பகல் பொழுதைஇரண்டாக மடித்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,424 
 

”நீங்கள் ஏன் கைக்கடிகாரம் அணிவதில்லை”

”பாருங்கள் அந்தத் தண்டவாளங்களை எனக்கு மனக்குழப்பம் நேரும் போது நான் இங்கு வருவேன்.சில இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக ரயில்கள் பிரிந்து போவதற்கு ஏதுவாக புரிந்து கொள்ள முடியாதபடிக்கு அவைகள் இருக்கிறது. ஒருசில தனித்த தண்டவாளம் எங்கோ போய் மண்ணுக்குள் சிலவை புதைந்து போயிருக்கும்..என்ன கேட்டீர்கள்..நல்லது..நீங்கள் நான் எதிர்பார்த்திராத ஒரு கேள்வியுடன் விவாதத்தைத் துவக்குகிறீகள்”

-ஏனெனில் எனக்கு விதவிதமான கடிகாரங்கள் பிடிக்கும்..ஒவ்வொரு காலகட்டத்திலு

ம் புகழ்பெற்ற வாட்ச்களை வாங்கி அணிந்திருக்கிறேன்..அதுவும் ஒரு பைத்தியம மிக்க அனுபவம்தான். யாரைப்பார்த்தாலும் அவர்களுடை மணிக்கட்டைப் பார்க்கத் தோன்றுகிற உந்துதல் ஏற்படும்.. உங்களுக்கு அதுபோன்ற ஆர்வம் உண்டா..நான் அறிந்த வகையில் எந்த ஆர்வமும் தொடர்ச்சியாக உங்களுக்கு இருந்ததில்லை என்பதை அறிந்திருக்கிறேன்..

-கடிகாரம் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் ஒரு வரம்பின் நுனியைப் பிடித்துக் கொண்டு தினப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்க முடியாது-

-பொழுதும் மங்கும் வெளிச்சமும் அனந்தரமும் ஆதியும் அணங்கு நிலையும் மாயை என்கிறீர்கள் அப்படித்தானே-

-அப்படியென்று நீங்கள் கற்பனை செய்து கொள்வது உங்களுடைய விடுதலை உணர்வைக் குறிக்கிறது-

-ஏன் நீங்கள் ஒரு அணிகலனைக் கூட நம்ப மறுக்கிறீர்கள்..நீங்கள் சொல்வது போல நிழலைக் கூடவும் ஏன் சந்தேகப்படவேண்டும்..பாருங்கள் ஒரு முறையேனும் கிணற்று நீரிலோ அல்லது தேநீர்க்குவளையிலோ உங்கள் முகத்தை எப்படி கிலி கொண்டு பிறழ்கிறது என்பதை-

-பயம் என்பது எனது அகராதியிலேயே கிடையாது.. என்னுடைய முகத்தைப் பற்றிய விமர்சனத்தை என்னுடன் நட்புறவு கொண்டிருக்கும் பெண்களிடம் கேட்டுப்பாருங்கள்.. பயத்தை எதிர்கொண்டு சமர் புரிவதால்தான் நான் பல்வேறு சிக்கல்களில் மிதக்கிறேன்.சட்டம் நீதி காவல் அறம் உண்மை தர்மம் விடுதலை சுதந்திரம் பொய்சாட்சி நம்பிக்கை துரோகம் மிகை நடிப்பு இப்படியாக- இன்றளவு இவை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் என்னை அழைத்துப் போய் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு இதன் மீது என்ன பயம் குழப்பம்-

-பெண்களிடம் விமர்சனம் கேட்பது இறுதிமுடிவை எட்டநினைப்பவர்களுக்கு சிக்கலும் பிரச்சனைகளுமே எற்படும். அப்படியானால் ஏன் நீங்கள் எப்போதும் கைவிலங்குகள் புட்டப்பட்டவரைப் போன்றே காணப்படுகிறீர்கள்-

-இப்போது அந்த ரயிலிலிருந்து இறங்குபவர்களைக் காணுங்கள் எத்தனை விதவிதமான விலங்குகளை அணிந்து வருகிறார்கள்..அந்தச் சிறுமிகளின் கால்களில் பாருங்கள்..அந்த முதியவர்களைப் பாருங்கள் பாரம் தாளமுடியாமல் எப்படி சிரமப் பட்டு நடந்து வருகிறார்-

-பாருங்கள் என்னால் அவர்கள் விலங்குகளால் சிக்குண்டு துன்புறுவதைக் காண முடியவில்லை நீங்கள் உங்கள் கண்களால் கண்டு கொள்கிறீர்கள் காரணம் நான் சொன்னது போல விலங்குகளின் வலியை நீங்கள் உணர்ந்துகொண்டு இருப்பதால் அவர்களின் துயரத்தை அறிகிறீர்கள்-

-விலங்கு என்று சொன்னதை தவறாகப் புறிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன் நான் உங்களை அவமதிப்பதற்காக ஒரு போதும் பேசவில்லை.மன்னிக்கவும்-

-தவறில்லை மாறாக நீங்கள் என்னுடன் ஒரே அலைவரிசையில்தான் உரையாடி வருகிறீர்கள்..நான் இந்த உரையாடலை விரும்புகிறேன். என்னுடைய உயிருக்கும் நிம்மதியாக இருக்கிறது. அது மட்டுமின்றி நீங்கள் உங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்காக மெச்சுகிறேன். ஆயினும் எனது பழைய மனைவியின் வழக்கறிஞராக எப்படி செயலாற்ற முடிந்தது என்பதை நினைத்து வியக்கிறேன்.-

-மன்னிக்கவும் அது காலம் தந்த அவமானம் என்பேன்..உங்களை நீதியுன் முன்னால் நிறுத்துவது ஒரு போதும் ஏற்கக் கூடிய செயல் அல்லவே-

-அப்படியாக எதுவும் நடந்து விடவில்லை எல்லாம் ஒரு ஏற்பாட்டின் படி நடந்து கொண்டிருப்பதை நாமும் நாமெல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். கொஞசம் தள்ளிக்கொள்ளுங்கள் அந்த மூதாட்டிக்கு-

-அவர் உங்களுக்குத் தெரியுமா..அந்த மூதாட்டி உங்களைப் பார்த்துப் புன்னகைக்கி றார்களே..அவர்கள் உங்கள் குடும்பம் பற்றியும் விசாரிக்கிறார்களே-

-தெரியும் அவர்களுக்கு மூன்று மகன்கள் ஒரு காலத்தில் கள்ளு-சாராயக்கடை இருந்தபோது சாக்னா கடை வைத்திருந்தவர் அவர்-அவருக்கு நல்லவருமானம் வந்தது. அந்தக் கடை வைத்ததால் அவருடைய மகன்கள் பிரிந்து போய்விட்டார்கள்.

தனது தாய் ஒரு சாக்னா கடை வைத்திருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பெண்ணுக்கும் அது புதிராகவே இருந்தது. சாரயக்கடை-கள்ளுக் கடை ஏலம் எடுப்பதை கௌரவமாகக் கருதும் சமூகம் சாக்னா கடை வைத்துக் கொள்வது ஏன் கேவலமாகப் பார்க்கிறது அதுவும் தன் மகன்கள் ஏன் அகௌரவமாக ப்பார்க்கிறார்கள் பிரிந்து போகிறார்கள் என்று யோசித்தார்..-

-இப்போதும் சாக்னா கடை வைத்திருக்கிறாரா பிறகு என்னவோ தலையில் கூடையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்-

-அது பழைய கதை பிற்பாடு அவர்கள் அந்தத் தொழிலை விடுத்து மகன்கள் சொன்னபடியே வேறு வேலைக்குப் போனார்..பல வியாபாரம் செய்தார்கள் இவருடைய கதையை எந்த சினிமாவோ கதையோ நாடகமோ புதினமோ வந்ததில்லை. நம்ப மறுக்கும் சமுதயாமும் நம்பமுடியாத வாழ்வும் இருந்து கொண்டுதான் இருக்கிறது..மலைகளின் மீது ஏறி இறங்கி வாழ்ந்து பழகியவனுக்கு நிலப்பகுதிகளில் உள்ள ஏற்ற இறக்க மேடு பாதைகளை அப்படி ருசியாகப் பார்ப்பான்

அதுபோலவே சில புதிர்களும் மர்மங்களும் நிறைந்துதான் இருக்கிறது..

-அதாவது உங்களுடைய வாழ்க்கையைப் போல என்கிறீர்களா-

-எப்படியோ என் மனதை மாற்றுவதற்கு முயற்சிக்கிறீர்கள்..கணம் நீதிபதிகளே தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.மணவிலக்கு சட்டங்களை பாவம் அவர்களும் ஆசைதீர ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். புத்தம் சமரச விதிகளை உருவாக்கி என்மூலமாக பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இருகாதுகளும் கண்களும் செயல்படாதவனுக்கு இந்த சட்ட சன்மார்க்கங்கள் எப்படி உதவப் போகிறது. பார்க்கலாம் எது எப்படியோ எனக்கு மிகுந்த சுவராசியமாக இருக்கிறது…எனினும் உங்கள் நம்பிக்கையை ஆசையைத் தீர்த்துவைக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.-

-பாருங்கள் இந்த ரயிலடியில் நிச்சயமற்ற வருகையை நோக்கி எத்தனை மனிதர்கள்..நீங்கள் உங்கள் ஊர் வனப்புகளைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லவே இல்லையே அதனால் உங்கள் மீது கோபமாக இருக்கிறது-

-ஆமாம் ஒரு வகையில் என்னைப் பற்றி நீங்கள் அறிந்த ஒன்று..மணம்-மணவிலக்கு-காவல்-நீதி-வாதத்திறமை-அழுகை-நடிப்பு-பிரிவாற்றாமை-எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுப் பிடிவாதம் கொண்டவன் என்பது தானே-

-இது உங்களைப் பற்றிய வெளித்தோற்றத்தில் தெரியும் நாளிதழ் செய்தி வடிவம்

மாறாக நீங்கள் ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்-உங்கள் குடும்பத்தார் சில அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள்-அறிவு புர்வம் கலாபுர்வம் மிக்கக் கலைஞர்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள்..நீங்களும் ஒரு விளையாட்டு வீரர்..உங்கள் குழந்தைகளை நேசிக்கிறவராக இருக்கிறீர்கள்..அது மட்டுமல்ல முக்கியமான விசயம் நீங்கள் மறுஜென்மம் குறித்து அவநம்பிக்கை கொண்டவர் என்பது எனக்கு உங்களை வழிக்குக் கொண்டுவர அது போதும் என்றுதான் இந்த பிரச்சனைக்கு நான் தலையிட்டு இருக்கிறேன்.-

-பாவம் நீங்கள் மெனக்கெட்டு என்னை வானாளவப் புகழ்கிறீர்கள் நன்றி..வாருங்கள் இப்போது சற்று நேரத்தில் ரயில் வருவதற்கான சமிச்ஞை வந்துவிட்டது. நாம் இப்போது அந்தப் புளியமரங்கள் அடந்த பகுதிக்குப்போவோம்..-

-அற்புதமாக இருக்கிறது இந்த இடம்..பிரிட்டிஸ்காரனுக்கு நன்றி சொல்லவேண்டும் நமது ஆட்கள் ரயில் பாதைகள் அமைத்திருந்தால் எவ்வளவு லட்சணத்தில் இருந்திருக்கும்..இன்னேரம் புதர்மண்டி பாம்புகள் நிறைந்த வனமாயிருக்கும்.. நீங்கள் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறீர்களா..-

-நாம் விடுதலை உணர்வை சுயத்திலிருந்து விலகி சற்று இயற்கையோடு பேச வந்திருக்கிறோம்.இந்தநேரம் பார்த்து ஏன் அரூபமான புதிரை ஞாபகப்படுத்துகிறீர்கள்

உங்களுக்கு இந்த வெளி பிடிக்கவில்லையெனில் நாம் வேண்டுமானால் ஏரோப்ளேன் காட்டுக்குப்போகலாம்-

-மன்னிக்கவும்..ஏரோப்ளேன் காடா அற்புதம்..சொல்லியிருந்தால் அங்கு போயிருக்கலாமே-

-நீங்கள் இன்று தங்குவதானால் காலை அங்கு போய்விட்டு ஊர் போகலாம்-

-மன்னிக்கவும் நான் இன்று ஏழு மணி ரயிலில் திருப்புர் போயே ஆகவேண்டும் எனது குழந்தைகள் மனைவியைக் கேட்டு நச்சரித்து விடுவார்கள்..-

-உங்களுக்கென்ன கேட்பார் யாருமில்லை யென்கிறீர்கள் அப்படித்தானே-

– பாருங்கள் உங்கள் நகைச்சுவையை..உலகெலாம் உனக்கடிமை நீரோ எனக்கடிமை என்பாரே சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி அது போல இருக்கிறது-

-எனக்கென்று பரிந்து பேச நல்ல வழக்கறிஞர்கள் கிடைக்கவில்லை.ஆயினும் எனது மனைவிக்கு நானற்ற வழக்கறிஞர்கள் எத்தனை பேர்..எப்படி ஒரு உறுதி நம்பிக்கை-

-நீங்கள் அழைத்து வருகிற இடம் உண்மையிலேயே நான் காணாத ஒரு பகுதி..

ரயிலடிகளுக்கு நான் போனதே இல்லை. ரயிலடி என்றால் மலங்கழிக்கும் ஒரு பகுதி திருடர்கள் நிறைந்திருக்கும் பகுதி என்றுதான் நினைத்தேன். நன்றி சித்திரப்புலி..-

-பாருங்கள் நம் சமூகத்தின் திருமண பந்தம் நான் காணாத ஒரு பகுதி..நான் நிம்மதி கொள்ளாத ஒரு பகுதி..உங்களுக்கு இந்த ரயிலடி மாதிரி வேங்கைப்புலி-

-சிகரெட் கொண்டு வந்தீர்களா..இத்தனை உயரக்குறைவான பாலத்தினுள் நான் நடந்ததே இல்லை..பாருங்கள் சித்திரப்புலி உண்மையிலேயே எத்தனை பின் நவீனத் துவ வடிவங்களில் எவ்வளவு அற்புதமான ஓவியங்கள்..-

-ஆமாம்..இந்தத் தரைப்பாலத்தின் சுவர்களில் எழுதாத வரையாத விரல்களே கிடையாது..ஆத்மாவின் ஆழப்பிரியத்தை எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா..கீழே கிடக்கும் கரித்துண்டுகளைப் பாருங்கள்..அருகிலிருக்கும் பள்ளிச் சிறுவர்களின் கைவண்ணம் மட்டுமல்ல..ஊரில் வசித்து கனவுகளில் வந்து இம்சிக்கும் தேவதைகள் பற்றி சிறுவர்களும் இளைஞர்களும் எழுதிய வரிகளை-

-நானும் ஏதாவது எழுதுகிறேனே..-

-என்ன எழுதப் போகிறீர்கள்-

-பாருங்கள்…-

-கிருஷ்ணவேணி-ஜெயா-சிவகாமி-ராஜேஸ்வரி-

-இவர்கள் எல்லாம் யார்-

-இவர்கள் எல்லாம் எனது பள்ளிக் காலத்தில் என்னை பாதித்த மாணவிகள்-

-ஏன் நீங்கள் உங்கள் மனைவி-குழந்தைகள் பற்றி எழுதவில்லை-

-இன்மையைப்பற்றியும் இனி திரும்பவே முடியாத கனவைப் பற்றியும் வாழ்வை காலத்தைப் பற்றியும் பதிவு செய்வதே நம் மனதில் அடியாழத்தில் மிதக்கும் பெயர்களை முகங்களை ஞாபகப்படுத்துவதற்காகவே இப்படி எழுதுகிறார்கள். நானும் அப்படியே எழுதினேன்.-

-நானும் எழுதட்டுமா-

-என்ன இது..உங்கள் ஊர்த் தரைப்பாலம்..-

-என்ன எழுதப்போகிறீர்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன் சித்திரப்புலி-

-யோசிக்கிறேன்..நான் படித்த காலத்தில் ஒரு மாணவியுடன் மாணவர்கள் பேசுவதற்கு தவம் கிடப்பார்கள்..பொய்யாக அந்தப் பிள்ளையுடன் பேசினேன் இந்தப் பிள்ளையுடன் பேசினேன் என்று கதையளப்பார்கள்.ஆனால் எனக்கு அந்த சிரமம் இல்லை. அது போலவே பதின் பருவத்திற்குப் பிந்திய காலங்களிலும் பெண்களுடன் பேசுவதோ பழகுவதோ அவர்களுடன் பரம ரகசியங்கள் குறித்த உரையாடல்கள் பற்றி உரையாடுவதற்கோ ஐயம் ஏற்பட்டதில்லை.மிக எளிதாக மிக விரைவாகவே அப்பெண்களுடன் அந்தரங்கம் பற்றிய தாம்பத்ய பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்து விடுவேன்.அவர்களுக்கு அவைகள் குறித்து யாரும் பேசமாட்டார்களா என்று ஏங்குவதாகவே உணர்ந்திருக்கிறேன்.அவர்கள் வெளிப்படையாக ஆண்களை விடவும் நாராசாரமாகத் திட்டிக்கொள்வதிலிருந்து நீங்கள் உணர்வீர்கள்..-

-ஆம் சித்திரப்புலி நான் இது மாதிரியெல்லாம் யோசித்ததில்லை. சரி நீங்கள் இந்த சுவரில் என்னஎழுதுவீர்களோ அதை எழுதுங்கள்..நமது உரையாடல் வேறு திசை நோக்கிப் போகிறது-

-ஆம் நீங்கள் காலத்தின் முதல் படிக்கட்டில் கேட்ட கேட்ட கேள்வியான நான் ஏன் இன்னும் கடிகாரங்கள் கட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் சரிதானே..-

-ஆமாம்..உங்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருப்பதை உணர்கிறேன்.. என்ன நீங்கள் உங்கள் மனைவியின் பெயரை எழுதுகிறீர்கள்..-

-ஏன் நீங்கள் இதை எதிர்பார்க்கவில்லைதானே..ஒரு வகையில் பார்த்தால் எனக்கு சட்டம் நீதி வழக்கு பிரதிவாதத் திறமை பச்சைத் தாள்கள் நீதிமன்றங்களின் வாயில்

காவல் நிலையம் காக்கி யுனிபார்ம் இந்தியக்குற்றவியல் நீதிகள் குற்றவியல் நடுவண் நீதி பொருளாதார குற்றிவியல் அரசியல் சாசனம் இந்தியக்குடியுரிமையி

யல் நீதி மற்றும் எல்லாவிதமான குடும்ப விவகாரங்கள் பற்றியெல்லாம் கற்றுக் கொடுத்தவள் அவள்தான்.எனக்கு மிகமிக சரியான போட்டியாளர் அவள் என்பேன்..

என் சிறுமூளை பெருமூளைக்கு நல்ல வேலைகொடுத்து இயங்க வைத்தவள் அவள் என்பேன்..இனினும் எல்லாக்காலத்திலும் சரியான நெருக்கடியைத் தர வல்லவளாக இருப்பாள் என்று கருதுகிறேன்.-

-பாருங்கள் ரயில் வந்துவிட்டது..நீங்கள் குறிப்பிட்ட நாகர்கோயில்-கோவை பாசஞ்சர் இது தானா..-

-ஆமாம்..நாங்கள் மணமான நாளிலிருந்து ஒன்றாக ரயில் பயணங்களில் கூட சென்றதில்லை.அதுவும் இந்த ரயிலிருந்து பிரயாணம் செய்ததில்லை..நாகர்கோயில எனக்குப் பிடித்த நகரம்.காரணம் எனது ஆசான்களில் ஒருவரான சுந்தரராமசாமியின் ஊர்.அவரை ஒருநாள் இருகூருக்கோ அல்லது அவருடைய ஊருக்குச் சென்றோ பார்த்துவரவேண்டும் என்பது எனக்கான ஆசையாக இருந்தது. அதுவும் நிறைவேறு வதற்கு வாய்ப்பில்லை அவரும் காலாமாகிவிட்டார்..நான் கடிகாரம் கட்டாமல் இருப்பதற்கு இது போன்ற காரணங்கள் நிரம்ப நிரம்ப உண்டு..

-பாருங்கள் மாலைப்பொழுதின் அறிகுறியாக ஆடுகள் மேய்ப்பவர்கள் திரும்புகிறார்

கள் கிழக்கிலிருந்து விவசாயக்கூலிவேலைக்குப் போன பெண்கள் வீடுதிரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் செல்லவேண்டிய ரயில் எது..

-நீங்கள் செல்லவேண்டிய ரயில் இன்னும் அரைமணிநேரத்தில் வந்திடும்..அது இன்ஜின் இல்லாத மின்சார ரயில் அதில் பிரயாணம் செய்வதும் அலாதியான இன்பம் தருவதாகும்.-

-அப்படியானால் நாம் இருவரும் இன்னும் அரைமணி நேரம்தான் உரையாட முடியும் அப்படித்தானே..

-ஆம் வேங்கைப்புலி..பார்த்தீர்களா இதுவும் ஒரு காரணம்..ஒரு வேளை ரயில் தாமதமானால் மேலும் கொஞ்ச நேரம் உரையாடலாம். சொல்லுங்கள் ஏன் உங்கள் பிரயாணத்தை நாளைக்கு மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யக்கூடாது. இரவு மது அருந்திவிட்டு போகலாமே..நான் வழக்கமாக மதுக்கூடுகையில் கலந்து கொள்ளும் நண்பர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்..

-ஒரு வேளை நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புகை அளித்தால் வேண்டுமானால் என்முடிவு பற்றி யோசிப்பேன்.

-அப்படியானால் நீங்கள் நடந்தே செல்லுங்கள்..

-அடடா என்ன ஒரு வியாக்கியானமா முன் ஜாக்கிரதையான தன்மை உங்களிடம்

-முன்ஜாக்கிரதை உணர்வில்லையென்றால் உங்களைப்போன்ற மன நல மருத்துவரிடம் பேசி வெல்லமுடியுமா-

-நமக்குள் எந்தப்போட்டியும் இல்லை வெற்றியும் இல்லை தோல்வியுமில்லை

-நான் அப்படி நினைக்கவில்லை..எனக்கு எல்லாமே பரிட்சைதான் தேர்வுதான் நான் அதில் எப்படியும் வென்றாகவேண்டும்..அதற்கு என்ன விலை கொடுத்தும் வெல்வேன்..யாருடனும் எவற்றுடனும் சமரசம் என்பதே கிடையாது..

-இது இதுவரையிலும் உங்களுடைய அற்புதமான உரையாடல் சங்கதிகளுக்கு எதிராகப் பேசுகிறீர்கள்..உங்களிடம் ஏதோ நோய் தொற்றியிருக்கிறது..அதனால் தான்

உங்களால் சரியாகப் போகும் வாகனத்தை சம்பந்தமில்லாமல் திருப்பிக்கொள்வதை போன்ற சிந்தனை அது..

-எப்படி வேண்டுமானும் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கென்னவோ உங்களுடைய ரயில்தண்டவாளங்கள் போன்ற ஒரே மாதிரியான வழமையான வாதங்களைக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கருதுகிறேன்.

-என்னுடைய தனிப்பட்ட விசயம் அது பற்றிப் பேச உங்களுக்கு உரிமையில்லை..

நீங்கள் வந்து பேசவேண்டியதைப் பேசிவிட்டீர்கள்..எனது பதிலை நேரடியாகவும் மறை முகமாகவும் தெரிவித்தாகிவிட்டது. எனக்கு மறுபடியும் உங்களுடன் பேசுவ தற்குப் பிரியமில்லை.. இந்த ரயில் வேறு வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது.-

-ஏன் நீங்கள் அலுத்துக்கொள்கிறீர்கள்..நாம் இப்போது இந்த சம்பவங்களின் கோர்வை களிலி்ருந்து விலகி வெகுதூரம் வந்திருக்கிறோம்..நீங்கள் எனக்குக் கிடைத்த முக்கியமான மனநல மருத்துவர். உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையிருந்தால் நாம் உங்கள் ஊருக்கு வந்து போனது போல எங்கள் ஊருக்கு தைரியமாக வந்து

போகமுடியுமா..-

-நான் ஏன் வரவேண்டும்..வருவது பற்றி எனக்கு சமாதானமில்லை..-

-பாருங்கள் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.கழுகுகள் எங்கோ வேகமாகப் போகிறது கூடுதிரும்பிய பறவைகளின் கீச்சொலி இரயில் சத்தங்களையும் மீறிக்கேட்கிறது பார்த்தீர்களா..மறுபடியும் உங்களை சந்திக்கும் போது தம்பதி சமேதரமாகப் பார்க்க விரும்புகிறேன்..-

-அது எனக்கு விரைவில் வழங்கப்படும் நீதிமார்க்கத்தின் வழியாக நான் அறிய விழையும் மணவிலக்குக்கு பிறகு முடிவு செய்கிறேன்..

-உங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன..பாருங்கள் ரயில் அந்த வளைவில் எவ்வளவு லாவகமாக வளைந்து தகடு போலுள்ள தண்டவாளத்

தைக் கடந்து பிளாட்பாரத்திற்காக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் திரும்புகிறது..

-ஆமாம் பெண்களின் யுவதிகளின் உற்சாகமான கூச்சல் பறவைகளின் சங்கீதத்துடன் இணைகிறது..இதில் நீங்கள் குறிப்பிட்ட எனது குழந்தையும் வருகிறது

-அப்படியா மகிழ்ச்சி..நீங்கள் குழந்தை மனைவி தண்டவாளங்கள் ரயில் பிளாட்பாரம்

இப்படியாகவே உங்கள் வாழ்வு கழிய வேண்டுமா..அம்மா பற்றிய கேள்விகளை உங்கள் குழந்தை கேட்பதில்லையா..

-உரையாடலுக்கு முன்பாக உங்கள் மனநிலை எப்படியிருந்ததோ அதே மனநிலையுடன் தான் என் குழந்தையின் மனநிலையும் இருக்கிறது..எனக்கென்ன

வோ நான் உங்களுடன் உரையாடியதை நான் என் குழந்தையுடன் உரையாடியதாக வே நினைக்கிறேன்..மெதுவாக பாருங்கள் அந்தப் பெட்டியில் கூட்டம் குறைவாக இருக்கிறது..

-நான் ஊருக்குப் போய் என்னை அனுப்பி வைத்தவர்களுக்கு என்ன பதில் சொல்ல-

-கடிகாரத்திற்கும் ரயில் பிரயாணங்களுக்கும் ஆசை வரும் போது சொல்லி அனுப்பு வதாகத் தெரிவித்தான் என்று சொல்லுங்கள்.. இனியொரு முறை வாருங்கள் நான் உங்களை ஏரோப்ளேன் காட்டுக்கு அழைத்துப்போகிறேன்.. பை..டாட்டா பார்க்கலாம்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *