கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

117 கதைகள் கிடைத்துள்ளன.

ஐந்தாவது கதிரை

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆந்தை பகலில் வெளியே வந்தால் அதிலே ஒரு விசேஷம் இருக்கும். அப்படித்தான் தங்கராசா இன்று வெளியே புறப்பட்டதும், பத்மாவதியைச் சமாதானப்படுத்துவதற் கான இன்னொரு முயற்சி. ஒரு சதுரமைல் பரப்பைக் கொண்ட அந்த மா அங்காடியில் கிடைக்காத பொருட் களே இல்லை. விநோதங்களுக்கும் களியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு தடவையும் பத்மாவதியை இங்கே கூட்டி வரும்போது அவள் சிறு பெண்ணாக மாறி பரவசமாகிவிடுவாள். எல்லாம் ஒரு


பட்டம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கறுப்பு எக்ஸ் குறி போட்டு, மஞ்சள் தொப்பி அணிந்த கிழவர் பள்ளிக்கூடப் பிள்ளைகள் ரோட்டுக் கடக்க உதவுவதற்காகக் காத்திருந்தார். அவர் கையில் இருந்த சிவப்பு அட்டை கைப்பிடியில் வெள்ளை வர்ணத்தில் STOP என்று எழுதியிருந்தது. கிழவர் தன்னுடைய சம் பளம் வாங்காத உத்தியோகத்தில் தீவிரமாக இருந்தார். சில பெண் குழந்தைகள் பொறுமை இல்லாமல் அவர் கைகளைப் பறித்துக்கொண்டு சீறிப்போய் சாலையைக் கடந்தன. கிழவருடைய


பூர்வீகம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரான்ஸ் தேசத்தில் ஓர் ஒதுக்குப்புறமான கிராமத்தில் இந்தப் பட்டறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். அது ஆறு நாள் பட்டறை. நாற்பது நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள். வேறென்ன, உலகத்தை புனருத்தாரணம் செய்யும் நோக்கம்தான். எங்கள் விடுதி ஓர் ஏரியைப் பார்த்தவாறு இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காக அங்கே கட்டணம் அதிகம் என்று சொன்னார்கள். பட்டறையில் கலந்து கொள்ள வந்தவர்களில் நாங்கள் நாலுபேர்


செங்கல்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு செங்கல்லை நான் தேடித் திரிந்தேன். என்னுடைய போதாத காலம், நான் போய்த் தேடின கடைகளில் எல்லாம் இந்த செங்கல் கிடைக்கவில்லை. களைப்பு மேலிட, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எல்லோரும் இல்லையென்றே கைவிரித்தார்கள். ஓர் உருண்டையான செங்கல்லுக்கு இவ்வளவு கஷ்டமா என்று நான் வியந்தேன். ஒரு கடைக்காரன் மாத்திரம் என்மேல் கருணை கொண்டு, அன்பு ததும்ப ‘தீர்ந்துவிட்டது’ என்றான். அவன் எனக்காக


கடன்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சீனவெடி வெடிக்குமுன் காதைப் பொத்திக்கொள்ளும் சிறுவன் போல இவருக்கும் தற்காப்பு எச்சரிக்கை அதிகம். அதிகாலையிலேயே எழுந்து தயாராகிவிட்டார். அவருடைய மகன் வரைந்து கொடுத்த படம் பையிலே இருந்தது. இரண்டு நாள் முன்பாகவே வந்து ஒத்திகை பார்த்துக்கொண்டார். எந்த பஸ் பிடிப்பது, எங்கே இறங்குவது எல்லாம் மனப்பாடம். அதுதான் ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து காத்துக் கிடந்தார். அங்கே இன்னும் பலரும் இருந்தார்கள். வரவேற்புப்


தொடக்கம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருபத்தியொன்பதாவது மாடியில் இருப்பதில் சில வசதிகள் இருந்தன. மற்ற கட்டிடங்கள் உயரம் குறைந்தவை. என்னுடைய அலுவலகம் உச்சியில் இருந்தது. சுற்றிவரக் கண்ணாடி ஜன்னல்கள். உலகத்தை ராஜ்யம் ஆளுவது போன்ற ஒரு பிரமையை அது கொடுக்கும். நிலம் நித்திரை கொள்வதில்லை என்று சொல்வார் கள். ஆனால் வானம் விழித்திருப்பதில்லை . இரவு நேரங்களில் வேலை செய்ய நேரிடும்போது மிகவும் ரம்மியமாக இருக்கும். விளக்குகளை அணைத்துவிட்டு,


ஸ்ட்ரோபரி ஜாம் போத்தலும், அபிஸீனியன் பூனையும்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குதிரையே, கேள்! ஆசை பெரும் கேடு விளைக்கும். இது எனக்குச் சிறு வயதிலேயே அடித்தடித்து போதிக்கப்பட்ட பாடம். ஆனபடியால் வாரா வாரம் ஸ்ட்ரோபரி ஜாமில் ஏற்படும் ஆசையைக் கட்டி வைக்க முயன்றேன். ஆனாலும் முடிய வில்லை. சுப்பர் மார்க்கட்டில், கடுமையான கத்தரிக் கலரில் ஜொலித்துக்கொண்டு, நிரையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் போத்தல்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆசை பொங்கும். செய்த சங்கல் பங்களை மறந்து


கல்லறை

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டி ருந்தார். அப்படி புறப்பட்டால் தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத் துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40 என்றால் நிச்சயம் 9.00


தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எங்கள் வேலைக்காரச் சிறுமி ஓடிவிட்டாள். நான் சிறுவனாயிருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று. இப்படி அவள் அடிக்கடி ஓடினாள். அவளுக்கு அது பழகிவிட்டது. எங்களுக்கும் பழகிக்கொண்டே வந்தது. எங்கள் தகப்பனார் எங்களிலும் பார்க்க ஏழ்மையான ஒரு கிராமத்துக்குப் போய், எங்களிலும் பார்க்க ஏழ்மை யான ஒரு வீட்டில் அவளைப் பிடித்து வந்திருந்தார். இங்கிலீஸ்காரன் எங்களை ஆண்டு கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே


மாற்று

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆப்பிரிக்கப் பாதை கண்டுபிடித்த சில மாதங்களில் இது நடந்தது. இந்த இருண்ட கண்டத்தில் என்னவும் நடக்கலாம் என்று என்னை மிகவும் தயாரித்திருந்தார்கள். எப்படிப்பட்ட தயாரிப்புகளும் சில வேளைகளில் பற்றாமல் போய்விடும். ஆனாலும் நான் போதிய தைரியம் இருப்பது போலக் காட்டுவது என்ற தீர்மானத்தில் இருந்தேன். நாலுநாள் வயது கொண்ட பாம்புக் குட்டிகள் போல அவள் தன்னுடைய கேசத்தைத் தனித்தனியாக சுருட்டியும், பின்னியும் விட்டிருந்தாள்.