இருமனம்

 

ஒரு காலை பொழுது அம்மா நான் கிளம்புறேன் என்ற குரல் போய்ட்டு வாமா என்று அவள் தாயின் குரல் மறுபக்கம் ஒலிக்க, நடந்து சென்று அவளின் வீடருகே உள்ள பஸ் ஸ்டாண்டில் மாநகர பேருந்திற்காக காத்து கொண்டிருந்தாள். அவளின் பேருந்து வந்தது. பேருந்தில் அவளின் தோழியின் அருகில் அமர்ந்து பேசிகொண்டே சென்றிருந்தால். அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ஏறினார்கள். பேருந்து கிளம்பியுடன் ஒருவன் இளம் பச்சை நிற சட்டையுடன் அவளை ரசித்து பார்த்துகொண்டிருந்தான், அவளுக்கே தெரியாமல் அவளின் அசைவுகளையும். திடிரென பேருந்தில் இருந்து அவள் இறங்க அவன் கிறங்கினான் அவள் விட்டு சென்று விட்டால் என. அவளின் கலை கல்லூரி பேருந்து நிலையம் அது.

இவனும் அவனது கல்லூரிக்கு சென்றான். அவளது முத்து பற்கள் அவனது நினைவில் நிற்க, கன்னக்குழியின் அசைவும், கண் இதழ்களின் துடிப்பும் அவனை வாட்டி எடுக்க, அவளின் ஞாபகத்தில் அவன் இருக்க.

வழக்கமாக மாலை கல்லூரி முடிந்து தாமதமாக கிளம்பும் அவன் அன்று கலை கல்லூரி முடியும் நேரத்தில் அந்த பேருந்தில் வந்துகொண்டிருந்தான். கலை கல்லூரி ஐ பேருந்து நெருங்கியுடன் அவனின் கண் அவளை தேடியது. அவள் வரவில்லை.

தலையில் கைவைத்து உற்காந்தான் அவன், திடிரென பேருந்து கிளம்பியுடன் நின்றது, அவளும் அவளது தோழியும் பேருந்தில் ஏறினார்கள். அவனுக்கோ மிக ஆனந்தம். அவளை பார்த்து கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு மனசில்லாமல் அவனுடைய நிறுத்தம் வந்துடன் இறங்கினான்.

இப்படி ஒவ்வொரு நாளும் அதே பேருந்தில் இருவரும் சென்றனர். அவனும் அவளை இரசித்தபடி.ஒரு சில நாட்கள் கழித்து அவன் அவளை பார்ப்பதை அவள் உணர்ந்தாள். உணர்ந்தவள் சற்றும் கண்டுகொள்ளாமல் அவளின் தோழியுடன் பேசிக்கொண்டே வருவாள். இரண்டு மாதங்கள் ஆகின அவளும் அவனை பார்க்க தொடங்கினால் புண் சிரிப்புடன். இப்படியே சில காலம் சென்றது. இவனோ அவளிடம் பேச வேண்டும் என்று தினமும் வருவான் அவனால் முடியாமல் போயிற்று சில சந்தற்பன்களால்.

அவளுக்கும் அவனிடம் காதல் வந்தது. அவனின் செயல்கள் அவளுக்கு பிடிக்க துவங்கிற்று, ஒரு நாள் அவள் தோழியிடம் இதை சொன்னால். தோழியோ அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தால்.

இவன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, அவளிடம் இன்று எப்படியாவது சொல்ல வேண்டும் என்று அன்று வந்தான்.

அவளும் இன்று நாம் பேசவேண்டும் என துடித்தால் அவளது தோழியின் பேச்சையும் மீறி.

இருவரும் கல்லூரி முடிந்து வந்து கொண்டிருக்கும்போது பேசிவிடலாம் என நினைத்து கொண்டிருந்தனர். அவளே அவனருகில் சென்றால் அவனருகில் சென்ற உடன் அவனுடைய இதய துடிப்பு இரு மடங்கானது, அவனோ சட்டென எழுந்து ஹலோ நல்லா இருக்கீங்களா என்று கேட்க அவளும் ஹ்ம்ம் நல்ல இருக்கேன் என்று சொல்ல இரண்டு நிமிடம் மௌனமாயிற்று. அவளின் மனமோ பட பட வென துடித்தது. இவளோ தனது காதலை சொல்லி ஆக வேண்டும் என்று வரும் போது. அவனோ பேச துவங்கினான். அவன் பேசிய உடன் அவளின் முகம் வாடிற்று, நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு சென்றால்.

மறுநாள் அவனோ பேருந்தில் ஏறி அவளை தேட அவளது தோழி மட்டும் தான் இருந்தால், அவன் அத்தோழியிடம் விசாரிக்க அவளுக்கு உடம்பு சரி இல்லை என்று அவள் கூற அவனது மனமோ வலித்தது

தாம் தவறு செய்துவிட்டோமோ என அவனது மனம் வாடியது, பிறகு அவன் கல்லூரியில் யாரிடமும் பேசாமல் மனம் உருகி இருந்தான். கல்லூரி முடித்து அப்பேருந்தில் வரும்பொழுது அவனுக்கு அவள் வரவில்லை என்று தெரிந்தும் அவன் மனம் அவளை தேடியது. அவனுடைய அந்த 30 நிமிட பயணம் அவள் இல்லாமல் அவனுக்கு தொலை தூர பயணமாக தோனிற்று. அவனுடைய பேருந்து நிலையம் வந்தது இறங்கினான் மனதில்லாமல் அப்பேருந்தில் அவளை தேடியவாறே.

இறங்கியதும் அவனுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் கொண்ட கண்களில் அவள் தோன்றினால், அவனுக்காக அவள் காத்து கொண்டிருந்தாள். இவன் மெல்ல நடை போட்டு அவளிடம் சென்று உடம்பு சரி இல்லையா என்று கேட்டான். அவள் தன் சிவந்த கண்களோடு உடம்பு நல்ல தான் இருக்கு மனது தான் சரி இல்லை என்று கூற, அவன் நொந்து போனான். என்னை மன்னிச்சிருங்க என்று அவன் சொல்ல, இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று அவள் கூறி, நீங்க சொன்ன மாதிரி உங்கள் படத்தில் நடிக்க சம்மதம் என்று கூறி உடனே சென்றுவிட்டால்.

முந்தய நாளில், அவனோ தனது காதலை சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கையில் அவன் ஒரு டைரக்டர் ஆகபோகிறான் என்றும் அவன் படத்திற்கு அவளை நடிக்க சொல்லி கேட்டுகொண்டிருகிறான், அவன் மீது உள்ள அவளுடைய காதலால் அவளும் சம்மதம் சொல்ல படபிடிப்பும் தொடங்கிற்று.

படப்பிடிப்பின் போது அவளுடன் நெருக்கமுடன் பழகினான், அவளும் அவனது வேலையில் உள்ள ஈடுபாட்டை பார்த்து உண்மையில் அவன் அவளை காதலிக்க வில்லை என்று நினைத்து சிறிது சிறிதாய் தனது காதலை மரக்கதுவங்கினால்.

படம் முடியும் தருவாயில் இருந்தது, அவளுக்கு அப்போதுதான் தெரிய வந்தது இது அவர்களின் கதை என்று, படபிடிப்பில் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறியது அதில் அவன் தனது காதலை அவளிடம் சொல்கிறான். இவளோ அதிர்ந்தாள் ஆனந்தத்தில் அவனை கட்டி தழுவி அவன் காதலை ஏற்கிறாள். படமும் வெற்றிகரமாக ஓடியது இருவரின் காதலை போல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)