செய்தி – ஒரு பக்க கதை

 

கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, ‘நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும்.

அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர் போடச் சொல்லிட்டேன். தினமும் பேப்பர் படிங்க’ என்றார்.

பேப்பரை படித்த மனைவி சாந்தி, ‘பார்த்தீங்களா அந்த ஊரு பொண்ணு! புருஷன் ஆபீசுக்கு போன சமயம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் கூட தொடர்பு வச்சிருக்கா…’ என்றாள்.

மகள் திவ்யா, ‘அந்த ரவுடி கூரியர் பாய் மாதிரி அந்த வீட்ல போய் கொள்ளையடி்சிட்டு, வீட்டுக் காரம்மாவையும் அநியாயமா கொலை பண்ணிட்டான் பாருங்கப்பா…’ என்று வருத்தப்பட்டாள்.

ஒரு மாசம் கழித்து பேப்பர்காரன் சந்தா கேட்டு வந்தான்.

‘இந்தாப்பா பணம் இனி பேப்பர் போடாதே’ என்றார் கணேசன்.

‘என்ன சார் என்னாச்சு?’

‘வீட்ல உள்ளவங்க பேப்பர்ல கள்ளக்காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு இந்த மாதிரி விஷயங்களைத்தான் சுவாரஸ்யமா படிக்கிறாங்க. இது அவங்க மனசை பாதிச்சுடும். அதனால் இனி பேப்பர் போடவேண்டாம்’ என்றார் கணேசன் தீர்க்கமாக.

- எஸ். முகம்மது யூசுப் (ஜூன் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில் தட்டில் பாலு எடுத்து வைத்தான். வாசு ரகசியமாக பாக்கெட்டில் கை விட்டான். “என்னடா செய்யறே’ என்று பாலு கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சாப்பிட்ட இலையின் ...
மேலும் கதையை படிக்க...
“லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும் காட்ட ஏதாவதொரு நிறக்காட்டி ஒண்ணு வேணும்” ராகவன் சார் இப்படிதான் அடிக்கடி ஏதையாவது பிலாசபிக்கலாய் சொல்லி வைப்பார். ஆனால் கல்யாண் அதை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கோமதியிடம் சத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “மாரியாத்தா கோயிலுக்கு போயே சத்தியம் செய்யட்டுமா?” “என்கிட்ட மட்டும் சத்தியம் பண்ணுங்க, போதும்.” இசக்கி சத்தியம் செய்து கொடுத்தார். “நீ போட்ட கோட்டை என்னிக்காவது தாண்டியிருக்கேனா. இதுல மட்டும் தாண்டறதுக்கு?” இதெல்லாம் கூட ...
மேலும் கதையை படிக்க...
"அட முத்தம்மாவா, உள்ள வா! ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்று கதவை திறந்துக்கொண்டே கேட்டாள் அனிதா. சுமார் ஐநூறு அபார்ட்மெண்டுகள் கொண்ட அந்த பெரிய அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில், அனிதாவை அனைவருக்கும் பிடிக்கும். இத்தனைக்கும் அவள் தன் கணவனோடு அங்கு குடிவந்து ஒரு ...
மேலும் கதையை படிக்க...
(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன் வந்து இருக்கும்படி வருந்தி வருந்தி அழைத்தனர். ஒரு மாற்றத்திற்காக ஹைதராபாத் மகள் வீட்டில் சில நாட்களும்; பெங்களூர் மகள் வீட்டில் சில நாட்களும் ...
மேலும் கதையை படிக்க...
சாப்பாட்டு இலை! – ஒரு பக்க கதை
லிட்மஸ் நிறம் காட்டினால்….
ஜெயித்த நரி
அந்நியமுகி
சமையல்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)