வாக்கு தவறினாள்!

 

Ambulimama_Tamil_1996_02_0025-picதன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீதேறி அதில் தொங்கும் உட லைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச்சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல் கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து ”மன்னனே! நீ இந்த பயங்கர நடு நிசியில் இப்படி சிரமப் படுவதைப் பார்த்தால் நீ யாருக்கோ ஏதோவாக்குறுதி கொடுத்திருக்கிறாய் என்பது தெரிகிறது. வாக்குறுதி கொடுப்பது எளிது. ஆனால் அதைக் காப்பது கடினம். இதை விளக்க உனக்கு ராணி ரத்தினாவளியின் கதை யைக்கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பிததது.

மங்களபுர மன்னன் மந்தஹாசன். அவன் மனைவி ரத்தினாவளி. ரத் தினாவளி சிறு குழந்தையாக இருந்த போதிருந்தே மந்தஹாசனின் தாய் அவளைத் தன் மகளோடு சேர்த்து வளர்த்து வந்தாள். அவள் விருப்பம் ரத்தினாவளியை மந்தஹாசனுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்பதே.

மந்தஹாசனும் ரத்தினாவளியும் ஒன்றாகவே ஒருவர் மீது மற்றவர் அன்பு கொண்டு வளர்ந்து வந்தார்கள். அவர்கள் விவாக வயதை அடைந்த போது மந்தஹாசனின் தாயார் அவர் களது விவாகம் பற்றிப் பேச்சு எடுக் கவே, ரத்தினாவளி தயங்கினாள். ஏனென்றால் மந்தஹாசன் நன்கு வளர்ந்து மிக மிக அழகாக இருந் தான். ரத்தினாவளியோ அழகு குறைந் தும், நிறத்திலும் சற்று மட்டமாகவும் இருந்தாள். அதனால் அவள் தான் மந்தஹாசனைமணப்பது சரியா என்று யோசிக்கலானாள்.

ரத்தினாவளியை மந்தஹாசனுக்கு அவனது தாய் மணம் செய்து வைக்கப் போவதாக அவளது தோழிகள் அறிந்த தும் அவர்கள் அவளிடம் ”ரத்தினா! இப்போது தன் தாயார் சொல்கிறாளே என்பதற்காக அவர் உன்னை மணந்து கொண்டு விடலாம். ஆனால் மிக அழ காக உள்ள உன் கணவரை இன் னொரு பெண்ணோ ஒரு கந்தர்வப் பெண்ணோ மணந்து கொள்ள மாட் டாள் என்பது என்ன நிச்சயம்?” என்று ஒரு பிரச்னையைக் கிளப் பினார்கள். |

இதைக் கேட்ட ரத்தினாவளியும் நன்கு யோசித்தாள். ஒருநாள் அவள் மந்தஹாசனிடம் ”நான் உங்களை மணக்கக் தகுதி பெற்றவள் அல்ல. நீங்கள் உங்கள் அழகிற்கு ஏற்ப அழ கிய பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்ளுங்கள்” என்று கூறி னாள்.

Ambulimama_Tamil_1996_02_0026-picமந்தஹாசனோ அதைக் கேட்டு பல மாகச் சிரித்து “ரத்தினா! வீணாக என் னென்னவோ எண்ணிமனதைக் குழப் பிக் கொள்ளாதே. நான் உன்னைத் தவிர யாரையும் மணக்கப் போவ தில்லை. உன்னைத்தவிரவேறு யாரும் எனக்கு மனைவியாகப் போவ தில்லை ” என்று கூறினான்.

அது கேட்டு ரத்தினாவளி மகிழ்ந்து போனாள். விரைவிலேயே அவர் களது திருமணமும் நடைபெற்றது.

அவர்களது இல்வாழ்க்கையும் ஆனந்த மாகக் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் மணமாகி சில ஆண்டுகளாகி யும் அவர்களுக்குக் குழந்தை பிறக்காத தால் ரத்தினாவளி மிகவும் கவலைப் படலானாள்.

ஒரு பௌர்ணமி நிலவில் ரத்தினா வளி தன் கணவனுடன் ஆற்றில் ஒரு படகில் உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தாள். அச்சமயம் சந்திர காந்தா என்ற கந்தர்வப் பெண் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் மந்தஹாசனையும் ரத்தினா வளியையும் பார்த்தாள்.

சந்திகாந்தா கந்தர்வலோகத்தில் மகா அழகி எனப் பெயர் பெற்றவள். அவள் கந்தர்வலோகத்தில் தான் மணக்கத் தக்கவன் யாருமே இல்லை எனக்கர்வமாகக்கூறி வந்தாள். அவள் மந்தஹாசனைக்கண்டதும் அவனைத் தன் கணவனாக அடைவது என்று எண்ணி அவ்விருவர் கண்களுக்குப் புலப்படாமல் அவர்களோடு இருந்து அவர்கள் தமக்குக் குழந்தை இல்லாத குறை பற்றிப் பேசிக் கொள்வதைக் கேட்டாள். அதன் பிறகு அவள் அப் போது கந்தர்வ லோகத்திற்குச் சென் றாள்.

ஆனால் மறுநாள் மந்தஹாசன் தனிமையில் பூங்காவில் இருந்த போது சந்திரகாந்தா அவனைக்கண்டு ”நான் கந்தர்வப் பெண். கந்தர்வ லோகத்து அழகி என்று பெயர் பெற்ற வள். என் அழகிற்கு ஏற்றவன் கந்தர்வ லோகத்திலேயே இல்லை. நேற்று நீயும் உன் மனைவியும் படகில் போய்க் கொண்டிருப்பதைக் கண் டேன். உன்னைக் கண்டது முதல் உன்னையே மணக்க என் மனம் துடிக் கிறது. எனவே என்னை நீ மணந்து கொள்” என்று வேண்டினாள். மந்த ஹாசன் அவளது அழகைக் கண்டு ஆச் சரியப்பட்டாலும் அவளது வேண்டு கோளை நிராகரித்து விட்டான்.

இதனால் சந்திரகாந்தா மனம் தளர்ந்து போய் விடவில்லை . அவள் தனிமையிலிருந்த ரத்தினாவளியைக் கண்டு மந்தஹாசன் தன்னை மணக்க மறுத்ததைக் கூறி ”அவன் உன்னைத் தான் மிகவும் விரும்புகிறான். மிக அழகாக உள்ள கந்தர்வப் பெண்ணான நான் வேண்டியும் அவன் என்னை மணக்கச் சம்மதிக்கவில்லை . அழகு பற்றி ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லையே. இது பற்றியாவது நீ யோசித்துப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.

Ambulimama_Tamil_1996_02_0027-picஅது கேட்டு ரத்தினாவளி மனவருத் தப்பட்டாளாயினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ”ஆமாம். இதையெல்லாம் நீ எதற்காக என்னிடம் கூறுகிறாய்?” என்று கேட்டாள்.

சந்திரகாந்தாவும் ”எல்லாம் ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன். நீ உன் கணவன் சுகமாக இருக்க வேண்டு மென்று தன் நலம் கருதாமல் இருக் கிறாய் என்பது உண்மையானால் நீ உன் கணவனிடம் என்னை மணந்து கொள்ளும்படிக்கூற வேண்டும். ஒரே வருடத்துள் எனக்கும் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கும். அவர் என்னுடன் சுகமாக இருக்கலாம். என்னை அவர் மணந்து கொண்டாலும் அவர் உன்னை உதாசீனப்படுத்த மாட்டார். நீ சுயநலமில்லாமல் அவரது நலனையே கருதுவதற்காகவும் அவர் உன்னைப் பாராட்டுவார். இது பற்றி நன்கு யோசித்துப் பார்” என்றாள்.

ரத்தினாவளியும் சற்று யோசித்து விட்டு “இதற்கு ஒரு நிபந்தனையின் பேரில் நான் சம்மதிக்கிறேன். இன்று சித்திரை மாத கிருஷ்ண பட்சப் பஞ் சமி. இன்றிலிருந்து சரியாக ஒரு வருட கால அவகாசம் எனக்குக் கொடு. அடுத்த ஆண்டு சித்திரை மாத கிருஷ்ண பட்சப் பஞ்சமிக்குள் நான் தாயாக ஆகாவிட்டால் என் கணவர் உன்னை மணந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன். இது நான் கொடுக்கும் வாக்குறுதி” என்றாள்.

சந்திரகாந்தாவும் அதற்குச் சம்ம தித்து விட்டு அங்கிருந்து சென்றாள். அதற்கு மறுநாள் ரத்தினாவளி கோவி லுக்குப் போய் அம்பிகையை தரிசித்து விட்டுத் திரும்பிவரும் போது அக் கோவிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ஒரு சாது அவளை தன்னருகே அழைத்து” பெண்ணே ! நீ உனக்குத் குழந்தை பிறக்கவில்லையே என்று தானே கவலைப்படுகிறாய்?” என்று கேட்டார். அவளும் ‘ஆம்’ என்று கூறவே அவரும் ”எங்கே , உன் கையைக் காட்டு” என்றார். அவளும் தன் இடது கையை நீட்டவே அவர் அதன் ரேகைகளைப் பார்த்து விட்டு ”உன்கையில் சந்தானரேகை என்பதே இல்லையே. ஆனாலும் உன் எதிர் காலம் ஒளி மயமாக இருக்கும் நீ ஒரு வேலை செய்வாயா?” என்று கேட்டார்.

அவளும் ”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கவே அவ ரும் ‘இந்நாட்டின் வடதிசையில் மந்தரமலைத் தொடர் உள்ளது. அதன் நடுவே செல்லும் கணவாய் வழியே போனால் மலையின் மறுபுறம் சிவ பாதர் என்று மகானின் ஆசிரமம் உள்ளது. நீயும் உன்கணவரும் சித்திரா பெனர்ணமியன்று அதிகாலையில் அவரை கண்டு சிருங்கர் என்பவர் உங்களை அவரிடம் அனுப்பியதாகக் கூறினால் அவர் உங்களுக்கு எதாவது வழி கூறுவார்” என்றார்.

Ambulimama_Tamil_1996_02_0028-picஅவளும் “சுவாமி! தாங்கள் கூறிய படியே செய்கிறோம்” என்று கூறி அவரை வணங்கி விட்டுச்சென்றாள். அன்றிரவு ரத்தினாவளி தன் கணவனி டம் சாது கூறியதைச்சொல்லி. “இதை யும் கடைசி முயற்சி என்று பார்த்து விடலாம். ஒருவேளை அந்த மகானின் அருளால் நமக்கு சந்தான பாக்கியம் கிடைத்தாலும் கிடைக்கலாம். எனக் காக நீங்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டும்” என்றாள். மந்தஹாசனும் “ரத்தினா! நாம் இருவரும் கணவன் மனைவியர். சுகதுக்கங்களைச் சம மாகப்பகிர்ந்து கொள்ள வேண்டியவர் கள். இதுவரை இப்படித்தான் இருந் தோம். இனியும் இப்படியே இருப் போம்” என்றான்.

சாது கூறியபடியே ரத்தினாவளியும் மந்தஹாசனும் மந்திர மலைக் கண வாய் வழியே சென்று சிவபாதரின் ஆசிரமத்தை அடைந்தார்கள். சித்திரா பௌர்ணமியன்று காலையில் அவர் கள் அவரை தரிசித்து சிருங்கர் என்ப வர் அவர்களை அனுப்பியதாகக் கூறினார்கள்.

சிவபாதரும் அவர்களிடம் கனி வுடன் பேசி அவர்களது பிரச்னை யைத் தெரிந்து கொண்டார். பிறகு அவர் மந்தஹாசனிடம் அவனது வலது கையை நீட்டச்சொல்லி அதன் ரேகைகளைப் பார்த்தார். சற்று நேர மானதும் அவர் ”உன் கையிலும் சந் தான ரேகை என்பது இல்லை. அத னால் எதாவது ஒரு அற்புதம் நிகழ்ந் தால்தான் உங்களுக்குக் குழந்தை பிறக்க வழி உண்டு’ என்றார்.

அது கேட்டு ரத்தினாவளியும் மந்த ஹாசனும் அற்புதம் நிகழ வேண் டுமா? அது எப்படி?” என்று ஆச்சரி யப்பட்டுக் கேட்டார்கள் சிவபாதரும் ”ஆமாம். நான் சொல்வதைக் கேளுங் கள். இங்கிருந்து மூன்று யோசனை தூரத்தில் மிகப் பழமையான சிவால யம் ஒன்று உள்ளது. அதில் மிகப் பழைய மாமரம் ஒன்று இருக்கிறது.

அது Ambulimama_Tamil_1996_02_0029-picஒரு வருடத்திற்கு ஒரு பழம் தான் கொடுக்கும். பய பக்தியுடனும் அந்த ரங்கசுத்தியுடன் இருந்து ஒருவன்தான் அடைய வேண்டியதை நினைத்துக் கொண்டு அந்தப் பழத்தைத் தன் துண்டில் பிடித்துக் கொள்ள அந்த மரத்தின் கீழ் நிற்க வேண்டும். அவன் நேர்மையானவன் என்றால் அந்தப் பழம் அவன் பிடித்திருக்கும் துண்டில் தானே வந்து விழும். அவன் நேர்மை யற்றவன் என்றால் பழம் தரையில் விழுந்து விடும். தரையில் விழுந்த அந் தப் பழத்தை எடுத்துத் தின்றால் எவ் விதப் பலனும் கிடைக்காது. துண்டில் விழுந்த பழத்தை எடுத்துச் சாப்பிட் டாலே மனதில் எண்ணியது நடக்கும். இன்றிரவு சந்திரோதயம் ஆகும் போது நீங்கள் அந்த மரத்தடியே போய் நில் லுங்கள். மந்தஹாசன் தன் அங்கவஸ் திரித்தை விரித்து நிற்கட்டும். ரத்தினா வளி தன் புடவையின் தலைப்பை விரித்து பிடித்துக் கொண்டு நிற்கட் டும். யாருக்குப் பழம்கிடைக்கிறதோ பார்க்கலாம்” என்றார்.

அப்போது ரத்தினாவளி ”சுவாமி! நான் விரும்புவதெல்லாம் எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என் பதே” என்றாள். அது கேட்டு சிவ பாதர் “தர்ம சூட்சுமத்தை யார் அறி வார்? எல்லாம் அந்த பகவானின் செயல். அவன் இஷ்டப்படிதான் எது வும் நடக்கும்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். ரத்தினாவளியும் மந்தஹாசனும் சிவபாதரிடம் விடை பெற்றுக் கொண்டு சந்திரோதயம் ஆவதற்கு முன் அந்த சிவாலயத்தை அடைந்தார் கள். அவர்கள் அங்கிருந்த பழைய மாமரத்தடியே நின்றார்கள். மந்த ஹாசன்தன் அங்கவஸ்திரத்தை விரித் துப்பிடித்துக்கொண்டும் ரத்தினாவளி தன் புடவைத் தலைப்பை விரித்துப் பிடித்துக் கொண்டும் நின்றனர்.

சந்திரோதயம் ஆயிற்று மரத்தி லிருந்த மாம்பழம் மெதுவாகக் கீழே சாய்ந்து வரலாயிற்று. அது நேராக மந்த ஹாசனின் அங்கவஸ்திரத்தில் வந்து விழுந்தது. அது கண்டு ரத்தினாவளி ஆச்சரியப்பட்டாள். அதன்பின் இரு வரும் அந்தப் பழத்தைப் பகிர்ந்து தின்றார்கள். அதன் பின் ரத்தினாவளி ”நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு நின்றீர்கள்?” என்று கேட்டாள்.

மந்தAmbulimama_Tamil_1996_02_0030-picஹாசனும் ”ரத்தினா! நான் சொல்லப்போவதைக் கேட்டு நீமகிழ் வாய் என்றே நினைக்கிறேன். இந்தப் புனித மரத்தடியே நின்று தாம் கோரு வது நியாயமானதாய் இருக்க வேண் டும். நமக்கு சந்தான பாக்கியம் இல்லை என்று விதிக்கப்பட்டது. அதை மீறி நமக்குக் குழந்தை வேண்டு மென்று விரும்புவது சரியா என்றுநான் சந்தேகப்பட்டேன்! முறையாக கண வனுக்கும் மனைவிக்கும் குழந்தை பிறக்க வேண்டும். வேறு எவ் வழியில் அது பிறந்தாலும் தர்ம நியாயமாகாது. எனவே நாம் இருவரும் வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்கும்படிச் செய்தாலே போதும் என நினைத் தேன். அவ்விதமே ஆசி கூறும்படி அந்த மரத்திடமும் வேண்டினேன்” என்றான்.

அது கேட்டு ரத்தினாவளி திகைத்தா லும் தனக்கு இப்படி உயர் நோக்கம் கொண்ட கணவன் கிடைத்ததற்காக மகிழ்ந்தாள். மறுநாளே அவர்கள் தலைநகருக்குத் திரும்பி வந்தார்கள். இதற்குப் பின் ஐந்தாவது நாள் கிருஷ்ண பட்சப் பஞ்சமி வந்தது. சந்திரகாந்தாவும் ரத்தினவளியைப் காண வந்தாள்.

ரத்தினாவளியும் அவளை வர வேற்று உட்கார வைத்து ”சந்திர காந்தா! நான் கொடுத்த வாக்கின் படி நடக்க முடியவில்லை . என்னை மன்னித்துவிடு. என்கணவர் என்னைத் தவிரவேறு எந்தப் பெண்ணையும்தம் மனைவியாக ஏற்க முடியாது என்று கூறி விட்டார்’ என்று கூறி எல்லா வற்றையும் விவரமாகக் கூறினாள்.

எல்லாவற்றையும் கேட்ட சந்திர காந்தாரத்தினா! நீமிகவும் கொடுத்து வைத்தவள். விரைவிலேயே உங்களுக் குக்குழந்தை பிறக்க ஆசிகூறுகிறேன்” எனக்கூறிவிட்டு மறைந்து போனாள். என்ன ஆச்சரியம்! விரைவிலேயே ரத்தினாவளி கர்ப்பவதியாகி அழ கான ஆண்குழந்தையைப் பெற்றெடுத் தாள்.

வேதாளம் இக்கதையைக் கூறி “மன்னனே! ரத்தினாவளிசந்திரகாந்தா விற்குத் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனதும் சந்தான ரேகையே இல்லாத ரத்தினாவளி குழந்தை பெற்றதும் சரியா? இக் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந் திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

Ambulimama_Tamil_1996_02_0031-picவிக்கிரமனும் “ரத்தினாவளி தன் சுயநலம் காரணமாக வாக்குத் தவற வில்லை . அவளது கணவன் கூறிய விளக்கம் அவளுக்குச்சரியானது எனத் தோன்றியது. ஏனெனில் அவர்களுக் குக் குழந்தை பிறக்காது என விதி எழுதி விட்டது. அதைமீறினால்தர்மத் திற்கு விரோதமாகும். எனவே இருக் கும் வாழ் நாளைச் சுகமாகக் கழிக்க மந்தஹாசன் எண்ணியது சரியே என அவள் எண்ணினாள். இப்படி இரு வரும் எண்ணியது மிக உயர்ந்த நோக்க மாகும். இது நிறைவேற ஆசி கூறி னாள் சந்திரகாந்தா. எனவே மந்த ஹாசனின் உயர்ந்த நோக்கம் சந்திர காந்தாவை மணக்க விடாமலும் ரத்தினாவளிக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தையும் அளித்தது என் றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதி லால் அவனது மௌனம் கலையவே அவன்சுமந்து வந்த உடலோடு வேதா ளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

- பெப்ரவரி 1996 

தொடர்புடைய சிறுகதைகள்
கோரமுகிக்கு மோட்சம்!
தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! ...
மேலும் கதையை படிக்க...
கற்பனைக் காரிகை
தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில் ...
மேலும் கதையை படிக்க...
கோரமுகிக்கு மோட்சம்!
கற்பனைக் காரிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)