை செய்தான். 

‘ராஜநீதியில் நிபுணனான எதிரியின் யோசனையை அறிந்த வன்தான் ஆபத்தைத் தாண்டுவான். உலோகத்தினால் செய்யப் படாத கூர்மையான ஆயுதமும் உண்டு. அதைத் தடுக்கும் உபா யத்தை எவன் அறிந்து கொள்ளுகிறானோ அவன் பகைவர்களால் கொல்லப்பட மாட்டான். காடுகளை அழிப்பதும் குளிரைப் போக் குவதுமான ஒரு பொருள் வளைக்குள் வாசம் செய்யும் எலியைத் தீண்டாது. முள்ளம் பன்றி பூமியைத் தோண் டி க் காட்டுத் தீயி லிருந்து தப்பித்துக் கொள்ளும். அறிவாளி நட்சத்திரங்களினால் திசையை அறிகிறான். 

இவ்வாறு மறைவாகப் பொருளை ஏற்றி விதுரன், யுக்தியாகப் பாண்ட வர்களுக்குத் துரியோதனனுடைய சதியாலோசனையை யும் ஆபத்திலிருந்து தப்பும் வழியையும் பக்கத்திலிருந்தவர்களுக் க்குத் தெரியாத அந்நிய மொழியில் சொன்னான். யுதிஷ்டிரனும் “தெரிந்தது” என்று சொன்னான். பிறகு குந்திதேவி யுதிஷ்டிரனைக் கே டு விதுரன் சொன்னதை எல்லாம் தெரிந்து கொண்டாள். சந்தோஷமாகப் புறப்பட்டவர்கள் மிகுந்த கவலையுடன் சென் றார்கள். 

வாரணாவதத்து ஜனங்கள் பாண்டவர்கள் தங்கள் நகரத்துக்கு வருகிறார்கள் என்று கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர் காண்டு வரவேற்றார்கள். அவர்களுக்கென்று ஏற்படுத்திய டுதிகளில் பாண்டவர்கள் சில நாட்கள் இருந்து வந்தார்கள். பிறகு புதிதாகக் கட்டி முடித்த ‘சிவம்’ என்கிற மாளிகையில் புரோசனன் பாண்டவர்களை அழைத்துப் போய் இருக்கச்செய்தான்.  ‘சிவம்’ என்றால் மங்களம். அமங்களமான அந்த மாளிகைக்கு சிவம் என்று பெயரிட்டிருந்தது. விதுரன் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வீட்டையெல்லாம் யுதிஷ்டிரன் கவனித்துப் பார்த்தான். தீக்கு இரையாவதற்கே கட்டியது என்பது சந்தேகமறத் தெரிந்தது. யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னான் 

“ஆபத்தான இடம் என்று நன்றாகத்தெரிந்த போதிலும் நாம் சதியாலோசனையைத் தெரிந்துக் கொண்டு விட்டோம் என்பதைப் புரோசனனுக்குக் காட்டாமலிருக்க வேண்டும். சமயம் பார்த்து நாம் வெளியேற வேண்டும். இப்போது சந்தேகத்துக்கு இடம் தரக் கூடாது”. 

இவ்வாறு தீர்மானித்து அந்த வீட்டிலேயே இருந்தார்கள். தற்குள் விதுரன் ஒரு சமர்த்தனான சுரங்கக்காரனை அனுப்பினான்.  அவன் பாண்டவர்களை ஏகாந்தமான ஓர் இடத்தில் சந்தித்து உம்முடைய நன்மையை உத்தேசித்து விதுரன் யுதிஷ்டிர னிடம் அந்நிய பாஷையில் மறை பொருள். வைத்துச் கொன்னாரே. அதுவே என்னை நீங்கள் நம்புவதற்கு அடையாளம். உங்களுடைய சகாயத்துக்காகச் செய்யவேண்டிய காரியத்தைச் செய்து தரவே வந்திருக்கிறேன்” என்றான். 

அதன்மேல் அந்தச் சுரங்கக்காரன் புரோசனனுக்குத் தெரியாமல் பல நாட்கள் ரகசியமாக வேலை செய்து, அரக்கு மாளி கைக் குள்ளிலிருந்து மதிலையும் அகழியையும் அபாயமில்லாமல் தாண்டி வெளியே போவதற்குச் சுரங்கம் வெட்டி முடித்தான். 

புரோசனன் மாளிகையின் வாயிலிலேயே வசித்து வந்தான். பாண்டவர்கள் இரவு முழுவதும் ஆயுதபாணிகளாகவே  ஜாக்கிரதையாகத் தூக்கமில்லாமல் இருந்து வந்தார்கள். வெளியே சென்று வனத்தில் வேட்டையாடித் திரிந்து வந்தனர். அவ்வாறு சுற்றுப் பக்கத்துத தேசத்தையும் பாதைகளையும் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள் புரோசனனை முற்றிலும் நம்பினவர்க ளைப்போலவும் சந்தோஷ முள்ளவர்களைப்போலவும் தங்களுடை கவலையையும் சந்தேகத்தையும் மறைத்துக் கொண்டு பாண்ட வர்கள் அங்கே வாசம் செய்தார்கள். புரோசனனு ம் ஜ னங்க ளிடம் எவ்விதச் சந்தேகமும் பழியும் தோன்றாதபடி வீட்டுக்குத் தீ வைக்கவேண்டும் என்ற நல்ல சமயத்திற்காக ஒரு வருஷம் காத்துக் கொண்டிருந்தான். 

பிறகு ஒரு நாள் துதான் சமயமென்று புரோசனன் எண்ணினான். புத்திசாலியான யுதிஷ்டிரனுக்கும் புரோசனனுடைய மனத்திலிருந்தது புலப்பட்டது. தன் சகோதரர்களை நோக்கி ந்தப் பாபிஷ்டன் நம்மைக்கொல்லும் காலம் வந்தது என்று எண் ணுகிறான். நாம் ஓடித் தப்புவதற்கு இதுதான் சமயம்” என்றான். 

குந்தி தேவி அன்று ஒரு அன்னதானம் செய்வதாக ஏற்பாடு செய்து மாளிகையில் இருந்த பணியாளர்கள் எல்லாரும் நன்றாகச் சாப்பிட்டு இரவில் மயக்கமுற்றுத் தூங்கிவிட ஏற்பாடு செய்தாள். 

நடு ஜாமத்தில் பீமன் அந்த மாளிகையில் அநேக பாகங் களில் தீப்பற்ற வைத்து விட்டு, குந்திதேவியும் பாண்டவ சகோ தரர்களும் சுரங்கத்தின் வழியாக இருட்டி ல் சுவரைத் தடவித் தடவி வ ழி தெரிந்துகொண்டு வெளியேறி விட்டார்கள். தீயானது உடனே வீட்டை நாலுபக்கமும் சுற்றிக்கொண்டது. புரோசனன் இருந்த இடமும் பற்றிக் கொண்டது. ஊரார் எல்லாரும் வந்து சேர்ந்து தீப்பற்றி எரியும் மாளிகையைக் 

கண்டு ஹா! ஹா! என்று கதறினார்கள். துரியோ தனா திகள் குற்றமற்ற பாண்டவர்களை இம்மாதிரி மோசம் செய்து கான்றார்களே’ என்று களரவர்களைக் கோபாவேசத்துடன் பலவிதமாகப் பழித்தார்கள். மாளிகை எரிந்து சாம்பலாயிற்று. புரோசன்னு எதிர்பாரா தபடி தீக்கிரையானான். வாரணாவதத்து ஜனங்கள் பாண்டவர்கள் இருந்த மாளிகை தீக்கிரையாயிற்று. யாரும் உயிருடன் தப்ப வில்லை’ என்று ஹஸ்தினாபுரத்துக்குச் சொல்லியனுப்பினார்கள். 

திருதராஷ்டிரனுடைய மன நிலையை வியாசர் வெகு அழகாக வர்ணிக்கிறார். கோடை காலத்தில் ஆழமான ஒரு மடுவில் நீர் அடியில் குளிர்ச்சியாகவும் மேலே உஷ்ணமாகவும் இருப்பது போல் திருதராஷ்டிரனுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்திருந்தன.

பாண்டவர்கள் இறந்து போனார்கள் என்று, திருதராஷ்டிர ம் அவன் மக்களும் ஆபரணங்களைக் களைந்து விட்டு ஒற்றை ஆடை உடுத்திக் கொண்டு கங்கைக்குச் சென்று தர்ப்பணம் செய் தார்கள். எல்லாரும் சேர்ந்து பெரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்.  

விதுரன் மட்டும் பிறப்பும் இறப்பும் விதிப்படி நடக்கும் என்ற வேதாந்த உணர்ச்சியோடு துக்கத்தை அதிகமாகக்காட்டி கொள்ளவில்லைபோல் இருந்தான். ஆனால் அதற்குக் காரணம் பாண்டவர்கள் இறக்கவில்லை. தப்பியோடிப் பிழைத்திருக்கிறார் கள் என்றே விதுரன் நிச்சயமாக இருந்தான். ஜனங்களோடு ஓரளவு புலம்பினவனானாலும் இந்த நேரத்தில் பாண்டவர்கள் எவ்வளவு தூரம் போயிருப்பார்கள். எங்கே இருப்பார்கள் என்று ஊகித்துக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தான். பீஷ்மர் துக்க சாகரத்தில் மூழ்கினத்தைக் கண்டு அவருக்கு விதுரன் ரகசியமாகத் தான் செய்த ஏற்பாடுகளை யெல்லாம் சொல்லிச் சந்தோஷப் படுத்தினான். 

இரவெல்லாம் விழித்திருந்தபடியாலும், கவலையினாலும் பயத்தினாலும் சகோதரர்களும் குந்திதேவியும் களைத்திருந்ததைப் பார்த்து வாயு புத்திரனான பீமசேனன் தாயாரைத் தோளின் மேலும் இடுப்பில் நகுல சகாதேவர்களையும் தூக்கிக் கொண்டு யுதிஷ்டிரனையும் அருச்சுனனையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு யானையைப் போல் காட்டில் செடிகளையும் புதர்களை யும் விலக்கி வழி செய்து கொண்டு சென்றான். கங்கைக்கு வந் ததும் அங்கே விதுரன் அனுப்பியிருந்த ஓடம் தயாராக இருந்தது. ஓடக்காரன் ரகசியம்தெரிந்த நண்பன் என்பதைச் சோதித்துத் தெரிந்து கொண்டார்கள். பிறகு காட்டில் ஒரு பகலெல்லாம் வேகமாக நடந்தார்கள். மாலையில் இருட்டு மூடவும் பயங்கர மான காட்டு மிருகங்களின் சத்தங்கள் கிளம்ப ஆரம்பித்தன. 

தாகத்தினாலும் களைப்பினாலும் நித்திரையினாலும் பீடிக்கப் பட்டு ஒரு அடி வைக்கக் கூடச்சக்தியில்லாமல் கீழே உட்கார்ந் தார்கள். “திருதராஷ்டிர புத்திரர்கள் என்னை தூக்கிக்கொண்டு போகட்டும்; நான் இங்கேயே கிடப்பேன்” என்று குந்தி படுத்துப் பிரக்ஞை இழந்தாள். பீமன் பயங்கரமான இருட்டில் எங்கிரு ந்தோ தன்னுடைய மேலாடையைத் தண்ணீரில் நனைத்தும் தாமரை இலைகளினால் தொன்னைகள் செய்தும் தண்ணீர் கொண்டு வந்து குந்திதேவிக்கும் சகோ தரர்களுக்கும் கொடுத்தான். 

பிறகு எல்லாரும் மெய்ம்மறந்து அங்கேயே தூங்கி விட்டார்கள். பீமன் மட்டும் சிந்தனை செய்து கொண்டு விழித்திருந்தான். “இந்தக் காட்டில் செடிகளும் கொடிகளும் ஒன்றையொன்று காப்பாற்றிக் கொண்டு பிழைக்க வில்லையா? ஏன் இந்தத் துராத்மா திருதராஷ் டிரனும் துரியோதனனும் இவ்வாறு எங்களைப் பகைக்கிறார்கள்?’ என்று பாவம் அறியாத பீமன் மனம் கொதித்து வருந்தினான். 

பிறகு அநேக கஷ்டங்களைத் தாண்டிக் கொண்டும் ஆபத்து களை தாண்டிக் கொண்டும் பாண்டவர்கள் காட்டில் சென்றனர். சில – இடங்களில் வேகமாகச் செல்வதற்காகத் தாயாரைத்தூக்கிச் சென்றனர். சில இடங்களில் களைத்து நின்றனர். சில இடங்களில் துக்கத்தை மறக்கி ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடந்தனர். 

வழியில் வியாச பகவானைக் கண்டார்கள். எல்லாரும் நமஸ் கரித்து அவரிடம் தைரியத்தையும் உபதேசத்தையும் பெற்றார்கள். தங்களுக்கு நேர்ந்த துக்கத்தைச் சொல்லிக்கொண்ட குந்திக்கு வியாசர் “எந்த மனிதனும் தருமத்தை மாத்திரமே செய்யமுடியாது. எந்தப் பாபியும் பாபத்தையே செய்து கொண்டிருக்கவும் முடியாது. புண்ணிய பாவங்கள் இரண்டையும் செய்யாதவன் உலகத்தில் எவனுமில்லை. செய்த காரியங்களின் பலனை எல்லாரும் அடைவார்கள். விசனத்தில் உள்ளத்தைச் செலுத்தாதே என் று சொல்லிச் சமாதானப்படுத்தினார். 

பிறகு வியாசர் சொல்லியபடி பிராமண வேஷம் பூண்டு ஏகசக்ர நகரத்தில் ஒரு பிராமணன் வீட்டில் இருந்து கொண்டு பிராமணபிரம்மசாரிகளைப்போல் தினமும் அன்னம் பிக்ஷை எடுத் துக் கிடைத்ததைத் தாயாரிடம் கொடுத்துப்பங்கிட்டு எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டு காலம் கழித்து வந்தார்கள். 

பகாசுரன் வதம் 

பாண்டவர்கள் ஏகசக்ர நகரத்தில் பிராமண வேஷம் பூணடு வசித்து வந்தார்கள். பிராமணர்களுடைய தெருவில் உபாதானம் எடுத்துக் கிடைத்ததைத் தாயார் குந்தியிடம் கொடுப்பார்கள். பிக்ஷைக்குப் போனவர்கள் வீட்டிற்குத் திரும்பிவரும் வரையில் குந்தி கவலையோடு காத்திருப்பாள். நேரத்தில் திரும்பி வராமல் போனால் என்ன நடந்ததோ என்று பயப்பட்டுக் கொண்டிருப்பாள். 

கிடைத்த அன்னத்தைக் குந்திதேவி இரு சமபங்காகச்செய்து ஒரு பாதியை பீமனுக்குக்கொடுத்து விடுவாள். மற்றப்பாதியைத் தாயாரு ம் நான்கு சகோதர்களும் சேர்ந்து ஐந்து பங்காகச் செய்து சாப்பிட்டு வந்தார்கள். பீமன் வாயு பகவானுடைய அம் சம். ஆனபடியால் அவனுக்குப்பலமும் அதிகம், பசியும் அதிகம். பீமனுக்கு விருகோதரன் என்றும் ஒரு பெயர். ஓநாயின் வயிற் றைப்போல் சிறியதும் எளிதில் திருப்திப் படாததுமான வயிற்றை உடையவன் என்று இதற்குப் பொருள். பீம்சேன னுக்கு ஏக சக்ரபுரத்தில் அகப்பட்ட பிக்ஷன்னம் எவ்விதத்தி லும் திருப்தியாக இருக்கவில்லை. நிறம் மாறியும் இளைத்தும் போனான். இதைக் கண்டு குந்தி தேவிக்கும் யுதிஷ்டிரனுக்கும் மிகுந்த துக்கம். சில நாள் கழித்து பீமன் ஒரு குயவனிட ம் சிநே கம்செய்து அவனுக்குவேண்டிய களி மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கலானான். அவன் ஒரு பெரிய மண்பாண் டம் செய்து பீமனுக்குக் கொடுத்தான். அதை எடுத்துக் கொண்டு பீமன் பிக்ஷைக்குப் போவான். தெருவில் குழந்தைகள் எல்லாம் பீமனையும் அவன் பானையையும் பார்த்து வேடிக்கை செய்வார்கள். 

ஒரு நாள் மற்றச் சகோதரர்கள் பிக்ஷைக்குப் போயிருந்த காலத்தில் பீமசேனன் மட்டும் வீட்டில் குந்தியுடன் இருந்தான். அப்போது அவர்கள் குடியிருந்த பிராமணன் வீட்டில் ஏதோ துக்க சமாசாரம் நிகழ்ந்ததுபோல் உள்ளே அழும் குரல் குந்தி காதில் பட்டது. உடனே குந்தி என்னவென்று விசாரிக்க வீட்டிற் குள் சென்றாள். பிராமணனும் அவன் மனைவியும் அடிக்கடி அழுத வண்ணம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். 


“துர்பாக்கிய ஸ்திரீயே! நான் சொன்னதை நீ கேட்கவில்லை. நான் உன்னைப் பல முறை வேண்டியும் அந்த ஊரை விட்டுப்போக நீ சம்மதிக்கவில்லை. இங்கு பிறந்தேன். இங்கு வளர்ந்தேன்.இ கேயே இருக்கலாம் என்று பிடிவாதம் செயது வந்தாய். உ தந்தையும் தாயும் பந்துக்களும் இறந்த பின்னும், இது பிறந்த ஊர் என்று இங்கேயே இருக்க ஆசைப்பட்டாய். எனக்குச் சக தர்மிணியாகவும் தாயாகவும் சிநேகிதையாகவும் புத்திர சந்தா னம் தந்த பாரியையாகவும் எல்லாமாகவும் உள்ள உன்னை நான் எப்படி இழக்கச் சம்மதிப்பேன்? என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு உன்னை யமனுக்கு அனுப்ப என்னால் முடியாது. இந்தச் சிறுமி நம்முடைய சொத்து அல்ல. வரப்போகும் அவள் கணவ னு க் காக ஆண்டவன் நம்மிடம் ஒப்புவித்திருக்கிறான். வம்ச விருத்திக் கென்று ஆண்டவன கொடுத்த இவளைச் சாகவிடுவது அதருமம். மகனாகிய சிறு பிள்ளையைச் சாக அடிப்பதும் முடி யாது, எனக்கும உனக்கும நம்முடைய முன்னோருக்கும பிண்ட தாப்பணங்கள் கொடுககும் அருமைப் புதல்வனை எவ்வாறு யம னுக்கு அனுப்பிவிட்டு நாம் பிழைத்திருகக முடியும்? ஐயோ! என் சொல்லை நீ கேட்கவில்லையே! பலனை இப்போது அனுபவிக்க வேண்டும். நான் என் சரீரத்தை விட்டு யமலோகம் சென்றா இந்தச் சிறுமியும் சிறுவனும் இந்த உலகத்தில் ஜீவித்திருக்க முடியாது. நான் என்ன செய்வேன்? எல்லாருடனும் கூட இறந்து போவது “சிலாக்கியம்” என்று பிராமணன் சொல்லி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். 

பிராமணனுடைய மனைவி சொன்னாள்: “மனைவியைப் புருஷன் எதற்காகக் கொள்ளுகிறானோ அந்தப் பிரயோஜனம் நீர் என்னால் பெற்றாகிவிட்டது. ஒரு புத்திரியையும் ஒரு புத்திரனையும் நீர் என்னிடம் அடைந்தீர். என் கடனை நான் தீர்த்து விட்டேன். குழந்தைகளை வளர்ப்பதற்கும் காப்பதற்கும் உமக்குச் சக்தி உண்டு. நீர் இல்லாமல் என்னால் அது செய்ய முடியாது. வெளியில் போடப்பட்ட மாமிசத்தைப்பறவைகள் தூக்கிப்போக எவ்வாறு காத்துக் கொண்டிருக்கிறனவோ அவ்வாறே புருஷனில் இல்லாத ஸ்திரீயை எல்லா ஜனங்களும் ஏமாற்ற விரும்புகின்றார்கள். துஷ்ட ஜனங்கள் நிறைந்திருக்கும் இவ்வுலகத்தில் அநாதையான பெண் வாழ்வது கஷ்டம். நெய்யில் நனைக்கப்பட்ட துணியை நாய்கள் எப்படிப் பிடித்திழுக்குமோ அப்படி நாதனில்லாத பெண்கள் துஷ்டர்கள் கையில் சிக்கிக் கொண்டு நாலு பக்கத்திலும் இழுக்கப்பட்டு அலைவார்கள். நாதன் அற்றுப்போன இந்தக் குழந்தையை நான் சரியாக வளர்த்துக் காப்பாற்றுவது முடியாத காரியம். குளத்தில் ஜலம் வற்றிப்போனால் மீன்கள் எவ்வாறு அழி யுமோ அவ்வாறு இந்தக் குழந்தைகள் இருவரும் நாசமடைவார்கள். அரக்கனு னுக்கு என்னைக் கொடுத்து விடுவதே மேலாகும். புரு ஷன் இருக்கும்போது ஸ்திரீயானவள் பரலோக மடைவதே பெரும் பாக்கியம். இதுவே சாஸ்திரம். எனக் கு வி டை சாடும். என் குழந்தைகளைக் காப்பாற்றும். நான் விரும்பினவற்றை அனுப வித்தாயிற்று.தருமானுஷ்டானம் செய்தேன். உமக்குப் பணி விடை செய்ததினால் புண்ணிய லோகமும் பெறுவேன். மரணம் எனக்குப் பயம தரவில்லை.நான் போனபின் நீர் வேறொரு ஸ்திரீ யை அடையமுடியும். நீா சந்தோஷமாய் என்னை அரக்கனிடம் அனுப்பிவிடும்”. 

இவ்வாறு மனைவி சொல்லவும். பிராமணன் அவளைத் தழுவிக் கொண்டு ஸ்திரீயைப்போல் மெல்லிய குரலில் தானும் கண்ணீர் விட்டழுதான். 

“அன்புள்ளவளே! சுந்தரி! இவ்வாறு பேசாதே. இத்தகைய ஞானமுள்ள மனைவியை ஒரு போதும் விடத்தகாது. புத்தியுள்ள புருஷன் இவ்வுலகத்தில் ஸ்திரீயை ரக்ஷிக்க வேண்டியது முதல் கடமை. எக்காலத்திலும் விடத்தகாத ஸ்திரீயை நான் அரக்கனு க்குக்கொடுத்து விட்டு ஜீவிப்பேனாயின் மகா பாவியாவேன்” என்றான். 

தாயும் தகப்பனும் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந்த மகள், ‘நான் சொல்லுவதைக் கேளுங்கள். கேட்டுவிட்டுப் பிறகு உசிதப்படி செய்யுங்கள். நான்தான் உங்களால் இழக்க தக்கவள். என்னை அரக்கனிடம் அனுப்பி விடுங்கள். என் ஒருத்தியைக் கொண்டு எல்லாவற்றையும் காப்பாற்றிக் கொள்ள முடி யும். ஓடத்தைக்கொண்டு தண்னீரைத்தாண்டுவது போல் என்னைக் கொண்டு ஆபத்தைத்தாண்டுங்கள். நீங்கள் பரலோகம் சென்றால் என் சகோதரனான இந்தக் குழந்தை சீக்கிரம் இறந்து போவான். தந்தையே! நீர் இறந்தால் சிறு பெண் ணாகிய நான் அநாதையாகி விசனத்தில் சிக்கிக் கஷ்டப்படுவேன். இந்தக் குலத்திற்கு விமோ சனம் தரக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன். நான் சொல்லிய படி செய்தீர்களானால் என் பிறவி பயனுள்ளதாகும். என்னுடைய நன்மையைக் கருதியே நீர் என்னை அரக்கனுக்கு அனுப்ப வேண்டும்.’ 

இவ்வாறு பிரியமான பெண் சொல்லத் தந்தையும் தாயும் இருவரும் அவளைத் தழுவி முத்தமிட்டு அழுதார்கள். எல்லாரும் அழுவதைக் கண்டு குழந்தையாகிய மகன் மலர்ந்த கண்களுடன் அப்பா! அழாதே! அம்மா அழாதே! அக்கா அழாதே!” என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லி அவர்கள் மடியில் உட் கார்ந்தான். பிறகு அவன் எழுந்து அங்கிருந்த ஒரு விறகுக் குச்சி யைக் கையில் எடுத்து “அந்த ராக்ஷசனை நான் இதனால் கொன்று போடுவேன்” என்று மழ லைச் சொல் சொல்லவும், எல்லோரும் சேர்ந்து பெருந்துக்கத்திற்கு இடையில் சிரித்தார்கள். அதுதான் நல்ல சமயம் என்று குந்தி தேவி பேச ஆரம்பித்தாள். 

இந்தத் துக்கத்திற்குக் காரணம் என்ன? தயவு செய்து சொன்னீர்களானால், ஏதாவது நிவர்த்திக்க முடியுமானால் நானும் செய்வேன்’ என்றாள். 

பிராமணன் அம்மணி! உன்னால் என்ன செய்ய முடியும்? இந்த ஊருக்கு அருகில் ஒரு குகை இருக்கிறது. அதில் ஒரு கொடிய அரக்கன் இருக்கிறான். அவன் பெயர் பகாசுரன். மிகுந்த பலவான். அவன் இந்தத் தேசத்தையும் நகரத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறான். சென்ற பதின்மூன்று வருஷங்களாக அவனால் இந்தநகரம் பீடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேசத்துக்கு அரசனா பிருக்கும் க்ஷத்திரியன் வேத்திரகீய நகரத்திலிருக்கிறான். அவனால் நம்மைக் காப்பாற்றமுடியவில்லை. இந்த அரக்கன் குகையில் வசி த்துக்கொண்டு ஊரிலுள்ள ஸ்திரீகள் பாலர், விருத்தர்கள் எல் லாரையும் இஷ்டப்படி கொன்று தின்றுகொண்டுவந்தான். ஊரார் எல்லாரும் சேர்ந்து ஒரு நியமம் செய்துகொள்ளும்படி அவனைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். ‘நினைத்தபடி கொல்லாதே: உனக்கு வேண்டிய மாமிசமும், அன்னமும், தயிரும், சாராயமும் கள்ளும் பலவித பானங்களும் பாத்திரங்களில் வைத்து வண்டிக்கு இரண்டு கருப்புக் காளைமாடுகளையும் கட்டி வீட்டுக்கு ஒரு மனிதனாக வாரம் ஒரு முறை அனுப்புகிறோம். நீ அன்னத்தையும் மாடு களையும் ஆளையும் தின்று விட்டு மற்றவர்களை இம்சிக்காமலி சுருக்க வேண்டும்” என்று ஊரார் வேண்டிக்கொள்ள, அவனும் அங்கீக ரித்து அவ்வாறே நடந்துவருகிறது. அதுமுதல் இந்தப் பலவானான அரக்கன் மற்றப் பகைவர்களிடத்திலிருந்தும், காட்டுமிருகங்க ளிடத்திலிருந்தும் இந்தத் தேசத்தை ரக்ஷித்துவருகிறான். இந்த உடன்படிக்கைப்படி அநேச வருஷங்களாச நடந்த வருகிறது. 

“இந்தக் கஷ்டத்தினின்று தேசத்தை விடுவிக்க யாராவது எங்கேயாவது ஆரம்பம் செய்தால் அவர்களை உடனே அந்த ராக்ஷ சன் பிள்ளை பெண்களுடன் கொன்றுதின்றுவிட்டு அடக்கிவருகிறான் அம்மணி, எங்கள் பரம்பரை அரசன் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை. சக்தியுள்ள ராஜாவை அடையாத ஜனங்கள் மனைவி மக்களைப் பெறுதலே கூடாது. தகுந்த அரசனை முதலில் அடையவேண்டும். அதன் பிறகே மனைவியையும் தனதான்யங்களையும் அடையவேண்டும். சரியான அரசன் இல்லாவிடில் மனைவி ஏது. தனம் ஏது? இந்த வாரத்தில் ஆளை அனுப்பும் முறை இந்தக் குடும் பத்திற்குநேர்ந்திருக்கிறது.எங்கேயாவது ஒருவனை விலை கொடுத்து வாங்கி அனுப்புவதற்கு எனக்குப் பொருள் கிடையாது. மனைவி யையாவது, குழந்தையையாவது அரக்கினிடம் அனுப்ப என்னால் முடியவில்லை. எல்லோரையும் கூட்டிக்கொண்டு அரக்கனிடம் நான் செல்வேன் எங்கள் எல்லாரையும் சேர்த்து அந்தப் பாவி தின்று விடட்டும் அம்மா! நீ கேட்டதனால் உனக்குச் சொன்னேன்” என்றான். 

இந்த ஏக சக்ரபுரிக் கதையில் எவ்வளவு அரசியல் தத் துவங்கள் அடங்கி நிற்கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

குந்தி பீமனுடன் கலந்து பேசிவிட்டுத் திரும்பி வந்து சொன்னாள்: “இந்தப் பயத்திற்காக நீங்கள் துன்பப்படவேண்டாம். எனக்கு ஐந்து குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் இந்த அரக்கனுக்கு இரையை எடுத்துக் கொண்டு செல்வான்’ என்றாள். பிராமணன் ஐயோ! கூடாது! அதிதியாக வந்திருக் கும் உன் மகனுடைய உயிரை எனக்காகப் பலி கொடுக்க நான் ஒப்பமாட்டேன்” என்றான். 

குந்தி “பிராமணரே! பயப்படாதீர். என் மகன் மந்திரசக்தி பெற்றவன். அந்த அரக்கனைக் கொன்றுவருவான். இவன் அர கர்களைக் கொன்றதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை நீங்கள் யாரிடத்திலும் சொல்லக் கூடாது. சொன்னால் அந்த வித்தை இவனுக்கு உதவாது’ என்றாள். வெளியே தெரிந்தால் துரியோதனனுடைய ஆட்களுக்கு இவர்கள் பாண்டவர்கள் என்று தெரிந்து போகும் என்று பயந்து இவ்வாறு கேட்டுக் கொண்டாள். 

குந்தி செய்த ஏற்பாட்டினால் பீமனுக்குத் தாங்க முடியாத சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயிற்று. சகோதரர்கள் பிக்ஷை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். பீமசேனன் முகத்தில் புதிய ஒரு மகிழ்ச்சிக் குறிப்பைக் கண்ட தருமபுத்திரன் பீமன் ஏதோ சாகசம் செய்ய எண்ணியிருக்கிறான் என்று ஊகித்துக் குந் தியிடம் போய் அம்மா! பீமன் ரொம்ப சந்தோஷமாக இருக் கிறானே. அவன் என்னசெய்ய யோசித்திருக்கிறான்?” என்று கேட் டான். குந்தி விஷயத்தைச் சொன்னாள். 

யுதிஷ்டிரன் “இதென்ன, செய்யக்கூடாத சாகசத்தைச் செய் கிறாய்! பீமனுடைய வலிமையை ஆதாரமாகக் கொண்டு நாம் சிந்தையற்றுத் தூங்குகிறோம். வஞ்சகர்கள் பறித்துக் கொண்ட ராஜ்யத்தை இவனுடைய பராக்கிரமத்தால் அல்லவோ மறுபடி அடைய எதிர்பார்க்கிறோம்? பீமனால் அல்லவோ நாம் அரக்கு மாளிகையில் தீக்கு இரையாகாமல் தப்பினோம்? இந்தப் பீமனை இழப்பதற்கு வழி தேடினாயே! துயரங்களில் மனம் நொந்து போய்ப் புத்தியை இழந்து விட்டாய் போலிருக்கிறது” என்றான்; 

யுதிஷ்டிரன் இவ்வாறு சொல்ல, குந்தி தேவி, “யுதிஷ்டி னே! இந்தப் பிராமணர் வீட்டில் நாம் பல நாள் சுகமாக வசித் தோம்; மனிதர்களாகப் பிறந்தவர்களுடைய கடமையும் லக்ஷணமும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் செய்வதேயா பீம்னுடைய பராக்கிரமத்தை நான் அறிவேன். நீ பயப்படவேண் டாம். வாரணாவதத்திலிருந்து நம்மனைவரையும் தூக்கி வந்த பீமன் இடும்பனைக் கொன்ற பீமன், இவனைப்பற்றி எனக்குப் பயமில்லை. இந்தக் குடும்பத்துக்கு உதவுவது நம்முடைய கடமை என்றாள். 

பிறகு நகரவாசிகள் பலவகை மாமிசங்களோடு சேர்ந்த அன்னத்தையும் குடங்கள் நிறையத் தயிரும் பானங்களும் வண்டி யில் வைத்துக்கொண்டு பிராமணன் வீட்டண்டை வந்தார்கள். இரண்டு கருப்புக் காளைமாடுகள் பூட்டிய அந்த வண்டியில் பீமன் ஏறி அரக்கனுடைய குகைக்குச் சென்றான். 

வாத்திய முழக்கத்தோடு வண்டி சென்றது. குறிப்பிட்ட டம் போய்ச் சேர்ந்ததும், கூட வந்த ஊர் ஜனங்கள் நின்று விட்டார்கள். பீமன் மட் டும் வண்டியை ஓட்டிப்போனான்? அவ்விடத்தில் எலும்பும், மயிரும், ரத்தமும் கிடந்தன. துண்டு பட்டுச் சிதறிக்கிடக்கும் கை கால் தலைகளையும் கண்டான். கழுகுகள் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. பொறுக்கமுடியாத நாற்றமாக இருந் தது. பீமன் வண்டியை நிறுத்திவிட்டுப் போஜன பண்டங்களை எல்லாம் அவசர அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்தான். 

நான் அரக்கனோடு யுத்தம் செய்யும் போது அன்னமெல்லாம் இறைந்து போய்விடும். தவிர இந்த அரக்கனைக் கொன்ற பிறகு பிணம் தொட்ட தீட்டு உண்டாகும். சாப்பிட முடியாது என்று முன்ன தாகவே எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவதாகத் தீர்மானித்து அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். 

வெகு நேரம் கோபத்துடன் காத்துக்கொண்டிருந்த அரக்கன் பீமன் செய்ததை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்து இன்னும் அதிக கோபாவேசமானான். பீமனும் அரக்கனைக் கண்டு அவனைப் பெயரிட்டு அழைத்தான். பெரிய சரீரமும் சிவந்த மீசையும் தாடியும் தலைமயிரும் காது வரையில் அகன்ற வாயும் கொண்ட அந்தப் பயங்கரமான அரக்கன் பீமனைத் தூக்கிச்செல்ல ஓடிவந்தான். பீமசேனன் சிரித்துக்கொண் டே அவனைக் கவனிக்காதவன் போல் (அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு) வேறுபுறம் நோக்கி உட்கார்ந்து அன்னத்தைச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். ராக்ஷசன் ஓடிவந்து முது கில் ஒரு அறை அறைந்தான். பீமன் அந்த அடியை வாங்கிக் கொண்டு திரும்பிப் பாராமல் சாப்பிட்டுக்கொண்டே யிருந் தான். பிறகு குடத்தை எடுத்துத் தயிரையும் குடித்து விட்டு வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்து ராக்ஷசனைத் திரும்பிப் பார்த்தான். 

அதன்மேல் இருவருக்கும் பெரிய யுத்தம் நடந்தது. பகனைப் பீமன் உதைத்துக்கீழே தள்ளி “ராக்ஷசா! களைப்பாறு” என்பான், பிறகு “எழுந்து வா!’ என்பான். அசுரன் அனேக தடவை பீம் னால் தள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்து வந்து போர்புரிந் தான். முடிவில் பீமன் அரக்கனைக் கீழே தள்ளி முதுகின் மேல் முழங்காலை வைத்து அவன் எலும்பை முறித்தான். அசுரன் பயங் கரமான சப்தம் செய்து வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு உயிர் நீத்தான். பிணத்தை பீமன் இழுத்து வந்து நகரத்தின் கோபுர வாயிலில் போட்டுவிட்டுப் பிறகு பிராமணனுடைய வீட்டுக்குப் போய் ஸ்நானம் செய்து தாயாரிடம் நட ந்ததைச் சொல்லி அவ ளையும் ஊராரையும் மகிழச் செய்தான். 

திரௌபதி சுயம்வரம் 

ஏக சக்கரபுரத்தில் பிராமமணவேஷமும் பிராமண வாழ்க்கை முறையும் அனுசரித்துத் தாங்கள் யார என்று ஒருவருக்கும் தெரியாமல் பாண்டவர்கள் வாசம் செய்து கொணடிருந்த காலத்தில் பாஞ்சாலி ராஜனால் துருபதம். மகம் திரெளபதிக்குச் சுயம்வர ஏற்பாடு நடந்தது. தானங்களை பெறவும் வேடிக்கை பார்க்கவும் ஏக சக்கரபுரத்தில் பல பிராமணர்கள் சுயம்வர சபைக்குப் போவதாகட பேசிக்கொ டிருந்தார்கள். திரௌபதியை  உத்தேசித்துப் பாஞ்சாலம் போகத் தன் மக்கள் விரும்புவதைக் குறிப்பால் குந்தி அறிந்து கொண்டாள். 

“நாம் இந்த நகரததில் இவ்வளவு காலம் வாசம செய் தோம். ஒரே இடத்தில் நெடுங்காலம் வசிப்பது நல்லதல்ல. பாஞ் சால தேசம் மிகச் செழிப்பாக இருப்பதாகக் கேள்வி. இந்தப் பிரதேசத்திலுள்ள காடுகளையும் தோட்டங்களையும் பார்த்தோம். பார்த்ததையே பார்த்தால் முன்போல் சந்தோஷம் உண்டாகாது. பிக்ஷையும் குறைந்து வருகிறது. புதிய இடத்துக்குப் போவது நலம். துருபதனுடைய தேசத்துக்குப் போகலாம்” என்று தானாகவே யுதிஷ்டிரனிடம் சொன்னாள். லௌகீக சாமர்த்தியத்தில் குந்தி யாருக்கும் குறைந்தவளல்ல. 

பிராமணர்கள் கூட்டம கூட்டமாகப் பாஞ்சாலத்தில் நடக் கும் சுயம்வரத்திற்குப் போனார்கள். அவர்களோடு பாண்டவர்களும் சென்றார்கள், நெடு நாட்கள் டந்து துருபதனுடைய அழகிய  நகரத்தைச் சர்ந்தார்கள். நகரத்தையும் ராஜமாளிகை களயும் பார்த்துவிட்டு ஒரு குயவனுடைய வீட்டில் இடம் செய்து கொண்டு தங்கினார்கள். பாஞ்சால நகரத்திலும் பாண்டவர்கள் பிராம்மண விருத்தியை அனுசரித்து வந்தார்கள். ஊரில் யாருக்கும் டுவர்கள் இன்னார் என்று தெரியாது. 

துருபதனுக்கும் துரோணருக்குப சமாதானம் ஏற்பட்டி ருந்தபோதிலும் துரோணருடைய விரோதத்தினால் துருபதனுக் குக் கவலையாகவே இருந்து வந்தது. அருச்சுனனுக்குத் தன் மகள் திரௌபதியைக் கொடுத்து விவாகம் செய்து முடிக்க வேண்டும் என்பது துருபதனுடைய ஆசை அப்படிச் செய்துவிட்டால் துரோணருடைய பகைமை குறையும் யுத்தம் வந்தாலும் இந்தச் சம்பவத்தால் தன்னுடைய வ லிமை அதிகமாகு ம் என்று அவன் யோசனை பாண்டவர்கள் வார வைகத்தில் ஒறந்து விட்டார் கள் என்பதைக் கேட்டதும் அவன் மிகவு ர் துயரப்பட்டான். பிறகு அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவி வந்தது. அதைக் கேட்டுக் கொஞ்சம் சந்தோஷம் அடைந்து வந்தான். 


சுயம்வர மண்டபம் வெகு அழகாக நிருமாணிக்கப்பட் டது. ராஜகுமாரர்களும் விருந்தினர்களும் தங்குவதற்கு 100001 L பத்தைச் சுற்றிப் பல விடுதிகள் கட்டி அலங்கரிக்கப்பட் டிருந்தன. கண்ணைக் கவரும்படியான வேடிக் ளும் களும் ஏற்பாடு செய்யப் டிருந்தன. பதினாலு நாட்கள் அற்புதமான விழா நடந்தது. 

எஃகுத் தந்திகளால் திரிக்கப்பட்ட நாண் கொண்ட ஒரு பெரிய வில் சுயம்வரம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில்லை வளைத்து எஃகு நாண அதில் பூட்டி அம்பு எய்து மேலே வெகு உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பொன்மய மான லக்ஷியத்தை அடிக்க வேண்டியது. இடையில் சுழலும் யந் திரம் ஒன்று அமைக்கப்பட்டிரூந்தது. அந்தச் சுழல் யந்திரத்தி லிருந்த துவாரத்தின் வழியாக அம்பு செல்லவேண்டியது. சுழல் யந்திரத்தினால் தடைபடாமல் அம்பைச் செலுத்தி லக்ஷி யத்தை அடித்த வீரன் தன் மகளை அடையலாம் என்று துருபதன் பிரசுரித்தான். 


சுயம்வரத்திற்கு நாற்திசையிலிருந்தும் வீரர்கள் வந்திருந் தார்கள். திருதராஷ்டிர புத்திரர்களும் கர்ணனும், கிருஷ்ண னும் சிசுபாலனும் ஜராசந்தனும் சல்லியனும் உள்பட நூற் றுக்கணக்கான அரசர்கள் வந்து குழுமினார்கள். சுயம்வர சம்ப வத்தைப் பார்க்க வந்த பாது ஜனக் கூட்டமும் மிகப் பெரிது. சபையில் கடலைப்போல் கம்பீர ஓசை நிரம்பிற்று. வாத்தியங் களும் மங்கல சப்தங்களும் கோஷித்தன. முன்னால் ஒரு குதிரை மேல் திருஷ்டத்யும்னன் தங்கைக்கு வழி செய்து கொண்டு வந் தான். பின்னால் மஞ்சன நீராடி அகிற் புகையினால் கூந்தலின் ஈரத்தைப் போக்கிட பட்டாடை தரித்துச் கொண்டு இயற்கை அழகே ஆபரணமாகப் படைத்த திரௌபதி கையில் மாலையை எடுத்துக் கொண்டு யானையினின் இறங்கிச் சபையில் பிரவேசித்தாள். அவள் அழகைக் கண்டு களிப்பும் பரவசமு முற்ற வீரர்களைக் கடைக்கண் னால் பார்வையிட்டுத் திரெளபதி சபை மத்தியில் நடந்து மேடைக்குச் சென்றாள். பிராமணர்கள் மந்திரங்கள் ஓதி அக்கினியில் அவி அளித்தார்கள். சுவஸ்தி வாசனம் சொல்லப்பட்டு வாத்திய கோஷமும் அட ங்கிய பின், கம்பீரமான குரல் படைத்த திருஷ்டத்யும்னன் தன் சகோதரியை மண்டபத்தின் நடுவில் கைப்பிடித்து நிறுத்தி, கூடியிருந்த சபை யோரைப் பார்த்து, 

“இங்கே பிரசன்னமாயிருக்கிற வீரர்கள் எல்லாரும் கேட்க வேண்டும். இதோ, வில்! இதோ, லக்ஷியம்! இவையே அம்புகள்! யந்திர துவாரத்தின் வழியாக ஐந்து சரங்களை எய்து குல் மும் ரூபமும் பலமும் பொருந்திய மன்னர்களுள் எவன் லக்ஷியத்தை அடிக்கிறானோ அவன் என் சகோதரியை இப்போதே பாரியையாக அடைவான். இது சத்தியம்” என்று சொல்லி, அங்கே வந்து அமர்ந்திருக்கும் அரசர்களுடைய பெயர்களையும் குலத்தை யும் திரெளபதிக்கு வரிசைக் கிரமமாக எடுத்துச் சொன்னான்.


புகழ் பெற்ற அரச குமாரர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து வில்லைத்தூக்கி நாண் ஏற்ற முடியாமல் அவமானப்பட்டுத் திரும்பினார்கள். 

சிசுபாலன், ஜராசந்தன், சல்லியன், துரியோதனன் இவர் களும் பார்த்து ஏமாற்ற மடைந்தார்கள். 

கர்ணன். எழுந்து வந்ததும் சபையிலுள்ள எல்லோரும் வன் விச்சயமாக வெற்றி பெறுவான் என்று எதிர்பார்த்தார்கள். வில்லை வளைத்து நாண் பூட்ட ஒரு மயிரிழையேதான் இருந்தது. அப்போது வில்லானது பளீர் என்று அவனைத் திருப்பி அடித்தது. சபையில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியதும் பிராம ணக் கூட்டத்தின் மத்தியில் உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தான். 

அந்தண இளைஞனாக வேஷங கொண்ட அருச்சுனன் எழுந் ததைக் கண்டு சபையில் கலவரம் ஏற்பட்டது. பிராம்மணர் களோ ஒருவரோடு ஓருவர் வாதம் செய்ய ஆரம்பித்தார்கள் சிலருக்குப்பெருத்த உற்சாகம். சிலருக்கு அடங்காத ஆட்சேபணை. 

கர்ணன சல்லியன் முதலான வீரர்கள் தோல்வி யடைந்த ஒரு விஷயத்தில் வெறும் சபல புத்தியால் தூண்டப் பட்டு இந்தப் பிரம்மசாரி பிரவேசிப்பது, பிராமண சமூகத்துக்கே பெருத்த அவ மானம் கொண்டு வந்து விடும் என்று பலர் பெருங் கூச்சல் போட் டார்கள்.ஆனால் சிலர் வேறு விதமாகச்சொன்னார்கள். “இவனைப் பார்த்தால் வெற்றி பெற்றாலும் பெறுவான் என்று தோன்றுகிறது. இவனுடைய உற்சாகத்தையும் தைரியத்தையும் கவனி த்துப் பார்த்தால் க்ஷத்திரியர்கள் யாரும் செய்யாத காரியத்தை இவன் ஒருவேளை செய்யச் சக்தி பெற்றிருப்பான் என்றே நினைக்க இடமிருக்கிறது. தேக பலம் குறைவாக இருந்தாலும் பிராம ணர்களுக்கு உறுதியான தவப் பெருமை இருக்கிறது. ஏன் இவன் பிரயத்தனப் படக்கூடாது?” என்று ஒரு கட்சி பலமாகவே கிளம் பிற்று. அதன்மேல் பிராமணர்கள் ஏகோபித்து ஆசீர்வதித்தார்கள். 


அருச்சுனன் வில்லின் சமீபம் போய் நின்று, திருஷ்டத்யும் னனைப் பார்த்து இந்தத் தனுசைப் பிடித்து வளைத்துப் பிராம ணர்கள் நாணேற்றலாமோ?” என்று கேட்டான். இதைக்கேட்ட திருஷ்டத்யும்னன், “பிராம்மணோத்தமனே! பிராமணன், க்ஷத் திரியன், வைசியன், சூத்திரன் இவர்கள் யாராயினும் இந்த வில்லை நாணேற்றி லக்ஷியத்தை அடித்து வென் றா ல் அவனுக்கு என் சகோதரி உரியவளாவாள். நான் சொன்ன வாக்கு சத்தியம். பின்வாங்க மாட்டேன்” என்றான். 

அதன் பிறகு அருச்சுனன் நாராயணனை மனத்தில் தியானித்து வில்லை யெடுத்தான். நாணயும் ஏற்றினான். சபை ஆச்சரியத்தில் மூழ்கி நிசப்தமாக இருந்தது. எய்த ஐந்து பாணங்களும் சுழலும் யந்திரத்தின் வழியாகச் சென்றன. மேலே கட்டியிருந்த லக்ஷியம் அறுந்து கீழே விழுந்தது. வாத்தியங்கள் முழங்கின. 

அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திரௌபதியைத் தாங்கள் அனைவரும் அடைந்து விட்ட தாகவே சந்தோஷப்பட்டுக் கூச்சலிட்டார்கள். மேலுத்திரியங் களை உயர வீசினார்கள். கோலாகலத்தைச் சொல்ல முடியாது. திரௌபதி புதிய அழகுடன் விளங்கினாள். நகைக்காமலே நகை த்த தோற்றமுடன் பார்வையிலே பேசுபவள் போலும் அருச்சு னனிடம் சென்று மாலையை எடுத்து அவனுடைய கழுத்தில் போட் டாள். யுதிஷ்டிரனு ம் நகுலனும் சகாதேவனும் சம்பவத்தைத் தாயாரிடம் சொல்ல வேகமாக எழுந்து குயவன், சாலைக்குச் சென்றார்கள். பீமன் மட்டும் எதாவது கம்பிக்கு க்ஷத்திரியக்கூட் டத்தினின்று ஆபத்து நேரிடுமோ என்று சபையிலேயே இருந்தான். 

பீமன் எதிர் பார்த்தபடியே கூடடத்தில் ராஜகுமாரர்கள் கலவரம் செய்தார்கள். சுயம்வர முறை பிராமணர்களுக்கு இல்லை. இந்தப் பெண் ணுக்கு ஒரு ராஜகுமாரனும் வேண்டா மலிருந்தால், விவாகம் இல்லாமலே சிதை ஏற வேண்டியது. பிராமணன் அவளை எப்படி அடையலாம்? தருமத்தைக் காப்பாற்றவும், சுயம்வர முறைக்கே நேரட போகும் விபத்தைத் தடுக்கவும் இந்த விவாகத்தை நாம் நடக்க விடாமல் தடுத்துவிட வேண்டும்’ என்று ராஜகுமாரர்கள் எல்லாரும் ஆரவாரம் செய் தார்கள். பெருத்த கலகம் ஏற்படும் போலிருந்தது. பீமன் வெளியில் சென்று ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இலைகளை உதறினான். உதறி அதை ஒரு சாதாரணத் தடியைத் தூக்கி வருவது போல் தூக்கிக் கொண்டு அருச்சுனன் பக்கத்தில் வந்து நின்றான். தி திரௌபதி அருச்சுனன் போர்த்திருந்த மான் தோலின் தலை ப்பைப் பிடித்துக் கொண்டு பேசாமல் நின்றாள். 

கிருஷ்ணனும் பலராமனும் மற்றவர்களும் குழப்பம் கிளப் பின அரசர்கள் கூட்டத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந் தார்கள். அருச்சுனன் திரெளபதியை அழைத்துக் கொண்டு குய வனுடைய சாலைக்குப் போனான். 


பீமார்ச்சுனர்கள் திரௌபதியை அழைத்துச் சென்ற போது திருஷ்டத்யும்னனும் பின் தொடர்ந்து சென்றான். சென்று அங்கு நடந்ததை மறைவாகப் பார்த்து வியப்புற்றுத திரும்பி வந்து தந்தை துருபதனிடம், தந்தையே! இவர்கள் பாண்டவர் கள் என்றே நினைக்கிறேன். அச்சமின்றித் திரௌபதி அந்த வாலி ப னுடைய கிருஷ்ணாஜினத்தைப் பிடித்துக் கொண்டு போனாள். நானும் போனேன். அங்கே குடிசையில் அக்கினிக்கொழுந்து போல் உட்கார்ந்திருந்தவள் குந்தி என்றே எண்ணுகிறேன்” என்றான். 


துருபதன் சொல்லியனுப்பிக் குந்தியும் பாண்டவர்களும் அரண்மனைக்கு வந்தார்கள். துருபதன் கேட்டதற்குத் தாங்கள் பாண்டவர்கள் என்றும் திரௌபதியை ஐவரும் ஒன்றாக விவாகம் செய்து கொள்வதே தங்கள் தீர்மானம் என்றும் தர்மபுத்திரன் சொன்னான். பாண்டவர்கள் என்று அறிந்ததும் துருபதன் மகிழ்ந்தான். துரோணருடைய பகையைப் பற்றி இனிக்கவலை இல்லை. மகளுக்கு அருச்சுனன் புருஷனாக அமைந்து விட்டான்’ என்று அவனுக்குச் சந்தோஷம் பொங்கிற்று. 

ஆனால் ஐந்து பேரும் ஒருத்தியை விவாகம் செய்வோம் என்று யுதிஷ்டிரன் சொன்னதைக் கேட்டு வியப்பும் அருவருப்பும் கொண்டான். 

“இது என்ன அக்கிரமம். ஒரு காலத்திலும் தருமம் என்று சொல்லப் படாததும் உலக வழக்கத்துக்கு முற்றிலும் மாறு பட்டதுமான இந்த எண்ணம் ஏன் உமக்கு உண்டாயிற்று?” என்று துருபதன் மிகவும் ஆக்ஷேபித்துப் பார்த்தான். 

யுதிஷ்டிரன் சமாதானம் சொன்னான். “ராஜாவே! மன்னிக்க வேண்டும். கிடைத்ததை யெல்லாம் நாங்கள் சேர்ந்து அனுபவிப்பதாகப் பிரதிக்ஞை செய்திருக்கிறோம். மகா ஆபத்துக் கிடையில் இவ்விதம் நாம தீர்மானித்தோம். இந்தப் பிரதிக்ஞை யை நாம் புறக்கணிக்க முடியாதது. எங்கள் தா யாராலும் இதுவே சொல்லப் பட்டது” என்றான யுதிஷ்டிரன், 

தருமமே உருவெடுத்தாற போன்ற பெரியோர்கள் குடும் பத்தைப் பாதுகாக்க உயிருடன் இருந்தும், பொறாமை என்பது எவ்வளவு பாபச் செயல்களை உண்டாக்கிற்று என்பதைக கண் டும் அனுபவித்தும் வந்த பாண்டவர்கள் எந்தக் காலத்தில் என்ன தீய எண்ணங்கள் உண்டாகுமோ என்று பயந்து, தாய் குந்தியின் சொற்படி இந்தப் பிரதிக்ஞை தங்களுக்குள் செய்து கொண்டார்கள். 

“நீரும் குந்தியும் திருஷ்டத்யும்னனும், திரௌபதியும் எல் லாரும் இந்த விசித்திரமான ஏற்பாட்டுக்குச் சம்மதித்தால் அப் படியே செய்யலாம்” என்று துருபதன் முடிவில் ஒப்புக் கொண் டான். அவ்வாறே பெரியோர்களும் சம்மதித்து முடிந்தது. 

இந்திரப் பிரஸ்தம் 

பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி வதந்திகள் ஹஸ்தினாபுரத்துக்கு வந்ததும் விதுரன் மகிழ்ச்சி யடைந்து வேகமாகத் திருதராஷ்டிரனிடம் சென்று, திருத ராஷ்டிரனே, நம்முடைய குலம் பலமடைந்து விட்டது, துருபத ராஜன் மகள் நமக்கு கு – மருமகளாய் விட்டாள். நமக்கு நல்ல காலம்” என்றான். 

துரியோதனனிடம் இருந்த அளவு மீறிய பட்ச பாதத்தினால் அறிவை இழந்த திருதராஷ்டிரன் விதுரன் கொண்டு வந்த செய் தியைத் தவறாகப் பொருள் செய்து கொண்டான். 

துரியோதனனும் சுயம்வரத்துக்குப் போயிருந்தானல்லவா? அவன் தான் திரௌபதியை அடைந்துவிட்டான் என்று எண்ணி நல்ல காலம்! நல்ல காலம்! உடனே போய் மருமகள் திரௌ பதியை அழைத்து வா, பாஞ்சாலியைத்தகுந்த மரியாதையோடு வரவேற்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் தாமதமின்றிச் செய்” என்றான். 

இதைக் கேட்ட விதுரன் உண்மையில் நடந்ததை அவனுக் குச் சொன்னான். பாண்டவர்கள் உயிருடனிருக்கிறார்கள். துருபதன் மகளை அருச்சுனன் அடைந்தான். பாண்டவர்கள் ஐவ ரும் மந்திர பூர்வமாக அவளைப் பா னிக்கிரகணம் செய்து கொண் டார்கள். அவர்கள் எல்லாரும் குந்தி தேவியுட ன் துருபதனு டைய பாதுகாப்பில் க்ஷேமமாக யிருக்கிறார்கள். என்று விதுரன் சொன்னதைக் கேட்ட திருதராஷ்டிரன் ஏமாற்ற மடைந்தான். ஆயினும் தன்னுடைய ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல், 

“விதுரனே சொல்லுவது எனக்கு மகிழ்ச்ச உண்டாக் கிற்று. அன்புக்குரிய பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? நெருப்பில் மாண்டார்கள் என்றல்லவோ துக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்? நீ இப்போது கொண்டு வந்த செய்தி என்னுடைய உள்ளத்தைப் பூரிக்கச்செய்கிறது. துருபதன் மகள் நமக்கு மருமக ளானாளா? நல்லது, நல்லது!எல்லாம் நல்லது! என்று சொன்னான். திருதராஷ்டிரன் உள்ளம் இரண்டு கூறுகளாக ஒன்றுக் கொன்று முரண்பட்டு நின்றது. இவ்வாறே உலகத்தில் பல ஆன்மாக்கள் துயரப்படுகிறார்கள். தருமம் அதர்மம் இரண்டும் கலந்த உள்ளங்கள். 

பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து எப்படியோ தப் பிப் பிழைத்து, ஒரு வருஷ காலம் மறைவாக இருந்து விட்டு இப் போது பாஞ்சால வல்லரசனுடைய மகளை மனைவியாகப் பெற்று முன்னைவிட அதிக பலம் கொண்ட வர்களாக இருக்கிறார்கள் என் பதைக் கண்டு துரியோதனனுக்கு முன்னிருந்த பொறாமையும் விரோதமும் இரு மடங்காயின. 

“மாமா! பயமாக இருக்கிறதே, புரோசனனை நம்பிக் கெட் டோம். நம்முடைய சூழ்ச்சியெல்லாம் வீணாயிற்று. நம்முடைய பகைவர்களான இந்தப் பாண்டுபுத்திரர்கள் நம்மைவிடச் சாமர் த்தியசாலிகள். தெய்வமும் இவர்களுக்குத் துணையாயிருக்கிறது. மரணம் இவர்களை எட்டவே எட்டாது போல் இருக்கிறது.திருஷ் டத்யும்னனும் சிகண்டியும் இவர்களுக்குத் துணையாய்விட்டார்கள், என்னசெய்வது?” என்று துரியோதனனும் துச்சாதனனும் சகுனியிடம் முறையிட்டார்கள். 

கர்ணனும் துரியோதனனும் அந்தகனான திருதராஷ்டிரனி டம் சென்று, 

“விதுரனிடம் நீர் இது நல்ல காலம் என்று சொன்னீரே! பாண்டவர்கள் நமக்கு விரோதிகளாயிற்றே! விரோதிகள் அபி விருத்தி அடைவது நமக்குத் தீமையல்லவா? அவர்கள் நம்மை நிச்சயமாக அழித்து விடுவார்கள். நாம் அவர்களுக்குச் செய்யப் பார்த்தது நிறைவேறவில்லை. நிறைவேறாத காரியங்கள் நமக்கே பெரிய அபாயமாகும். எப்படியாவது நாம் அவர்களை இப்போது அழித்து விட வேண்டும். இல்லாவிடில் நாம் கெட்டுப்போவோம். இதற்கு யோசனை செய்வீராக” என்றார்கள் 

“மகனே நீ சொல்வது உண்மை. ஆனால் நம்முடைய கருத்து வி துரனுக்குத் தெரியக் கூடாது. அதற்காகத்தான் நான் அவனிடம் அவ்வாறு நடந்துகொண்டேன். இப்போது செய்யத் தக்கது என்னவென்று உங்கள் யோசனையைச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றான் திருதராஷ்டிரன். 

துரியோதனன் சொன்னான். 

“எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கவலையில் சிக்கித் தடு மாறுகிறேன். என் புத்தி பலவாறாக ஓடுகிறது. இந்தப் பாண்ட வர்கள் ஐவரு ம் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்ல. மாத்ரி குமாரர்களுக்கும் மற்ற மூவருக்கும் எப்படியாவது விரோ தம் மூட்டிவிடுவது ஒரு வழி. துருபதனுக்குத் திரவியம் நிறையக் கொடுத்து அவனை நம்முடைய கட்சியில் எப்படியாவது சேர்த்துக் கொள்ளப் பார்க்கலாம். தன் மகளைப் பாண்டவர்களுக்குக் கொடு த்திருக்கிற ஒரு காரணத்தினாலேயே நாம் அவனை சிநேகம் செய்ய முடியாமல் போகாது. தனத்தின் பலத்தினால் நாம் ஆகாத காரி யத்தையுங்கூடச் செய்து முடிக்கலாம். 

இவ்வாறு து ரியோ தனன் சொன்னதைக் கேட்ட கர்ணன் நகைத்தான். “இது வீண் பேச்சு” என்றான். 

“எவ்விதத்திலாவது யுக்தி செய்து அந்தப் பாண்டவர்கள் இங்கே வந்து நம்முடைய வசத்திலிருக்கும் ராஜ்யத்திற்கு உரிமை கோராமல் செய்ய வேண்டும். பிராமணர்களைத் துருபதன் நகரத்திற்கு அனுப்பி அங்கே வதந்திகளை உலாவச் செய்யலாம். பல பேர்கள் தனித் தனியாகப்போய்ப் பாண்டவர்களிடம் சொல் லட்டும். ஹஸ்தினாபுரத்து க் கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அபாயம் நேரிடும்’ என்று பலர் சொல்லிப் பயம் உண்டாக்கினால் பாண்டவர்கள் இவ்விடம் வராமல் இருப்பார்கள்” என்றான் துரியே யாதனன். 

“இதுவும் உபயோகமற்ற யோசனை” என்றான் கர்ணன். 

மறுபடியும் துரியோதனன், “திரௌபதியைக் கொண்டு பாண்டவர்களுக்குள் விரோதம் உண்டாக்க முடியாதா? இயற் கைக்கு மாறாகப் பல புருஷர்கள் ஒரு ஸ்திரீயை மணந்திருக்கிறார் கள். இது நமக்குப் பெரும் வசதி தருகிறது. காமவேகநிபுணர்களைக் கொண்டு அவர்கள் மனத்தில் சந்தேகத்தையும் பொறாமையையும் கிளப்பி விடலாம். நிச்சயமாகப் பலன் பெறுவோம். அழகான பெண்களைத் தேடி, குந்து புத்திராகளில் சிலரை ஏமாற்றித் திரௌபதியை இவர்கள் மேல் வெறுப்புக் கொள்ளவும் செய்யலாம். இவர்களில் யாராவது ஒருவன் பேரில் திரெளபதிக்கு விரோதம் ஆரமபித்தால் அவனை நாம ஹஸ்தினாபுரத்துக்குக் கூப்பிட்டழைத்து மேலே செய்யக் கூடிய தந்திரங்களைச் செய்யலாம்” என்றான். 

கர்ணன இதற்கும் நகைத்தான். து ரியோ யா தனா உன்னுடைய யோசனைகள் எதுவும் சரியாயில்லை. இந்தப் பாண்டவர்களைத் தந்திரத்தினால் ஜெயிக்க முடியாது. இவ்விடட அவர்கள் இருந்த காலத்தில், சிறகு முளைக்காத பறவைக அஞ்சுகள் போல இருந்தார்கள். அப்போதுங் கூட உன்னால் அவர்களை ஏமாற்ற முடிய வில்லையே? இப்போது அவர்கள் அனுபவம் அடைந்து வேறு அர சனிடம சரண் புகுந்திருக்கிறார்கள். உன்னுடைய எண்ணங்கள் அவர்களுக்குத் தெரிந்து போயிற்று. தந்திரங்கள் இனிமே உதவாது. அவர்கள் மித்திரபேதம் செய்து ஜெயிப்பது அசாத்தியம். துருபதராஜன் யோக்கியமானவன். அவனை விலைக்கு வாங்கமுடியாது. பாண்டவர்களை ஒருகாலமும் அவன் விட்டு கொடுக்க மாட்டான். திரெளபதியும் அவர்கள் பேரில் ஒரு நாளும் வெறுப்புக கொள்ள மாட்டாள். ஆகையால் நமக்கு இருக்குப் வழி ஒன்றே. இவர்களுடைய பலம் இன்னும் அதிகமாச் வளருவதற்கு முன் நாம் இவர்களைத் தாக்கி யுத்தம் செய்து அழித்து விடுவதே வழி அவர்களுடன் இன்னும் வேறு பல சிநேகிதர்கள் சிக்கிரத்தில் சேர்ந்து விடுவார்கள். அதற்கு முன் தாக்க வேண்டும். கிருஷ்ணன் யாதவ சேனையோடு துருபதனுடைய தேசம் வந்து சேருவதற்கு முன் நாம் பாண்டவர்களையும் துருபதனையும் தாக்கி அடித்து விட வேண்டும். துருபதன் எதிர்பார்க்காமல் இருக்கும் போதே நாம் அந்த நகரத்தைத் தாக்க வேண்டும். பராக்கிரம முறையே க்ஷத்திரியர்களுக்குச் சிறந்த முறை. அதைக் கையாள வேண்டும் தந்திரங்கள் வீனாகும்” என்றான். 

கர்ணன் சொன்னதைக் கேட்ட திருதராஷ்டிரன் ஒன்றும் நிச்சயம் செய்ய முடியாதவனாகிப் பீஷ்மரையும் துரோணரை யும் அழைத்து ஆலோசிக்கலானான். 

பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்த பீஷ்மரைப் பார்த்து திருதராஷ்டிரன், பீஷ்மரே. பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறதாக இப் போது தெரிகிறது. பாஞ்சால தேசத்தில் துருபதனிட ம் கிறார்கள். ன்ன செய்யலாம்?” என் கேட்டான். 

“அந்த வீரர்களோடு சமாதானம செய்து கொண்டு ராஜ் யத்தில் பாதியை அவர்களுக்குக் கொடுப்பதுதான கிரமம். தான் நாட்டிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் விருப்பம். குலத்தின் பெயரைக் காப்பாற்றவும் இதுவே வழி. அரக்கு மாளிகை தீப் பற்றி எரிந்ததைப் பற்றி ஊரில் பலவாறாகப் பேசி வருகிறார்கள். உன் மேல் எல்லாரும் குற்றம் சொல்லுகிறார்கள். இப்போது நீ பாண்டவர்களை அழைத்துப் பாதி ராஜ்யம் கொடுத்துப் பட்டாபி ஷேகம் செய்து வைத்தால் அந்தப் பழி நீங்கும். இதுவே என் யோசனை’. என்று கருமமும் நீதியும் அறிந்த பீஷ்மர் சொன்னார்.

துரோணரும் அவ்வாறே சொன்னார். “நல்ல தூதனை அனு ப்பிச் சமாதானம் பேசி அவர்களை வரவழைத்து யுதிஷ்டிரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து அவனுக்குப் பாதி தேசம் கொடுத்து விடுவதே மேலான யோசனை என்று அவரும் சொன்னார். 

இதைக கேட்டுக் கொண்டிருந்த கர்ணனுக்குக் கோபா வேசம் வந்தது. அவனுக்குத் துரியோதனனிடம் அளவு கடந்த நட்பு. பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யம் தரும் யோசனை அவ னுக்குப் பிடிக்க வில்லை. திருதராஷ்டிரனைப் பார்த்து அவன் சொன்னதாவது: 

“உம்மிடத்தில் பொருளும் அந்தஸ்தும் பெற்ற துரோணர் இவ்விதம் யோசனை சொல்லுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. மந்திரிகளுடைய யோக்கியதையை நன்றாக ஆராய்ந்துதான் அவர் கள் சொல்லும் யோசனையை அரசன் பரிசீலனை செய்ய வேண் டும். பேச்சுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்துவிடக் கூடாது.” 

இவ்வாறு கர்ணன் சொன்னதைக்கேட்ட துரோணருக்குப் பெருங் கோபம் வந்தது. துஷ்ட னே! நீ அரசனுக்குத் துன்மார்க் கத்தை உபதேசிக்கிறாய். மரியாதை தவறிப் பேசுகிறாய். நானும் பீஷ்மரும் சொன்னதைத் திருதராஷ்டிரன் கேட்காமற் போனால் கௌரவர்கள் சீக்கிரத்தில் அழிந்து போவார்கள் என் பது நிச்சயம்” என்றார். 

பிறகு திருதராஷ்டிரன் விதுரனைக் கேட்டான். “குலத்துக் குத் தலைவரான பீஷ்மரும், ஆசாரியரான துரோணரும் சொன்ன யோசனையே மேலானது. அறிவில் சிறந்த அவர்கள் சொன்ன யோசனையைப் புறக்கணிக்க வேண்டாம். அவர்கள் எந்தக் காலத் திலும் நமக்கு நன்மையே செய்து வந்தவர்கள். துரியோதனன் முதலியவர்களைப் போலவே உமக்குப் பாண்டவர்களும் புத்திரர் கள் ஆவார்கள். அவர்களுக்குத் தீங்கிழைக்க யாராவது யோசனை சொன்னால் அவர்கள் குலத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று நீர் கருதவேண்டும். துருபதனும் அவன் புத்திரர்களும், கிருஷ்ணனும் அவரைச் சேர்ந்த யாதவர்களும் பாண்டவர்களுக்குப் பெரும் பக்க பலமாக இருக்கி றா ர்கள். அவர்களை யுத்தத்தில் வெல்ல முடியாது.  கர்ணன் சொல்லும் யோசனை பயனற்றது. பாண்டவா களை அரக்கு மாளிகையில் வைத்து அவர்களைக் கொல்லப் பார்த்த தாகப் பழி நம் பேரில் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழியை முதலில் நீக்கிக்கொள்ள வேண்டும். நம்முடைய நகரத்திலும் நாட் டிலும் உள்ள ஜனங்கள் பாண்டவர்கள் உயிருடனிருப்பதைக் கேட்டு மகிழ்ந்து அவர்களை மறுபடியும் கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசை கொண்டிருக்கிறார்கள். துரியோதன் னுடைய பேச்சைக் கேட்க வேண்டாம். பீஷ்மர் சொன்னதைச் செய். கர்ணனும் சகுனியும் சிறுவர்கள். அவர்களுக்கு ராஜ நீதி தெரியாது. இவர்கள் சொல்லும் யோசனைகள் பயன் தர மாட்டா என் M ன் விதுரன். 

முடிவில் திருதராஷ்டிரன் பாண்டு புத்திரர்களுக்குப் பாதி ராஜ்யம் கொடுத்துச் சமாதானமாகப் போவதாகவே தீர்மானித்தான். பாண்டவர்களையும் திரௌபதியையும் அழைத்துவரப் பாஞ்சாலதேசத்திற்கு விதுரனை அனுப்பினான். 

பலவகை ரத்தினங்களையும் ஏராளமான வேறு தனங்களையும் எடுத்துக்கொண்டு, விதுரன் துருபதனுடைய நகரத்திற்கு விசையான வாகனத்தில் ஏறிச் சென்றான். 

துருபதனைக் கண்டு கிரமப்படி மரியாதை செய்து பாண்ட வர்களையும் பாஞ்சாலியையும் ஹஸ்தினாப்புரத்துக்கு அனுப்பித் தரவேண்டும் என்று திருதராஷ்டிரன் சார்பாக விதுரன் கேட் டுக் கொண்டான். 

துருபதனுக்குச் சந்தேகம்தான். அவன் திருதராஷ்டிரனை நம்பவில்லை. பாண்டவர்கள் இஷ்டம் எவ்வாறோ அவ்வாறே செய்யலாம் என்றான். 

விதுரன் குந்தி தேவியிடம் சென்று அடிபணிந்தான். “விசித் திர வீரியனுடைய புத்திரனே! என் குழந்தைகளை நீ காப்பாற்றி னாய். இவர்கள் உன் குழந்தைகள். உன்னையே நம்பியிருக்கிறேன். நீ எவ்விதம் சொல்லுகிறாயோ அவ்வாறு செய்வோம்” என்றாள் குந்தி. அவளுக்கும் சந்தேகமே. பெற்ற பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட்டாள். 

விதுரன் ”குந்தியே! உன் மக்களுக்கு அழிவு கிடையாது. அவர்கள் ராஜ்ய பட்டாபிஷேகம் அடைவார்கள். உலகத்தில் பெரும் கீர்த்தி பெறுவார்கள். வா போவோம். என்று சமா தானப் படுத்தினான். முடிவில் துருபதன் அனுமதியின் பேரில் எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றான். 

தெருக்களெல்லாம் ஜலம் தெளித்து மலர் தூவி அலங்கரிக் கப்பட்டிருந்த ஹஸ்தினாபுரத்துக்குள் பாண்டவர்கள் திரௌபதி யுடனும் தாயார் குந்திதேவியுடனும் பிரவேசித்தார்கள். ஜனங் களின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிற்று. மந்திராலோசனையில் முடிந்தபடியே பாதி ராஜ்யம் பாண்டவர்களுக்குத் தரப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு முறைப்படி ராஜ்யாபிஷேகம் நடந்தது. 

பட்டாபிஷேகம் பெற்ற யுதிஷ்டிரனை திருதராஷ்டிரன் ஆசீர்வதித்தான். 

”என் சகோதரன் பாண்டு இந்த ராஜ்ஜியத்தை விருத்தி செய்தான். அவன் மகனான நீயும் கீர்த்தி பெற்றுச் சுகமாக இருப் பாயாக! பாண்டு ராஜன் என் கட்டளையை எப்போதும் சந்தோஷ மாகச் செய்து வந்தான். அவ்வாறே நீயும் என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என் மக்கள் துராத்மாக்கள். அகங்காரம் கொண்டவர்கள். இவர்களுட ன் உங்களுக்கு விரோதம் லிருப்பதற்காக நான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் காண்டவப்பிரஸ்தத்துக்குப் போய் அங்கே உங்கள் ராஜதா னியை அமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் புரூரவஸூம், நகுஷனும், யயாதியும் அந்த நகரத்தில் தான் இருந்து ராஜ்யபாரம் வகித்து வந்தார்கள். நம்முடைய வம்சத் துக்கு அதுதான் புராதன ராஜதானி. அதை நீ புனருத்தாரணம் செய்து புகழ் பெறுவாய்” என்றான். 

இவ்வாறு திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு நல்ல வார்த்தை களைச் சொன்னான். பாண்டவர்களும் பாழாகக் கிடந்த காண்டவ பிரஸ்தத்தை நிபுணர்களைக் கொண்டு புதுப்பித்து மாளிகைளும் கோட்டைகளும் கட்டி இந்திரப் பிரஸ்தம் என்ற பெயர் சூட்டி உலகமெல்லாம் வியக்கும்படியான அழகிய புது நகரம் உண்டாக் ன ர்கள். அவ்விடத்தில் பாண்டவர்கள் இருபத்துமூன்று வருஷம் தருமம் தவறாமல் அரசு புரிந்து கொண்டு தாயாருட னு ம் திரௌபதியுடனும் சுகமாக இருந்து வந்தார்கள். 

சாரங்கக் குஞ்சுகள் 

புராணக் கதைகளில் பறவையும் மிருகமும் மனிதர்களைப் போல் பேசும். உலக நீதியும் வேதாந்தமும் கூட உபதேசிக்கும். இதனுடன் ஆங்காங்கு அந்தப் பிராணிகளின் இயற்கை லட்சணங் களும் கதவுக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதுபோல் தோற்றம் காட்டவும் செய்யும். 

இயற்கையும் கற்பனையும் இவ்வாறு கலந்து நிற்பது புராண இலக்கியத்தின் தனியழகு. மகா புத்திசாலியாகவும் நீதி நிபுண னாகவும் வருணிக்கப்பட்ட அனுமான் இராவணனுடைய அந்தப் புரத்தில் ஓர் அழகிய ஸ்திரீயைக் கண்டு அவள்தான் சீதை என்று எண்ணிக்கொண்டு குரங்கைப்போல் குதித்துக் கூத்தாடியது இரா மாயணம் படிப்போரெல்லாம் அனுபவிக்கும் ஒரு கட்டம். 

பட்சிகளும் பசுக்களும் பேசும் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது சகஜம். ஆனால் முதியவர்களுக்குச் சொல்லப்படும் புராணக் கதைகளில் இவ்வாறான சம்பாஷனைகளுக்கு உண்மைத் தோற்றம் தருவதற்காக எதேனும் சப்பை கட்ட வேண்டியதாகும். அதற்காகக் கையாளப்படும் முறை ஒன்று உண்டு. கதையில் வரும் பிராணிகளுக்கு ஒரு பூர்வ ஜன்ம விருத்தாந்தம் ஆக்கித் தந்துவிடுவது புராண லக்கிய முறை. ஒரு ரிஷி மானாகப் பிறந்தார் என்றாவது ஒரு அரசன் சாபத்தால் நரியாக ஜன்மம் எடுத்தான் என்றாவது கதை சொல்வது வழக்கம். அப்போது மானானது மான் போலும் நடந்து கொள்ளும்,ரிஷி போலும் பேசும். நரி, நரியாக இருந்தாலும் அனுபவம் பெற்ற அரசனாக வும் கூடவே காட்டிக் கொள்ளு கதையும் ருசிக்கும். அதன் மூலம் மிகப் பெரிய உண்மைகளும் புகட்டப்படும். 


பாண்டவர்கள் காண்டவ பிரஸ்தத்தில் குடியேறி, பாழாகக் கிடந்த இடத்தைப் புதுப்பித்து நகரங்களும் கிராமங்களும் உண் டாக்கினார்கள். புதரும் முள்ளுமாக இருந்த அந்த வனம் முன் ஒரு காலத்தில் பெரிய நகரமாக இருந்ததாம். பாண்டவர்கள் அதை அடைந்த போது ஒரே பயங்கரமான காடாக இருந்தது பட்சிகளும் ஜந்துக்களும் அதைத் தங்கள் இருப்பிடமாகச் செய்து கொண்டிருந்தன. திருடர்களும் தீயர்களும் அங்கே பதுங்கி இருந்து வழிப் போக்கர்களை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்டைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு இந்த இடத் தில் புது நகரம் கட்டி வைப்பதாகக் கிருஷ்ணனும் அருச்சுனனு ம் தீர்மானித்தார்கள். 

அந்த வனத்திலிருந்த ஒரு மரத்தில் ஒரு சாரங்கப் பறவை சிறகு முளைக்காத நான்கு குஞ்சுகளுடன் வாசம் செய்து வந்தது. குஞ்சுகளையும் தாய்ப் பறவையையும் விட்டு விட்டு ஆண் பறவை றாரு பெண் பறவையுட ன் உல்லாசமாக வனத்தில் திரிந்து கொண்டிருந்தது. தாய்ப் பறவை மட்டும் குஞ்சுகளுக்காக இரை தேடிக்கொண்டு வந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. அச்சம யத்தில் கிருஷ்ணார்ச்சுனர்கள் தீர்மானித்து உத்திரவிட்டபடி காட் ல் தீப்பற்றிக் கொண்ட து. நெருப்பானது பரவிக்காட்டை யெல்லாம் அழித்து எல்லாப் பிராணிகளையும் துன்புறுத்திற்று. இதைக் கண்டு துயருற்ற சாரங்கம் கண்ணீர் விட்டுப் புலம் பிற்று. 

உலகத்தை யெல்லாம் எரித்துக் கொண்டு தீ நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே! பயங்கரமான அனல் வரவர அதிக மாகிறதே! இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வந்து நம்மை எரித்து விடுமே! மரங்கள் பேரோசையுடன விழுகிறதைக் கண்டு காட்டுப் பிராணிகள் எல்லாம் கலங்குகின்றனவே! சிறகும் கால் களும் இல்லாத குஞ்சுகளே! நீங்கள் தீக்கிரையா வீர்களே! நான் என்ன செய்வேன்? உங்கள் தகப்பன் நம்மை விட்டுப் போய் விட் டானே! இந்தக் குஞ்சுகளைத்தூக்கிக்காண்டு பறந்து போக எனக் ச் சக்தி யில்லையே! என்றிவ்வாறு பரிதபித்துக் கொண்டிருக் ற தாயைப் பார்த்துக் குஞ்சுகள் சொல்லின: 

“தாயே! எங்கள் மேலுள்ள அன்பினால் பரிதபிக்காதே; நாங்கள் இங்கே இறந்துபோனாலும் அதனால் ஒன்றும்குறைவில்லை; நல்ல பதவியை அடைவோம். நீயும் எங்களுக்காக உயிர் நீத்தால் குலம் விருத்தி யடையாமல் போகும். நீ அக்கினி இல்லாத வேறு டத்துக்குப் போய் க்ஷேமமாக இரு. நாங்கள் இங்கே தீக்கு ரையானாலும் உனக்குப் பிள்ளைகள் உண்டாகும். அம்மா! நீ ஆராய்ந்து குலத்துக்கு எது அதிக க்ஷேமமோ அதைச் செய்”. 

இவ்வாறு குஞ்சுகள் சொன்ன போதிலும் தாய்க்குக் குஞ்சு களை விட்டுப் போக மனம் வரவில்லை. “இங்கேயே உங்களுடன் நானும் தீக்கிரையாவேன்’ என்று இருந்தது. 


மந்தபாலர் என்கிற ஒரு ரிஷி ஒழுக்கம் தவறாமல் ஆயுள் முழுவதும் பிரமசரிய விரதத்தைக்காப்பாற்றி விட்டு இறந்தார். அவர் மேலுலகம் சென்ற போது ‘புத்திர சந்தானம் உண்டாக் காமல் வந்தவர்களுக்கு அங்கே இடமில்லை’ என்று வாயில் காப் போர்களால் திருப்பி அனுப்பப் பட்டார். அதன் மேல் அவர் சாரங்கப்பட்சியாகப்பிறந்து ஜரிதை என்கிற பெண் பறவையுடன் கூடினார். அது நான்கு முட்டைகள் L டவுடன் அவர் ஜரி தையை விட்டுவிட்டு லபிதை என்ற மற்றொரு பெண் சாரங்கப் பறவையுடன் சேர்ந்தார். 

ஜரிதையின் நான்கு முட்டைகளும் பொரிந்து குஞ்சுகளாயின. அவையே மேலே சொன்னவாறு காடு தீப்பற்றி எரியும் போது, ரிஷிக்குப் பிறந்த குஞ்சுகளானபடியால் இவ்வாறு தாய்க்குத் தைரியத்தை உபதேசித்தன. 


தாய்ப்பறவை குஞ்சுகளுக்குச் சொல்லிற்று: இந்த மரத்து க்குப் பக்கத்தில் ஒரு எலிப்பாழி இருக்கிறது. அந்த வளை வாயி லுக்குள் உங்களை விடுகிறேன். நீங்கள் மெள்ள உள்ளே நுழைந்து போய்ப் பதுங்கி இருங்கள். நெருப்பு படா மல் க்ஷேமமாக இருக்கலாம். வளையின் வாயை நான் மண்ணைப் போட்டு மூடி விடுகிறேன். அனல் உங்களை எட்டாது. இந்தக் காட்டுத் தீ அணைந்ததும் நான் வந்து மண்ணை எடுத்துத் தள்ளி உங்களை உயிருடன் விடுவிப்பேன்’ என்றது தாய்ப் பறவை. 

தாய் சொன்னதைக் குஞ்சுகள் ஒப்ப வில்லை. வளைக்குள் இருக்கும் எலி எங்களைத் தின்று விடும். நெருப்பில் சாவது மேலானது. எலியால் தின்னப் பட்ட இழிவான முடிவு எங்களு க்கு வேண்டாம்’ என்றன. 

“இந்த வளையிலிருந்து. எலியைப் பருந்து, ஒன்று தூக்கிப் போனதை நான் பார்த்தேன். வளையில் உங்களுக்கு அபாயம் இல்லை’ என்று தாய்ப் பறவை சமாதானம் சொல்லிற்று. 

ஆயினும் குஞ்சுகள் ஒப்ப வில்லை. “வேறு எலிகள் வளையில் கட்டாயம் இருக்கும். ஒரு எலி மட்டும் பருந்துக்கு இரையாகி விட்டதனால் அபாயம் தீர்ந்து விடவில்லை. நீ உயிரைக் காப்பாற் றிக்கொள். நெருப்பு வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்தைச் சுற்றிக் கொள்ளுவதற்கு முன் நீ பறந்து வளைக்குள் நுழைந்து பதுங்க எங்களால் முடியாது. எங்களுக்காக வருந்தி நீயும் ஏன் உயிர் விடுகிறாய்? நீ யார்? நாங்கள் யார்? நாங்கள் உனக்கு என்ன உதவி செய்தோம்? ஒன்றுமில்லை. நாங் கள் பிறந்து உனக்குக் கஷ்டம் தான் கொடுத்தோம். நீ எங்களை விட்டுவிடு. நீ இன்னும் சிறு வயது. யௌவனம் தீரவில்லை. நீ பர் த்தாவை அடைந்து க்ஷேமமாக இரு. நாங்கள் அக்கினியில் எரிக் கப்பட்டு இறந்தால் நல்ல உலகங்களை அடைவோம். உயிருடன் தப்பினால் நெருப்பு அணைந்த பிறகு நீ வந்து எங்களைப் பார்க்க லாம். நீ உடனே போய்விடு” என்று குஞ்சுகள் வற்புறுத்தவே தாய்ப்பறவை பறந்து போயிற்று. 

தீயானது அந்த மரத்தைப் பற்றிற்று. பறவைக் குஞ்சுகள் மனங் கலங்காமல் ஆபத்தை எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றோ டொன்று சம்பாஷணை செய்து கொண்டிருந்தன. 

“அறிவுள்ளவன் கஷ்டகாலம் வரும் போது முந்தியே தெரி ந்து கொண்டு மனத்தை ஸ்திரப்படுத்திக் கொள்கிறான். ஆபத்து வரும் போது கலங்க மாட்டான்” என்றது மூத்த குஞ்சு. 

“நீ தீரன். மேதாவி.பலரில் ஒருவன் தான் உன்னைப் போலத் தைரியமாக இருப்பான்” என்றன தம்பிக் குஞ்சுகள். 

சிரித்த முகத்துடன் அக்கினியை எல்லாம் துதி செய்தன.

“அக்கினியே! எங்களுடைய தாய் போய் விட்டாள். தந்தை எங்களுக்குத் தெரியாது. நாங்கள் முட்டையை விட்டு வெளி வந்த பின் அவரைக் காணவில்லை. புகையை துவஜமாகக் கொண் ண்ட ஆதி தெய்வமே! இன்னும் சிறகு முளைக்காத பறவைக்குஞ்சு களாகிய எங்களுக்கு நீயே கதி. வேறு ஆதரவு யாரும் இல்லை. எங்களை ரக்ஷிப்பாயாக! உன்னைச் சரண் புகுந்தோம்” என்று அக்கினியைப் பிரார்த்தித்து வேதம் ஓதிய பிராமணயிரம் சாரிகளைப் போல் துதி செய்தன. 

மரத்தில் பற்றிய தீயானது பறவைக் குஞ்சுகளைத் தீண்டவில்லை.  காட்டை எல்லாம் தாவி நிர்மூலம் செய்து விட்டு அணைந்தது. அந்தப் பறவைக் குஞ்சுகள் சாகவில்லை. 

நெருப்பு அணைந்த பிறகு தாய்ப் பறவை அவ்விடம் வந்து குஞ்சுகள் க்ஷேமமாகப் பேசிக்கொண்டிருக்கிற அற்புதத்தைக் கண்டது. அவற்றை ஒவ்வொன்றாகத் தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்ந்தது. 

ஆண் பறவையானது தன் புது மனைவி லபிதையிடம் ‘ஐயோ! என் குஞ்சுகள் தீக்கு இரையாயிருக்குமோ!” என்று வருத்தப் பட்டு அடிக்கடி அலறிக்கொண்டிருந்தது. அதற்கு லபிதை என்கிற அந்தப் பெண் பறவை “அப்படியா? உம்முடைய சமாசாரம் எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது ஜரிதை யிடம் போகவேண்டும் என்று உமக்கு ஆசை போலிருக்கு. என் மேல் வெறுப்பு உண்டாகியிருக்கிறது.பொய்யாக ஏன் நெருப்பை யும் குஞ்சுகளையும் காரணமாகச் சொல்லுகிறீர்? நீர் தான் முந் தியே சொல்லியிருக்கிறீரே! ஜரிதையின் குஞ்சுகளை அக்கினி எரிக்காது. உமக்கு அக்கினி தேவன் வரம் தந்திருக்கிறான் என்று சொன்னீரல்லவா? என்னை விட்டுவிட்டு உமக்கு அன்பான ஜரி தையிடம் போக வேண்டுமானால் உண்மையைச் சொல்லிப்போக லாமே! நம்பத்தகாத கெட்ட புருஷர்களை அடைந்து ஏமாற்றப் பட்ட பெண்களில் நானும் ஒருத்தியாகக் காட்டில் சஞ்சரிப் பேன். நீர் போகலாம்” என்றது. 

“நீ எண்ணுவது சரியல்ல” என்றது மந்தபாலப் பறவை? “நான் புத்திர சந்தானத்திற்குத்தான் பறவைப் பிறப்பு எடுத் தேன். குஞ்சுகளைப்பற்றித்தான் எனக்குக் கவலை. போய்ப்பார்த்து வருகிறேன்” என்று புது மனைவிக்குச் சமாதானம் சொல்லி ஜரிதை இருந்த மரத்தண்டை சென்றார். 

ஜரிதை புருஷன் வந்ததைக் கவனிக்கவே இல்லை. குஞ்சுகளை உயிருடன் அடைந்த சந்தோஷத்திலேயே முழுகியிருந்தது. பிறகு புருஷனைப் பார்த்து, “ஏன் வந்தீர்?” என்று அசிரத்தையாகக் கேட்டது. 

“என் குஞ்சுகள் சுகமா! இவற்றில் எது மூத்த புத்திரன்?’ என்று மந்தபாலர் பக்கத்தில் வந்து அன்பாகக் கேட்டார். 

அப்போது ஜரிதை “யார் ஜேஷ்டனானால் அவனால் உமக்கு ஆவது என்ன, இளையவனானால் ஆவது என்ன? ஒரு துணையு மில்லாமல் என்னை விட்டு ட்டு எவளைத் தொட ர்ந்து சென் றீரோ அவளிடம் போய்ச் சேரும். சுகமாக அவளிடம் லாம்” என்றது. 

“புத்திரர்களைப் பெற்ற பின் ஸ்திரீ புருஷனை லக்ஷியம் செய்யாள். து உலக சுபாவம். ஒரு குற்றமும் அறியாத வசிஷ் டரைக் கூட அருந்ததி இவ்வாறுதான் உதாசீனம் செய்தாள்'” என்றார் மந்தபாலர். 

ஜராசந்தன் 

இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர்கள் மிகச் சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள். யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் நடத்தி அரசர்க்கரசன் என்கிற பதவியையும் பெறவேண் மென்று அவனைச் சூழ்ந்தவர்கள் ஆசைப்பட்டார்கள். காலத்திலும் சாம்ராஜ்ய மோகம் ரொம்ப இருந்ததாகக் காண்கிறது. 

இந்த விஷயத்தைப் பற்றி யோசனை செய்வதற்காகக் கிருஷ் ணனுக்குச் சொல்லியனுப்பினான். தருமபுத்திரன் தன்னைப் பார் க்க விரும்புவதாகச் செய்தி வந்ததும் ஜனார்த்தனன் 

துவாரகையிலிருந்து வேகமான குதிரைகளைப் பூட்டிய வாகனம் ஏறிப் புறப்பட்டு இந்திரபிரஸ்தம் வந்து சேர்ந்தான். 

“ராஜசூய யாகம் செய்யும்படியாகச் சிநேகிதர்கள் சொல்லு கிறார்கள். எவன் எல்லா ராஜாக்களாலும் பூஜிக்கப் படுகிறானோ அவனே ராஜசூயம் செய்யவும் அரசர்க்கரசனாகவும் யடைந்தவன். நீர்தான் இதைப் பற்றி எனக்குச் சரியான யோசனை சொல்லும் தன்மை வாய்ந்தவர். மற்றவர்களைப் போல் நீர் வெறும் சிநேகிதத்தால் என்னிடமுள்ள குறைகளைப் பாராமல் பட்சபாதமாகப் பேசமாட்டீர். சொந்த லாபத்திற் கும், கேட்கிறவனுக்குப் பிரியமாக இருக்கும் என்கிற எண்ணம் கொண்டும், உண்மைக்கு மாறாக யோசனை சொல்லுவது மனிதர் களுடைய சுபாவம். நீர் அவ்வாறு செய்யமாட்டீர்”. 

இவ்வாறு யுதிஷ்டிரன் கூற, கிருஷ்ணன் பதில் சொன்னான்; 

“மகத நாட்டு ராஜாவான ஜராசந்தன் மற்ற அரசர்களை யெல்லாம் ஜெயித்துத் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய பராக்கிரமத்தினால் க்ஷத்திரியர்கள் எல்லாரும் அவ னைக் கண்டு பயந்தும் பணிந்தும் நிற்கிறார்கள். பலசாலிகளான சிசுபாலன் முதலியவர்களும் அவனை ஆசிரயித்து வருகிறார்கள். ஜராசந்தன் இருக்கும்வரையில் வேறொருவன் எவ்வாறு ராஜாதி ராஜப் பதவியை அடைய முடியும்? உக்கிரேசனன் மகனான மதி கெட்ட கம்சனைப்பற்றி உனக்குத் தெரியுமல்லவா? அவன் ஜரா சந்தனுக்கு மருமகனும் துணையரசனும் ஆனபின், நானும் என் குலத்தவரும் ஜராசந்தனை எதிர்த்தோம். மூன்று வருஷ காலம் ஓயாமல் அவனுடைய சேனையைத் தாக்கினோம். ே தோல்வி யடை ந்தோம். அவனுடைய பயத்தினால் நாங்கள் வடமதுரையை விட்டு விட்டு மேற்கே துவாரகையில் கோட்டையும் நகரமும் புதிதாகக் கட்டிக் கொண்டு க்ஷேமமாக இருந்து வருகிறோம். நீர் ராஜாதி ராஜப்பட்டம் பெறுவதை துரியோதனன், கர்ணன் முதலி யோர் ஆக்ஷேபிக்காமலிருந்தாலும் ஜராசந்தன் எதிர்ப்பான் யுத்தமின்றி ஒப்ப மாட்டான். எவராலும் தோல்வி என்பதை அறியாத ஜராசந்தன் இருக்கும்வரையில் நீர் ராஜசூயம் நடத்த இயலாது. அவனை எப்படியாவது வதம் செய்து அவனால் சிறை யில் வைக்கப்பட்டிருக்கும் அரசர்களைச் சிறையிலிருந்து மீட்டால் நாம் ராஜசூயம் நடத்தலாம்” என்றான். 

இவ்வாறு கண்ணன் சொன்னதைக் கேட்ட யுதிஷ்டிரன் நீர் சொல்வது சரியே. தத்தம் நாட்டில் சிறப்புடன் வாழும் அரசர்கள் என்னைப் போல் அநேகர் இருக்கிறார்கள் அடைய முடியாத பதவியைப் பற்றி ஒருவன் ஆசைப்படுவதில் பயனில்லை. சம்ராட் பதவியை என்னைப் போன்றவன் விரும்புவது தவறு. கடவுள் படைத்திருக்கும் இந்தப் பூமி மிகப் பெரியது, அளவிற் ந்த செல்வம் கொண்டது. தத்தம் நாட்டில் அரசு புரிந்து கொண்டு – அநேக ராஜாக்கள் திருப்தியாக இருக்க முடியும். ஆசைக்கு அளவில்லை. ஆகையால் நான் இந்த சாம்ராஜ்ய பதவி யோசனையை விட்டு விட்டு, இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாக இருப்பதே நலம். பீமன் முதலானோர் இந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஜராசந்தனைக் கண்டு நீரே பயந் திருக்க நாங்கள் எம்மட்டும்? 

தருமபுத்திரனுடைய அடக்கம் பீமனுக்குப் பிடிக்கவில்லை.

”முயற்சியே அரசர்களுக்கு விதிக்கப்பட்ட சிறப்பான குணம். தம் பலத்தைத் தாம் அறியாதவர்கள் புருஷ ஜென்மம் எடுத்துப் பயனில்லை. திருப்தி யடைந்து சும்மா இருப்பது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. சோம்பலை நீக்கி ராஜநீதி உபாயங்களைத் திருத்தமாக உபயோகப் படுத்துகிறவன் தன்னை விட பலவானான அரசனையும் வென்று விடலாம். முயற்சியும் உபாயமும் பயன் தரும். நான் பெற்றிருக்கும் தேகபலமும் கண்ணனுடைய சாதுரியமும் தனஞ்சயனிடத்திலுள்ள சாமர்த்தியமும் ஒன்று சேர்ந்தால் எதைத் தான் செய்ய முடியாது? நாம் மூவரும் ஒன்று சேர்ந்து புறப்பட்டால் ஜரா சந்தனுடைய பலத்தை அடக்கி விடலாம். நீர் சந்தேகப் படவேண்டாம்” என்று பீமசேனன் சொன்னான். 

ஜராசந்தன் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் ஐய மில்லை. எண்பத்தாறு அரசர்களை அநியாயமாகச் சிறையில் வைத்திருக்கிறான். இன்னும் பதினான்கு அரசர்களைப் பிடித்த பின், நூறு ராஜாக்களையும் ஒரே சமயத்தில் யாகப் பசுக்களாகக் கொன்று விழா நடத்த ஏற்பாடு செய்திருக்கிறான். பீமனும் அருச்சுனனும் ஒப்புக்கொண்டால் நானும் சேர்ந்து மூவருமாய்ப் போய் யுக்தியால் அந்தக் கொடியவனை வதம் செய்து சிறைபட்ட அரசர்களை விடுவிக்கலாம். இந்த யோசனை எனக்கும் சம்மதம் என்றான் கண்ணன். 

யுதிஷ்டிரனுக்கு இந்த ஆலோசனை சரியாகத் தோன்றவில்லை.  சாம்ராஜ்ய பதவி மோகத்தினால் ஏமாந்து போய் என் ரண்டு கண்களைப் போலுள்ள பீமார்ச்சுனர்களை ழக்கும்படி நரிட லாம். இந்த அபாயகரமான காரியத்திற்கு அவர்களை அனுப்ப எனக்குப் பிடிக்க வில்லை. இந்த யோசனையை விட்டு விடுவதே நலம்” என்றான். 

பிறகு தனஞ்சயன் பேசலானான்: 

“புகழ் பெற்ற குலத்தில் பிறந்த நாம் பராக்கிரமச் செயல் களைச் செய்யாமல் வாழ்நாட்களை முடித்துவிட்டு உயிர் நீப்பதில் என்ன பலன்? வேறு எல்லா நற்குணங்களிருந்தும் காரியத் தில் பிரவேசிக்க மனமில்லாத பராக்கிரமமற்ற க்ஷத்திரி வர்களுக்குப் புகழில்லை. வெற்றிக்குக் காரணம் உற்சாகம்தான் செய்ய வேண்டியதை ஊக்கத்துடன் செய்தால் பாக்கியம் அடை யலாம். சாதன பலன்கள் இருந்து ம் ஊக்கம் இல்லாமையால் அந்தச் சாதனங்களை உபயோகிக்காமல் ஒருவன் தோல்வி அடைய லாம். தன் பலத்தைத் தான் அறியாமலிருப்பதும் ஊக்கமில்லா மலிருப்பதுமே பெரும்பாலும் தோல்விகளுக்குக் காரணம். இந் தக் காரியத்துக்கு நாம் தகுதியுள்ளவர்கள். தகுதியில்லை என்று யுதிஷ்டிரன் ஏன் நினைக்கிறார்? விருத்தாப்பியம் அடைந்த பின் நாம் காஷாயம் தரித்து வனத்தில் விரதம் நடத்தலாம். போது குலதருமத்திற்கு யைந்த பராக்கிரமச் செயல்களில் ஈழுபடுவோம்” என்றான். 

இதைக் கேட்ட கண்ணன் மகிழ்ச்சி அடைந்தான். “பரதகுலத்தில் குந்திக்கு மகனாகப் பிறந்த அருச்சுனன் வேறு என்ன யோசனை சொல்லுவான்? மரணம் அனைவருக்கும் நேர்ந்தே தீர வேண்டிய விஷயம். யுத்தம் செய்யாமலிருப்பதினால் யாரும் மரணத்திலிருந்து தப்பினது கிடையாது. நீதி சாஸ்திரங்களின் படி தகுந்த உபாயங்களைப் பிரயோகித்துப் பிறரை வசப்படுத்திக் கொண்டு ஜெயம் பெறுவதே க்ஷத்திரியனுக்கு உரித்தான கடமை” என்றான். 

முடிவில் ஜராசந்தனை வதம் செய்வதே கடமை என்று லோரும் தீர்மானித்து யுதிஷ்டிரனும் ஒப்புக் கொண்டான். 

எதிர்காலத்துக்கும் பொருத்தமான பல விஷயங்கள் பழைய மகாபாரதத்தில் அடங்கியிருக்கின்றன என்பதற்கு இந்தச் சம் வாதம் ஒன்றே போதும். 

ஜராசந்தன் வதம் 

மூன்று அக்ஷெளஹிணி சேனைகளுக்குத் தலைவனும் மிக்க பராக்கிரமசாலி என்று புகழ்பெற்றவனுமான பிருகத்ரதன் என் யவன் மகத நாட்டை ஆண்டான். காசி ராஜனுக்கு இரட்டையாகப் பிறந்த இரண்டு பெண்களை அவன் விவாகம் செய்து கொண்டான். “உங்கள் இருவரில் யாருக்கும் நாள் எந்த விதத்திலும் பட்ச பாதகமாக நடக்க மாட்டேன்” என்று பிருகத்ரதன் தன் இரு மனைவிகளுக்கும் சபதம் செய்து கொடுத்தான். 

பல நாள் காத்தும் பிருகத்ரதன் சந்தானப் பேறு பெறவில்லை. இளமைப் பருவம் தாண்டி முதுமைப் பருவம் அடைந்தான். பிறகு ராஜ்யத்தை மந்திரிகளிடம் விட்டு விட்டு மனைவிகளுடன் வனம் சென்று தவத்தில் ஈடுபட்டான். கௌதம வம்சத்தைச் சேர்ந்த சண்ட கௌசிகர் என்ற முனிவரிடம் ஒரு நாள் சென்று தன் குறையைச் சொல்லிக் கொண்டான். அவர் இவனிடம் கருணை கொண்டு, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். 

பிருகத்ரதன், ‘சுவாமி! ராஜ்யத்தை விட்டுவிட்டுச் சந்ததி இல்லாமல் தபோவனத்துக்கு வந்திருக்கும் பாக்கிய மற்ற எ க்கு என்ன வேண்டுமாயிருக்கிறது?” என்று சொன்னான். 

முனிவர் இந்தச் சொல்லைக் கேட்டு மனமிரங்கி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது மரத்தடியில் இருந்த அவர் மடியில் ஒரு மாங்கனி விழுந்தது. அதை அவர் எடுத்து, “இதைப் பெற்றுக் கொள். என் குறை தீரும்” என்று சொல்லி அரசசனை ஆசீர்வதித்து அனுப்பினார். 

அரசன் அந்தப் பழத்தைத் தன் இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு பங்காகச் செய்து இருவருக்கும் கொடுத்தான். பட்சு பாதம் செய்ய மாட்டேன் என்கிற பிரதிக்ஞையைக் காப்பாற்ற அவ்வாறு செய்தான். அவர்கள் அதை உண்ட பின் சில நாள் கழித்துக் கருப்பம் தரித்தார்கள். காலத்தில் பிரசவமும் ஆயிற்று. ஆனால் இரண்டு மனைவிகளும் மனம் நொந்து முன்னைவிட அதிகமான துயரத்தில் அழுந்தும்படி நேரிட்டது. குழந்தைகளுக்குப் பதில் ஒரு தேகத்தின் இரண்டு கூறாக, ஒரு மனைவி ஒரு கூறும், மற்றொரு மனைவி மற்றொரு கூறும் மாம்பழத்தின் இரண்டு கூறுகளைப்போல் பெற்றார்கள். ஒரு கை, ஒரு கால், அரை முகம், ஒரு கண், ஒரு காது இவ்வாறு பயங்கரமாக உயிருள்ள இரண்டு உடற் கூறுகளை இருவரும் பெற்றார்கள். 

துக்கத்தினால் பீடிக்கப்பட்டு, அமங்கலமான பிண்டங்களைத் துணியில் மூடி எங்கேயாவது கொண்டு போய் எறிந்து விடும்படி தாதிகளிடம் சொன்னார்கள். அவ்வாறே அந்த இரண்டு மாம்ச பிண்டங்களையும் தாதிகள் கொண்டுபோய்த் தெருக் குப்பையில் எறிந்து விட்டார்கள். 

மாமிசம் தின்னும் ஓர் அரக்கி அந்த இடத்தில் வந்தாள் அவள் அந்தப் பிண்டங்களைப் பார்த்துப் பசியைத் தீர்த்துக்கொள் ளலாம் என்று மகிழ்ச்சி யடைந்து இரண்டு துண்டங்களையும் ஒன்றாகத்-சேர்த்து எடுக்கப் போனாள். உடனே இரண்டும் ஒன்றுகூடி உயிர் கொண்டு ஒரு சிசுவாயிற்று. அரக்கி இதைக் கண்டதும் 
இக்குழந்தையைக் கொல்லத்தகாது என்று எண்ணி, அழகிய மானி உருவம் தரித்துக்கொண்டு அரசனிடம் போய், குழந்தை’ என்று சொல்லிக் கொடுத்தாள். 

அரசன் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டு அதை மனைவியிடம் ஒப்பித்தான். 

இந்தக் குழந்தையே ஜராசந்தன். முனிவர் வரத்தினால் ஜராசந்தன் அளவு கடந்த உடல் வன்மை பெற்று வளர்ந்தான். ஆனால் அவனுடைய உடல் இரண்டு கூறுகளாகப் பிறந்து ஒன்று கூடிய உடலானபடியால், உருவாகப் பிரியும் தன்மையும் பெற்றிருந்தது. 

இந்த வினோதக்கதையில் ஒரு தத்துவத்தைப் புராணம்செய் தவர் அடக்கி யிருக்கிறார். பிரிந்த பின் மறுபடி கூடினாலும் பலம் குறைந்தே இருக்கும் என்பது ஜராசந்த ஜன்மக் கதையில் காட்ட படுகிறது. 

ஜராசந்தனுடைய துணையாளர்களான ஹம்சன், இடிம் பகன், கம்சன் இவர்கள் இறந்து விட்டார்கள். ஜராசந்தனை வதம் செய்வதற்கு இதுதான் சமயம், சேனைகளையும் படைகளை யும் கொண்டு அவனை எதிர்த்துப் போர் செய்யப் பார்ப் பதில் பயனில்லை. அவனைச் தனிச் சண்டையில் இழுத்துத்தான் வெல்ல வேண்டும்” என்று கண்ணன் நிச்சயித்தான். 

அக்காலத்து வழக்கத்தின்படி பகைவன் போருக்கு அழைத் தால் க்ஷத்திரியன் ஒப்புக் கொண்டே தீரவேண்டும். மல்யுத்த மானாலும் அல்லது வில்லும் தேரும் சாதனமாகக் கொண்ட யுத்த மானாலும் க்ஷத்திரிய வழக்கப்படி பகைவன் கோரியபடி வீரன் ஒப்புக் கொண்டு யுத்தம் நடத்த வேண்டும். இந்த வழக்கத்தை உத்தேசித்துக் கிருஷ்ணனும் பாண்டவர்களும் சதி செய்தார்கள். 

தருப்பையும் மரவுரியுமாக விரதம் பூண்டவர்களுடைய வேஷம் கொண்டு நீர்வளமும் அழகிய கிராமங்களும் நசுரங்களும் நிறைந்த மகத தேசம் போய்ச் சேர்ந்தார்கள். ஜராசந்தனுடைய ராஜதானியை அடைந்தார்கள். 

ஜராசந்தன் அபசகுனங்களைக் கண்டான். அதற்காகப் புரோ கிதர்களைக் கொண்டு சாந்தி செய்வித்து அரசனும் உபவாச விர தமிருந்தான். ஆயுதமில்லாமல் கிருஷ்ணனும் பீமார்ச்சுனர்க ளும் அரண்மனைக்குள் பிரவேசித்தார்கள். ஜராசந்தன் யாரோ உயர்குலத்து அதிதிகள் வந்தார்கள் என்று எதிர்கொண்டழைத்து வழக்கப்படி மரியாதைசெய்து “சுவாகதம்” என்றான்.பேசி னால் பொய் சொல்ல வேண்டி நேரிடும் என்று அதர்மத்துக்குப் பயந்து பீமனும் அர்ச்சுனனும் தங்கள் எண்ணத்தை வெளிப் படுத்தாமல் மெளனமாக இருந்தார்கள். 

கிருஷ்ணன், அரசனுக்குச் சமாதானமாக, “இவர்கள் இரு வரும் இப்போது ஒரு விரதம் எடுத்துக்கொண்டிருக்கிற காரண த்தால் பேசலில்லை. நடு இரவு ஆன பின்தான் இவர்கள் பேச முடியும்” என்றான். 

ஜராசந்தன் அவர்களைத் தன் யாகசாலையில் இருக்கச் செய்து தன் மாளிகைக்குச் சென்றான். 

பிறகு ஜராசந்தன் நடு இரவில் வந்து மறுபடியும் அவர்க ளைக் கண்டான், எந்த வேளையானாலும் உயர் குலத்தைச் சேர்த்ஸநாதகர்களை அவர்கள் சௌகரியப்படி கண்டு பேசுவது ஜரா சந்தனுடைய வழக்கம். ஆகையால் நடு நிசியில் வந்து காகக் காத்திருந்த அதிதிகளைக் கண்டு விசாரிப்பதற்காக வந்தான, அவர்களுடைய நடத்தையைக் கண்டு ஜராசந்தனுக்குச் சந்தே கம் தோன்றிற்று. அதன்பின் கைகளில் வில்லின் நாண் உரைந்த காய்ப்புகளையும் மற்ற க்ஷத்திரியச் சின்னங்களையும் கண்டு கொண்டான். 

உண்மையைச் சொல்லுங்கள்’ என்று ஜராசந்தன் கேட்க அவர்களும் “நாங்கள் உன் சத்துருக்கள். உடனே யுத்தத்துக்கு ஆயத்தமாவாய்! எங்கள் மூவரில் யாருடன் வேண்டுமானாலும் உன் இஷ்டப்படி தீர்மானித்துச் சண்டை செய்யலாம்’ என்றார்கள். 

வந்தவர்கள் மூவரும் யார் என்று தெரிந்துக்கொண்ட பின் ஜராசந்தன், ”கிருஷ்ணா! நீ இடையர் குலத்தில் பிறந்தவன், அரு சுனனோ சிறுவனாக இருக்கி றா ன். பீமன் தேக பலத்தில் புகழ் பெற்றவன். ஆகையால் அவனுடன் யுத்தம் கோருகிறேன்” என்று சொல்லி, உடனே பீமனுடன் கைகளையே ஆயுதமாகக் கொண்ட மல் யுத்தம் செய்யும்படி அழைத்தான். பீமன் ஆயுத மின்றி நின்றபடியால் ஜராசந்தனும் அவ்வாறே ஆயுதங்கள் ஏது மின்றி மல் யுத்தம் செய்யத் தீர்மானித்து அழைத்தான். 


பீமனும் ஜராசந்தனும் ஒருவரை ஒருவர் எட்டிப் பிடித் தும் தாக்கியும் பதின்மூன்று நாட்கள் ஆகாரமாவது ஓய்வாவது இல்லாமல் இரவும் பகலும் சண்டை செய்தார்கள். பதினான்காவது நாள் ஜராசந்தன் களைப்புற்றுத் தயங்கினான். 

“இதுதான் இவனை வதம் செய்ய வேண்டிய சமயம்” என்று கிருஷ்ணன் பீமனைத் தூண்டினான். உடனே பீமன் ஜராசந்தனைத் தூக்கி நூறு சுழல் சுற்றிக் கீழே போட்டுக் கால்களைப் பிடித்து உடலை இரண்டாகக் கிழித்துப் போட்டுக் கர்ஜித்தான். 

கிழிபட்ட இரண்டு பாகங்கள் உடனே தாமாக ஒன்று சேர் ந்து கொண்டன. ஜராசந்தன் மறுபடியும் உயிருடன் எழுந்து பீமனுடன் யுத்தத்தைத் துவக்கினான். 

இதைக் கண்டு பீமன் ஏக்கமடைந்தான். இன்ன செய்வது என்று தோன்றவில்லை. அச்சமயம் கிருஷ்ணன் ஒரு புல்லை எடு த்து இரண்டாகக் கிழித்துக் கால்மாற்றிப் போட்டுச் சமிக்ஞை யாகக் காட்டினான். பீமசேனன் உடனே இதன் பொருளை அறிந்து கொண்டு மறுபடியும் ஜராசந்தனை இரண்டாகக் கிழித்து அப் படியே போடாமல் கால்மாற்றிப் போட்டு எறிந்தான். 

சிறைப்பட்ட அரசர்களை விடுவித்து ஜராசந்தனுடையகுமா ரன் சகதேவனுக்கு இராஜ்யாபிஷேகம் செய்து விட்டுக் கிருஷ்ணனும் பீமார்ச்சுனர்களும் ஊர் திரும்பினார்கள். 

அதன்பின் பாண்டவர்கள் எதிர்ப்பவர்கள் யாரும் இல்லா மல் திக்விஜயம் செய்து ராஜசூய யாகத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். யுதிஷ்டிரன் ராஜாதிராஜன் என்கிற பதவியை அடைந்தான். அப்போது கூடிய ராஜசபையில் தான் அவமரியாதையாக நடந்து காண்ட சிசுபாலன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். 

முதல் தாம்பூலம் 

சபையில் நடக்கும் நடவடிக்கை தங்களுக்குப் பிடிக்கவில் என்பதைக் காட்டுவதற்காகச் சிலர் சேர்ந்தாற்போல் எழுந்து வெளியே போகும் வழக்கம் ஜனநாயகத்தில் முளைத்த நவீனக் குறும்பு அல்ல பழைய நாட்களிலும் இந்த ‘வாக்-அவுட்’ முறை கையாளப்பட்டது என்பது மகாபாரதம் படித்தால் தெரிய வரும். 

பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில். ராஜதானி ஏற்படு த்திப் பெரிய ராஜசூய யாகம் செய்தார்கள். பாரததேசத்தில் அக் காலத்தில் அரசர்கள் பலர் சுதந்திர ஆட்சி புரிந்து வந்தார்கள். ஒரு தருமம், ஒரு பண்பாட்டையே எல்லாரும் பின்பற்றி வந்த போதிலும் ஒரு அரசனுடைய தேசத்திலும் ஆட்சியிலும் மற்றொரு வன் பிரவேசிக்கமாட்டான். ஆனால் அவ்வப்போது யாராவது ஒரு பராக்கிரமசாலியான அரசன் நாடு முழுவதும் தூது அனுப்பி ராஜாதி ராஜனாக இருக்க மற்ற அரசர்களிடம் அனுமதி பெறு வான். அநேகமாக யுத்தமும் கலவரமுமில்லாமலே முடியும். அனு மதிபெற்ற பிறகு ஒரு பெரிய ராஜசூயயாகம் செய்வான். எல்லா ராஜாக்களு ம் யாகத்திற்கு வந்து மகாராஜனுடைய பேராட் யை ஒப்புக் கொண்டு ஊர் திரும்புவார்கள். இந்த வழக்கப் படி ஜராசந்தன் கொல்லப்பட்ட பி பிறகு பாண்டவர்கள் ராஜா கள் எல்லாரையும் கூப்பிட்டு ராஜசூய யாகம் நடத்தினார்கள். 


அழைப்புக் கிணங்கி சபைக்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் சமயம் வந்தது. யாருக்கு முதல் மரியாதை என்கிற கேள்வி பிறந்தது. தரும புத்திரன் விருத்தரான பீஷ்மாச்சாரி யாரைக் கேட்டான். கிழவனார் துவாரகாபுரி அரசனான கண்ண னுக்கு அக்கிர பூசை செய்ய வேண்டும் என்று அபிப்பிராயம் கொடுத்தார். 

இதை ஒப்புக்கொண்டு யுதிஷ்டிரன் ஏவியபடி தம்பி சகா தேவன் பசு அர்க்கியம். மதுவர்க்கம் இவைகளை முறைப்படி ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் சமர்ப்பித்தான். 

இவ்வாறு வாசுதேவனைக் கவுரவித்தது சேதி தேசத்து ராஜா வான சிசுபாலனுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. அவன் ஒரு பெருஞ் சிரிப்புச் சிரித்துவிட்டு ‘இது வியப்புக்குரிய அநியாய் மாசு இருக்கிறது! னால், இதில் வியப்பு என்ன? ஆலோசனை கேட்டவன் முறை கெட்ட முறையில் பிறந்தவனல்லவா! [குந்தி தேவியின் புத்திரர்கள் பாண்டு ராஜாவின் மக்களல்லவென்ம தைச்சொல்லி இகழ்ச்சி செய்கிறான்.) ஆலோசனை சொன்னவலே எப்போதும் தாழ்ந்த இடத்தையே தேடி ஓடும் தாயின் வயிற் றில் தோன்றியவன். [பீஷ்மனுடைய தாய் கங்காதேவி. நதி மேட் டிலிருந்து தாழ்ந்த இடத்தைத் தேடி ஓடும் அல்லவா?’ வைத்து ஏளனம் செய்கிறான்.) அக்கிர பூஜை செய்த சகாதே னும் ஒழுங்கு பிறழ்ந்த பிறப்புடையன்தானே? மரியாதைனமு அங்கீகரிக்கிறவனோ மாடு மேய்க்கிறவர்கள் குலத்தில் வளர்ந்த மூடன். இந்த முறை தவறிய நடவடிக்கையைப் பார்த்துக் கொண் டிருக்கும் சபையோர் ஊமைகள். யோக்கியர்களுக்கு ங்கே இடம் இல்லை” என்று சொன்னான்; பையில் – சிவர் கோபத்துடன் சிசுபாலனுடன் சேர்ந்து சிரித்தார்கள். அதனால் உற்சாக மடைந்து அவன் மறுபடி யுதிஷ்டிரனைப் பார்த்துச் சொன்னான். சபையில் எத்தனையோ அரசர்கள் இருக்க நீ இந்தக் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்தாயே! ஒருவனுக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்யாமலிருப்பதும் செய்ய வேண்டியதற்கு மேல் அதிகமாக ஒருவனுக்குச் செய்வதும் இரண்டும் பெருங் குற்றமல்லவா? ராஜாதி ராஜனாக விரும்புகிற உனக்கு இது தெரியாமல் போயிற்றே!” 

கோபாவேசமாக இன்னும் சொல்லிக்கொண்டே போனான்: “சபையில் எவ்வளவு மகான்கள் இருக்கிறார்கள்? எத்தனை ராஜா க்கள் வீற்றிருக்கிறார்கள்? இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு அரசர்களுக்குரிய மரியாதையை அரசனல்லாத இந்த மாடு மேய் ப்பவனுக்குக் கொடுத்தாயே! கண்ணன் தகப்பனார் வசுதேவன். அவன் ராஜா உக்கிரசேன்னுடைய காரியஸ்தன். ஆகையால் கண்ணன் ராஜகுலத்தில் பிறந்த அரச குமாரனல்ல என்பது என் டைய ஆட்சேபணை. உனக்குத் தேவகியின் புத்திரனிடம் பட் சபாதம் இருந்தால் அதைக் காட்டுவதற்கு இதுதானா சமயம்? பாண்டு வம்சத்தாருக்கு இது தகாது! பாண்டு புத்திரர்களே, நீங்கள் சிறுவர்கள். ராஜசபை நடத்தும் முறை உங்களுக்குத் தெரியவில்லை. இந்தக் கிழவனான பீஷ்மன் தவறான யோசனை சொல்லி உங்களைப் பெரும் குற்றத்தில் தள்ளினான். கிருஷ்ணன் ஒரு தேசத்து அரசனல்ல. ‘Con, யுதிஷ்டிரனே! ராஜாக் களுடை சபையில் அவனுக்கு எவ்வாறு நீ அக்கிர பூஜை தரலாம்? வயதிலாவது முதிர்ந்தவனா? அதுவுமில்லை. அவனுடைய தகப்பனார் வசுதேவன் இருக்க மகனுக்கு மரியாதை பெ பற அதிகாரம் ஏது? அல்லது வன் உ ஆசிரியனா? ஆசிரியரான துரோணர் இங்கே சபையில் இருக் கிறாரே! ஒருவேளை இந்தக் கிருஷ்ணன் யாகம் செய்வதில் நிபுணன் என்று ராஜசூய யாகத்தில் இவனுக்கு அக்கிர பூஜை தந்தாயோ? துவைபாயன வியாசர் சபையில் இருக்கிறாரே, அவ ரல்லவோ யாகங்கள் நடத்தும் பெரியோர்களில் முதல்வர்? இந்த முதல் மரியாதையை உன் குலத்தில் விருத்தாப்யமடைந்த பீஷ்மனுக்கே செய்திருந்தாலும் ஒருவாறு சமாதானமாகலாம். 

“உங்கள் குலகுரு கிருபாசாரியார் சபையில் இருக்க இந்த மாட்டுக்காரனுக்கா அக்கிர பூஜை செய்வது? வீரனும் சர்வ சாஸ் தித விசாரதருமான அசுவத்தாமர் சபையிலிருக்க அவரை மற ந்து, நீ எப்படி அக்கிர பூஜைக்குக் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தாய்? 

“அரசர்க்கரசனான துரியோதனன் இருக்கிறானே! பரசுராம்ரின் சீடன் கர்ணன் இருக்கிறானே? அவனல்லவோ ஜராசந்தனைத் தனியாக எதிர்த்து வெற்றியும் புகழும் பெற்ற வீரன்? அவனை விட்டுவிட்டுச் சபையில் முதல் மரியாதைக்கு இந்தக் கிருஷ்ண னைத் தேர்ந்தெடுத்தாயே! வயதிலும் விருத்தனல்ல. ஒரு தேசத்து அரசனுமல்ல, யாகப் பயற்சி பெற்றவனுமல்ல, வெறும் பட்ச பாதத்தினால் இவனுக்கு அக்கிர பூஜை தந்தாய். அரசர் களையும் பெரியோர்களையும் இப்படி அவமதிக்கவே நீ எல்லாரை யும் அழைத்துச் சபை கூட்டினாயா? 

”அரசர்களே! குந்தி புத்திரன் யுதிஷ்டிரனை நாம் ராஜாதி ராஜனாக ஒப்புக்கொண்டது அவன் பராக்கிரமத்தைக் கண்டு பயந்து போயல்ல. அவனுடைய தயவைச் சம்பாதித்து லாபமடையவுமல்ல, அவன் விரோதத்தைக்கண்டு பயந்து மல்ல& தருமமே பிரதானமாகக் கொண்டு ராஜ்யபாலனம் செய் கிறேன் என்று அவன் சொன்னதைக் கேட்டு நாம் அவனைக் கவுரவித்தோம். இப்போது நம்மையெல்லாம் அவமதித்து விட் டான். தர்மாத்மா என்கிற புகழ்ப்பெயர் இனி இவனுக்குத் தகாது. ஜராசந்தனை அநியாய முறையில் கொன்ற துராத்மாவு க்கு அக்கிர பூஜை செய்த பிறகு தர்மாத்மா என்கிற பெயர் யுதி ஷ்டிரனுக்கு எப்படித் தகும்? கயவன் என்றுதான் இனி அவனைச் சொல்ல வேண்டும். 

“ஏ கிருஷ்ணனே! இந்தப் பாண்டவர்கள்தான் சுயநலத் தைக் கருதி முறையைப் புறக்கணித்து உனக்கு மரியாதை செய் கிறார்கள். ஆனால் நீ எப்படி ஒப்புக்கொள்ளலாம்? உனக்கு முறை தெரியாமல் போயிற்றா? தரையில் சிந்திய அவியுணவை யாரும் கவனிக்காமலிருந்தால் ஒரு நாய் தின்று விடுவதுபோல் உனக்குப் பொருத்தமாகாத மரியாதையை நீ ஒப்புக்கொண்டாய். உன்னைப் பரிகசிக்கத்தான் இந்த விளையாட்டை நடத்தியிருக்கிறார்கள் என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். உண்மையில் இந்த நாட கம் உன்னைக் கௌரவிக்கவென்று நடத்தப்பட்டதல்ல. இது உனக்குத் தெரியவில்லை! கண்ணில்லாத குருடனுக்குச் சௌந்த ரியமான பொருளைக் காட்டுவதுபோலும், கிலீபனுக்கு விவாகம் செய்து கொடுப்பது போலும், ராஜ்ய மில்லாத உனக்கு அரசர் க்குரிய இந்த மரியாதையைச் செய்து பரிகசிக்கிறார்கள், 

ராஜாதி ராஜனாக விரும்பும் யுதிஷ்டிரனுடைய உண்மைப் பான்மையைப்போது கண்டோம். பீஷ்மருடைய உண்மைப் பான்மையும் வெளியாயிற்று. வாசுதேவன் எத்தகையோன் என்பதும் கண்டு கொண்டோம். எல்லாம் ஒரே அழகு!” 

இவ்வாறு சிசுபாலன் கடுமையான சொற்பொழிவு நிகழ்த் திவிட்டு ஆசனத்திலிருந்து எழுந்து மற்ற ராஜாக்களைப் பார்த்து வாருங்கள் வெளியே என்று சொல்லி அவர்களையும் கூட்டிக் கொண்டு சபையிலிருந்து வெளியே சென்றான். 

யுதிஷ்டிரன் வெளியே போனவர்களைப் பின்தொடர்ந்து ஓடினான். ஓடி அவர்களைச் சமாதானம் செய்து மதுரமாகவும் சாந்தமாகவும் பேசினான். ஆனால் அவனுடைய முயற்சி பயன்பெறவில்லை. 

சமாதானம் ஆகவில்லை.சிசுபாலனுடைய அகம்பாவம் அதி கரித்துக்கொண்டே போயிற்று. பிறகு கண்ணனுக்கும் சிசுபால னுக்கும் பெரும்போர் நடந்தது. துஷ்டனான சிசுபாலன் கண் ணனால் வதம் செய்யப்பட்டான். 

ராஜசூயம் நடந்து யுதிஷ்டிரன் ராஜாதி ராஜ பதவியைப் பெற்றான்; 

சகுனியின் யோசனை 

இந்திரப்பிரஸ்த நகரத்தில் பாண்டவர்கள் நடத்திய ராஜ சூய யாகம். முடிந்தது. வந்திருந்த அரசர்களும் மற்றப் பெரி யோர்களும் விடை பெற்றுக்கொண்டு திரும்பினார்கள். வியாச ரும் அரசனிடம் சொல்லிப்போக வந்தார். தரும புத்திரன் எழு ந்து முனிவருக்கு ஆசனம் அளித்துப் பூசித்துப் பக்கத்தில் உட் கார்ந்தான். ”குந்தி புத்திரனே! பெறுதற்கறிய சாம்ராஜ்ய பதவியை அடைந்தாய். கௌரவ குலம் உன்னா ல் பெருமை அடைந்தது.நான் போவதற்கு விடை கொடுப்பாயாக” என்றார் முனிவர். 

குலத்துக்குப் பிதாமகரு ம் குருவுமான வியாசரின் காலைத் தொட்டு யுதிஷ்டிரன், “குருவே! என் சந்தேகத்தைத் தீர்க்கக் கூடியவர் நீங்கள்தான். மிகவும் கொடிய உற்பாதங்களைக் கண்டதாகப் பெரியோர்கள் சொல்லுகிறார்கள். அவற்றின் பயன் சிசுபாலனுடைய மரணத்தினால் தீர்ந்து போயிற்றா அல்லது இன்னும் கவலைக்கிட முண்டா?” என்று கேட்டான். 

தரும புத்திரனுடைய கேள்விக்கு வியாசபகவான் சொன்னார். 

“அப்பனே! பதின்மூன்று வருஷகாலம் கஷ்டங்கள் நேரும்? க்ஷத்திரிய குலம் அழியப் போவதைக் காட்ட இந்த உற்பாதங் கள் தோன்றின. சிசுபாலனுடைய வதத்தோடு இது முடியவில்லை. இன்னும் பெரிய சம்பவங்களும் நடக்க வேண்டியிருக்கிறது. அரசர்கள் நூற்றுக்கணக்காக மாள்வார்கள். அந்த நாசத்திற்கு நீ காரணமாவாய். உன் பங்காளிகளுடன் நீயும் உன் சகோதரர்க ளும் பகைமை கொண்டு க்ஷத்திரிய வம்சத்திற்கே நாசம் தரும் படியான மகாயுத்தம் உண்டாகும். காலத்தின் பயனாக வரும் விதியை யாரும் விலக்க முடியாது. மனங்கலங்காமல் தை ரி மாக இருப்பாயாக. நான் போய் வருகிறேன். புலன்களை அட் க்கி நிலை திரியாமல் ஜாக்கிரதையாக இருந்து கொண்டு ராஜ்ய யாலனம் செய்வாயாக” என்று ஆசீர்வதித்தார். 

வியாசர் சென்ற பிறகு கவலைக் கடலில் மூழ்கிய யுதிஷ்டி ரன் தன் சகோ தரர்களிடம் விஷயத்தைச் சொல்லி, வீரர்களே! வியாசர் சொன்ன சொல்லைக் கேட்டு எனக்கு வாழ்க்கையில் வெறு ப்பு உண்டாகி விட்ட து. அரசர்களுடைய அழிவிற்கு நான் கார ணமாவேன் என்று அறிந்தபின் நான் உயிர் வைத்துக் கொண்டி ருப்பதில் என்ன பயன்’ என்றான். 

இதைக் கேட்டு அருச்சுனன் சொன்னான் 

அரசராகிய நீர் இவ்வாறு மனத்தைக் கலவரப்படுத்தி கொள்ளக் கூடாது. விஷயங்களை ஆராய்ந்து அந்தந்தச் சமயத் தில் எது கடமையோ அதைச் செய்யவேண்டும். என்றான். 

யுதிஷ்டிரன், சகோதரர்களே, ஈசுவரன் நம்மைக் காப் பானாக. கலக முண்டாகாம லிருப்பதற்காக நான் பிரதிக்ஞை செய்திறேன். இன்று முதல் பதின்மூன்று வருஷ காலம் என் சகோதர்களையாவது மற்றக் குலத்தோரையாவது எந்தச் சமயத்திலும் கடிந்து பேசமாட்டேன் குலத்கோர் விருப்பத்தின்படி எப்போதும் நடந்து கொள்வேன். மன் வேறுபாட்டினால் தான் உலகத்தில் கலகம் உண்டாகிறது. சண்டைகளுக்கு காரணமாகிய கோபத்தைத் தடுத்துவிட்டு துரியோனாதியர்களு டைய பேச்சைத் தடுக்காமல் அவர்களுடைய விருப்பப்படியே எப்போதும் நடந்து கொள்வேன். வியாசர் எச்சரிக்கை செய் கோபத்துக்கு இடங் கொடுக்காமலிருப்பேன்” என்றான். அதைக் கேட்ட சகோதரர்களும் கலகத்துக்கு நாம் ஒரு போதும் கார ணமாதக் கூடாது. நீர் சொல்வது சரியே” என்றார்கள். 

துரியோதனாதியர் சூதாட்டத்திற்கு அழைத்தபோது மாட் டேன் என்று சொல்லாமல் ஒப்புக் கொள்வதற்கு இந்தப் பிரதி க்ஞையே முக்கியமான காரணம். கலகம் வரும் என்று பயந்து அதற்கு இடம் கொடுக்காமலிருப்பதற்காக யுதிஷ்டிரர் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையே பிறகு கலகத்துக்கு க் காரணமாயிற்று. அழைப்பை மறுக்கப் பயந்து சூதாட்டம் ஆடினதின் பயனாகத் தீராத பெருங் கோபமும் பிறகு மகாயுத்தமும் குல நாசமும் உண்டாயின. 

மனிதனுடைய சாதுர்யமும் சங்கல்பங்களும் பிரயத்தன் களும் எண்ணிய நோக்கத்திற்கு நேர் விரோதமான முடிவுக்கு போய்ச் சேரும் என்பதற்குத் தருமபுத்திரனுடைய இந்தப் பிரதி க்ஞையே உலகப் பிரசித்தமான திருஷ்டாந்தமாகும். 


கலகம் வருமே என்று தருமபுத்திரன் இந்திரப் பிரஸ்தத்தில் கிட க்க துரியோதனன் பாண்டவ ராஜதானியில் ராஜசூய யாகம் நடந்த போது தான் கண்ட ஐச்வரியத்தை நினைத்து பொறாமை என்கிற எரியும் நெருப்பில் வீழ்ந்து தவித்துக் கொண் டிருந்தான். என்றும் பார்த்திராத செல்வத்தையும் கண் ணைக் கவர்ந்து மோசம் செய்யும்படியான படிகக் கதவுகளையும் சிற்ப வேலைகளையும் யுதிஷ்டிரனுடைய சபா மண்ட பத்தில் துரி யோதனன் கண்டான். பல தேசத்து அரசர்கள் பாண்டவர் களுக்குச் சிநேகிதர்களாயிருப்பதையும் பார்த்தான். திருதாஷ் டிரன் மகனுக்குத் தாங்க முடியாத துயரம் உண்டாயிற்று. பாண் டவர்களுடைய. ஐஸ்வர்ய தசையை எண்ணி யெண்ணி வருந்திக் கொண்டிருந்த துரியோ தனனுக்குத் தன் பக்கத்தில் சகுனி  நின்று பேசுவது கூடத் தெரியவில்லை. 

“ஏன் பருமூச்சு விடுகிறாய்? ஏன் துக்கம் உன்னை வாட்டுகிறது ”  என்று சகுனி கேட்டான். 

”சகோதரர்களால் சூழப்பட்டு யுதிஷ்டிரன் இந்திரனைப் போல் அரசு புரிகிறான். குழுமியிருந்த அரசர்களுக்கு எதிரில் சிசுபாலன் வதஞ் செய்யப்பட்டான். அதற்குப் பழி வாங்க எந்த க்ஷத்திரியனும் முன்வரவில்லை. பாண்டவர்களைக் கண்டு பயந்து நடுங்கி ஒன்றுஞ் செய்யாமல் சும்மா நின்றனர். ரத்தினங்களையும் தனங்களையும் ராஜகுலத்தவர் கேவலம் வியாபாரம் செய் க்கும் வைசியர்களைப் போல் அடங்கி ஒடுங்கி யுதிஷ்டிரனுக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இதையெல்லாம் பார்த்த பின் நான் எவ்வாறு வருத்தப்படாமலிருக்க முடியும்? நான் உயிருந்து என்ன” பயன்?’ என்றான். 

“சகுனி, துரியோதனா! பாண்டவர்கள் உன் சகோதரர்கள் அல்லவா?அவர்களுடைய சம்பத்தைப் பார்த்துப் பொறுமைபடத் தகாது. தங்களுக்கு நியாயமாகக் கிடைத்த பாகத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய அதிருஷ்டத்தி னால் அவர்கள் பாக்கியம் பெற்று மேன்மை அடைந்திருக்கிறார் கள். பிறருக்கு எவ்விதத் துரோகமும் செய்யாமல் தங்கள் பாக த்தை வைத்துக் கொண்டு தங்கள் சக்தியின் பயனாக அவர்கள் அ பிவிருத்தி அடைந்திருப்பதைப் பார்த்து நீ ஏன் பொறாமைப்படு கிறாய்? அவர்களுடைய பலமும் சந்தோஷமும் உனக்கு எவ்வாறு குறை செய்யும்? உன்னுடைய சகோ தரர்களும் பந்துக்களும் உன் பேச்சுக்கு அடங்கி நிற்கிறார்கள். துரோணரும் அசுவத்தாம் ரும் கர்ணனும் உன்பட்சத்தில் இருக்கிறார்கள். நீ ஏன் துக்கப் பட வேண்டும்? பீஷ்மரும் கிருபரும் ஜயத்ரதனும் சோமதத்த னும் நானும் துணையாக இருக்க நீ பூமி முழுவதுமே ஜயிக்கலாம். வருத்தப்படாதே” என்றான். 

இதைக் கேட்ட துரியோதனன், ”சகுனியே! இவ்வளவு துணை வர்கள் இருப்பாராயின் யுத்தம் செய்து இந்திரப்ரஸ்தத்திலிரு ந்து பாண்டவர்களை நாம் துரத்த வேண்டும்” என்றான். 

“வேண்டாம். அது அபாயகரமான வேலை. யுத்த மின்றி எந்த உபாயத்தினால் யுதிஷ்டிரனை எளிதில் வெல்லலாமோ அது எனக்குத் தெரியும்” என்றான் சகுனி. 

துரியோதனன் கண்களில் பிரகாசம் தேரன்றிற்று. ”மாமா! யாருடைய உயிரும் சேதப்படாமல் பாண்டவர்களை ஜயிக்க முடி யுமா? அதற்கு எதாவது வழியுண்டா?” என்று மிக்க ஆவலோடு துரியோதனன் சகுனியைக் கேட்டான். 

“துரியோதனா! யுதிஷ்டிரன் பந்தய ஆட்டத்தில் ஆசையுள் ளவன். அவனுக்கு ஆடத் தெரியாது. நாம் அழைத்தால் க்ஷத்தி ரிய குலாசாரத்தின்படி அவன் கட்டாயம் ஒப்புக்கொள்வான். நான் ஆட்டத்தில் தேர்ந்தவன். உனக்காக ஆடுவேன். அவனு டைய ராஜ்யத்தையும், ஐச்வர்யத்தையும் உனக்காக நான் அவ னிடமிருந்து யுத்தமின்றிப் பறித்துவிட முடியும்” என்றான். 

ஆட்டத்திற்கு அழைப்பு 

துரியோதனனும் சகுனியும் திருதராஷ்டிரனிடம் சென்றார் கள். சகுனி முதலில் பேச ஆரம்பித்தான்: ”அரசனே, துரியோத னன் துயரத்தினால் இளைத்து இரத்தம் இழந்து வெளுத்துப் போ யிருக்கிறான். தாங்க முடியாத அவனுடைய துக்கத்தை நீர் விசா ரிக்கவேயில்லை. ஏன் அவனைப்பற்றிக் கவலையில்லாமலிருக்கிறீர்?” என்றான். 

மகனிடத்தில் அளவு கடந்த அன்பு கொண்ட திருதராஷ் டிரன் துரியோதனனைக் கட்டித் தழுவி “நீ துயரப் படுவதற்குக் காரணம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே! எல்லா ஐஸ்வரி யமும் பெற்றிருக்கிறாய். உலகமெல்லாம் உன் சொல்லுக்குக் கட் டுப்பட்டிருக்கிறது. எல்லாவித சுகங்களும் தேவர்களுக்கு இரும் யது போல் உனக்கு இருக்க ஏன் துயரப்படுகிறாய்? வேதமும் அஸ் திர வித்தைகளும் சாஸ்திரங்களும் பூர்ணமாய் கிருபாசாரியரி டமும் பலராமரிடமும், துரோணரிடமும் படித்திருக்கிறாய். என க்கு மூத்த மகனாய் ராஜ்ய லக்ஷ்மியை அடைந்திருக்கிறாய். உன் சனத்திற்கு என்ன காரணம்? சொல்” என்றான். 

துரியோதனன். “தந்தையே! அற்ப மனிதனைப்போல் உண் கிறேன், உடுக்கிறேன், அவமானத்தையும் பொறுத்துக் கொண் டிருக்கிறேன். இது என்ன வாழ்க்கை!” என்று ஆரம்பித்துத் தன் துயரத்தை விவரமாகத் தெரிவித்தான். பாண்டவர்களுடைய நகரத்தில் தான் பார்த்த செல்வத்தை எடுத்துச் சொல்லித் தன் பொறாமையைத் தகப்பனுக்குத் தெரியப்படுத்தி, “உள்ளதுபோது மென்றிருப்பது க்ஷத்திரி தருமம் அல்ல, பயமும் தயையும் அரசர்களுடைய கெளரவத்தைத் தாழ்த்தி விடுகின்றன. யுதிஷ் டிரனிடமுள்ள ராஜ்ய லக்ஷ்மியைப் பார்த்த பிறகு என் செல்வமும் சுகமும் எனக்குத் திருப்தி கொடுக்கவில்லை. அரசனே! பாண்ட வர்கள் உயர்ந்து போனார்கள்; அலறினான். நாம் வீழ்ந்தோம்’ என்று அலறினான்.

திருதராஷ்டிரன், “புத்திரனே! எனக்கு நீ மூத்த புத்திரன், பட்டமகிஷியின் மகன். பாண்டவர்களைப் பகையாதே. பகையி னால் துக்கமும் மரணமுந்தான் உண்டாகும். வஞ்சகம் அறியாத யுதிஷ்டிரனை ஏன் பகைக்கிறாய்? அவனுடைய செல்வம் நம்முடை யதுமாகும். நம்முடைய மித்திரர்களே அவனுக்கும் மித்திரர்கள். நம் பேரில் அவனுக்கு அசூயையாவது விரோதமாவது எள்ளள இல்லை. குலத்திலும் பராக்கிரமத்திலும் அவனுக்குச் சரி யாக நீயும் இருக்கிறாய். சகோதரனைக் கண்டு ஏன் பொறாமைப் படுகிறாய்? வேண்டாம்!” என்று மகன் பேரில் அன்பு மேலிட்டுத் தன்னுடைய அறிவில் கண்ட நியாயத்தை எடுத்துச்சொன்னான். 

தகப்பன் சொல் துரியோதனனுக்குப் பிடிக்கவில்லை. 

“இயற்கை அறிவில்லாமல் எவ்வளவு கல்வி கேள்விகள் பெற்றும் என்ன பயன்? பக்ஷணங்களின் சுவை அவற்றில் மூழ்கி மிதக்கும் அகப்பைக்குத் தெரியாதது போல் நீர் நீதி சாஸ்திரங் களில் மூழ்கியிருந்த போதிலும் அவற்றின் பொருளை யறியாமல் பேசுகிறீர். உலக நடை வேறு. அரசர்களின் தருமம் வேறு என்று பிருகஸ்பதி சொல்லி யிருக்கிறார். சாதாரண மக்களுக்குப் பொறுமையும். திருப்தியும் – தருமமாகும். அரசர்களுக்குப் பொறுமை யும் திருப்தியும் தருமமல்ல. க்ஷத்திரியனுடைய சுடமை எப்போ தும் வெற்றியைத் தேடுவதே யாகும். தருமமாயினும் சரி, அதரு மாயினும் சரி, ஜெயத்தைத் தேடுவதே அரசன் தொழில் என்று துரியோதனன் தகப்பனிடம் ராஜநீதியை எடுத்துச் சொன்னான். 

பிறகு சகுனியும் பேசினான்: சூதாட்ட யோசனையைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லி “யுத்தமின்றித் துரியோதன்னுடைய துயரத்தைத் தீர்க்க முடியும்” என்றான். 

திருதராஷ்டிரன் மன உறுதி இழக்க ஆரம்பித்தான்.அதைக் கண்டு இதுதான் தகப்பனுடைய சம்மதம் பெறுவதற்குச் சமயம் எ ன் று துரியோதனன் கபடமாகவோ, வெளிப்படையாகவோ எதிரியை வீழ்த்தக் கூடிய எல்லா உபாயங்களும் க்ஷத்திரியனுக்கு ஆயுதமாகும். வெட்டும் கருவியே ஆயுதமல்ல. மித்திரன் யார், சத்துரு யார் என்பது பிறப்பாலும் குலத்தாலும் நிர்ணய மாகாது. எவனால் துன்பம் உண்டாகிறதோ அவனே பகைவன். சகோதரனானாலும் அவன் பகைவனாவான். திருப்தி கொண்டு வாழ்வது அரசர்களுடைய வாழ்க்கைக்குப் பொருந் தாது. பகைவனுடைய அபிவிருத்தியைப் பார்த்தும் கவனியா மல் விட்டு விடுகிற அரசன் அழிந்து போவான். சத்துருவின் வள ர்ச்சியை முன்னதாகவே தெரிந்துகொண்டு அதைத் தகுந்த சூழ் ச்சியில் அடக்கப் பார்ப்பதே ராஜ தருமம். வேரில் உண்டான புற்று மரத்தை அழிப்பதுபோல் நம்முடைய குலத்தவர்களின் சம்பத்து நம்மை அழித்து விடும்” என்றெல்லாம் நீதிசாஸ்திர கிரந்தங்களிலிருந்து எடுத்துப்பேசினான். 

“குந்தி மகனை ஆட்டத்திற்கு வா என்று நீ சொன்னால் டும் போதும். மற்ற வேலையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் மகா புத்திக் கூர்மை படைத்தவனும் பாவியு மாதிய சகுனி. 

“யுத்தம் என்பதில்லாமலும் உயிருக்கு ஆபத்தில்லாமலும் பாண்டவர்களுடைய சம்பத்தை எனக்குச் சகுனி சம்பாதித்துத் வான். நீர் யுதிஷ்டிரனை அழைக்க மாத்திரம் உடன்பட வேண் டும்’ என்றான் துரியோதனன். 

திருதராஷ்டிரன்,”இது எனக்குச் சரியாகத் தோன்ற வில்லை. தம்பி விதுரனைக் கேட்கலாம். அவன் அறிவாளி. அவன் சொல் லின்படி நான் எப்போதும் செய்யவேண்டியவன் என்றான். 

விதுரனுடன் ஆலோசிப்பது துரியோதனனுக்குச் சம்மத மில்லை. விதுரர் சாதாரண தருமத்தைத்தான் உபதேசிப்பார். அது வெற்றிக்கு உதவாது, அரசர்களுக்கு ஜெயம் வேண்டின் தருமத்தைப் புறக்கணிக்க வேண்டியதாகும். தர்ம சாஸ்திர நிபு ணர்களாகிய விதுரரும் வியாசரும் நம்முடைய முன்னேற்றத் திற்கு விரோதிகளாவார்கள். விதுரருக்கு என்னிடத்தில் அன்பில்லை. அவருக்குப் பாண்டவர்களிடமே பிரியம். இது உமக்குத் தெரியாதா?” என்றான். 

“பாண்டவர்கள் பலவான்கள். அவர்களோடு விரோதம் செய்துகொள்வது யுக்தம் என்று எனக்குத் தோன்றவில்லை. சூதா ட்டம். என்பது பகைக்குக் காரணமாகும். சூதாட்டத்தில் உண்டாகும் கட்ட மனப்பான்மை கரை கடந்து போகும். வேண் டாம் என் ன் திருதராஷ்டிரன். 

“பயம் என்பதை விட்டுவிட்டுத் தன்னைத்தான் காப்பா றிக் காள்வதே ராஜதருமம். பகைவர்கள் அதிக அபிவிருத் அடைவதற்குள் நமக்குச் சக்தி இருக்கும்போதே வேலை செய்ய வேண்டுமல்லவா? அதுவே முன் ஜாக்கிரதையாகும். வியாதியும் யமனும் நமக்காகக் காத்திருக்குமா? சூதா ட் த்தை நாம் பு தாக உண்டாக்க வில்லை. முன்னோர்கள் அதையும் தான் உண் டாக்கி இருக்கிறார்கள். சூதாட்டத்தில் அபாயமும் உயிர் நாசமும் இல்லாமல் க்ஷத்திரியர்கள் தங்கள் காரியங்களை நிறைவேற் றிக்கொள்ளலாம். என்று துரியோ தனன் தகப்பனை வற்புறுத்தினான். 

திருதராஷ்டிரன், மகனே! நான் விருத்தியாப்பியம் அடை றதுவிட்டேன். நீயே அரசன். உன் இஷ்டப்படி நீ செய்யலாம். நீ சொல்லும் வழி எனக்குப் பிடிக்கவில்லை. பிறகு வருத்தப்படு வாய். இது விதியின் வேலை” என்றான். 

முடிவில் மகனுடைய தொந்தரவைப் பொறுக்கமாட்ட திருதராஷ்டிரன் சரி என்று ஒப்புக்கொண்டு சூதாட்டத்திற்குத் தகுந்த சபா மண்டபம் சுட்ட வேலைக்காரர்களுக்கு ரவும் கொடுத்தான். ஆனால், ரகசியமாக விதுரனிடம் பற்றிக் கலந்து பேசினான். 

“அரசனே! இது குலத்திற்கு நாசம் கொண்டுவந்து விடும். இந்த யோசனையின் பயனாக நம்முடைய குலத்தில் கோபமும் கல கமும் உண்டாகிப் பெரும் ஆபத்து நேரிடும். வேண்டாம்!” என்றான் விதுரன். 

மகனுடைய வேண்டுகோளைத் தடுக்க முடியாமல் திருதராஷ்டிரன், “விதுரா! விதி நமக்கு அனுகூலமாயிருந்தால் இந்தச் சூதா டடத்தைப் பற்றி எனக்குப் பயம் இல்லை. விதி பிரதிகூலமாயி ருந்தால், நாம் என்ன செய்து என்ன பயன்? உலகமனைத்தும் விதி யின் வசமே இருந்து நடத்தப்பட்டு வருகிறது. நீ போய் யுதிஷ் டிரனை ஆட்டத்திற்கு அழைத்தேன் என்று எனக்காகச் சொல்லி அவனை அழைத்து வா!” என்று விதுரனுக்குக் கட்டளையிட்டான்.

விதியின் கதியையும் மனிதன் கடமையையும் சரியாக அறிந்தும் புத்தியைக் கலவரப்படுத்திக் கொண்டு மனவுறுதியற்ற திருதராஷ்டிரன் துரியோதனனிட ம் வைத்திருந்த பற்றினால் அவன் சொல்லுக்கு இசைந்தான். அரசன் கட்டளைப்படி விதுரனும் யுதிஷ்டிானிடம் சென்றன். 

பந்தயம் 

திருதராஷ்டிரன் கட்டளைப்படி விதுரன் இந்திரப் பிரஸ்த நகரத்துக்குச் சென்று யுதிஷ்டிரனைக் கண்டான். 

“ஏன் சந்தோஷமற்ற முகத்தோடு வருகிறீர்? ஹஸ்தினா புரத்தில் எல்லோரும் சுகமா? அரசனும் ராஜ் குமாரர்களும் நன்றாயிருக்கிறார்களா? நகரத்துப் பிரஜைகளின் நடத்தை சரியா யிருக்கிறதா? என்று விதுரனைக் கண்டதும் கவலையோடு யுதிஷ்டிரன் கேட்டான். 

“ஹஸ்தினாபுரத்தில் அனைவரும் க்ஷேமம். நீங்கள் அனை வரும் சுகமா?புதிதாக. நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மண்ட பத்தைப் பார்த்துவிட்டுப் போக உங்களைத் திருஷ்தராஷ்டிர ராஜன் சார்பாக அழைக்க வந்தேன். உங்களுடைய மண்டபத் திற்குச் சமானமான அழகிய மண்டபம் அங்கே கட்டப்பட்டிருக் கிறது. சகோதரர்களுடன் நீயும் வந்து பார்த்துப் பாய்ச்சிகை ஆடிவிட்டுத் திரும்பிப் போக வேண்டும் என்பது அரசன் வேண்டு கோள்” என்று விதுரன் தான் வந்த விஷயத்தை முறைப்படி சொன்னான். 

“கவறாட்டம் க்ஷத்திரியர்களுக்குள் கலகம் விளைவிக்கும். புத்திசாலிகள் அதை விரும்பமாட்டார்கள். நாங்கள் உம்முடைய சொல்லைப் பின் பற்றி நடப்பவர்கள். உம்முடைய யோசனை என்ன?” என்று யுதிஷ்டிரன் விதுரனைக் கேட்டான். 

“காய் விளையாட்டு அனர்த்தத்திற்கு மூலம் என்பது அனை வரும் அறிந்த விஷயம். நான் இந்த ஏற்பாட்டைத் தடுக்கத்தான் முயற்சி செய்தேன். ஆனாலும் அரசன் உங்களை அழைக்கச்சொன் னான்; அதனால் வந்தேன். உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்” என்றான் விதுரன். 

இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டும் யுதிஷ்டிரன் சகோ தரர்களையும் பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றான். 

மகாபுத்திசாலியான யுதிஷ்டிரன் ஏன் சூதாட்ட அழைப்பை ஒப்புக்கொண்டான் என்கிற கேள்வி பிறக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள். காம் விவகாரம். சூதாட்டம், கட்குடிப் பழக்கம் இவை தெரிந்தே மனிதனை ஏமாற்றி இழுத்துக் குழியில் தள்ளுகின்றன. யுதிஷ்டிரனுக்குக் கவறாட்டத்தில் மோகம் என் பது பாரதத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறது. இரண் டாவதாக அரசகுலப் பண்பாட்டின்படி பாய்ச்சியை ஆட்டத்திற் கும் பந்தயங்களுக்கும் விடுத்த அழைப்பை மறுதலிப்பது கூடாது. வை இரண்டுமன்றி, குல நாசத்திற்குக் காரணமான கலகம் வரும் என்று வியாசர் சொல்லி யிருந்தபடியினால் திருதராஷ்டிர னுடைய பேச்சை அவமதித்துக் கோபத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது யுதிஷ்டிரனுடைய எண்ணம். இவையெல் லாம் காரணமாக, புத்திசாலியான யுதிஷ்டிரன் அழைப்பை ஒப் புக்கொண்டு ஹஸ்தினாபுரத்துக்குப் போனான். நகரத்துக்குச் சமீ பத்தில் தனக்கும் தன் பரிவாரத்திற்கும் கட்டப்பட்டிருந்த அழகிய விடுதியில் தங்கிச் சிரம பரிகாரம் செய்த பின் அடுத்த நாள், காலைக் கடமைகளை முடித்து விட்டுச் சபாமண்டபம் சென்றான். 

குசலப் பிரச்னைகள் முடிந்தபின் சகுனி பேசினான். யுதிஷ் டிரனே! ஆட்டத்திற்குத் துணி விரிக்கப்பட்டிருக்கிறது. ஆடலாம்’ என்றான். 

”ராஜனே! கவறாட்டம் நல்ல விஷயமல்ல. பந்தய டங்களில் ஜெயிப்பது பராக்கிரமத்தோடு சேராது. அசிதரும் தேவலரும் இன்னும் லௌகீக விஷயங்களில் அனுபவம் பெற்ற முனிவர்கள் பலரும் சூதாட்டம் கூடாது, அது மோசத்தோடு சேர்ந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். யுத்தத்தில் ஜெயிப் பதே க்ஷத்திரியர்களுக்கு யோக்யமான முறை என்று சால்லி யிருக்கிறார்கள். இது உனக்குத் தெரியாதது அல்ல!” என்றான் யுதிஷ்டிரன். 

ஒரு பக்கம் பழக்கத்தினால் தூண்டப்பட்டு யுதிஷ்டிரன் ஆட் வும் ஆசைப்பட்டான்; மற்றொருபுறம் அது கூடாது என்கிற விவேகமும் அவனைத் தடுத்துக்கொண்டுதான் இருந்தது. சகுனி டன் வாதம் செய்யும் சாக்காகத் தன் உள்ளத்தில் நடைபெற்ற மனக் குழப்பத்தை வெளியிட்டுக்கொண்டான். கூர்மையான மூளை படைத்த சகுனி இதை உணர்ந்து, மறுபடியும் சொன்னான். 

“மோசமாவது என்ன? யுத்தமாவது என்ன? வேதம் படித்த வர்களில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடவில்லையா? படித்த வன் படிக்காதவனை ஜெயிக்கிறான். அதில் மோசம் என்று யாரா வது சொல்லுகிறார்களா? ஆயுதத் தேர்ச்சி பெற்றவன் தேர்ச்சி பெறாதவனை யுத்தத்தில் தோற்கடிக்கிறான். அதுமட்டும் தர்மமா? தேக பலமுள்ளவன் தேகபலம் இல்லாதவனை ஜெயிக்கிறான்: அது வும் மோசம் தானே? எல்லாச் செய்கைகளிலும் பயிற்சி அடைந்த வன் பயிற்சியடையாதவனைத் தோற்கடிக்கிறான். இதில் மோசம் என்ன, தர்மம் என்ன? பாய்ச்சிகை ஆட்டத்திலும் ஆடத் தெரிந்தவன் ஜெயிக்கிறான்: தெரியாதவன் தோல்வியடைகிறான். இதை மோசம் என்று எவ்வாறு சொல்லலாம்? உனக்குப் பயமா யிருந்தால் ஆட வேண்டாம். ஆனால் தர்மத்தின் பேரில் சாக்குச் சொல்லவேண்டாம்! என்றான். 

“சரி; யார் என்னுடன் ஆட வருகிறார்கள்?” என்றான் யுதிஷ்டிரன். 

துரியேயாதனன் “பணயம் வைக்க நான் தனமும் ரத்தினமும் தருவேன். எனக்காக என் மாமா சகுனி ஆடுவார்” என்றான். 

யுதிஷ்டிரன் துரியோதனனை ஆட்டத்தில் தோற்கடிக்கலாம் என்று எண்ணி யிருந்தான். சகுனியின் சாமர்த்தியத்தை அறிந்த வனாதலால் தயங்கினான். 

ஒருவனுக்காக மற்றொருவன் ஆடுவது சாதாரண முறை யல்ல என்பது என் அபிப்பிராயம்’ என்றான் யுதிஷ்டிரன். 

”ஓ! வேறு சாக்கு எடுத்தாயோ?” என்று சகுனி ஏளனம் செய்ய ஆரம்பித்தான். 

ஆணவம் தலையெடுத்தது. 

“சரி. ஆடுகிறேன்” என்றான் யுதிஷ்டிரன். 

மண்டபம் நிறையக் கூட்டம். சபையில் துரோணரும். கிரு ரும், பீஷ்மரும்,விதுரனும், திருதராஷ்டிரனும் இருந்தாகள், லகத்துக்குக் காரணமான சூதாட்டம் நடைபெறுகிறது என்று இவர்களுக்குத் தெரிந்திருந்தும் தடுக்க முடியாமல் அதிருப்தியோடு உட்கார்ந்திருந்தார்கள். மண்டபத்தில் கூடியிருந்த ரா குமாரர்கள் மிக்க உற்சாகத்தோடு’ ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

முதலில் ரத்தினங்கள் பந்தயம் வைக்கப்பட்டன. பிறகு பொன்னும் பொக்கிஷங்களும் வைக்கப்பட்டன. பிறகு தேர்களும் குதிரைகளும் வைக்கப்பட்டன. இவற்றை யிழந்த பின் யுதிஷ்டிரன் தன் வேலைக்காரர்களைப் பந்தயம் வைத்து இழந்தான். பிறகு தனக்குள்ள யானைகளையும் சேனைகளையும் பந்தயமாக வைத்து அவற்றையும் இழந்தான். சகுனியின் பாய்ச்சிகை ஒவ்வொரு வீச்சிலும் அவன் சொன்னபடி நடந்து கொண்டது. 

பசுக்கள், ஆடுகள், நகரங்கள், தேசங்கள், பிரஜைகள் எல் வற்றையும் யுதிஷ்டிரன் இழந்தான். ஆட்டத்தை நிறுத்த ல்லை. தம்பிகளின் உடல் மேலிருந்த ஆபரணங்களையும் வஸ்திரங் ளயும் இழந்தான். 

“வேறு ஏதாவது உண்டா?” என்றான் சகுனி. 

“இதோ அழகிய சியாமள நிறங்கொண்ட நகுலன் இருக்கிறன். இவனும் எனக்கு ஒரு பொருள் ஆவான். அவனைப் பந்தயம் வைக்கிறேன்” என்றான் யுதிஷ்டிரன். 

“அப்படியா? இதோ உன் பிரியமான ராஜகுமாரன் எங்கள் எசமானான்” என்று சொல்லிப் பாய்ச்சியை வீசினான். சொல்லியடியே ஜெயித்தான் சகுனி. 

சபை திடுக்கிட்டது. 

“இதோ, என் தம்பி சகதேவன். கல்வியின் கரையைக் கண்டு புகழ் பெற்றவன். இவனைப் பந்தயமாக வைப்பது தவறு. ஆயினும் வைக்கிறேன். ஆடுவாயாக!” என்றான் யுதிஷ்டிரன். 

“ஆடினேன், ஜெயித்தேன்” என்று சொல்லிக்கொண்டே பாய்ச்சிகை வீசினான் சகுனி. தம்பி சகதேவனையும் இழந்தான் தருமபுத்திரன். 

ஒருவேளை இத்துடன் யுதிஷ்டிரன், ஆட்டத்தை நிறுத்தி விடுவானோ என்று அந்தத் துராத்மா சகுனி, “உன் மதிப்பில் பீமனும் அருச்சுனனும் மாத்ரீ புத்திரர்களை விட விலை அதிகம் போலும்? அவர்களை வைத்து ஆடமாட்டா யல்லவா?” என்று குத்திச் சொன்னான். 

“மூடனே! எங்களைப் பிரித்துவிடப் பார்க்கிறாயா? அதர்மத்தில் வாழ்பவனாகிய உனக்கு எங்களுக்குள் இருக்கும் தருமநிலை எங்கே தெரியப்போகிறது?” என்று கூறி யுதிஷ்டிரன், ‘யுத்தத் தில் எங்களைக் கரை சேர்க்கும் நாவாயைப் போன்றவன், பற்ற பராக்கிரமம் படைத்தவன், . எப்போதும் வெற்றிக்கு ஸ்தானமானவன். இந்த அருச்சுனனையும் பந்தயமாக வைத்தேன்.ஆடு!” என்றான். 

“இதோ ஆடுகிறேன்” என்று சொல்லி விட்டுச் சகுனி யுதிஷ்டிரன் அருச்சுனனையும் இழந்தான். 

வரை கடந்துபோன துரதிஷ்டப் பிரவாகம் தரும புத்திரனை வசமின்றிச் செய்து அவனை இழுத்துச் சென்றது. கண் களில் நீர் கலங்க அரசனே! யுத்தத்தில் எங்களுக்குத் தலைவன் அசுரர்களுக்குட பயத்தைத தரும் வச்சிராயுதம் எடுத்த இந்திர னைப் போன்றவன் அவமதிப்பை ஒரு போதும பொறாதவன், உலகத்தில் வனுக்குச் சமமான தேகவன்மை படைத்தவன் எவனுமில்லை. இந்தப் பீமனை பந்தயமாக வைக்கிறேன் என்று சொல்லி வாயுபுத்திரனையும் பந்தயமாக வைத்து ஆடினான். படியும் யுதிஷ்டிரன் தோற்றான். 

“இன்னும் ஏதாவது பொருள் உண்டோ?” என்றான் துராத்மா சகுனி. 

“ஆம் இருக்கிறது. இதோ. நீ ஜெயித்தாயானால் நானும் உனக்கு அடிமையாக இருப்பேன்” என்றான் தருமபுத்திரன். 

“இதோ,ஜயித்தேன்!” என்று சொல்லிக்கொண்டே ஆடி யுதிஷ்டிரனையும் பெற்று விட்டான். அதன் பிறகு சகுனி சபையில் நின்று பாண்டு புத்திரர்கள் ஐவரையும் ஒவ்வொருவனாகப் பெயரைச் சொல்லி அறிவித்து, தனக்கு நியாயப்படி அடிமை யானா ன் என்று சபையோருக்கு வெகு ஆரவாரத்துடன் பிரகடனம் செய்தான். 

அவ்வாறு சபையோரைக் கலங்கச் செய்த பின், சகுனி யுதிஷ்டிரனைப் பார்த்து, “உன்னிடம் இழக்காத பொருள் ஒன்று இன்னும் இருக்கிறது. அதைப் பந்தயம் வைத்து மறுபடியும் உன்னை நீ மீட்டுக் கொள்ளலாம். மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்து ஏன் ஆடலாகாது?” என்றான். 

“அவளையும் வைத்தேன்” என்று யுதிஷ்டிரன் சொல்லி விட்டான். சொல்லிவிட்டுத் தன்னையும் அறியாமல் கதறினான். 

சபையில் விருத்தர்கள் இருந்த பக்கத்தில் சப்தம் கிளம்பியது.அதன்மேல் “சீ!” என்று எல்லாப் பக்கத்திலும் பெரும் கலக்கம் உண்டாயிற்று. சிலர் கண்ணீர் விட்டார்கள். சிலருடைய உடல் வேர்வை கொட்டிற்று. 

துரியோதனனும் தம்பிகளும் கர்ணனும் சந்தோஷ வாரம் செய்தார்கள். திருதராஷ்டிரன் மகன் யுயுத்ஸு என்பவன் மட்டும் தலைகுனிந்து பெருமூச்சு விட்டான். சகுனியும் காய்களை வீசி, “ஜெயித்தேன் பாருங்கள்!” என்றான். 

உடனே துரியோதனன் விதுரனைப்பார்த்து, “போய்ப் பாண்டவர்களுக்குப் பிரியமான திரௌபதியை அழைத்து வாரும். எங்கள் வீட்டைக் குப்பை கூட்டிச் சுத்தப்படுத்த வேண்டும். சீக்கிரம் வரட்டும்” என்றான். 

“மூடனே. யமன் வீட்டுக்குப் போகாதே. கயிற்றினால் சட்டப்பட்டுப் படுகுழியில் தொங்குகிறாய். அது தெரியாமல் மூடனைப் போலவே பேசுகிறாய். உ ன் பதவிக்குத் தகாத பேச்சுகள் உன் வாயிலிருந்து வெளியாயின என்று விதுரன் துரியோத னனைக் கண்டித்து விட் டுச் சபையோரைப் பார்த்து, தர்மபுத்திரன் தன்னுடைய சுதந்திரத்தை இழந்தபின் பாஞ்சாலியைப் பந்தயம் வைக்க அவனுக்கு உரிமை இல்லை. கௌரவர்களின் முடிவு நெருங்கி விட்டது. நண்பருடைய சொற்களை மதிக்காமல் திருதராஷ்டிர புத்திரர்கள் நரகத்துக்கு வழி தேடிக் கொள்ளு கிறார்கள்” என்றான். 

துரியோதனன் விதுரன் சொன்னதைக் கேட்டுச் சினங் கொண்டு தன் தேரோட்டி பிரதிகாமியை அழைத்து ‘இந்த விதுரர் எங்களிடம் அசூயை கொண்டவர். பாண்டவர்களைக் கண்டு பயந்தவர். உனக்கு அவ்வாறான பயமில்லையே? நீ போய் திரௌபதியை உடனே கூட்டிவா!” என்றான். 

துரௌபதியின் துயரம் 

எஜமானன் கட்டளைப்படி தேரோட்டி பிரதிகாமி திரௌபதியிடம் சென்றான். 

“அம்மணி, துருபதபுத்திரியே! யுதிஷ்டிரர் சூதாட்டம் என்னும் மயக்கத்தில் விழுந்து சிக்கிக்கொண்டு உன்னைத் துரி யோதனனுக்கு இழந்துவிட்டார். திருதராஷ்டிரன் வீட்டில் வேலை செய்வதற்காக உன்னை அழைத்துப்போக வந்திருக்கிறேன். இது அவர்களுடைய கட்டளை” என்றான். 

ராஜசூய யாகம் செய்து ராஜாதி ராஜனாகப் பட்டாபி ஷேகம் பெற்றவனுடைய மகிஷியான திரௌபதி இந்த விசித் ரமான பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போனாள். பிரதிகாமி,என்ன சொல் சொன்னாய்? எந்த ராஜ புத்திரன் தன் மனைவியை ஆட்டத்தில் பந்தயம் வைப்பான்? பந்தயம் வைக்க வேறு ஒரு பொருளும் இருக்கவில்லையா?” என்றாள். 

“ஆமாம்,தாயே! வேறு பொருள் இல்லாதபடியால் தான் உ ன்னை வைத்து ஆடினார் என்று யுதிஷ்டிரன் பொருளெல்லாம் இழந்ததும், தம்பிகளை இழந்ததும் பிறகு தன்னையும் மனைவியை யும் பந்தயமாக வைத்ததும், முழுதும் சொன்னான். 

பிரதிகாமி சொன்ன விருத்தாந்தம் இதயத்தை உடைத்து உயிரைக் கொல் லு ம் தன்மையதாயிருந்த போதிலும் க்ஷத் திரிய ஸ்திரீயானபடியால் விரைவில் உள்ளத்தில் தைரியம் செய்து கொண்டாள். கண்களில் கோபாக்கினி ஜொலித்தவ ளாக ஓ! தேரோட்டியே! திரும்பிப்போ. போய்ச் சூதாடின வரைக் கேள். நீர் முதலில் உம்மைத் தோற்றீரா அல்லது மனை வியைத் தோற்றீரா என்று கேள். சபையோர் முன்னிலையில் இந் தக் கேள்வி கேட்டு விடை பெற்றுக்கொண்டு பிறகு என்னை அழைத்துப் போகலாம்” என்றாள். 

பிரதிகாமி அவ்வாறே போய்ச் சபையின் முன் தர்ம புத்தி ரனைப் பார்த்து திரெளபதி சொன்னபடி கேட்டான். 

யுதிஷ்டிரர் உயிரிழந்த பிணம்போல் காணப்பட்டார். மறுமொழி சொல்லாமல் நின்றார். 

அதன்மேல் துரியோதனன் பிரதிகாமியைப் பார்த்து, பாஞ்சாலியே இவ்விடம் வந்து தன்னுடைய புருஷனை இந்தக் கேள்வி கேட்கட்டும். போய் திரௌபதியை அழைத்துவா!” என்றான். 

பிரதிகாமி மறுபடியும் திரௌபதியிடம் சென்று, “அரச குமாரியே! அற்பனான துரியோதனன் உன்னைச் சபைக்கு வரச்சொல்லுகிறான். நீயே நேரில் வந்து கேள்வி கேட்கலாம் என்று கட்டளையிடுகிறான்” என்று வணக்கத்துடன் சொன்னான். 

திரௌபதி மறுபடியும், “இல்லை, திரும்பிப் போய்ச் சபை இல்லை, திரும்பிப் யோரையே நான் கேட்ட கேள்வியைக் கேள். என் பிரச்னைக்கு அவர்களாவது பதில் சொல்லட்டும்” என்றாள். 

பிரதிகாமி போய்த் திரௌபதி சொன்னதைச் சபையோருக்குத் தெரியப்படுத்தினான். 

துரியோதனன் கோபம் கொண்டு தம்பி துச்சர்தனனைப் பார்த்து. “இந்தத் தேரோட்டி பெரும் மடையன், பீமனைக் கண்டு பயப்படுகிறான். போய் அவளை இழுத்து வா!’ என்று உத்திர விட்டான். 

இதைக் கேட்டதும் துச்சாதனன் மகிழ்ச்சியடைந்து துரிதமாகவே சென்றான். திரௌபதி இருக்குமிடம் சென்று, “வா வா வீணில் தாமதம் செய்யவேண்டாம்! நீ ஜெயிக்கப்பட்டாய். வெட் கம் ஏன்? அழகியே! கௌரவர்களைச் சேர், தருமமாக அடையப் பட்டிருக்கிறாய். சபைக்கு வா!” என்று துராத்மாவான துச்சாத னன் சொன்னான். சொன்னதோடு அவளைப் பிடித்து இழுக்கப் போனான். 

பாஞ்சாலி எழுந்து துயரம் தாங்க முடியாமற் கதறிக் கொண்டு திருதராஷ்டிரனுடைய அந்தப்புரத்துக்குள் சென்றாள். துச்சாதனன் அவளைத் துரத்திக் கொண்டு போய் அவள் த லைமயிரைப் பிடித்திழுத்து அலங்கோலம் செய்து சபைக்கு அவளைப் பலாத்காரமாக இழுத்துக் கொண்டு வந்தான். 

கதை எழுதும்போதே மனம் திடுக்கிடுகிறது. மகாபாபமான செயலில் ராக்ஷஸத் துணிச்சலுடன் திருதராஷ்டிர குமாரர்கள் இறங்கிவிட்டார்கள். 


சபையைச் சேர்ந்ததும் திரௌபதி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு கூடியிருந்த விருத்தர்களைப் பார்த்து, கம்பீரமாகம் பேச ஆரம்பித்தாள். “சூதில் கை தேர்ந்தவர்களும் அயோக்கியர்களு ம் ஒன்று சேர்ந்து மோசமாகச் சூழ்ச்சி செய்து அரசனை ஏமாற்றி என்னைப் பந்தயமாக வைக்கச் செய்ததை எவ்வாறு நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்? சுதந்திரம் இழந்த ஒருவன் எப்படித் தன் மனைவியைப் பந்தயம் வைத்து இழக்க முடியும்? மனைவிகள். பெண்கள், மருமகளிர் படைத்த கெளரவ குலத்தோர் பலர் சபையில் இருக்கிறீர்கள். என் கேள்விக்குச் சமாதானம் சொல்லுங்கள்” என்றாள். 

இவ்வாறு பாஞ்சாலி ஒரு அநாதைப் பெண் போல் சங்கடப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கப் பீமனுக்குப் பொறுக்க முடியவில்லை. “யுதிஷ்டிரரே! சூதாட்மே தொழிலாக வைத்திருக்கும் நீசரும் தங்களோடு வாழும் தாசிகளைக் கூடப் பந்தயம் வைக்கமாட்டார்கள். துருபத புத்திரியை இந்த அற்பர்கள் துன்பப்படுத்த நீர் விட்டீர். இந்த அக்கிரமத்தை நான் பொறுக்க முடியாது. இந்த மகாபாவத்திற்கு நீர் காரணமாவீர். ஹே! தம்பி சகாதேவா நெருப்பு எடுத்து வா. எந்தக் கைகளைக் கொண்டு இந்தச் சூதாட்டம் இவர் ஆடினாரோ, அந்தக் கைகளை நான் நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறேன்” என்று கர்ஜித்தான். 

அருச்சுனன் பீமனைத் தடுத்தான். “அப்பனே! இதற்கு முன் எப்போதும் நீ இவ்வாறு பேசினது கிடையாது. நம்முடைய சத்துருக்களால் செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சி நம்மைக்கூடப் பாவம் செய்யத் தூண்டுகி நாம் அந்த வலையில் விழக்கூடாது.பகைவர்களின் எண்ணம்.நிறைவேறிப் போகும், ஜாக்கிரதை!” என்று மெதுவாகச் சொன்னான். 

பீமன் கோபத்தை அடக்கிக் கொண்டான். 

பாஞ்சாலியின் பரிதாபத்தைப் பார்த்து அதைச் சகிக்க முடியாதவனாக திருதராஷ்டிர புத்திரன், விகர்ண என்பவன் எழுந்தான். க்ஷத்திரிய வீரர்களே! நீங்கள் என்ன காரணத்தி ல் பேசாமலிருக்கிறீர்கள்? நான் சிறியவன். நீங்கள் மெளனம் சாதிப்பதால் என் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன், கேளுங் கள். மோசமாக அழைக்கப்பட்டுச் சூதாட்டத்தில் சிக்கிவிட்ட யுதிஷ்டிரன் இவளைப் பந்தயம் வைத்தான். அது செல்லாது. தவிர, இவள் யுதிஷ்டிரன் ஒருவனுக்குமட்டும் சொந்தமல்ல. அதனாலும் பந்தயம் செல்லாது. மேலும் அவன் தன் சுதந்திரத்தை முதலில் இழந்து விட்டான். தன்னைத்தான் தோற்ற பின் இவளை வைத்து ஆட அவனுக்கு உரிமை ஏது? மற்றும் ஒரு ஆட்சேபண உண்டு. சகுனியே முதலில் இவள் பெயரைச் சொன்னான். இது க்ஷத்திரியர்கள் ஆடும் முறைக்கு முரண்பட்டது. குறிப்பிட்ட பொருளைப் பந்தயம் வைக்கச் சொல்லி எதிராளி சொல்லக்கூடாது. இவற்றை யெல்லாம் யோசித்தால் பாஞ்சாலி நியாயமாக ஜெயிக்கப்படவில்லை. இது என் அபிப்பிராயம்” என்று சொன்னான். 

இவ்வாறு சிறுவனாகிய விகர்ணன் தைரியமாகப் பேசினதும், சபையோருக்குக் கடவுள் கொடுத்த அறிவு திடீரென்று சிறையினின்று விடுபட்டது. பெரிய ஆரவாரம் கிளம்பிற்று. அனைவரும் ஒரே முகமாய் விகர்ணனைப் புகழ்ந்தார்கள். தருமம் பிழைத்தது” “தருமம் பிழைத்தது’ என்றார்கள். 

அந்தச் சமயத்தில் கர்ணன் எழுந்து, 

”விகர்ணா! சபையில் பெரியவர்கள் இருக்கச் சிறு பையனான நீ எழுந்து யுக்திவாதம் செய்கிறாய். நெருப்பைக் கடைந்த அரணிக் கட்டையை அந்த நெருப்பே பற்றி அழிப்பது போல், நீ அறியாமையால் அவசரப்பட்டு, பிறந்த வீட்டுக்கே துரோகம் செய்கிறாய். தனக்குள்ள எல்லாப் பொருளையும் யுதிஷ்டிரன் முதலிலேயே பந்தயம் வைத்து இழந்தான். ஆகையால் இவளை முந்தியே சகுனிக்கு இழந்துவிட்டான். இதைப் பற்றி வேறு என்ன கேள்வி? பொருட்களை யெல்லாம் இழந்த பின் இவர்கள் மேலுள்ள வஸ்திரங்களும் இப்போது னி சகுயுடையதே. பாண்டவர்களுடைய வஸ்திரங்களையும் அவர்களுடைய மனைவியான இவளுடைய துணியையும் பறித்து உடனே சகுனிக்குத் தருவாய் துச்சாதனா!” என்றான். 

பாண்டவர்கள், கர்ணன் சொன்ன குரூரப் பேச்சைக் கேட்டதும், தருமத்தின் பரீட்சை கடைசி வரையில் நடைபெற வேண்டியது போலிருக்கிறது. எதற்கும் தயார் என்று பேச்சின்றி உடனே தங்கள் அங்கவஸ்திரங்களை எடுத்துச் சபையில் வீசி எறிந்தார்கள். 

இதைக் கண்ட துச்சாதனன் திரெளபதியிடம் சென்று அவள் ஆடையையும் பிடித்திழுக்க ஆரம்பித்தான். இனிமேல் பகவான் ஒருவனே துணை என்று பாஞ்சாலி, “லோகநாதா! ஈசனே; இந்த நிலையை அடைந்த என்னை நீயும் கைவிட்டு விடாதே! உன்னைச் சரணமடைகிறேன் காப்பாற்று!” என்று அச்சுதன் பேரைச் சொல்லிப் பெரும் கூச்சல் போட்டு மூர்ச்சையானாள். 


அப்போது ஒரு பெரிய ஆச்சரியம் நடந்தது. துச்சாதனன் இழுக்க, இழுக்க, திரௌபதியின் வஸ்திரங்கள் புதிது புதிதாக உண்டாகிக் கொண்டு வந்தன. பெருங் குவியலாகத் திவ்விய ஆடைகள் சபையில் குவிந்தன. 

துச்சாதனன் களைத்துப் போய்த் தரையில் உட்கார்ந்தான். ஆச்சரிய நிகழ்ச்சியைக் கண்டு சபை பயந்து நடுங்கிற்று. 

கோபத்தினால் உதடுகள் துடிக்கப் பீமன் எழுந்து பேரொலியுடன் பயங்கரமான ஒரு பிரதிக்ஞை செய்தான். 

“பாரத வம்சத்திற்குத் தகாத இந்தப் பாவி துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து இவன் ரத்தத்தை நான் உறிஞ்சிக் குடித்துவிட்டுத்தான் என் முன்னோர்கள் இருக்கும் உலகத்திற்குப் போவேன்! இது சத்தியம்” என்று பீமசேனன் கோர சபதம் செய்தான். 

திடீரென்று நரிகள் ஊளையிட்டன். நாலு பக்கங்களிலிருந்து கழுதைகளும், பிணம் தின்னும் பறவைகளும் விகாரமாகக் கத்தின. 


நடந்த சம்பவம் குலநாசத்துக்குக் காரணமாகும், தீராத வேஷம் உண்டாகிவிட்ட து, தன் புத்திரரர்களுக்குப் பெரிய அபாயம் நேர்ந்துவிட்டது என்பதை அறிந்து கொண்ட திருத ராஷ்டிரன், திரௌபதியை அழைத்து, ‘பாஞ்சாலி, என் பிரிய மருமகளே! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று சொல்லி தன் புத்திரர்கள் மேல் கோபமும் வெறுப்பும் கொண்ட திரௌ பதியைச் சமாதானப்படுத்தப் பார்த்தான். யுதிஷ்டிரனைக் கூப்பிட்டு, அஜாத சத்ருவே! நீ க்ஷேமமாக இருப்பாய்வு துரியோதனன் செய்த தீமையை மனத்தில் வைக்கவேண்டாம். உன் தாயான காந்தாரியையும் கண்ணில்லாத என்னையும் மதித்து மற்றவர்கள் செய்த குற்றங்களைப் பொறுப்பாய், நாடு நகரம் பொருள் எல்லாவற்றையும் மறுபடி பெற்றுச் சுதந்திரமாக இருங்கள். இந்திரப்பிரஸ்தம் போங்கள்” என்றான். 


இவ்வாறு திருதராஷ்டிரனின் வரம் பெற்றாலும் யுதிஷ்டிர னுக்கும் சகோதரர்களுக்கும் மனத்தில் சமாதானம் உண்டாக வில்லை. ஆட்டத்தில் இழந்ததைத் திரும்பப் பெறுவதில் ஏதோ குற்றம் இருப்பதாகவே எண்ணினார்கள். கஷ்டங்களும் அனர்த் தங்களும் நெருங்கும் காலத்தில் புத்தி தடுமாறுவது இயல்பு. பூபாரம் தொலைவதற்காகக் கலியினால் பிரவேசிக்கப்பட்டவு னாய்ச் சபையோர் எல்லாரும் தடுத்தும், தருமபுத்திரன் மறுபடி யும் சகுனியுடன் ஆட்டத்திற்கு உட்கார்ந்தான், தோற்றவன் தன் சகோதரர்களுடன் பன்னிரண்டு வருஷம் வனவாசம் செய்து பதின்மூன்றாம் வருஷம் உறவினரால் அறியப்படாமல் அஞ்ஞாத வாசம் செய்வது என்கிற நிபந்தனைப்படி மறுபடியும் பாய்ச்சிகை உருட்டி யுதிஷ்டிரன் தோல்லி யடைந்தான். 

உடனே பாண்டவர்கள் வனவாச தீட்சை எடுத்துக் கொண்டு சபையோரிடம் விடை பெற்றுக் கொண்டு காடு சென்றார்கள். சபையிலிருந்த அனைவரும் வெட்கத்தினால் தலை குனிந்தார்கள். 

– தொடரும்…

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *