அவளைப் பார்த்தான் அவன்.
சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து வந்தான், கிடைக்காத புதைய லாய்!
தலையணையில் அவன் சாயும் போதெல்லாம், அவள் தலையும் பக்கத்தில்!
மனம்விட்டுப் பேசினான்; முகம் வைத்துக் கொஞ்சி முயங்கினான்.
ரொம்ப நெருக்கமாகிவிட்டார் கள்.
அவன் தனிமையில் இருக்கும்போது வா என்றால் வந்துவிடுவாள்.
முட்டையின் மேல் படிந்து அடை காப்பது போல் காத்தான். அடை மழை போல் பிரியத்தைப் பொழிந் தான். ஆனந்த உலகில் சஞ்சரித் தான்.
நீடித்துக்கொண்டிருந்தது இப்படி.
சில நாட்கள் கழித்து….
முதன்முதலில் அவளைக் கண் டானே, அதே இடத்தில் இன்றும் கண்டான் அவளை.
நிறை மனசுடன் புன்னகைத்துக் கொண்டே அவளை நெருங்கினால்… வேற்று ஆளைப் பார்ப்பது போல மருண்டு திகைக்கிறாள்; விலகுகிறாள்!
‘ஓஹோ, அப்படியா! சரீ, போ!
எனக்குள் ஒரு நீ இருக்கிறாய்;
காலமெல்லாம் அவளோடு சுகித்திருப்பேன்’ எனச் சொல்லிக் கொண்டு திரும்பினான்!
- 24th ஜனவரி 2007
தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: கி.ரா.
அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்யபாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல; அதைத் தொடுத்துப் பல சேத்திரங்களுக்கும் போகிறது என்றும் உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
தூங்கா நாயக்கருக்குப் பல யோசனை ஓடியது. கேவலம் ஒரு 'குண்டி வேட்டிக்கு' இப்படியொரு 'தரித்திரியம்' வந்திருக்க வேண்டாம்.
ரொம்ம்ப வருத்தமாகிவிட்டது மனசுக்குள் அவருக்கு.
இருக்கிறதெல்லாம் இந்த ஒரு வேட்டிதான்.
அன்றைக்கு வேலை இல்லை - அதாவது கிடைக்கலை.
அது நல்ல கோடைக்காலம். உடம்பில் வேர்வை ...
மேலும் கதையை படிக்க...
உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் ...
மேலும் கதையை படிக்க...
கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை
என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த
ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக ...
மேலும் கதையை படிக்க...
‘‘இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு ஜெயிச்சிருதாங்க!’’
‘‘முடியாது, முடியாது! தேர்தல்ல யாவது, நா நிக்கிறதாவது... அந்தப் பேச்சே வேணாம்!’’
‘தயவுசெஞ்சு அப்படிச் சொல்லப் படாது’ என்று எம்புட்டோ மன்னா ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்ததும், பால் பாக்கெட் வாங்க நான் போகும் போதெல்லாம் முதலில் தட்டுப்படுவது இவன்தான். தெரு திரும்பியதும் முனிசிபல் குப்பைத் தொட்டியில் துழாவிக்கொண்டு இருப்பான்.
அவனுக்கு வேண்டியது கழிவுத் தாள்கள், காலியான பால்பாக்கெட் டுகள், அட்டைப்பெட்டிகள் இப்படி. எவ்வளவுக்குக் கிடைக்கிறதோ அன் றைக்கு ...
மேலும் கதையை படிக்க...
(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் - நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).
இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: கி.ரா.
'மைலாப்பூர், மைலாப்பூர்,' – 'அடையார், மைலாப்பூர்!'
'மைலாப்பூர் நாசமாகப் போக!' என்றார் ஸ்ரீமான் பவானந்தர், கோபத்துடன்.
எவ்வளவு நேரம்தான் காத்துக்கொண்டிருக்கிறார் அவரும். ஓர் அமிஞ்சக்கரை
பஸ்ஸூம் வரவில்லை. அதற்குள் இருபது மைலாப்பூர் பஸ்களும், முப்பது
திருவல்லிக்கேணி பஸ்களும் வந்து போயிருக்கும். ஓர் அமிஞ்சிக்கரைகூடக்
கிடையாது! ' ...
மேலும் கதையை படிக்க...
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள்.
இரட்டைக் கதவு போட்ட ஒரு வாசல், ஒரு கதவு மட்டும் திறத் திருந்தது. ஒரு கதவு மூடியிருக்கிறது. மூடியிருக்கும் அந்தக் கதவைப் பிடித்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவு செட்டியார் சைக்கிளில் வந்து 'ஜம்' என்று இறங்கினார் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த கிராமத்து இளைஞர்கள் சைக்கிளின் பக்கம் நெருங்கி, 'ஹேன்ட்பாரில்' சொருகி இருந்த தினப் பத்திரிகையை உரிமையோடு எடுத்து, உலக விஷயங்களில் மூழ்க ஆரம்பித்தார்கள்.
செட்டியார், சைக்கிளை 'ஸ்டாண்டு' போட்டு ...
மேலும் கதையை படிக்க...