கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்தி

95 கதைகள் கிடைத்துள்ளன.

நன்றே செய்யும் நாயகன் இருப்பு

 

 நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு வந்திருப்பது கூடப் பிறரைப் போல புறம் போக்காக பொழுது கழிக்கவல்ல அந்த வாசிப்புக் கலை கூட வெறும் அனுபவம் மட்டுமே அவர்களுக்கு இதையும் தாண்டி வெற்றி வானிலே பறக்க, அறிவு ஆளுமைத் திறன் மேம்பட, இந்த வாசிகசாலையையும் ஒரு தவச் சாலையாகவே உணர்ந்தவள் அவள். வாசிகசாலை நூலகர் அவள் வருகையை உணர்ந்தவுடன் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தவர்,


சாத்தானின் உலகம்

 

 எலும்புக் கூடே உடைந்து நொறுங்கிப் போகுமளவுக்கு, சுவிஸ் குளிர் வாட்டி வதைத்தது. அகிலனுக்கு இதெல்லாம் பழகிப் போன விடயமாயிற்று. இந்த விடய சஞ்சாரங்களைப் பெரிதுபடுத்தினால் ,துக்கம் தான் மிஞ்சும் என்று அம்மா பல தடவைகள் சொல்லியிருக்கிறாள். ஆகவே எது நேர்ந்தாலும் சமநிலை கெடாமல் இருக்கப் பழகி விட்டதால், அவனுக்கு இந்தக் குளிர் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஊரில் இருக்கு,ம் அம்மாவின் நினைவு வரும் போதெல்லாம், அவனுக்கு இந்த மாற்றம், உன்னத இருப்பு நிலை தானாகவே வந்து விடும்.


பகைவனுக்கருள்வாய்

 

 சோதி மயமான ஒரு பொழுது விடிந்த நேரம். தாரணிக்கு மனம் சம நிலையில் இருக்கும் பழக்கத்தினால், அவளின் உள் மையம் அசைவுகளற்ற பரப் பிர்ம்ம நிலையிலே தான், என்றும் இருப்பது வழக்கம். அவள் அப்படித் தான் பழக்கப்படிருந்தாள். இந்த பழக்கமும் மனித சுபாவத்திற்கு மாறான தெய்வீகப் போக்கும், அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல..வாழ்க்கை ஆரவாரங்களுக்குள் முழ்கி தன்னிலை மறக்கிற போக்கு என்றைக்குமே அவளுக்கு வந்ததில்லை.. சிறுவயதிலிருந்தே, அவள் அப்படியொரு தேவதை தான். சராசரி பெண்களைப் போல பட்டிலும்


மகா வாக்கியமும் மாமியின் நிழலும்

 

 எவ்வளவு காலம் என்று ஞாபகமில்லை. ஆனால் மனமே அறியாத, அல்லது, எல்லாம் ஒளி மயமாகவே தரிசனமாகிற இனிய பொற் காலமது..சுவேதாவிற்கு அப்போது அம்மா தான் உலகம் . அவள் மட்டும் தான் அந்த இருப்பில் ஜொலிக்கிறவள். இப்பவும் கடவுள் தரிசனமாகவே, கண்ணுக்குள் நிற்கிற அம்மா..அவளுக்குத் தெரியும் .எது குப்பை வண்டிக் காலம் என்று. .அதெல்லாம் மனிதனைப் பற்றி அறிய நேரும் போது, பின்னால் வந்த சுமை, துக்கம் இருள் எல்லாம் தான்.. உண்மையில் மனிதர்களைப் பற்றியோ, அவர்களின்


துரும்பு வாழ்க்கையிலும், துலங்கும் ஒரு சோதிப் பிழம்பு

 

 கொரொனோவின் கோரப் பிடிக்குள் சிக்கி, உலகமே சின்னபின்னமாகிச் சிதறி விட்ட நிலை வந்தும், பூரணியின் மனதில் எந்தச் சலனமும் இல்லை. அவள் ஒரு தபஸ்வினியாகவே இன்னும் இருக்கிறாள். அது என்ன வகைத் தவம்? அவள் என்ன தவம் செய்யக் காட்டுக்குப் போய் வந்தவளா? காடு போய்த் தான் தவம் செய்ய செய்ய வேண்டுமா என்ன? வீடே அவளின் தவச் சாலை. உறவாகத் தோன்றி வந்து உதைத்து விட்டுப் போன, சக மனிதர்களே அவளுக்கு வேதம் போதித்து வழி


பட்டுப்பாவையர் உலகில் ஒரு பாவியின் நிழல்

 

 அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரி மாதுவை பொறுத்தவரை, அதில் அவளுக்கு படிப்பு வந்ததோஇல்லையோ, வேதத்தையே. கரைத்துக் குடிக்க அவளுக்கு, அது ஒரு தவச் சாலை போலவே விளங்கியது. வெறுமனே குடிக்கிற பொருளல்ல்ல அது. அதற்கும் மேலாய் எம்முள் என்றும் ஒரு சாட்சி புருஷனாகவே இருந்து ஒளிர்கின்ற, சத்தியத்தின் பிரதிபலிப்பாகவே அதை இனம் காண முடிந்தாலும், பாமர சனங்களைப் பொறுத்தவரை அது என்றும் மறை பொருள் தான். பன்னிரண்டே வயதாகியிருந்தாலும் மாதுவுக்கு அப்பாவின் வாய் மொழியாக இந்த வேத


ஒரு இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம்

 

 வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று முழுதாக மூழ்கிப் போக நேர்ந்த அபூர்வமான ஒரு புது அனுபவம் அது அவளுக்கு. ஆண் பெண் என்ற பாலின ஈர்ப்புச் சங்கதி அவளையும் விட்டு வைக்கவில்லை. உடல் ரீதியாக வருகின்ற வெறும் காதல் மயக்கம் தான் அது. உடலாக வந்ததா உணர்வு பூர்வமான ஒரு தெய்வீகச் சங்கதியா என்று அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளும் காதலித்தாள்.


ஒரு சம நிலை வைத்தியம்

 

 மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் கட்டமாக மனிதர்களை அறிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அவள் கண் முன்னால் விடிந்த்து. விடியலத் தேடி ஓடுகிறவளல்ல அவள். அது தானாகவே அவளின் காலடிக்கு வந்து சேரும். கொஞ்ச நாளாக முழங்கால் வலி அவளைப்


வேதம் கண் திறக்கும் விடியலே ஒரு சவால்தான்

 

 எந்த விருதைப் பற்றிய சபலமும் இல்லாமலே கீர்த்தி அவரின் முன்னிலைக்கு வந்திருந்தாள். கீர்த்தனா என்பது அவளின் முழுப் பெயர். கீர்த்தி என்றே சுருக்கமாக எல்லோரும் அழைக்கிறார்கள். அவள் ஒரு நன்கு கை தேர்ந்த பழம் பெரும் எழுத்தாளர் என்பதை அவர் அறிந்திருப்பாரோ தெரியாது.. ஆனால் தமிழின் மீதும் சைவத்தின் மீதும்,ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பதாகவே உலகம் அவரை அறியும். காலம் காலமாக அவர் உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தி பெரிய எடுப்பில் நடத்தி முடிக்கிற விருது வழங்கும் விழாவிலிருந்தே, அந்த


தோற்றுவிட்ட சத்தியத்தில் சுடர் விடும் தரிசனம்

 

 துர்க்காவின் அம்மா கோவில் பூசை கண்டு திரும்பும் போது வீடு இருண்டு கிடந்தது. மணி ஏழாகிக் கிழக்கு வானம் வெளுத்த நிலையிலும், வீட்டில் கனக்கின்ற இருளை எதிர் கொண்டவாறே அவள் உள்ளே வரும் போது துர்க்கா சோகம் வெறித்த முகத்துடன் அறை வாசலில் நிழல் தரித்து நின்றிருந்தாள். நீண்ட நாட்களாகத் தூக்கம் பறி போனதால் கண்களின் கீழ படிந்த கருவளையம், ஒரு கருந்தீட்டு நிழற் குறி போல் அவளின் கண்களிலும் வெறித்தது/ அதையும் புறம் தள்ளி மறந்து