கார்த்திக் கண்மணி காதல் கதை

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 24,943 
 

“கண்மணிக்கு வலி எடுத்துட்டுப்பா இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கம் சீக்கிரம் வந்துடுப்பா ” அம்மா போன் பண்ணி சொன்னப்போ மனேஜருக்கு கூட சொல்லாம ஏதோ ஞாபகத்தல ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துட்டன் ,, உன்னை எவளா பிடிக்கும்னு கேப்பியே, இந்த ஒரு நாளில உன்கிட்ட சண்ட போட்டதுக்கு எல்லாம் மானசீகமா மன்னிப்பு கேட்டு கிட்டன் டீ ,

ஆஸ்பத்திக்கு வந்தப்போ அம்மா அத்தை எல்லாம் அங்க நின்டுட்டு இருந்தாங்க நீ என்னை கேட்டுட்டே இருந்தியாம் என்டு சொன்னாங்க , என்னால அந்த ஹால் ல நிக்கவே முடியல மனசெல்லாம் என்னமோ பண்ணிட்டு இருந்திச்சு….. இறங்கி கீழ போய் நின்டுட்டு இருந்தன் , திரும்பி பாத்தப்போ ஒரு குட்டி கோவில் ஆஸ்பத்திரி வாசலிலயே … உனக்கு பிடிச்ச கிருஷ்ணன் கோவில் தான்டீ மனசுக்குள்ள நல்லா வேண்டிக்கிட்டு திருநீறு எடுத்து பூசிக்கிட்டன் ,

“ஆஸ்பத்திரி வாட்டில் மனைவியின் வலிப்பிளிரல் கேட்டு காமம் நொருங்கி கண் கலங்குமாம்” …. ஒரு கவிதையில படிச்ச ஞாபகம் ….. வெளிநாடுகளில எல்லாம் இந்த மாதிரி டைம்ல புருசனை பக்கத்தில இருக்க விட்டுவாங்களாம் நல்ல வேளை இங்க அப்பிடி ஒன்னும் இல்ல ஒப்ரேசன் தியேட்டர் வாசலிலயே நிக்க முடியுதில்ல….. பிறகெப்பிடி மறுபடியும் அம்மா போன் பண்ணினாங்க

“எங்கடா நிக்கிறா மேல வா இப்பவும் சின்ன பிள்ள போல… பயந்துகொண்டு நிக்கா ”

“இல்லமா கீழ பிரண்ட் ஒருந்தன் வந்தவன் அதான் “ஏதோ சாமாளித்த மிதப்பில் மேல போனன் ,,,,,

எல்லார் முகத்திலையும் அப்பிடி ஓரு சந்தோசம், அத்த வந்து “உள்ள போய் கண்மணியையும் புள்ளயும்” பாருங்க மாப்ள என்னாங்க

கதவ திறந்தது தான் மிச்சம் இனி நடந்த எல்லாம் என் வாழ்க்கையில நா கனவில கூட நினச்சு பாத்திராத இப்ப எப்பவுமே நினைச்சு பாத்திட்டு இருக்கிற அற்புதமான தருணங்கள்

என்ன கண்டோன படுத்திருந்த நீ கொஞ்சம் எழும்பிறதுக்கு ட்ரை பண்ணினா அங்க இருந்த நேர்ஸ் ஒரால் எழும்பாதீங்கமா படுத்திருந்தே பேசுங்கம்மா என்டாங்க நா பெஸ்ட் குழந்தய பாக்கவே இல்ல, உன்ன தான் பாத்துட்டு இருந்தன் வாடா போடானு கூப்பிட்டு இருந்த நீ வாங்க இருங்க என்டா, என்னடி பெரிய மனிசி ஆயிட்டியா , உன் குரலிலையே தெரிஞ்சுதுமா நீ எவளா கஸ்ரப்பட்டு இருப்பா என்டு உன் முகம் எல்லாம் வேர்த்து இருந்திச்சு நா ஆபிஸில இருந்து நேர வந்ததால ,,,, கட்டியிருந்த ரை யால உன் முகத்த துடச்சு விட்டன் , எங்க ரொமான்ஸ் அ கடக்கண்ணால பாத்து நேர்ஸ் சிரிச்சது ,

அப்றம் நீ குழந்தய காட்டி புருவத்த தூக்கி எப்பிடி என்கிற போல கேட்டா உனக்கு பையன் தான் விருப்பம் எனக்கு பொண்ணு தான் விருப்பம் நீ தோத்து என் ஆசய நிறைவேத்திடுவ எப்பவுமே , இனிமே உன்ன எப்பவுமே கஸ்ரப்படுத்த கூடா என்டு நினைச்சுகிட்டன் மனசுக்குள்ள ஆயிரம் தடவ லவ்யூ கண்மணினு சொல்லிக்கிட்டன் … என்னங்க ஒரே வேண்டுதல் போல … அப்டீ என்ன வேண்டிகிட்டிங்க உங்கள போல அறிவா ஒரு புள்ள வேணும்னா…… இல்லமா. உன்ன போல அழகா ஓரு புள்ள வேணும்னு தான் … உன்னோட கையால என ரையை பிடிச்சு இழுத்து உன் நெத்தியோட என் நெத்திய இடிச்சு கிட்ட என் நெத்தியில இருந்த வீபூதி இப்ப உன் நெத்தியிலையும் …. அப்பிடியே கவிதயா இருந்துச்சுடீ , திரும்பி பாத்தன் அங்க இருந்த நேர்ஸ் அ காணல … கிஸ் அடிச்சம் என்டு நினச்சு ஓடியிருப்பாங்க

குழந்தய பாக்க கிட்ட போனப்போ ஒரு கையால உன் கைய பிடிச்சிட்டூ இருந்தன் பயம் தான்டீ அப்பாவ அவளுக்கு பிடிக்குமோ இல்லயோ தெரியலே என்டு தான் … ரோஸ் கலரில அவ கண்ண மூடி படுத்துட்டு இருந்தத பாக்க ஏன்மா இவள நாளா தான் அம்மா வயித்தில தூங்கிட்டேமா இப்பவாச்சும் அப்பா கூட விளாட வரலாம் தானே என்டு கேக்க தோனிச்சு

அப்பதான் அம்மா கதவ திறந்துட்டு வந்தாங்க அம்மாவ பாத்த உடன அழுக தான் வந்திச்சு அம்மாவ கட்டி பிடிச்சு அழுதுட்டன் ஏன் என்டே தெரியல சத்தியமா எனக்காகவும் அவங்க இப்பிடி தான் கஸ்ரப்பட்டிருப்பாங்க அல்ல …. அதனாலயோ என்டு இப்ப இருந்துட்டு யோசிப்பன்,,,,,

“கார்த்தி வெளிநாட்டில இருந்து சித்தி கதைக்கனுமாம்”ஒரு சொந்தகார ஆன்ரீ

“வாழ்த்துக்கள் டா ,, பேர் எல்லாம் ஏற்கனவே யோசிச்சு வச்சுட்டாயாடா ”

“இல்ல சித்தி இன்னும் இல்ல … சித்தி ஆன்ரீ உங்ககிட்ட ஏதோ கதைக்கனுமாம்” போனில மைக்க பொத்தி கொண்டு ஆன்ரீ கிட்ட “சித்தி உங்க கிட்ட ஏதோ சொல்லனுமாம்” , நீயும் நானும் மட்டுமே இருக்க வேண்டிய டைம் டா இது … அதுக்காக என்ன வேனா பண்ணலாம், அவாவ அனுப்புனதுக்கு வேற ஐடியா அப்ப தோனலடா

வீட்ட வந்தப்புறம் பத்திய சாப்பாடு அது இதுனு சாப்பிட்டு நீ குண்டா வந்திருந்தப்போ “கன்னம் எல்லாம் எப்பிடி உப்பியிருக்கு….. கன்னமே இவளா உப்பியிருக்குனா” என்டு நா சிரிச்சப்போ தலாணியாலே என்னை அடிச்சு கலச்சது , எத்தனை சொந்தகாரங்க வந்தலும் எழும்பி நீ மரியாதையா கதச்சது யாரும் உனபத்தி குற சொல்லி பாத்ததே இல்லடி எப்பிடிடீ உன எல்லாருக்கும் பிடிக்குது , இரவு வேளைகளில் என்னை கவனிப்பதாகட்டும் பாப்புவை கவனிப்பதாகட்டும் தாய்க்கும் மனைவிக்குமான தடுமாற்றத்தை உன்னில பாத்திருக்கிறன் … பாப்பு எழும்பி அழுதா என்னத்தயடா குடுக்கிற என்டு கெஞ்சி கேட்டும் போதெல்லாம் எனக்குமல்லவா தாயாகிவிடுகிறாய்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “கார்த்திக் கண்மணி காதல் கதை

  1. நைஸ் ஸ்டோரி பிட் இட்ஸ் டிபிசில் டு உண்டர்ஸ்டாண்ட் தி லங்குஅகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *