கயல்விழியாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 8,505 
 

“யோவ், எவ்ளோ வாட்டி சொல்லறது,நா கேக்குற மாறி இருந்தா மட்டும் சொல்லு,சும்மா அப்படி இருக்குனு இப்படி இருக்குனு சொல்லிட்டு இருக்காத என்ன புரிதா.” என்று கத்திகொண்டே கதிர் தன் போனை ‘டம்’என டேபிளுக்கு குடுத்தான்.

ஒரு 10 நிமிடம் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான்.

மீண்டும் ஒரு 2 நாள் கழித்து அதே போன் கால் ஆனால் இந்த முறை அவனுக்கு சாதகமாக பதில் வந்தது.
“சர், நா தான் பிரேம் பேசுறேன் ,நீங்க கேட்டமாரி எல்லா ரெடி,”என்று நிறுத்தினான் பிரேம்.

“ம்ம்ம், சரி நா எப்ப வரேன் சொல்லறன், அது வரைககும் கையை விட்டு போகாம பாத்துக்க, புரியுதா”..
என்று எந்த வித அதட்டல் இல்லாமல்,சொல்லிவிட்டு அணைத்தான். வைத்தவுடன்,
“யாரு அது போன்ல??? “என்று அவன் மறுபாதியின் குரல் தூக்கத்தில் கேட்டாள்.

“இல்ல ஒரு ப்ரொஜெக்ட் பத்திதான் வேற ஒன்னுமில்ல சந்தியா.”

“ஹ்ம்ம், சரி படு” என்று அவனை அமுக்கி கையை மேலே போட்டு தூங்க போனார்கள்.

மறுநாள், அவன் மனைவி இல்லாத போது,பிரேமுக்கு போன் பண்ணி எங்க, எப்போது வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அவன் நம்பரை டெலிட் பண்ணினான்.

அடுத்த நாள் அவனது பல வீடுகளில் ஒன்றுக்கு பிரேம் , தன்னுடைய வேலையின் நோக்கத்தை பூர்த்தி செய்ய வந்தான்.

தன்னுடன், வந்த பெண்ணை உள்ளே அழைத்து சென்றான், கதிர் அங்கே ஹாலில் ஹாயாக,அசைபோட்டுக்கொண்ட படி,
வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்தான். அவளுக்கு 25 வயது தான் இருக்கும் , அதை இன்னும் குறைக்க பாடுபட்டு இருந்தது நீ நன்றாக தெரிந்தது.

“சார், வணக்கம்”,என்ற படி தன் 90 கிலோ உடம்பை, இங்கு இருந்த சோபாக்குள் அமிர்த்திவிட்டு, அந்த பெண்ணையும் அமரசொன்னனான் .
அவளும் ,பயத்தை வெளி காட்டி கொள்ளாமல் இருக்க முயின்று தோற்று போய் அமர்ந்தாள்.

அவளை கண்டுகொள்ளாமல்,அவர்கள் ஏதோ பேசி கொண்டியிருத்தனர், பேசி முடித்து விட்டு,
வந்ததும் பிரேமை பார்த்தாள், கையில் பணம் எப்போதைவிடவும் அதிகமாக இருந்தது, அவளுக்கு பயம் ரொம்பவும் அதிகமானது.

அவளை தனியே கூப்பிட்டு “ஒழுங்கா நடந்துக்கோ, இல்ல …”என்று நரநரவென்று பல்லை கடித்து விட்டு சென்றான்.

அவன் சென்றதும், பயம் ஒரு உருண்டை வடிவில் உருள ஆரம்பித்தது.

அவன் சென்று கதவை பூட்டியவுடன் அவளின் நம்பிக்கையும் பூட்டப்பட்டது.

கண்ணீர் அவளுக்கு தெரியாமல் வந்தது.

மேலே சென்றால், ஒரு அறையில் மட்டும் வெளிச்சம், வழிந்து கொண்டு இருக்க, அதுவாக தான் இருக்கும் என உள்ளே கதிர் அவன், பாக்ஸர் மட்டும் அணிந்து கொண்டு படுக்கையில் ஹாயாக படுத்துஇருந்தான்.

“பிரேம், உன்ன பத்தி சொன்னான், உன்னோட என்னோட தல கொஞ்சம் ஸ்ட்ராங் தான் நா கோமா ஸ்டேஜ் லெவலுக்கு போகமாட்டேன்.” என்று அவனே சொல்லி விட்டு சிரித்தான்.

“ஓகே,உன்னோட உண்மையான பெயர் என்ன?”

“கயல்” ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு கொண்டாள்.

“சரி, போய் ஃப்ரெஷ் அகிட்டு வா , இப்பவே ரொம்ப டயர்டா தெரிற, பாத்ரூம் அங்க இருக்கு.

“என்ன,??..

“ஆமா, நீ கேட்டது சரிதான் போய் குளிச்சுட்டு வா, உனக்கு வேண்டியது உள்ளே இருக்கு போ,என்று பாத்ரூம் கதவை காட்டினான்”.

அவளுக்கு பைத்தியக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டோமே என்று நினைத்த படி,உள்ளே சென்றாள்.

குளித்து முடித்து விட்டு
வந்து பார்க்கும் போது யாரும் அங்கு இல்லை, இது தான் சமயம் என்று தப்பிக்க வெளியே ஓடி வந்து பார்த்தாள்.ஆனால் கதவு புட்டியது அப்போது தான் நினைவுக்கு வந்தது.

மீண்டும் ஹாலுக்கு வந்தாள். சோபா மீது, யாரோ இருப்பது தெரிந்தது, பயந்து கொண்டே போய் முதுகை தட்டினால்,அப்படியே “சடசடவென” அந்த உடம்பு சரிந்தது.

அப்படியே முகம் தரை பார்த்து விழுந்தது,அவளுக்கு சர்வமும் அடங்கி போனது, உலகமே காலு கீழ் நழுவி கொண்டு போனது, அவளும் அப்படியே மயங்கி விழுந்தாள்

ஆனால் யாரோ தாங்கி பிடிப்பது போல் உணர்ந்தாள் இருப்பினும் தெளிவாக தெரியவில்லை.

அவள் கண்விழித்து பார்க்கும் மறுபடியும் அங்கு யாரும் இல்லை இல்லை, சுவற்றில் இருந்த கடிகாரம் மணியே 10.30 என்று பிரகடனம் செய்தது.

“என்ன எதுவும் சாப்பிடலாமா?” என்ற படி கதிர் உள்ளே வந்தான்.

அவனே, அவளை கை தாங்களாக, தூக்கி நிறுத்தி, வா என்னோட என்றபடி சென்றான்.

அவளும், தட்டு தடுமாறி, பின்னே சென்றாள்,டைனிங் ரூமில் இருவரும் ஒன்றாகவே சாப்பிடனர்.

“ம்ம்ம், சாப்டாச்சா ?”என்று கதிர் அவளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல், அவன் கேள்வி மட்டும் கேட்டான்.

மேல இருக்குற ரூம்க்கு போ நா வர, என்று அவளின் அடுத்த பேச்சுக்கு அவன் அங்கு நிற்கவில்லை.

அவளும் மேலே சென்றாள், அறை கதவு திறந்து தன் இருந்தது.

அவள் சென்ற 5 நிமிடத்தில் எல்லாம் கதிர் வரும் சத்தம் கேட்டது, அவளும் தயாரானாள் கையில் பூ ஜாடியுடன் வந்ததும் தலையில் அடித்து விட்டு தப்புவதற்கு .

“உள்ளே வந்ததும், தன் முழுபலத்தையும் பயன்படுத்தி ஓங்கி அடித்தாள், ஆனால் வந்தவர் கொஞ்சம் சுதரிப்பாக இருந்ததால் அடி தோலில் மட்டும் தான் விழுந்தது,
ஆனால் அவள் அடி விழுந்த மாத்திரத்தில் கயல் , ஒரே வீச்சில் வீசப்பட்டாள்.

அப்படியே,அவள் உருண்டு போய் விழித்தாள்.

விழுந்து, எழுந்த பின் அந்த அறை வெளிச்சத்தில் தான் கவனித்தாள்,அவள் அடிவாங்கியது கதிரிடம் இல்லை. வேறு யாரோ என்று மட்டும் தெரிந்தது, அந்த உருவம் அறை இருட்டில் அடிவாங்கிய இடத்தில் தான் நின்றுகொண்டுஇருத்தது.

கயல் தரையில் அப்படியே வலியில் அமர்ந்து இருந்தாள்.

கதிர் சத்தம் கேட்டு மெதுவாக வந்து கொண்டு இருந்தவன் வேகமாக ஓடி வந்து கதவின் பக்கத்தில், இருந்த அந்த உருவத்தை பார்த்து,”நா தான் அப்பவே சொன்னனே, அவ கொஞ்சம் புதுசுன்னு, கேட்டியா,”??

கைய பிடித்து, அந்த உருவத்தை வெளிச்சத்துக்கு கூட்டி வந்தான்.அது அவனையுடைய மறுபாதி ஆன சந்தியா.

“ரொம்ப,வலிக்குதா என்ன”? என்று கதிர் கேக்க .

“தோள தூக்க முடில”என்று வேதனையில் சொன்னாள்.

“சரி இரு” என்று மேசையில் இருந்த ட்ராவை திறந்து முதலுதவி செய்தான்.

அனைத்தையும் கயல் குழப்பத்துடன் விழுந்த இடத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன அப்படி பாக்கிற, இரு வந்து சொல்லறன்”! என்று கதிரின் காதில் எதோ சொல்ல அவனும் சரி என்று அமோதித்து விட்டு நகர்ந்தான்.

சந்தியா எழுந்து வந்து கயலை அழைத்து வந்து அருகில் அமர்த்தி கேட்டாள், “என்ன கேக்குனு தோணுதோ கேளு,”என்று சந்தியா பரிவாக கேட்டாள்.

அவளால் ஏதும் கேட்க முடியாமல் அமர்ந்து கொண்டாள்.

சந்தியா சிரித்துவிட்டு, நா சுருக்கமா சொல்லறேன் நீ அடிச்சத்துல வலி அதிகமா இருக்கு, ஹாஸ்பிடல் போகணும் வா”.

சந்தியாவுடன் நடக்க ஆரம்பித்தாள் கயல், சந்தியா அவள்(கயல்) ஏப்படி அவர்களிடம் வந்து சேர்ந்தாள் என்று சொல்ல ஆரம்பித்து அவள் சகோதரியின் மரணத்தை தொடங்கி, அவள் (கயல்) அப்பா கேட்டு கொண்டதாலும் தான் , அவளை ஒரு வருடம் தேடி இப்போது தான் பிடித்தது என்று , அவள் அப்பாவும் இறந்த செய்தியுடன் முடித்தாள்.

அவளுக்கு யாதும் சொல்ல முடியவில்லை,அவள் தந்தை, சகோதரி என்று அனைத்தையும் இழந்து இருந்தாள், பெண்ணின் வேலை மதிப்பு மிக்க மூன்றில் கயல் இரண்டை இழந்தும் அவளின் தைரியம் மட்டும் ஏனோ அவளின் அழகை போல் கடுகளவு குறையவில்லை.

“ஆனால், நாளைக்கு என்னை தேடி பிரேம் வந்தா ?? என்ன செய்விங்க,??? என்று துடைத்து கொண்டு கேக்க.

அதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணியாச்சு.

நீ போய் தூங்கு மார்னிங் 5.00மணிக்கு நீ களம்ப ரெடியா இரு போ என்றாள் சந்தியா.

அவளும் ரொம்ப நாள் கழிச்சு தனியாக தூங்க சென்றாள். அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த கதிர்,

“நீ உண்மை ஏன் சொல்லல”? என்று கதிர் வினவ.

“சொல்லனும்னு தோணல, அது தான் அவளுக்கு நல்லது, என்று கண்ணீர் துளிர் விட்டது , அதை அப்படியே துடைத்து கொண்டு கதிரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *