ஜோடி – ஒரு பக்க கதை

 

விமலாவின் உயிர் தோழி வத்சலாவை பெண் பார்த்து சென்றார்கள் . இரு பக்கமும் சம்மதம். அடுத்த மாதம் கல்யாணம் …..

ஏய் என்னடி இது….. ஜோடி பொருத்தமே சரி ….இல்லையே…… என்றாள் விமலா .

என்னடி சொல்லுற ? நானும் டிகிரி ; அவரும் டிகிரி. ரெண்டு பேருமே நல்ல கலர் .. ஆள் பார்க்கவும் நல்லாதானே இருக்கார் …?

நல்லாத்தான் இருக்கார் ? ஆனா நீ அநியாத்துக்கு ஒல்லி அவர் இப்போவே ரொம்ப குண்ட இருக்காரே !..

இதுதான் பிரச்சனையா? இப்பல்லாம் ஆம்பிளைங்க இப்படிதான் …கண்டதையும் சாப்பிட்டு குண்டாயிடுறாங்க . கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பார் ! வாக்கிங்,டயட்னு ஸ்டரிக்டா அவரை வறுத்தெடுத்து ஆறே மாசத்துல என் சைசுக்கு கொண்டுவந்துடுவேன் … அப்புறம் நீயே பார்த்துட்டு ஜோடி பொருத்தமாய் இருக்குன்னு சொல்லுவ……….

கல்யாணம் முடிஞ்சி ஆறு மாதம் கழித்து இப்போ தான் ஊருக்கு வந்திருந்தாள் வத்சலா…… ஏய்! அம்மா வீட்டுக்கு வந்து இருக்கேன் .. இன்னைக்கு என் சமையல் வீட்டுக்கு வாயேன் … என் விமலாவை அழைத்தாள் ….

மனதில் பிளாஷ்பேக் டயலாக் ஒட …ஆர்வத்தோடு போனாள் விமலா ….ஆறு மாதத்தில் கணவனை டயட்டில் வைத்து ஒல்லியாக்கி இருப்பாளோ !….

வாடி விமலா…. வாசலிலே ஓடிவந்து வரவேற்றாள் வத்சலா…

எப்படி எங்க ஜோடி பொருத்தம் இப்போ ஓகேவா ..? என்றவளைப் பார்த்து அதிர்ந்து போனாள் விமலா ….காரணம் இப்போது அவள் ரொம்ப குண்டாகி இருந்தாள்… 

தொடர்புடைய சிறுகதைகள்
என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒரு கோவில் இருப்பதாகச் சொல்லி அங்கே கொண்டாடுவதாக ஏற்பாடு. கடலூர் தாண்டி இருக்கும் அந்த ஊரின் பெயர் ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வீட்டில் ஒரு உயிர், நாளை வெட்டி கொலை செய்யப்படப் போகிறது. நாளை ஒரு கொலை நடக்கப் போகிறது எனத் தெரிந்தும், அதைக் காப்பாற்ற எந்த உரிமையும் இன்றி விஸ்வநாதன் கேவிக் கேவி அழுதார். என்ன செய்வது? எதுவுமே செய்ய முடியாது. ...
மேலும் கதையை படிக்க...
திருநெல்வேலியின் மிக முக்கியமான இடங்களில் நெல்லை டவுனும் ஒன்று. பழங்காலம் தொட்டு இப்போது வரை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் இது தான். டவுன் என்றாலே எல்லோர் மனதிலும் நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவில் தான் நினைவுக்கு வரும். ...
மேலும் கதையை படிக்க...
ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய ...
மேலும் கதையை படிக்க...
மும்பையில் ஓடும் ‘எலெக்டிரிக்’ வண்டியில் ‘பிக் பாக்கெட்’ அடித்து பிழைத்து வந்தான் ராஹூல்.அதில் வரும் பணத்தில் ‘ரோந்து’ வரும் போலீஸ்காரர்களுக்கு ‘மாமூல்’ கொடுத்து விட்டு வாழக்கை நடத்தி வந்தான்.இரவு நேரங்களில் எந்த ஸ்டேஷனில் தன் ‘தொழிலை’ முடிக்கிறானோ,அந்த ஸ்டேஷனிலேயே சாப்பிட என்ன ...
மேலும் கதையை படிக்க...
நாகூர் 2012, கசம் சே!
இந்த வேம்புகள் கசப்பதில்லை
அப்பாவின் கைநெடிக் சபாரி வண்டி
ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்!
‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)