மன்னிப்பு – ஒரு பக்க கதை

 

எதையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வரும் பரமசிவம், அன்றிரவு பின்வாசல் விளக்குகளை வேண்டுமென்றே
எரியவிட்டது குமரனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியது!

விடிந்ததும்…

“ஏம்பா… தொலைக்காட்சியையோ ஃபேனையோ நாங்க அணைக்க மறந்தாலே எங்களை திட்டி “எதையும் விரயம் பண்ணக்கூடாது’ன்னு ஆலோசனை சொல்ற
நீங்களே… நேத்து பின்வாசல்ல மூணு விளக்கையும் அணைக்காம அலட்சியமா விட்டுட்டீங்க! அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்குத்தானா?’ என்ற மகனின்
எதிர்பாராத கேள்வியில் அதிர்ச்சியடைந்த பரமசிவம்…

“பின்னால குடியிருக்கிற இராமநாதன் வீட்ல நேத்து கரண்ட் ஃபீஸ் போயிடுச்சுடா! பாவம்… அவங்க பையன் பத்தாவது பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாம
ரொம்ப சிரமப்பட்டான்! நம்மள பகையா நினைக்கிற அவங்களுக்கு நாம லைன் கொடுத்தாக்கூட அதை ஏத்துக்க சங்கடப்படுவாங்கன்னுதான்…. பின்வாசல்ல
எல்லா லைட்டையும் போட்டுவிட்டேன்டா…!’

“அப்பா… என்னை மன்னிச்சிடுங்க… உங்களை சரியா புரிஞ்சுக்காம ஏதேதோ பேசிட்டேன்!’ குமரன் மன்னிப்பு கோர இதனையே முணுமுணுத்தவாறே இராமநாதனும் பரமசிவத்தைக் காண ஓடிவந்தார்.

- கோவை நா.கி. பிரசாத் (ஜூன் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டி சர்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக் கொண்டார். முகத்திற்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். ஹாலில் ...
மேலும் கதையை படிக்க...
எழுத்தாளன் என்றாலே ஜிப்பா,கண்ணாடி,சோல்னா பை இவைதான் நாம் உருவகப்படுத்தியிருப்போம். "டிவோட்டா" அப்படி இல்லை. உலகின் சிறந்த எழுத்தாளர்களில்,இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில், தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் இப்படி எதுவும் இல்லை. அடியக்காமங்கலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஆம் டிவோட்டாவோடு சேர்த்து அடியக்காமங்கலத்தில் 13 எழுத்தாளர்கள். ...
மேலும் கதையை படிக்க...
விமான நிலையத்தின் வாகணத்தரிப்பிடத்தின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கிறேன்,வாகணத்துள் எனது மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இன்னும் ஒரு மணித்தியாலத்தால் அவர்கள் விமானத்திற்குள் இருந்தேயாகவேண்டும்,வருடத்தின் இருமுறை நடைபெறும் தற்காலிக பிரிவுதான் இருந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை, வியர்வை என்று பொய்சொல்லிக்கொண்டு கைக்குட்டையை நனைத்துகொள்கின்றேன், ஊரில் இருந்து அதிகாலை புறப்படும்போதே அழக்கூடாது ...
மேலும் கதையை படிக்க...
யார் 'கண்' பட்டதோ தெரியவில்லை. என்னுடைய 'கண்கள்' இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தேன். அடிக்கடி விட்டத்தையே வெறித்துப் பார்த்தேன். மனசெல்லாம் நாளை நடக்க இருக்கும் கவிதைப் போட்டியைப் பற்றிய எண்ணமே இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம் மீசை. பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞன். இவனுக்கு எத்தனை நாட்கள், எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தடுமாற்றம்!
டிவோட்டா என்கிற மணி மகுடம்
பிரிவு
வெற்றியும் தோல்வியும்
வேர்களைத் தேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)