கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 4,538 
 

நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற மாதிரி நான் மெமரி லாஸ் பெசண்டு இல்ல, ஆனாலும் எனக்கு எதுமே விளங்கல?.

ஊருக்குள்ளேயே ஓடி இருந்தாலும் எங்கயாச்சும் மறையலாம்., இல்ல, யாராச்சும் காப்பாத்துவாங்க, இப்டி வெட்ட வெளி புழுதி வயகாட்டுல ஓடிட்டு இருக்கேன், திரும்பி பார்த்தேன், அய்யய்யோ ! கத்தியும் ஆளுமா, பார்த்தாலே ஈரகொல நடுங்குது, இதுல எவன் வந்து காப்பாத்துவான் ? வேணாம் வேணாம் இதுவே நல்லதுதான், நல்லா ஓடயாவது முடியுதே.

நான் முதல் ஆளா ஓடுறதால மணல கிளப்பி விட்டு ஓடி அவங்க பார்வைய தடைபடுத்திகொண்டே ஓடினேன், அப்டியும் கத்திய வீசுறாங்க திரும்பி எடுக்கலாம்னு தோணுது ஆனாலும் பயமா இருக்கு, திரும்பி நின்னு தைரியமா பேசலாம்னு நினைக்கிரேன் ஆனா அவிங்க கேக்காமலே வெட்ட ஆரம்பிச்சிட்டா என்ன பண்றது ?இந்த ரண களத்திலும் அந்த வடிவேல் காமெடி ஞாபகம் வந்தது .., அப்புறம், ஒரு வேல கனவா இருக்குமோன்னு கண்ணை மூடிட்டு ஓடினேன் எத்திட்டு விழ பாத்தேன், அப்போ இது கனவு இல்ல காவு தான் உறுதி ஆயிடுச்சு.

எப்டி யோசிச்சாலும் தப்பிக்க சரியான வழி ஓடு… ஓடு… ஓடு… அது மட்டும்தான் மூளை, இதயம் இன்னும் எல்லா உறுப்பும் அதமட்டும்தான் அறிவுறுத்துது. ஆனா ஒரு சின்ன நிம்மதி அவங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி தூரம் அதிகரிச்சுட்டே இருக்கு, நான் ஒடுறேன் ஓடுறேன் ஓடிகிட்டே இருக்கேன் இடையே இடையே வரப்பு மேடுகள் தாண்டுறேன்,, தொடர்ந்து முன்நோக்கி ஓடுறேன், ஆனா என் சிந்தனை பின்னோக்கி நகருது.

இன்னைக்கு காலையில கொஞ்சம் லேட்டா கிளம்புனேன், அதனால் ஆபீஸ் போக லேட் ஆகும்னு மெயின் ரோட்ல போகாம, எப்போவாச்சும் போர ஒரு குறுக்கு பாதையில அவசரமா வந்தேன் திடீர்னு ஒரு, கிட்டத்தட்ட ஹேர்பின் பெண்டு மாறி ஒரு வளைவுல கத்தியும் அருவலுமா கூலிபடை குண்டர்கள் மறைக்க, பயந்து அலறி பைக்லேந்து ஒரே ஜம்பு, வயகட்டுல உளுந்து ஓடிட்டு இருக்கேன் அந்த பைக்குகூட ரெண்டு பேர லேசா காயப்படுத்திச்சு, ஆனா நான் ஒடுறேன், ஓடுனேன், ஓடுவேன்னு, ஓடிட்டே இருக்கேன்.

என் இதய துடிப்பு வேகத்தை கணிக்கும்போது என் ஆயுளில் இந்த ஐந்து நிமிடம், எப்படியும் ஐந்து வருடத்தையாவது குறைக்கும் என்றே தோணுது. ஆனாலும் எனக்கு எப்டி எவ்ளோ ஸ்டாமினானு சந்தேகம் வரும்போது அப்பா அம்மாவுக்கு பயந்து ஓடி ஓடியது ஞாபகம் வந்தது, ஆமா இப்போ ரொம்ப முக்கியம்னு சிறு மூளை புலம்புது.

ஆள் வைத்து கொலை செய்யும் அளவுக்கு நான் செய்த தவறாக, நான் ரெண்டு மூணு பேர லவ் பண்ணிருக்கேன், ஆனா யார்கிட்டயும் லவ்வ சொன்னதுகூட கிடையாது, என்னைய ஒரு பொண்ணு லவ் பண்ணிச்சுன்னு பிரெண்டு சொன்னான், அத நான் பாத்ததே இல்ல, அதுவாவும் இருக்காது இதுவாவும் இருக்காது, சொத்து பத்தும் பெருசா ஒன்னும்மில்ல, நெறைய கஸ்டமர்களை கஷ்டபடுத்தி இருக்கேன் ஆனா அதுக்காக கொலை பண்ற அளவுக்கு ஒண்ணுமில்ல.

அரசியல், ஜாதி, இன்னும் சில முரண்பாடுகளால் கலவரம் வர்ற அளவுக்கு நான் எதுவும் பண்ணல.., ப்ச்… அட ச்சே… இந்த கடவுள் நம்பிக்கையும் கிடையாது, இருந்தாலாவது அவிங்க மேல பழி போட்டு எதாவது குறை சொல்லலாம், இப்போ என்ன பண்றது?.

திரும்பி பாத்துகிட்டே ஓடினேன், புழுதி புகையிலே ஒன்னும் கண்ணு மண்ணு தெரியல கொஞ்சம் மெதுவா ஓடி நின்னு பாத்தேன் களைப்புல நெஞ்சு லேசா வலிக்கிற மாறி இருந்துச்சு, ஓடும்போதுகூட இந்த அளவுக்கு இல்ல நின்று இளைக்கும்போது பயமா இருந்துச்சி , திடீர்னு புகைய விளக்கி ஒரு கத்தி கழுத்துகிட்ட , சட்டென்று கீழ குனிந்து ரெண்டு கைகளிலும் மணல அள்ளி அவன் முகத்தில் அடித்தேன் . சற்று விலகி ஓடி சுற்றி பார்த்தேன், நாங்க ஓடி வந்த திசையில் யாரையும் காணவில்லை ஒருவன் மட்டும்தான் இருந்தான்.

இனி சண்டையிட்டுதான் ஆகவேண்டும் என்று கீழ விழுந்த கத்தியை எடுத்துக்கொண்டு, அவன் முன்னே நின்று அண்ணே யாருன்னே நீங்கல்லாம் ஏன் அண்ணே என்ன கொல்ல பாக்குறீங்க னு கத்திய வலுக்கட்டாயமாக பிடித்துகொண்டு பதறினேன், குண்டன் அவன் சற்றும் பயமில்லாமல் நெஞ்சில் ஏறி மிதித்தான் , கத்தியை ஏந்தியபடி கீழே விழுந்தேன் செத்தேன்.

கண்ணை திறக்க இமை கனத்தது, இரு இமைகளும் ஒட்டி இருந்தது . நீண்ட நேர முயற்சிக்கு பின் கண் திறந்து சொர்க்கமா ? நரகமான்னு தேடி பார்த்தேன் , சந்தேகமே இல்ல நரகம் தான். ஏனென்றால் அங்கு மனித நடமாட்டம் தெரிந்தது.

எந்த இடமென்று உணர முயற்சித்தேன் , மருத்துவமனையா? சிறையா ? ரெண்டும் ஒன்னுதான் . ஏனென்றால் இது என் வீடு. எப்டியோ வீடு வந்து சேந்திட்டோம். இருந்தாலும், என்ன நடந்தததென்று தெரியலயே மூளை குழம்பியது, ஒன்று மட்டும் புரிந்தது நான் இன்னும் சாகல, படுக்கையில் எழும்ப முடியாம படுத்திருக்கேன் , நன்கு விழித்து சூழ்நிலையை கிரகித்து எதையோ தேடுறேன், ஆனால் எதோ கிடைக்குது மாலைஇதழ் நியூஸ் பேப்பர் பார்த்தேன், தேடினேன்.

அதிர்ந்தேன், தலையை தடவி பார்த்தேன் , இருந்தது, ஆனால் அந்த பேப்பரில் தலையில்லாமல் நான் குப்புற படுத்திருக்கிறேன், கறுப்பு பேன்ட் மற்றும் மஞ்சள் சட்டையுடன், அசல் நானேதான் ஆனால் தலை மட்டுமில்லை,

அட பாவிகளா ?! , நடந்ததை யூகித்தேன் ஆனாலும் ஒரு சந்தேகம், இலக்கு அவந்தானா இல்லை அவனும் என்னை போலவா என்று தெரியவில்லை, பலவித சந்தேகங்களுடன் உங்களைபோல நானும் குழம்புகிறேன், நான் இப்போ என்ன பண்றது ? நான் திரும்ப ஆரம்பிச்சா ரொம்ப நேரமாகும் , அவங்க அவங்க வாழ்கையில் பயணிப்போம் , இல்ல இல்ல ஓடுவோம்…..

“காரணமே இல்லையேன்றாலும், சில சமயம் ஓடியே தீர வேண்டும் நம்ம வாழ்க்கைபோல”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *