சந்தியா அல்லது சரண்யா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 18,206 
 

குருவும் சந்தியாவும் எதிரெதிர் வீட்டில் வசித்தாலும் இருவருக்கும் அவ்வளவாக பரிட்ச்சயம் கிடையாது. பத்து வருடங்களாக இப்படிதான் இருந்தது. சந்தியாவுக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்பது கனவு. அந்த கனவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள்.

குடும்ப பொருளாதாரம் அதற்கு வழிவகுக்கவில்லை என்றாலும் தன் சுய முயற்சியில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுசுகளுக்கு ட்யூஷன் நடத்தி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

( *yes*… நீங்க படிச்சு சலிச்சுபோன அதே பழைய காதல் கதை தான். )

குருவுக்கும் எழுத்தாளன் ஆக வேண்டும் என்பது கனவு. எப்போதும் புத்தகமும் கையுமாகவே சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால், புத்தகங்களை வாசிக்க துவங்கிய பிறகு அவனுக்கு மனபிறழ்வு தான் ஏற்பட்டது.

அவன் வாழ்க்கைக்கும் வாசித்த இலக்கிய புத்தகங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து தன்னை ஒரே சமயத்தில் சமூக விரோதியாகவும் புத்தி ஜீவியாகவும் கருத துவங்கினான். எழுதவேண்டும் என்ற
ஆர்வத்தில் ஒரு இனிமையான சூழலில் பேனாவும், பேப்பருமாக அமர்வான். ஆனால் எழுத முடியாது. வெறிப்பிடித்தவன் போல் பேப்பரை கிழித்து எறிந்துவிட்டு இறுகிய முகத்தோடு மற்றவர்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வான்.

அவன் இலக்கியம் என்று படித்த புத்தகங்களெல்லாம் இலக்கியங்களே அல்ல. வெரும் குப்பைகள். அதனாலேயே அவனுக்கு தாழ்வு மனப்பான்மை (Inferiority) ஏற்பட்டுவிட்டது. அப்புத்தகங்கள் எவை என்று இங்கே குறிப்பிட மாட்டேன். அதை
குறிப்பிட்டு, அப்படி அந்த புத்தகங்களில் என்ன தான் இருக்கிறதென நீங்கள் படித்தால்… பின், என் மீது கோபம் கொள்வீர்கள்.

அவன் படித்த அத்தணை புத்தகங்களிலும் பாலியல் என்பது மறைக்கப்பட்ட அல்லது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமே சொந்தமான பந்தமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இவன் வாழ்க்கையோ பாலியலில் மூழ்கி கிடந்தது. எந்நேரமும் பாலியல் குறித்த சிந்தனையிலேயே உலவிக் கொண்டிருந்தான்.

ஒரு பக்கம், தான் ஓர் அம்மாஞ்சி-கையாலாகதவன் என்று அவனுடைய மிடில் க்ளாஸ் மனோநிலை குத்திக் காட்டினாலும் தன் தேடலை அவன் விட்டு கொடுக்கவில்லை. புத்தகங்களை இனங்கண்டு கொண்டு அவனுக்கு தேவையான பாலியல் சார்ந்த புத்தகங்களை தேட ஆரம்பித்தான். சாரு எழுதிய “ரெண்டாம் ஆட்டம்” என்ற புத்தகம் ஒன்று அவன் கையில் கிடைத்தது. சாரு எழுதியதிலேயே அவன் வாசித்த முதல் புத்தகம் அது தான். அப்புத்தகம் இருண்டு கிடந்த இவன் இதயத்தில் ஒரு
பௌர்ணமியாய் மின்னியது. எல்லோரும் தெரிந்த முகம் ; பழகிய மனங்கள் ஆயினும் எங்கே செல்வதென்று தெரியாமல் இந்திய நடுத்தர வர்க்க மனநிலையோடு போராடிக் கொண்டு காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தான். ரெண்டாம் ஆட்டம் அவனுக்கான பாதையை துவக்கிவைத்தது. ஏனென்றால், பேதங்கள் இல்லாமல் உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் இந்த சமூகம் பாலியலில் மட்டும் பேதங்களை கொண்டுள்ளது என்பது அவனுடைய எண்ணம்.

சந்தியா அப்படி இல்லை. இந்தியாவின் பொருளாதார, அரசியல், லௌகீக சித்தாத்தங்களால் உரு குலைந்து போயிருக்கிற மனித வாழ்க்கையில் தனக்கென இருக்கும் பாத்திரத்தை மிகச்சரியாக செய்துக் கொண்டிருந்தாள். வீட்டு மாடியில் இருந்து பத்து வருடங்களாக அவன் மட்டுமே சந்தியாவை பார்த்துக்
கொண்டிருந்தான். தலை வாரும் பொது மட்டும் தலை நிமிர்ந்து ஓரிரு முறை அவனை பார்த்திருப்பாள். அவன் தன்னை பார்ப்பதை கண்டு கொண்ட பிறகு இப்போதெல்லாம் திரும்பி நின்றே தலை வாரிக் கொள்கிறாளாம்.

குருவுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்பதால் சந்தியாவை பார்ப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டிருந்தான். அவள் மீதிருந்த வசீகரத்தை சொல்லாமலே தவிர்த்து வந்தான். ஒரு கட்டத்தில் குருவின் இலக்கியபித்து அவளுக்கு தெரிய வந்தது. ( தெரிய வைத்தான் என்பதே பொருந்தும்.)

ஆம், ரெண்டாம் ஆட்டத்தை தொடர்ந்து சாருவின் புத்தகங்களை நுணுக்கமாக வாசிக்க துவங்கினான். அதனால், அவன் உடலோடு ஒட்டி இருந்த கூச்சம் காணாமல் போயிருந்தது.

எப்படியோ… சாருவால் குருவும் சந்தியாவும் நண்பர்கள் ஆகிவிட்டனர். இதற்கு மேல தான் கதையே…!

குரு, எப்போது வேண்டுமானாலும் காதல் வெடித்துவிடும் என்ற மன நிலையிலேயே இருந்தான். சந்தியாவோ வெகு இயல்பாக நட்போடு பழக துவங்கினாள். அவளுக்கும் பாட புத்தகங்களை தவிர இலக்கிய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக ரமணிச்சந்திரன் புத்தகங்கள் என்றால் உயிர். இதை
கேட்டு குரு கொஞ்சம் ஜெர்க் ஆனான்.

இருவரும் மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டு SMS ல் நடப்பை தொடர்ந்தார்கள். பேச ஆரம்பித்த இரண்டு நாளிலே காதலை சொல்லி விட்டான் குரு. சந்தியா அவனை பைத்தியம் என்று கூட கருதியிருக்க வாய்ப்புள்ளது. மாறாக, இப்படி கூறி விட்டாள்.

நீ லவ் பண்றது உன் விருப்பம். ஆனா, எனக்கு லவ் இல்ல. நிறைய படிக்குற. புதுசா பேசுறன்னு தான் உன்கூட ‘ஜஸ்ட் பிரிண்ட்ஸா’ இருக்கலாம்னு நினைச்சேன். இனிமேல், உனக்கு நான் எஸ்எம்எஸ் பன்னல, நீயும் எனக்கு எஸ்எம்எஸ் பண்ண வேண்டாம். அதற்கு
குரு இப்படி கூறினான்.

என்கிட்டே தொடர்ந்து பேசுறது பேசாததும் உன் விருப்பம். நான் ரொம்ப நாளா உன்னை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். நீ என்ன பண்ற, உனக்கு என்ன புடிக்கும் அத பத்தியெல்லாம் எதுவுமே எனக்கு தெரியாது. காலைல எழுதிரிச்சு பல்ல வெலக்கறேனோ
இல்லையோ உன்னை பார்க்க மாடிக்கு வந்துடுவேன். அதெல்லாம் நான் ஆனாவும் நீ பெண்ணாவும் இருக்கறதால தான் நடக்கும். அது இயல்பு. அத குற்றம் சொல்ல முடியாது. எனக்கு உன்னை புடிச்சிருந்தது. லவ் பண்றேன்னு சந்தேகமா இருந்துச்சு. உன்கிட்ட பழகுனதுக்கு அப்புறம் அது கன்ஃபார்ம் ஆகிடுச்சு.

உடனேஎன் காதலை சொல்லிட்டேன். கொஞ்ச நாளா என்னோட Self Procedures வேற மாதிரி இருக்கு. அதுல பொய் இல்ல, போலித்தனம் இல்ல. அதுல இருக்குறதெல்லாம் Feelings, Desires மட்டும் தான். சரி, உன் விருப்படியே இருக்கலாம்… இனி No sms – நோ mail bye… பதிலுக்கு அவள். ஒ… உனக்கு இவ்ளோ கோவம் வருமா…டா… என்றாள்.

அன்று, அவள் கடைசியாக சொன்ன வார்த்தையை வைத்து, என்னை காதலிக்கிறாளோ என என்னிடம் கேட்டான் குரு.

பெண்கள் மொழியில் நான் கொஞ்சம் வீக் என்னை விட்டுடேன்… என்றேன்.

உன்கிட்ட கேட்காமல் வேற யார் கிட்ட கேட்கறது. அவள்கிட்ட கேட்டால் ஸ்டுபிட் என்கிறாள். குரு

சரி, அவள் உன்னிடம் காதலை சொன்னாளா..? நான்.

இல்லை… குரு.

பிறகு, இந்த கதையை எப்படி முடிப்பது. நான்.

? குருவிடம் இது போல பத்து கேள்வி குறிகள் இருந்தது.

ஆனால், நான் முற்றுப்புள்ளி வைக்க கிளைமாக்ஸ் எழுத துவங்கினேன்.

குரு நினைத்தது போல இந்த காதலும் அமையவில்லை. சந்தியாவிற்கு குரு மீது காதலே வரவில்லை. அவனுக்கு மீண்டும் மனப்பிறழ்வு ஏற்பட்டது. குடிப் பழக்கம் இல்லாமலிருந்தவன் சுயநினைவை இழக்கும் அளவிற்கு குடிக்க ஆரம்பித்தான். அதனால்,
அவனை வீட்டைவிட்டு வெளியே துரத்தினார்கள். ஒரு முறை குடித்துவிட்டு வாந்தி எடுத்து கம்பெனியை அலங்கோலம் செய்துவிட்டதால் வேலையிலிருந்து தூக்கிவிட்டனர். புதிதாய் வேறு எங்கும் வேலைக்கும் சேர்க்க மறுத்து விட்டார்கள். குரு, ஒரு
நாடோடியை போல மாறிவிட்டான். கையில் பணம் இல்லை ; குடிப் பழக்கமோ அவனை முழுமையாய் ஒட்டிக்கொண்டது. பணத்திற்காக வழிப்பறியில் இறங்கினான். சின்னஞ்சிறார்களை மிரட்டி பணம் பறிக்க துவங்கினான். இது போன்ற இன்னும் பல
குற்றங்களுக்காக சிறை சென்றான்.

முடிவை எழுதி குருவிடம் காட்டினேன். அதை அவன் சந்தியாவிடம் கொடுத்தான். சந்தியா அதை திருத்தினாள்.

முன்பெல்லாம் குருவிடம் எனக்கு நட்பு கூட கிடையாது. மாடியிலிருந்து வெறிக்க,வெறிக்க பார்ப்பான். எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. நான் என்ன வேற்று கிரக வாசியா..? இல்லை, ஜூவில் அடைக்கப்பட்ட மிருகமா..? வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க… அவன் கதை எழுதுவான் என கேள்விப்பட்ட பிறகு அவன் மீது ஒரு மரியாதை. அவனோடு நட்பு வைத்துக்கொள்ள நினைத்தேன்.

திடீரென.. என்னை காதலிக்கிறேன் என கூறிவிட்டான். எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. இது, என் வாழ்க்கை சம்பந்த பட்ட விஷயமாக இருந்தாலும் என் பெற்றோரை தாண்டி எதுவும் என்னால் செய்ய முடியாது. மேலும், நான் பல எதிர்பார்ப்புகளோடு
திட்டமிட்டு வாழ்கிறேன்.

குரு, அப்படி இல்லை. படிக்கவேண்டும்.. எழுதவேண்டும்.. மீண்டும்
படிக்கவேண்டும்.. எழுதவேண்டும்.. பிறகு, ஊர் சுற்ற வேண்டும்.. இதை தவிர வேறெந்த திட்டமும் அவனிடம் இல்லை… இப்படி பட்டவனை எப்படி காதலித்து மனம் செய்துகொள்ள முடியும்.

ஆனாலும், அவன் மீது கொஞ்சம் அன்பு ( காதல் ) இருக்கத்தான் செய்கிறது. அவன் பேசுவது புதிதாய் இருக்கும். சரியோ..தவறோ.. எல்லாவற்றிக்கும் ஒரு பதில் வைத்துக்கொண்டு தான் சுற்றுவான்.

கதையை முடிக்கிற பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு சினிமா பட வசனத்தோடு கதையை முடிக்கிறேன்.

இதோ பார் ராம்..(குரு) இதெல்லாம் எனக்கு எதோ கனவுல இருக்குற மாதிரியே இருக்கு.. என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிட்… அம்மா ஃபைவ்இயர்ஸா யூ.எஸ் வீசாவுக்காக ட்ரை பண்ணிட்டு இருக்காங்க… கெடைச்சா ஹையர் ஸ்டடீஸ்க்கு அங்க போயிருவேன். அப்புறம் என்ன ஏமாத்திட்டா… டீஸ் பண்ணிட்டான்னு எல்லாம் சொல்லகூடாது. என்னை திட்டி கவிதை எழுதுறது சபிக்கல்லாம் கூடாது.

கதையை முடித்து குருவிடமே கொடுத்துவிட்டேன்.

சந்தியாவிடம் மீண்டும் கதையை வாங்கி என்னிடம் காட்டி பெருமை அடித்துக்கொண்டான் குரு. குருவிடம் கூறினேன். சந்தியா எழுதியது க்ளைமாக்ஸ் அல்ல; இதோ இது தான்
க்ளைமாக்ஸ்.

நவின் ஆகிய நான் சரண்யாவுக்காக சந்தியா குருவை வைத்து ஒரு கதையை எழுதினேன். அந்த கதையை சரண்யாவிடம் கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *