கதையாசிரியர் தொகுப்பு: வி.ஜே.பிரேமலதா

4 கதைகள் கிடைத்துள்ளன.

அழகே அழகே . . . . . தேவதை

 

 வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப் பாடத்தைத் தன் சொந்த ஊரில் படித்திருந்தாள். இப்போது முதுகலை படிக்க கோவை வந்திருந்தாள். நான்கு மணிநேரம் பயணம் செய்து புதிய ஊரில் அதுவும் தங்கிப் படிக்கும் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கிறாள். அவள் இளங்கலையில் பெற்ற மதிப்பெண்கள், அவள் படித்த கல்லூரி அவளைப் பாராட்டி பேசிய பேச்சுக்களைக் கேட்டதினால் மனம் நெகிழ்ந்த அவள் தந்தை தன்


காரைக்கால் பேய்

 

 புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு வந்தான். கறி அமுதும் தயாராகிவிட்டது. இப்போதெல்லாம் அவன் முன்போல் இல்லை என்ற எண்ணம் அவளை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. இப்போது கூட குளித்து முடித்து வந்தபின் திருநீற்றுப் பொடியைக் கையில் எடுத்தபடி, நெற்றியில் பூசத் தடுமாறியபடி நின்று கொண்டிருந்தான். பின் ஏதோ நினைத்தவனாய், நெற்றியிலும், கைகளிலும், மார்பிலும் பூசிக்


வண்ணானின் நாக்கா அழுக்கு?

 

 அரண்மனையே பேச்சற்று உறைந்து கிடந்தது.தீயின் நாக்கு நீருபித்தத் தூய்மையை வண்ணானின் நாக்கு அழுக்காக்கி விட்டதாக எங்கும் பேச்சு. செய்தியறிந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஊர் வாயை மூட வழி தேடியறிந்தவர்கள் தாமே ஊர் வாயானார்கள். செவிலிப் பெண்கள் சீதையும் இராமனும் வந்த பிறகு திரும்பப் பெற்ற இளமையை மீண்டும் தொலைத்துவிட்டார்கள்.இலையுதிர்கால மரங்களைப் போல, வீரர்கள் களையிழந்து போனார்கள். இராமராஜ்ஜியக் கனவுகள் கண்முன் சிதைந்து போவதைக் கையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் வசிட்டர்.தேரோட்டி சுமந்திரனோ இராமனின் கண்களில் பட்டுவிடாமலிருக்க எங்கோ


மானுடர்க்கென்று…

 

 கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர். தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த