கதையாசிரியர் தொகுப்பு: வாசுகி நடேசன்

21 கதைகள் கிடைத்துள்ளன.

மாயவலை

 

 வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே பரவியிருந்தது. நேரத்தைப் பார்க்கிறேன். மணி பத்தை காட்டுகிறது.வழமையாக இப்பொழுது வேலைக்கு போயிருக்கவேண்டும்,கொரோனா ஊரடங்கில் உலகமே ஸ்தம்பித்திந்தது,அதனால் நேரம் பற்றி எந்த பிரக்ஜையும் இல்லாது கதகதப்பான போர்வையை விலக்காமலே விட்டத்தை பார்த்தபடி கிடக்கிறேன்.மனதில் மகிழ்ச்சி இல்லை. சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. இப்படியே எத்தனைநாள் வேலையில்லாது இருப்பது.? எனது கைத்தொலை பேசி ஒலிக்கிறது, அந்த அழைப்பு வந்த எண்


மருதம்

 

 நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி மிக விரைவாக வந்து அவளின் தோளைப் பற்றி தன்பக்கம் திருப்புகிறான்.. நல்வெள்ளையின் கண்கள் சிவந்தும் கன்னங்கள் உப்பியும் கிடக்கின்றன. சேந்தன் திகைத்துப் போகிறான். ஒருநாழிகைப் பொழுதின் முன்புதான் சேந்தனும் நல்வெள்ளையும் வைகைநதிக் கரைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். பலகாலம் காதலராகி -….பின் திருமணத்தில் இணைந்த பின் வரும் முதல் வைகைப் பெருக்கு இது …… அதனால்


சேயோன்

 

 கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்ரருவி யாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறுகையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக்கொண்டுவருகிறான். கொற்றவை முது தாய் . ஆனாலும் அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர்.அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம்


ஔவை

 

 மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான தோற்றம். இதுதான் ஔவை. அவள் , பாணர் குடியில் பிறந்த விறலி. இதனால் கலை அவளது நாடி நரம்புகள் எங்கும் ஊடுருவியிருந்தது. அவள் தன் முன்னோர் போன்று வாய்மொழியாக பாட்டுக் கட்டி பாடுபவள் மட்டுமல்ல ,நன்கு கற்றுத் தேர்ந்து புலமை கைவரப் பெற்றவளும் கூட. எழுத்தின் வகை தொகையுடன் சொல்லிலக்கணமும் கற்றுத்தேர்ந்தவள் “அதியமான் பெரும் வள்ளல்


முதல் சம்பளம்

 

 ஜீவா முதல் முதல் கிடைத்த சம்பளப் பணத்தை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான். கஞ்சிபோட்டு வெளுக்கப்பட்ட துணிபோல் மடமடப்புக் குறையாத புத்தம் புதிய தாள்கள். ஒரு தாளை எடுத்து முகர்ந்த போது புதுமையான வாசம் ஒன்று நாசியில் புகுவதாக உணர்ந்தான். கண்களில் நீர்முத்து ஒன்று தெறித்து திவாகரம் போல் உருண்டோடிக் கீழே விழுகிறது. இந்த நாளுக்காக அவன் எவ்வளவு போராட வேண்டியிருந்தது.? அவனுக்கு இத்தாலி விசா கிடைத்தபோது அவனுடைய குடும்பம் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி அவன் நினைவுக்கு வருகிறது.


செல்வி

 

 தங்கம்மாவுக்கு தலைக்குமேல் வேலை கிடந்தது. அந்தக் காலத்துப் பாணியில் அமைக்கப்பட்ட பெரிய நாச்சார வீடு. பெயின்ரர்கள் தமது வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள்.அவர்கள் அகற்றிவைத்த தளபாடங்களை பழைய இடங்களில் ஒழுங்குபடுத்திவிட்டுத்தான் சென்றார்கள், ஆனால் பெயின்ரு நிலத்தில் ஆங்காங்கே சிந்திக்கிடந்தது. பொருட்களில் தூசு படிந்துகிடந்தது .கழற்றிய திரைச்சீலைகள் கழட்டியபடியே கிடந்தன. பத்தாதற்கு முற்றம் ,கோடி என்பன பலகாலம் சுத்தப்படுத்தப்படாமல் புதர்மண்டிக் கிடந்தன. இத்தனையையும் தங்கம்மாவால் தனித்து சுத்தம் செய்யவது முடியாத காரியம் .அதனால் சரசுவையும் அவள் கணவன் ராசனையும் உதவிக்கு


ஞானி

 

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது விளைநிலம்.. கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பெரிய காய்கறித் தோட்டம்…கால்வாயைக் கடந்தால் பெரிய வயல் நிலம்… சாமியாரின் தந்தைவழி முதுசமாய் அவரை வந்தடைந்தவை… அவர் ஒரு இயற்கை விவசாயி…அவரது இடைவிடாத உழைப்பில் செழித்து இருக்கிறது பூமி.. சாமியார் விளைந்தவற்றில் தமக்கு உயிர்வாழ சிறிதளவு எடுத்துவிட்டு மிகுதி அனைத்தையும் ஊர்ப்பாடசாலை மாணவருக்கு மதிய உணவுக்காய் வழங்கிவிடுவார்..அவர்


சடங்கு

 

 ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய கனவுகள் காண்கிறாள் போலும் … சுஜா …பத்துவயதுதான் ஆகிறது…சிறுமிதான் . ஆனாலும் வளர்த்தியில் அவள் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் என்னவோ மிகவும் விரைவாகப் பூத்துவிட்டாள். அங்கங்களில் திரட்சியும் பூரிப்பும் கொண்டபோதே ஈஸ்வரிக்கு விளங்கிவிட்டது. இவள் விரைவாகக் குந்திவிடுவாள் என்று.மகளின் கூந்தலை கோதுகிறாள் .என்ன அவசரமோ ..இந்த இயற்கைக்கு…? ஈஸ்வரியின் மனம் குளிர்ந்து புன்னகையாய் மலர்கிறது


ஆதிமந்தி ஆட்டனத்தி

 

 ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை, ஆட்டனத்தி பேரழகன். மலையை ஒத்த தோள்களையுடையவன் அவன் ஊர்த்திருவிழாவின் போது மள்ளரோடு கழல்கள் அணிந்த தன் கால்களால் சுழனறு சுழன்று ஆடிய அழகு கண்டு மலைத்து நின்றாள் ஆதிமந்தி..அன்று அவன் நினைவால் அவளால் துணங்கைக் கூத்தில் கூட சரிவரப் பங்குகொள்ள முடியவில்லை. ஓரத்தில் நின்று துணங்கைக்


இயலாமை

 

 வசந்தகாலப் பரபரப்பில் இத்தாலியத் தெருக்கள்… நள்ளிரவு கடந்த பின்பும் தெருக்களில் சன நடமாட்டம் சிறிதும் குறையவில்லை. கடல் அலையின் ஒசை காதுக்கிதமாய் ஒலிக்கிறது. கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் “ போச்சே” பார்க்கில் அகிலாவும் அவள் தோழிகளும் …மிக மகிழ்ச்சியாய்ப் பொழுதைப்போக்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனையோ பொழுது போக்கு ஊடகங்கள் இருந்த போதும் நண்பர்கள் கூடிக் கதைப்பதில் தனிச் சுகம் இருப்பதாக அகிலா எண்ணிக்கொள்கிறாள். பல சமயங்களில் அக்கதையில் சாரம் இருப்பதில்லை. ஆனாலும் மன இறுக்கங்களைத் தளர்த்திக் கொள்ள