கதையாசிரியர் தொகுப்பு: இளஞ்சேரல்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மின் மரம்

 

 செல்லாள் பள்ளம் போன்ற இறக்கத்தில் பதனமாக நிதானமாக இறங்கினாள். ஆங்காங்கு குடித்து விட்டு வீசிய பாட்டில்கள் உடைந்து சில்லுகள் கிடக்கலாம். புதுப்பொண்டாட்டியான செல்லாள் மறுவீடு புதுவீடு என நான்கைந்து நாட்களுக்காக தொடர்ந்த அலைச்சலுக்குப்பிறகு ஓய்ந்திருக்கிறாள். தனக்கு ஓய்வு வேண்டும். தன்னால் உறவினர்களின் ஊர்களுக்கு வரமுடியாது என உறுதியாகச் சொல்லிவிட்டாள். அடிவயிற்றில் வலி. காலண்டரைப் பார்த்தாள். சரியாக ஒத்தப்படை நாட்கள். பொழுது வெயிலுமில்லாமல் மழையுமில்லாமல் ”உம்“மென்று புகைந்து கொண்டிருக்கிறது. குச்சு வீடுகளின் வாயிலில் தண்ணீர் காயவைக்கும் புகையும் எரிக்கும்


பகல் பொழுதைஇரண்டாக மடித்தல்

 

 ”நீங்கள் ஏன் கைக்கடிகாரம் அணிவதில்லை” ”பாருங்கள் அந்தத் தண்டவாளங்களை எனக்கு மனக்குழப்பம் நேரும் போது நான் இங்கு வருவேன்.சில இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக ரயில்கள் பிரிந்து போவதற்கு ஏதுவாக புரிந்து கொள்ள முடியாதபடிக்கு அவைகள் இருக்கிறது. ஒருசில தனித்த தண்டவாளம் எங்கோ போய் மண்ணுக்குள் சிலவை புதைந்து போயிருக்கும்..என்ன கேட்டீர்கள்..நல்லது..நீங்கள் நான் எதிர்பார்த்திராத ஒரு கேள்வியுடன் விவாதத்தைத் துவக்குகிறீகள்” -ஏனெனில் எனக்கு விதவிதமான கடிகாரங்கள் பிடிக்கும்..ஒவ்வொரு காலகட்டத்திலு ம் புகழ்பெற்ற வாட்ச்களை வாங்கி அணிந்திருக்கிறேன்..அதுவும் ஒரு பைத்தியம