கோபம் – ஒரு பக்க கதை

 

கணவன் பாலுவிடம் கலாவுக்குக் கோபம்.

ஊருக்குப் போகிறேன், என்று பஸ் பிடித்தாள். பாலுவும் தொடர்ந்து வந்தான்.’நீங்கள் என்னுடன் வரக்கூடாது’ என்று தடுத்தாள் அவள்.

‘நான் உன்னுடன் வரவில்லை. பொதுப் பயணியாக வருகிறேன்’ என்று இரண்டு வரிசை பின்னால் அமர்ந்து கொண்டான், அவன்

பஸ் பட்டுக்கோட்டைக்கு வந்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிப்பது வழக்கம். ஆனால் இப்போது பேருந்தைவிட்டு இறங்கி பத்து நிமிடமாயிற்று.

மெளனமாய் நின்றிருந்தாள், கலா. ”ஆட்டோ பிடிக்கட்டுமா? என்றான் பாலு தயங்கிய குரலில்.

அவள் பேசவில்லை. விறு விறுவென்று போய் அவள் வந்த பேருந்திலேயே ஏறினாள்.

“வீ…வீட்டுக்கு…”

‘போகல்லை’ என்றாள் கண்களில் அரும்பாக ஒரு புன்னகை. ‘கோபத்துடன் வீட்டை விட்டுக் கிளம்பிய மனைவி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாபமல்
இவ்வளவு தூரம் எனக்குப் பாதுகாப்பாக வந்தீர்களே….அந்த உயர்ந்த குணத்தை நினைக்கிறபோது என் கோபம் அற்பமா தோணுதுங்க…வாங்க…திருச்சிக்கே போகலாம்”

- தமிழினியன் (ஜூலை 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான் வினோத் ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..? உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் இல்லே, சீதா, கடைசியா… இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, "என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் ...
மேலும் கதையை படிக்க...
நான் கதை எழுதணும் பேனா வேணும் ? பேனா வேண்டாம் இந்தாங்க பென்சில். இந்தாங்க பேப்பர் இதுல கதை எழுதுங்க… எப்படி ஆரம்பிக்கலாம்?... ம்..ம்.. ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி … அட்டா பென்சில் உடைஞ்சிடுச்சே, இப்படி அழுத்தி எழுத வேண்டாம், கொடுங்க சீவி தர்றேன். கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை முழுமையாகத் திருப்பித் தந்துகொண்டிருந்தது. ரீசஸ் பீரியடு முடிந்ததும் கிளம்பி வந்திருந்தாள். இந்நேரம் மூன்றாவது பீரியடு தொடங்கியிருக்கும். ''ஒன்னிய கௌம்பச் சொல்லிட்டேன். கௌம்பு...'' ...
மேலும் கதையை படிக்க...
"இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!" ...
மேலும் கதையை படிக்க...
ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை..! – ஒரு பக்க கதை
அடுத்த வீடு
ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி
மட்டன் பிரியாணியும் மேட்னி ஷோவும்
பண்ணைச் செங்கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)