அல்பம் – ஒரு பக்க கதை

 

மாமி, மாடியில் துணிக்கு நானந் போட்ட கிளிப்பில் ரெண்டு குறையுது! ஒரு வேளை நீங்க மறதியா எடுத்துட்டு வந்துட்டீங்களா? கொஞ்சம் செக் பண்ணுங்க…’ சொன்ன பக்கத்துப் போர்ஷன் ஆனந்தியை ஏளனமாகப் பார்த்தார் வரதன்.

“சரிம்மா, எங்களுதுன்னு எடுத்துட்டு வந்திருக்கலாம்! நிச்சயம் பார்க்கறேன்!’

அமைதியாக பதில் சொன்ன மனைவி உமாவை, கோபத்துடன் பார்த்தார்.

அன்றும் அப்படித்தான். “மாமி… என் கர்ச்சிப் ஒண்ணு காணோம். அது உங்க துணியுடன் வந்துடுத்தான்னு சித்தே பார்த்துச் சொல்லுங்க!’

ஆனந்தி வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டு சொன்னது வரதனுக்கு மிகையாகப் பட்டது.

“அவ பாட்டுக்கு சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் மெனக்கெட்டு வந்து சொல்லிட்டுப் போறா? நீயும் வாயை முடிக்கிட்ட இருக்கே? சரியான அல்பம் அவ!’

சிரித்தபடி உமா, “சின்ன விஷயம்தானேன்னு அலட்சியம் பண்ணாமே, இந்த மாதிரி விஷயத்தைக்கூட சீரியஸா எடுத்துக்கற பெண்தான் குடும்பத்தை நல்லா நிர்வாகம் பண்ணுவா. ஆனந்தியின் இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! நம்ம பையன் விஜய்க்கு அவளை பேசி முடிக்கலாம். என்ன சொல்றீங்க?’ என்றாள்.

வரதனுக்கு உமாவின் அமைதிக்குக் காரணம் கிடைத்தது.

- வி.சிவாஜி (மார்ச் 5, 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
மனசு
நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி வழிகிறது. பக்கத்து இருக்கையில் இருந்த அமலா எழுந்துவந்து, ""வினோ ஏன் இப்படி இறுக்கமா இருக்கே? சி.இ.ஓ.கிட்டே அரைநாள் பர்மிஷன் சொல்லிட்டு, ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விமலாவின் கதை
அதிகாலை வேளை.நடைப் பயிற்சிக்காக அந்த சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தேன். அது எங்கள் தொழிற்சாலை ஒட்டிய பாதை. ஏழு மணிக்கு மேல் தான் போக்கு வரவு மிகுந்திருக்கும்.ஐந்து மணியெல்லாம் நடப்பது என்பது என் போன்றவருக்கும் கூட சிறிது நல்லதல்ல !நானும் ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்து கையில் நியூஸ் பேப்பரும் மனைவி கொடுத்த காபியுமாக வந்து சோபாவில் அமர்ந்த மாதவனுக்கு கொல்லைப்புறம் கமலா துணி துவைப்பது கண்ணில் பட்டது. தேவி! வாஷிங் மெஷின் வாங்கியதும் கமலாவை நிறுத்திட்டேன்னு சொன்னாயே, என்னாச்சு மெஷின் ஏதும் ரிப்பேராயிடுச்சா..? அதில்லைங்க…இந்த ...
மேலும் கதையை படிக்க...
காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி சுவர் ஓரம் சேகர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்கப் பார்க்க இவளுக்குள் ஏகத்துக்கும் எரிச்சல், கோபம் ! ' தன்னை, இவன் பலி பீடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் ஜனனி. திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். சீதா லக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும், உடனே திருமணமாகி விட்டது. திருமணமாகி தற்போது ஆறு மாதங்களாகிவிட்டது. வாக்கப்பட்டது பெங்களூரில். என்னவர் ஒரேமகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். வசதியான குடும்பம். பெங்களூரின் உடம்பை வருடும் ...
மேலும் கதையை படிக்க...
மனசு
ஒரு விமலாவின் கதை
மெஷின் – ஒரு பக்க கதை
முறை மாமன்..!
மாமியாரும் மாமனாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)