கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 1,354 
 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

பாகம்-3 | பாகம்-4 | பாகம்-5

அடிமைத் தொழில் 

“பிராமணோத்தமர்களே! நாங்கள் திருதராஷ்டிர குமாரர் களால் வஞ்சிக்கபட்டு ராஜ்யம் இழந்து தரித்திர நிலை அடைந் தோமானாலும் சந்தோஷமாக வனத்தில் உங்களோடு இவ்வ ளவு காலம் கழிந்தோம். பதின்மூன்றாவது வருஷம் வந்துவிட் டது. இனித் துரியோதனனுடைய ஒற்றர்களால் கண்டு பிடிக் கப்படாமல் பன்னிரண்டு மாதம் கழிக்கவேண்டும். உங்களைவிட் டுப் பிரிய வேண்டியி ரு க்கிறது. நாங்கள் ராஜ்ஜியத்தை மறுபடியும் அடைந்து, உங்களோடு சேர்ந்து சுகமாகச் சத்துருக்களைக் குறித்துப் பயப்படாமல் வாழும் காலம் என்று வருமோ அது ஈசுவரனுக்குத் தெரியும். இப்போது உங்கள் ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன்! திருதராஷ் டிரர்களிடம் பயந்தோ பொருள் பெற்றோ எங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கருதுகிறவர்களுக்கு நாம் இன்னார் என்று தெரியாமல் மறைந்திருந்து பன்னிரண்டு மாதங்கள் கழிக்க வேண்டும்” என்று யுதிஷ்டிரன் அது வரையில் தங்க ளுட ன் வசித்துவந்த பிராமணர்களைப் பார்த்துச் சொன்னான். சோகத்தினால் அவனுடைய குரல் தடுமாறிற்று. 

தௌம்யர் சமாதானம் செய்து ”அப்பனே! கற்றறிந்த வனாகிய நீ இவ்வாறு மனம் தளர்தல் ஆகாது. தைரியமாக இனிச் செய்யவேண்டியதை யோசிப்பாயாக. தைத்யர்களால் வஞ்சிக்கப்பட்ட இந்திரன் முன் நாட்களில் பிராமண வேஷந் தரித்து நிஷத தேசத்தில் மறைந்து வாசம் செய்யவில்லையா? அவ்வாறு ஒளிந்திருந்து இந்திரன் தன்னுடைய பகைவர் களுடைய பலத்தை அழிக்கும் காரியங்களைச் செய்தான். நீயும் அவ்வாறே செய்ய வேண்டும். மகாவிஷ்ணுவானவர் காரிய சாதனத்திற்காக அதிதி வயிற்றில் கர்ப்பப் பையில் ஒடுங்கி யிருந்து மனிதனாகப் பிறந்து பலி சக்ரவர்த்தியினிட மிருந்து ராஜ்யத்தை அடைந்து உலகத்தைக் காப்பாற்றினாரல் லவா? விருத்ராசுரனை வெல்வதற்காக நாராயணன் திரனுடைய ஆயுதத்தில் பிரவேசித்து மறையவில்லையா? தேவகாரியமாக அக்கினி பகவான் ஜலத்தில் மறையவில்லையா? சூரியன் தினசரி பூமியில் மறைந்து நிற்பதைக் காணவில்லையா? ராவணனைச் சம்ஹாரம் செய்வதற்காக மகாவிஷ்ணு தசரதனு டைய வீட்டில் மனிதனாகப் பிறந்து துக்கப்பட்டுப் பல்லாண்டுகள் கழிக்கவில்லையா? இவ்வாறு பூர்வத்தில் அநேக மகா த்மாக்கள் மறைந்தும் ஒளிந்தும் காரியசித்தி அடைந்திருக்கி றார்கள். அப்படியே நீயும் பகைவரை வென்று பாக்கியம் பெ றுவாய்” என்று தேற்றினார். 


யுதிஷ்டிரன் பிராமணர்களிடம் அனுமதி பெற்று அவர் களையும் மற்ற எல்லாப் பரிவாரத்தையும் ஊருக்குத் திரும்பிப் போகச் சொன்னான். அவர்களும் அவ்வாறே நகரத்துக்குத் திரும்பிப் போய்ப் பாண்டவர்கள் எங்களை நடு நிசியில் விட்டு ட்டு எங்கேயோ மறைந்து போய் விட்டார்கள் என்று சொல்ல, ஜனங்கள் மிகவும் துயரமடைத்தார்கள். 

பாண்டவர்கள் வனத்தில் ஒரு தனிகான இடத்தில் உட்கார்ந்து யோசிக்கலானார்கள். ‘அருச்சுனா! நீ தான் உலக விவகாரம் நன்றாகத் தெரிந்தவன். பதின்மூன்றாவது வருஷத்தை எந்த இடத்தில் கழிப்பது நலம்?” என்று தருமபுத்திரன் கேட்டான். 

அருச்சுனன், மகாராஜாவே! யமதேவனிடம் இதற்காக வரம் பெற்றிருக்கிறீர். நாம் யாராலும் அறியப்படாமல் பன் னிரண்டு மாதங்களை எளிதாகவே கழிப்போம். எல்லோரும் ஓரி டத்திலேயே இருப்போம்.மனத்துக்கு இனிமையான பல தேச ங்கள் இருக்கின்றன. பாஞ்சால தேசம் இருக்கிறது. மத்ஸய தேசம் இரு க்கிறது. சால்வம், வைதேகம், பாஹ்லிகம், தசார் ணம், சூர சேன நாடு, கலிங்கம், மகதம் இந்த நாடுகள் எல்லாம் இருக்கினறன. இவற்றில் எது உமக்குப் பிரியமோ அந்தத் தேசத் திற்குப் போகலாம். என்னைக் கேட்டால் விராடனுடைய தேசமான மத்ஸ்யதேசமே மேலானது என்பேன். விராடனுடைய நகரம் மிக்க அழகும் ஐசுவரியமும நிரம்பியது. உம்முடைய இஷ்டத்தைச் சொல்லவும். நீர் துக்கப்படலாகாது” என்றான். 

“மத்ஸ்ய தேசாதிபதி விராடன் மிகுந்த பலமுடைய அரசன். நம்மிடத்தில் பிரியம் வைத்திருப்பவன். தரும் சீலன். வயது முதிர்நதவன். துரியோதனன் பேச்சைக் கேளாதவன். விராட ராஜன் அருகில் மறைந்து வாசம் செய்வதே நலம் என்று எண்ணுகிறேன்’ என்றான் யுதிஷ்டிரன். 

“அவ்வாறே செய்வோம். அரசனே! நீர் விராடனிடத்தில் என்ன காரியத்தில் அமர்வீர்!’ என்றான அருச்சுனன். 

இவ்வாறு கேட்கும்போது அருச்சுனனுக்குத் துயரம் மேலி ட்டது. கபடமறியாத மகாத்மா ராஜாதி ராஜனாக ராஜசூய யாகம் செய்து புகழ்பெற்ற யுதிஷ்டிர மகாராஜன் மற்றொரு அரசனிட ம் மாறுவேஷ ம் தரித்துச் சேவகததில் அமர நேரிட் டதே! என்று எண்ணித் துக்கப்பட்டான். 

யுதிஷ்டிரன் சொல்லலானான். 

“நான் விராடனிடம் ஆஸ்தானப் பணிவிடை வேலைக்கு என்னை எடுத்துக்கொள்ளக் கேட்கலாம் என்று இருக்கிறேன். அரசனுடன் உட்கார்ந்து பாச்சிகை விளையாட்டு விளையாடி அதில் சாமர்த்தியம் காட்டி ச் சந்தோஷப்படுத்துவேன். சந்நியாசி வேஷம் தரித்துக் கங்க்கன் என்ற பெயரிட்டுக் கொண்டு சொக் கட்டான் விளையாடுவதோடு அரசனுக்கு ஜோதிடம், பட்சி சகுனங்கள், வேதம், வேதாங்கங்கள், நீதி சாஸ்திரம் முதலிய வற்றில் பண்டிதனாக இருந்து அரசனைச் சந்தோஷப்படுத்து வேன். சபைப் பணி விடையும் செய்வேன். நான் முந்தி யுதிஷ் டிரனுக்குப் பிராண சினேகிதனாக இருந்து இதை யெல்லாம் கற் றேன் என்று சொல்லி ஜாக்கிரதையாகவே இருந்து வருவேன். நீங்கள் என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். பீமசேனனே! விராடனிடம் நீ எந்த விதமான வேலையில் அமர்வாய்? யக்ஷ ராக்ஷதர்களை அடக்கினவனே! பிராமணனுக்காகப் பகாசூரனை வதம் செய்து ஏக சக்ரபுரத்தைக் காப்பாற்றினாய். இடிம்பனைக் கொன்றாய். கோபமும், பலமும், பொங்கி வழியும் வீரனாகிய நீ மத்ஸ்ய ராஜனிடத்தில் எவ்விதம் அடங்கி ஒடுங்கி யில் அமர்வாய்’ என்று கண்களில் நீர் ததும்பப் பீமனைக் கேட்டான். 

பீமசேனன், “நராதிபனே! நான் விராடன் அரண்மனை யில் சமையல் வேலை கேட்டுப் பெறலாம் என்று இருக்கிறேன். எனக்கு மடைப்பள்ளி வேலை நன்றாகத் தெரியும் என்பதை அறி வீர்கள். இதற்கு முன் விராடன் கண்டிராத ருசியுள்ள பதார்த் தங்களைப் பக்குவம் செய்து அவனைத் திருப்திப் படுத்துவேன். காட்டிலிருந்து மரங்களை வெட்டி அடுப்புக்கு ஏராளமாக விறகுச் சுமைகளைக் கொண்டுவந்து போடுவேன். அரசனிடம் வரும் குஸ்திக்காரர்களுடன் போட்டிபோட்டு மல் யுத்தத்தில் அவர்களை வென்று ராஜாவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவேன்” என்றான். 

இதைச் சொல்லவும் யுதிஷ்டிரனுக்குக் கவலை உண்டாயிற்று. குஸ்தியில் பீமன் புகுந்தானானால் ஆபத்து என்பது அவன் பயம். உடனே பீமன் அவனுக்குச் சமாதானம் சொன்னான்: 

“நான் யாரையும் கொல்லமாட்டேன். நன்றாகக் கசக்கித் துன்பப்படுத்துவேனே யொழிய யமலோகத்துக்கு அனுப்பிவிட மாட்டேன். மதங் கொண்ட காளைகளையும் எருமைக் கடாக்க களையும் காட்டு மிருகங்களையும் அடக்கி விராடனுக்கு வேடிக்கை காட்டுவேன்” என்றான். 


பிறகு யுதிஷ்டிரன் அருச்சுனனை நோக்கி, “உனக்கு எந்தத் தொழிலில் அமர எண்ணம்? அப்பனே, ஒளிக்க முடியாத உன் வீரியத்தை எவ்வாறு ஒளிப்பாய்?” என்றான். இவ்வாறு அருச்சுன னைக் கேட்கும்போது அவனுடைய பிரதாப காரியங்களையும் கீர்த்தியையும் எடுத்துச் சொல்லப் புகுந்த யுதிஷ்டிரன் நிறுத்த முடியாதவனாக இருபது சுலோகங்கள் வரையில் தம்பியை வருணித்துக்கொண்டே போகிறான். புகழுக்குத் தகுந்தவன் அருச்சு ன்னைப்போல் உலகத்தில் வேறு யார்? 

“அண்ணண்மார்களே! வில்லின் நாண் தேய்த்துத் தழும்பு ஏறிய என்னுடைய கைகளை யாரும் பார்க்காதபடி எப்போதும் ரவிக்கை தரித்து அரசனுடைய ஸ்திரீகளுக்கிடையில் அவர்களு க்கு வேலை செய்யும் நபும்ஸகனாக நான் அமர்ந்து என்னை மறைத்துக் கொள்வேன். இவ்வாறான சாபமும் எனக்கு ஊர்வசி தந் ருக்கிறாள்.இந்திரனிடம் சென்றிருந்தபோது என்னை அவள் விரும் பிய காலத்தில் நீ எனக்குத் தாயைப் போன்றவள் என்று நான் மறுத்தேன். அவள் கோபம் கொண்டு நீ புருஷத் தன்மையை இழப்பாய் என்று என்னைச் சபித்தாள். அந்தச் சாபம் நான் வேண் டும் பொழுது ஒரு வருஷ காலம் மட்டும் என்னை அண்டும் என்று இந்திரன் அனுக்கிரகித்திருக்கிறான். அது இப்பொழுது நமக்கு உதவும். வெண்சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்து ஸ்திரீகளைப்போல் தலை மயிரைப் பின்னி விட்டுக் கொண்டு ரவி க்கை தரித்து விராடன் அந்தப் புரத்து வேலையில் இழி தொழி லில் அமர்ந்து மறைவேன். ஸ்திரீகளுக்கு நர்த்தனம், கானம் கற்பிப்பேன். யுதிஷ்டிரனுடைய அரண்மனையில் திரௌபதிக்குப் பரிசாரகம் செய்து பழக்கப்பட்டிருக்கிறேன் என்று விராடன் அந்தப்புரத்தில் வேலைக்கு வைத்து கொள்ளக் கேட்பேன்” என்று சொல்லித் திரௌபதியைப் பார்த்துச் சிரித்தான் தனஞ்சயன். 

யுதிஷ்டிரன் “ஹா! உலகத்தில் கீர்த்தியினாலும் பராக்கிரமத் தாலும் வாசுதேவருக்குச் சமமானவன். பரத வம்சத்தில் உதித்த வன், மேரு மலையைப் போன்றவன், விராடனிடத்தில் ‘நான் நபும் சகன்; எனக்கு அந்தப்புர வேலை தா’ என்று கேட்கப் போகிறானா? இதுவும் நம்முடைய விதியா?’ என்று மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்தான். 


பிறகு தருமபுத்திரன் நகுல சகாதேவர்களைப் பார்த்தான். அப்பா, நகுலனே! அழகிய சியாமள நிறத்தவனே! சுகானுபவத் துக்குத் தகுந்தவனே! துக்கத்துக்குத் தகாதவனே! நீ என்ன வேலை யில் அமரப் போகிறாய்?” என் மாத்ரியை நினைத்துக் கொண்டு பரிதபித்துக் கேட்டான். 

“நான் விராடனுடைய குதிரை லாயத்தில் வேலைக்கு இருக் கப் போகிறேன். குதிரைகளைப் பழக்குவதிலும் பார்த்துக கொள் வதிலும் என் மனம சந்தோஷமடையும். குதிரைகளுக்குச் செய்ய வேண்டிய வைத்தியமும் நான் நன்றாய்ப் படித்திருக்கிறேன். எந்தக் குதிரைக் குட்டியையும் என்னால் அடக்க முடியும். ஏறிச் சவாரி செய்து பழக்குவதிலும், வண்டி, தேர் முதலிய வாகனங்களைக் கட்டிப் பழக்குவதிலும் நான் சாமர்த்தியம் பெற்றிருக்கிறேன். பாண்டவர்களிடத்தில் நான் குதிரைகளைப் பார்த்துக் கொண்டி குந்தேன் என்று சொல்லி நான் விராட ராஜனிடம் களுக்கு வேலை சம்பாதித்துக் கொள்வேன்” என்றான். 

“பிரஹஸ்பதிக்குச் சமமான புத்தி படைத்த சகாதேவன், நீதி சாஸ்திரத்தில் சுக்கிரன் போன்ற நிபுணன், மந்திராலோசனை யில் ஒப்பற்ற இவன் என்ன செய்வான்?” என்றான் யுதிஷ்டிரன. 

“நகுலன் குதிரைகளைப் பார்க்கட்டும். நான் மாடுகளைப் பார்த்து வரும் வேலையில் அமரலாம் என்றிருக்கிறேன். விராட னுடைய பசுக்களையும் காளைகளையும் நோய்களாவது காட்டு மிரு கங்களாவது அண்டாமல் காத்து வருவேன். மத்ஸ்ய ராஜ்யத்தி னுடைய பசுக்கள் எண்ணிக்கையில் பெருகி புஷ்டியாக வளர்ந்து நிறையப் பால் தரும்படியாகப் பார்த்து வருவேன். காளைகளின் லட்சணங்களும் எனக்கு நன்றாய்த் தெரியும்” என்றான் சக தேவன். 

“கிருஷ்ணையே! நீ என்ன வேலை செய்ய முடியும்?’ என்று திரௌபதியைக் கேட்க நினைத்த தருமபுத்திரன், அந்தக் கேள்வி யைக் கேட்க முடியாதவனாகத் திகைத்தான். ‘பிராணனைக் காட்டி லும் பிரியமானவள்; பெற்ற தாயைப்போல் பூஜித்துக் காப்பாற் றத்தக்கவள், மிருதுவான தேகத்தைக் கொண்ட அரச குமாரி, எந்தச் சேவக வேலையில் எவ்வாறு அமர முடியும்’ என்று திகைத்தான். 

“ராஜேந்திரனே! என் காரணமாக நீர் சோகத்தில் திகைக்க வேண்டாம். என்னைப் பற்றி மனக் கவலைப்படாமல் இருக்கவேண் டும். பிரபுவே! நான் விராடனுடைய அந்தப்புரத்தில் வேலைக்கு இருப்பேன்.ராஜ ஸ்திரீகளுக்குத் தோழியாகவும், பரிசாரகம் செய் தும் வருவேன். என் சுதந்திரத்தையும் கற்பையும் காப்பாற்றி வருவேன். ஸைரந்திரிகளுக்கு இந்த உரிமை உண்டு. தலைமயிர் பின்னுவதிலும் அந்தப்புர ஸ்திரீகளுடன் சந்தோஷமாகச் சமபா ஷணை செய்து காலம் கழிக்கச் செய்யும் வேலையிலும் நான் இருப் பேன். யுதிஷ்டிரனுடைய அரண்மனையில் திரௌபதி தேவிக்கு இவ்வாறே சேவை செய்து பழகியிருக்கிறேன் என்று சொல்லி, விராடராஜனுடைய மனைவியிடம் வேலை சம்பாதித்துக் கொண்டு மறைந்து இருப்பேன்” என்றாள். 

“கல்யாணி! உன்னுடைய குலத்துக்குத் தகுந்த மங்களகர மான வார்த்தையைப் பேசினாய்!” என்று யுதிஷ்டிரன் திரௌபதி யின் தைரியத்தைப் பாராட்டினான். 

இவ்வாறு பாண்டவர்கள் தீர்மானித்த பிறகு தௌம்யர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்குப் புத்திமதிகளும் சொன னார்: “ராஜக் கிரகத்தில் வேலைக்கு இருக்கிறவர்கள் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். அதிகமாகப் பேசாமல் அரசனை உபாசிக்க வேண்டும். கேட்ட பின்னரே யோசனை சொல்லவேண்டும். கேளா மல் ஒரு போதும் அரசனுக்கு யோசனை சொல்லப் புகலாகாது. சமயம் பார்த்து அரசனைப் புகழ வேண்டும். அற்ப காரியமாயினும் அரசனிடத்தில் தெரிவித்தே செய்ய வேண்டும். அரசன் மனித உருவம் கொண்ட நெருப்பு ஆவான். அதிகம் கிட்ட நெருங்கக் கூடாது. அலட்சியம் செய்யக்கூடாது. எவ்வளவு நம்பிக்கையும் அதிகாரமும் பெற்றபோதிலும் எந்தச் சமயமும் உடனே நீக்கப் படலாம் என்று வாயிலைப் பார்த்த வண்ணமாகவே எப்போதும். இருக்க வேண்டும். அரசர்களிடத்தில் நம்பிக்கை வைத்தல் மூடத் தனமாகும். அரசனுடைய அன்பைப் பெற்று விட்டதாக எண்ணி அவனுடைய வாகனத்திலாவது ஆசனத்திலாவது ரதத்திலாவது ஏறக்கூடாது. அரசனிடத்தில் சேவை செய்கிறவன் சோம்பலற்று மனத்தை அடக்கினவனாகவே இருக்க வேண்டும். அரசனால் கௌர விக்கப்பட்டாலும் அவமதிக்கப்பட்டாலும் சந்தோஷமாவது மன வருத்தமாவது காட்டக்கூடாது. 

“ரகசியமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை வெளியில் பேசக்கூடாது. குடிகளிடமிருந்து எந்த விதமான பரிதானமும் வாங்கக் கூடாது. வேறொரு சேவகனைப் பார்த்துப் பொறாமைப் படக் கூடாது. அறிவுள்ளவர்களை விட்டு மூடர்களை அதிகாரத்தில் அரசன் வைப்பான். அதைக் கண்டு மனக்கசப்பு அடையக் கூடாது. அரண்மனை ஸ்திரீகள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். அவர்களிடத்தில் நேசம் பாராட்டக் கூடாது. 

இவ்வாறு ராஜ சேவகர்களுக்கு வேண்டிய இன்னும் அநேக எச்சரிக்கைகளைத் தௌம்யர் உபதேசம் செய்து விட்டு, பாண் டவர்களே! ஒரு வருஷம் விராடனிடத்தில் சேவக விருத்தியில் இவ்வாறு பொறுமையுடன் இருந்து முடித்தீர்களானால், பிறகு உங்களுடைய ராஜ்ய பதவியை அடைந்து சுகமாக வாழ்வீர்கள்” என்று ஆசீர்வதித்தார். 

மானம் காத்தல் 

தருமபுத்திரன் சந்நியாசி வேஷம் தரித்தான். அருச்சுனன் ஒரு நபும்ஸகனாகவே மாறி விட்டான். மற்றவர்களும் தோற்றம் மாறி யாரும் கண்டு கொள்ளாதவாறு ஆனார்கள். உருவம மாறி இருந்தாலும் அவர்களுக்கு இயற்கையான வசீகரத் தோற்றமும் தேஜசும் பழையபடியே இருந்தன. ஆகையால் விராட ராஜனிடம் வேலையில் அமர்வதற்காகப் போன காலத்தில், இவர்கள் அரசு புரியும் யோக்கியதைப் படைத்தவர்களாகக் காணப்படுகிறார்கள்; குற்றேவல் செய்யத் தகுந்தவர்களல்ல என்று ஒவ்வொருவரைப் பற்றியும் எண்ணி வேலையில் அமர்த்திக் கொள்ள விராடன் முதலில் தயங்கினான். ஆயினும் பாணடவர்கள வற்புறுத்தியதன் பேரில் தைரியங்கொண்டு, சந்தோஷமாகவே அவர்கள் கேட்டுக் கொண்ட பணிவிடை ஸ்தானங்களில் அவரவர்களை அமைத்தான். 

யுதிஷ்டிரன் விராடராஜனுக்கு ஆஸ்தானத்தோழனாக இருந்து கொண்டு அவனுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டு காலம் கழித்து வந்தான். பீமன் மடைப்பள்ளித் தலைவனாக வேலை செய்து வந்தான். அவ்வப்போது பிரசித்தி பெற்ற மல்லர்களுடன் குஸ்தி பிடித்தும் துஷ்ட மிருகங்களைச் சமாளித்தும் அரசனை மகிழவித்து வந்தான். 

அருச்சுனன் பிருகன்னளை என்ற பெயருடன் அந்தப்புரப் பெண்களுக்கு, முக்கியமாக விராடன் மகள் உத்தரைக்கும் அவளு டைய தோழிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும், நிருத்தியமும கான மும் வாத்தியங்கள் வாசிக்கவும் கற்பித்து வந்தான். நகுலன் கு ரைகளைப் பழக்குவதிலும் அடக்குவதிலும் அவற்றின் நோய்களுக் குச் சிகிச்சை செய்வதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த றமை காட்டி விராடனுக்குச் சேவை செய்து வந்தான், சகதேவன் பசுக் களையும் காளைகளையும் கவனித்து வந்தான். 

பல தாசிகளுடைய பணிவிடையைத் தான் பெறத்தக்க ராஜ குமாரியான பாஞ்சாலி, விராடன் மனைவி சுதேஷ்ணைக்கு ஊழியம் செய்து கொண்டு, அந்தப்புர ஸைரந்திரியாகக் காலம் கழித் தாள்.பர்த்தாக்களுடைய சத்தியப் பிரதிக்ஞையைக் காப்பாற்றும் பொருட்டு மனத்துக்கு ஒவ்வாத குற்றேவல் பணிகளில் ஈடு பட்டாள். 

சுதேஷ்ணையின் சகோதரன் கீசகன் விராடனுடைய சேனைத் தலைவன். அவனும் அவன் குலத்தவரும் விராடனுடைய படை வீரர்களாக இருந்து விருத்தனான விராட ராஜனுடைய பலத்தை மிகவும் பெருக்கினார்கள். மதஸ்ய தேசத்திற்கு உண்மையான அரசன் கிழவன் விராடன் அல்ல. கீசகனே என்று பாமர ஜனங்கள் சொல்லி வந்தார்கள். அவனுடைய செல்வாக்கு அவ்வளவு ஓங்கி விட்டிருந்தது. 

அந்தக் கீசகன் தன் பலத்தாலும் அரசனிடம் தனக்கிருந்த செல்வாக்காலும் செருக்கடைந்து மதி இழந்தவனானான். திரௌ பதியைக் கண்ட முதற்கொண்டு காம விகாரமடை ந்து, இவள் ஒரு வேலைக்காரிதானே, இவளை எளிதில் அடையலாம் என்று எண்ணிப் பல தடவை முயற்சி செய்தான். 

சுதேஷ்ணையிடமாவது மற்றவர்களிடமாவது இதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளத் திரௌபதி கூச்சப்பட்டாள். தன்னை யாராவது அவமதித்தால் அவர்களைத் தன்னுடைய பதிகளான கந்தர் வர்கள் ரகசியமாக வதம் செய்து விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தாள். அவளுடைய ஒழுக்கத்தையும் தேஜசையும் பார்த்துக் கந்தர்வர்களைப் பற்றி அவள் சொன்னதை எல்லாரும் நம்பி வந்தார்கள். ஆனால் கீசகன் கந்தர்வர்களைப் பொருட்படுத்த வில்லை. பல தடவை திரௌபதியை அடைய முயற்சித்தும் பயன் பெறாமல் கடைசியில் தன்னுடைய சகோதரி சுதேஷ்ணையிடம் விஷ யத்தைத் தெரிவித்தான். 

“உன்னுடைய ஸைரந்திரியைப் பார்த்தது முதல் எனக்குத் தூக்கமில்லை, சுகமில்லை. அவளை எப்படியாவது என்னிட ம் சேர்ப்பிக்க வேண்டும்” என்று சகோதரியைக் கெஞ்சினான். 

சொல்ல வேண்டிய புத்திமதியும் நல்ல வார்த்தைகளும் அவள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். கீசகன் கேட்கவில்லை. முடிவில் சுதேஷ்ணை கீசகன் சொன்னதை ஒப்புக்கொண்டாள். இருவருமாக ஒரு யுக்தி செய்து திரெளபதியை வலையில் சிக்க வைக்கத் தீர்மானித்தார்கள். 

ஒருநாள் இரவில் கீசகனுடைய வீட்டில் விசேஷமான பண யாரங்களும், மதுபானமும் தயார் செய்து, அந்தச் சமயம் சுதே ஷ்ணை ஸைரந்திரியைக் கூப்பிட்டு, “நீ தம்பி கீசகன் வீட்டுக்குப் போய் இன்று அங்கே பக்குவமாக இருக்கும் மதுபானத்தை இந் தப் பாத்திரம் நிறைய வாங்கி வா” என்று ஒரு அழகிய பொன் கலசத்தை அவளிடம் கொடுத்தாள் 

“நான் இந்த நேரத்தில் கீசகன் வட்டுக்குத் தனியாகப் போக மாட்டேன். எனக்குப் பயமாக இருக்கிறது. வேறு யாரையாவது அனுப்புங்கள். எத்தனையோ வேலைக்காரிகள் இருக்கிறார்களே!” என்று சொல்லிப் பலவாறாகத் திரௌபதி வேண்டிக்கொண்டாள். 

சுதேஷ்ணை கேட்கவில்லை. கோபித்துக் கொண்டவள் போல் நடித்து, “நீயே போக வேண்டும். வேறு யாரையும் அனுப்ப முடி யாது’ என்று திரௌபதியை அனுப்பினாள். 

கீசகன் வீட்டில் அவள் பயந்தவாறே நடந்தது. காமவெறி கொண்ட அந்த நீசன் திரௌபதியைக் கெஞ்சியும் வற்புறுத்தியும் தொந்தரவு செய்தான். 

“ராஜகுலத்தைச் சேர்ந்த நீ கீழ் ஜாதியைச் சேர்ந்த என்னை ஏன் விரும்புகிறாய்? அதர்மத்தில் ஏன் பிரவேசிக்கிறாய்? கணவனைப் படைத்த ஒரு ஸ்திரீயை ஏன் தீண்டப் பார்க்கிறாய்? நசித்துப் போவாய். எனக்குக் காவலாக இருக்கும் கந்தர்வர்கள் கோபங் கொண்டு உன்னை வதம் செய்து விடுவார்கள்!’ என்று அவன் விரு ப்பத்தை மறுதளித்தாள். 

எவ்வளவு வற்புறுத்தியும் தமரளபதி கேளாததைக் கண்டு கீசகன் அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். திரௌபதி தன் கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே போட்டு விட்டு அவனை உதறித் தள்ளி வெளியே ஓடினாள். கீசகன் கோபம் மேலிட்டு அவளைப் பின் தொடர்ந்தான். ராஜசபையண்டை முறையிட்டுக் கொண்டு ஒடின் அவளை அதிகாரத்தினாலும் செல்வாக்கினாலும் மதம் கொண்டு யாரையும் லட்சியம் செய்யாமல்,”சீ!தாசி!” என்று சொல்லிப் பல பேரும் பார்க்கக் காலால் உதைத்தான். விராடனைத் தன்வசப்படுத்திக் கொண்டு சகல அதிகாரமும் பெற் றிருந்த சேனைத் தலைவனைக் கண்டு எல்லாருக்கும் பயம். அவன் அக்கிரமத்தைத் தைரியமாக நின்று கண்டிக்க யாரும் முன்வர வில்லை. 

திரௌபதியானவள் தனக்கு நேர்ந்த அவமானத்தையும் திக் கற்ற நிலையையும் நினைத்துத் துயரமும் கோபமும் தாங்க முடி யாமல், தாங்கள் இன்னார் என்று உலகத்துக்குத தெரிந்து விட் டால் நேரிடும் விபத்தையும் பொருட்படுத்தாமல், இரவில் பீமன் படுத்திருந்த இடத்திற்குப் போய் அவனை எழுப்பினாள். 

”இதை என்னால் பொறுக்க முடியவில்லை. நீசனான இந்தக் கீசகனை உடனே வதம் செய்வாய். உங்களுடைய பிரதிக்ஞையை காப்பாற்றுவதற்காக நான் விராடனுக்குச் சந்தனம் அரைத்துத் தரும் தாசியாக இருந்து வருகிறேன். மதிப்புக்குரியவரல்லாதவர் களுக்குப் பணிவிடை செய்து வருகிறேன். என் கைகளைப் பார்!” என் று சொல்லிச் சந்தனம் அரைத்துத் தழும்பேறிய கைகளைப் பீம் னுக்குக் காண்பித்தாள். விருகோதரன் அவள் கைகளை முகத்தில் ஒத்திக்கொண்டான். 

அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, “கல்யாணி! நான் இனி யுதிஷ்டிரனுடைய பிரதிக்ஞையையும் அனுசரிக்க மாட்டேன். தனஞ்சயனுடைய யோசனையையும் கவனிக்கமாட் டேன். நீ என்ன சொல்லுகிறாயோ அதைச் செய்வேன். கீச்சனை அவன் சகல பந்துக்களோடு இப்போதே கொல்வேன்!” என்று எழுந்தான். 

பிறகு திரௌபதி அவசரப்படவேண்டாம் என்று பீமனை எச் சரிக்கை செய்து தடுத்தாள். இருவரும் ஒரு யோசனை செய்து முடித்தார்கள். கீசகனை ஏமாற்றி இரவில் தனியாக நடன சாலை யில் யாருமில்லாத இடத்திற்கு வரச் சொல்லி அவனை அங்கே வதம் செய்து விடுவதென்று தீர்மானித்தார்கள். 

மறுநாள் விடிந்ததும். கீசகன் திரௌபதியைப் பார்த்து, ஸைரந்தரி! அரசனுக்கெதிரில் உன்னை நான் கீழே தள்ளிக் காலால் உதைத்தேன். உனக்கு ஒரு ரக்ஷகனும் முன வரவில்லை. பெயருக்கு மாத்திரம் இந்த விராடன் மத்ஸ்ய தேசத்துக்கு அரசன. உண்மையில் சேனாதிபனாகிய நான்தான் அரசன் என்று அறிவாய். என்னைச் சுகமாக வந்து அடை. நீ மகாராணியைப்போல் எல்லா போகங்களையும் அனுபவிப்பாய்! உனக்கு நான் தாசனாக இருப் பேன்” என்று மறுபடியும் காமா தூரனாக வற்புறுத்தினான். 

திரௌபதி அவனுக்கு இணங்கிவிட்டதாகக் காட்டிக் கொண்டு, கீசக! நான் சொல்லுகிற வார்த்தையை உண்மையாக நம்பு. என்னுடன் நீ சேருவதை உன்னுடைய தோழர்களாவது சகோதரர்களாவது யாரும் அறியக் கூடாது. நான் பழிக்குப் பயந் தவள். யாருக்கும் தெரியாமல் ரகசியத்தைக் காப்பாற்றுவதாகச் சபதம் செய்தாயானால் உனக்கு நான் வசப்படுவேன்” என்றாள் 

கீசகன் மகிழ்ச்சி பரவசமாகிவிட்டான். அவள் இருக்கும் வீட்டுக்குத் தனியாகத் தான் அன்று வருவதாக ஒப்புக்கொண்டான். 

“நடனசாலையில் பகலில் பெண்கள் நர்த்தனம் பழகுகிறார். கள். இரவில் அவரவர்கள் இருக்குமிடத்திற்குப் போய் விடுகிறார் கள். அங்கே யாரும் இருக்கமாட்டார்கள். இன்றிரவு அந்த இடத் திற்கு நீ வந்து சேர். நான் கதவுகளைத் திறந்து வைத்து அங்கே படுத்திருப்பேன். அவ்விடத்தில் நான் உனக்கு உடன்பட்டவளா வேன்” என்றாள். 

கீசகன் ஆனந்தத்தில் மூழ்கினான். 

அன்றிரவு ஸ்நானம் செய்து நிறைய அலங்காரங்கள் செய்து கொண்டு கதவு தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைக்கப்படடிரு ந்த நர்த்தன சாலைக்குள் யாருக்கும் தெரியாமல் மெதுவாகப் பிரவேசித்தான். 

ஒரு கட்டிலில் யாரோ படுத்திருந்ததாகக் காணப்பட்டது. அது ஸைரந்திரியாக இருக்கவேண்டும் என்று எண்ணினான். கட்டி லண்டை இருட்டில் சென்றான். கட்டிலின் மேல் மெல்லிய ஒரு வெண்பட்டு வஸ்திரம் தரித்துக் கொண்டு படுத்திருந்த பீமசேன னனை ஸைரந்தரி என்று எண்ணிக் கையினால் மெதுவாகத் தொட் டான். உடனே பீமன் எழுந்து சிங்கம் மானைப் பிடிப்பதுபோல் கீசகனைப் பிடித்துக் கீழே தள்ளினான். 

இருட்டில் இருவருக்கும் மல்யுத்தம் நடந்தது. இவன் ஸைர ந்தரியின் கந்தர்வர்களில் ஒருவன் என்றே கீசகன் எண்ணி னா 1) Gor. கீசகனும் பீமனைப் போலவே மிக்க பலசாலி. அந்தக் காலத்தில் பீமன், பலராமன், கீசகன் மூவர்களும் மல் யுத்தத்தில் சமப் புகழ் பெற்றவர்கள். வாலி சுக்ரீவர்களுடைய யுத்தத்தைப் போல் பீமனுக்கும் கீசகனுக்கும் போர் நடந்தது. 

முடிவில் பீமன் கீசகனைக் கொன்று அவன் உடலைக் கசக்கி ஒரே உருண்டைப் பிண்டமாக்கிவிட்டு, திரௌபதியிடம் விடை பெற்றுக் கொண்டு விரைவாக மடைப்பள்ளிக்குச் சென்று ஸ்நா னம் செய்து சந்தனம் பூசிக்கொண்டு திருப்தியுடன் படுத்துக் கொண்டான். 

திரௌபதி நர்த்தன சபைக் காவலாளிகளை எழுப்பி, “கீசகன் என்னை இம்சிக்க வந்தான். என்னுடைய நாதர்களான கந்தர் வர்கள் கீசகனை வதம் செய்து விட்டார்கள். அதர்ம வழியில் ஆசைகொண்ட உங்கள் சேனாதிபதி கந்தர்வர்களால் கொல்லப் பட்டு இறந்து கிடப்பதைப் பாருங்கள்’ என்று சொல்லி உருவம் தெரியாத சவமாகக் கிடக்கும் கீசகனைக் காண்பித்தாள், 

விராடனைக் காத்தது 

கீசக வதத்தின் பயனாக விராடனுடைய நகரத்தில் திரௌ பதியைக் கண்டு எல்லாருக்கும் பெரும் பயம. இவளோ அழகா யிருக்கிறாள். யாருமே இவளுடைய தோற்றத்தால் இழுக்கப்படு கிறார்கள். இவளுக்குக் காவலோ கந்தர்வர்கள். கண்ணெடுத்துப் பார்த்தாலும் குற்றமாகலாம். இது நகரத்தாருக்கும் அரணமனை யில் உள்ளவர்களுக்கும் பெரிய ஆபத்து கந்தர்வாகள் கோபம் கொண்டு ஏதேனும செய்து விடுவார்கள் இவளை நகரத்தை விட்டு வெளிப்படுத்தி விடுவதே நலம் என்று எண்ணி எல்லோரும் சுதேஷ்ணையைக் கேட்டுக் கொண்டார்கள். 

அம்மா! நீ ரொம்பப் புண்ணியசாலி. தயவு செய்து எங் கள் ஊரைவிட்டுப் போய்விடு. என்னிடம் இதுவரை நீ வேலை செய் தது போதும்” என்றாள் சுதேஷ்ணை திரௌபதியிடம். 

அஞ்ஞாதவாசத் தவணை இன்னும் ஒரு மாதமே இருந்தது. சுதேஷ்ணை சொன்னதைக் கேட்டு வருத்தம் மேலிட்டு திரௌபதி! என் மேல் கோபம் கொள்ள வேண்டாம். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. இன்னும் முப்பது நாள் பொறுத்திருங்கள். ஒரு மாதம் தீர்ந்ததும் என் பதிகளான கந்தர்வர்கள் காரியசித்தி அடைந்து விடுவார்கள். அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து விடுவேன். கந்தர்வர்கள் விராடராஜனுக்கும் உனக்கும் என் றென்றைக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். என்னைப் போகச் சொல்லாதே” என்றாள். 

திரௌபதிக்குக் கோபம் வருமே என்று சுதேஷ்ணையும் பயந்து அவள் சொல்லுக்கு இசைந்தாள். 

பன்னிரண்டு வருஷங்கள் முடிந்து அஞ்ஞாத வாச காலம் ஆரம்பமானது முதல் துரியோதன்னுடைய சாரணர்கள் அவன் கட்டளைப்படி அநேக தேசங்களிலும் கிராமங்களிலும் நகரங்களி லும் இடைவிடாமல் பாண்டவர்களைத் தேடினார்கள். இவ்வாறு பல மாதங்கள் சென்றன. பாண்டவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லையென்று சாரணர்கள் துரியோதனனிடம் தெரிவித்தார்கள். 

“மனுஷ்யேந்திரரே! ஜனசஞ்சாரமில்லாத இடங்களெல்லாம் பார்த்து விட்டோம். புதர்கள் நிறைந்த காடுகளிலும் பார்த்து விட்டோம். ஆசிரமங்களிலும் மலைச் சிகரங்களிலும் தேடி னோம். ஜனங்கள் நிறைந்திருக்கின்ற நகரங்களிலும் நன்றாக விசாரித்துத் தேடினோம். யாதொரு துப்பும் கிடைக்கவில்லை. அவர்கள் நசித்தே போய் விட்டார்கள் என்பது உறுதி” என்றார்கள். 

மிக்க பலவானான கீசகனை யாரோ கந்தர்வர்கள் ஒரு ஸ்திரீ விஷயமாகக் கொன்று விட்டார்கள், என்கிற விருத்தாந்தம் ஹஸ் தினாபுரத்துக்கும் வந்தது. கீசகனைக் கொல்லும் சக்தி வாய்ந்தவர்கள் உலகத்தில் இருப்பவர் மூவரே. அவர்களில் பீமன் ஒருவன். கீசகனைக் கொன்றவன் பீமனாகவே இருக்கலாம். கொலைக்குக் கார ணம் திரௌபதியாகவும் இருக்கலாம் என்று துரியோதனன் ஊகித் தான். இவ்வாறு அவன் சந்தேகித்ததைச் சபையிலும் சொன்னான்.

“விராட நகரத்தில் பாண்டவர்கள் மறைத்திருப்பதாக நான் எண்ணுகிறேன். விராட ராஜன் என்னிடம் சிநேகம் வைத்துக் கொள்ள மறுத்து வருகிறான். அவனுடைய தேசத்தை நாம் படை யெடுத்துப் போய்த் தாக்குவதே நல்லது. பசுக் கூட்டத்தைக் கைப் பற்றுவோம். அங்கே பாண்டவர்கள் இருந்தால், நிச்சயம் போரு க்கு வருவார்கள். பிரதிக்ஞை செய்யப்பட்ட காலத்திற்குள் அவர் களை நாம் கண்டுவிட்டால் மறுபடியும் பன்னிரண்டு வருஷ காலம் அவர்கள் வனம் போக வேண்டியதாகும். பாண்டவர்கள் அவ்வி டமில்லா விட்டாலும் நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை” என்றான். 

இவ்வாறு துரியோதனன் சபையில் சொன்னதும் திரிகர்த்த தேசாதிபதியான சுசர்மராஜன் எழுந்து தன் யோசனையைச் சொன் னான். “மத்ஸ்ய தேசத்து ராஜா எனக்கு விரோதியானவன். கீச கன் என்னை மிகவும் பாடுபடுத்தி இருக்கிறான். அவன் இறந்துவிட்ட யடியால் விராடனுடைய பலம் இப்போது குறைந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் விராடனை எதிர்த்துப் படையெடுத்துப் போக எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்றான். 

கர்ணன் இந்த யோசனையை ஆதரித்தான். பிறகு எல்லா ரும் சேர்ந்து முடித்த யோசனை, சுசர்மன் தன்னுடைய சேனை யைக் கொண்டு மத்ஸ்ய தேசத்தில் தென் பக்கத்திலிருந்து பிர வேசித்துத் தாக்க வேண்டியது. அப்போது விராடனுடைய சேனை யெல்லாம் சுசர்மனை எதிர்க்கச் செல்லும். அதன் பிறகு துரி யோதனன் கௌரவப் படையுடன் எதிர்பாராதபடி விராட நக ரத்தை வடக்கே தாக்குவதென்று தீர்மானித்தார்கள். 

சுசர்மன் விராடனுடைய தேசத்தில் தெற்கேயிருந்த பசுக் கூட்டங்களைக் கவர்ந்து தோட்டங்களையும் வயல்களையும் பாழா க்கினான். இடையர்கள் ஓடிப் போய் விராடனிடம் முறை யிட்டார்கள். விராடன் தன் மைத்துனன் கீசகன் இந்த ஆபத் துக் காலத்தில் இல்லையே என்று பரிதபித்தான். அச்சமயம் கங்க் கன், அதாவது யுதிஷ்டிரன், அரசனே! நீர் கவலைப்பட வேண் டாம், நான் சந்நியாசியாயிருந்தாலும் ஆயுதப்பயிற்சி பெற்றவன். நான் கவசம் பூண்டு ரதம் ஏறி உம்முடைய சத்துருக்களைத் துர த்தி விடுவேன். சமையற்காரனான வல்லனும் உமது குதிரைக் காரன் தாமக்கிரந்தியும் மாடுகளைப் பார்த்து வரும் தந்திரீபால னும் ரதங்கள் ஏறி நமக்குத் துணையாக வர உத்தரவிடும். அவர்க ளும் வீரர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுககெல் லாம் ரதங்களும் ஆயுதங்களும் தருவதற்கு உத்தரவு செய்வீராக” என்றான். 

விராடன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவ்வாறே உத்திரவிட் டுத் தேர்கள் தயாராயின. அருச்சுனனைத் தவிர மற்றப் பாண்டவர் கள் நால்வரும் விராடனுடைய சேனையுடன் சுசர்மனை எதிர்க்கச் சென்றார்கள். 

சுசர்மனுடைய சேனைக்கும் விராடனுடைய சேனைக்கும் கடும் போர் நடந்தது; இருதரப்பிலும் பலர் மாண்டார்கள். சுசர்மன் தன் துணையாளர்களுடன் விராடனை எதிர்த்து அவனுடையதேரைச் சூழ்ந்து கொண்டான். விராடன் தேரைவிட்டு இறங்கி யுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. சுசர்மன் விராடனை உயிரோடு பிடித்துத் தன் தேரில் ஏற்றி வைத்துக் கொண்டு வெற்றியுடன் சென்றான். விராடன் இவ்வாறு பிடிபட்டவுடனே மத்ஸ்யராஜ்ய சைன்யம் தைரியம் இழந்து சிதறி ஓட ஆரம்பித்தது. 

அப்போது யுதிஷ்டிரன் பீமசேனனுக்கு உத்தரவிட்டான்: ‘இனி நீ உபேட்சையாக இருத்தலாகாது. விராடனை விடுவித்துச் சிதறி ஓடும் மத்ஸய சேனைக்குத் தைரியம் உண்டாக்கி சுசர்மனை எதிர்க்க வேண்டும்” என்றான். 

யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னதும் பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கப் போனான். யுதிஷ்டிரன் அதைத் தடுத்து நீ உன் வழக் கப்படி மரத்தை எடுத்துச் சிம்மநாதம் செய்தாயானால் உன்னைக் கண்டுகொள்வார்கள். சாதாரண முறையில் தேரின் மேலிருந்தே வில்லையெடுத்து யுத்தம் செய்’ என்றான். 

அவ்வாறே பீமன் தேர் ஏறி எதிரிகளைத் தாக்கி விராடனை விடுவித்துச் சுசர்மனையும் சிறைப்படுத்தினான் டயந்தோடிய மத் ஸ்ய தேசத்துச் சேனை மறுபடி ஒழுங்காக நின்று போர் புரிந்து சுசர்மனுடைய படையை வென்றது. 


சுசர்மன் தோல்வியடைந்தான் என்கிற செய்தி நகரத்து க்கு எட்டியவுடன் ஊராரெல்லாம் நகரத்தை அலங்கரித்து வெற் றியுடன் திரும்பிவரும் அரசனை எதிர்கொள்ளச் சென்றார்கள். 

இவ்வாறு விராட நகரம் அரசனை எதிர் நோக்கிக் கொண்டிரு ந்த பொழுது திடீர் என்று நகரத்துக்கு வடக்கிலிருக்கும் இடைச் சேரிகளிலுள்ள பசுக் கூட்டங்கள் துரியோதன்னுடைய பெருஞ் சேனையால் பீடிக்கப்பட்டன. கௌரவ சேனை அட்டகாசம் து கொண்டு லக்ஷிக்கணக்கான பசுக்களை வளைத்து ஓட்டிச் சென்றது. மாட்டுக்காரர்களுடைய தலைவன் நகரததுக்கு ஓடிவந்து விரா டனுடைய குமாரன் உத்தரனைக் கண்டு முறையிட்டான். 

‘ராஜகுமாரனே! கௌரவர்கள் நம்முடைய பசுக்களை ஒட் டிக் கொண்டு போகிறார்கள். விராட ராஜன் தெற்கே திரிகர்த் தர்களை எதிர்க்கச் சென்று விட்டான். எங்களுக்கு யாரும் காப்பு இல்லாமல் தவிக்கிறோம். அரசனுககுப் புத்திரனாகிய நீ தான் வந்து பசுக்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும். குலத்தின் கௌரவத் தைக் காப்பாற்றுவாயாக!’ என்றான். 

இவ்வாறு இடைச்சேரித் தலைவன் மகாஜனங்களுக்கும் அந் தப்புர ஸ்திரீகளுக்கும் எதிரில் உத்திரனிடம் முறையிட்டபோது இராஜகுமாரனும் உற்சாகம் அடைந்தான். “தேரை ஓட்டக்கூடிய ஒரு சாரதி இருந்தானானால் நான் ஒருவனாகச் சென்று பசுக்களைத் திருப்பிக்கொண்டு வந்து சேருவேன். நான் போய்ச்செய் யும் யுத்தத்தைக் கண்டு இவன் அருச்சுனனோ என்று எல்லோரும் திகைப்பார்கள்! என்றான் 

இவ்வாறு உத்தரன் சொன்னபோது திரௌபதியானவள் அந்தப்புரத்தில் இருந்தாள், அவள் உத்திரையிருந்த விடத்திற்கு ஓடிச் சென்று, “ராஜகுமாரியே! தேசத்துக்கு ஆபத்து நேரிட்டி ருக்கிறது. கௌரவப்படை வடக்கே நகரத்தைத் தாக்கி வருள் தாகவும் மத்ஸ்ய தேசத்துப் பசுக்கள் பிடிபட்டதாகவும் கோபா கள் இளவரசனிடம் ஓடி வந்து முறையிடுகிறார்கள். உத்தரனுக்குச் சாரதி வேண்டும். அதனால் வேலை- தடைபட்டிருக்கிறது. 

கன்னளை அருச்சுனனுக்குச் சாரத்தியம் செய்திருக்கிறாள். நான் பாண்டவர்களுடைய அந்தப்புரத்தில் வேலையிலிருந்தபோது இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிருகன்னளை அருச் சுனனிடம் வில்வித்தையும் பயின்றிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். இவளை நீ உடனே உத்தரனுக்குச் சாரதியாகப் போகக் கட்டளையிட வேண்டும்” என்றாள். 

உத்தரை தன் சகோதரனிடம் சென்றாள். “தேரோட்டுவ தில் பிருகன்னளை பெரிய சாமர்த்தியசாலி என்று தெரியவருகி றது. அவளை அழைத்துக்கொண்டு நீ போய் ஊரைக் காப்பாற்று. இந்தப் பிருகன்னளை பாண்டவ வீரனான அருச்சுனனுக்குத் தேரோட்டியா யிருந்திருக்கிறாளாம்; நம்முடைய ஸைரந்திரி சொல்லு கிறாள்” என்றாள். 

“சரி” என்று உத்தரன் சொன்னவுடன் உத்தரை நடனசாலை க்கு ஓடிப்போய் அருச்சுனனாகிய பிருகன்னளையிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினாள். 

“பிருகன்னளையே! என் பிதாவினுடைய தனத்தையும் பசுக் களையும் கௌரவர்கள் கவர்ந்துகொண்டு போகிறார்கள். அரசன் நகரத்தில் இல்லாத சமயம் பார்த்து இந்தத் துஷ்டர்கள் வந்திருக்கி றார்கள். நீ அருச்சுனனுக்கு ரதம் ஓட்டியிருக்கிறாயென்றும் யுத்தப் பயிற்சி பெற்றிருக்கிறாய் என்றும் ஸைரந்திரி சொல்லு றாள். ராஜகுமாரனுக்கு நீ சாரதியாகச் செல்லவேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள் 

அருச்சுனன் கொஞ்ச நேரம் தயங்குவதைப்போல் காட்டிக் கொண்டான். பிறகு ஒப்புக் கொண்டான். கவசத்தைப் பெற்றுக் கொண்டு ஏதொன்றும் தெரியாதது போலத் தலைகீழாக அணிந்து கொள்ளப் போனான். அந்தப்புரத்திலிருந்த ஸ்திரீகள் அதைக் கண்டு சிரித்தார்கள். இவ்வாறு கொஞ்சநேரம் வேடிக்கை செய்த பிறகு பிருகன்னளை குதிரைகளைப் பிடித்துத் தேரில் பூட்டும் போது தேர்ச்சி பெற்ற சாரதியைப் போலவே தோன்றினாள்.கடி வாளம் பிடித்துக் குதிரைகளையும் நன்றாகவே ஓட்டினாள். உத்தரனும் ஏறிச் சிம்மக்கொடி பறக்க ரதம் சென்றது. 

”இராஜகுமாரன் வெற்றி பெறுவான். எதிரிகள் அணிந்தி ருக்கும் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டு வந்து வெற்றிப் பரி சாக உங்களுக்கு எல்லாம் தருவேன்” என்று பிருகன்னளை ஸ்திரீ களுக்குச் சொல்லிய போது அந்தப்புரப் பெண்கள் எல்லோரும் ஐயகோஷம் செய்தார்கள். 

உத்தரன்

பிருகன்னளையைத் தேர்ப் பாகனாக அமைத்துக் கொண்டு விராடனுடைய மகன் உத்திரன் நகரத்திலிருந்து உற்சாகமாகவே புறப்பட்டான். வேகமாக ஓட்டு! கெளரவர்கள் பசுக்களை வளை த்து ஓட்டிக் கொண்டு போகும் திசையை நோக்கிச் செலுத்து” என்று சொன்னான். 

குதிரைகளும் வேகமாகச் சென்றன. கெளரவ சேனை கண்ணுக்குத் தென்பட்டது. ஆகாயம் அளாவிய புழுதிக் குப் பின் நான்கு திசைகளையும் அடைத்துக்கொண்டு கடல்போல் பரவி நின்றது அந்தச் சேனை. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் துரியோதனனும் கர்ணனும் அணி வகுத்து நடத்தும் பிரம்மாண்டமான படையைக் கண்டான். 

அப்போது உத்திரனுக்குத் தன்னையும் அறியாமல் நடுக்கமும் மயிர்க்கூச்சமும் உண்டாகி,பயத்தினால் இரண்டு கண்களையும் கைகளால் மூடிக் கொண்டான். அவனால் தாங்க முடியவில்லை. 

“இவ்வளவு பெரிய படையை நான் எவ்வாறு எதிர்ப்பேன்? கௌரவர்களோடு போர் புரிவதற்கு நான் திறமையுள்ளவன் அல்ல. என்னுடைய பிதாவான அரசர் நம்முடைய சேனை முழுவ தையும் திரட்டிக் கொண்டு சுசர்மனை எதிர்க்கப் போய் விட்டார். நகரத்தைக் காப்பின்றிச் செய்து விட்டார். எனக்குப் படையு மில்லை; படைத் தலைவர்களுமில்லை. ஒருவிதத் துணையுமில்லை. உலக பிரசித்தியடைந்திருக்கும் இந்த வீரர்களை நான் எவ்வாறு எதிர்ப்பேன்? பிருகன்னளையே! தேரைத் திருப்பு!” என்றான். 

பிருகன்னளை சிரித்தாள். “உத்திரனே! ராஜகுமாரனே! ஸ்தி ரீகளுக்கு முன் தற்புகழ்ச்சி பேசிவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு யுத்தத்துக்குப் புறப்பட்டாய். பிரதிக்ஞை செய்துவிட் டுத் தேரின் மீதேறினாய். ஊர் ஜனங்கள் உன்னை நம்பியிருக்கிறார் கள். ஸைரந்திரியும் என்னைப் புகழ்ந்து நீயும் ஒப்புக் கொண்டு நான் உன்னுடன் வந்து விட்டேன். பசுக்களை மீட்காமல் ஊர் திரும்பினோமானால் எல்லோரும் பரிகசிப்பார்கள்! நான் திரும்ப முடியாது. நீ உறுதியாக நின்று யுத்தம் செய். பயப்பட வேண்டாம் என்று சொல்லித் தேரை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டு போனான். பகைவர்களுடைய சேனைக்கு அருகே வந்ததும் உத்தரனுடைய பயம் முன்னைவிட அதிகரித்தது. 

“முடியவே முடியாது. கௌரவர்கள் பசுக்களை இஷ்டப்படி கொண்டு போகட்டும். ஸ்திரீகள் என்னைப் பரிகாசம் செய்தாலும் செய்யட்டும். யுத்தத்தினால் என்ன பயன்? ஒரு லாபமுமில்லை. நான் திரும்பித்தான் போவேன். நீ தேரைத் திருப்பு. இல்லாவிட் டால் நானே தனியாக நடந்து போவேன்’ என்று சொல்லி உத்த ரன் அம்புகளையும் வில்லையும் எறிந்து விட்டுத் தேரினின்று கீழே குதித்து, பயத்தினால் ஆவேசமாகிப் பைத்தியக்காரனைப் போல் நகரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். 

இது கதையில்தான் நடக்கும், உத்தரன்தான் இப்படிச் செய் தான் என்று யாரும் எண்ணக்கூடாது. இப்போது நடக்கும் யுத்த ங்களிலும் கூட இம்மாதிரியே அநேக வீரர்களுக்கு முதன் முதலில் கிலி பிடித்து அடக்கமுடியாத பயம் மேலிடுவது உண்டு. பல யுத்த வீரர்கள் இதைப் பற்றி எழுதியும் சொல்லியுமிருக்கிறார்கள். பயம் என்பது ஒரு தனிப்பட்ட உடல்வேகம். வீரர்களும் அதனு டன் போராடியிருக்கிறார்கள். முடிவில் அதை ஆத்மசக்தியினால் துரத்திவிட்டு வெற்றியோடு விளங்குகிறார்கள். 

“ராஜகுமாரா! நில்! ஓடாதே! க்ஷத்திரியன் இவ்வாறு செய்ய லாகாது” என்று சொல்லி ஓடும் உத்தரனை அருச்சுனன் துரத்திக் கொண்டு போனான் தொங்கும் தலைப் பின்னல் ஆட உடுத்தியிருந்த புடவையும் வீசி வீசி ஆட பிருகன் களையானவள் உத்தரனைத் துரத்திக் கொண்டு போனாள்! உத்தரன் அவள் கைக்குச் சிக்காமல் புலம்பிக் கொண்டு இங்கு மங்கும் ஓடினான். எதிரில் கெளரவ சேனையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தக் காட்சி மிக வியப்பாகவும் வேடி ‘க்கையாகவும் இருந்தது. 

“இது யார்? புருஷனைப்போலும் காணப்படுகிறாள். ஆனால் ஸ்திரீ வேஷமாகவும் இருக்கிறது. ஒருவேளை அருச்சனனாக இருக்கலாமோ?” என்று துரோணர் சந்தேகித்தார். 

கர்ணன் “இவனாவது அருச்சுனனாவது? இருந்தாலும் என்ன? மற்றப் பாண்டவர்கள் இல்லாமல் அருச்சுனன் மட்டும் வந்து நம்மை என்ன செய்ய முடியும்? விராட ராஜன் தன் குமார னைத் தனியாக ஊரில் விட்டுவிட்டுச் சேனை முழுவதையும் கூட் டிக்கொண்டு சுசர்மனோடு யுத்தம் செய்யப் போய்விட்டிருக்கி றான். சிறுவனான ராஜகுமாரன் அந்தப்புரத்தில் பணிவிடை செய் யும் அலியைத் தனக்குச் சாரதியாக அமைத்துக் கொண்டு தனி யாக வந்திருக்கிறான். இவ்வளவே விஷயம்” என்றான். 

“என்னைப் பிடிக்க வேண்டாம். உனக்குப் பணம் தருவேன். புடவைகள் தருவேன். வேண்டியதையெல்லாம் உனக்குக் கொடுப் பேன். நான் ஊருக்குத் திரும்பிப் போகிறேன். நீ நல்லவள். என்னை விட்டுவிடு. என் தாயாருக்கு நான் ஒருவனே மகன். நான் சிறுவன். தாயாரின் பக்கத்தில் படுத்து வளர்ந்தவன். எனக்குப் பயமாயிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் உத்தரன் பிருகன்னளைக்குச் சிக்காமல் இங்கு மங்கும் ஓடினான்.. 

பிருகன்னளையும் அவனை விட்டபாடில்லை. துரத்திப் பிடித்து அவனைத் தேரின் மேல் பலாத்காரமாக ஏற்றினாள். 

“அறிவின்மையால் வீரியம் பேசினேன். ஐயோ! நான் என்ன செய்வேன்? என் விதியோ!” என்று உத்தரன் அழுதான்.

“ராஜகுமாரனே! பயப்பட வேண்டாம். இந்தக் கௌரவர் களோடு போர் புரிவேன். குதிரைகளை மட்டும் நீ பார்த்துக்கொள், நீ தேரை ஓட்டினாயானால் மீதி எல்லாம் நான் செய்து முடிப்பேன். உனக்கு ஜயமுண்டாகும். நிச்சயமாகச் சொல்லுகிறேன்.ஓடிப் போவதனால் உனக்கு ஒரு நன்மையும் உண்டாகாது.. என்னுடைய முயற்சியால் இந்தச் சேனை தோல்வியடைந்து சிதறி ஓடும். நான் உன்னுடைய பசுக்களை மீட்டுக் கொண்டு வருவேன். உனக்குப் புகழ் உண்டாகும்” என்று சொல்லி அருச்சுனன் உத்தரனை ரதத் தின் மேல் ஏற்றிக் குதிரைக் கடிவாளங்களை அவன் கையில் கொடு த்தான். மயானத்திலிருக்கும் வன்னிமரத்துப் பக்கம் தேரை நடத்; தச் சொன்னான், 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துரோணர் இவன் அருச்சுனனே என்று மனத்தில் தீர்மானித்துப் பீஷ்மருக்கும் குறிப் பாகச் சொன்னார். துரியோதனன் கர்ணனைப் பார்த்து, ”இவன் யாராயிருந்தால் நமக்கு என்ன கவலை? பார்த்தனாக இருந்தால் நம்முடைய காரியம் நிறைவேறினதாகவே முடியும். பாண்டவர் கள் பன்னிரண்டு வருஷம் காட்டுக்குப் போகவேண்டியதாகும் என்றான். 


வன்னி மரத்தண்டை வந்ததும் பிருகன்னளை உத்தரனைப் பார்த்து, ‘விராட புத்திரனே! உனக்கு ஜயம்! குதிரைகளை விட்டு விட்டு இறங்கி இந்த மரத்தின் மீது ஏறி மேலே கட்டியிருக்கும் ஆயுதங்களைக் கொண்டுவா” என்றாள். 

உத்தரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திகைத்து நின்றான். மறுபடி அருச்சுனனான அந்தப் பிருகன்னளை, “ரதத்திலிருக்கும் இந்த ஆயுதங்கள் எனக்குப் போதியவை அல்ல. இந்த மரத்தின் மேல் பாண்டவர்களுடைய திவ்விய ஆயுதங்கள் கட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. அதை எடுத்து வா” என்றாள். 

“இந்த வன்னி மரத்தில் கட்டித் தொங்குவது வேடக் கிழவி யின் சவம் என்றல்லவா சொல்லுகிறார்கள்? சவத்தை நான் எவ்வாறு தொடுவேன்? இந்த மாதிரியான காரியத்தை என்னைச் செய்யச் சொல்லுகிறாயே!” என்றான் உத்தரன் மிக்க வருத்தத்துடன். 

“கட்டித் தொங்குவது சவமல்ல, உத்தரனே! அது பாண் டவர்களுடைய ஆயுதங்கள் என்பது எனக்குத் தெரியும். தைரிய மாக மரத்தின்மீது ஏறி அதைக் கொண்டுவா! தாமதம் செய் யாதே!” என்றான் அருச்சுனன். 

தடுத்து ஒன்றும் செய்ய முடியாதவனாகி உத்தரன் பிருகன் னளை சொன்னபடி மரத்தின்மீது ஏறி, கட்டியிருந்த மூட்டையை அருவருப்புடன் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினான். தோல் மூட் டையை அவிழ்த்ததும் சூரியன் போல் பளபளவென்று பிரகாசித் துக் கொண்டு ஆயுதங்கள் காணப்பட்டன. 

உத்தரன் அவற்றின் ஒளியைக் கண்டு பிரமித்துக் கண்களை மூடிக்கொண்டான். பிறகு தைரியமடைந்து மகிழ்ச்சியோடு அவ ற்றையெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். அந்த ஸ்பர் சத்தினாலேயே உத்தரன் வீரியத்தை அடைந்தான். 

”சாரதியே! இது என்ன ஆச்சரியம்? இந்த விற்களும் அம்பு களும் கத்திகளும் பாண்டவர்களுடையன என்கிறாயே! அவர்கள் ராஜ்யத்தை இழந்து கானகம் சென்று காணாமல் மறைந்தார்களே? பாண்டவர்களை நீ அறிவாயா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று உற்சாகமாகக் கேட்டான். 

அப்போது அருச்சுனன் விராடன் மகனுக்குத் தான் யாரென் பதையும், தன் சகோதரர்களைப் பற்றியும் துரௌபதியைப் பற்றி யும் எல்லாம் சொன்னான். அரசனு க்குப் பணிவிடை செய் ப்து வந்த கங்க்கரே தருமபுத்திரர். உன் பிதாவுக்கு ருசியான ஆகார வகைகளைப் பக்குவம் செய்து வந்த சமையற்கார வல்லனே பீமசேனன்! எவளை அவமானப்படுத்தினதினால் கீசகன் இறந்தானோ அந்த ஸைரந்திரியே புகழ்பெற்ற பாஞ் சாலி என்று அறிவாய்! குதிரைகளைக் கட்டுகிற தாமக்கிரந் தியும், பசுக்களைக் காக்கும் தந்திரீபாலனும் நகுல, சகதேவர்கள் என்றறிவாய். நானே. தனஞ்சயன்! நீ பயப்பட வேண்டாம். ராஜ குமாரனே! என்னுடைய வீரியத்தை இப்போது பார்ப்பாய். பீஷ்ம ரும் துரோணரும் அசுவத்தாமரும் பார்த்துக் கொண்டிருக்க இந் தக் கெளரவ சேனையைத் தோற்கடித்துப் பசுக்களை மீட்டுக் கொண்டு வருவேன். நீயும் புகழ்பெறுவாய்” என்றான். 

 அப்போது உத்தரன் கைகூப்பி வணங்கி “பார்த்தனே! நான் பாக்கியவான் ஆனேன். புகழ் பெற்ற தனஞ்சயனையா நான் இப்போது என் கண்களால் பார்க்கிறேன்? விசயனா என்னை வீரனாக்கினான்! அறியாமையால் செய்யப்பட்ட என் பிழையைப் பொறுக்க வேண்டும்” என்றான். 

பெருஞ்சேனையைப் பார்த்து உத்தரன் பயந்து போகாமலிரு க்கவும் அவனுக்குப் பூரண தைரியம் உண்டாவதற்காகவும். அருச்சுனன் தான் செய்த பல வீரியச் செயல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனான். பிறகு கௌரவ சேனையின் முன்  ே தேரை நிறுத்திக் கீழே இறங்கிக் கடவுளை வணங்கிக் கையி லுள்ள சங்கு வளையல்களைக் கழற்றி விட்டுத் தோல் கையுறைகளைப் போட்டுக் கொண்டான். தொங்கும் தன் தலை மயிரைத் தூக்கி வஸ்திரத்தினால் கட்டி முடிந்து கொண்டு, கிழக்கு முகமாக நின்று, அஸ்திரங்களைத் தியானம் செய்து விட்டுத் தேரில் ஏறிக் காண்டீ பத்தை ஏந்தினான். அதில் நாண் ஏற்றி மூன்று தடவை இழுத்து ட்டான். அதனாலுண்டான பேரொலி எட்டுத் திக்குகளிலும் எதிரொலி உண்டாக்கிற்று. கெளரவர்களுடைய சேனையிலிருந்த வீரர்கள் அதைக் கேட்டதும், இது காண்டீபம்!” என்று கத்தி னார்கள். அருச்சுனன் தன் உருவம் நன்றாக விளங்கத் தேரின் மேல் நின்று தேவதத்தம் என்கிற தன்னுடைய சங்கை வாயில் வைத்து ஊதினான். கெளரவப்படை நடுங்கிற்று. 


பாண்டவர்கள் வந்து விட்டார்கள். என்று சேனை முழுதும் பரபரத்தது. 

அந்தப்புரப் பெண்களின் முன் சூரனைப் போல் பேசி, சேனையைக் கண்டதும் பயந்து ஓடிய உ உத்தரனுடைய கதை பாரதத்தில் அமைந்திருப்பது ஹாஸ்யத்திற்காக மட்டிலுமல்ல. 

குணங்களைப் படைத்தவர்கள் அத்தகைய குணங்கள் இல்லா தவர்களைப் பார்த்து வெறுப்பது மனித சுபாவம். வீரியம் படை த் தவர்கள் வீரியம் காட்ட முடியாமல் பயப்படும் ஜனங்களைப் பார் த்து இகழ்வது சகஜம். ஆனால் தனஞ்சயன் அவ்வாறு செய்யவில்லை. மகாத்மாவும் உண்மை வீரனுமான அவன் உத்தரனுடைய நிலை யைக் கண்டு அவனுக்கு வேண்டியதைச் செய்து அவனையும் வீரனா க்கினான். தான்படைத்த தைரியத்துக்குத் தன் பிறவிக் குணமே காரணம் என்று அறிந்து அகம்பாவத்தை அகற்றிய அருச்சுனன், தைரியம் இழந்த உத்தரனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து அவனுக்கும் புகழ் சம்பாதித்துக் கொடுத்தான். 

இதுவே தனஞ்சயனுடைய தனிப்பண்பு. உன்னுடைய சக்தியை அளவுகடந்து உபயோகிக்க மாட்டான். கிட்டிய சௌகரியங்களைப் பயன்படுத்திக் கொண்டு வெறுக்கத்தக்க செயல் களை அருச்சுனன் ஒருநாளும் செய்ய மாட்டான். அவன் பெற்ற பல பெயர்களில் பீபத்ஸு என்பதும் ஒரு பெயர். தகாத செயல் களைச் செய்யமாட்டான்; கூச்சப்படுவான் என்பது அதன் பொருள். 

அருச்சுனனால் வீரனாக்கப்பட்ட உத்தரன் பிறகு பெரிய குருக்ஷேத்திர யுத்தத்தில் யானை மேல் சென்று சல்யனை எதிர்த்து வீர சுவர்க்கமடைந்தான் என்பது பின்னால் சொல்லப்படும். 

பிரதிக்ஞை முடிந்தது 

தனஞ்சயனுடைய போர்த் தேர் பூமி அதிர முன்சென்றது. காண்டீபத்தின் நாணொலியைக் கேட்ட கௌரவப் படையிலுள்ள வீரர்களுக்கு நெஞ்சு பதைத்தது. 

“சேனையை நன்றாக அணிவகுத்துக் கொண்டு ஒன்று கூடிக் கவனமாகப் போர் புரிய வேண்டும். அருச்சுனன் வந்து விட்டான்” என்றார் துரோணர். 

துரோணருடைய கவலையும் மனக்கலக்கமும் துரியோதன னுக்குப் பிடிக்கவில்லை.”ஆட்டத்தில் தோல்வியடைந்த பாண் டவர்கள் காட்டில் பன்னிரண்டு வருஷமும் அதற்கு மேல் ஒரு வருஷம் யாராலும் அறியப்படாமல் வசித்து முடிக்க வேண்டும்” என்பது பிரதிக்ஞை. பதிமூன்றாவது வருஷம் இன்னும் முடிய வில்லை. அதற்கு முன்னதாக அருச்சுனன் அறியப்பட்டான். ஆத லால் நமக்கு என்ன பயம்? பாண்டவர்கள் எப்படியும் மறுபடி பன் னிரண்டு வருஷம் வனவாசம் செய்யப்போக வேண்டும். துரோ ணர் வீணாகப் பயப்பட்டுச் சாகிறார். இது பண்டிதர்களுடைய சுபா வம். பிறருடைய குற்றங்களைத் தேடி எடுத்துக் காட்டுவதிலேயே அவர்கள் எப்போதும் தங்கள் திறமையைக் காட்டுவார்கள். இவர்களைப் பின்புறத்தில் நிறுத்திவிட்டு நாம் முன்னின்று போரை நடத்துவோம்” என்று கர்ணனைப் பார்த்துச் சொன்னான். 

கர்ணனும் துரியோதனனுடன் சேர்ந்து ‘இந்தச் சேனையிலு ள்ள போர் வீரர்கள் போரில் மனத்தைச் செலுத்தாமல் பயத்தால் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். நம்மை நோக்கி வரு தேரில் வில்லைப் பிடித்து நிற்பவன் அருச்சுனன் என்கிறீர்கள். அவன் பரசுராமனேயானாலும் நமக்கு என்ன பயம்? நா ன் ஒருவனே இவனைத் தடுப்பேன். துரியோதனனுக்கு நான் அந்தக் காலத்தில் செய்த பிரதிக்ஞையை இப்போது தீர்க்கப் போகி றேன். கௌரவ சேனையும் எல்லா வீரர்களும் சும்மா நின்றாலும் நிற்கட்டும். அல்லது, அவர்கள் மத்ஸ்ய ராஜனுடைய பசுக்களை ஒட்டிக்கொண்டு போகட்டும். நான் மட்டும் நின்று இந்தப் பார்த்தனை எதிர்ப்பேன்” என்று வீரியம் பேசினான். 

கிருபாசாரியர் கர்ணன் பேசியதைக் கேட்டு, இது சுத்த மடத்தனம்’ என்றார். “பார்த்தனை நாம் எல்லோரும் சேர்ந்தே எதிர்த்துப் போர் புரிய வேண்டும். நாம் அறுவரும் அவனை நான்கு புறத்திலும் சூழ்ந்து கொண்டால்தான் நாம் தப்புவோம். நீ தனியாகச் சாகசம் செய்யாதே” என்றார். 

கர்ணனுக்குக் கோபம் வந்து விட்டது. “ஆசாரியருக்கு அருச்சுனனைப் புகழ்வதில் எப்போதும் சந்தோஷம். அவனுடைய பலத்தை அதிகப்படுத்திச் சொல்லுவதே இவருடைய வழக்கம். இது பயத்தினால் உண்டானதா அல்லது சத்ருவினிட த்தில் அவருக்கு இருக்கும் அதிக. அன்பினாலா என்பது எனக்குத் தெரியாது. பயந்தவர்கள் போர் புரிய வேண்டியதில்லை. சும்மா இருக் கலாம். எஜமானன் சோற்றை உண்ட பெரியோர்கள் அவர் களுடைய இஷ்டப்படி திரும்பிப் போகலாம். நான் இங்கே நின்று போர் செய்வேன். வேத மோதுகிறவர்களுக்கும் விரோதியைப் பாராட்டுகிறவர்களுக்கும் இங்கே என்ன வேலை?” என்றான். 

இவ்வாறு தகாத முறையில் ஆசா ரி யரைப் பரிகசித்த தைக் கேட்ட அசுவத்தாமனுக்குப் பொறுக்க வில்லை. அசுவத் தாமன் கிருபருடைய சகோதரி குமாரன். கர்ணனே! நாம் இன்னும் ம் பசுக்களைக்கூடப் பிடித்து ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ப்பிக்கவில்லை. ஒரு காரியமும் செய்து முடிக்காமலேயே வீணான தற்புகழ்ச்சி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் க்ஷத்திரியர்களல்ல; வேதம் ஓதுகிறவர்கள்தான். சாஸ்திரம் படிக்கிறவர்கள்தான். அரசர்களைச் சூதாட்டத்தில் ஜெயித்து ராஜ்யம் அடையலாம் என்பதாக படித்த எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. போர் செய்து வெற்றி பெற்று ராஜ்யங்களை அடைந்தவர்களுங்கூடத் தங்களைப் புகழ்ந்து கொள்ளுகிறதில்லை. நீங்கள் என்ன காரியம் சாதித்து விட்டு இவ்வளவு பேசுகிறீர்கள்? நெருப்பு ஒன்றும் பேசாமல் பதார்த்தங்களை மௌனமாகப் பக்குவம் செய்கிறது. சூரியன் பேசாமலே பிரகாசிக்கிறான். பூமியானது தன்னைப்பற் றிப் புகழ்ந்து பேசாமலே சகல சராசரங்களையும் தாங்குகிறது. சூதாட்டத்தில் ராஜ்யத்தைப் பெற்ற ஒரு க்ஷத்திரியனுக்கு என்ன புகழுரிமை? பறவைகளை மோசம் செய் து வலையில் பிடிக்கிற வேடனைப் போல் பாண்டவர்களுடைய ராஜ்யத் தைக் கவர்ந்தவர்கள் தற்புகழ்ச்சியில் இறங்காமலாவதுருக்க வேண்டும். ஏ! துரியோதனனே, ஏ! கர்ணனே, நீங்கள் எந்த யுத்தத்தில் பாண்டவர்களை வென்றீர்கள்? ஒற்றை ஆடை உடுத்தி இருந்த திரௌபதியைச் சபைக்கு த்து வந்தீர்கள். அவளை எந்த யுத்தத்தில் நீங்கள் ஜெயித்தீர்கள்? மூடர்களே! வாசனையை விரும்பிப் பெரிய சந்தன மரத்தை வெட்டுகிற பாமரனைப் போல் கௌரவ குலத்தை வெட் டித் தள்ளினீர்கள். அன்று சூதாட்டத்தில் தாயக்கட்டையை வீசி இந்திரபிரஸ்தத்தைக் கவர்ந்தது போல் இப்போது பார்த்தனு டன் யுத்தம் செய்ய முடியாது. காண்டீபமானது கூரிய அம்புகளை எறியும். ‘நாலு இரண்டு’ என்று பாய்ச்சிகளை எறியாது. அகம் பாவம் கொண்ட மூடர்களே! சபையில் சகுனியுடன் சதி செய்து சூதாடினது போல் யுத்தத்தில் நடக்காது” என்றான். 

கௌரவ சேனைத் தலைவர்கள் பொறுமையிழந்து மாறுபட்டு இவ்வாறு வாதாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த குலத் தலைவர் பீஷ்மர் வருத்தத்துடன் பேசலானார். 

“அறிவுள்ள மனிதன் ஆசாரியனை அவமதிக்கமாட்டான். தே தேச காலங்களை நன்றாக ஆலோசித்து யுத்தம் செய்ய வேண்டும். அறிந்தோர்களும் தம்முடைய காரியங்களில் புத்தி தடுமாறுகிறார்கள். மகா புத்திசாலியான துரியோதனனும் நம்முன் நிற்பது தனஞ் சயன் என்று தெரிந்து கொள்ளவில்லை. கோபத்தினால் புத்தி தடு மாறுகிறான். அசுவத்தாமரே! கர்ணன் சொன்னது ஆசாரி யருடைய ஆத்திரத்தை வளர்ப்பதற்காகவே என்று வேண்டும். நீங்கள் அவன் பேச்சைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். விரோதங்கள் பாராட்டுவதற்கு இது காலமல்ல. துரோணரும், கிருபரும், அசுவத்தாமரும், பொறுத்துக் கொள்ள வேண்டும். கௌரவ வீரர்களுக்கு ஆசாரியரான துரோணரையும் அவரு டைய புத்திரர் அசுவத்தாமரையும் விட உலகத்தில் வேறு யாரிடத்தில் நான்கு வேதங்களும் க்ஷத்திரியதேஜஸும் சேர்ந்தாற் போல் காண முடியும்? துரோணருக்குச் சமானமாகச் சொல்லக் கூடியவர் பரசுராமரைத் தவிர வேறு யாரைப் பற்றியும் நாம் கேட்டதில்லை.ஆசாரிய புத்திரர் பொறுத்துக் கொள்ளவேண்டும். உள் கலகத்துக்கு இது சமயமல்ல. பார்த்தனை நாம் அனைவ ரு ஒன்று சேர்ந்தே வெல்ல முடியும். இனி ஆக வேண்டிய காரியத் தை யோசிப்போம்.நமக்குள் கலகம் உண்டானால் தனஞ்சயனை எதிர்க்க முடியாது”. 

இவ்வாறு கௌரவப் பிதாமகரான பீஷ்மர் துரியோதனனை யும் கர்ணனையும் கண்டித்துப் பேசியதும் கலகம் அடங்கிற்று. 

பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து மறுபடியும் பேசலானார்; ‘ராஜேந்திரனே! தனஞ்சயன் வந்துவிட்டான். நேற்றைக்கே பதின்மூன்று வருஷகாலமும் முடிந்து விட்டது. உங்கள் கணக்குப் பிசகு. வருஷம், மாதம், பட்சம் முதலிய பிரிவினைகளையும் கால கதியையும் நன்றாக அறிந்த ஜோதிடர்கள் இதை விளக்கு வார்கள். அதிக மாதங்களைக் கணக்கிட்டுக் கொண்டு ஏமாந்திருக் கிறீர்கள். இப்போது காண்டீபத்தை அருச்சுனன் ஒலிக்கச் செய்த போது பிரதிக்ஞையின் காலம் பூர்த்தியாகி விட்டது என்பது எனக்குத் தெரியும்: போர் தொடங்குவதற்கு முன்னால் மனத்தைச் சோதனை செய்து நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். துரி யோ தன்னே! நீ பாண்டவர்களோடு சமாதானத்தை விரும்புவா யாகில் அவ்வாறே தீர்த்துக் கொள்ளுவதற்கு இதுவே சமயம். தருமத்துடன்கூடிய சமாதானமா, போரா, எது உனக்கு விருப்பம்? முடிவாக யோசித்துச் சொல்!” என்றார். 

துரியோதனன், ‘பிரபுவே! நான் சமாதானத்தை வி ரு ம்ப வில்லை.ஒரு கிராமத்தையுங்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க மாட்டேன். போ ரு க் கு வேண்டிய காரியங்களை அனுஷ்டிக்கலாம். என்றான். 

அதன்மேல் துரோணர் உத்தரவிட்டார். ‘படையில் நாலில் ஒரு பாகத்தை அரசனான துரியோதனன் தனக்குக் காப்பாகக் கூட்டிக் கொண்டு விரைவாக ஹஸ்தினாபுரம் நோக்கிச் செல்ல வேண்டியது. மற்றொரு கால் பாகச் சைன்யம் பசுக்களை வளைத் துக் கொண்டு ஓட்டிப் போகட்டும். பசுக்களை ஓட்டாமல் விட்டு விட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டபடி யாகும். மீதிப் பாதிப் படையுடன் நாங்கள் ஐவரும் நின்று அருச்சுனனை எதிர்ப்போம். இவ்வாறு செய்வதே அரசனுக்கு க்ஷேமமாகும்’ என்று சொன்னார். 

கெளரவ வீரர்கள் துரியோதனனைக் காப்பாற்ற அவ்வண்ணம் அணிவகுத்துக் கொண்டார்கள். 

அருச்சுனன், ‘உத்தரனே! அதோ காணப்படும் சத்துருப் படையில் துரியோதனனுடைய தேரைக் காண வில்லை. பீஷ்மர் கவசமணிந்து நிற்கிறார். துரியோதனனைக் காணவில்லை.இவர் களை விட்டு விலகி துரியோதனனிருக்கும் இடத்துக்குத் தேரைச் செலுத்து. பசுக்களை ஓட்டிக் கொண்டு முன்னால் போகிறான் என்று எண்ணுகிறேன்” என் று சொல்லி அருச்சுனன் கௌரவ சேனை யை விட்டு விலகிப் பசுக்களையும் துரியோதனனையும் நோக்கி நேரா கச் சென்றான். போகும்போது காண்டீபத்தை இழுத்து ஆசாரியர் பிதாமகர் இவர்கள் கால்களண்டை அம்புகள் மரியாதையாக விழும்படி செய்தான். அவர்களுக்கு அவ்வாறு வீர நமஸ்காரம் செய்து விட்டுத் துரியோதனனை நோக்கிச் சென்றான். 

அருச்சுனன் பசுக்கூட்டம் இருந்த இடத்தை அடைந்து சுற்றியிருந்த படையைச் சிதற அடித்துவிட்டு இடையர்களை நோக்கி “பசுக்களை உங்கள் இடைச்சேரிகளுக்குத் திருப்பி ஓட்டிக் கொண்டு போங்கள் என்றான்.இவ்வாறு சொல்லிவிட்டு து ரியோ தனனைத் துரத்திக் கொண்டு போனான். இடையர்கள் களியாட் டத்தோடு பசுக்களைத் திருப்பி ஓட்டிச் சென்றார்கள். 

அருச்சுனன் துரியோதன்னையே நோக்கிச் செல்வதைக் கண்ட பீஷ்மர் முதல் கௌரவ வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்று சூழ்ந்துகொண்டு அவன்மேல் அம்புகளை வருஷித்தார்கள். அருச்சுனன் அற்புதப் போர் நடத்தினான். முதலில் கர்ணனை எதிர்த்து அவனை யுத்தகளம் விட்டு ஓடச்செய்தான். பிறகு துரோணரைத் தாக்கினான். அவரும் தோற்றார். அவர் பலம் இழந்து நிற்பதைக் கண்டு அசுவத்தாமன் புகுந்து அருச்சுனனை எதிர்த்தான். அப்போது அருச்சுனன் துரோணர் விலகிப்போவு தற்கு மெதுவாக இடங்கொடுத்தான். அவரும் அதை அறிந்து விரைவாக விலகித் தப்பினார். அருச்சுனன் பிறகு அசுவத் தாமனுடன் கடும் போர் புரிந்தான். அசுவத்தாமனும் சளைத்துப்போன பின் கிருபர் வந்து எதிர்த்தார். அவரும் தோல்வியடைந்தார். சேனை முழுவதும் சிதறடிக்கப்பட்டுப் பயந்து ஓடிற்று. 

இதைக் கண்ட பீஷ்மர் துரோணருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லி எல்லோரும் ஒன்று சேர்ந்து மறுபடியும் அருச்சுனனைத் தாக்க ஏற்பாடு செய்தார். தன்னைச் சுற்றிப் பாணங்களை எறிந்து மலையைப் பனி மூடுவதுபோல் செய்துகொண்டு அருச்சுனன் அவர்களனைவரையும் பலமாகத் தாக்கினான். பீஷ்மரும் அருச் சுனரும் போர் செய்த காலத்தில் அதைப் பார்ப்பதற்குத் தேவர் களும் வந்துவிட்டார்களாம். 

துரியோதனனையே நோக்கிச் செல்லும் அருச்சுனனை ஐந்து மகாரதர்களும் ஒன்று சேர்ந்து நிறுத்தப் பார்த்தும் முடியவில்லை. அருச்சுனன் துரியோதனனை அடைந்து அவனைப் பலமாகத் தாக்கி னான். துரியோதனன் தோல்வியடைந்து யுத்தகளம் விட்டு ஓட ஆரம்பித்தான். 

“பெயரையும் புகழையும் இழந்து ஏன் ஓடுகிறாய்?” என்று அருச்சுனன் சொல்ல மறுபடியும் துரியோதனன் சர்ப்பத்தைப் போல் சீறிக் கொண்டு திரும்பினான். பீஷ்மரும் மற்றவர்களும் அவனைச் சூழ்ந்துக் கொண்டு காத்துக் கொண்டே இருந்தனர். அருச்சுனன் அவர்களோடு நெடுநேரம் போர் புரிந்து முடிவில் மோகனாஸ்திரத்தைப் பிரயோகம் செய்து அவர்களனைவரையும் வீழ்த்தி அவர்களுடைய வஸ்திரங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டான். வஸ்திரங்களைப் பறிப்பதே அக்காலத்தில் முடிவான வெற்றியின் குறி. 

மயக்க மடைந்து வீழ்ந்த துரியோதனனுக்கு நினைவு வந்த தும் பீஷ்மர் அவனை ஊருக்குத் திரும்பச் சொன்னார். சேனை முழுவதும் தோல்வியடைந்து ஹஸ்தினாபுரம் திரும்பிற்று. 

”உத்தரனே! குதிரைகளைத் திருப்பு! உன்னுடைய பசுக் கள் மீட்கப்பட்டன. பகைவர்களும் ஓடிவிட்டனர். ராஜகுமாரனே! சந்தனமும் புஷ்பமும் அணிந்து கொண்டு உன்னுடைய நகரத்துக்குள் புகுவாய்!” என்றான் அருச்சுனன். 

போகும் வழியில் வன்னிமரத்தில் ஆயுதங்களையும் துவஜங் களையும் முன்போல் வைத்துவிட்டு அருச்சுனன் மறுபடியும் பிருகன்னளை வேஷம் தரித்துக் கொண்டான். குதிரைகளைத் தானே ஓட்டி உத்தரனைத் தேரில் உட்காரச் செய்தான். உத்தரன் ஜயித்தான் என்று நகரத்துக்குப் போய்க் கோஷிக்கும்படி தூதர் களையும் முன்னால் அனுப்பினான். 

விராடனுடைய பிரமை 

திரிகர்த்தாதிபதி சுசர்மனை ஜெயித்துவிட்டு விராடராஜன் தன் நகரத்துக்குத் திரும்பினான். ஊர் ஜனங்கள் அவனை ஜெய கோஷங்களுடன் எதிர் கொண்டு வரவேற்றார்கள். அரசன் அந்தப்புரத்தில் உத்தரனைக் காணாமல், “உத்தரன் எங்கே?” என்று கேட்க அங்குள்ள ஸ்திரீகளும் மற்றவர்களும் அவன் கௌரவர்களை ஜெயிக்கப் போயிருக்கிறான் என்று மிக உற்சாகத் துடன் சொன்னார்கள். தங்கள் ராஜகுமாரன் அழகிய உத்தரன் உலகத்தையே ஜெயித்து விடுவான் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆகையால் அதைப்பற்றி அவர்கள் கவலையில்லாமல் விராடனிடம் பேசினார்கள். 

அரசன் திடுக்கிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தான் முழு விவரம் தெரிந்தவுடன் மிகுந்த பயமும் அடைந்தான். 

“நபும்ஸகன் ஒருவனைத் துணையாகக் கொண்டு ஆபத்தான காரியத்தில் பிரவேசித்துவிட்டான். என் அருமைப் புத்திரன் இதற்குள் இறந்தே போயிருப்பான்; சந்தேகமில்லை” என்று சொல்லித் துக்கத்தில் மூழ்கினான். 

பிறகு மந்திரிகளை அழைத்து “சேனையைத் திரட்டுங்கள். உத்தரன் உயிரோடு இருந்தால் சென்று அவனை எப்படியாவது காப்பாற்றிக் கொண்டு திரும்புங்கள்” என்று உத்தரவிட்டான். 

மிக வேகமாக ஒரு படையை முதலில் அனுப்பி உத்தரன் கதியை அறிந்து வரவும் கட்டளையிட்டான். 

தருமபுத்திரனான கங்க்க சந்நியாசி விராடனைத் தேற்றப் பாள்தொர். “ராஜகுமாரனைப்பற்றி நீர் சுவலைப்பட வேண்டாம். பிருகன்னளை சாரதியாகப் போயிருக்கிறாள். அவளைப்பற்றி உமக் குத் தெரியாது. எனக்குத் தெரியும். அவளைச் சாரதியாகக் காண்டு தேரில் நின்று யுத்தம் செய்பவன் எவனும் நிச்சயமாக வெற்றி பெறுவான். சுசர்மன் தோல்வி யடைந்தான் என்கிற செய்தியும் இதற்குள் அங்கே எட்டி யிருக்கும். கௌரவர்கள் திரும்பி ஓட்டம் பிடிப்பார்கள்” என்று சொல்லித் தேற்றினார்.

இதற்குள் உத்தரனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சேர்ந்தார்கள். “உத்தரன் ஜெயித்தான். கௌரவ சேனை சிதறடிக்கப்பட்டது. பசுக்கள் மீட்கப்பட்டன” என்று தூதர்கள் சொன்னது விராடனுக்கு வியப்பாக இருந்தது. அவன் நம்பவேயில்லை. 

”அரசனே! சந்தேகப்பட வேண்டாம். தூதர்கள் சொல்லுவது உண்மையாகவே இருக்க வேண்டும். பிருகன்னளை சாரதி யாகப் போனபின் வெற்றியைப் பற்றிச் சந்தேகமே இல்லை. உம் முடைய குமாரன் ஜெயித்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவேந்திரனுடைய சாரதியும் கிருஷ்ணனுடைய சாரதியும் யாருமே பிருகன்னளைக்குச் சமானமாக மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று யுதிஷ்டிரன் அரசனுக்குச் சொன்னான். 

தூதர்கள் கொண்டு வந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட விராடன் மகிழ்ச்சி சாகரத்தில் மூழ்கினான். தூதர்களுக்கு ரத்தி னங்களும் தனமும் ஏராளமாக வெகுமதியளித்தான். 

“ஊரை அலங்கரியுங்கள், நான் சுசர்மனை வென்றது பெரி தல்ல. ராஜகுமாரனுடைய வெற்றியே வெற்றி. எல்லா ஆலயங் களிலும் தேவார்ச்சனை செய்யக் கட்டளை அனுப்புங்கள். ராஜ வீதிகளில் கொடிகள் கட்டி மங்களவாத்தியம் கோஷிக்கச் செய் யுங்கள். என் இளஞ்சிங்கத்தைக் தக்க முறையில் எதிர்கொண்டு வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்” என்றான். 

இவ்வாறு வெற்றியுடன் திரும்பிவரும் குமாரனை எதிர் கொண்டு அழைத்துவர மந்திரிகளையும் சேனையையும் கன்னிப் பெண்களையும் அனுப்பிவிட்டு, விராடன் அந்தப்புரம் சென்று ஸைரந்திரி, பாச்சிகைகள் கொண்டுவா! கங்க்கரே! என் சந்தோ ஷத்தைப் பொறுக்க முடியவில்லை. விளையாடுவோம் வா ரு ம். என்று சொல்லி அவனு ம் யுதிஷ்டிரனும் விளையாட உட்கார்ந் தார்கள். ஆடும்போது பேச்சும் நடந்தது. “பார்த்தீரா என் குமாரன் பூமிஞ்சயனுடைய சௌரியத்தை? புகழ் பெற்ற கௌரவ வீரர்களைத் துரத்தியடித்தான்” என்றான். 

“ஆம்,உம் குமாரன் பாக்கியசாலி. அப்படி யில்லாவிட்டால் பிருகன்னளை அவனுக்குத் தேர் ஓட்ட அமைந்திருப்பாளா? ராஜகுமாரன் அதிருஷ்டசாலி என்பதில் சந்தேகமில்லை” என்றான் யுதிஷ்டிரன். 

“என்ன நீர் நபும்ஸகனைப் பற்றியே திரும்பத் திரும்ப உளறுகிறீர்! என் குமாரனுடைய ஜெயத்தைப் பற்றி நான் பேசும் போது இந்த அலியின் சாரத்யத்தை ஒரு பெரிய விஷயமாகச் சொல்லுகிறீர்” என்று விராடன் கோபமாகச் சொன்னான். 

“அப்படிச் சொல்லலாகாது. பிருகன்னளை சாதாரணமானவளல்ல அவள் ஓட்டிய தேர் ஒருநாளு நம் தோற்காது. அவள் நடத்தும் தேரில் நின்றவன் எதையும் செய்து முடிப்பான் என்று திரும்பவும் கங்க்கர் சொல்ல அரசனுடைய கோபம் அதிகரித்தது என்று 

“ஓய் பிராமணரே! இம்மாதிரிப் பேசாதேயும்!” சொல்லி விராடன் ஆட்டத்துக் காயை எடுத்து யுதிஷ்டிரன் முகத் தில் எறிந்து கையை ஓங்கி வீசிக் கன்னத்தில் ஒரு அடி அடித் தான். ‘யுதிஷ்டிரன் முகத்தில் காயமுண்டாகி ரத்தம் பெருக ஆரம்பித்தது. 

உடனே பக்கத்தில் இருந்த ஸைரந்திரி தன் மெல்லிய உத் தரியத்தைக் கொண்டு. காயத்தைத் துடைத்தாள். வஸ்திரம் தனைந்து போக அதை ஒரு பொன் கிண்ணத்தை எடுத்து அதில் பிழிந்தாள். 

“இது என்ன வேலை? ரத்தத்தை ஏன் கிண்ணத்தில் பிழிகிறாய்?” என்று கேட்டான் இன்னும் கோபம் ஆறாத விராடன்.

“அரசனே! சந்நியாசியின் ரத்தம் கீழே விழலாகாது. விழுந் தால் அந்த ரத்தத்தில் எத்தனை பிந்துக்கள் உண்டோ அத்தனை வருஷங்கள் உம்முடைய ராஜ்யத்தில் மழை யில்லாமல்போகும். அதனால் இவ்வாறு கிண்ணத்தில் பிழிந்தேன். கங்க்கருடைய மேன்மை உமக்குத் தெரியாது” என்றாள். 

இதற்குள் வாயில் காப்போன் வந்து, “உத்தரனும் சாரதி பிருகன்னளையும் வந்திருக்கிறார்கள். அரசனைப் பார்க்க விரும்பி வாயிலில் ராஜகுமாரன் நிற்கிறான்” என்று சொன்னதும் விராடன் பரபரப்புடன் எழுந்து “வரச் சொல்! வரச் சொல்!” என்றான். 

யுதிஷ்டிரன் மெதுவாகத் துவார பாலகனிடம் ..”உத்தரன் ஒருவன் மட்டும் வரட்டும். பிருகன்னளை வர வேண்டாம்” என்று இரகசியமாகச் சொல்லி யனுப்பினான். தன் முகததில் உண் டான காயத்தை அருச்சுனன் பார்த்தால் கோபம் தாங்கமாட் டான். காயம் யுத்தத்தில் பட்டதாக இருந்தால் லட்சியம் செய்யவே மாட்டான். ஆனால் மற்ற விதமாக ஒருவன் தரும புத் திரனுக்குச் செய்த அபவாதத்தைப் பொறுக்கவே மாட்டான். ஏதாவது விபரீதம் நேரிடும் என்று யுதிஷ்டிரன் இவ்வாறு செய்தான். 

உத்தரன் உள்ளே வந்ததும் விராடனை நமஸ்கரித்துக் கங்க கரையும் வணங்கப் போனான். அப்போது அவர் முகத்தில் ரத்தப் பெருக்கைப் பார்த்துத் திகைத்தான். உத்தரனுக்கு கங்க்கர்  யுதிஷ்டிர மகாராஜா என்பது தெரியுமல்லவா? 

“அரசனே! இந்த மகானை யார் உபத்திரவம் செய்தது?” என்றான். 

விராடன் அப்போது மகனைப் பார்த்து “புத்திரனே! உன்வெற்றியைக் கேட்டு மகிழ்ந்த நான் உன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசியபோது இந்தப் பிராமணர் உனக்குத் தேரோட்டிய நபும் ஸகனைப் புகழ்ந்து புகழ்ந்து உன் ஜெயத்தையும் வீரியத்தையும் குறைத்துப் பேசினார். அதை என்னால் பொறுக்க முடியவில்லை. இவர் அசூயைக்காரர். அவரை நான் அடித்துவிட்டேன். இதைப் பற்றி என்ன?” என்றான். 

“ஐயோ! பெரும் பிழை செய்துவிட்டீர்! உடனே அவர் காலில் விழுந்து வணங்கி க்ஷமிக்கும்படி கேட்டு அவர் மன்னிப்பை அடைய வேண்டும். இல்லாவிடில் நம்முடைய குலம் வேரோடு அழிந்து போகும்” என்று உத்தரன் பயமும் வருத்தமும் மேலி ட்டுத் தகப்பனைக் கேட்டுக் கொண்டான். 

விராடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மனக் குழப்பமுற்று ஒன்றும் செய்யத் தோன்றாதவனாய் நின்றான். 

உத்தரன் மறுபடியும் மிகவும் வருந்தி வேண்ட விராடன் யுதிஷ்டிரனை வணங்கிப் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். 

பிறகு “அப்பனே! நீ யல்லவோ வீரன் ! கௌரவ சேனையை எவ்வாறு வென்றாய்? பசுக்களை எவ்வாறு மீட்டாய்? எல்லாம் விவரமாய்ச் சொல்லக்கேட்டு நான் மகிழ்ச்சி யடையவேண்டும். நடந்ததை யெல்லாம் சொல்’ என்று விராடன் மகனை ஆலிங் கனம் செய்து உட்காரச் செய்து நடந்ததை யெல்லாம் சொல் லச் சொன்னான். 

உத்தரன் “மகாராஜாவே! நான் எந்தச் சேனையையும் ஜெயி யிக்கவில்லை. எந்தப் பசுக்களும் என்னால் மீட்கப்பட வில்லை. எல்லாக் காரியத்தையும் ஒரு தேவகுமாரன் செய்தான். அவனே கௌர வப் படையைச் சிதறடித்தது. அந்த வீரனே பசுக்களை மீட்டது.நான் ன்றும் செய்யவில்லை” என்றான். 

“அந்த வீரன் எங்கே? அவனைக் கூப்பிடு. என் மகனை யமன் வாயிலிருந்து காப்பாற்றித் தந்த அந்த வீரனை நான் என் கண்களால் பார்த்து மகிழவேண்டும். என்னுடைய மகள் உ த்தரையை அவனுக்குத் தருவேன். நான் அவனைப் பூஜிக்க வேண்டும். அவனை அழைத்துவா” என்றான் அரசன். 

“அந்தத் தேவகுமாரன் மறைந்துவிட்டான்! ஆனால் அவன் ன்றோ நாளையோ வருவான் என்று எண்ணுகிறேன்’ என்று சொன்னான் ராஜகுமாரன். 

இந்திரனுடைய மகனான அரு ச்சுனன் தேவகுமாரன் அல்லவா? அவன் மறுபடி பிருகன்னளை உருவத்தில் மறைந்து விட்டதும் உண்மையே அல்லவா? 


விராடனுடைய ராஜ சபை கூடிற்று. அரசனும் அரச குமாரனும் அடைந்த வெற்றிகளைப் பாராட்ட நகரத்துப் பிர முகர்கள் எல்லாரும் வந்து கூடி ஆசனங்களில் அமர்ந்தார்கள். விராட னுடைய ஜெயத்திற்குக் காரணமாகிய கங்க்கன். சமை யல்கார வல்லன், பிருகன்னளை, தந்திரீ பாலன், தாமக்கிரந்தி இவர்களும் சபைக்கு வந்தார்கள். ராஜகுமாரர்களுக்கென்று அமைக்கப்பட்ட சிம்மாசனங்களில் அவர்கள் உட்கார்ந்தார்கள். 

அரண்மனைக் குற்றேவலில் அமைக்கப்பட்ட இவர்கள் அரசன் சொல்லித்தான் இவ்வாறு சிம்மாசனங்களில் உட்காரத் துணிந்தார்கள் என்று அனைவரும் எண்ணினார்கள். ஆபத்தான காலத்தில் அரசனுக்கு அவர்கள் செய்த பேருதவியும் வீரச் செயல் களும் இதற்குக் காரணமாயிருக்கும். அந்த வீரர்களை அவ்வாறு கவுரவிப்பதும் சகஜம் என்று நினைத்தார்கள். 

விராடராஜன் சபையில் பிரவேசித்தான். சுந்நியாசி கங்க் கரும் சமையல்காரனும் குதிரைக்காரனும் மாட்டுக்காரனும் ராஜகுமாரர்கள் உட்கார வேண்டிய ஆசனங்களில் சுகமாக உட் கார்ந்திருப்பதைப் பார்த்து மறுபடியும் கோபாவேசமானான். 

கொஞ்ச நேரம் வாக்குவாதம் நடந்தது. பிறகு வேடிக்கை போதும் என்று பாண்டவர்கள் தாங்கள் யார் என்பதைச் சபை க்கு வெளிப்படுத்தினார்கள். அனைவரும் வியப்பிலும் மகிழ்ச்சி யிலும் பரவச மடை ந்தார்கள். 

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியும் இவ்வளவு நாள்தான் அறியாமல் தனக்குத் தொண்டு செய்து கொண்டு அரண் மனைச் சேவகர்களாக இருந்ததையும் தனக்கும் உத்தரனுக்கும் அவர்கள் செய்த பேருபகாரத்தையும் எண்ணி எண்ணி விரா டன் மனம் பூரித்து இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடி யும்” என்று கங்க்கரைப் பன்முறை ஆலிங்கனம் செய்தான். 

தன் ராஜ்யம் முழுவதையும் யுதிஷ்டிரனுக்குக் கொடுத்து மறுபடி அவனிட மிருந்து பெற்றுக் கொண்டான். தன் மகள் உத்தரையை அருச்சுனனுக்குக் கன்னிகாதானம் செய்தே தீர வேண்டு மென்றும் சொன்னான். 

அருச்சுனன், “அது தகாது. உத்தரை என்னிடத்தில் நாட்டியமும், கானமும் கற்றவள். அவளுக்கு நான் ஆசாரியனும், தகப்பனும் போல் ஆவேன்” என்று அவளைத் தன் மகன் அபி மன்யுவுக்கு விவாகம் செய்வித்துத் தனக்கு மருமகளாக்கிக் கொள்ள அங்கீகரித்தான். 


இதன்பின் துராத்மாவும் வஞ்சகனுமான துரியோதன்னிட மிருந்து தூதர்கள் வந்தார்கள். 

குந்தி புத்திரரே! துரியோதன ராஜா உம்மிடம் எங்களை அனுப்பியிருக்கிறார். தனஞ்சயனுடைய அவசரச் செயலால் நீர் மறுபடியும் காட்டுக்குப் போக வேண்டியவர் ஆனீர். பதின் மூன்றாம் வருஷம் முடிவதற்குள் அவன் தெரிந்து கொள்ளப்பட் டான். ஆகையால் பிரதிக்ஞைப்படி மறுபடி பன்னிரண்டு வரு ஷம் வனம் செல்ல வேண்டியது” என்று தூதர்கள் யுதிஷ்டிரனி டம் சொன்னார்கள். 

தருமபுத்திரர் சிரித்து விட்டு, தூதர்களே! சீக்கிரமாகத் திரும்பிப் போய் துரியோதனனிடத்தில் சொல்லுங்கள். பிரதிக் ஞைப்படி பதின்மூன்றாவது ஆண்டு தீர்ந்ததா இல்லையா என்பதைக் கணிதம் படித்த பாட்டனார் பீஷ்மரையும் சோதிடம் அறிந்தவர்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்லுங் கள். பதின்மூன்றாவது வருஷம் பூர்த்தியான பின்னரே, தனஞ் சயனுடைய வில்லின் ஒலி சத்துருக்களை நடுங்கச் செய்தது!” என்றார். 

மந்திராலோசனை 

பதின்மூன்றாவது வருஷம் முடிந்தவுடன் பாண்டவர்கள் விராடனுடைய ராஜதானியை விட்டு அவனுக்குச் சொந்த உபப்பிலாவியம் என்கிற நகரத்தில் பகிரங்கமாக வசித்துவந்தார் கள். அவ்விடமிருந்து தங்களுடைய பந்துமித்திரர்களுக் கெல் லாம் தூது அனுப்பினார்கள். 

துவாரகையிலிருந்து அருச்சுனன் மனைவி சுபத்திரையையும் அவள் மகன் அபிமன்யுவையும் அழைத்துக் கொண்டு, பலராம் னும் கிருஷ்ணனும் அவர்களுடன் யாதவ குலத்தைச் சேர்ந்த அநேக வீரர்களும் உபப்பிலாவியம் வந்து சேர்ந்தார்கள். ஜனார்த் தனன் வருகிறான் என்று கேட்டு மத்ஸ்ய ராஜனும் பாண்டவர் களும் சங்க முழக்கத்தோடு எதிர்கொண்டு வரவேற்றார்கள். 

பதின்மூன்றாவது ஆண்டு ஆரம்பத்தில் பாண்டவர்களை வனத்தில் விட்டுப் போன இந்திரசேனன் முதலானவர்கள் ரதங் களோடு உபப்பிலாவியம் வந்து சேர்ந்தார்கள். காசி ராஜனும் சைப்பியனும் இரண்டு அக்குரோணி சேனையுடன் வந்து யுதிஷ் டிரனை அடைந்தார்கள். 

மூன்று அக்குரோணியுடன் பாஞ்சால ராஜனான துருபதன் வந்து சேர்ந்தான். துருபதனுடன் சிகண்டியும், திரௌபதியின் சகோதரன் திருஷ்டத்யும்னனும் திரௌபதியின் புத்திரர்களும் வந்து சேர்ந்தார்கள். இன்னும் பல ராஜாக்கள் தத்தம் பெரும் சேனைகளுடன் பாண்டவர்களுக்குத் துணை செய்வோம் என்று வந்து சேர்ந்தார்கள். 

முதலில் அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் சாஸ்திர முறைப் படி விவாகம் நிறைவேறியது. அதன் பின் எல்லா அரசர்களும் வீரர்களும் விராடனுடைய சபா மண்டபத்தில் மந்திராலோ சனைக்கு உட்கார்ந்தார்கள். 

விராடன் பக்கத்தில் கிருஷ்ணனும் யுதிஷ்டிரனும், துரு பதன் பக்கத்தில் பலராமனும் சாத்யகியும் ஆசனங்கள் பெற்று உட்கார்ந்தார்கள். இன்னும் பல அரசர்களும் மகாரதர்களும் சபையை அலங்கரித்தார்கள். கலகலப்பு அடங்கியதும் எல்லா ரும் கண்ணனைப் பார்த்தார்கள். கண்ணனு ம் எழுந்து பேச லானான்: 

“யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் வஞ்சனையாக ஜெயிக்கப்பட் டதும், ராஜ்யம் அபகரிக்கப் பட்டதும். வனவாசப் பிரதிக்ஞை செய்யப்பட்டதும், பாண்டு புத்திரர்கள் பதின்மூன்று வருஷங்கள் கடுமையான விரதத்தைச் சொன்னபடி அனுஷ்டித்துச் சகிக்க முடியாத பலவிதத் துன்பங்களைச் சகித்ததும் வை யெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களே. தருமபுத்திரனுக் கும் அரசன் துரியோதனனுக்கும் எது நன்மையோ, கௌரவர் களுக்கும், பாண்டவர்களுக்கும் எது புகழைத் தருவதும் தருமத் துக்கு இசைந்ததுமானதோ அதனை ஆலோசியுங்கள். தருமபுத் திரர் அதர்மத்துடன் கலந்ததை எதுவாயினு ம் விரும்ப மாட் டார். தம்மை வஞ்சித்துப் பலவித கஷ்டங்களுக்கு ஆளாக்கிய திருதராஷ்டிர புத்திரர்களுக்கும் யுதிஷ்டிரர் க்ஷேமத்தையே விரும்புகிறார். கெளரவர்களுடைய துராசையையும் யுதிஷ்டிர ருடைய தருமபுத்தியையும் நன்றாக ஆலோசித்துச் சொல்லுங்கள். துரியோதனனுடைய எண்ணம் என்னவென்று உள்ளபடி தெரியவில்லை. சமர்த்தனும் சீலனுமான ஒருவனைத் தூதனாக அனு ப்பித் திருதராஷ்டிர புத்திரனுக்குச் சொல்ல வேண்டியதை ச் சொல்லிச் சமாதானம் செய்து யுதிஷ்டிரனுக்குப் பாதி ராஜ் யத்தைக் கொடுக்கச் செய்ய வேண்டும். வ்வாறு சொல்லி தமையன் பலராமனைப் பார்த்தார். 

பலதேவன் சொன்னான்: தருமமும் ராஜநீதியும் கூடிய யோசனையைக் கிருஷ்ணன் சொன்னான். அதைக்கேட்டீர்கள். துரியோதனன். தருமபுத்திரர் இருவருக்கும் ஹிதமான யோசனை கிருஷ்ணனால் சொல்லப் பட்டது. அதை நான் மிகவும் பாராட்டுகிறேன். குந்தி புத்திரர்கள் தங்களுக்குக் கிடைத்த பாதி ராஜ்யத்தை இழந்துவிட்டு அதை மறுபடி அடைய முயல் கிறார்கள். சமாதானத்தின் மூலம் அடைந்தார்களானால் பாண்ட வர்களும் துரியோதனாதியர்களும் பிரஜைகளும் எல்லாரு சுகமும் அமைதியும் அடைவார்கள். அதில் சந்தேக “மில்லை. அதற்கு ஒருவன் துரியோதனனிடம் போய் யுதிஷ்டிரருடைய வேண்டுகோளை அவனுக்குச் சொல்லி, அவனுடைய கருத்தையும் தெரிந்து கொண்டு வரவேண்டும். கௌரவர்களுக்கும் பாண்டவர் களுக்கும் சமாதானம் உண்டாக்கும் திறமையைப் படைத்தவன் போக வேண்டும். அப்படிப் போகும் தூதன் பீஷ்மரையும் திரு தராஷ்டிரனையும் துரோணரையும் விதுரரையும் கிருப ரையும் அசுவத் தாமரையும் கர்ணனையும் சகுனியையும் கலந்து ஆலோசித்துக் குந்தி புத்திரருக்காக வணங்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும். என்ன நேர்ந்தாலும் கோபிக்கக் கூடாது. தரும புத் திரன் தெரிந்தே சூதாட்டம் ஆடித் தேசத்தை இழந்தான். பல நண் பர்கள் தடுத்தும் ஆடுவேன் என்ற பிடிவாதம் செய்து ஆடினான். ரகுனி தாயக்கட்டை வீசுவதில் தேர்ச்சி பெற்றவன் என்று தெரிந்திருந்தும், தான் அதில் சகுனிக்குச் சமானமானவன் அல்ல என் பதை நன்றாக அறிந்திருந்தே யுதிஷ்டிரன் ஆட்டத்துக்கு ஒப்புக் கொண்டு ஆடினான். ஆகையால் இப்போது திருதராஷ்டிரனை வணங்கியே கேட்டுக் காள்ள வேண்டும். தூதனாகப் போகிறவன் யுத்தப் பிரியனாக இருக்கக் கூடாது. எப்படியாவது சமாதா னம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டவனே தூதனாகப் போகவேண்டும். துரியோதனனை நல்ல வார்த்தை களினால் சமாதானப் படுத்துங்கள். அரசர்களே! யுத்தத்தை விரும்பாதீர்கள். சமாதானத்தில் சம்பாதிக்கப்பட்ட செல்வமே பயன் அளிக்கும். எந்த யுத்தத்திலுமே அநீதி ஏற்படும். 

பலராமனுடைய கட்சி என்னவென்றால், தெரிந்தே யுதிஷ் டிரன் சூதாடிச் சொத்தைத் தோற்றான். பிரதிக்ஞைப்படி வாசம் முடித்ததனால் மறுபடி வனவாசம் போகாமல் சுதந்திரமாக இருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஆட்டத்தில் இழந்த ராஜ் யத்தைக் கேட்கும் உரிமை உண்டாகாது. பிரதிக்ஞையில் அவ் வாறான நிபந்தனை இல்லை. ராஜ்யத்தை இழந்தது இழந்ததுதான். வணங்கிக் கேட்டு ஏதேனும் பெறலாமே யொழிய உரிமை கிடை யாது. சூதாட்டத்தில் சொத்தை வைத்து இழப்பது மடமையானா லும் கண் திறந்து சூதாடி இழந்தது இழந்தபடியே யாகும். அதை மறுபடி எனது என்று ஒருவன் உரிமை பாராட்ட மில்லை என்பது. ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் விரோதப் பட்டுக்கொண்டு கொடிய யுத்தம் செய்வது பலராமனுக்குப் பிடிக்கவில்லை. யுத்தத்தினால் எப்போதும் அனர்த்தம்தான் விளையும் என்பது அவனுடைய அபிப்பிராயம். 

எக்காலத்துக்கும் பொருத்தமான ஒரு உண்மையை பலராமன் மூலம் சொல்லுகிறார் வியாசர். 

இவ்வாறு பலதேவன் கூறியதை யாதவ வீரனான சாத்யகியி னால் பொறுக்க முடியவில்லை. கோபம் மேலிட்டு எழுந்த சாத்யகி பேச ஆரம்பித்தான். 

“பலதேவர் பேசினது எனக்குக் கொஞ்சமேனும் நியாய மாகத் தோன்றவில்லை. ஒருவன் தன்னுடைய அந்தரங்க எண்ணம் எதுவோ அதற்கு அனுசரணையாகச் சாமர்த்தியத்தைக் கொண்டு பேசிவிடுவான். எதையும் அழகாக வாதித்து விடமுடி யும். ஆனால் அதருமம் தருமம் ஆகாது. அநீதி நீதியுமாகாது. பலதேவர் சொன்னதை நான் ஆக்ஷேபிக்கிறேன். மிகவும் வெறுக் கிறேன். ஒரே வயிற்றில் சூரனும் கயவனும் அண்ணன் தம்பி களாகப் பிறக்கிறார்கள். ஒரே மரத்தில் பழம் தரும் கிளையும் பயனற்ற கிளையும் உண்டாவதைப் பார்க்கிறோமல்லவா? கிருஷ் ணன் பேசினது தருமம். பலதேவர் பேசியது அநீதி. தருமபுத்தி ரரைப் பற்றிச் சபையில் குறை சொல்லுகிறவன் துரியோத னனைக் கண்டு பயப்படுபவனாகத் தான் இருக்க வேண்டும். நான் கடுமையாகப் பேசுவதைச் சபையோர் மன்னிக்க வேண்டும். ஆட்டம் தெரியாதவரும் ஆட்டத்தில் இஷ்ட மில்லாதவரு மாயிருந்த யுதிஷ்டிரரை வருந்தி அழைத்து ஆடச் செய்து அவரைத் தோற்கடித்தார்கள். பிரதிக்ஞையைப் பூரணமாக முடித்துத் திரும்பிய இவர் ஏன் துரியோதன்னை வணங்கிப் பிச்சை கேட்க வேண்டும்? யுதிஷ்டிரர் யாசிப்பவர் அல்ல; அவர் வணங்க வேண்டிய அவசியமில்லை. பாண்டவர்கள் வன வாசத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து அஞ்ஞாத வாசமும் சரி யாக முடித்திருக்கும்போது ‘பன்னிரண்டு மாதம் பூர்த்தியாவதற் குள் நாம் கண்டுகொண்டு விட்டோம்’ என்று அதர்மமாகச் சொல்லிவரும் இந்தத் துரியோதனாதியரை நான் யுத்தத்தில் வீழ்த்தி, தர்மபுத்திரருடைய காலில் அவர்கள் விழுந்து வணங் கச் செய்வேன். இல்லையேல் கௌரவர்கள் யமபுரிக்குச் செல்லு வார்கள். தர்மயுத்தத்தில் அநீதி ஏன் விளையும்? ஆயுதம் எடுத்து யுத்தம் செய்யும் எதிரிகளைக் கொல்லுவதில் ஒரு பாபமுமில்லை. சத்துருக்களை யாசிப்பது இகழ்ச்சிக்குக் காரணமாகும். துரியோதனன் யுத்தத்தை விரும்புவானாகில் யுத்தத்துக்குத் தயாரா வோம். காலதாமதம் செய்யாமல் நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம். யுத்தமில்லாமல் அவன் ராஜ்யத்தைத் தரப் போவ தில்லை. கரல தாமதம் செய்வது அறியாமையாகும்”. 

சாத்யகி இவ்வாறு உறுதியாகச் சொன்னதைக் கேட்டுத் துரு பதராஜன் மகிழ்ச்சியடைந்து எழுந்தான். 

சாத்யகி சொல்வது சரி. அதைத் தான் நான் ஆதரிக் இறேன். நல்ல வார்த்தைகளால் துரியோதனன் வழிக்கு வரமாட் டான். நம்முடைய யுத்த முயற்சியை நிறுத்தாமல் நாம் செய்து கொண்டே போக வேண்டும். நம்முடைய நண்பர்களுக்குத் தூதர்களை அனுப்பிக் கால தாமதமின்றிப் படைகள் சேர்க்கச் சொல்ல வேண்டும். சல்யன், திருஷ்டகேது, ஐயத்ஸேனன் கேகயன் முதலியவர்களிடம் உடனே நம்முடைய தூதர்கள் போக வேண்டும். திருதராஷ்டிரனிடம் தகுந்த தூதனை அனுப்பவேண் டியது அவசியம். என்னுடைய அரண்மனை வித்துவானும் புரோ கிதருமான வேதியரை ஹஸ்தினாபுரம் அனுப்பலாம். சொல்ல வேண்டியதை அவரிடம் சொல்லி யனுப்பலாம். துரியோதன னிடம் என்ன சொல்ல வேண்டும். பீஷ்மரிடமும் திருதராஷ்டிர னிடமும் துரோணரிடமும் எவ்விதம் சொல்லவேண்டும் – என்பதை யெல்லாம் அவரிடம் சொல்லி யனுப்பலாம்” என்றான்.

துருபதன் இவ்வாறு யோசனை சொன்னதும் வாசுதேவன் எழுந்து துருபதராஜனைப்பார்த்துச் சொன்னான்: ‘நீர் சொன்னது மிகவும் சரியான யோசனை. இதுவே செய்யத் தக்கது. அதுவே ராஜ நீதி. நானும் பலதேவரும் கெளரவ பாண்டவர்கள் இருவருக்கும் சம உ ரிமைப் பட்டவர்கள். உத்தரையின் விவாகத் திற்காக வந்த நாம் நம்முடைய நகரத்துக்குத் திரும்புவோம். அறிவிலும் வயதிலும் நீர் அரசர்களுக்குள் பெரியவர். நமக்கு நீர் குருவைப் போன்றவர். திருதராஷ்டிரன் உம்மைப் பெரிதும் மதிக்கிறவன். துரோணரும், கிருபரும் உமக்குப் பால்ய சினே தர்கள் ஆவார்கள். நீர் தூதனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்ப வேண்டும். துரியோதனன் நியாயமான வழிக்கு வராவிட்டால் எல்லா முயற்சிகளும் செய்து எங்களுக்கும் சொல்லியனுப்புங்கள்’ என்றான். 

மந்திராலோசனையில் இவ்வாறு முடிவான பின் கிருஷ்ண னும் அவனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் துவாரகைக்குத் திரும் பிப் போனார்கள். விராடனும், துருபதனும் யுதிஷ்டிரன் முதலானவர்களும் யுத்தத்திற்கு வேண்டிய ஆயத்தம் எல்லாம் செய்தார்கள். தூதர்களை ஆங்காங்கு அனுப்பி எல்லா அரசர் களுக்கும் தெரியப் படுத்தினார்கள். பாண்டவரிடத்தில் நட்புக் கொண்ட அரசர்கள் எல்லாரும் தத்தம் சேனைகளைத் தயார் செய்தார்கள். 

துரியோதனாதியரும் சும்மா இருக்க வில்லை. அவர்களும் யுத்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்ய ஆரம்பித்தார்கள். தங்களுடைய நண்பர்களுக்கெல்லாம் உடனே படைகளைத் திரட்டச் சொல்லி அனுப்பினார்கள். இவ்வாறு பரத கண்டம் முழுவதும் யுத்த முயற்சியின் ஆரவாரம் பரவிற்று. அப்போது அரசர்களுடைய அவசரப் பிரயாணங்களினால் எங் கும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. சேனைகள் வருவதும் போவது மாகிப் பூமி அதிர்ந்தது” என்கிறார் பௌராணிகர். தற்போது நடைபெறும் யுத்த முயற்சிகளைப் போலவே அந்த நாளிலும் நடைபெற்றதாகத் தெரிகிறது. 

துருபதன் தன் புரோகிதரைக் கூப்பிட்டு, வித்துவான் களுள் சிறந்தவரே! துரியோதனனிடம் பாண்டவர்களுக்காகத் தூது போகக் கட வீர். அந்தத் துரியோதனனுடைய குணங்களும் பாண்டவர்களுடைய குணங்களும் உமக்கு நன்றாகத் தெரியும். திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டவர்கள் வஞ்சிக்கப் பட்டார்கள். விதுரன் நியாயத்தைச் சொல்லியும் திருதராஷ் டிரன் கேட்கவில்லை. அந்தக் கிழ அரசன் தன் மகன் சொன்ன வழியே செல்லுகிறான். நீர் திருதராஷ்டிரனிடம் தருமத்தையும் நீதியையும் எடுத்துச் சொல்லவேண்டும். விதுரர் நமக்கு உதவி யாகத்தான் பேசுவார். இதனால் பீஷ்மர் துரோணர் கிருபர் முதலிய மந்திரிகளுக்குள்ளும் யுத்த வீரர்களுக்குள்ளும் பேதம் உண்டாகலாம். மந்திரிகளும் வீரர்களும் மாறுபட்ட அபிப் பிராயம் கொண்டால் அவர்களை எல்லாம் மறுபடி ஒன்று சேர்ப் பதற்குப் பெரிய முயற்சி வேண்டியதாகும். காலதாமதமும் ஆகும். இதற்குள்ளாகப் பாண்டவர்களுடைய யுத்த முயற்சிகள் சரியாக நடைபெறும். நீர் துரியோதனனுடைய நகரத்தில் இருந்து கொண்டு சமாதானம் பேசும் வரையில் அவர்களுடைய யுத்த முயற்சிகள் தளர்ச்சி அடையும். சமாதானம் பேசுவதால் நமக்கு இந்த நல்ல பயனுண்டாகும். சமாதானம் ஏற்பட்டாலும் நன்மையே. துரியோதனன் சமாதானத்திற்கு சைவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆயினு ம் சமாதானப் பேச்சுப் பேசு வதற்காகத் தூதர் போவது நமக்குப் பயனைத் தரும்” என்றான். 

சமாதானம் பேசுவது, உண்மையாகவே சமாதானத்திற்கு வேண்டியதைச் செய்வது, ஆனால் போருக்கும் தயாராக இருந்து அதற்கு வேண்டிய ஆயத்தங்களைத் தளர விடாமல் சய்து கொண்டே இருப்பது, சமாதானப் பேச்சினால் விரோதிகளுடைய கூட்டத்தில் பேதம் உண்டாக்கப் பார்ப்பது, இவை யெல்லாம் பழைய காலத்திலும் கையாண்ட முறையே! அமெரிக்கருடன் ஜப்பானியத் தூதர்கள் 1941-ம் வருஷத்து டிசம்பர் மாதத்தில் சமாதானப் பேச்சுப் பேசி, அது முடிந்த ம மறுகணமே முத்துத் துறைமுகத்தைத் தாக்கி அமெரிக்கருடைய கடற்படையைத் தகர்த்தது புதிய முறையல்ல; பழைய க்ஷத்திரிய முறைபோலவே காணப்படுகிறது! 

பார்த்தசாரதி 

பாண்டவர்கள் சமாதானப் பேச்சுப் பேசி முடிப்பதற்காக ஹஸ்தினாபுரத்துக்குத் தூதரைப் போகச் சொல்லி விட்டுத் தங்கள் பக்ஷத்தில் இருக்கக் கூடிய அரசர்களுக்கெல்லாம் படை களைத் திரட்டித் தயாராகும்படி சொல்லியனுப்பினார்கள். துவா ரகைக்கு அருச்சுனனே நேரில் சென்றான். 

தன்னுடைய ஒற்றர்களால் விஷயங்களை யறிந்து கொண்டு துரியோதனனும் சும்மா இருக்கவில்லை. வாசுதேவன் ஊருக்குத் திரும்பினான் என்பதை அறிந்து வேகமான குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் துவாரகை சென்றான். இருவரும் ஒரே தினத்தில் துவாரகை வந்து சேர்ந்தார்கள். 

கிருஷ்ணன் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். நெருங் கின உறவினர்களானபடியால் இருவரும் கிருஷ்ணன் படுத்தி ருந்த அறைக்குள் சென்று அவன் எழுந்திருப்பதற்காகக் காத்தி ருந்தார்கள். முதலில் உள்ளே பிரவேசித்த துரியோதனன் கிருஷ் ணனுடைய சமீபத்தில் தலைப்பக்கத்தில் ஒரு சிறந்த ஆசனத்தில் உட்கார்ந்தான். பின்னால் வந்த அருச்சுனன் காலண்டை கைகூப் பிக்கொண்டு நின்றான். 

மாதவன் நித்திரை தெளிந்ததும் எதிர் நின்ற அருச்சுனனை முதலில் பார்த்து அவனுக்கு நல்வரவு சொன்னான். பிறகு திரும் பிப் பார்த்து ஆசனத்தில் வீற்றிருந்த துரியோதனனை வரவேற்று அவனையும் ஷேமசமாசாரம் விசாரித்தான். என்ன காரியம் இருவரும் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டான். துரியோதனன் முதலில் பேசினான். 

‘இப்போது எங்களுக்குள் யுத்தம் வரும்போலிருக்கிறது. வந்தால் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். நானும் அருச் சுனனும் இருவரும் உம்மிடத்தில் சமமான பிரியம் பெற்றிருககி றோம். நம்முடைய உறவு முறையும் சமானமாகத்தான் இருக்கி றது; ஒருவன் அதிகம் ஒருவன் குறைவு இல்லை.இப்போது உம் மிடத்தில் நான்முந்திவந்தவனாக இருக்கிறேன. பெரியோர்களுடைய பழைய ஆசாரம் முன்னால் வந்தவனை ஆதரிக்க வேண்டும். பெரியோர்களுக்குள் நீர் சிறந்து விளங்குறீர். ஜனார்த்தனரே! எல்லோருக்கும் மார்க்கம் காட்டுபவராக இருககிறீர். பெரி யோர்கள் நடத்தி வந்த தரும நெறியை ஊர்ஜிதப்படுத்துவீராக. நான் முந்தி வந்தவன்.’ என்று சொன்னான். 

திருதராஷ்டிர புத்திரன் சொன்னதைக் கேட்ட புருஷோத் தமன் “நீ முதலில் வந்தாய் என்பது உண்மையாகவே இருக்க கலாம். ஆனால் அரசனே! குந்தி மகனை முதலில் நான் பாரத் தேன். நீ முந்தி வந்தவனாக இருக்கிறாய். இவன் முந்திப் பார்தத தவனாக இருக்கிறான். இருவரும் இந்த விஷயத்தில் கவே இருக்கிறீர்கள். ஆகையால் நான் இருவருக்கும் சகாயம் செய்ய வேண்டியவன். பரிசுகள் கொடுக்க வேண்டியதில் சிறிய வர்களுக்கு முதலில் கொடுக்கவேண்டும் என்பது பூர்வீக வழககம். போர் செய்வ ஆகையால் பார்த்தனுக்கு முதலில் தருகிறேன். தில் எனக்குச் சமமானவர்களு தம் மகா வீரர்களுமான என் குலத் தவர்கள் நாராயணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திரண்டால் பெரிய படையாகும். யுத்தத்தில் யாருமே அவர்களை நெருங்க முடியாது. அவர்கள் ஒருபுறமிருப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுதம் எடுக்காதவனாகவும் யுத்தத்தில் போர் புரியாதவனாகவும் நான் ஒருவன் மட்டும் இருப்பேன். பார்த்தனே! நன்றாக அநேக தடவை ஆலோசித்து உனக்கு எது பிரியமோ அதை நீ வரிக்க லாம். தனி மனிதனாகவும் ஆயுதமற்றவனாகவும் இருக்கும் என்னு டைய சகாயம் வேண்டுகிறாயா? அல்லது வீரர்களான நாராயணர் களின் சேனா பலத்தை யுத்தத்தில் விரும்புகிறாயா? சொல். பழைய நெறியை அனுசரித்து இளையவனாகிய நீ முதலில் கோரலாம்” என்றான். 

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட தனஞ்சயன் தாமத மும் சந்தேகமுமின்றி உடனே ஆயுத மெடுக்காமல் நீர் என் பக்ஷத்தில் இருந்தால் போதும். என்று பக்தியுடன் பதில் சொல்லி விட்டான். 


அருச்சுனன் ஏமாந்தான் என்று துரியோதனனுக்கு அடங்காத மகிழ்ச்சி. வாசுதேவனுடைய சேனை தன் பங்காக இருக்கட்டும் என்று அவன் கேட்டுப் பெற்றுக்கொண்டான். லக்ஷக் கணக் கான பெருஞ் சேனையைப் பெற்று விட்டேன்!” என்று சந்தோ ஷத்தை அடைந்தவனாக, பலதேவரிடம் போய் நடந்ததையெல் லாம் சொன்னான். பீமனுக்குச் சமானமான மகா பலசாலியான பலராமன் துரியோதனன் சொன்னதையெல்லாம் கேட்டு விட்டுக் கூறினான்: 

“துரியோதனா! விராடன் மகளுடைய விவாக காலத்தில் நான் சொன்னதையெல்லாம் உனக்குச் சொல்லியிருப்பார்கள். உனக்காக நான் வேண்டிய அளவு பேசியிருக்கிறேன். பலமுறை கிருஷ்ணனிடம் சொல்லி வந்திருக்கிறேன். நாம் கௌரவ பாண்டவர்களுக்குச் சம சம்பந்தம் என்று. ஆனால் என் பேச்சைக் கிருஷ்ணன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறான். நான் என்ன செய்ய முடியும்? கிருஷ்ணன் சேராத இடத்தில் நான் கணங் கூட இருக்க முடியாது. நான் பார்த்தனுக்கு உ தவி செய்ய மாட்டேன். உனக்கும் உதவி செய்ய முடியாது. கிருஷ்ணனுக் காக இவ்வாறு தீர்மானித்து விட்டேன். துரியோதனா! நீ மேன்மை பெற்ற குலத்தில் பிறந்திருக்கிறாய். அரசர்களெல்லாம் உன் வம்சத்தைப் பூஜிக்கிறார்கள். க்ஷத்திரிய தர்மத்துக்கு இசைந்த முறையில் யுத்தம் செய், போ!” என்றான். 

துரியோதனன் “அருச்சுனன் நன்றாக ஏமாற்றப்பட்டான். துவாரகையின் பெருஞ் சேனையை நான் அடைந்து விட்டேன். பலராமனுடைய பிரியமும் என்பால் இருக்கிறது. வாசுதவனும் சேனையற்றவனாகச் செய்யப்பட்டான் என்று எல்லா விதத்தி லும் தான் வெற்றியடைந்ததை எண்ணி மகிழ்ந்து ஹஸ்தினா புரம் திரும்பினான். 


“அப்பனே! தனஞ்சயா! சேனாபலத்தை விட்டு விட்டு ஏன் இவ்விதம் தீர்மானித்தாய்! என்று கண்ணன் கேட்க அருச்சு னன் சொன்னான்: “நீர் அடைந்ததைப்போன்ற புகழை நானும் அடைய விரும்புகிறேன். நீர் தனியாகவே இருந்து எல்லா அசுரக் கூட்டத்தையும் ஒடுக்கும் சக்தி படைத்திருக்கிறீர். நானும் ஒருவனாகவே நின்று இவர்கள் எல்லோரையும் வெல்லும் சாமர்த் தியம் படைத்திருக்கிறேன். நீர் ஆயுதம் எடுக்காமல் எனக்குத் தேர் மட்டும் ஓட்டி நான் வெற்றி பெற வேண்டும். இதை வெகு காலமாக நான் ஆசைப்பட்டு வருகிறேன். இந்த விருப் பத்தை நீர் இன்று பூர்த்திசெய்தீர்.” 

இவ்வாறு பார்த்தன் சொன்னதைக் கேட்ட வாசுதேவன் சிரித்துக்கொண்டு என்னுடன் போட்டி போடுகிறாயா! இது உனக்குத் தகுந்ததேயாகும்” என்று ஆசீர்வதித்து அவன்செய்த தீர்மானத்தைப் பாராட்டினான். 

இதுவே கண்ணன் பார்த்தனுக்குச் சாரதியான புண்ணிய கதை. 

மாமன் எதிர்க் கட்சி 

நகுலசகாதேவர்களின் தாயார் மாத்ரிக்கு மத்திர தேசாதி பதி சல்லியன் உடன் பிறந்த சகோதரன். பாண்டவர்கள் உபப் பிலாவிய நகரத்தில் யுத்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் என் று கேட்டு சல்லியன் உடனே பெரியதொரு சேனையைத் திரட்டிக்கொண்டு பாண்டவர்களுக்குத் துணை போகத் தீர்மானித்தான். 

உபப்பிலாவியம் நோக்கிச் செல்லுகையில் இளைப்பாறுவதற் காகச் சேனையை அங்கங்கே நிறுத்தினான். அவ்வாறு முகாம்போட்ட இடங்களில் ஒன்றரை யோசனை நீளத்துக்கு அவன் சேனை பரவி நின்றதாம். ஒரு யோசனை என்றால் சுமார் ஒன்பது மைல் நீளம். 


மத்திர தேசாதிபதி பெரிய சேனையைத் திரட்டிக்கொண்டு பாண்டவர்களைச் சேரும் எண்ணத்தோடு போய்க் கொண்டிருக்கி றான் என்ற செய்தி துரியோதனனுக்கு எட்டியதும் அவன் இதை எப்படியாவது தடுத்துச் சல்லியனைத் தன் பக்கம் சேரும்படி செய்ய வேண்டுமென்று ஆலோசித்துத் தன் உத்தியோகஸ்தர்களை அழை த்து உடனே சல்லியனுக்கும் அவன் பெரும் படைக்கும் எல்லா வித சௌகரியமும் உபசாரமும் செய்ய உத்திரவிட்டான். அரசன் கட்டளைப்படி அழகாய் அலங்கரிக்கப்பட்ட பல மண்டபங்கள் வழியில் அங்கங்கே கட்டப்பட்டுச் சல்லியனுக்கும் அவன் சேனைக் கும் அற்புதமான உபசாரம் செய்யப்பட்டது. தின் பண்டங்களும் பலவித பானங்களும் ஏராளமாகப் பரிமாறப்பட்டன. வழி முழு வதும் இவ்வாறு உபசாரங்கள் செய்யப்பட்டதில் மத்திர தேசா திபதி சல்லியனுக்கு மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று. 

சல்லியன் இதுவெல்லாம் தன் மருமகன் யுதிஷ்டிரன் செய்த ஏற்பாடு என்று எண்ணி உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெருஞ் சேனை யுடன் பூமி அதிரச் சென்று கொண்டிருந்தான். தன்னை யுதிஷ்டிரன் இவ்வாறு கௌரவிக்கிறானே என்று களிப்புற்ற சல்லியன் ஒரு நாள் உபசரித்த வேலைக்காரர்களை ‘இவ்வளவு அன்புடனுடனும் கவனத்துடனும் என்னையும் என் சேனையையும் உபசரித்த வேலைக்காரர்களுக்கு தக்க பரிசு கொடுக்க வேண்டும். அரசனுக்குச் சொல்லி அனுமதி பெற்று வாருங்கள்’ என்று சொன்னான். இதை வேலைக்காரர்கள் தங்கள் எஜமானனான் துரியோதனனிடம் போய்ச் சொன்னார்கள். உபசாரம் செய்த கூட் த்துடன் கூடவே மறைவாகச் சென்று கொண்டிருந்த துரியோ தனன் அப்போது சல்லியன் முன் வந்து நின்று வணங்கினான். 

சல்லியன் ஆச்சரியப்பட்டு “இவ்வளவு உபசாரமும் நீயா செய்தாய்?” என்று சொல்லி’ உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?” என்று கேட்டான். தான் பாண்டவர்களுக்குச் சகாயமாகப் போவது தெரிந்தும் துரியோதனன் பெருந் தன்மையுடன் க்ஷத்திரிய முறைப்படி உபசரித்தான் என்பது சல்லியனுடைய எண்ணம். 

“நீரும் உமது சேனையும் யுத்தத்தில் என்பட்சமிருக்க வேண்டும். இந்தக் கைம்மாறுதான் நான் வேண்டுகிறேன். என்றான் துரியோதனன். 

சல்லியன் திகைத்தான். 

புராணங்களில் தருமோபதேசமும் உலகத்தின் போக்கும் கலந்து கலந்து வரும். இதைக் கண்டு சிலர் தயக்கம் அடைகிறார் கள். இதுவென்ன புராணம்? அதர்மத்தை உபதேசம் செய்கிறதே! இவ்வாறு அநியாயத்தையெல்லாம் பிரசாரம் செய்யலாமா? என்று சிலர் கேள்விகள் கிளப்புவது உண்டு. 

தருமோபதேசமே நோக்கமாயினும் உலகத்தில் நடைபெ றும் குற்றங் குறைகளை எடுத்துக்காட்டி, நல்லவர்களும் படித்த வர்களும் பெரியோர்களுமே சில சமயங்களில் குழியில் விழுவார்கள் என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டுமல்லவா? ஆகையினாலே புராணங்களில் அநேக ங்களில் இவ்வாறான கட்டங்கள் இருக் கும். பெரியோர்களும் மகான்களும் அவதார புருஷர்களும் சில சமயம் பிழைகளும் அதரும காரியங்களும் செய்த நிகழ்ச்சிகளைச் சித்தரித்து மக்களைச் சிந்திக்கச் செய்கின்றன. எத்தகைய கலவி கற்றவர்களுக்கும் அடக்கமும் இடைவிடாத கண் விழிப்பும் வேண்டும் என்பதை நன்றாய்ப் பதியுமபடி உணர்த்துகின்றன. பக்தியும் அபாரக கல்வித்திறமையும் செலுத்தி ஆக்கப்பட்ட இந்த நூல்களின் பெருமை வியப்புக்குரியது. 

அதர்ம காரியங்களைச் சில சமயம் ராமனும் யுதிஷ்டிரனும் செய்ததாகப் பௌராணிகாகள் எழுத வேண்டிய அவசியம் என்ன? யாருடைய நிர்ப்பந்தமுமில்லை. எழுதி அதற்குப் பரிகாரம் சொல்லிக் குழப்புவதற்கு ஒரு அவசியமுமில்லை. வால்மீகியே அதைக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார். வியாசரே எழுதியிருக்கிறார். வேறு யாரோ எழுதி விட்டிருப்பதற்கு இவர்கள் சமாதானம் சொல்ல முன் வரவில்லை. வியாசரும் வால் மீகியுமே தரும் சங்கடங்களை உண்டாக்கிக் கதையின் போக்கை நிர்மாணித்துக்கொண்டு அநீதியும் அதருமமும் செய்ய நேரிட்டதாக எழுதியிருக்கிறார்கள். புராண ஆசிரியர்கள் கையாண்டிருக்கும் முறையின் பயனாகப் புராணத்தைப் படிக்கும் மக்களுடைய உள்ளத்தில் மொத்தத்தில் தருமோபதேசம் பதிகிறது. அநீதிகள் நடந்த கட்டங்கள் மனத்தில் துயரத்தை உண் டாக்கி நிற்கின்றனவே யொழிய அநீதியையாவது அதர்மத்தை யாவது நாமும் செய்யலாம் என்று தோன்றும் முறையில் எழுதப் படவில்லை.இடையறாக் கண்விழிப்பும் பாபச்செயல்களில் பயமும் அடக்கமும் தரும சிந்தனையுமே உண்டாகின்றன. 

தற்காலத்து சினிமாக்களிலும் செய்யப்படாத காரியங்கள் காட்டப்படுகின்றன. இதைப்பற்றி சினிமாக்காரர்கள சொல்லும் சமாதானங்கள் எப்படியிருந்தாலும் மனத்தைக் கவரும்படியான முறையில் தீய காரியங்கள் காட்டப்பட்டு மக்களை இவ்வழியில் செல்லும்படி செய்கின்றன். புராணங்கள் அவ்வாறு செய்வ தில்லை. அவற்றில் பெரியோர்களே சிற்சில சமயம் பாபத்திலும் பிழைகளிலும் இறங்கினதாக வரைந்திருந்த போதிலும், அவ்வழி யில் நாம் தூண்டப்படுவதில்லை. புராண நூல்களுக்கும் பேசும் படங்களுக்கும் இதுவே பெரிய வித்தியாசம். புராணங்களை ஆக்கி யவர்களுக்கும் பேசும் படங்களை ஆக்குபவர்களுக்குமுள்ள யோக் கியதை வித்தியாசமே இதற்குக் காரணம். 


உமக்குப் பாண்டவர்கள் எப்படியோ அப்படியே நானும். எனக்கு நீர் துணையாக இருக்க ஒப்புக்கொள்ள வேண்டும்’ என றான் துரியோதனன். 

சல்லியன் “அப்படியே ஆகட்டும்” என்றான்; 

துரியோதனன் செய்வித்த மகத்தான உபசாரத்தினால் மதி மயங்கிச் சல்லியன் தன் நெருங்கிய பந்துக்களும் தனனுடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரர்களுமான பாண்டவர்களை விட்டு விட்டுத் துரியோதனனுக்குத் துணையாக அவன் பக்கம் சேர்ந்து யுத்தம் புரிவதாக வாக்குக் கொடுத்து விட்டான்! 

அரசர்கள் செய்யும் -உபசாரத்தைப் பெற்றுக்கொண்டால் இத்தகைய ஆபத்து நேரிடும். 

பிறகு சல்லியன் யுதிஷ்டிரனைப் பாராமலே திரும்புவது சரி யல்லவென்று நினைத்து “துரியோதனா! நீ என்னை நம்பு.நான் உனக்கு வாக்குத் தந்து விட்டேன். ஆயினும் யுதிஷ்டிரனைப் பார் த்து விட்டுத் திரும்புகிறேன். அவனுக்கு நான் சொல்லி விட வேண்டியவது அவசியம்!” என்றான். 

“பார்த்துவிட்டுச் சீக்கிரம் திரும்பி வாரும். எனக்குக் கொடுத்த வாக்கை மறக்கவேண்டாம்” என்றால் துரியோதனன், 

”மங்களம்! நீ உன் நகரத்துக்குத் திரும்பிப் போ. நா மோசம் செய்ய மாட்டேன்’ என்று சல்லியன் சொல்லி விட்டு யுதிஷ்டிரன் இருந்த உபப்பிலாவியநகரத்துக்குப் போனான். 

உபப்பிலாவியத்தில் மத்திர தேசாதிபதியை மிகுந்த மகிழ்ச் சியுடன் எதிர்கொண்டு வரவேற்றார்கள். நகுலசகாதேவர்கள் தங்கள் மாமன் வந்ததைக் கண்டு அளவு கடந்த சந்தோஷ அடைந்தார்கள். பாண்டவர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களையெல் லாம் சொன்னார்கள். வரப் போகும் யுத்தத்தில் சல்லியனுடைய துணையைப் பெறுவதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அப்போது சல்லியன் தான் துரியோதனனுக்கு வாக்குத் தந்து விட்டதைப் பற்றிச் சொன்னான். 

மாமனாயிற்றே என்று அஜாக்கிரதையாக இருந்ததினால் உண் டான பயன் து என்று யுதிஷ்டிரன் அறிந்தான். தன் வருத் தத்தை அதிகமாகக் காட்டிக்கொள்ளாமல் ‘வீரரே! நீர் துரியோதனன் செய்த உபசாரத்தினால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குச் செய்த வாக்குத் தத்தததை நிறைவேற்ற வேண்டியதே. நீர் யுத்தத்தில் வாசுதேவருக்கு நிகரானவர். அருச்சுனனைக் கொல் வதற்காகக் கர்ணன் உம்மைத் தன்னுடைய சாரதியாக வைத் துக்கொள்வான். அருச்சுனனுடைய மரணத்து நீர் காரணமாகப் போகிறீரா? அல்லது அருச்சுனனை அப்போது காப்பாற்றுவீரா? இதை நான் கேட்கத் தகாது. ஆயினும் வேண்டிக்கொள்கி றேன்’ என்றான் யுதிஷ்டிரன். 

”அப்பனே! நான் வஞ்சிக்கப்பட்டு துரியோதனனுக்கு வாக் குத் தத்தம் செய்துவிட்டேன். அவன் பக்கத்தில் நின்று உங்களு க்கு விரோதமாகவே யுத்தம் செய்வேன். ஆயினும் கர்ணன் அருச்சுன்னை  எதிர்க்கச் செல்லும்போது என்னைச் சாரதியாக அழைத் தால் என்னால் கர்ணனுடைய தேஜசு பங்கப்பட்டு அருச்சுனன் காப்பாற்றப்படுவான். அஞ்ச வேண்டாம். சூதாட்டத்தில் சிக்கு விக்கப்பட்டுத் திரௌபதியும் நீங்களும் அடைந்த துயரங்கள் முடிந்தன. இனி உங்களுக்கு மங்களம் உண்டாகும். விதியின் போக்கை யாரும் தடுக்க முடியாது. நான் செய்த பிழையைப் பொறுத்துக்கொள்” என்றான், 

விருத்திரன் 

மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக இருந்த இந்திரன் ஒரு காலத்தில் தேவர்களுக்குரிய மரியாதையை மறந்து மதமத்தனாகிப் போனான். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசன் யாருக்காகவும் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று சாஸ்திரம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, தேவ புரோகிதரான பிருகஸ்பதி சபைக்கு வந்த போது எழுந்து ஆசனம் அளித்தல் முதலிய உபசாரங்கள் செய்யா மல் சும்மா இருந்தான். எல்லா வித்தைகளிலும் முதல் ஸ்தானம் பெற்ற மகானும் தேவாசுரர்களுடைய பூஜைக்கு யோக்கியருமான பிருகஸ்பதி இதைக் கண்டு வருத்தப்பட்டார். இது செல்வத்தால் உண்டான தோஷம் என்று எண்ணி ஒன்றும் பேசாமல் சபையை விட்டுத் தம் இல்லத்துக்குப் போய் விட்டார். தேவ குரு இல்லாமல் சபை சோபிக்கவில்லை. 

தான் செய்த அபராதத்தை இந்திரன் உணர்ந்துகொண்டு இதனால் என்ன நேரிடுமோ என்று பயம் அடைந்தான். “ஆசாரியருடைய காலில் விழுந்து சமாதானப்படுத்திக்கொள்ள விரும்ப வேண்டும்” என்று தீர்மானித்தான். 

பிருகஸ்பதியோ இந்திரனால் காண முடியாத மாயநிலையை அடைந்து மறைந்து போனார். இந்திரன் பெரு முயற்சி செய்தும் குருவானவர் கிடைக்காமல் போனபடியால் கவலைக்கு இரையானான். 

ஆசாரியனை இழந்த உடனே இந்திரனுடைய பலம் குறைய ஆரம்பித்தது. அசுரர்களுடைய பலம் அதிகரித்தது. அவர்கள் தேவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். தேவர்கள் பீடிக்கப்பட்ட தைக் கண்டு பிரம்மா இரக்கம் கொண்டு “தேவர்களே பிருகஸ் பதியை இழந்தீர்கள். து இந்திர னுடைய மதீயீனத்தினால் உண்டாயிற்று. இப்போது நீங்கள் துவஷ்டாவின் குமாரனு ம் தபஸ்வியுமான விசுவரூபனை வணங்கி அவனை ஆசாரியனாகக் கொள்ளுங்கள். உங்கள் காரியங்கள் சரிவர நடைபெறும்!'” என்றான். 

பிரம்மாவினால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள் சந் தோஷமடைந்து அவ்வாறே செய்தார்கள். துவஷ்டாவின் குமா ரன் வயதில் மிகக் குறைந்தவன்; ஆயினும் மகாதவஸ்வி. தேவர்கள் அவனிடம் சென்று “சிறியவனாக இருந்தாலும் எல்லா வேதங்களையும் அறிந்தவன். எங்களுக்கு நீ புரோகிதனாக இருக்க வேண்டும். என்று வேண்டிக் கொண்டார்கள். விருவரூபன் ஒப்புக்கொண்டான். 

தபஸ்வியும் சுத்தனுமான அவனுடைய சிக்ஷையின் பயனாகத் தேவர்களும் இந்திரனும் அாரர்களுடைய தொந்தரவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். 

விசுவரூபன் துவஷ்டாவினுடைய குமாரனானாலும் அவனு டைய தாயார் தைத்யகுலத்தைச் சேர்ந்தவள். அந்தக் காரண தி னால் விசுவரூபனைப்பற்றி இந்திரன் சந்தேகம் கொண்டான். இவ னுடைய தாய் நம்முடைய விரோதிகளின் குலத்தைச் சேர்ந்தவள். ஆகையால் இவன் அசுரர்களிடம் பட்சபாதம் கொண்டவனாகவே இருப்பான்’ என்று எண்ணினான். இந்தச் சந்தேகம் வர வர அதிகரித்தது. 

விசுவரூபனை முடித்து விட வேண்டியதாக இந்திரன் தீர்மா னித்து விட்டான். விசுவரூபனால் தனக்கு அபாயம் வரும் என்று எண்ணி இந்திரன் விசுவரூபனை ஏமாற்றி அவன் தவத்தைக் கெடுப்பதற்காக அப்ஸரசு ஸ்திரீகளை ஏவினான். அவர்கள் இந்தி ரன் உத்திரவுப்படி பல வித சிருங்கார சேஷ்டைகள் செய்தும் நர்த்தனம் செய்தும் ஏமாற்றப் பார்த்தார்கள். விசுவரூபன் இதற்கெல்லாம் இணங்காமல் தன் பிரம்மசரியத்தில் உறுதியாக இருந்தான். அதன்மேல் இந்திரன் இந்த வழியில் வெற்றி பெற முடியாது என்று தீர்மானித்துக்கொண்டு பெரும் பாப எண்ணத் தில் இறங்கினான். வச்சிராயுதத்தைப் பிரயோகித்து விசுவரூபனைக் கொன்றேவிட்டான். 

இவ்வாறு தீராத பாபத்தை அடைந்த இந்திரன் அதற்காகப் பிராயச்சித்தம் செய்து தன் பாபத்தை உலகத்துக்குப் பங்கு செய்து கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. பூமியில் சில பாகம் உவர் நிலமாயிற்று என்றும் ஆடவர்களுக்கில் தனாலேயே லாத சில இயற்கைக் கஷ்டங்கள் ஸ்திரீகளுக்கு வந்து 

சேர்ந்தன வென்றும் ஜலத்திற்கு நுரையும் கொப்பளமும் தோஷமாக ஏற் பட்டன என்றும் கதை. 


தன் மகன் அக்கிரமாகக் கொல்லப்பட்ட தினால் துவஷ்டாவுக்கு ந்திரன் மேல் பெருங் கோபம் உண்டாகிப் பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக வேள்வித் தீ வளர்த்து ஹோமம் செய்தான். அதிலிருந்து இந்திரனுக்குச் சத்துருவான விருத்திராசுரன் கிளம் பினான். அக்கினியிலிருந்து உற்பவமான அசுரனைப் பார்த்து துவஷ்டா ”ஓ! இந்திர சத்துருவே! விருத்தி அடைவாயாக! இந்திரனைக் கொல்வாயாக!’ என்று சொல்லித் தேவராஜனை எதிர்க்க ஏவி விட்டான். 

விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் பலத்த யுத்தம் நடந்தது. விருத்திரனுடைய சக்தியே மேலோங்கிற்று. இந்திரன் தோல்வி யடைவான் என்று பயந்து ரிஷிகளும் புலவர்களும் மகாவிஷ்ணு விடம் போய்த் தஞ்சம் அடைந்தார்கள். அப்போது திருமால் அவர்களுக்கு அபயம் சொன்னார். பயப்படாதீர்கள். இந்திரனு டைய வச்சிராயுதத்தில் நான் பிரவேசிப்பேன். தேவராஜன் முடிவில் வெற்றி அடைவான். என்றார். 

தேவர்களும் ரிஷிகளும் தைரியம் அடைந்து திரும்பினார்கள். பிறகு ரிஷிகள் விருத்திரனிடம் சென்று இந்திரனிடம் சிநேக மாக இருக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்கிறீர்கள். இந்த யுத்தம் உலகத்தை மிகவும் பீடிக்கிறது’ என்றார்கள். விருத்திரன் ரிஷிகளை வணங்கி “குற்றமற்றவர்களே! மன்னிக்க வேண்டும்! இந்திரனும் நானும் எவ்வாறு ஒன்றாக முடியும்! இரண்டு சம தேஜசுகளுக்குள் எவ்வாறு நட்பு ஏற்பட முடியும்” என்றான். 

“அப்படிச் சந்தேகப்பட வேண்டாம். நல்லோர்களுடைய சேர்க்கை உறுதியாகவே இருக்கும் என்று ரிஷிகள் சொன்னார்கள். 

விருத்திரன் இணங்கினான். ”சரி! யுத்தத்தை நிறுத்துகி றேன். ஆனால் எனக்கு இந்திரனிடம் நம்பிக்கை இல்லை. நீங்கள் எனக்கு வரம் தர வேண்டும். உலர்ந்த ஆயுதத்தாலாவது ஈர மான ஆயுதத்தினாலாவது, கல்லினாலாவது, மரத்தினாலாவது, உலோகத்தினாலாவது, அஸ்திரத்தினாலாவது, நான் இந்திரனால் கொல்ல முடியாதவனாக இருக்க வேண்டும். பகலிலாவது இரவி லாவது எனக்கு இந்திரனால் மரணம் உண்டாகாமல் நீங்கள் அசீர்வதிக்க வேண்டும். 

“அப்படியே! “என்றார்கள் தேவ ரிஷிகள். 

விருத்திரன் பயந்தது சரியே. இந்திரன் விருத்திரனிடம் உண்மையாக நட்புக்கொள்ளவில்லை. அவனைக் கொலலச் சமயம் பார்த்த வண்ணமாகவே இருந்தான். ஒருநாள் சாயங்காலம் கடற்கரையில் விருத்திரனைச் சந்தித்தான். இது அசுரனை வஞ் சித்துக் கொல்லும் சமயம். இது பகலும் இல்லை. இரவும் இல்லை என்று யுத்தம் துவங்கினான. பெரும் போர் நடந்தது. 

விருத்திரன் ‘ஹே! அதமனே! வீண் போகாத வச்சிராயுத த்தை ஏன் பிரயோகிக்காமலிருக்கிறாய்? ஹரியின் தேஜஸினால் பிரவேசிக்கப்பட்டிருக்கும் உன்னுடைய ஆயுதத்தை என் மேல் செலுத்து: நான் நற்கதியை அடைவேன்’ என்று திருமாலை ஸ்தோத்திரம் செய்து பஜித்தான். 

இந்திரன் விருத்திரனுடைய வலது கையை வெட் டினான். விருத்திரன் அதற்குச் சலியாமல் தன் இடது கையால் இருமபு லக்கையை வீசி இந்திரனைத் தாக்கினான். இடது கையையும் இந்திரன் வெட்டினான். இரண்டு கைகளும் இழந்த விருத்திரன் வாயைத் திறந்து இந்திரனை விழுங்கி விட்டான். “GLIIT!”* என்றார்கள் தேவர்கள். 

ஆனால் இந்திரன் சாகவில்லை. விருத்திரனுடைய வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து பக்கத்திலிருந்த கடற்கரை நுரையில் வச்சிராயுதத்தைப் பிரவேசிக்கச் செய்து அந்த நுரையை விருத்திரன் மேல் பிரயோகித்தான். அப்போது மகாவிஷ்ணு அந்த நுரையில் புகுந்தார். விருத்திரன் மாண்டான். 

இடைவிடாத யுத்தத்தால் மிகவும் பீடிக்கப்பட்ட உலகம் உடனே சந்தோஷம் அடைந்தது. ஆனால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தினாலும் சத்தியம் தவறியதாலும் அவமானம் அடைந்து ஒளியிழந்து வெட்கத்தில் மூழ்கி ஒருவருடைய கண்ணுக்கும் காணப்படாமல் மறைந்து கொண்டான்! 

அரசன் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அரசன் என்றால் அரசு செலுத்தும் தனி மனிதனே குலமோ சபையோ ஏதேனு மொன்று. இந்த நியதிப்படி இந்திரன் மறைந்ததும் தேவர்களும் ரிஷிகளும் மிக்க வருத்தப்பட்டார்கள். 

பிறகு பராக்கிரமும் புகழும் சீலமும் பொருந்திய நஹூஷூ ராஜனிடம் ரிஷிகளும் தேவர்களும் சென்று “தேவ ராஜ்ய பட்டா பிஷேகம் பெற்று நீ எங்களுக்கு இந்திரனாக இருக்க வேண்டும்?” என்று வேண்டிக்கொண்டார்கள். 

“நான் அசக்தன். உங்களை என்னால் எவ்வாறு காப்பாற்ற முடி யும்? இந்திரன் எங்கே? நான் எங்கே?” என்று நஹுஷன் அவனுக்கு இயற்கையான அடக்கத்துடன் மறுத்தான். 

“எங்களுடைய தவத்தின் பயனையெல்லாம் நீ அடைவாய். தயங்காமல் அபிஷேகம் செய்து கொள். உன் கண்களுக்குப்பட்ட எவனுடைய தேஜசும் உன்னை அடையும். இதனால் நீ பலவானாவாய். சுவர்க்கத்தில் தேவராஜனாக இருக்கக் கடவாய்!’ என்று வற்புறு த்திச் சம்மதிக்கச் செய்தார்கள். 

தேவர்கள் இந்திரனை நீக்கிவிட்டு நஹுஷனை தேவ ராஜா வாகச்செய்தார்கள். பிறகு நஹூஷன் எவ்வாறு நாசமடைந்தான் என்கிற கதையும் படிக்க வேண்டிய கதை. 

நஹுஷன் 

பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டுப் பதவியை விட்டு நீங்கின இந்திரன் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டான். தேவராஜ பதவியில் நஹுஷன் அமர்ந்தான். 

முதலில் நஹுன் நன்கு மதிக்கப்பட்டு வந்தான். பூலோகத்தில் அரசனாக இருந்தபோது அவன் சம்பாதித்த புகழும் புண்ணியமும் சில நாட்கள் வரையில் அவனைக் காப்பாற்றி வந் தன். பிறகு கெட்ட காலம் ஆரம்பித்தது. தேவராஜ பதவியை அடைந்து விட்ட கர்வம் அவன் அடக்கத்தையும் சீலத்தையும் கெடுத்து விட்டது. 

சுவர்க்க லோகம் சுகானுபவ உலகமானபடியால் நஹூன் தன் மனத்தை அந்த அனுபவங்களில் செலுத்தினான். காமசித்த னாகி விட்டான். ஒருநாள் இந்திரனுடைய மனைவியாகிய சசீதேவி யைப் பார்த்து மோகங் கொண்டான். துஷ்ட புத்தியடைந்த நஹுஷன் சபையில் கூடினவர்களைப் பார்த்துக் கேட்கலானான். 

“தேவராஜனுடைய மகிஷயான சசீதேவி என்னை ஏன் அடையவில்லை? நானல்லவோ இப்போது இந்திரன்? சீக்கிரம் இந்திராணியை என் கிரகத்திற்கு அனுப்புவீர்களாக என்று உத்திரவிட்டான். 

இந்த விஷயம் இந்திராணிக்குத் தெரிந்து துக்கமும் கோப மும் அடைந்தாள். உடனே தேவ புரோகிதரிடம் சென்று “குருவே! என்னை இந்தக் கொடியவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் !” என்று புலம்பினாள். 

பிருகஸ்பதி அபயதானம் செய்தார். “பயப்பட வேண் டாம். இந்திரன் சீக்கிரம் வந்துவிடுவான். நீ இங்கேயே இரு. உன் புருஷனை மறுபடியும் அடைவாய்’ என்றார். 

சசீதேவி தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கவில்லை என் பதும் பிருகஸ்பதியிடம் சரணம் புகுந்து அவருடைய கிரகத்தில் இருக்கிறாள் என்பதும் அறிந்து நஹூன கோபங்கொண்டான். 

நஹூனுடைய சினத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி னார்கள். “தேவராஜனே! கோபித்துக் கொள்ளாதீர். நீர்கோபங் கொண்டால் உலகமே வருந்தும்.சசீதேவி பிறருடைய மனைவி. அவளை நீர் விரும்பலாகாது. தருமத்தைக் காப்பாற்றுவீராக” என்றார்கள். 

காம மயக்கம் கொண்ட நஹுஷன் தேவர்களுடைய சொல் லைக் கேட்கவில்லை. அவர்களுடைய பேச்சைத் தடுத்து “முன்னர். இந்திரன் அகலிகையைத் தீண்டிய காலத்தில் உங்களுடைய தரு மம் எங்கே மறைந்திருந்தது? அப்போது ஏன் நீங்கள் அவனைத் தடுக்கவில்லை? என்னை மாத்திரம் ஏன் இப்போது தடுக்கிறீர்கள்? தவத்திலிருந்த விசுவரூபனை அவன் கொன்றபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? விருத்திரனை வஞ்சித்துக் கொன்றவனை நீங்கள் ஏன் பொறுத்தீர்கள்? சசீதேவி என்னை வந்து அடைவதே அவளு க்கு நலம். அவளைச் சமாதானப் படுத்தி என்னிடம் ஒப்புவிப் பதே உங்களுக்கும் க்ஷேமம்” என்று கட்டளையிட்டான். 

தேவர்கள் நஹுஷனுடைய கோபத்துக்குப் பயந்து பிருஹஸ் பதியிடம் சமாதானம் சொல்லி இந்திராணியை எப்படியாவது நஹுஷனிடம் சேர்த்து விடுவது என்று நிச்சயித்தார்கள். எல்லோரும் சேர்ந்து அவளிடம் போனார்கள். போய் நஹுஷனுடைய பிரதாபத்தைச் சொல்லி இந்திராணியைத் தேவராஜனுடைய விரு பத்துக்கு இசைய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பதிவிர தையான சீதேவி நடுங்கினாள். 

‘ஐயோ! என்னால் முடியாது! உம்மைச் சரணம் அடைகிறேன்! பிராமணரே! என்னைக் காப்பாற்றும்! என்று பிருகஸ்பதியிடம் அலறினாள். 

பிருகஸ்பதி அவளைத் தேற்றி; சரணமடைந்தவர்களைச் சத்துருவினிடம் காட்டிக் கொடுக்கின்றவன் நசித்துப் போவான். பூமியில் அவன் நட்ட விதையுங் கூட முளைக்கால் நசித்துப் போகும். உன்னை நான் கை விட மாட்டேன். நஹுஷனுக்கு விநாச காலம் நெருங்கி விட்டது. நீ பயப்படாதே. கால விசேஷத் தால் உண்டான சங்கடமான துகால விளம்பத்தால் தீர்த்துக்கொள் ளப்படும்” என்று பொருள் செறிந்த சொல்லைச் சொல்லிக் கஷ் டத்தினின்று தப்புவதற்கு வழியைக் குறித்தார். மகாபுத்திசாலி யான சசீதேவியும் அதைத் தெரிந்துகொண்டு தைரியமடைந்து நஹுஷனிடம் போனாள். 

சசீ தேவியைக் கண்டதும் கர்வத்தினாலும் காமத்தினாலும் மதியிழந்து விட்ட நஹூஷன், இந்திராணி தன்னிடம் வந்து விட் டாள் என்று தாங்காத களிப்பு அடைந்து ஹே! அழகியே! மூன்று உலகங்களுக்கும் நான் அதிபதி. நீ பாபத்துக்குப் பயப்பட வேண்டாம். என்னைப் பதியாக அடைவாயாக என்றான். 

துஷ்டனுடைய சொல்லைக் கேட்டுப் பதிவிரதையான இந்தி ராணி மறுபடியும் நடுங்கினாள். பிறகு மனத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தேவராஜனே! நான் உம்மை அடைய வேண்டியவளே. ஆயினும் ஒரு விண்ணப்பம்! இந்திரன் இருக்கிறானா? இல்லை மாண்டானா? இருந்தால் அவன் இருப்பிடம் எங்கே? இதை நான் விசாரித்துத் தேடிப் பார்த்தும் அவன் அகப்படாமற் போனால் பிறகு என்மேல் தோஷம் இருக்காது. உம்மைச் சேருவேன்” என்றாள். 

நஹுஷன் மகிழ்ச்சியடைந்தான். “நீ சொல்லுவது சரியே. தேடி விட்டு அவசியம் வந்துவிடு. வாக்குத் தத்தத்தைத் தவறாதே’ என்றான். 

இவ்வாறு ஒப்புக்கொண்டு சசீதேவியை பிருகஸ்பதியின் வீட்டுக்கு அனுப்பினான். 


தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று நஹூனைப் பற்றிச் சொல்லி நாதனே! விருத்திராசுரனை சம்ஹரித்த வீரியம் உம்மு டையது. ஆனால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷமடைந்து பீடிக்கப் பட்டு உலகத்தாரின் அபவாதத்துக்குப் பயந்து மறைந்து கிடக்கி றான். அவனுக்கு விமோசனம் சொல்லும் என்று பகவானை வேண்டினார்கள். 

“என்னை ஆராதிக்கட்டும். அவன் பரிசுத்தனாவான். துஷ்ட புத்தியடைந்த நஹுஷன் நாசமடைவான்.’ என்றான் நாராயணன், 

இந்திராணி, கற்புக் கடவுளை வேண்டிக்கொண்டு அந்தத் தேவதையின் அருளால் இந்திரனுடைய இருப்பிடத்தை அடைந் தாள் . மானஸ ஸரோவரத்தில் ஒரு தாமரைக்கொடியின் தண்டினுக்குள் ஒரு நூலில் தன் தேகத்தை -அணு மாத்திரமாகச் செயது. கொண்டு வாசம் செய்துகொண்டிருந்தான். எப்போது பாவம் தீர் ந்து நல்ல நாள் வரும் என்று தவம் செய்துகொண்டு காத்திருந்த தன் பதியின் நிலைமையைப் பார்த்த சசீதேவி துக்கம் பொறுக்கமுடி யாமல் அழுதாள். தனக்கு உண்டான கஷ்டங்களை. இந்திரனிடம் தெரியப்படுத்தினாள். 

இந்திரன் அவளுக்குத் தைரியம் சொல்லி “பாபம் செய்யத் துணிந்த நஹுஷனுடைய காலம் வெகுவாக நெருங்கி விட்டது. நீ ஏகாந்தமாக நஹுஷனிடம் சென்று அவனுடைய விருப்பத்து க்கு இணங்கினதாகவே அவனிடம் சொல். ரிஷிகள் தூக்கிய பல் லக்கில் அவனை உன்னுடைய இருப்பிடத்துக்கு வரச் சொல்லு. நஹுஷன் அழிவான்” என்று சொல்லி அனுப்பினான். 

அவளும் இந்திரன் சொன்னவாறு நகுஷனிடம் சொன்னாள். சொன்னபடி தவறாமல் வந்து விட்டாள் என்று நஹூன் மிக்க மகிழ்ந்து ஹே! கல்யாணி! நீ என்ன விரும்புகின்றாயோ அதைச் செய்ய நான் காத்திருக்கிறேன். சத்தியப் பிரதிக்ஞை தவ றாமல் நீ வந்திருக்கிறாய்” என்றான் மூடன். 

ஆம் வந்துவிட்டேன். நீரே எனக்குப் பதியாகப் போகிறீர். ஜகத்துக்கு நீர் அதிபதியல்லவா? எனக்குப் பிரியமான ஒரு காரி யம் செய்ய வேண்டும். மகாவிஷ்ணுவுக்கும் ருத்திரனுக்கும் தேவா சுரர்களுக்கு மில்லாத ஒரு வாகனத்தை அமைத்துக்கொண்டு நீர் கம்பீரமாக என் இருப்பிடம் வர வேண்டும். பிரபுவே! சப்த ரிஷிகள் உம்மைப் பல்லக்கில் தூக்கி வர வேண்டும்; நான் எதிர் கொண்டு அழைத்துக்கொள்ள வேண்டும்” என்றாள். 

“கற்பனா சக்தியில் சிறந்த அழகியே! நல்ல யோசனை சொன்னாய். நீ விரும்பும் வாகனம் மிகவும் அபூர்வமான வாகனமாகும். எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. யாரைப் பார்க்கிறேனோ அவனுடைய தேஜசு சு என்னை வந்து சேரும் என்கிற வரத்தை அடைந்திருக்கும் என்னை மகரிஷிகள் தூக்கிச் செல்வது நன்றாகப் பொருந்தும். நீ சொன்னவாறே செய்கிறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு, மதோன்மத்தனான ஹூஷன் மகரிஷி களை அழைத்துத் தன் பல்லக்கைச் சுமக்கச் சொன்னான். இந்தப் பாபச் செயல்களைக் கண்டு மூன்று உலகங்களும் பயந்து நடுங்கின.

பல்லக்கில் ஏறிச் செல்லச் செல்லப் பாபத்தின் வேகம் அதிகரித் தது. சசீதேவியின் அழகிய தோற்றத்தை மனத்தில் சிந்தனை செய் து கொண்டு அவளைச் சீக்கிரம் அடைய வேண்டும் என்று நஹு ஷன் ஆத்திரப்பட்டான். பல்லக்கைத் தூக்கிய முனிவர்களை வேத மாக நடக்கும்படி அடிக்கடி சொன்னான். தூ க்கிச் சென்ற ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியரைக் காலால் உதைத்து ஸர்ப்ப! ஸர்ப்ப! என்று அதட்டினான். 

“ஸர்ப்ப! ஸர்ப்ப!” என்றால் நட! நட! என்று பொருள் படும்படியான வேகக் குறிப்பு. ரிக்ஷா ஓட்டுபவர்களை “போ, போ’ என்று சிலர் சொல்லுவது போல அகஸ்தியரை உதைத்த தும் நஹுஷனுடை பாப்பாரம் பூரணமாயிற்று. 

“அதமனே! நீ சுவர்க்கத்திலிருந்து வீழ்வாய்! ஸர்ப்ப ஸர்ப்ப! என்று முனிவர்களை அதட்டிய நீ ஒரு மலை ஸர்ப்பமாகி பூமியில் வீழக்கடவாய்!” என்று சபித்தார் அகஸ்தியர். 

அந்தக் கணமே நஹூன் தலை கீழாக வீழ்ந்தான். மலைப் பாம்பாகப் பிறப்பெடுத்து சாப விமோசனத்துக்காகப் பல்லாண்டு காத்துக்கொண்டு கிடந்தான். 

இந்திரன் மறுபடி தேவராஜ பதவியில் அமர்ந்தான்.சசீ தேவியும் ஆறுதல் அடைந்தாள். அடைந்தாள். இவ்வாறு இந்திரனும் இந்தி ராணியும் பட்ட கஷ்டங்களை யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் மாமனான சல்லியன் உபப்பிலாவிய நகரத்தில் சொல்லி அவர்களுடைய துயரத்தை ஆற்றினான். 

“பொறுத்தார்க்கு வெற்றி உண்டு. செல்வப் பெருக்கி ல் மதம் கொண்டவர்கள் நாசமடைவார்கள். இந்திர னு ம் அவனுடைய பத்தினியும் துக்கம் அடைந்தது போல் நீயும் திரௌபதியும் உன் சகோதரர்களும் சொல்லொணாத கஷ்டங்களை அடைந்தீர்கள். அவையெல்லாம் தீர்ந்து ராஜ்யத்தை சீக்கிரம் அடைவாய். துஷ்டபுத்தியுள்ள கர்ணனும் துரியோதன னும் நஹுஷனைப் போல் நாசமடைவார்கள் என்றான் சல்லியன். 

சஞ்சயன் தூது 

விராடனுடைய ராஜ்யத்தில் உபப்பிலாவிய நகரத்தி லிருந்துகொன்டு பாண்டவர்கள் தங்களுடைய நண்பர்களா கிய அரசர்களுக்கெல்லாம் தூதர்களை அனுப்பிப் பெருஞ்சேனை திரட்டினார்கள். ஏழு அக்குரோணிகள் சேர்ந்தன. எதிர் கட்சியில் கௌரவர்கள் இவ்வாறே தங்கள் சேனையைத் திரட்டி னார்கள். அவர்களுடைய படை பதினோரு அக்குரோணிகளாயிற்று. 

ஒரு அக்குரோணி என்பது தற்காலத்தில் ஒரு டிவிஷன்” என்பதைப் போல் எல்லாவிதப்படைகளும் வீதாசாரப்படி சேர்ந்து கூடிய ஒரு கணக்கு. ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாட்கள் இந்த வீதப்படி சேனை திரட்டுவது அந்தக் காலத்து ராணுவ முறை. ஒரு அக்குரோணியில் 21,870 தேர்கள் இருக்கும். இதை அனுசரித்து மற்ற அங்கங்களில் கணக்கு. இவைகளுடன் ஏல்லாவித ஆயுதங்களும் மற்ற யுத்த சா மக்கிரியைகளும் இருக்கும். இந்தக் காலத்து ‘ஆர்மர் கார்’ கள் செய்யும் வேலையை அந்தக் காலத்தில் தேர்கள் செய்தன. இக் காலத்திய யுத்தங்களில் டாங்கிகள் செய்யும் வேலையை அந்தக் காலத்தில் யானைகள் செய்து வந்தன. 


துருபதன் அனுப்பிய புரோகிதர் திருதராஷ்டிரனிடம் போய் வழக்கப்படி முதலில் கேட்க வேண்டிய குசலப்பிரச்னைகள் தீர்ந் ததும் சபையில் பாண்டவர்களின் சார்பில் பேசலானார். 

“தருமம் அனாதியானது. உங்களுக்குத் தெரியாததல்ல.] திருதராஷ்டிரராஜனும் பாண்டுராஜனும் விசித்திர வீரியனு டைய குமாரர்கள். பிதாவின் சொத்து இருவருக்கும் பொது வானது. அப்படியிருக்கத் திருதராஷ்டிர புத்திரர்கள் ராஜ்ய பதவியை அடைந்து பாண்டு புத்திரர்கள் அதை அடையாமலி ருக்கிறார்கள்.இது நியாயமல்ல. குருவம்சத்தில் பிறந்த பாண்டு வின் குமாரர்கள் தாங்கள் பட்ட துன்பங்களை எல்லாம் மறந்து விட்டுச் சமாதானத்தை விரும்புகிறார்கள். யுத்தம் உலகத்துக்கு தாசம் உண்டாக்கும் என்று அவர்கள் அந்த வழியை வெறுக்கிறார் கள். தர்மத்துக்கும் முன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் இசைய அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுங்கள். தாமதம் வேண்டாம்” என்றார். 

அறிவும் வீரமும் பொருந்திய பீஷ்மர் பேசினார்: 

“தெய்வானுகூலத்தால் பாண்டவர்கள் க்ஷேமமாக இருக் கிறார்கள். பல அரசர்களுடைய சகாயத்தை அவர்கள் பெற்றுப் பலவான்களாயிருந்த போதிலும் போர் புரிவதில் அவர்கள் மனம் செலுத்தவில்லை. சமாதானத்தையே கோருகிறார்கள். அவர் களுக்குக் கொடுத்து விடுவதே தர்மம்” என்றார். 

இவ்வாறு பீஷ்மர் பேச ஆரம்பித்ததும் கர்ணன் கோபங் கொண்டவனாய், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தூதரைப் பார்த்து, “பிராமணரே! நீர் சொன்னதில் என்ன புது விஷயம் இருக்கிறது? பழைய கதையைச் சொல்வதில் என்ன பயன்?ஆட்டத்தில் யுதிஷ்டிரன் இழந்த சொத்தை இப்போது அவன் எவ் வாறு கேட்கலாம்? யுதிஷ்டிரன் தன்னுடைய பிரதிக்ஞையைச் சரி யாக நிறைவேற்றி விட்டு எதையேனும் யாசகமாகக் கேட்கட்டும். மத்ஸ்ய தேசத்து அரசனுடைய சேனையையும் பாஞ்சால ராஜனு டைய பலத்தையும் நம்பியல்லவோ இப்போது ராஜ்யம் கேட்சி றான்? பயமுறுத்தித் துரியோதனனிடமிருந்து எதையும் பெற முடியாது என்பதையறிந்து கொள்ளும். பதின்மூன்றாம் ஆண்டு முடிவதற்குள் பிரதிக்ஞை தவறி விட்டபடியால் அவர்கள் மறுபடி பன்னிரண்டு வருஷங்கள் காட்டிலிருந்து விட்டுத் திரும்ப வேண்டியது” என்றான். 

பீஷ்மர், “ராதையின் மகனே! பயனற்ற பேச்சுப் பேசுகி றாய். இந்தத் தூதர் சொன்னபடி நாம் செய்யாமற் போனால் யுத்தத்தில் தோல்வியடைந்து துரியோதனனும் எல்லாரும் வீழ் த்தப்பட்டு மடிந்து போவது நிச்சயம் என்றார். 

சபையில் ஏற்பட்ட கலவரத்தைக் கவனித்து, திருதராஷ்டிரன் குறுக்கிட்டான். 

உலக நன்மையைக் கருதியும் பாண்டவர்களுடைய நலனைக் கருதியும் பாண்டவர்களிடம் சஞ்சயனை அனுப்புவதென்று நான் தீர்மானித்திருக்கிறேன். தூதரே! நீர் உடனே திரும்பிப் போய் இதை யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டும்” என்று திருதராஷ்டின் சொன்னான். 

பிறகு திருதராஷ்டிரன் சஞ்சயனை அழைத்து அவனுக்குக் கட்டளையிட்டான். 

“சஞ்சயனே, நீ பாண்டு புத்திரர்களிடம் போய் கிருஷ்ணன் சாத்யகி, விராடன் முதலியவர்களை நான் அன்புடன் விசாரித்த தாக நல்ல வார்த்தைகளைச் சொல். அவ்விடம் கூடியிருக்கும் அரசர்களுக்கெல்லாம் என்னுடைய வினயத்தைச் சொல். யாருக் கும். கோபம் உண்டாகாதவாறு யுத்தத்தைத் தவிர்க்கும் முறை யில் எனக்காக நீ போய்ப் பேசுவாய்” என்றான். 


சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சென்றான். உபப்பிலாவியத்தில், அனைவரையும் முறைப்படி வணங்கி விட்டுச் சபையில் நின்று சஞ்சயன் சொன்னான்: 

“தருமபுத்திரரே! மறுபடி உம்மை நான் என் கண்ணால் பார்த்தது என் பாக்கியம். அரசர்கள். சூழ இந்திரனைப் போல் காட்சி தருகிறீர். இந்தக் காட்சி என் உள்ளத்துக்கு ஆனந்தமாக இருக்கிறது. திருதராஷ்டிர மகாராஜா உம்முடைய க்ஷேமத்தை விசாரிக்கிறான். அம்பிகாபுத்திரன் * யுத்தம் என்கிற பேச்சை வெறு க்கிறான். சிநேகத்தை விரும்புகிறான். சமாதானத்துக்காகவே ஆசைப்படுகிறான்.” 

“இவ்வாறு சஞ்சயன் சொன்னதைக் கேட்டுத் தருமபுத்திரன் மகிழ்ச்சியடைந்து “அப்படியாயின் திருதராஷ்டிரருடைய மக் கள் பிழைத்தார்கள். நாம் அனைவரும் பெரும் துக்கத்தினின்றும் தப்பினோம். நானும் சமாதானமே விரும்புகிறேன். யுத்தம் என்பதை நினைத்தால்-என் உள்ளம் வெறுப்பு அடைகிறது. எங்களு டைய ராஜ்யத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டால் நாம் பட்ட துன்பங்களையெல்லாம் மறப்போம்.” என்றான். 

சஞ்சயன் “திருதராஷ்டிர புத்திரர்கள் மூடர்கள். பிதாவின் பேச்சையும் பிதாமகர் பீஷ்மர் பேச்சையும் அவர்கள் தள்ளிவிட்டு மூர்க்கர்களாகவே நடந்துகொண்டு வருகிறார்கள். ஆனாலும் நீர் பொறுமை இழக்கலாகாது. யுதிஷ்டிரரே! நீர் எப்போதும் உயர்ந்த தருமத்தில் நிற்கிறவர். யுத்தம் வேண்டாம். யுத்தத்தி னால் அடைந்த செல்வத்தைக் கொண்டு என்ன சுகம் பெற முடி. யும்? பந்துக்களைக் கொன்று அடையக்கூடிய பாக்கியத்தினால் என்ன நன்மையைப் பெறமுடியும்? ஆகையால் போரைத் துவக்க வேண்டாம். சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட ராஜ்யத்தை அடை ந்தாலும் முதுமையும் மரணமும் யாராலும் விலக்க முடியாது.  துரியோ தனாதிகள் மூடர்கள். அதற்காக நீர் உம்முடைய தருமத்தையும் பொறுமையையும் இழக்கலாகாது. அவர்கள் ‘உங்க ளுக்கு ராஜ்யத்தைத் தரா விட்டாலும் மேலான தருமநெறியை நீர் விட்டு விடலாகாது” என்றான். 

இவ்வாறு சஞ்சயன் சொல்ல யுதிஷ்டிரன் “சஞ்சயனே! நீ சொல்லுவது உண்மையாக இருக்கலாம். தருமமே சிறந்த பொருள். ஆனால் நாம் அதருமத்திலா இறங்கினோம்? கிருஷ்ணனு க்குத் தருமத்தின் ரகசியம் தெரியும். இரு பக்கத்தாரின் நலனை யும் விரும்பும் வாசுதேவன் எவ்வாறு சொல்லுகிறானோ அவ்வாறு நான் செய்வேன்” என்றான். 

கிருஷ்ணன் ”நான் பாண்டவர்களுடைய க்ஷேமத்தை விரும் புகிறேன். திருதராஷ்டிரனும் அவன் புத்திரர்களும் சுகமாக இருக்க வேண்டும் என்பதும் என் எண்ணம். இது சிக்கலான விஷ யம். நானே ஹஸ்தினாபுரம் சென்று இதைத் தீர்க்கலாம் என்று எண்ணுகிறேன். பாண்டவர்களுடைய நன்மைக்கு யாதொரு குந்தகமும் இல்லாமல் கெளரவர்களிடம் சமாதானம் பெற முடியு மானால் அதையே செய்ய விரும்புகிறேன். அவ்வாறு செய்து தீர்த்தேனானால் கௌரவர்கள் யமனிடமிருந்து தப்புவார்கள். நானும் மிகப் பெரிய புண்ய காரியம் செய்தவனாவேன். சமாதானம் ஏற்பட்டு அவர்களுக்குச் சேர வேண்டிய ராஜ்யத்தை அவர்கள் அடைந்தாலும் பாண்டவர்கள் திருதராஷ்டிரனுக்குப் பணியாட் களைப் போல் சேவை செய்வார்கள். அதையே அவர்களும் விரும் புகிறார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்துக்கும் தயாராகவே இருக் கிறார்கள். இந்த இரண்டு முடிவுகளில் திருதராஷ்டிர ராஜன் எதை விரும்புகிறானோ அதை அவன் அடையலாம்” என்றான். 

யுதிஷ்டிரன் சஞ்சயனைப் பார்த்து “சஞ்சயனே! கௌரவர் களுடைய சபைக்குச் சென்று மகராஜனான அம்பிகாபுத்திரனிட ம் இவ்வாறு எனக்காகச் சொல்வீர். ‘உம்முடைய பெருந்தன்மையால் அல்லவோ சிறுவர்களாகிய நாங்கள் ஆதியில் ராஜ்ய பதவியை அடைந்தோம்? ஒரு சமயத்தில் என்னை அரசனாகச் செய்வித்த நீர் இப்போது எங்களை நாடின்றி ஊரின்றி மற்றவர்களை அண்டிப் பிழைக்கும்படி செய்ய வேண்டாம். எங்கள் அன்புக்குரிய அப் பனே! இரு பக்கத்தவர்களும் பிழைக்க, விசாலமான பூமி இருக்க விரோதம் செய் து கொள்ள வேண்டாம்’ இவ்வாறு எனக்காக திருதராஷ்டிரனை வேண்டிக்கொள்ள வேண்டும். பிதாமகரை எனக்காக நமஸ்கரித்து ‘உம்முடைய பேரக் குழந்தைகள் எல்லோரும் அன்போடு வாழ்ந்து பிழைப்பதற்கு வழி தேடுவீராக” என்று அவரையும் கேட்டுக்கொள்ளும். அவ்வாறே விதுரருக்கும் சொல் வீர். அவரே நம்முடைய குலத்தின் முழு ஹிதத்தையும் அறிந்து சொல்லக் கூடியவர். துரியோதனனைச் சமாதானப்படுத்தி அவ னுக்கும் என் சார்பில் சொல்லும்; “அன்புக்குரிய தம்பியே! ராஜ குமாரர்களாகிய எங்களைத் தோல் ஆடை உ டுத்தி வனத்தில் வசிக் கச் செய்தாய். அலற எங்கள் மனைவியை ராஜசபையில் துன்புறுத் தினாய். இதையெல்லாம் பொறுத்தோம். இப்போதாவது எங்களு டைய நியாயமான உரிமையை எங்களுக்குக் கொடுத்து விடு. பிறருடைய சொத்துக்கு ஆசைப்படாதே! நாங்கள் ஐவர்.ஐவர் களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடுத்துச் சமாதானம் செய்து கொள். பாரதகுலச் சிங்கமே, அனைவரும் திருப்தியாக வாழ்வோம்! இவ்வாறு துரியோதனனுக்குச் சொல். சஞ்சயனே! சமாதானத்துக் ம் யுத்தத்துக்கும் இரண்டுக்கும் நான் தயாராய் இருக்கிறேன்!” 

இவ்வாறு யுதிஷ்டிரன் சொல்லிய பிறகு சஞ்சயன் பாண்டவர் களிடமும் கேசவனிடமும் விடைபெற்றுக்கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றான்.

– தொடரும்…

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *