கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2013

63 கதைகள் கிடைத்துள்ளன.

இடி

 

 கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை என்றால் அப்படி ஒரு உதை அவளை அந்ததனியார் வங்கியில் வேலை செய்ய முடியாமல் வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. தலை சுற்றல் வேறு. பக்கத்து கௌண்டரில் இருந்தவரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு முறை வாந்தி எடுத்து, ஒரு புளிப்பு மிட்டாய் அடக்கியபின் கொஞ்சம் தெளிவானதஎன்ன இருந்தும் இந்தக் குழந்தை எனக்கு


பெத்தவன்

 

 “இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி வெள்ளிக்கிழம” “கல்யாணமா நடக்கப்போவுது? நல்ல நாளு பாக்குற.” என்று ஒரு பையன் கேட்டான். சரம்சரமான கேள்விகள். பழனிக்குச் செக்கில் போட்டு ஆட்டுவது மாதிரி இருந்தது. “மூணு தவண தப்பிப்போயிடிச்சி. ஊருக்காரன ஊம்பனாண்டிப் பயன்னு எண்ணக் கூடாது. ஒம் மவ செஞ்சுகிட்டிருக்கிற காரியத்துக்கு மூணு வருசமா ஊருக்காரன் பொறுமயா இருக்கிறதுக்கு நீ நல்ல மனுசன்ங்கிறதுதான். முடியாதுன்னு ஒரு


முடிவு

 

 சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு வரச் சொன்னாரு. ரொம்ப அவசரமாம், நா அப்புறமா வரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள். “நின்னு நெதானமாகூட சொல்லாம ஓடுறாப் பாரு நாதாரி” என்று சுமதி சொன்னாள். சொம்பை எடுத்து அண்டாவுக்குள் விட்டாள். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை என்று தெரிந்ததும் கோபத்தில் சொம்பை விட்டெறிந்தாள். “சனியன் புடிச்ச ஊட்டுல குடிக்கிறதுக்கு ஒரு வாய்த்


ஆசைகள்

 

 “எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு. போன வருசமே ஆன மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் நல்ல மய பேஞ்சி நல்லா வௌயனுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப்


பேராசை

 

 ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில் சிரிப்பில்லை. ஆனால் கோகிலா கலகலப்பாகத்தான் இருந்தாள். புருசனோடு அதுவும் முதன்முதலாக ரயிலில் போகிறாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா அம்மாவை பிரிந்துபோகிறோம் என்ற கவலை துளியும் அவளுடைய முகத்தில் இல்லை. செல்வமணி மாதிரியே அவளும் அடிக்கடி ரயில் வரும் திசையில் பார்த்தவாறு இருந்தாள். அவளுடைய பாட்டி முத்தம்மா ஏதோ சொன்னாள். சரி என்பது மாதிரி


‘ஒட்டி’ உறவாடி

 

 ஜெர்மி இன்னும் நம்பமுடியாமல் தனக்கு எதிரே டேபிளில் அமர்ந்திருந்த -அவனுடைய மனைவியாக ஒத்துக் கொண்டுவிட்ட-அரபெல்லாவைப் பார்த்தான். வெய்ட்டர் பக்கத்தில் வர ‘எனக்கு ஒரு எஸ்பிரஸ்ஸோ அப்புறம் என்னோட வருங்கால மனைவிக்கு-அவனுக்கே அப்படிச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது-ஒரு மின்ட் டீ’ என்றான். ‘வெரி குட் ஸார்!’ – வெய்ட்டர் அந்த ஹோட்டலுக்குள் அமர்ந்திருந்த கூட்டத்தை தலையை திருப்பி திருப்பி பார்த்தான் ஜெர்மி. அரபெல்லாவுக்கு வந்த கையசைப்பும் பறக்கும் முத்தங்களையும் பார்த்தால் அவளுக்கு அங்கே ரெகுலராக வருகிற எல்லாரையும் தெரியும்


உயிர்க்கசிவு

 

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது. எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான். “என்னம்மா இது?… ராவிருட்டியில?…. பிள்ளையள் பயப்பிடப்போகுது…. படுங்கோ!” அம்மாவுக்கு வயது போய்விட்டது. கிழவி. யார் என்ன சொன்னாலும் கேட்கத்தான் வேண்டும். குளிரடித்தது. போர்வைக்குள் உறக்கத்தை இழுத்து மூடிக்கொண்டு படுப்பதற்கு அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டாள்.


பிரசவம்

 

 “என்ன சீதா? இப்போ எப்படி இருக்கு வலி? தேவலையா? டாக்டர் என்ன சொல்றார்?” அம்மா என் தலையை ஆதூரமாக கோதினாள். “பரவாயில்லேம்மா! டாக்டர் ஊசி போட்டார். இப்போ வலி ரொம்ப குறைந்திருக்கு. எப்ப வேணாலும் திரும்ப வலி வரலாமாம். ஆனால், பயப்பட வேண்டாம்னார். சீக்கிரமே வந்து அட்மிட் ஆகச்சொல்லி இருக்கார். ” “ஐயையோ! இப்போ என்ன பண்றது?” “பயப்படாதே! ஒன்னும் பிரச்னையில்லே. நிறைய மாத்திரை கொடுத்திருக்கார்.” “சரி, வாட்டமா இருக்கியே பேசாம போய் படு. நான் வேணா


பயம்

 

 “வாங்கடா சீக்கிரம், படம் ஆரம்பிச்சிடப் போறாங்க” என்று தன் நண்பர்களான சிவா, பாபு, மணி ஆகியோரை கிளப்பிக்கொண்டு திரையரங்கத்திற்கு உள்ளே சென்றான் ரவி. படம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த்த போது இடைவேளை வந்தது. “சரிடா, சாப்படறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று சிவாவை அழைத்தான் ரவி. மணி சற்றே பதற்றத்தோடு இருப்பதைக் கண்ட ரவி, “என்னடா ஆச்சு? டென்ஷனா இருக்க?” என்று கேட்டான். “என்னோட பர்ஸ காணோம்டா. அதுல நூறு ரூபா, என்னோட காலேஜ் ஐடி கார்டு


தூக்கம்

 

 நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடைக்குச் செல்ல தயாரானான் பாபு. சிவப்ரகாஷுக்கு வயது 70 ஆகிறது, ராஜலக்ஷ்மிக்கு வயது 60. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவப்ரகாஷ். அந்தக்காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், அரசாங்க வேலையை நம்பாமல் விவசாயம் செய்து வந்தவர். ராஜலக்ஷ்மி வீட்டு வேலைகளை கவனித்து வந்தாள். சிவப்ரகாஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு 2