விபத்து..!

 

புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி.

சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

” எதுடா… இது…? ” – அன்னபூரணி குரலில் லேசான பதற்றம்.

” அலுவலகத்துல லோன் போட்டு வாங்கினேன். ” – அமர்ந்தான்.

” ஏன்…? ” தணிகாசலம் குரலிலும் கொஞ்சம் நடுக்கம்.

” பேருந்துல அலுவலகத்துக்குப் போக சிரமமா இருக்குப்பா..”

” உன்னை யார் வாங்கச்சொன்னா..? ” – அன்னபூரணி உள்ளுக்குள் தோன்றிய நடுக்கத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

” ஏன்…? ” ஏறிட்டான்.

” உனக்கு இருசக்கர வாகனத்துல கண்டம் இருக்குன்னு வைத்தீஸ்வரன் கோயில் சோசியக்காரன் சொல்லி இருக்கான்.!.”

” அப்பா! கண்டமாவது கத்தரிக்காயாவது…? ” – சேகருக்கு சிரிப்பு வந்தது.

” சேகர் ! அப்படியெல்லாம் சொல்லாதே ! என் அப்பாவுக்குத் தண்ணியில காண்டாமிருக்குன்னு சொன்னான்.” – அன்னபூரணி.

” அதான் சாராயத்துல செத்துப்போனாரா …? ” – சேகர் சிரித்தான்.

” எதிலும் விளையாட்டு. சிரிக்காக்காதே. சாராயமும் தண்ணிதானேடா..!”

” ஐயோ…! அம்மா ! அம்மா..! ” – சேகர் தலையில் அடித்துக்கொண்டான். ”

” இதோ பார். மொதல்ல பெத்தவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடு. அவுங்க சொல் கேள்.! ”

சேகர் கொஞ்ச நேரம் யோசித்தான்.

அவர்கள் வருத்தப்படுவது புரிந்தது.

” சரியப்பா. பெத்தவங்க வார்த்தைக்கு மதிப்புக்கு கொடுக்கிறேன். இப்போ நான் என்ன செய்யனும்… ? ” தழைந்தான்.

” வண்டியை வித்துடு…”

ஆசையாய் வாங்கியது.

” அப்பா..ஆ…! ” அதிர்ந்தான். திடுக்கிட்டான்.

” ஆமாம்.. சொல்றதைக் கேள்…! ” – அம்மா.

” சரிம்மா. இந்த வண்டி இப்போ தட்டுப்பாடு. என் நண்பன் ராமுவுக்கு இதன் மேல் ஆசை. நாளைக்கே கொடுத்துடுறேன் . ”

” வேணாம். இப்பவே கொண்டு போய்க் கொடுத்திடு…” – அன்னபூரணிக்கு அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. எமனாய்த் தெரிந்தது. அவளுக்கு சோசியத்தில் அதீத நம்பிக்கை.

தயங்கினான்.

” போடா…! ” – அப்பா.

” சரிப்பா…! ”

சேகர் வெளியே வந்து மனசில்லாமல் வண்டியை எடுத்தான்.

பத்து நிமிடத்தில் தணிக்காசலம் கைபேசி ஒலித்தது.

எடுத்துப் பார்த்தார். நண்பன்.

” என்ன…கோபால்…? ”

” லாரி மோதி உன் பையன் வண்டி விபத்து. சீக்கிரம் ஓடிவா..”

” எங்கே…? ” – பதறினார்.

” பைபாஸ்ல ”

உடனே கிளம்பினார்.

அருகில் நின்று கேட்ட… அன்னபூரணிக்கு உடல் நடுங்கியது.

”என்னங்க. நானும் வர்றேன்..! ” பதறினாள்.

மறுத்துப் பேச வழி இல்லை.

” சரி வா. ”

வெளியே வந்து தன் சிறுசக்கர வாகனத்தை எடுத்தார்.

அன்னபூரணி தொற்றினாள்.

‘ பதற்றத்தில் இவர் எங்காத்து மோதி விபத்தை ஏற்படுத்தி விடப்போகிறாரோ ! ‘ என்கிற பயத்தில்….

” என்னங்க. பார்த்துப் போங்க…” – நடுக்கத்துடன் சொன்னாள்.

பத்து நிமிடப் பயணத்தில்….தூரத்தில்….கூட்டமாகத் தெரிந்தது.

அதற்கடுத்து…

புல்லட் ஒன்று… சாலை ஓரமாக நசுங்கிக் கிடைக்க…அதற்கு சிறிது தூரத்தில் லாரி.

‘ ஐயோ மகனே…! ‘ – பெற்றவர்கள் இருவரும் மனசுக்குள் சத்தம் போடாமல் குரலெழுப்பி…

வண்டியை நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிப் பார்க்க….

யாரிடமோ பேசிவிட்டு… கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்த சேகர்….

” ஒண்ணுமில்லேப்பா. வண்டியை நிறுத்திட்டு டீ குடிச்சேன். வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிடுச்சி. எனக்கு ஒண்ணுமில்லே. வண்டிதான் சேதாரம். அதுக்குக் கண்டம். ! ” – சொன்னான்.

‘ அலுவலகம் விட்டு வந்த மகனை டீ கூட குடிக்கவிடாமல் துரத்தி விட்டதால் இந்த விபத்து. !! ‘ – என்று நினைத்தத் தணிகாசலம், அன்னபூரணிக்கு….

‘ ஆமாம். கண்டம் யாருக்கு..???!!! ‘ – பேசமுடியவில்லை. !! 

தொடர்புடைய சிறுகதைகள்
மூடிய அறையில் ரோஸி இயந்திரத்தனமாக புடவை, ஜாக்கெட்டுகளைக் களைய.... 25 வயது இளைஞனான சேகர் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தான். திரும்பி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். "பேரு என்ன...?" கேட்டாள். சொன்னான். "புதுசா...?" அருகில் அமர்ந்தாள். சேகருக்கு உடல் குப்பென்று வியர்த்தது. "பயமா....?" உரசினாள். அவ்வளவுதான் ! ஆள் மிரண்டு எழுந்தான். கை ...
மேலும் கதையை படிக்க...
வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது. "அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா...?!...." என்று வெளிப்படையாகவே உறுமி.... எரவானத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தன் இடுப்பில் சொருகிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. சிங்காரவேலு கணிப்பு தவறி ...
மேலும் கதையை படிக்க...
ஆர்த்தி மனசுக்குள் ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம், உறுத்தல். ' இன்றைக்கு எப்படியும் இதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் ! ' - என்று நினைத்தவள் அருகில் நின்ற அம்பிகாவை அழைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் ...
மேலும் கதையை படிக்க...
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள ஆலமரத்திடலுக்கு தன் நண்பர்கள் பட்டாளத்தை அழைத்துச் சென்றான் நட்டு என்கிற நட்ராஜ் ! அந்த ஆலமரத்தடியில் அமர்ந்தான். எதிரில் நண்பர்கள்... சேகர், சிவா, கணேஷ், வெங்கு என்கிற வெங்கடேஷ் அமர்ந்தார்கள். அழைத்து வந்தவன் முகத்தை ஆவலாய்ப் பார்த்தார்கள். "இப்போ நம்ம ஊர்ல ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வீட்டில் வழக்கம் போல் இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூத்துக்குப் பத்து வார்த்தைகள் ஆரம்பத்தில் பேசினான். இப்போது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. குரல் கேட்கவில்லை. "நீங்க ரோசபாசமில்லாதது போல இப்படி மௌனமா இருந்தே என் கழுத்தை ...
மேலும் கதையை படிக்க...
பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது. எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் ...
மேலும் கதையை படிக்க...
'' வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! '' - செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில் எங்களைப் போல் ஓய்வு. '' உண்மையா..?? ! '' நம்ப முடியாமல் தகவல் சொன்ன நண்பரைப் உற்றுப் பார்த்தேன். '' சத்தியம்ப்பா...! '' அவர் ...
மேலும் கதையை படிக்க...
நினைக்க இதயம் கனத்தது. அது நெஞ்சுக்குள் ஆழமான காயமாக வலித்தது. எவ்வளவு பெரிய இடி. ! இதை நாம்தான் தாங்கிக் கொண்டோமா...? ! என்பதே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. வீட்டை விட்டு எவ்வளவு தூரம் வந்திருப்போம் ..! என்பது அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கண்டைக்காலின் ...
மேலும் கதையை படிக்க...
ஐப்பசி மாத அடை மழைப் பொழுது..... கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு. வானம் கருமேக மூட்டமடித்து நச நசவென்று தூறிக்கொண்டே இருந்தது. திரும்பிப் பார்த்தான். தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளும் பாயை விட்டு விலகி மண் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
ரோசியின் மனசு
உள்ளங்கள்..!
மாமன் மனசு..!
நாய்க்கு மணி கட்டனும்…!
மூத்தவள்
மனிதனும்… மனிதமும்!
துறவு…!
சக்திலிங்கம்..!
தீர்ப்பைத் திருத்துங்கள்..!
சவாரி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)