அங்கொட மனநல மருத்துவமனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 5,670 
 

அன்று “புதினம்” என்ற வாரப் பத்திரிகைக்கு ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை, கோப்பியை சுவைத்தபடி எழுதிக்கொண்டிருந்தேன். புதினப் பக்திரிகைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததுக்கு காரணம் பல தர மக்களின் வாழ்வில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளும் செய்திகளும் அதில் வருவதே. முப்பது வருடங்களுக்கு முன் மாதந்த இதழாக ஆரம்பமாகிய புதினம், ஐந்து வருடங்களுக்குள் மாதம் இருமுறையாக வெளி வரும் பத்திரிகையாக வளர்ந்தது. வருடா வருடம் அதன் வாசகர் எண்ணிக்கை வளர்ந்து, பத்து இலட்ச எண்ணிக்கையை எட்டியது. பத்திரிகையின் விலையில் மாற்றம் ஏற்படாதது, வாசகர் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தது.

இருபது வருடங்களுக்கு முன் சாதாரண செய்தியாளனாக என் தொழிலை ஆரம்பித்து, படிப்படியாக, எனது கடும் உழைப்பினால் புதினத்தின் உதவி ஆசிரியரானேன். ஆந்த பதவிக்கு வர எனக்கு சுமார் இருபது வருடங்கள் எடுத்தது. புதினத்தில் ஆண்களும் பெண்களுமாக அறுபது பேர் வேலை செய்தனர்.

என்னோடு செய்தியாளராக வேலை செய்தவள் தாரிணி. பேராதனை பல்கலைக் கழக்கத்தில் ஊடகவியற் துறையில் படித்துப் பட்டம் பெற்றவள். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதக்கூடிய திறமை படைத்தவள். அவள் அரசியல் செயதிகளுக்கு பொறுப்பாயிருந்தபடியால் பல அரசியல்வாதிகளின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. தாரிணியை சுமாரான அழகி என்றே சொல்லலாம். ஐந்து ஆடி ஏழு அங்குளம் உயரம், நீண்ட அடர்த்தியான முடி. கவரச்சியான பார்வை. அவள் பலரைக் கவரக் கூடிய விதத்தில் உரையாடுவாள். அனேகமாக ஜீன்சை விரும்பி அணிவாள். அவளது அரசியல் பிரமுகர்களின் நேர்காணல் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தாரிணியின் தந்தை மாணிக்கம், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசாங்க ஊழியர்;. தாரிணியின் தாய் லீலாவதி கிண்ணியாவைச் சேர்ந்த சிங்களப்பெண். மத்திய கல்லூரி ஒன்றில் சிங்கள ஆசிரியை. தாரிணி சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அனேகமாக உரையாடுவாள். தமிழ் பேசத்தெரிந்தாலும் பேசுவதைத் தவிர்த்தாள். அதனால் அவளுக்குச் சிங்கள அரசியல்வாதிகளோடு நெருங்கிய நட்பை ஏற்படுத்தியது.

சிகரட் குடிக்கும் பழக்கம் அவளுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே வந்தது. அரசியல்வாதிகளின் அறிமுகத்தினால் மது அருந்தும் பழக்கமும் அவளை ஒட்டிக்கொணடது. நான் எவ்ளவோ சொல்லியும் அந்த இரு கெட்ட பழக்கங்களையும் அவள் விட்டபாடாக இல்லை. என்னை தன்கூடப் பிறந்த அண்ணாக கருதிப் பழகினாள். ஆதற்கு காரணம் மாணிக்கம் தம்பதிகளுக்கு அவள் அவள் ஒரு பிள்ளாயாகப் பிறந்ததே, அவளுக்கு என் மேல் சகோதரப் பாசம் ஏற்படக்காரணம். அரசியல்வாதிகளோடு தான் எதிர்நோக்கியப் பிரச்சனைகளை எனக்கு எடுத்துச்சொல்வாள்.

தாரணிக்கு அமைச்சர் ரத்னபாலாவின் அறிமுகம் ஒரு நேர்காணலின் போது கிடைத்தது. அதன் பிறகு பல தடவை அவரை இன்டர்வியூ செய்து புதினப் பத்திரிகையில் எழுதியிருக்கிறாள். அதுவே சாதாரண எம்பியாக இருந்த ரத்னபாலாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க உதவியது. அவர்களுக்கு இடையேலான சந்திப்புகள் நாளடைவில் காதலாக மாறியது.

அமைச்சர் ரத்னபாலா எற்கனவே ஒரு தடவை திருமணமாகி விவாகரத்து செய்தவர். அது தெரிந்திருந்தும் தாரிணி அவருடன் உறவு கொண்டாடியதை நான் விரும்பவில்லை. நான் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் அவளது பிடிவாதக் குணம் என் புத்திமதியை கேட்கவிடவில்லை. அதன் விளைவாக, திருமணமாகாமலே அவள் ரத்னபாலாவின் குழந்தையை வயிற்றில் சுமந்தாள். ரத்னபாலா இரண்டாம் தடவை ஒரு பிரபலயமான தொழில் அதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்தது தாரிணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவள் வயிற்றில் இருந்து நான்கு மாதக் கருவும் கலைந்தது. அதே சமயம் உள்ளநாட்ப் போரின் போது குண்டு வீச்சினால் அவர்களது வீடு தாக்கப்பட்டு தந்தையும் தாயும் இறந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த சம்பவங்களால்; அவளது மனநிலை வெகுவாக பாதிப்படைந்தது. அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாத நிலை ஏற்பட்டது. சில சமயங்களில் தன்னிலை அறியாது கோபத்தில் தன்னோடு வேலை செய்பவர்களை தூஷண வார்த்தைகளால் பேசுவாள். சிலரை அடித்தும் இருக்கிறாள். சில நாட்களில் வேலைக்கு வருவதில்லை. அவள் வாழ்ந்த அப்பார்ட்மெண்டில் போய் பார்த்தால் கதிரையில் யோசித்படி சிகரட் குடித்து கொணடே இருப்பாள். மேசை நிரம்ப, காலியான பியர் போத்தல்கள். என்னால் கூட அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது மனநிலை அவள் செய்யும் வேலைக்கு நல்லதல்ல எனத் தீர்மானித்த நிர்வாகம், அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். புதினப் பத்திரிகையின் உரிமையாளர் சமரநாயக்காவின் மனைவி ஒரு மனநோய் வைத்தியர். அவர் தன் மனைவியின் ஆலோசனைபடி தாரிணியை அங்கொடை மனநோயாளிகளுக்கான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டார்.

*******

“ ராஜா அங்கொடை மனநிலை மருத்துவமனையில் உள்ள சோஷல் வேக்கர் உங்களோடை பேசவேண்டுமாம். லைனிலை நிற்கிறா”, என்று தொலை பேசியை என்கையில் தந்தார் என்னுடைய உதவியாளர் கணேஷமுர்த்தி. எனக்கு உடனை எதற்காக அங்கொடை மனநிலை மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று புரிந்து விட்டது.

“ யார? புதினப்பத்திரிகையின் உதவி ஆசிரியர் ராஜாவா பேசுகிறது”, தொலைபேசியில் மென்மையான, நட்புக்குரலில் ஒரு பெண் பேசினாள்.

“ யெஸ்; ராஜா தான் பேசகிறன். ஏன்ன விஷயம். நீங்கள் யார் பேசுகிறது எண்டு சொல்லுங்கோ”.

“நான் அங்கொடை வைத்தியசாலையில் வேலை செய்யும் சோஷல் வேக்கர். என் பெயர் நெலும் ஹெட்டியாராச்சி.. உங்களால் தயவுசெய்து அங்கொடை ஆஸ்பத்திரிக்கு இன்றே வர முடியுமா? இங்கு நோயாளியாக இருக்கும் தாரிணி என்ற பெண் உங்கள் பெயரைச் அடிக்கடி சொல்லி கட்டுப்படுத்த முடியாமல் சத்தம் போட்டு குளப்படி செய்கிறா. உங்களைப் பார்க்க வேண்டுமாம். உங்களுக்கு தாரிணி என்ற பெண்ணைத் தெரியுமா மிஸ்டர் ராஜா”

“ஓம் தெரியும். அவ என்னோடை புதினப் பத்திரிகையில செய்தியாளராக பல காலம் வேலை செய்தவ. ஒரு காலத்தில் திறமையான செய்தியாளரெனப் பெயர் வாங்கினவ. தாரணி எனக்கு சகோதரி மாதிரி. பாவம் அவளுடய தற்போiதைய நிலை பரிதாபப்பட வேண்டியது., அவவுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால்; மனநோயாளியாகி விட்டா” நான் பதில் சொன்னேன்.

“நல்லது நீங்கள் அங்கொடை ஆஸ்பத்திரிக்கு வந்து ரிசெப்சனில் என் பெயரைச் சொல்லி கேளுங்கள். நான் வந்து உங்களை வோர்ட் நம்பர் 15 க்கு தாரிணியிடம் அழைத்துச் செல்கிறேன். அவளோடு பேசி அவளை அமைதியாக்கப்பாருங்கள். சில சமயம் உங்கடை பேச்சைக் கேட்டு அவள் அமைதியாகக் கூடும்” டெலிபோனில் பேசிய சோஷல் வேக்கர் நெலும்; சொன்னாள்.

“சரி நான் வந்து பார்க்கிறேன்” .பதில் சொன்னார் ராஜா

பத்திரிகை ஆசிரியரிடம் நடந்ததை சொல்லி அவரின் அனுமதியோடு பம்பலப்பிட்டியில் இருந்து அங்கொடைக்குப் போகும் பஸ் இலக்கம் 134யில் ஏறி;, மனநோய் வைத்தியசாலைக்கு ராஜா போனார்.

சென்னையில் உள்ள கீழப்பாக்கம் மனநோய் வைத்தியசாலை போன்றது அங்கொடை வைத்தியசாலை. கொழும்பு கோட்டையில் இருந்து 10 கிமீ தூரத்தில், அவிசாவலைக்கு போகும் பிரதான பாதையில் அங்கொடை அமைந்துள்ளது. இவ்வைத்தியசாலை விக்டோரியா மகாராணி இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் 1926 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

அங்கொடை வைத்தியசாலைக்குள் போனபோது என்னை ஆழமான, தீவர சிந்தனை பிரதிபலிக்கும் அனேக முகங்கள் வரவேற்றன. சிலர் சுதந்திரமாக நடமாட முடியாத வாறு சங்கிலியால் கால்கள் பிணைக்கபட்டிருந்தனர். அவர்கள் முகங்களில் சோகம், மற்றும் கொந்தளிப்பு தெரிந்தது. தாங்கமுடியாத சோக சம்பவங்கள்; அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டதால் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் கைதிகள் போல் நிற்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆழ்ந்த சிந்தனையோடும் சுருங்கிய முகங்களோடும் படுக்கைகளில் வரிசையாக இருந்தனர். எனக்குத் தெரிந்தவரகள் சிலரும் இருந்தார்கள்.

“ நான் உனக்காக காத்திருக்கிறேன “என்று கூவிக்கொண்டு என்னிடம் ஒருத்தி ஓடிவந்தாள். நெலும், அங்கு நின்ற காவலாளி ஓருவரை அப்பெண்ணை அழைத்து செல்லும் படி கட்டளையிட்டாள்.

இன்னொரு பெண என்னைப்பார்த்து “அட கொலைகாரா. ஏன கணவனை கொன்றாய்? உன்னைப் றாய்ழிவாங்காமல் விட மாட்டேன்” என்று கூக்கிலிட்டாள்.

“ஏய் உனக்கு என் தந்தி கிடைத்ததா”?, சுமார் இருபது வயதுடைய பெண்ணின் ஓலம். பல பெண் வார்டுகளில் பலவேறு மூலைகளில் இருந்து தலை முடிகளை விரித்த தோற்றத்தோடு கூச்சலிட்டு சிரித்தார்கள். என் கண்கள் தாரிணியைத் தேடியது.

“தனக்கு பத்திரிகையாளனாக ஒரு அண்ணன் இருப்பதாக அடிக்கடி சொல்லுவாள். அரசியல்வாதிகளை நம்பாதே என்பாள். தான் நம்பிக்கெட்டவள் என்பாள். தன் குழந்தையைக் காணோம் என்பாள். தாரிணி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை என்று எனக்கு நெலும் சொன்னாள்;.

என் கண்கள், உதடுகள் கருத்து, மெலிந்த பெண்னொருத்தி, விரித்த தலை முடியோது, தலையில் கைவத்தபடி கட்டிலில் யோசித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டது. நேலும் அவளை எனக்கு காட்டி “அது தான் தாரிணி போய் கதையுங்கள்.”என்றாள்.

என்னால் தாரிணியின் தோற்றத்தைக் கண்டு நம்பமுடியவில்லை.

எனக்குத் தெரியும் தரிணிக்கு வேலை செய்த காலத்தில் இருந்தே கட்பெரீஸ் சொக்கிலேட் என்றால் கொள்ளை விருப்பம் என்று. நான் வைத்தியசாலைக்கு போனபோது ஓரு பக்கட் சொக்கிலேட்டை அவளுக்கு கொடுக்க கொண்டு போயிருந்தேன்ஃ

“நேலும் இதை நான் தாரிணிக்கு கொடுக்கலாமா” என்ற அவள் சம்மதத்தை கேட்டேன்.

நெலும் தiலை அசைவு மூலம் சம்மதம் தெரிவித்தது எனக்கு சந்தோஷம்.

“ தாரிணி உன் அண்ணா ராஜா வந்திருக்கிறன். என்னைத் தெரியுமா?”.

தாரிணியிடம் இருந்து பதில் வரவில்லை. என்னை விறைத்துப் பார்த்தாள்.
நான் என் கையில் இருந்த சொக்கிலேட்டை தாரிணயிடம் நீட்டி “இந்தா தாரிணி உனக்கு விருப்பமான கட்பெரீஸ்” என்றேன் அன்பாக.

அவள் அதை விறுக்கென வாங்கி சுழற்றி எறிந்தாள்.

“தாரிணி நான் உன் அண்ணா ராஜா வந்திருக்கிறன் என்னோடு கோபமா’?

“ எங்கை என் குழந்தை?. எங்கே அந்த கள்ளன்? அப்பாவும் அம்மாவும், கூட்டி வா ” உரத்த குரலில் தாரிணி கேட்டாள்.

நெலும் என்னை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

“ நெலும், தாரிணி இப்போ ஒரு அனாதை. குண்டு வீச்சில் அவளுடைய பெற்றோர்கள் திருகோணமலையில் இறந்து போனார்கள்”.

“ அப்போ ஏதோ குழந்தை என்றாளே”?

நான் நெலுமுக்கு, தாரிணிக்கும் அமைச்சர் ரத்தனபாலாவுக்கும் இடையே இருந்த உறவை பற்றி விபரம் சொன்னேன். அவரின் உறவால் தாரிணி கற்பிணியானதும், பின்ளர் நான்கு மாதத்தில் கரு கலைந்தைப் பற்றி சொன்னேன். பெற்றோர் குண்டு வீச்சில் இறந்ததை சொன்னேன். அந்த சம்பவங்கள் அவளை மன நோயாளியாக்கிவிட்டது.” என்றேன் அமைதியாக.

நெலும் உன்றுமே பதில் சொல்லாது கேட்டுக்; கொண்டிருந்தாள்.
.
“ என்ன நெலும் பேசாமல் இருக்கிறியள். “ நான் கேட்டேன்.

“ ராஜா ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் இருவருக்கும் இடையே மட்டும் இது இரகசியமாக இருக்கட்டும்”, என்றாள் நா தழும்ப நெலும்.

“ என் ரகசியம் சொல்லுங்கோ நெலும்”.

“ நீங்கள் சொல்லும் அமைசர் ரத்தினபால என்பவர் என் அண்ணன். அவரை என் பெற்றோர் குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இப்போது அவர் செய்த கர்மாவுக்காக தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்றாள் நெலும்.

“ என்ன மெடம் சொல்லுகிறீர்கள்”?

“ ஆம் அவருக்கு குடலில் புற்று நோய் தீவிரம் அடைந்து விட்டது. டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள்’” என்றாள் நெலும் தணிந்த குரலில.

நாங்கள் பேசுவதை சில வினாடிகள் அமைதியாக தாரிணி கேட்டுக் கொண்டிருந்தாள். பின் தீடீரென இரு கைளையும் தட்டி பெலத்து சிரிக்கத் தொடங்கினாள். ஏறிந்த சொக்கிலேட்டை எடுத்து சுவைக்கத் தொடங்கினாள். எனக்க புரிந்து விட்டது நானும் நெலுமும் பேசியது தாரிணிக்குப் புரிந்திருக்க வேண்டும் என்று. அதனால் தான் தன்மனதுக்குள் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்படி நடந்திருக்கிறாள்.

ஒரு மணித்தியாலம் நான் தாரிணியோடு கழித்துவிட்டு அவளை சாந்தப் படுத்திய பின் கொழும்பு திரும்பினேன். ஆசிரியருக்கும,; பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் சமரநாயக்காவுக்கும் தாரிணி பற்றிய விபரத்தைச் சொன்னேன்.

நான் தாரிணியைச் சந்தித்து இரு கிழமைகளுக்குப் பின் நெலும் எனக்குப் போன் செய்தாள்.

“ என்ன நெலும், தாரிணி எப்படி இருக்கிறாள். நான் வந்து போன பின் அமைதியாக இருக்கிறாளா? நான் திரும்பவும் வர வேண்டுமா”?

“ தேவையில்லை ராஜா. இரு துயரமான நியூஸ் உமக்கு சொல்ல போன் செய்தனான்.”

“ அப்படி என்ன துயரமான நியுஸ் நெலும்”?

“ஒரு கிழமைக்கு முன் என் அண்ணன்; ரத்னபாலா காலமாகிவிட்டார். பேப்பரில் பாரத்திருப்பீரே”

“ அறிந்தனான். உமக்கு என் அனுதாபங்கள்?. அடுத்த சோகமான நியுஸ் என்ன நெலும்’?

“ என அண்ணா இறந்து ஒரு கிழமைக்குள் தாரிணி மாடியில் இருந்து குதிதது தற்கொலை செய்த கொண்டாள். இறந்த அவள் கையில் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த கட்பெரீஸ் சொக்கிலேட் இருந்தது” என்றாள் அழாக்குறையாக நெலும்.

நான் ஒரு பதிலும் சொல்லவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை ஆசிரியர் கண்டுவிட்டார்

“ என்ன ராஜா. ஏன் அழுகிறீர”?

“நான் சுருக்கமாக “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” எனறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *