ஷாலினிக்குப் பாராட்டு….!

 

பள்ளி வளாகத்தினுள் அன்னை அருள்மேரி ஆங்கிலப்பள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பார்வையாளர்களாக பெற்றோர், பொது மக்கள். மேடையில்;….சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அதிகாரி அமர்ந்திருக்க… ஆசிரியை ஆர்த்தி அறிவிப்பின்படி தலைமை ஆசிரியை மரிபிலோமினா மாணவ மாணவிகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தாள்.

”எங்கள் பள்ளியில் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லாமல் தமிழுக்கும் முதலிடம், முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளைத் தாய்மொழியிலும் சிறப்பாக வர ஊக்குவிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இந்த பள்ளியில் முதல் வகுப்புப் படிக்கும் மாணவி ஷாலினி திருக்குறளில் உள்ள மொத்தக் குறள்களையும் சொல்லி பரிசுப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள் என்பதை மகிழ்வோடு சொல்லி  அவளை மேடைக்கு வந்து பரிசு பெற அழைக்கிறேன்.” ஆர்த்தி ஒலி பெருக்கியில் அறித்தாள்.

அதைத் தொடர்ந்து மேடைக்கு முன் பெற்றோர்களுடன்  முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த ஆறு வயது குழந்தை மேடை ஏறி….தலைமை ஆசிரியைக் கொடுத்த புத்தகத்தைப் பெற்றாள்.

அடுத்த விநாடி, ”வேண்டாம் மிஸ் !” அவளிடமே திருப்பி நீட்டினாள்.

மேடையில் இருந்தவர்கள், பார்வையாளர்களுக்குப் பரபரப்பு, அதிர்ச்சி.

”ஏன்ன்….????” அது கொடுத்தவளையும் தாக்கி, மறைத்து புன்னகையுடன் வாஞ்சையாய்க் கேட்டாள்.

”நான் தமிழ் சொன்னதுக்கு நீங்க தமிழ் புத்தகம்தான் தரணும். ஆங்கிலப் புத்தகம் வேண்டாம்.”

”அப்படியா !!!?……..”. அடுத்து அதிர்வையும் அதே புன்னகையால் மறைத்த தலைமை ஆசிரியை அடுத்தவிநாடி…, ”இந்தக் குழந்தை புத்திசாலித்தனம், தைரியத்திற்காக இந்த ஆண்டின் இந்தப் பள்ளி சிறந்த மாணவி எனும் பரிசையும் பெறுகிறாள்!” – சொல்லி….மேசை மீதிருந்த சால்வையை எடுத்துப் போத்தி,அங்கிருந்த பெரிய சுழற்கோப்பையையும் அவளுக்கு அளித்து முத்தம் கொடுத்தாள்.

கூட்டம்…..மகிழ்ச்சி ஆரவாரத்தில்….ஒலி விண்ணைத் தொட்டது.

விழா முடிந்த…. ஒரு மணி நேரத்தில்……

”நீங்க, சிறப்பு விருந்தினருக்கு வாங்கி வைத்த பொன்னாடை, சுழற்கேடையத்தை ஷாலினிக்குப் போர்த்தி,  இந்த ஆண்டு சிறந்த மாணவின்னு புது அறிவிப்பும் செய்து கௌரவச்கிருக்கக் கூடாது மேடம்.” குறைபட்டாள் ஆர்த்தி.

அவளைத் தொடர்ந்து மற்ற ஆசிரியைகளும் அதை ஆமோதித்தார்கள்.

”நியாயம்தான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ஷாலினி முதுகுல ஒன்னு வைச்சு போடி துரத்த ஆசை. முடியலையே ?! ” ஆதங்கப்பட்டாள் தலைமை ஆசிரியை.

”ஏன் மேடம் ? ”

”நிகழ்ச்சியை எல்லாரும் கைபேசியிலும் கேமராவிலும் பதிவு செய்திக்கிட்டிருக்காங்க. ஷாலினியைச் சும்மா திருப்பி அனுப்பினாலே அப்போதைக்கு அது வெடிக்காமல்…..அது வாட்ஸ்அப், யூ டியூப் எமன்களுக்குப் போய்.. நாம மொத்தப் பேரும் காலி, பள்ளிக்கூடப் பேரும் நாசம். அதனால்தான் சமயோஜிதமாய் அந்தக் காரியத்தைச் செய்தேன். அதனால இப்போ நமக்கும் நல்ல பேர். இன்னைக்கு எங்கிருந்து எது புறப்படும்ன்னு இந்த புது எமன்களால எதிலும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டி இருக்கு. நீங்களும் அப்படி இருங்க.” எச்சரித்து நகர்ந்தாள்.

கேட்ட ஆசிரியைகள் உறைந்தார்கள் 

தொடர்புடைய சிறுகதைகள்
புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்.... புது சோபா, புது பாலிமர் நாற்காலி. சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். ஷோ கேசில் பொம்மைகள், பூக்கள். '' இந்த வீட்ல டி. வி. மட்டும்தான்ப்பா பழசு..! ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு அந்த வீட்டு வாசலில் மனைவியுடன் நின்ற தனசேகரன் தன் கையிலுள்ள தினசரியை விரித்து விலாசத்தை சரி பார்த்தான் சரியாக இருந்தது. முகத்தில் மலர்ச்சி. திவ்வியாவிடமும் காட்டினான் திருப்தி. இருவரும் வாசல் ஏறினார்கள். தனசேகரன் அழைப்பு ...
மேலும் கதையை படிக்க...
பாமினிக்குத் தன் கணவனை நினைக்க... பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம் தெரியாத நபரிடம் இல்லாததும் பொல்லாததுமாய்ச் சொன்னால் யாருக்குத்தான் கடுப்பு, வெறுப்பு வராது. சேதி கேட்ட அந்த அம்மாள் ஓ.... அந்தப் பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. '' என்னடி..! உண்மையா..? '' - சேதி சொன்ன அந்த சிறுமியை அந்த இருட்டிலும் கூர்மையாகப் பார்த்தேன். '' ஆமாக்கா.! அந்தக் குருட்டு செங்கமலம் பேருந்து நிலையத்துல ஆள் அரவமில்லாத இடத்துல வழக்கம் போல படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தது. அந்த ...
மேலும் கதையை படிக்க...
மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி வரிசைப் பணம் கொடுக்க வேண்டும். மணியார்டர் செலவு தனி. கையில் பைசா இல்லை.!! வீட்டில் ஆண் பிள்ளையாய்ப் பிறந்தது பெரிய தப்பு. ...
மேலும் கதையை படிக்க...
கோபாலா…கோபாலா…!
குழந்தை…!
பாவம்…!
செங்கமலம்..!
வரிசைப் பணம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)