கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2021

109 கதைகள் கிடைத்துள்ளன.

உள்ளுக்குள் உள் உள்ளேன்!

 

 ‘சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி!…..’ சினிமா பாட்டு வரிகள் கேட்கும் போதெல்லாம் முகந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடும். ‘அடி தாங்கும் உள்ளம் இனி இடி தாங்குமா?….இடி போல பிள்ளை வந்தால் அடி தாங்குமா?……ஒரு நாளும் நான் இது போல் அழுதவன் அல்ல…அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல?’ கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாட்டு, சும்மா இருக்கும் பொழுதும் நினைவில் வந்து வாட்டியது. ….இப்படியே கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் உருண்டோடியது. மகன் பிரகாஷ்…திருமணமாகி


லச்சுமியின் கனவு கனிந்தது

 

 சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள். ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ…. தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி. லச்சுமி


தனி ஒருவனுக்கு…

 

 “..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.” – எஸ். அகஸ்தியர் “களவெடுப்பியோ ?” “இல்லை” “பொய் சொல்லுவியோ?” “சொல்லேல” “அடுத்தவீடு போவியோ?” “போகேல்ல” “கூடுவாரத்துகளோட திரிவியோ?” “இல்ல, திரியல்ல” செப்பமான சம்பல் அடி. பொடியன் மிதிபட்ட நாக்கிளிப் புழவாட்டம் சுருண்டு கீழே


இந்தக் கொரோனாவால!

 

 அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று தட்டி எழுப்புவதுபோல் ஓசையெழுப்பியது. இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டபடி மெல்லக் கண்விளித்தான் ரிசி. இரண்டு பெரிய படுக்கை அறைகள், நன்கு விசாலமான வரவேற்பறை அதையொட்டி நவீன திறந்த சமையலறை, அத்தோடு பள பளவென்றிருக்கும் குளியலறை. புதிதாகக் கட்டிய இரண்டடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கிறது ரிசி வாங்கிக் குடிபுகுந்த இந்த வீடு.


வாடகை வீடு

 

 நாமதான் இந்த மாத கடைசியிலே வீட்டைக் காலி பண்றதாகச் சொல்லிட்டோம் இல்ல, பின்னே ஏன் அவசரமா காலி பண்ணச் சொல்லி நெருக்குறாங்க? எனக் கேட்டாள் ஜெயந்தி. அவங்க அவசரம் அவங்களுக்கு. என்றார் ராமலிங்கம். என்ன அவசரமாக இருந்தாலும் என்ன? நாம முன்னேயே சொல்லியாச்சு. நம்ம பசங்க பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறதனாலேதான் நம்ம கிராமத்து வீட்டைப் பூட்டி போட்டுவிட்டு இங்கே வாடகைக்கு வந்தோம், தேர்வுகள் முடிந்தவுடன் காலி செய்திடுவோம் என சொல்லிட்டோம் இல்ல, பின்ன சீக்கிரமா போங்கன்னா என்ன


அழகர்சாமியின் குதிரை வண்டி!

 

 நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ, அபார மூளையோ, அதிர்ஷ்டமோ, அப்பா, அம்மா செய்த புண்ணியமோ. இதில் எதுவுமே கிடையாது. எல்லா புகழும் அந்த அழகர் சாமிக்கே… யார் இந்த அழகர் சாமி? என் பெயர் பார்த்தசாரதி. சென்னையில் இருக்கும் கால்நடை மருத்துவமனையின் முதன்மை மருத்துவர். கிங் இன்ஸ்டிடியூட், சென்னை. பல பிரபல தனியார் கால்நடை மருத்துவமனைகள் என்று பெரிய மருத்துவ நிலையங்களில் மருத்துவ


இவர்களும் அவர்களும்

 

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘சுந்தரம்ஸ் அன்ட் கோ’வின் பிரதம பங்காளியும்’ மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ‘ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்’ உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது அவர்களுடைய அந்தஸ்தைக் குறைப்’ பதாகும். அவர்களுடைய விஷயங்களில் எதையும் ‘கோய பல்ஸ்’ பாணியில் பெருக்கிச் சொல்வது தான் முறை. இரு


பாடம்…!

 

 “பெரிய பொல்லாத சைக்கிள். ஓட்டை வண்டி. ! தொடைக்கனுமாம் தொடைக்க..!” – பத்தாவது படிக்கும் நிர்மல் வெறுப்பும் சலிப்புமாய் வாசலில் நிற்கும் சைக்கிளை ஒரு உதை விட்டுவிட்டு பொறுமிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். “அம்மா..! அம்மா !” கூப்பாடு போட்டான். நளினிக்கு இவனென்றால் உயிர். செல்லம். “என்னம்மா..?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படியை விட்டு வெளியே வந்தாள். “அப்பா இம்சை தாங்க முடியல…”கடுப்புடன் சொல்லி நாற்காலியில் அமர்ந்தான். “என்ன…?” அருகில் வந்தாள். “கடைக்குப் போன்றவர் வழியில என்னைப் பார்த்து சைக்கிளைத்


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 ராஜம் விடாமல் ”சுரேஷ்,நீ சென்னைக்கு உடனே ‘போன்’ பண்ணி,ரமா நம்ம ஆத்லே அவ எழுதி வச்சுட்டுப் போன ‘லெட்டரை’ பத்தி விவரமா சொல்லி,குழந்தைக்கு ஒரு வருஷம் தான் ஆறது, அந்த குழந்தையே ரமா அவசியமா பாத்துக்கணும்ன்னு.அதனால்லே ரமாவை உடனே டெல்லிக்கு அனுப்பி வக்கச் சொல்லு.இப்ப சூட்டோடு சூடா சொன்னா தான் அவா பண்ணுவா.அப்புறமா ஆறின கஞ்சி பழங்கஞ்சியா ஆயிடும்”என்று கத்தினாள். சுரேஷ் ஒன்னும் பதில் சொல்லாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு


இட்லிக்காரி

 

 எப்போதும்போல அன்று காலையும் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, இட்லிகளை வேக வைத்தாள் அந்த இட்லிக்காரி. கணவன் சில வருடங்களுக்கு முன் இறந்தபிறகு, வீட்டிலேயே இட்லிகள் செய்து விற்க ஆரம்பித்தாள். வியாபாரம் சூடு பிடிக்கவே இட்லி தவிர வடை, தோசை என்று காலை ஒன்பது மணிவரை விற்றாள். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது. ஒரே மகன் வயது பதினெட்டு. சரியாகப் படிக்காமல் சோம்பேறியாக இருந்தான். அவனை தனக்கு உதவியாக இருக்குமாறு இட்லிக்காரி சொன்னதற்கு, ஆறு