கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 5,411 
 

மிதுலாவின் மனம் படபடத்தது காரணம் அன்று தனது மகள் மைமாவின் பத்தாம் ஆண்டு பரீட்சை முடிவுகள் வெளிவரும் நாள்,இரவு முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு இருந்ததால் தூக்கம் போய் தற்போது தலைவலியும் சேர்ந்துக் கொண்டது,என்னம்மா உனக்கு பிரச்சினை நான் எழுதிய பரீட்சைக்கு முடிவு வரும்,அதற்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகி உட்கார்ந்து இருக்க என்றாள் மைமா,உனக்கு என்னடி தெரியும் பக்கத்து வீட்டு கவிதா முதல் கொண்டு அனைவரும் உன்னுடைய பரீட்சை முடிவுக்காக தான் காத்து இருக்கார்கள் இது ஒன்று போதும் என்னை அவர்கள் அவமானப் படுத்த என்றாள் மிதுலா,இதை கேட்டுக் கொண்டு வந்த ராஜேஷ் உனக்கு அறிவு ஏதும் இல்லையா நம் மகள் பரீட்சை எழுதி முடிவு வருவதற்கும் நீ அவமானம் படுவதற்கும் என்னடி சம்மந்தம் என்றான்,நீங்கள் வாயை மூடுங்கள்,உங்களுக்கு தெரியுமா கவிதா மகள் போன ஆண்டு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாள்,அதற்கு முந்திய ஆண்டு ரீட்டா பையனுடைய

மதிப்பெண்னும் நன்றாகவே வந்தது இந்த முறை உங்கள் மகள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படி அவர்கள் முகத்தில் முழிப்பேன் என்றாள் மிதுலா,ஊருக்காகவா நீ வாழுற என்றான் ராஜேஷ்,ஆமாம் அவர்கள் பிள்ளைகள் நன்றாக மதிப்பெண் எடுக்கும் போது,நம் பிள்ளை மட்டும் குறைவாக எடுத்தால் வெட்கம் இல்லையா என்றாள் மிதுலா,இதில் என்னடி வெட்கம் அவர்களுக்கு முடிந்ததை அவர்கள் செய்கின்றார்கள்,இவளுக்கு முடிந்ததை இவள் செய்கின்றாள் இதில் என்ன பிரச்சினை உனக்கு என்றான் ராஜேஷ்

ஆமாம் உங்களுக்கு தான் எதிலும் கணக்கில்லையே,யார் எப்படி இருந்தாலும் நமக்கு என்ன என்று நினைக்கும் ஆள் நீங்கள்,எனக்கு அப்படி இருக்க முடியாது,மற்றவர்களுடன் போட்டி போடா விட்டால் என்ன வாழ்க்கை,மற்றவர்களை ஜெயித்துக் கொண்டே இருக்கனும் என்றாள் மிதுலா,ஆமாம் இப்படி போட்டி போட்டு பொறாமை பட்டு கொண்டே இருந்தால் நாங்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமாட்டோம் அது உனக்கு இந்த ஜென்மத்தில் புரியாது என்றான் ராஜேஷ்,எனக்கு புரியனும் என்று அவசியம் இல்லை மற்றவர்கள் வசதி வாய்ப்புகளுடன் எல்லா சுகத்தையும் அனுபவைக்கும் போது அவர்களைப் பார்த்து பொறாமை படுவது மனித இயல்பு தானே,நாங்கள் என்ன கடவுளா அவர்களை ஆசிர்வதிப்பதற்கு என்றாள் மிதுலா,நீ கடவுளாக ஆக வேண்டாம் மனித நேயத்தொடு நடந்துக் கொண்டாலே போதும் உனக்கு அது தான் ஒரு துளியும் இல்லையே என்றான் ராஜேஷ்,உங்கள் வாக்கு வாதத்தை விடுங்களேன் என்றாள் மைமா,இப்ப என்ன உனக்கு,என் மதிப்பெண்ணை வைத்து மற்றவர்களிடம் நீ பெருமை பட்டுக்கனும் அது தானே உனக்கு வேண்டும் என்றாள் தாயிடம் மைமா,ஆமாம் மற்றவர்கள் அவர்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமையாக பேசும் போது நானும் அப்படி பேசுவதற்கு உன்னுடைய மதிப்பெண் அதிகமாக இருக்கனும் தானே என்றாள் மைமா,அப்ப நான் அதிகமான மதிப்பெண் எடுத்தால் தான் உன் பிள்ளை அப்படியா என்றாள் மைமா,எப்படி என்றாலும் நீ என் பிள்ளை அது இனி மாறாது,நீ படித்து உயர்ந்த நிலையில் இருந்தால் அது எங்களுக்கு பெருமை தானே என்றாள் மிதுலா,எப்படியும் நான் படித்து முன்னுக்கு வந்து விடுவேன்,இனியாவது எந்த நேரமும் படி படி என்று என்னுயிரை வாங்காதே என்றாள் மைமா,ஏன் நான் உன்மீது அக்கரையாக இருக்க கூடாதா என்றாள் மிதுலா,அக்கரையாக இருக்கலாம்,அதற்காக மற்றவர்களை விட என் மகள் மட்டும் தான் எல்லாவற்றிலும் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பது தப்பு,அப்படி நினைத்துக் கொண்டு நீ என்னை தொல்லைப் படுத்ததாமல் இருந்தாலே போதும் என்றாள் மைமா

உன் அம்மா மற்றவர்களிடம் போட்டி போட்டே தான் என்னையும் கடனாளியாக்கிட்டா என்றான் ராஜேஷ்,நான் உங்களை கடனாளியாக்கவில்லை உங்களுக்கு வாழத் தெரியவில்லை என்றாள் மிதுலா,ஏன் சொல்ல மாட்ட நீ ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டதால் தான் நான் இன்று கடனாளியாக நிற்கின்றேன் சொந்தமாக வீடு இருக்கும் போதே பெரிய வீடு வேண்டும்,வாகனம் வேண்டும் என்று கேட்டு என்னை நச்சரித்ததால் தான் நானும் இருந்த வீட்டை விற்று விட்டு பெரிய வீடு வாங்கினேன்,உன் தொல்லை தாங்க முடியாமல் வாகனத்தையும் வாங்கி போட்டேன்,இன்று வெளியுலகத்திற்கு நாங்கள் ஆடம்பரமாக வாழ்கின்றோம்,அது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும்,நாங்கள் எவ்வளவு கடன் பட்டு இருக்கோம் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே,இந்த போளியான கௌரவத்திற்கு ஆசைப் பட்டது நீ,என்னை வாழத் தெரியாதவன் என்று சொல்லாதே,உனக்கு உள்ளதை வைத்து சந்தோஷமாக வாழத் தெரியவில்லை,இன்னும் உனக்கு எதிலும் திருப்தி இல்லை என்றான் ராஜேஷ்,எல்லாவற்றுக்கும் ஆசைப் பட்டால் தான் கிடைக்கும் என்றாள் அவள்,ஆமாம் உன்னை சுற்றி உள்ளவர்களை பார்த்து பார்த்து,அவர்கள் மீது பொறாமை பட்டு,அவர்களிடம் உள்ளதை எல்லாம் நீயும் வாங்க நினைத்து,என் நிம்மதியையும் கெடுத்து பிடிவாதம் பிடித்தால் நீ ஆசைபட்டது எல்லாம் கிடைக்கும் தான் என்றான் ராஜேஷ்,என்னைக்கு நீ உனக்காக வாழ ஆரம்பிக்கிறீயோ அன்னைக்கு தான் உனக்கும் நிம்மதி,எனக்கும் நிம்மதி அது மட்டும் நமக்கு தலைவலி தான் என்றான் ராஜேஷ்,ஆமா அப்பா இல்லை என்றால் என்னையும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்,அம்மாவின் நணபர்களின் பிள்ளைகள் எது செய்தாலும் நானும் செய்ய வேண்டும் என்று என்னையும் தொல்லை படுத்துறாங்கள் என்றாள் மைமா,உன் அம்மாவை திருத்த முடியாது என்றான் ராஜேஷ்,என்னை அப்பாவும் மகளும் திருத்த தேவையில்லை,ஆடம்பரமாக வாழ நினைப்பதுவும்,மற்றர்களிடம் போட்டி போட்டு ஜெயிக்க நினைப்பதுவும் பிழை என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை என்றாள் மிதுலா,உன் மாதிரி சில பெண்கள் இன்னும் இப்படி இருப்பதால் தான் என்னை மாதிரி பல பேர் கடனாளிகளாக திரிகின்றார்கள் என்றான் ராஜேஷ்

மிதுலா எப்போதும் ஆடம்பரமாக வாழ நினைப்பவள் அப்படி வாழ நினைப்பதுவே மற்றவர்கள் அவர்களை திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக தான்,அவள் தனக்காக ஒரு நாளும் வாழ்ந்தது இல்லை மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் நம்மை பார்த்து பொறாமை படவேண்டும் எங்களிடம் எல்லாமே இருக்கு என்று மற்றவர்களுக்கு தெரியப் படுத்தனும் என்பதில் மட்டுமே அவளுடைய கவனம் எப்போதும் இருக்கும்,பணம் ஆடம்பரமான வாழ்க்கை இது தான் சந்தோஷம் என்று நினைக்கும் மிதுலா ஒரு நாளும் சந்தோஷமாக அவள் வாழ்ந்ததாக தெரியவில்லை,எப்போதும் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு வாழ ஆரம்பித்தோம் என்றால் உள்ள நிம்மதியும் போய் விடும் என்பது பல பெண்களுக்கு புரிவதில்லை அதில் மிதுலாவும் ஒருத்தி.மைமாவின் மதிப்பெண் வந்தது அவள் நன்றாகவே மதிப்பெண் எடுத்து இருந்தாள்,உடனே கவிதாவிற்கும் ரீட்டாவிற்கும் போனை எடுத்து மிதுலா பெறுமை பேசத் தொடங்கினாள் இந்த அம்மாவை திருத்த முடியாது என்று மனதில் மைமா நினைத்துக் கொண்டாள்,அன்று அவர்களை வெளியில் அழைத்தாள் மிதுலா அவர்களும் வருவதற்கு ஒத்துக் கொண்டார்கள் பிறகு தான் ராஜேஷ் இடம் தெரியப் படுத்தினாள் மிதுலா,அவனிடம் அவ்வளவு பணம் இல்லை அப்போதைக்கு அவன் சொன்னான் தற்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எப்படியும் மூன்று குடும்பமும் போய் அவ்வளவு பெரிய ஹோட்டலில் சாப்பிடுவதற்கு எப்படியும் முப்பது ஆயிரத்திற்கு மேல் செலவாகி விடும் இப்போதைக்கு இந்த விருந்து தேவையா என்றான் அவன்,நீங்கள் என்ன பேச்சி பேசுறீங்கள் அவர்கள் பிள்ளைகள் நன்றாக மதிப்பெண் எடுத்ததும் எங்களை கூப்பிட்டு ஆடம்பரமாக விருந்து கொடுக்கும் போது மட்டும் நாங்கள் போய் சாப்பிட்டு வந்தோம்,இப்போது அவர்களுக்கு செய்யனும் என்றால் தயங்குறீங்கள் என்று சிடு சிடுத்தால் மிதுலா,ஏன் உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கு தானே பிறகு ஏன் யோசிக்க நான் அவர்களிடம் கூறிவிட்டேன் நாங்கள் போகிறோம் என்று கூறி விட்டு அவள் உள்ளே சென்று விட்டாள்

என்று கிரெடிட் கார்டு கண்டு பிடித்தார்களோ அன்றோடு பாதி மக்கள் கடனாளியாகி திரிவது தான் மிச்சம் என்று மனதில் நினைத்துக் கொண்டான் ராஜேஷ்,அன்று அனைவரும் அந்த ஆடம்பரமான ஹோட்டலில் சந்தித்துக் கொண்டார்கள்,அவர்களின் ஆடம்பரமான உடைகளும் அதிகமான மேக்கப்பும் அந்த ஹோட்டல் வெளிச்சத்தில் மின்னியது,மைமாவை பாராட்டினார்கள் அனைவரும்,அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே ஓடர் பன்னி சாப்பிட்டார்கள்,அவர்களின் சிரிப்பும்,பேச்சும் யாரையும் விட யாரும் குறைந்தவர்கள் இல்லை என்பதில் கவனமாகவும் போலியாகவும் இருந்த மாதிரி இருந்தது ராஜேஷ்க்கு அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்,பில்லுக்கான பணத்தை ராஷேஷ் கட்டிவிட்டு அனைவரும் வீடு திரும்பினார்கள்,வரும் போது மிதுலா மைமாவை திட்டினாள் நீ ஏன் யாரிடமும் சரியாக பேசவில்லை,உனக்கு பாட்டு பாடத் தெரியும் தானே,அவர்கள் பாடும் போது உனக்கு ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்க என்றாள் அவள்,அம்மா அவர்கள் முன்னுக்கு பாட வேண்டும் என்பது எனக்கு அவசியம் இல்லை என்றாள் மைமா உனக்கு வாய் அம்மாவிடம் மட்டும் தான் மற்றவர்கள் முன்னுக்கு எதுவும் முடியாது என்று அதட்டினாள் மிதுலா,இது தான் நான் உங்களுடன் வர விரும்புவது இல்லை,அதை செய் இதை செய் என்று என்னை வற்புருத்துவதால் என்றாள் மைமா,அவர்கள் பாடும் போது ஆடும் போது நீ மட்டும் ஒன்றும் தெரியாததுப் போல் உட்கார்ந்து இருந்தால் எனக்கு வெட்கம் இல்லையா?என்னை மதிப்பார்களா அவர்கள் என்றவுடன் ராஜேஷ் முறைத்தான் மிதுலாவை என்னை முறைக்காதீங்கள் உங்கள் மகளை போகிற இடங்களுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க சொல்லுங்கள் என் மானத்தை வாங்காமல் என்றாள் மிதுலா,உன்னை திருத்த முடியாது என்று மனதில் நினைத்துக் கொண்டான் ராஜேஷ்,அம்மா உன்னுடன் வெளியில் வருவதையே நான் வெறுக்கின்றேன் என்னை என் போக்கில் விடே என்றாள் மைமா,அது எப்படி விட முடியும் நீ என் மகள் உன் இஷ்டத்திற்கு வாழ முடியாது எனக்கென்று ஒரு கௌரவம் இருக்கு அதற்கு தகுந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்றாள் மிதுலா,உன் போலி கௌரவத்திற்கு அவளை பழியாக்காதே என்றான் ராஜேஷ்,உனக்கு பிள்ளையாக நான் வந்து பிறந்து இருக்கவே கூடாது என்று பெருமூச்சி விட்டாள் மைமா,

அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்,அடுத்த நாள் ரீட்டா போன் பன்னினாள் மிதுலாவிற்கு நேற்று நல்லாவே இருந்தது அசத்தி விட்ட,ஏன் மைமா அமைதியாக இருந்தாள் என் மகன் நிஷாந்தன் அவளை ஆட கூப்பிட்டான் அவள் முடியாது என்று கூறிவிட்டாள் என்றதும் இல்லை அவளுக்கு கொஞ்சம் நேற்று வயிறு வலி அது தான் என்று சமாளித்தாள் மிதுலா அப்படியா சரி சரி அதை விடு என்று கூறிவிட்டு மேலும் அரைமணித்தியாலம் பேசிவிட்டு போனை வைத்தாள் ரீட்டா,இது போதாது மிதுலாவிற்கு மைமாவிடம் சண்டை போடுவதற்கு அன்று ராஜேஷ் வீட்டில் ஏன் காலையில் இப்படி சத்தம் போடுற ஊரை கூட்டும் அளவிற்கு என்றான் ராஜேஷ்,உங்களுக்கு என்ன நேற்று இவள் ஏன் அமைதியாக இருந்தாள் என்று எனக்கு போன் பன்னுறாள் ரீட்டா எனக்கு அசிங்கமாக இருந்தது என்றாள் மிதுலா அம்மா உனக்கு ஏத்த மாதிரி எனக்கு வாழ முடியாது,இதுவெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை, என்

உணர்வுகளுக்கும் கொஞ்சம் மதிப்பளி என்றாள் மைமா,அது உன் அம்மாவிற்கு தெரியாது இன்னும் பல பெண்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதால் தான் எல்லா குடும்பங்களிலும் பல பிரச்சினைகள்,அது ஒரு நாளும் இந்த மாதிரி பெண்களுக்கு புரியவே புரியாது என்று கூறிவிட்டு சென்று விட்டான் ராஜேஷ்,அப்பாவை பார்க்கும் போது பாவமாக இருந்தது மைமாவிற்கு நான் அம்மா மாதிரி இருக்க கூடாது என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *