கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் க.லெனின்

41 கதைகள் கிடைத்துள்ளன.

மகன் தந்த பரிசு

 

 (குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்) சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றார். தெருவுக்குக் கொஞ்சம் தள்ளியேதான் இவரின் வீடு அமைந்திருந்தது. கதவுகள் வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. யாராவது வந்து திறந்தால்தான் உண்டு. இந்த ஒருமாதமாய் அவ்வளவாக யாரும் இந்த வீட்டிற்கு வருவதாகத்


மயிலோவியம்

 

 ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள் ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல் ரொம்பவும் பரப்பரப்பாகக் காணப்பட்டது. அவ்வவ்போது தலைமையாசிரியரின் அறைக்குள்ளே யார்யாரோ சென்று வந்து கொண்டிருந்தார்கள். ரகுவின் தலைக்கு மேலே காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் அவனுக்குக் கைக்கால்கள் வியர்த்துக் கொட்டின. உடம்பெல்லாம் சுடுகின்ற மாதிரி


ராஜயோக ஜாதகம்

 

 ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு வெள்ளம் போல் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். ஆசையின் காரணமாகவோ அல்லது நம்பிக்கையின் காரணமாகவோ இல்லை மடத்தனமான எண்ணங்களை இவ்வுலகில் பரவ விடவேண்டும் என்ற துடிப்பினாலோ எங்கோ ஒரு மூலையில் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அன்று வடிவுக்குக் குழந்தை பிறந்திருந்தது. இரத்தினத்திற்குக் கைக்கால் ஓடவில்லை. வானத்தில் பறந்தான். வருவோர் போவோர்க்கெல்லாம் தனக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது


பிச்சைக்காரியின் மகன்!

 

 தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை அங்கிருக்கும் மற்ற மக்களும் கண்டுகொள்வதாகவும் இல்லை. அந்தக் கும்பலில் ஒரு பையனும் பொண்ணும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பையனுக்கு இருபது வயசு இருக்கலாம். பொண்ணுக்குப் பதினாலு வயது இருக்கலாம். “டே… வாங்கடா… இங்க கல்யாணம் ஒன்னு


இதயம் பேசுகிறது!

 

 மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு நூலால் கட்டி கழுத்தில் மாட்டியிருந்தாள். கிழவியின் வெள்ளையாகிப்போன உதடுகள் இன்று தடித்தும் வறண்டுபோயும் இருந்தன. உடம்பெல்லாம் வியர்வால் நனைந்திருந்தது. மனசு படபடத்தது. சோர்வால் கால்கள் தழுதழுத்தன. சுருண்டு கீழே விழுந்தாள் ரெங்கநாயகி கிழவி. மக்கள்


ஒலியும் ஒளியும்

 

  “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்” என்று ஆல் இந்தியா ரேடியோவில் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் சிறுவன் குமரன் லயித்துபோயிருந்தான். அங்கிருக்கும் வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் ரேடியோக்கள் இருக்கின்றன. அதிலும் ரேடியோக்களில் இருந்து ஒலிக்கின்ற பாடல் அந்தப்பக்கம் போவோரை நின்று கேட்டுவிட்டுதான் போகத்தோன்றும். “சத்தத்தைக் கொஞ்சம் ஜாஸ்தியா வையுங்களேன்” என்று ஒருசிலர்


நானும் இந்த அறையும்

 

 மாலைநேரம். சூரியன் மேற்கில் தெரியவில்லை. ஆனாலும் இன்னும் இருட்டு ஆகாமல் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருவேங்கடம் நடையைக் கொஞ்சம் வேகமாக்கிக் கொண்டார். எப்படியாவது இருட்டுருதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடனும். மாசம் ஒருத்தன்கிட்ட சோறு. இன்னிக்கு மத்தியானத்தோட பெரியவன் வீட்டுமுறை முடிஞ்சிடுச்சி. இரவு சாப்பாட்டுக்குச் சின்னவன் வீட்டுக்குப் போயிடனும். மனசில எண்ண ஓட்டங்கள் ஆயிர ஆயிராமாய் ஓடிக்கொண்டிருந்தன. “என் பொண்டாட்டி இருந்தான்னா.. ஞா இந்த பொழப்பு பொழைக்க வேண்டியதில்லை. யாருகிட்டையும் கைக்கட்டி வாய்ப்பொத்தி நிற்க வேண்டியதில்லை. மூணு


கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை

 

 அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன. போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு,


வீழ்வேனென்று நினைத்தாயோ!

 

 அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாத பேண்டும் சட்டையும் தொளதொளவென்று அணிந்திருந்தான். தலையில் தேங்கண்ணெய் நிறையவே தடவி அழகாய் முடியை சீவி விட்டிருந்தான். தன்னுடைய கண்ணாடியை அவ்வவ்போது மூக்குக்கு மேலே தூக்கி விட்டுக்கொண்டான். அவனைப் போலவே இன்னும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நேர்காணலுக்கு ஆண்களும் பெண்களுமாய் வந்திருந்தனர். ஆனால் கருப்பசாமியை விட மற்றவர்கள் தங்களின் உடையிலேயே வேலையை வாங்கி விடுவார்கள் போல்


கூடை பிண்ணும் தொழிலாளி – ஒரு பக்க கதை

 

 ஒரு ஊரில் இளம் வயது கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். காட்டிலே சென்று மூங்கிலை வெட்டி வந்து, அதை துண்டு துண்டாக நறுக்கி கூடை, புட்டி, முறம், நாற்காலி போன்றவைகளைச் செய்வார்கள். இருவரும் மூங்கிலை வைத்து கூடை பின்னுவதில் கைத்தேர்ந்வர்கள். ஊரில் உள்ளோரும் புதியதாக வாங்குவதென்றாலும், பழையது உடைந்துபோய் விட்டது என்றாலும் இவர்களிடத்தில்தான் வந்து கொடுப்பார்கள். அந்த அளவிற்கு வேலையில் சுத்தமும் ஒழுக்கமும் இருந்தது. இந்நேரத்தில் இளம் மனைவி கர்ப்பமுற்றாள். தன்னுடைய மனைவியைத் தாங்கு தாங்கென்று உள்ளங்கையில்