நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 10,500 
 

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “”இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.

துறவி கேட்டார்: “”இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார்.

“”அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அரசன்.””ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.

அரசர்,””அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை”என்றான்.

“”இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” எனக் கேட்க, “”அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் அரசன்.

“”நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,””அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அரசன்.

துறவி சிரித்துக்கொண்டே,””நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி. அரசன் தலை குனிந்தான்.

– அ.கருப்பையா (ஜூன் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *