அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 4,482 
 

அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17

வாத்தியாரை கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன் அப்பா,அம்மா,பாட்டி,சிதம்பரத்தில் இருந்த மாமா,மாமி எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போய் ‘ஆர்டர்’ வந்த IT கம்பனியிலே வேலைக்கு சேர்ந்தான்.அன்று சாயந்திரமே ராகவன் ஒரு ‘ஆண்கள் ஹாஸ்ட லில்’ ஒரு ‘ரூம்’ எடுத்துத் தங்கி வந்தான்.

ராகவன் அம்மா,அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி,தான் வேலைக்கு சேர்ந்த சந்தோஷ சமாசாரத் தை சொல்லி விட்டு.அவன் தங்கி வந்த ‘ஹாஸ்டல்’ பேரை அம்மா, அப்பாவுக்கு சொன்னான்.

சுந்தரமும் ராதாவும்” ராகவா,உன் உடம்பே ஜாக்கிறதையா பாத்துண்டு வா.நல்ல ‘ஹோட்டல்’ லே சாப்ட்டுண்டு வா.உனக்கு புது ஊர்.ஞாபகம் இருக்கட்டும்.எங்க மூனு பேருக்கும் சதா உன் கவலை தான்” என்று ‘போன்’ பண்ணீ சொன்னார்கள்.

ராகவனும்,அவன் அம்மா,அப்பாவும் அடிக்கடி ‘போனில்’ பேசி வந்தார்கள்.

மீரா ‘ப்ளஸ் டூ பாஸ்’ பண்ணீனதும் அப்பா அம்மாவைப் பார்த்து “எனக்கு காலேஜ்க்குப் போய் மேலே படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு” என்று சொன்னதும் சாம்பசிவன் “அம்மா, மீரா நீ ஒரு பொம்ம்ணாட்டிப் பொண்னு.நீ காலேஜ்க்கு எல்லாம் போக வேணாம்மா.நானும் அம்மாவும் ஒரு நல்ல பிராமணப் பையனாப் பாத்து உனக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தே பண்ணீ வக்கறோம்” என்று சொன்னார்.

ஆனால் மீரா ‘மேலே படிக்க வேண்டும்’ என்று சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தாள்.

காமாக்ஷியும் மீரவைப் பார்த்து “மீரா,அப்பா சொல்றது ரொம்ப நியாயமாப் படறது.உனக்கு ஏதாவது ‘நடக்கக் கூடாது’ நடந்துடுத்துன்னா,அப்புறமா காலத்துக்கும் நாம கஷ்டப் பட்டுண்டு வந்துண்டு இருக்கணும்,நீ’ ப்ளஸ் டூ’ படிச்சதே போதுமேம்மா.உனக்கு அப்பா சொன்னா மாதிரி நாங்க சீக்கிரமா ஒரு கல்யாணத்தே பண்ணீ வக்கிறோமேம்மா” என்று சொன்னாள்.

“என்னம்மா நீங்கோ கூட அப்பாவேப் போலவே சொல்றேள்.எனக்கு ‘காலேஜ்’க்கு போய் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கும்மா” என்று அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.

அது வரை ஒன்னும் சொல்லாம இருந்து வந்த பரமசிவம் அப்பா,அம்மவைப் பார்த்து “அக்கா ரொம்ப ஆசைப் படறாப்பா.அவ மேலே படிக்கட்டுமேப்பா.உங்க காலத்லே தான் பெண்கள் பத்தாவது ‘பாஸ்’ பண்ணா போறும்ன்னு இருந்து வந்தா.ஆனா இப்போ காலம் ரொம்ப மாறிப் போச்சு.பெண்களு ளும் இந்த காலத்லே நிறைய படிக்க ஆரம்பிச்சு இருக்கா.என் பள்ளிக் கூடத்லே எட்டாம் ‘க்ளாஸ்’ வரைக்கும் எல்லா பெண்கள் டீச்சர்கள் தான்.பெண்கள் அப்படி படிச்சாத் தான்,அவா பெரியவாளா ஆனா ஒரு நல்ல வேலேக்குப் போக முடியும்.ரெண்டாவதாக அவாளுக்கு குழந்தே பொறந்தா அவா ஆத்லே சொல்லிக் குடுக்க முடியும்” என்று அக்காவுக்கு சாதகமாகச் சொன்னான்.

யோஜனைப் பண்ணினாள் காமாக்ஷி.

“எனக்கு என்னவோ பரமசிவம் சொல்றது ‘சரி’ ன்னு படறது.நம்ம காலத்லே தான் பொண்கள் அதிகமா படிக்கலே.என் அம்மாவும் அப்பாவும் என்னே மேலே படிக்க வேணாம்ன்னு சொல்லிட்டா.

நானும் அவா சொன்னதே கேட்டு மேலே படிக்கலே.ஆனா இப்போ காலம் ரொம்ப தான் மாறீ இருக்கு. மீரா ‘காலேஜ்’ போய் படிச்சு வரட்டும்.அவ படிப்பு முடிஞ்சவுடன்,நாம அவ கல்யாணத்தே பண்ணலா ம்ன்னு நேக்கும் தோன்றது” என்று சொன்னாள்.

சாம்பசிவனுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

அவர் நீண்ட நேரம் யோஜனைப் பண்ணினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மீரா,அம்மாவும்,பரமும் சொல்றதாலே நான் உன்னே ‘காலேஜ்’க்கு போய் படிச்சு வர ஒத்துக்கறேன்.உன் படிப்பு முடியறதுகுள்ளே,நீ என் கிட்டே வந்து ’நான் இவரே காதலிக்கறேன்,அவரே காதலிக்கறேன்னு சொல்லிண்டு வந்து நிக்கக்கூடாது.உன் கவனம் எல்லாம் படிப்லே மட்டும் தான் இருக்கணும்.நீ ஒரு குருக்கள் ஆத்துப் பொண்ணு என்கிறதே மறக்கக் கூடாது. இது எப்பவும் உனக்கு ஞாபகம் இருக்கணும்.எனக்கும் அம்மவுக்கும்,இந்த குடும்பத்துக்கும் எந்த ‘அப கீர்த்தியையும்’ நீ கொண்டு வரக் கூடாது” என்று சொல்லி நிறுத்தினார்.

“அந்த மாதிரி ஒரு ‘அப கீர்த்தியே’ நீ இந்த ஆத்துக்கு கொண்டு வந்தா,அப்பா அவர் குருக்கள் வேலேக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு ஆத்லே இருந்து வர வேண்டியது தான்.நீ அந்த மாதிரி ‘ஏதாச் சும் தப்பு’ பண்ணிண்டு வந்து நின்னா,நாம எல்லாரும் நடு ரோடிலே நின்னுண்டு பிச்சே தான் எடுத் துண்டு வரணும்.உனக்கு அப்புறமா பொறந்த புருஷப் பையன் பரமசிவம் இந்த ஆத்லே இருக்கான்றது உனக்கு ஞபகம் இருக்கட்டும்.அவன் படிச்சு முன்னுக்கு வரணும்.அதே மனசிலே நன்னா ஞாபகம் வச்சுண்டு நீ ‘காலேஜ்’க்குப் போய் வரணும்.அதே மறந்துடாதே” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டு, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் காமாக்ஷி.

உடனே மீரா “அப்பா,அம்மா நான் நம்ம குடும்பத்துக்கு எந்த ‘அப கீர்த்தியையும்’ கொண்டு வர மாட்டேன்.என்னே நம்புங்கோ.நான் படிப்பிலே மட்டும் தான் கவனம் செலுத்திண்டு வருவேன் நான் எந்த ‘தப்பு வழிக்கும்’ போக மாட்டேன்ப்பா” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

உடனே சாம்பசிவன் “நான் நீ சொன்னதே நம்பறேம்மா.நீ ஜாக்கிறதையா படிச்சுண்டு வா.உன் படிப்பு மேலேயே உன் கவனம் பூராவும் இருக்கட்டும்.உன் படிப்பு முடிஞ்சது, நாங்க ஒரு நல்ல பிராமணப் பையனாப் பாத்து உனக்கு ‘ஜாம்’ ‘ஜாம்’ன்னு ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கறோம்” என்று சொன்னதும் மீரா “ரொம்ப தாங்க்ஸ்ப்பா” என்று சொன்னாள்.

சாம்பசிவன் மீரா ‘காலேஜ்’ போய் படிக்க ஒத்துக் கொண்டாரே ஒழிய அடிக்கடி காமாக்ஷி இடம் “நீயும்,பரமுவும் சொல்லவே தான்,நான் மீராவை ‘காலேஜ்’க்கு அனுப்பி இருக்கேன்.அவ படிப்லே மட்டும் தான் கவனம் செலுத்தி வரணும்.வேறே எதிலும் அவ கவனம் போகக் கூடாதுன்னு,நான் தினமும் அந்த நடராஜரே அதேத் தான் வேண்டிண்டு வறேன்”என்று சொல்லிக் கொண்டு வந்தார்.

காமாக்ஷியும் அவள் பங்குக்கு “நீங்கோ பயப படாதேள்.மீரா அப்படி எல்லாம் ஒரு ‘தப்புக் காரிய மும்’ பண்ண மாட்டா.எனக்கு அவ பேர்லே பூரண நம்பிக்கை இருக்கு” என்று ¨தா¢யம் சொல்லி வந்தாள்.

மீரா அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் B.Com வகுப்பில் சேர்ந்தாள்.

பரமசிவம் அவன் வயதுக்கு ரொம்ப புத்திசாலியாக இருந்து வந்தான்.

வீட்டில் அம்மா சொல்லி வந்த எல்லா ‘ஸ்லோககங்களையும்’ காதிலே கேட்டு வந்த அவன், கொஞ்ச வருடங்களில் மனப் பாடமாக சொல்லி வந்தான்.பரமசிவத்தின் புத்திசாலித்தனத்தை கண்டு மிகவும் ஆச்சரியபட்டார்கள் சாம்பசிவனும், காமாக்ஷியும்.

சாம்பசிவனும்,காமாஷியும் பரமசிவத்தை பணம் கட்டி ஒரு நல்ல பள்ளீக் கூடத்தில் ஒண்ணாம் வகுப்பிலே சேர்த்தார்கள்.அந்த பள்ளிகூடம் பரமசிவத்திற்கு மிகவும் பிடித்து இருந்ததால்,அவன் சந்தோஷமாக பள்ளீக் கூடத்திற்கு போய் வந்துக் கொண்டு இருந்தான்.

மீரா அந்த வருடம் B.Com வகுப்பில் ‘பஸ்ட் க்லாஸில் பாஸ்’ பண்ணினாள்.சாம்பசிவனும் காமாக்ஷியும்,பரமசிவமும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

சாம்பசிவன் மீராவைப் பார்த்து “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா மீரா.நீ என் கிட்டே சொன்னா மாதிரி உன் படிப்லே மட்டும் தான் கவனம் செலுத்தி வந்து இருக்கே.இந்த வயசிலே அது ரொம்ப கஷ்டம்.நான் உன்னே காலேஜ் படிக்க அனுப்பி விட்டு ரொம்ப பயந்துண்டு இருந்தேன்.ஆனா அம்மா மட்டும் என் கிட்டே’நீங்கோ பயப படாதேள்.மீரா அப்படி எல்லாம் ஒரு தப்புக் காரியமும் பண்ண மாட்டா.எனக்கு அவ பேர்லே பூரண நம்பிக்கை இருக்கு’ன்னு ¨தா¢யம் சொல்லிண்டு வந்தா. நீ அம்மா சொன்னதே நிரூபணம் பண்ணீ இருக்கே” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடை த்துக் கொண்டார்.

பரமசிவமும் அக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘கங்கிராஜுலேஷன்ஸ்’ அக்கா “என்று சொல்லி பாராட்டினான்.

மீரா B.Com வகுப்பில் ‘பஸ்ட் க்லாஸில் பாஸ்’ பண்ணி இருக்கா” என்று சாம்பசிவன் அக்காவுக்கு ‘போன்’ பண்ணீ சொன்னான்.”நேக்கு கேக்க சந்தோஷமா இருக்கு சாம்பு.நான் இந்த சந்தோஷ சமாசாரத்தே அத்திம்பேருக்கும்,அம்மாவுக்கும் சொல்லிடறேன்.அத்திம்பேர் இப்போ ஆத்லே இல்லே.வெளியே போய் இருக்கார்” என்று சொல்லி ‘போனைக் கட்’ பண்ணீனாள்.

ஒரு மாதம் ஆனதும் மீராவுக்கு சிதம்பரத்திலேயே ஒரு கம்பனியிலே ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்’ வேலைக் கிடைத்தது.அவள் சந்தோஷமாக அந்த வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

சாம்பசிவன் “அக்கா,மீராவுக்கு சிதம்பரத்திலேயே ஒரு கம்பனியிலே ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்’ வேலைக் கிடைச்சு இருக்கு” என்று ‘போன்’ பண்ணீச் சொன்னார்.உடனே சுந்தரமும்,ராதாவும் “எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு.அவளே ஜாக்கிறதையா வேலேக்குப் போய் வர சொல்லுங்கோ நீங்க ரெண்டு பேரும்” என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் இரவே காமாக்ஷி தன் கணவரிடம் ”மீரா ரொம்ப ஆசைப் பட்டான்னுத் தான் நாம அவளே ‘காலேஜ்’ போய் படிச்சுட்டு வர சொன்னோம்.அவ ரொம்ப நன்னா படிச்சா.‘பஸ்ட் க்லாஸில் பாஸ்’ பண்ணி இருக்கா.இப்போ அவ ஒரு வேலே கிடைச்சு அதுக்குப் போய் வறா.அவ கையிலே கொஞ்ச பண நடமாட்டம் வர ஆரம்பிச்சா,அவ மனசு பேதலிக்கும்.அதேத் தவிர அந்த கம்பனிலே மீரா நிறைய வயசு பையங்ககளோட பழகிண்டு வர வேண்டி இருக்கும்.அப்புறமா அவ ‘காதல்’ ‘கீதல்’ ன்னு சொல்லிண்டு வந்தா நம்மாலே ஒன்னும் பண்ண முடியாது.எனக்கு என்னவோ ஒரு நல்ல பிராமணப் பையனாப் பாத்து,அவளுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தே பண்ணீ வச்சா நல்லதுன்னு படறது.நீங்கோ என்ன நினைக்கறேள்” என்று கேட்டாள்.

சாம்பசிவன் “காமாக்ஷி நீ சொல்றது ரொம்ப நிஜமான வார்த்தை.நீ சொல்றா மாதிரி அவ மனசு பேதலிக்கற வயசு தான் இது.நாம அவளுக்கு சீக்கிரமா ஒரு நல்ல பிராமணப் பையனா பாத்து ஒரு கல்யாணத்தே பண்ணீ வச்சுடணும்.நாம ரொம்ப ‘டிலே’ பண்ணீண்டு வந்தா நல்லது இல்லே. அப்பு றமா அவ ‘காதல்’’அது’ ‘இது’ன்னு சொல்லிண்டு வந்தா,அதே மறுக்கறதும் கஷ்டம், ஏத்துக்கறதும் கஷ்டம்” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினார்.

ஒரு ஐந்து நிமிடம் ஆனதும்”காமாக்ஷி,நாம எதுக்கு ஒரு நல்ல பிராமணப் பையனை தேடணும். என் அக்கா பையன் ராகவனுக்கு நாம மீராவைக் கல்யாணம் பண்ணீக் குடுத்தா,குலம் கோத்திரம் எல்லாம் பாக்க வேணாம்.ராகவனும் நன்னா படிச்சு இருக்கான்.சென்னையிலே நல்ல வேலேலே இருக் கான்.நீ என்ன நினைக்கறே”என்று கேட்டார் சாம்பசிவன்.

உடனே காமாக்ஷி “நீங்கோ சொல்றதலே நேக்கு எந்த ஆக்ஷபணையே இல்லே.ரொம்ப தெரிஞ் ச குடும்பம்.ஒன்னுக்குள் ஒன்னா இருக்கோம்.வேறே குடும்பம்ன்னு போனா,நிறைய விசாரிக்க வேண் டி இருக்கும்.இங்கே விசாரிக்க ஒன்னுமே இல்லே.நீங்கோ சொல்லிட்டேள்.உங்க அக்கா நிச்சியமா ஒத் துப்பா.ஆனா உங்க அத்திம்பேரும்,அவா அம்மாவும் ஒத்துக்கணுமே இல்லையா” என்று ஒரு சந்தேக த்தை கேட்டாள்.

“நீ சொல்றது ரொம்ப சரி.நன் இல்லேன்னு சொல்லலே.நாம ரெண்டு பேரும் இந்த நாத்திக் கிழமை அவா ஆத்துக்குப் போய்,எங்க அத்திம்பேர் அம்மாவைப் பாத்துட்டு,அவ உடம்பைப் பத்தி விசாரிச்சுட்டு,அக்கா கிட்டேயும்,அத்திம்பேர் கிட்டேயும் கேட்டுண்டு வரலாமா” என்று கேட்டார் சாம்பசிவன்

“நாளைக்கு மீரா ‘ஆபீஸ்’லே இருந்து ஆத்துக்கு சாயங்காலம் வரட்டும்.பரமசிவம் பள்ளீக் கூடத்லே இருந்து ஆத்துக்கு வரட்டும்.அவா ரெண்டு பேரையும் ஒரு வார்த்தைக் கேக்கலாம்.முக்கிய மா மீராவுக்கு ராகவனே கல்யாணம் பண்ணிக்க பிடிச்சு இருக்கணும்.இல்லையா சொல்லுங்கோ” என்று கேட்டாள் காமாக்ஷி.

“ஆமாம்,ஆமாம்.மீராவுக்கு நாம சொல்றது பிடிச்சு இருக்கணும்.அவா ரெண்டு பேரும் வரட்டும் கேக்கலாம்” என்று சொல்லி விட்டு போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கப் போனார் சாம்பசிவன்.

அடுத்த நாள் சாயங்காலம் பரமசிவம் பாடங்களை படித்துக் கொண்டு இருந்தான்.மீரா ‘ஆபீஸி ல்’ இருந்து வீட்டுக்கு வந்தாள்.தன் செருப்பைக் கழட்டி வைத்து விட்டு,மீரா தன் கால்களை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.காமாக்ஷி மீராவுக்கு குடிக்க ‘காபி’யைக் கொடுத்தாள்.

மீரா ‘காபீ’யைக் குடித்து முடித்ததும்,சாம்பசிவன் பரமசிவத்தைக் கூப்பீட்டார்.

பரமசிவம் புத்தகத்தை வைத்து விட்டு ஹாலுக்கு வந்தான்.

சாம்பசிவன் “மீரா,பரமசிவா,நேத்து ராத்திரி நானும்,அம்மாவும் யோஜனைப் பண்ணீ இருத்து ண்டு இருதோம்.அதன் படி,நாங்க இந்த நாத்திக் கிழமை சிவபுரிக்குப் போய் ராதா மாமியாரை ஒரு எட்டுப் பாத்துட்டு,அப்படியே அவா எல்லார் கிட்டேயும்,நாங்க ராகவனுக்கு மீராவே கல்யாணம் பண்ணிக் குடுக்க ஆசைப் படறோம்.உங்களுக்கு இந்த சம்மந்தம் இஷ்டமான்னு கேக்கலாம்ன்னு இருக்கோம்.மீரா உனக்கு ராகவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்றதிலே இஷ்டம் இருக்கா. பரமசிவா,உனக்கும் இந்த கல்யாணம் பிடிச்சு இருக்கா” என்று கேட்டார்.

“அப்பா அத்தேயும்,அத்திம்பேரும் இங்கே நிறைய தரம் வந்தப்ப எல்லாம் என் கிட்டேயும் அக்கா கிட்டேயும் ரொம்ப நல்ல விதமா பழகினா.எனக்கு என்னவோ அவா ஒத்துண்டா இந்த இடத்தே அக்காவுக்குகல்யாணத்தே பண்ணலாம்ப்பா” என்று சொன்னான் பரமசிவம்.

கொஞ்ச நேரம் மீரா யோஜனைப் பண்ணி விட்டு “அப்பா,பரமசிவம் சொன்னா மாதிரி,அவர் எங்க ரெண்டு பேர் கிட்டேயும் ரொம்ப நல்ல விதமா பேசிண்டு இருந்தா.நாம முன் பின் தெரியாத ஒரு குடுமபத்தோடு சம்மந்தம் வச்சுக்கறதே விட தெரிஞ்ச குடும்பம் மேல் இல்லையாப்பா” என்று தன் ஆசையை சொன்னாள்.

“சரி,ரெண்டு பேரும் அவ மனசிலே இருக்கிறதே ஒளீவு மறைவு இல்லாம சொல்லிட்டா.இனிமே நாம தான் மத்ததே கவனிக்கணும்” என்று சொன்னார் சாம்பசிவன்.

“நாம இந்த நாத்திக் கிழமை சிவபுரிக்குப் போய் அவாலே கேட்டுண்டு வரலாம்ண்ணா” என்று சொன்னாள் காமாக்ஷி.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை நாள் ‘முழுவதும் நன்றாக’ இருந்தது.சாம்பசிவனும்,காமாக்ஷியும் அன்று சிவபுரிக்குப் போகலாம் என்று முடிவு பண்ணீனார்கள்.

சாம்பசிவனும்,காமாக்ஷியும் மீராவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு,சிவபுரிக்குப் போக ரெடி ஆனதும்,மீரா அம்மாவைப் பார்த்து “நீங்கோ ரெண்டு பேரும் வெறுமே ‘காபி’யேக் குடிச்சுட்டுப் போய் வாங்க.நீங்கோ அவா கிட்டே பேசிட்டு வர ‘டயம்’ வேணும்.நீங்கோ பேசிட்டு வெய்யில் ஜாஸ்தி ஆகறதுக்கு முன்னாடி ஆத்துக்கு வந்துடுங்கோ.நானும்,பரமும் சமையலை கவனிச்சுக்கறோம்” என்று சொன்னாள்.

காமாக்ஷி “சரி நாங்க இப்பவே கிளம்பறோம்”என்று சொல்லி விட்டு ‘காபியைக் குடித்து விட்டு, தன் கணவரை அழைத்துக் கொண்டு,சிதம்பரம் ’பஸ் ஸ்டாண்டு’க்குப் போய் ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிவ புரிக்கு வந்தாள்.‘மினி பஸ்ஸில்’ இருந்து சிவபுரியில் இறங்கினார்கள் இருவரும்.

அக்கா வீட்டுக்குப் போகும் வழியில் சாம்பசிவன் “காமாக்ஷி,அவா ‘சரி’ன்னு ஒத்துண்டா நன்னா இருக்கும்.ஆனா அவா என்ன சொல்வாளோ” என்று சொன்னதும் “ஏண்னா கவலைப் படறே ள்.இன்னாருக்கு இன்னார்ன்னு பகவான் ஏற்கெனவே நிச்சியம் பண்ணி இருப்பார். ஒருத்தருக்கு பொண்டாட்டியா வர வேண்டியவ,வேறே ஒருந்தருக்கு பொண்டாட்டியா நிச்சியமா ஆகவே முடியா து.இவா ரெண்டு பேரும் ‘ஆம்படையான் பொண்டாட்டியா’ ஆகணும்ன்னு ‘ப்ராப்தம்’ இருந்தா நடக்க போறது.எல்லாம் அந்த பகவான் கைலே தான் இருக்கு.நீங்கோ நிம்மதியா வாங்கோ” என்று ¨தா¢யம் சொன்னாள் காமாக்ஷி.

அக்கா வீடு வந்ததும் சாம்பசிவன் வாசல் கதவைத் தட்டினான்.வீட்டு வாசலில் தம்பியும், தம்பி மணைவியும் நிற்பதைப் பார்த்து “வா சாம்பு,வா காமாக்ஷி.எங்கே இவ்வளவு தூரம்” என்று வரவேற்று ஹாலில் இருந்த சோ¢ல் உட்காரச் சொன்னாள்.

சாம்பசிவனும் காமாக்ஷியும் உட்காராமல் கமலா படுத்துக் கொண்டு இருந்த ‘ரூமு’க்கு உள்ளே போனார்கள்.இவர்களைப் பார்த்ததும் கமலா மெல்ல முடியாமல் எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“எப்படி இருக்கேள் மாமி.ரொம்ப பவீனமா இருக்கேளே” என்று விசாரித்தார் சாம்பசிவன். “ஆமாம்ப்பா,வயசாயிடுத்தே….நான் ரொம்ப பலவீனமாத் தான் இருக்கேன்….நான் கண்ணே மூடறதுக் குள்ளே ராகவன்… கல்யாணத்தேப் பாத்துட்டுப் போகணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன். சுந்தரத்துக்குக் கிட்டே கூட இதே சொன்னேன்” என்று மூச்சை இழுத்து இழுத்து சொன்னாள்.

“ராகவன் இப்போ சென்னையிலே வேலே பண்ணீண்டு இருக்கான்…முன்னே பின்னே தெரியாத ஊர் அது….அவனுக்கு ஒரு கல்யாணம் ஆயிட்டா நான் கவலைப் படமாட்டேன்” என்று சொன்னாள் கமலா.உடனே சாம்பசிவன் “கவலைப் படாதீங்கோ மாமி,ராகவன் ரொம்ப நல்ல பையன்” என்று சொல்லி விட்டு “நீங்கோ படுத்துக்குங்கோ.நாங்க அவா கிட்டே பேசிண்டு இருக்கோம்” என்று சொல்லி விட்டு காமாக்ஷியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.

ஹாலில் ராதா காட்டின சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள் சாம்பசிவனும்,காமாக்ஷியும். கொஞ்ச நேரம் போனதும் “மீரா எப்படி இருக்கா.பரமசிவம் எப்படிப் படிச்சுண்டு வறான்.மீராவுக்கு ஏதாவது இடம் பாத்துண்டு இருக்கேளா.அவளுக்கு வயசாயின்டே இருக்கே” என்று கேட்டாள் ராதா.

”ஆமாம்க்கா,மீராவுக்கு ஒரு நல்ல இடமா பாக்கணும்.நானும் காமாக்ஷியும் அதேப் பத்தித் தான் பேசலாம்ன்னு இங்கே வந்து இருக்கோம்.எனக்கும் காமாக்ஷிக்கும் நல்ல பையனா கிடைக்கணும்.அவா குடும்பம் நல்ல குடும்பமா இருக்கணும்.அதனால்லே நானும்,காமாக்ஷியும் மீராவே ராகவனுக்குக் கல் யாணம் பண்ணீக் குடுக்க ரொம்ப ஆசைப் படறோம்…..” என்று சாம்பசிவன் சொல்லி முடிக்க வில்லை கமலா தன் ‘ரூமில்’ இருந்து “சுந்தரம், சுந்தரம்” என்று குரல் கொடுத்தாள்.

உடனே சுந்தரமும்,ராதாவும் பயந்துப் போய் கமலா இருந்து ‘ரூமு’க்கு ஓடிப் போனார்கள்.

“சுந்தரம்,சாம்பசிவன் சொன்னதே நான் கேட்டேன்…… மீராவே, நீ ராகவனுக்கு கல்யாணம் பண்ணிக்கோ.அப்படி பண்ணா,…..நாம வேறே நமக்கு முன் பின் தெரியாத பொண்ணாத் தேடவே வேணாம்.ரெண்டு குடும்பமும் ஒன்னுக்குள் ஒன்னா இருந்துண்டு வறோம்…எனக்கு என்னவோ சாம்பசிவன் சொல்றது சரின்னு படறது…..சந்தோஷமாவும்…. இருக்கு” என்று சொன்னாள்.

சுந்தரம் “சரிம்மா.நான் அப்படியே பண்றேன்.நீங்கோ படுத்துக்கோங்கோ” என்று சொல்லி விட்டு ராதாவை அழைத்துக் கொண்டு ‘ஹாலு’க்கு வந்தார்.

“அம்மா,இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தந்துட்டா.ராதா நீ என்ன சொல்றே” என்று கேட்டார் சுந்தரம்.”எனக்கும் இந்த சம்மந்தம் ரொம்ப பிடிச்சி இருக்கு.மீரா என் தம்பிப் பொண்ணு தானே. தெரிஞ்ச பொண்ணு.வேறே எந்தப் பொண்ணும் நாம தேட வேணாம்.நிம்மதியா இருந்துண்டு வரலாம்” என்று சொன்னாள் ராதா.

உடனே சாம்பசிவன் “இன்னிக்கு நாள் முழுக்க ரொம்ப நன்னா இருக்கு.நான் மீராவோட ஜாதகத்தேக் கொண்டு வந்து இருக்கேன்.நீங்கோ ராகவன் ஜாதகத்தேக் குடுத்தேள்ன்னா எங்க வாத்தியார் கிட்டே காட்டி ஜாதகப் பொருத்தம் பாக்க சௌகியா¢யமா இருக்கும்” என்று சொல்லி மீராவின் ஜாதகத்தைக் கொடுத்தார்.

சுந்தரம் மீராவின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு,ராதாவைப் பார்த்து “ராதா,நீ ராகவன் ஜாதகத்தே சுவாமி பாதத்லே வச்சுட்டு,சுவாமியே நன்னா வேண்டிண்டு,அப்புறமா ஜாதகத்தே எடுத்துண்டு வா” என்று சொன்னதும் ராதா,ராகவனின் ஜாதகத்தை அம்பாள் படத்தின் கீழே வைத்து மனதில் நன்றாக வேண்டிக் கொண்டு,ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து கணவரின் கையில் கொடுத்தாள்.

ராதா ஜாதகத்தைக் கொண்டு வந்ததும்,சுந்தரம் ராகவனின் ஜாதகத்தை சாம்பசிவனிடம் கொடுத்தார்.ராகவன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு “நீங்க உங்க வாத்தியார் கிட்டே ரெண்டு ஜாத கத்துக்கும் பொருத்தம் பாருங்கோ.’ப்ராப்தம்’ இருந்தா இவா ரெண்டு பேருக்கும் நிச்சியமா கல்யாணம் நடக்கும்” என்று சொன்னார் சாம்பசிவன்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு கமலா ‘ரூமு’க்குப் போய் அவரிடம் சொல்லிக் கொண்டு “நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சாம்பசிவன் சொன்னதும்,“நன்னா இருக்கு சாம்பு. நீங்கோ ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கழித்து எங்காத்துக்கு வந்து இருக்கே.சமையல் ஆயிடுத் து.நான் இலையைப் போடறேன்.ரெண்டு பேரும் ஒரு வாய் சாப்டுட்டு போங்க.நீங்கோ சிதம்பரம் போய் சாப்பிட வேளேக்கு ரொம்ப நேரம் ஆயிடும்.இன்னிக்கு எங்க ஆத்லே நீங்கோ ரெண்டு பேரும் ஒரு வாய் சாப்டுட்டுத் தான் போகணும்” என்று பிடிவாதமாகச் சொன்னாள் ராதா.

ராதா சொன்னதைக் கேட்ட சாம்பசிவனும்,காமாக்ஷியும் தயங்கி தயங்கி நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

”என்ன ரெண்டு பேரும் தயங்கி தயங்கி நின்னுண்டு இருக்கேள்.எங்காத்லே சாப்பிட என்ன தயக்கம் உங்களுக்கு.வாங்கோ,உக்காருங்கோ எல்லாரும் சாப்பிடலாம்” என்று சொன்னார் சுந்தரம்.

“அக்கா,அத்திம்பேர்,நீங்கோ ரெண்டு பேரும் எங்களே தப்பா எடுத்துக்காதீங்கோ.நாங்கோ ரெண்டு பேரும் உங்க ஆத்துக்கு மீராவுக்கு சம்மந்தம் பேச வந்து இருக்கோம்.பகவான் ‘அனுக்கிஹ த்தாலே’ இந்த சம்மந்தம் ‘சுபமா’ முடியட்டும்.நாங்கோ உங்க ஆத்லே வடை பாயசத்தோடு சாப்பாடு சாப்பிடறோம்.இப்ப எங்க ரெண்டு பேருக்கும் ஒரு அரை ட்ம்ளர் ‘காபி’ மட்டும் குடுங்கோ” என்று கேட்டார் சாம்பசிவம்.

“ராதா,சாம்பு ஒரு குருக்கள்.அவனுக்கு எல்லா ‘தர்ம சாஸ்திரமும்” தெரியும்.நீ அவன் சொன்னா மாதிரி ரெண்டு பேருக்கும் அரை ‘டம்ளர்’ காபியேக் குடு” என்று சொன்னதும் ராதா சமையல் ‘ரூமு’ க்குப் போய் ரெண்டு பேருக்கும் அரை டம்ளர் ‘காபி’யைக் கலந்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

சாம்பசிவனும்,காமாக்ஷியும் ராதா கொண்டு வந்துக் கொடுத்த காபியைக் குடித்து விட்டு, “அப்போ நாங்க கிளம்பறோம்” என்று சொல்லி விட்டு எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு ,’பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து,ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் கிளம்பிப் போனதும் ராதா தன் கணவனிடம்”நீங்கோ எதுக்கும் ராகவன் கிட்டே ஒரு வார்த்தை கேளுங்கோ.அவனுக்கு மீராவே கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கணுமே.இல்லையா சொல்லு ங்கோ”என்று கேட்டதும்,சுந்தரம் “நான் இப்போவே கேக்கறேன்” என்று சொல்லி விட்டு ராகவனுக்கு ‘போன்’ பண்ணீனார்.

ராகவன் போன்லே வந்ததும் “சௌக்கியமா இருக்கியா” என்று கேட்டார்.”நான் சௌக்கியமா இருந்துண்டு வறேன்.நீங்கோ எல்லாம் சௌக்கியமா” என்று கேட்டான் ராகவன்.
சுந்தரம்” நாங்கோ எல்லோரும் சௌக்கியமா இருக்கோம்.நான் முக்கியமா எதுக்குப் ‘போன்’ பண்ணேன்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாம்பசிவனும்,காமாக்ஷியும் நம்மாத்துக்கு வந்து இருந்தா.அவா மீராவே உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க ரொம்ப ஆசைப் படறா.அவா சொன்னதேக் கேட்டு பாட்டி என்னேக் கூப்பிட்டு ‘மீராவே நீ ராகவனுக்கு கல்யாணம் பண்ணிக் கோ.அப்படி பண்ணா,நாம வேறே நமக்கு முன் பின் தெரியாத பொண்ணாத் தேடவே வேணாம். ரெண்டு குடும்பமும் ஒன்னுக்குள் ஒன்னா இருந்துண்டு வறோம்.எனக்கு என்னவோ சாம்பசிவன் சொல்றது சரின்னு படறது.சந்தோஷமாவும் இருக்கு’ன்னு சொன்னா.மீரா B.Com ‘பாஸ்’ பண்ணி ட்டு,சிதம்பரத்திலேயே ஒரு கம்பனியிலே ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்’ வேலை பண்ணீண்டு வறா.உன் அபிப்பிராயம் என்ன.நீ உன் அபிப்பிராயத்தே என் கிட்டே ¨தா¢யமா சொல்லு”என்று கேட்டார்.

ராகவன் ”நீங்கோ பெரியவா எதேப் பாத்துப் பண்ணாலும் எனக்கு சம்மதம் தான்” என்று சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணினான்.ராகவன் சொன்னதை சுந்தரம் அம்மாவிடமும் ராதா விடமும் சொன்னான்.ராகவன் சொன்னதைக் கேட்டு மூவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். வீட்டு க்கு வந்து சாம்பசிவனும்,மீராவும் கை கால்களை கழுவிக் கொண்டு,சுவாமி ‘ரூமு’க்குப் போய் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்துந்துக் கொண்டார்கள்.

உடனே மீரா ரெண்டு பேருக்கும் இலையைப் போட்டு,அவள் பண்ணி இருந்த சமையலைப் பறிமாறினாள்.

சாப்பாட்டைக் சாப்பிட்டுக் கொண்டே சாம்பசிவன் “சமையல் ரொம்ப நன்னா இருக்கு மீரா.சமையலை ரொம்ப நன்னா பண்ணீ இருக்கே” என்று புகழ்ந்ததும் “மீராவுக்கு சமையல் பண்ண நான் நிறைய ‘ட்ரெயினிங்க்’ கொடுத்து இருக்கேன்.அதான் அவன் ரொம்ப நன்னா சமையல் பண்ணீ இருக்கா” என்று சொன்னாள் காமாக்ஷி.

“மீராவே கல்யாணம் பண்ணீக் கொள்ற பையன் சாப்பாட்டுக்கு கஷ்டமே பட மாட்டான்.அவன் ரொம்ப குடுத்து வச்சவன்” என்று சொல்லி சந்தோஷப் பட்டார் சாம்பசிவன்.
அப்பாவும் அம்மாவும் சாப்பிட்ட பிறகு பரமசிவம் “நீங்கோ போன விஷயம் என்ன ஆச்சு. நீங்கோ ரெண்டு பேரும் சாப்பிட்ட அப்புறமா கேக்கலம்ன்னு,நாங்கோ ரெண்டு பேரும் காத்துண்டு இருக்கோம்” என்று கேட்டவுடம் சாம்பசிவன் “அவா எல்லோருக்கும் சம்மதம்.முக்கியமா அந்தப் பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம்,ஜாதகப் பா¢வர்த்தணைப் பண்ணீண்டு வந்து இருக்கோம்” என்று சொன்னதும் பரமசிவம் “அப்போ மீரா அக்காவுக்கு ‘டும்’‘டும்’ கல்யாணமா” என்று கேட்டு மீராவை கலாட்டா பண்ணீனான்.உடனே சாம்பசிவன் “அவசரப் படாதே,பரமு,ரெண்டு ஜாதகங்களும் நன்னா பொருந்தி இருக்க ணும்.அப்புறம் தான் நீ ‘டும்’’டும்’ கொட்டலாம்” என்று சொன்னார்.

அடுத்த நாளே இரு குடும்பத்தாரும் ஆத்து வாத்தியாரை கூப்பிட்டு ஜாதகப் பொருத்தம் பார்க்க சொன்னார்கள்.ரெண்டு வாத்தியார்களும் “ரெண்டு பேரோட ஜாதகமும் ரொம்ப நன்னா பொரு ந்தி இருக்கு.நீங்கோ இந்த கல்யாணத்தே பேஷாப் பண்ணலாம்” என்று சொல்லி விட்டு தக்ஷணை யை வாங்கிக் கொண்டு போனார்கள்.

சாம்பசிவன் அத்திம்பேருக்கு ‘போன்’ பண்ணி “அத்திம்பேர் எங்க ஆத்து வாத்தியார் ‘ரெண்டு பேரோட ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு.நீங்கோ இந்த கல்யாணத்தே பேஷாப் பண்ண லாம்’ன்னு சொன்னார்.உங்க ஆத்து வாத்தியார் என்ன சொன்னார்” என்று கேட்டது சுந்தரம் “எங்க ஆத்து வாத்தியரும் ரெண்டு ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குன்னு தான் சொன்னார்” என்று சொன்னார்.

“கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்திம்பேர்,நீங்கோ ஒரு நல்ல நாள் பார்த்து ராகவனை எங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து மீராவை ‘பொண்ணுப் பாக்க’ வாங்கோ” என்று சந்தோஷமாக அழைத்தார்.உடனே சுந்தரம்”நான் ராகவனோடு பேசிட்டு,மீராவை எப்போ ‘பொண்ணு பாக்க’ வறோம் என்கிற சமாசாரத்தே இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘போனை கட்’ பண்ணினார்.

ஒரு வாரம் ஆனதும் சுந்தரம்,சாம்பசிவனை ‘போனில்’ கூப்பிட்டு “சாம்பு,எங்க வாத்தியார் வர நாத்திக் கிழமை நாள் ரொம்ப நன்னா இருக்குன்னு சொன்னார்.நாங்க மீராவை வர நாத்திக் கிழமை காத்தாலே ஒரு ஒன்பது மணிக்கா ‘பொண்ணு பாக்க வறோம்”என்று சொன்னதும் “ரொம்ப சந்தோஷம் அத்திம்பேர்.நீங்கோ வாங்கோ.நாங்க காத்துண்டு இருக்கோம்” என்று சொல்லி ‘போனைக் கட்’ பண்ணீனார் சாம்பசிவன்.சனிக் கிழமை ராதா தன் பக்கத்து வீட்டுப் போய் அந்த மாமியைப் பார்த்து “மாமி நீங்கோ எனக்கு ரெண்டு ‘ஹெல்ப்’ பண்ணனுமே” என்று கேடடதும்,“என்ன ‘ஹெல்ப்’ வேணும் சொல்லுங்கோ.நான் பண்றேன்.நாம ரெண்டு பேரும் அக்கம் பக்கத்லே இருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் நிச்சியமா ‘ஹெல்ப்’ பண்ணீண்டு வரணும்” என்று சொன்னாள் அந்த மாமி.

”நா¨ளைக்கு ராகவனுக்கு என் தம்பி பொண்ணே ‘பொண்னு பாக்க’ வறதா சொல்லி இருக்கோம்.அதுக்கு மூனு பேரா போக வேணாம்ன்னு எங்க மாமியார் சொன்னா.சித்தே நீங்கோ நாளைக்கு க் காத்தாலே ஒரு எட்டு மணீக்கா எங்க கூட சிதமபரத்துக்கு வர முடியுமா.நாம நாலு பேராப் போய் வரலாம்.ரெண்டாவது ‘ஹெல்ப்’.உங்க பொண்ணு சித்ராவை ஒரு நாலு மணி நேரத்துக்கு என் மாமியார் கூட என் ஆத்லே இருந்துண்டு வரணும்”என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

“இவ்வளவு தானே.நாளைக்கு நாத்திக் கிழமைத் தானே.என் பெரிய பொண்னு சமையலை பண்ணீடுவா.நான் சித்ராவே நாம திரும்பி வர வரைக்கு உங்க மாமியார் கூட இருந்துண்டு வரச் சொல்றேன்.நான் உங்க கூட சிதம்பரம் நிச்சியமா வறேன்” என்று சொன்னதும் அந்த மாமிக்கு”ரொம்ப தாங்ஸ் மாமி” என்று சொல்லி விட்டு ராதா தன் வீட்டுக்கு வந்து,அவள் பண்ணீ இருக்கும் ஏற்பாட்டை மாமியார் இடமும்,கணவன் இடமும் சொன்னாள்.இருவரும் சந்தோஷப் பட்டார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *