கை கொடுக்கும் கால்!

 

வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட 70 வயசு வரை தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த மனிதர், திடீரென்று தன்னம்பிக்கை பெற முடியுமா?

முடியும் போலிருக்கிறது.

பாருங்கள் அன்றைக்கு மனைவியுடன் ஆர்த்தோ டாக்டரை மந்தவெளியில் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன், என் மனைவிக்குச் சிறிய சிக்கல், மருந்துக் கடையில் மாத்திரை வாங்கப் போனபோது, முற்றும் அறிமுகமில்லாத நபர் என்னை நிறுத்தினார்.

கை கொடுக்கும் கால்நான் திகைத்தேன், சாலையில் ஒரு பக்கம் மேடு பள்ளமாக இருந்ததால், நாம்தான் அவர் மீது இடித்து விட்டோமோ என்று என் சுபாவப்படி நினைத்துக் கொண்டேன், “”யார்?” என்று ஏதோ ஆரம்பித்தேன்.

“”வேண்டாமே இந்த ஸôரி சரளி வரிசை’ என்று மனைவி காதோடு கிசுகிசுத்தாள்.

“”உங்கள் வயசு என்ன” என்று கேட்டார், சொன்னேன்.

அடுத்த கேள்வி “”எத்தனை வருஷமாக இந்த ஸ்டிக்?”

சொன்னேன்.

“”என்னைப் பாருங்கள், எனக்கு 80 வயசுக்கும் மேலே, கம்பு, வரகு எதுவுமே கிடையாது, ரைட் ராயலாக காலை அரைமணி நேரம் நடப்பேன். எல்லாத்துக்கும் தைரியம் வேணும் சார்” என்று படபடவென்று சொல்லி ஒரு நிமிடம் நிறுத்தினார். “”பூஜை மந்திரத்திலே என்ன சொல்லியிருக்கு தெரியுமா? சோமஸ்ய, தைர்ய… அப்புறம்தான் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் எல்லாம். இந்த வாக்கிங் ஸ்டிக்கிலே ஒரு சுக்கும் இல்லை. சகலமும் இங்கே இருக்கு” ஆக்ஷனோடு தன் மண்டையில தட்டிக் காண்பித்தார். ஏதோ துணிவு என்ற ஸ்தூலப் பொருள் கண்முன் தெரிவது போல.

எனக்குச் சிரிப்பும், வருத்தமுமாக இருந்தது, அதே சமயம் முன்பின் தெரியாத ஆசாமிக்கு, நான் ராயப்பேட்டையில் வாங்கின கருவி எத்தனை தன்னம்பிக்கை தருகிறது என்று மனத்தில் தோன்றியது.

இவர் இதுபோல் என்றால், உள்ளூர் மனிதர்கள் வேறு விதம். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் எதிரே எதிர்ப்பட்டார். ஸ்டிக்கைத் தள்ளி வைத்துக் கை கூப்பினேன்.

“”சார்… சார்… அப்படிச் செய்யாதீர்கள். ஸ்டிக் வைத்து நடந்து பழக்கப்பட்டவர்களுக்கு பாலன்ஸ் தவறிவிடும். நமக்குள்ள என்ன? வெறுமனே “விஷ்’ பண்ணினால் போதும்” என்று உபதேசம் வேறு செய்தார்.

தொடர்ந்து, ஸ்டிக் பற்றி ஆராய்ச்சி பண்ணின மாதிரி ஒரு கதை சொல்ல ஆரம்பித்ததை, எப்படியோ தவிர்த்துவிட்டு நழுவினேன்.

வேறொரு நடை நண்பர் என்னைப் பார்த்து “”சார் இதை எங்கு வாங்கினீர்கள்? உங்கள் உயரத்துக்கு இது சரியே இல்லை. அட்ஜஸ்டபிள் டைப் கிடைக்கிறதே” என்றெல்லாம் கூறியதோடு நிற்கவில்லை, உரிமையுடன் அந்தக் கம்பை எடுத்து வைத்துக் கொண்டு புகைப்பட “போஸ்’ கொடுப்பது மாதிரி நின்றார்.

“” யூ ஸீ எனக்கு இது ஓக்கே” என்றேன்.

மேலே குறிப்பிட்டவர்களைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு மனிதரை நான் சந்திக்க நேர்ந்தது. வழக்கமாக என் காலைப்பொழுது நடைப்பயிற்சி பிள்ளையார் கோயில் வரை இருக்கும். போகிற வழியில் ரெயில் டிக்கெட் முன்பதிவுக்காக ராஜாஜிபவன் வாசலில் க்யூ நிற்பது ஒரு தவறாத காட்சி, ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு, அந்த வரிசையை நெருங்குகையில், “”ஒன்மினிட் சார்” என்ற கம்பீரமான குரல் என்னை அழைத்தது,

சுற்றும் முற்றும் பார்த்தேன், “”நான்தான் சார்” என்று அரைக்கால்சட்டை அணிந்து, சீருடை அணியாத போலீஸ் மாதிரி ஒருத்தர் வந்தார். என்னைப் பயம் கவ்வியது. காரணம் என்னவெனில் இந்த டிக்கெட் வரிசையை ஒட்டினாற் போல், சில நாள் போலீஸ் வேன் நிற்கும், பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள், மொபெட்டுகள், பைக்குகள் அதில் கிடக்கும், வேக எல்லையை மீறிப் போனவர்களையும் அவர்கள் பிடிப்பார்கள். ஒருவேளை என் பையன் வேகமாகச் சென்று விட்டானோ? ஏதாவது காட்சி ஸிடிவியில் பதிவாகி விட்டதா? நேற்று நானும் கார் முன் ஸீட்டில் இருந்தேனே”

இதே தடா காலை வேளையில் ஒரு மினி சோதனை என்று நினைத்தேன்.

“”ஸôரி, உங்களை நிற்க வைத்து விட்டேன்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார், “”என் தகப்பனாருக்கு 83 வயசாகிறது, பாத்ரூமிலே வழுக்கி விழுந்து விட்டார், டாக்டர் ஆபரேஷன் பண்ணி சரியாகிவிட்டது. ஆனால் “வாக்கர்’ வைத்துக் கொண்டுதான் வீட்டிலேயே நடமாடுகிறார். அவர் ரிடயர்ட் ஜட்ஜ், இப்ப வீட்டிலேயே “விட்னஸ் பாக்ஸ்’ அது போல் நடப்பது அவருக்கு பிடிக்கவில்லை. கில்ட்டியாக உணருகிறார்” என்று மளமளவென்று சொல்லிக் கொண்டே போனார், “” நீங்கள் யூஸ் பண்ணுகிற மாதிரியான ஸ்டிக் அவருக்கு வசதியாக இருக்குமா? உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று சீரியஸôகக் கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, சமாளித்துக் கொண்டு “” உங்கள் டாக்டர் என்ன சொல்லுகிறாரோ அதையே கடைப் பிடியுங்கள், “ஏஜ்’ ஒரு முக்கிய பாயிண்ட். மறுபடி கீழே விழுந்தால் படுத்த படுக்கைதான்” என்று எனக்கு ஆர்த்தோ மூன்று வருடம் முன்பு சொன்ன அறிவுரைகளை மடமட வென்று ஒப்பித்தேன்.

இப்படிப் பல நபர்கள், புதிய நண்பர்கள் எல்லாரின் விமர்சனத்துக்கு ஆளான ஸ்டிக் மீது கண்பட்டுவிட்டது, நான் தேய்த்து தேய்த்து நடப்பதாலோ வேறு என்ன காரணமோ தெரியவில்லை, ஸ்டிக்கின் “மூடி’ (ஆன்ள்ட்) கழன்றுவிட்டது. புத்திசாலித்தனமாகச் செய்கிறோமென்று நினைத்து, மூடியை நானே ரப்பர் பேண்டினால் கட்டினேன், மறுபடி மறுபடி கீழே விழுந்தது, கூடவே, மற்றொன்றும் பலர் என்னை எச்சரித்தார்கள், “” இது ரொம்ப ரிஸ்க்”

இந்த உதிரியான பாகங்கள் ஹார்ட்வேர் கடையில் கிடைக்குமென்று கேள்விப்பட்டு, எல்.பி.ரோட்டுக்குச் சென்றேன். புடவைக் கடையில் வண்ணத்துக்கு ஏற்ற துணி காண்பிப்பது போல, கடை ஆசாமி கிடுகிடுவென்று பற்பல மூடிகளை எடுத்துப் போட்டான். ஊஹூம் … எதுவுமே சரியாகப் பொருந்தவில்லை. கடை முதலாளி “”ஸôரி சார், அடையாறிலே வயசானவர்களுக்கென்றே கருவிகள் தயார் செய்கிறார்கள், அங்கே கேட்டுப் பாருங்கள்” என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். அவர்களிடம் விசாரித்தேன்; தங்கள் கடையில் வாங்கின கருவிக்கான பாகங்கள் கிடைக்கும் என்றார்கள்.

வேறு என்ன மாற்று வழி? மீண்டும் போக்குவரத்து நெரிசலில், ஒற்றை வழிப் பாதையில் ராயப்பேட்டை போனேன், ஆனால் அங்கும் கூட, பொருத்தமான மூடி கிடைக்கவில்லை. “” ஸ்டிக் இங்கே இருக்கட்டும், நீங்கள் புஷ்ஷே இல்லாமல் நடந்ததால் தேய்ந்துவிட்டது, கொடுத்துவிட்டுப் போங்கள், ரெண்டு நாளில் வரவழைத்துப் பொருத்துகிறோம்” என்றார் முதலாளி. சில நாள் கழித்து, புது மூடிகளுடன் அதே ஸ்டிக்.

இவ்வளவு நேர்ந்த பின் அடுத்த வீட்டுக்காரரைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா? 40 வருடமாகப் பழக்கம், “” ஹல்லோ?” என்று என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார், “” ஸ்டிக் வசதியாக இருக்கிறதா?”

“”ஓ யெஸ்” என்றேன்.

“”யூ ஸீ திஸ்” என்று தன் கையிலிருந்ததைக் காண்பித்தார், “” எங்கே வாங்கினேன் சொல்லுங்கள்” என்றார். விநாடி வினா மாதிரி, அதுதான் கேள்வியிலேயே பதில் தொக்கி நிற்கிறதே?”

“” யு.எஸ்” என்றேன்,

“” கரெக்ட்” என்றார் உற்சாகமாக.

“”என் பெண்தான் பிடிவாதமாக அனுப்பி உபயோகிக்கச் சொன்னாள், வெரி கன்வீனியன்ட்” என்றார். பெருமைக்காகச் சொல்லாமல் நன்றியுடன் சொன்னார். என்னைவிட ஏழெட்டு வயது மூத்தவர், இன்னமும், எப்போதாவது ஸ்கூட்டரில் செல்கிறார், அவருக்கு மரியாதை தராமலிருக்கலாமா?

நடந்து போக மட்டுமல்லாமல், இந்தக் கம்பு சில பைகளை மாட்ட, வைக்கத் தோதாயிருக்கிறது, கூட்டத்தில் நுழையும்போது முன்னுரிமை கிட்டுகிறது. மனத்தில் சிறிய உறுத்தலாயிருந்தாலும். ஆனால் நான் இப்போது ஸ்டிக்கை உபயோகப்படுத்துவது ஆர்த்தோ பிராப்ளத்துக்காக அல்ல, வேறு சின்ன நியூரோ பிராப்ளம்.

மூலையில் சுவரோடு சாய்ந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பார்த்தேன், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் துவக்ககால நிகழ்வு ஞாபகம் வந்தது.

ஒரு சமயம், ஆங்கிலத்தில் நஐயஅ என்றிருந்ததை “கடவுள்’ என்று மொழி பெயர்த்திருந்தாராம். அதைக்கண்ட திரு.வி.க, “”ஏன்? சிவனை உங்களுக்குப் பிடிக்காதா?” எனக் கேட்டிருக்கிறார்.

“”பேஷாகப் பிடிக்கும், ஆனால் அவருடைய நெற்றிக்கண்ணை மூன்றாவது கண்ணை எனக்குப் பிடிக்காது” என்று கல்கி பதிலளித்திருக்கிறார்.

என் அனுபவம் வேறுவிதம். இந்த மூன்றாவது காலுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது. இல்லாவிட்டால், சில சமயங்களில் மறந்து போய் விட்டால் கூட கை தட்டி, அழைத்துத் திரும்பத் தருவார்களா?

“”இரண்டு அடி நீளமும், மூன்று பிடிகளும் கொண்ட வாக்கிங் ஸ்டிக்கே? உனக்கு என் மனமார்ந்த நன்றி!” என சொல்லிக் கொண்டேன்.

- வாதூலன் (ஜூன் 2015) 

தொடர்புடைய சிறுகதைகள்
விடாமுயற்சியும் மன உறுதியும்…
அழகான மலைகள் சூழ்ந்த கிராமம். மலைகளின் ஊடாக சலசலவென பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் இரண்டு குருவிகள் ஒரு மரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒருசமயம் பெண் குருவி மூன்று முட்டைகள் இட்டது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் எப்போது வெளியே வரும் என எண்ணி ...
மேலும் கதையை படிக்க...
கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 . பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம் அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். ...
மேலும் கதையை படிக்க...
மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான். இருட்டி விடவே, இனிமேலும் பயணம் வேண்டாம் என்று முடிவு செய்து, அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் ...
மேலும் கதையை படிக்க...
சரஸ்வதி விஜயம்!
'நாராயண... நாராயண... ’ - கர்ண கடூரமான குரலைக் கேட்டு டென்ஷன் ஆனார் தோட்டா தரணியின் வெள்ளைத் தாமரை இலை செட்டிங்கில் அமர்ந்துஇருந்த சரஸ்வதி. மனசுக்குள், 'இந்தாளு வந்தாலே கெரகமாச்சே...’ 'உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்டுடிச்சி தாயே!' 'ம்க்கும், வா நாரதா வா... ...
மேலும் கதையை படிக்க...
தொலைதூரத்து வெளிச்சம்
""பாத மலை தெரியுது சிவா....எழுந்திரு'' - மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப் போல் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து நின்று பேருந்தை நிறுத்தும்படி குரல் கொடுத்தான். பேருந்து நிறுத்தமோ, சாலை பிரியுமிடமோ, மனித நடமாட்டமோ இல்லாத ...
மேலும் கதையை படிக்க...
ஏக்கத் தீ…
தென்தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமம்.மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. குண்டும் குழியுமாய் மழைநீர் தேங்கி நாற்று நடும் அளவிற்கு சேறும் சகதியுமாய் இருந்த அந்தத் தெருவின் ஓரத்தில் சிறுவர் கூட்டம் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தது. "ஏலேய்... காசி... காசி...' என்ற குரல் பக்கத்துக் ...
மேலும் கதையை படிக்க...
“நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன் எழுத்தைப் போலவே நிஜத்திலேயும் வாழறவன். சமூகத்தைப் பற்றிய ஒரு பார்வையும், கோபமும், பொறுப்பும் இருக்கிறவன். பாலியலையும், ஆபாசத்தையும் அவன் என்றைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள் என்னை வித்தியாசமாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாதபடி ஆண்டவன் எனக்கு காதுகளை காதுகள் போலவும், கண்ணை கண் போலவும், ...
மேலும் கதையை படிக்க...
சுண்டல் செய்த கிண்டல்
சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு ...
மேலும் கதையை படிக்க...
எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என் கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினாலும் அவள் பேச்சிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவதால் என்னிடம் இருந்து தப்பித்துக் ...
மேலும் கதையை படிக்க...
விடாமுயற்சியும் மன உறுதியும்…
கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும்
கடவுள் வசிக்குமிடம்…
சரஸ்வதி விஜயம்!
தொலைதூரத்து வெளிச்சம்
ஏக்கத் தீ…
அங்குசம்
கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை
சுண்டல் செய்த கிண்டல்
உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)