அம்மா வாங்கிய பேனா

 

அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.

ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்.

“ரொம்ப நன்றி அம்மா. பேனாவைக் கொடுங்க அம்மா,” கேட்டான் கோபு.

“கோபு, இந்தப் பேனா உனக்கல்ல!” அம்மா சொன்னதும் ஆவலெல்லாம வடிந்துவிட அதிர்ச்சியுடன், “பின் யாருக்கம்மா?” என்றான்.

“இது உன் நண்பன் அந்த ஏழை பாபுவுக்கு”.

“நான்தான் அம்மா பேனா கேட்டேன்!”

“நீதான் இரண்டு, மூன்று பேனா வைத்திருக்கிறாயே! ஆனால், அந்த பாபுவிடம் பேனாவே இல்லேங்கிறது இப்பத்தான் என் நினைவுக்கு வந்தது. அதனாலே இதை அவன் கிட்டே கொடுக்கப் போகிறேன்.”

அதைக்கேட்டதும் கோபுவின் முகம் சுருங்கிப் போய் விட்டது. அம்மாவின் மேல் அவனுக்கு இப்பொழுது கோபம், கோபமாக வந்தது.

“இந்தப் பேனாவை பாபுகிட்டே கொடுக்கிறதினாலே என் மேல் உனக்குக் கோபம் இல்லையே!”

அம்மா கேட்டதும் கோபத்தை மறைத்துக் கொண்டு “இல்லேம்மா?” என்றான்.

அவன் வாய் சொன்னாலும் அவன் முகத்தில் இருந்த கோபத்தை அம்மா புரிந்து கொண்டாள்.

“இதோ பாரு கோபு, உனக்கு நான் இருக்கிறேன். உன் அப்பா இருக்கிறார். ஆனால் பாபுவுக்கு யார் இருக்கிறார்கள்? அம்மா இறந்து போயிட்டாங்க. அவன் அப்பாவோ நோயாளி. எப்போதும் நம்மைவிடக் கஷ்டப்படறவங்களுக்கு நாம உதவி செய்தால் கடவுள் நமக்கு உதவி செய்வார். எங்கே நீயே மகிழ்ச்சியோடு இந்தப் பேனாவைக் கொண்டு போய் பாபுவிடம் கொடுத்துவிட்டுவா. பார்ப்போம்”.

கோபு போலியான மகிழ்ச்சியோடு பேனாவை பாபுவிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

சமாதானம் அடையாத மனத்தோடு பள்ளிக்குச் சென்றான்.

பாபு எல்லோரிடமும் கோபு கொடுத்த பேனாவைக் காட்டி, கோபுவின் பெருந்தன்மையை எடுத்துச் சொன்ன பொழுது கோபுவிற்கு ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் ஒருபுறம் எரிச்சலாகவும் இருந்தது.
அன்று மாலையே கோபுவுக்கு ஓர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது பள்ளியில்.

சென்றவாரம் நடந்த கட்டுரைப் போட்டியில் அவன் முதற்பரிசு பெற்றதாக அறிவித்துப் புது ஹீரோ பேனா ஒன்று பரிசளிக்கப்பட்டது தலைமையாசிரியரால்!

பழைய வருத்தம் மறைந்து போக புதுப் பேனாவுடன் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தன் பேனாவைக் காட்டினான்.

“கோபு, நான் காலையிலேயே சொன்னேன் அல்லவா? கடவுளுக்குப் பிடிச்ச விஷயத்தை நாம் செஞ்சா கடவுள் நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்வாருன்னு! நாம் பாபுவுக்குக் கொடுத்தது சாதாரணப் பேனா ஆனால் கடவுள் உனக்குக் கொடுத்ததோ ஒரு உயர்வான ஹீரோ பேனா என்றாள்.

“உண்மைதான் அம்மா! நானும் இனிமேல் நம்மைவிடக் கஷ்டப் படறவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்வேன்” என்று சொன்ன கோபுவைப் பெருமையோட உச்சிமோந்தாள் அம்மா.

- கோகுலம் நவம்பர் ‘87’ 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டாள். புடவை ப்ளீட்ஸை ஒழுங்குபடுத்தி, மேலே அடுக்கிப் பின் பண்ணிக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திப் ...
மேலும் கதையை படிக்க...
வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். வேலப்பன் சாவடியில் குமரன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சாதாரணமாக இருந்த குமரன் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன் ரூமிற்குள் நுழைந்தவன் திடுக்கிட்டான். அவனுடைய மனைவி தன் துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தததைப் பார்த்துக் காரணம் புரியாமல் அவளை ஏறிட்டான். “மனோஜ், இன்று இரவு ...
மேலும் கதையை படிக்க...
காலை வேலை, பூக்களின் மணம் இதமாகப் பொங்கியது. சூரியன் அப்போதுதான் உதித்திருந்தான். மரங்களின் இலைகளின் மீதும் புற்களின் தண்டுகளின் மீதும் பனிநீர் இன்னமும் மினுமினுத்துக் கொண்டிருந்தது. அந்த உடைந்துபோன நாடாக்கட்டிலைவிட்டு அவசர, அவசரமான எழுந்தாள் கமலி. அந்த அரண்மனையில் அதுதான் அவளின் சுகபோக சிங்காதனம். ...
மேலும் கதையை படிக்க...
கூட்டம் இல்லாத இடமாய் நீண்ட தூரம் நடந்து ஒரு கட்டு மரத்தின் பக்கம் பிரியாவும் பிரபுவும் ஒதுங்கி இருந்தனர். அவர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது, மற்றவர்களைப்போல் இருளை சாதகமாக்கிகொள்ள அல்ல. அப்படியோரு நல்லவன் பிரபு. அதுதான் அவன் மீது பிரேமை கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
மனவேலிகள்
மனம் மாறியது
புல்லானாலும் …..!
தேய்மானம்
பாசத்தைத்தேடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)