கதையாசிரியர் தொகுப்பு: ஜெகதீஷ் குமார்

11 கதைகள் கிடைத்துள்ளன.

பேசும் மலர்

 

 பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின் காம்பின் நுனியில் சிறு குழந்தையின் மூடின கையளவில், மென் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த மலர். முதலில் அதன் பொலிவால் கவரப்பட்டுத்தான் அதனருகில் சென்றேன். திடீரென்று அது பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சியில் பின்வாங்கி விட்டேன். மலரோ என் அதிர்ச்சியைக் கவனியாததைப் போல தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் இதழ்கள் குவித்துப் பேசிக்கொண்டேயிருந்தது. ஆரம்பத்தில் திட்டம் செய்து


ஜி.எச்

 

 எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப்


விரல்கள்

 

 இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே விற்கிற சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்து நான் மட்டுமே அதை அச்சில் வாசித்தேன். அச்சாவதற்கு முன் அதன் ஆசிரியர். வாசித்த காலத்தில் சுஜாதாவின் நூல்களை காய்ந்த மாடு போல் மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த பாதிப்பு கதையில் வெளிப்படையாகவே தெரிகிறது. *** பெண்கள் இல்லாத கதை. ஆனாலும் கதைக்குக் காரணம் ஒரு பெண். அன்புள்ள அப்பாவுக்கு, நான் இங்கு


ந்யூமாவின் நகல்

 

 ராகுலன் – 00. 003398 G II – இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி – 4.3.2094. 17: 58 : 245 மணி “திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.” ‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான். “ஆஜர். செய்தி என்ன?” “ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம்


பிரசவம்

 

 அவள் கண்மூடி மல்லாந்திருந்தாள். ஜெயராமன் அவள் சேலை விலக்கித் தொப்புளில் முத்தமிட்டான். உடலெங்கும் சிலிரிப்பு பரவியது. மேடான வயிற்றைத் தூக்கியபடி மெல்ல எழுந்தாள். அவன் தலையை மடியில் சாய்த்துக் கோதி விட்டாள். ‘ஹூம்…இன்னும் ரெண்டு நாள்…அப்புறம் நீங்க கொஞ்சறதுக்கு நம்ப பையன் வந்துருவான்.’ ‘ஏன் புள்ளை பொறந்தா வேணான்னுடுவியா?’ ‘இல்ல. எனக்குப் பையன்தான் வேணும்.’ ‘பொறக்காட்டிப் போனா பெத்துக்கறது, இன்னொரு தடவை.’ ‘யம்மாடி ! நம்மால ஆகாது சாமி!’ கண்களை அகல விரித்து ஆயாசம் காட்டினாள். ‘ஒரு


அன்றாட விட்டில்கள்

 

 வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள். ‘இன்னும் ஏன்யா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க? போய்யா, போய் எங்கியாவது நாலு காசு தேத்திக்கிட்டு வாய்யா!…வயிறு ரெண்டு நாளா தண்ணியைத் தவிர ஒண்ணும் காணலய்யா!…’ ‘…’ ‘நீ ஆம்பள! உனக்கு எங்கியாவது எதாவது கெடச்சுடும். இந்தப் புள்ளிங்களப் பாரு. சுருண்டு, சுருண்டு தூங்குதுங்க. இப்படியே உட்டோம், செத்துரும்.’ முருகன் குத்துக்காலிட்டுக் கொண்டு பீடி புகைத்தான். அவன் காதில் செருகி


வழித்தோன்றல்

 

 மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர் பிடித்து ஓடிய ஒரே ஒரு மின்னலில், அந்தத் தெருவில் எல்லாரும் விநாடியில் ஆயிரத்தில் ஒருபாகம் பகலில் இருந்தார்கள். சந்திரமோகன் அந்த மழையில் ரப்பர் செருப்புகள் நடந்தான். தெப்பலாய் நனைந்தும் நிதானமாய் நடந்தான். வீடு வந்ததும் வெளிக்கதவு திறந்து நுழைந்தான். விளக்கு எதுவுமே போட்டிருக்கவில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தான். மெத்தையில் போர்வை போர்த்தியபடி மனைவியும், குழந்தையும் படுத்திருப்பது


அப்பாவின் மேஜை

 

 அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும். சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உறிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து


நாணயம்

 

 காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர்


பொற்குகை ரகசியம்

 

 வெளிப்புறத்தில் சுண்ணாம்பு பூசப்படாமல் சொரசொரப்பான சுவர்கள் கொண்ட கட்டிடமாயிருந்தது அது. பக்கவாட்டுச் சுவற்றுக்கு அருகில் ஒரு பெரிய வண்டியில் உடைந்த ரம்பங்களும், துருப்பிடித்த குதிரை லாடங்களும், பழுதாகிப் போன தொலைபேசிப் பெட்டிகளும் குவித்து வைக்கப் பட்டிருந்தன. அந்த வண்டியின் மீது ஏறினால் முதல் ஜன்னலில் கால் வைத்து, இரண்டாவது ஜன்னலைப் பற்றி விட முடியும். கட்டிடத்தின் முன்னும், பின்னும்தான் ஆட்கள் நின்றிருந்தனர். இந்தச் சுவர்ப்பக்கம் தரையில் குடித்து வீசப்பட்ட மது பாட்டில்களும், எச்சில் இலைகளும், வாழைமட்டைகளும் சிதறிக்கிடந்தன.