காட்டான்

 

ஜனரஞ்சக மனநிலையில் நான் இல்லாமலிருந்தாலும் ஒருத்தியின் ஜனரஞ்சக காதலில் சிக்கிக்கொண்டதால் அதை அப்படியே உங்களிடம் பகிர்கிறேன். அவள் பெயரை மட்டும் தவிர்த்து. இது முதல் காதல் என பொய்யுரைக்க விரும்பவில்லை. இது என்னுடைய நான்காவது காதல். இந்த நான்காவது காதலுக்கு முன்பாக ; என் முதல் மூன்று காதல்களையும் சுருக்கமாக கூறிவிடுகிறேன்.

முதல் காதல்…

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொது ஏற்பட்டது. இவளுடைய பெயரையும் இங்கே தவிர்க்கிறேன். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் அவளுடைய துள்ளலான ஆட்டத்தில் நான் காரணம் தெரியாமல் கொஞ்சம் கிறங்கித்தான் போவேன். உன்னிப்பாக படித்துக் கொண்டிருப்பேன் அதே சமயம் என்னை பார்க்கிறாளா ? என பார்த்தும் கொள்வேன். அவளிடம் ஒரு அதிகாரத் தோரணை இருக்கும். அதை இன்று வரை ரசிக்கிறேன். கடவுள் என்ற காட்டானால் திசை பிரித்து எறியப்பட்டோம். ஆறாம் வகுப்பு அவள் வேறு பள்ளி. நான் வேறு பள்ளி. சரி, இதை பற்றி கடைசியில் பேசுவோம்.

இரண்டாவது காதல்…

அய்யோ, இக்காதலை பற்றி சொல்ல கோடி விஷயங்கள் உண்டு. முதல் முத்தம், முதல் அணைப்பு என நினைந்தது இந்த காதல் மழையில் தான்.
பாரம்மனின் ஸ்ரிஷ்டியை இருட்டுக்குள் ஆராய்ந்து கவிதை பழகிய காலம் அது. அதை வெவ்வேறு கதைகளில் இன்னும் விரிவாக காண்போம். அது இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். அவள் பெயர் கலை.

மூன்றாவது காதல்…

அவள் பெயர் நித்யா. தேவதை. இவளோடு நான் கொண்ட காதல் சற்றே விசித்திரமானது. இலக்கிய பித்து பிடித்ததற்கு பிறகு வெறித்தனமாக
வாசிக்க துவங்கிய நேரத்தில் எனக்கு தோழியாக இருந்தாள். அச்சமயத்தில் எல்லோரும் என்னை விசித்திரமாக பார்த்த பொது ( என் தாயையும் சேர்த்துதான் ) அவள் மட்டும் சரியான நோக்கத்தில் பார்த்தாள். ஒருவேளை, நித்யாவுக்கு எழுத படிக்க தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் எவ்வளவு நேரம் பேசினாலும் உக்கார்ந்து கேட்க கூடிய ஒரே ஜீவன் அவள் தான். வேறு யாருக்கும் அந்த பொறுமை கிடையாது. ஏனெனில், நான் படித்ததை பேசமாட்டேன். படிக்கும் பொது புற சிந்தனையில் ஓடும் என் சுய கருத்துக்களையே பேசுவேன். அதில் விஷயம் இருந்தாலும் சற்றே லட்ஜையாக இருக்கும்.

நித்யா ஒரு இருதய நோயாளியும் கூட…. வாரம் ஒருமுறை ஊசி. தினமும்
மாத்திரையும் கையுமாகவே இருப்பாள். அது வெகு நாட்களுக்கு தெரியவே இல்லை. ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.
திடீரென மயங்கி விழுந்துவிட்டாள்.

நித்யாவை தூக்கிக்கொண்டு நானும் பிரகாஷும் மருத்துவமனைக்கு சென்றோம். அவ்வபோது நாடி பிடித்தும் பார்த்துக்கொண்டோம் எங்களுக்கு இருந்த பதட்டத்தில் சரியாக கணிக்க முடியவில்லை.

அது ஈரோடின் பிரம்மாண்டமான மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் சென்றவுடன் எந்த பதட்டமும் இல்லாமல் நித்யாவை ஸ்ரேச்சரில் படுக்க வைத்து ஐசியூக்குள் இழுத்துச்சென்றார்கள். அட்மிஷன் பாரம் வாங்க வரிசையில் பொய் நின்றேன். பிரகாஷ் பதட்டமாக ஐசியூக்குள் எட்டி,எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

உடனே ஆபரேஷன். இரவிற்குள் முப்பதாயிரம் கட்டவேண்டும். நாளைக்கு
மத்தியானத்துக்குள்ள மீதி ஒரு லட்சத்தை கட்டிருங்க. அட்மிஷன் பாரமை வாங்கி கொண்டு பிரகாஷிடம் வந்தேன். அதற்குள் எல்லோருக்கும் தகவல் தெரிந்து.

மருத்துவமனையில் துக்கம் பீறிட எல்லோரும் கதறினார்கள். கட்டணத்தை கேட்டவுடன் சிலருக்கு அழுகை கரைந்தது, சிலருக்கு அழுகை அதிகமானது.

நித்யாவின் தந்தை மகளுக்கு எதோ ஆகிவிட்டதென பதறி துடித்து பொய் தண்ணி கலக்கி அடிக்காமல் ராவாக அடித்து வந்திருந்தார். அவள் தம்பி பிரம்மை பிடித்தது போல சுவரில் சாய்ந்திருந்தான். எப்படியோ அடித்து பிடித்து பணத்தை கட்டினோம்.

பலனில்லை, நித்யா இறந்து போய்விட்டாள். போஸ்ட் மார்டம் என்ற பெயரில் உடலை கிழித்து, மண்டையை பிளந்து உடல் முழுவது வெள்ளை துணியால் சுற்றி வைத்திருந்தார்கள். முகம் மட்டும் தெரிந்தது.

அடச்சீ… காதலை பத்தி எழுத வந்தியா? இல்ல… சாவ பத்தி எழுத வந்தியா?

எப்படியோ, நித்யா இறந்த பிறகு தான் அவளை நான் விரும்ப ஆரம்பித்தேன். என் ஆர்வத்திற்கு கிடைத்த முதல் ரசிகை. என் இரண்டாம் வாழ்க்கை. என் ஜனரஞ்சக காதலின் மூன்றாம் பிறை. கண்களில் நட்பு வளர்த்து, வார்த்தைகளில் கேலி என பேசிக்கொண்டு இதயத்தில் குடியிருந்தாள். திடீர் மறைவினால் தோழி என்ற ஸ்தானத்தில் மட்டும் வைத்து பார்க்க முடியவில்லை.

நான்காவது காதல்…

மண்டிபோட்டு கைகளை கூப்பி அல்லது தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கொண்டு கடவுள் இருக்கிறார் என்பதற்கும், வாழ்க்கை போகிற போக்கில் ஒரு அற்புதத்தை உணரும் பொது விரலில் சொடக்கு போட்டு
கொண்டு கடவுள் இருக்கான்டா…. என்பதற்கும் ஒரே வித்தியாசம் தான் உண்டு. இந்த நான்காவது காதலுக்கு அப்படி ஒரு விரல் சொடக்கு போட்டுக் கொண்டேன்.

என் முதல் காதலையும் நான்காம் காதலையும் இணைத்தது என்னுடைய மூன்றாம் காதல். (புரிகிறதா?)

என் முதல் காதலியும் நான்காம் காதலியும் ஒருத்தி தான். காட்டானின்
திருவிளையாடல்களில் இது மிகச்சாதாரணம் தான். எங்கள் உறவை பிரித்து மீண்டும் ஒட்டிவிட்டான்.

இவளுடைய புனிதத் தன்மை உறைக்க சொல்லத்தான். நித்யாவை என் வாழ்க்கையில் இணைத்தானோ… அப்படியானால் இரண்டாம் காதல் எதற்கு?

சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் என் முதல் காதல் நான்காம் காதலாக
புதுப்பிக்கப்பட்டது. பேச ஆரம்பித்த சில தினங்களிலேயே காதலை கூறிவிட்டேன். அது, அவளுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கிளப்பிவிட்டது போல…..கொஞ்சம் குழம்பிவிட்டாள். என் தரப்பு காதலை அவளிடம் முன் வைத்துக் கொண்டிருந்தேன். அதை தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருந்தாள். அதற்கான காரணம் முதலில் எனக்கு புலப்படவில்லை. கடைசியாக இன்று அனுப்பிய மெயிலில் தெளிவாக
கூறியிருந்தாள்.

இந்த புனிதச்செல்வி எதோ காட்டு குரங்கினால் துன்பப்பட்டுவிட்டது. நித்யா
எனக்கு எப்படி அனுபவமாக இருந்தாலோ… அதே போல் இவளுக்கும் அந்த குரங்கினால் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், என் வாழ்கையில் இருந்த மேன்மை இவள் வாழ்கையில் இல்லை போல…. மறுபடியும் காதலா? என பதறிவிட்டாள்.

ஆனால், அவளுக்கு என் மன திடம் பற்றி தெரியவேண்டாம். என்னுடைய மன திடத்தை எடுத்துச்சொல்ல என்ன இருக்கிறது?

தமிழ் நாட்டில் முழுநேர எழுத்தாளனாக வேண்டும் என்ற கொடூரமான சூழலில் வாழ்கிறேனே இதைவிட வேறு என்ன வேண்டும்….

இது போதும் இவள் என்னை காதலிக்காமல் போவதற்கு… இப்படியே இன்னும் பத்து வருடங்கள் இருந்தால் என்னவாகிப் போவேன் என்றே தெரியவில்லை.

அட… போதும் எழுதிருச்சு போங்கப்பா. எங்களை பிரிச்சு ஓட்டுன காட்டான் ஏதாவது செய்யரானானுன்னு பாப்போம்….. ஏனென்றால் இது ஜனரஞ்சக கதை. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங் பீல்டில் இருக்கும் பொழுதே நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு, கூலிப் பிரச்சனையால் நான் வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். அதன் ...
மேலும் கதையை படிக்க...
குருவும் சந்தியாவும் எதிரெதிர் வீட்டில் வசித்தாலும் இருவருக்கும் அவ்வளவாக பரிட்ச்சயம் கிடையாது. பத்து வருடங்களாக இப்படிதான் இருந்தது. சந்தியாவுக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்பது கனவு. அந்த கனவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். குடும்ப பொருளாதாரம் அதற்கு வழிவகுக்கவில்லை என்றாலும் தன் சுய முயற்சியில் வேலை ...
மேலும் கதையை படிக்க...
அவசர கால பிரகடனமாக ஐ.நாவில் சைனா மற்றும் இந்தியாவின் சார்பில் ஸ்ரீனியும், செந்திலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அவை, உங்களின் விழிப்புணர்வுக்காக இங்கே பதிவிடப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்தியாவிலும் சைனாவிலும் இருந்த நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சட்ட ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் நித்யாவின் பெயரை எழுதி,எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். நல்லக் காதல் கள்ளக் காதல் என நிரம்பி வழிந்தது. சில ஜோடிகள் அமர இடமில்லாமல் தேடிக்கொண்டிருந்தனர். கடலலைகள் நூற்றாண்டுகளின் கடமையை சிறு சலசலப்போடு செய்துக் கொண்டிருந்தது. கடலின் நடுவே ஒழி பிரகாசமாக வீசிக் கொண்டிருந்தது. நித்யா, என் வாழ்வை ...
மேலும் கதையை படிக்க...
224..225..226..227.. லிஃப்ட் கதவு திறந்தது. லிஃப்டிலிருந்து குமார் வெளிபட்டான். உலகின் மிகசிறிய கட்டிடமான இதில் ஒவ்வொரு தளத்திலும் 300 அறைகள் இருந்தது. குமார், தனக்கு வலது பக்கமாக இருந்த கனினித் திரையில் கட்டவிரலை பதித்துவிட்டு அறைகளை நோக்கி தரையோடு ஓடிக் கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
“அது” க்காக தான்
சந்தியா அல்லது சரண்யா
புரட்சி
நித்யா
நமூக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)