Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மாமனிதர்கள்!

 

Mamanitharkalஎங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா குமாரு நீயும் காதல் மன்னன்டா யப்பா.

எத்தனையோ பேரு அழுதுகினும் கத்திகினும் வந்து பாத்திருக்கேன், ஆனா அவ அழுதது மட்டும் என்னைய இன்னா பண்ணுச்சுனு தெரில. அவ அழுதது எனக்கு கஷ்டமா, இல்ல அவ கண்ணு அழுதது எனக்கு கஷ்டமா. ஒருவேளை பொணத்து கூட ஒரே பொண்ணா வந்த நால நமக்கு ஃபீலிங்கா, சே சே அதெல்லாம் இல்ல அவட்ட என்னமோ இருந்துச்சு ஆனா என்னனு தான் சொல்ல முடியல.

சரிடா யப்பா எதோ இருந்துச்சு, அவங்க அப்பனை போஸ்ட்மாடம் பண்ணி அடக்கம் பண்ண உதவி பண்ணுனேன், அதுக்குலாமா காதல் வரும். அப்போ அவட்ட நீ பார்த்த மாதிரி என்னமோ உன்னாண்டயும் அவ பார்த்திருக்கா நைனா. சரி சரி அப்புறம் எங்க பார்த்தேன் அவள. அடுத்தநாள் ரோட்டுல மயங்கி கிடந்தா. கன்னம் ரெண்டும் ஒட்டி போயி கிடந்துச்சு. இந்த கையி பாசமா தொட்ட மொத கன்னம் அதான்.

அப்புறம் வீட்டாண்ட இழுத்துனு போயி ரெண்டு இட்லி வாங்கி குடுத்தேன். அதுக்கும் சொந்த குடிசை இருந்துச்சு, அதோட போயிருக்க வேண்டிய தான. நீ எங்கடா விட்ட பேமானி. அதான் என்ன ஏதுனு விசாரிச்சு ஒரு வழி பண்ணிட்டியே. ஆமா நான் விசாரிச்சா மட்டும் காதல் பொத்துக்கினு வந்துடுமா. அவளுக்கும் நம்பிக்கை இருந்துறுக்கு மேன், அதுனால தான் என்னைய கட்டிக்கினா.

என்னா அழகு அவோ. அவோ அழகுக்கு அவோ வாழ்க்கைல எத்தன ஹீரோ வோணா இருந்துறுக்கலாம், ஆனா எனக்கு அவோ தான் மொத ஹீரோயினி. என்ன கட்டிக்குனு வந்த கொஞ்ச நாளுலே கும்தானு ஆயிட்டா என் நீலமயிலு. அவ அப்பன் கீஞ்ச வாயன் இருந்தா கூட அவள இம்மா நல்லா பாத்துருப்பானா. அவன் இன்னா பாத்தான் சோமாரி, எங்க போயி இன்னா பேசுனானோ அவன் வாய கீச்சி கொன்னுட்டாங்கோ. எப்படியோடா சாமி நீ செத்த நால தானே அவோ என்னாண்ட வந்தா. இல்லை நீ சொந்த குடிசையும் வசிக்கினு இந்த போஸ்ட்மாடம் பண்ற பயலுக்கு உன் பொண்ண குடுத்திருப்ப? நல்லா குடுத்திருப்ப, மயிருல குடுத்திருப்ப. சரி விடு குமாரு போயிட்டு போறான் வெட்டிப்பய, இப்போ எதுக்கு அந்த கீஞ்ச வாயன் பேச்சு.

என்னோட நீலமயிலு அந்த மொத நாலு ராத்திரில கையில சொம்போட வந்து வெளக்கு வெளிசத்துல நின்னு வெட்க பட்டுச்சு பாரு. ஐயோ சாமி! ஒம்போது வருஷமா நானும் இந்த சென்னைல வந்து ஒவ்வரு தியேட்டரா ஏறி எறங்குறேன், ஒருத்தி காட்டலயே அந்த ஜாலத்த. இன்னைக்கு நைட்டு கனவுல வந்து வெட்க படுவா, நான் வோணா சிபாரிசு பண்றேன் வந்து நடிக்க கத்துக்கோங்கடீ எல்லாரும்.

அவோ காதல் வந்து முட்டுன நாலயோ என்னமோ தெர்ல, அன்னைக்கு என்னை அறியாம அந்த அஞ்சு வயசு பொண்ணு ரேப் கேஸ் ஒடம்பை தொடுற அப்போ கையெல்லாம் ஒதரிடுச்சு. கண்ணு அதும்பாட்டுக்கு சாரையா ஊத்துது. அரிப்புக்கு பொறந்த கம்முனாட்டிங்கோ. வெளிய நிக்குற பெத்ததுங்கள நெனச்சி பார்த்து, முடியலனு சொல்லிட்டு கெளம்பவும் மனசு இல்ல. அந்த முனுசாமி பேமானியும் குடிச்சுட்டு அன்னிக்கு லீவ் போட்டுட்டான். நானும் எம்பாட்டுக்கு விட்டுனு போயிருந்தா இன்னும் கூட ஒருநாள் ஆயிருக்கும் பாவம். முடிச்சு குடுத்துனு அவங்க சொந்தத்துட்ட பாப்பா பேரு இன்னானு கேட்டேன், “திரௌபதினு” சொன்னாங்கோ. அதே நெனப்புல உம்முனு வீட்டுக்கு போனா சரியா கண்டுபுடிச்சாலே என் மயிலு.

இன்னாயா உன்னாண்ட நல்ல விஷயம் சொல்லலாம்னு வந்தா உம்முனு இருக்க அப்படினு கேட்டா. அவங்க அப்பன் கீஞ்ச வாயனுக்கே சுருண்டு விழுந்தவ அவோ, நல்லதா என்னமோ சொல்ல வந்தானு சப்பக்கட்டு கட்டி மூடிட்டேன் அந்த விஷயத்த. சரி இன்னாடி மேட்டர்னு கேட்டா, மூனு மாசம் முழுகாம இருக்கேன்னு சொன்னா. அன்னைக்கு அதே மொத ராத்திரில பார்த்த வெட்கம், நானும் அதே மாதிரி பாயோட சுருட்டி போட்டுகிட்டனே. ஆனா அடுத்த நாளு அவளாண்ட கண்டிஷனா சொல்லிபுட்டேன், பொண்ணு பொறந்தா நிச்சயம் திரௌபதி தான் பேருனு. அவளும் பதிலுக்கு போயா எனக்கு பையன் தான் பொறப்பான், அவனுக்கு கண்டிப்பா நான் தான் யோசிச்சு பேரு வைப்பேன்னு சொல்லிபுட்டா. சரி பகல் கனவு காங்காதனு சொல்லிட்டு வந்தேன்.

அடுத்தநாளு சாயங்காலம் வாங்கிட்டு போன சுவீட் ஓட சாறு, அவ உதட்டோரம் வடிய அதவிடவா டேஸ்ட் வேணும், இன்னும் என் நாக்கு இனிக்குது. நீ கமலுக்கே டஃப் குடுப்படா குமாரு. அப்படியே என்ன அழகான லவ் ஸ்டோரி போச்சு நமக்குள்ள. அந்த பத்தாமாசம் மழை காலத்துலயா வரணும். மழைய காரணம் சொல்லி நம்ம காலனிகுள்ள ஒரு ஆம்புலன்ஸ் காரனும் வர முடியாதுனு சொல்லிட்டானேடீ. நானும் முடிஞ்ச வர பீட்டர இழுத்துனு வந்து ஆட்டோல உன்னையும் திரௌபதியவும் வேகமா தானேடீ கூட்டினு போனேன். என்னால ஒன்னும் பண்ண முடியலயேடீ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு கண்களில் அடைமழை பெய்ய அதை துடைத்தவாறே அருகில் இருந்த குப்பை மூட்டையை மீண்டும் எடுத்து சுமந்தவாறு குப்பைகளை பொறுக்கிய வண்ணம் கடலோர சாலையில் சென்று கொண்டிருந்தான்.

அவன் நடந்து சென்ற பாதையில் அவனுடைய மெலிந்த முகத்தையும், அடர்ந்த தாடியையும், வெட்டாத சடை முடியையும், கிழிந்த ஆடையையும் கண்டு வழியில் சென்ற யோக்கியவான்கள் அனைவரும் அவனை விட்டு இரண்டடி தள்ளிச் சென்று மரியாதை கொடுத்து நடந்து சென்றனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறுவயதிலிருந்தே பேருந்து மற்றும் மகிழுந்துகளில் செல்வதென்றால் வாந்தி வருவது வழக்கம், அது நெடும்பயணமானலும் சரி குறும்பயணமானலும் சரி. எனது அன்னைக்கும் ஒவ்வாமை இருந்தால் என்னவோ எனக்கும் அதே ஒவ்வாமை இருந்தது. இராமநாதபுரத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கும் முன்னரே பாலித்தீன் பைகளை நான்கைந்து வாங்கி ...
மேலும் கதையை படிக்க...
கதை கேட்க: https://www.youtube.com/watch?v=FVCiv2T1UOM தன் அப்பா, அம்மாவினால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தையாய் இருந்த அவளுக்கு அந்த இடத்தில் கிடைத்த ஒரே நிம்மதி, "ஒரு தாய் பூனையும் அதன் ஆறு குட்டிகளுமே". அந்த தாய் பூனை வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே மஞ்சள் தெளிக்கப்பட்டாற் ...
மேலும் கதையை படிக்க...
ஆசையாக அவிழ்த்த பரோட்டா பார்சலின் மத்தியில் உப்பு நீர் துளி துளியாக வடிந்து கொண்டிருக்க, அதை அப்படியே வைத்துவிட்டு கண்களை கசக்கிக் கொண்டே அம்மாவிடம் சென்றான் முரளி. “அவன் என்ன சொன்னான்?” “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அவர் பேச்சே அப்படி தான், அவருக்கு முறையாக பேசத் ...
மேலும் கதையை படிக்க...
பலருக்கு வாழ்வில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் மேல் ஒரு நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் என்மேல் துரதிர்ஷ்டத்திற்கு உள்ள அலாதி பிரியம் குறித்தே இந்த உண்மை கதையை தொடர்கிறேன். எனக்கு ஏறக்குறைய ஒரு பத்து வயது இருக்கும்பொழுது ஒரு மாலைப்பொழுதில் என் வீட்டு வாசலில் ...
மேலும் கதையை படிக்க...
சக்தி மற்றும் லோகா 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரே பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரே தெருவில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள். ஹே லோகா எப்படியும் இந்த வருடம் பள்ளி ஆரம்பிக்காது போலடி நமக்கு ஜாலி தான் என்றால் சக்தி. என்னடி ஜாலி, ...
மேலும் கதையை படிக்க...
சவூதி அரேபியாவின் ஜூபைல் நகரிலிருந்து ஒரு இருபத்தெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுஹத்ரியா என்ற இடத்தின் அருகில் சுற்றிலும் பாலைவனத்தால் சூழப்பட்ட எந்திர ஆய்வாலை அது. நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அங்கு பணி எதுவும் ஆரம்பிக்கப்படாமல் சுமார் ஆறுமாதங்கள் ஆலையை ...
மேலும் கதையை படிக்க...
விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று ...
மேலும் கதையை படிக்க...
தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது. ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? சொல்லுங்க தாஹிர் பாய். இப்போ ...
மேலும் கதையை படிக்க...
இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும் கோபத்தைக் காட்டி கூட நான் பார்த்ததில்லை. அவங்க அம்மா ஒரு பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். கடைக்கு வரும் ...
மேலும் கதையை படிக்க...
கனவுகள் கதைகள் போலவே, குடும்பமாகவும் வரலாம், ஆன்மீகமாகவும் வரலாம், அமானுஷ்யமாகவும் வரலாம், ஆக்சன் மட்டும் திரில்லராகக் கூட வரலாம். எது எப்படி இருப்பினும், எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் நமக்கு நரைத்தால் கூட சில கனவுகள் இன்றும் இளமையாக நம்மை விரட்டிக் கொண்டே ...
மேலும் கதையை படிக்க...
முன்பதிவற்ற இரயில் பயணங்கள்
திருமதி. கிரேஸி எனும் நான்
கானல் மழை!
நானும் துரதிர்ஷ்டமும்
மாணவியரா? மாதரா?
திக் திக் திக்
முத்துவின் உள்ளக் குமுறல்
நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு
அன்புள்ள அமானுஷ்யம்
இளமையான கனவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)