மரியாதை – ஒரு பக்க கதை

 

தன் முதலாளியை நினைத்து ஏமாற்றமாக இருந்தது குமாருக்கு. போட்டிக்கு பல சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்ட ஏரியாவில் அவர்களுடையது ஒரு பலசரக்கு கடை.

கல்லாவில் உட்கார்ந்து கடைக்கு வருபவர்களிடம் சிரித்தமுகத்துடன் பேசி மரியாதையாக நடத்துவார் முதலாளி.

அப்படிப்பட்டவர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தும் இந்த சமயத்தில், வாடிக்கையார்களில் ஒருவருக்கு கூட பத்திரிகை வைக்கவில்லை.

அவர் தரும் மரியாதை வெற்று நடிப்புதான் என்பதை நினைக்கும்போதே அவனுக்கு வெறுப்பாக வந்தது.

குமாரு…இந்த பார்சல்ல நிறைய எவர்சில்வர் தட்டு இருக்கு. அடிபடாம பத்திரமா எடுத்து வை.

கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கஸ்டமர்கள் எல்லோருக்கும் மறக்காம கொடுக்கணும் என்றார் முதலாளி.

என்ன இவர்…யாருக்கும் பத்திரிகை கொடுக்காமல் அன்பளிப்பு மட்டும் கொடுக்கிறாரே…என்று குழப்பமாக பாத்தான் குமார்.

அது ஒண்ணுமில்லடா..அவசரத்தில் நாம யருக்காவது பத்திரிகை கொடுக்காம விட்டுப் போகலாம். அதனால அவங்க தப்பா நினைச்சுக்கிட்டு கடைக்கு வராம போகலாம்.

பத்திரிகை கொடுத்தும் கல்யாணத்துக்கு வர முடியாம போனவங்க அதுக்கு அப்புறம் நம் முகத்தைப் பார்க்க வருத்தப்பட்டு பக்கத்துக் கடைக்குப்போயிடலாம். இதெல்லாம் எதுக்கு?

கல்யாணம் ஊர்ல நடந்தது…இந்தாங்க அன்பளிப்பு’ன்னு கொடுத்துட்டா அவங்களுக்கும் இழப்பில்ல…நமக்கும் இழப்பில்ல..என்றார் முதலாளி!

நம்ம முதலாளியை அடிச்சுக்க ஆளில்லை என்று முடிவெடுத்தான் குமார்.

– நிகில் ( மார்ச் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அனுமன் வால் போல் நீண்டது அப்பயணம். தொடங்கியது யார் தொடங்கி வைத்தவர்கள் யார்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தொடர்ந்து கொண்டுள்ளது முடிவில்லாத அப்பயணம். அப்பயணத்தை நான் எங்கிருந்து ஆரம்பித்தேன் என்று சரியாக இப்போது நினைவில்லை. ஆனால் வானைத் தொட்டு நின்ற அந்த ...
மேலும் கதையை படிக்க...
ஐநாக்ஸில் 'ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போதுகூட மொபைல் மூலம் மெசேஜ், சாட் என்று பரபரப்பாக இருக் கிறார்கள். இன்டர்வெல்லில் ஆளுக்கொரு பக்கம் ''க்ராஷ் மாமா... ...
மேலும் கதையை படிக்க...
மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்... எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு. இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டும் ஆங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ...
மேலும் கதையை படிக்க...
பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து கொண்டிருந்தது கொல்லம் பாஸஞ்சர். கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல், இதே ரயிலில் – இதே எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் அந்த இளைஞனை வழக்கம் போல் உற்றுப் பார்த்தார் சிவலிங்கம். இளைஞன் பார்க்க லட்சணமாக இருந்தான். அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
நெடும் பயணம்
வட்டியும் முதலும்…
தேர்வறைத் தியானம்
கொடிதினும் கொடியது
சபலம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)