கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 3,229 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

31 – 35 | 36 – 40 | 41 -45

36. கடலரசி வெட்கங்கெட்டவள் 

நமது வேதாந்திகளும் சரி, கவிஞர்களும் சரி, பேரின்பம் எத்தன்மையது என்பதை உணர்த்த சிற்றின்பத்தையே வழிகாட்டியாகக் கொண்டார்கள். மனிதனுடைய ஐந்து புலன்களும் ஒருங்கே ஒரு நிலையில் பொருந்துவது சிற்றின்பம் ஒன்றில் மட்டுந்தான் என்ற காரணத்தால் அதைக் காட்டிப் பேரின்பத்துக்குப் புலன்களைத் திருப்பலாம்; நிலைக்கச் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். ஆகையால் நாயக, நாயகி பாவம் என்ற தத்துவத்தைச் சிருஷ்டித்தார்கள். பேரின்பம் எத்தன்மையது? இறைவனிடம் நாம் அடையும் சுகம் எப்பேர்ப்பட்டது? என்று கூற, “இள முலைமானார் வலியவணைத்த சுகம் போலே” என்று அருணகிரிநாதரும் தமது பஞ்சரத்தினத் திருப்புகழில் பாடினார். அந்தப் பாட்டுக்கு ஓர் உதாரணமாக அன்று திகழ்ந்தான் கடல்வேந்தன். 

சற்று விலகியே நின்ற அவனைக் கழுத்தைத் தனது கைகளால் வளைத்து மார்பை நோக்கி இழுத்து நிலக்கள்ளி வலிய அணைத்துக் கொண்டதும். தனது உறுதியெல்லாம் குலைந்து விட்டதைப் புரிந்து கொண்டான் மகாவீரனான கடல்வேந்தன். நிலக்கள்ளியின் பனித்த மார்பில் அணைக்கப்பட்ட தலையை அந்த இடத்திலிருந்து விடுவித்துக் கொள்ளவும் சக்தியற்றவனாகி விட்டபடியால் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசையவே செய்தான். அவன் தலையை மார்பில் கடுமையாக அணைத்துக்கொண்ட நிலக்கள்ளி, அவனை லேசாகக் கட்டிலை நோக்கித் தள்ளி இழுத்துச் சென்றாள். தனது உடலை அவன் உடலோடு பொருத்தியவண்ணம் கட்டிலை அடைந்ததும் பஞ்சணையில் அவனைச் சாய்த்து அவளும் சாய்ந்து. சாய்ந்து விடவே அதுவரை வாளாவிருந்த வலிய கரங்களும் அவள் முதுகில் தவழத் தொடங்கின. இடைச் சேலையை சிறிது நெகிழ்த்தவும் முற்பட்டன. இதையும் எதிர்க்காதது மட்டுமல்ல அவன் கைகளின் கோரிக்கைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் உதவியும் செய்தாள். அவன் கை சில சமயங்களில் இடம் தெரியாமல் தடுமாறியபோது தனது கையொன்றால் அதைப் பிடித்து வழிகாட்டினாள். அவள் கால்களுக்குக் கீழே அகப்பட்டுக் கொண்டிருந்த அவன் கால்களிலொன்று தன்னை விடுவித்துக் கொண்டு மேலெழும்ப முற்பட்டபோது தனது கால்களைச் சிறிது விலக்கி அதற்கு இடமும் கொடுத்தாள். அந்தக் கால் மேல் புறமாக வந்து, அந்த எழில் மேடையில் தவழ்ந்தபோது இன்பம் அளித்த இம்சையால் சிறிது முனகவும் செய்தாள். அந்த முனகல் அவள் இச்சை வேகத்தை உச்சிக்குக் கொண்டு போயிருக்கவேண்டும். அந்த விநாடி அவள் உடலின் முழு அழுத்தம் கடல்வேந்தன் மீது விழுந்தது. 

கடல்வேந்தன் புலன்கள் அவள் உடலைத் தவிர வேறெதிலும் ஈடுபடும் சக்தியை இழந்தன. சாளரத்துக்கு வெளியே ‘ஹோ’வென்ற அலை ஓசையைக் காது வாங்க வில்லை.அவன் கட்டிலுக்கு மேலிருந்த கூரையில் தீட்டிருந்த ஓவியங்களைப் பார்க்க முடியவில்லை அவன் கண்களால், புத்தி அவள் அவயவ லக்ஷணங்களைத் தவிர வேறெதையும். சிந்திக்க மறுத்தது. இதயம் அவள் இதயத்தோடு கலந்துவிட அவள் இதய ஒலியுடன் சேர்ந்து சப்தித்தது. துரிதமாக ஓடியது. மூச்சு பெரிதாக வந்தது. பேச்சு எதுமில்லை, இப்படி எல்லாப் புலன்களையும் அவள் அழகின் மீதே நிலைக்க விட்டதால் சொர்க்கம் என்பது தனியாக ஏதுமில்லை என்ற முடிவுக்கு வந்த கடல் வேந்தன், தன் மீது படுத்திருந்த மலர் மேனியை மீண்டும். தடவினான். சில இடங்களை முரட்டுத்தனமாக வருடினான். தன்னால் எத்தனை இம்சையை விளைவிக்க முடியுமோ அத்தனையையும் விளைவித்தான். 

நிலக்கள்ளிக்கு அத்தனை இம்சையும் வேண்டியிருந்தது. உண்மையில் ஆண்கள் அளிக்கும் இம்சைக்குப் பெயர்தான் அவள் தீர்மானித்தாள். தனது முரட்டுத் சுகம் என்று னத்தையும் காட்டினாள். அவன் இதழ்களைப் பற்றி யிருந்த தனது இதழ்களை லேசாக விலக்கி, அவள் கீழ் உதட்டைப் பற்களால் லேசாகக் கவ்வினாள்.அவன் பற்களும் பதிலளிக்கத் தொடங்கி அவள் இதழைச் சற்று வலிக்கும் படியாகவே பற்றியதன்றி, நாவும் அவள் நாவுடன் உறவு கொண்டாடியது. அவன் உடல் சற்று நிமிர்ந்து கைகள் அவள் பூவுடலைப் பக்கவாட்டில் புரட்டிக் கொண்டது. அப்படி புரட்டி அவன் உடலும் திரும்பவே அக்கம் பக்கமாக இணைந்த இருவர் உடல்களும் அப்படி நெருங்கியே கிடந்தன பல விநாடிகள். நெருங்கிக் கிடந்தனவேயன்றிச் செயல்படாமல் இருக்கவில்லை. 

அவள் கையொன்று எழுந்து அவன் குழல்களைக் கலைத்தது. பிறகு அவள் முகம் அவன் மார்பில் புதைய கண்கள் மூடிக்கொண்டன. மூடிய கண்கள் உணர்ச்சிகளை விழிக்கச் செய்து விட்டதால் அவள் கால்கள் அவன் கால்களிடையே பாய்ந்தன. அவற்றைத் தனது கால்களால் அழுத்திய கடல்வேந்தன், மெல்ல அவள் முதுகில் கையைச் செலுத்தி மார்புக் கச்சையை அவிழ்க்கத் தொடங்கினான். அது அவிழ்ந்ததும் உணர்ச்சிகளின்  நெகிழ்ச்சி எல்லை மீறியது. கரை உடைந்தது. பிறகு ஏதேதோ அற்புதங்கள்! புலன்களின் தாண்டவம்! ஐக்கியம்! இது சிற்றின்பமா? பேரின்பமா? விளக்கமுடியாத தத்துவம். இதுதான் பேரின்பம் என்று கடல்வேந்தன் தனக்கு விளக்கம் தந்து கொண்டான். காலச்சக்கரம் சுழன்று காலையையும் மெதுவாகத் தோற்றுவிக்கத் தொடங்கியது. 

அந்த உணர்வு வந்ததும் கடல்வேந்தன் துரிதமாக எழுந்தான். “நிலக்கள்ளி! எழுந்திரு உன் மரக்கலத்துக்குப் போகவேண்டும்” என்றான். 

பஞ்சணையில் படுத்தபடி அந்தப் பஞ்சவர்ணக்கிளி தனது இதழ்களை விரித்துப் புன்முறுவல் காட்டினாள், சிறிது தலையைத் தூக்கித் தனது உடலைக் கவனித்தாள்! அலங்கோல நிலையைக் கண்டாள். விலகிக் கிடந்த தனது அழகிடங்களைக் கண்டாள். அவற்றைக் கண்டதில் இன்பமும் எய்தியதால் “வேந்தரே!” என்று கடல்வேந்தனை அழைக்கவும் செய்தாள். 

“ஏன்?” என்று வினவினான் கடல்வேந்தன். 

“சற்றுத் தகளியை எடுத்து வாருங்கள்” என்றாள் நிலக்கள்ளி. 

“எதற்காக?”

“இதென்ன கேள்வி? சீக்கிரம் கொண்டு வாருங்கள்” என்று அதட்டினாள் நிலக்கள்ளி. 

அதற்குமேல் ஏதும் பேசாத கடல்வேந்தன் தகளியைக் கொண்டு வந்து அவள் கையில் கொடுக்கப் போனான் “வேண்டாம். நீங்களே காட்டுங்கள்” என்ற நிலக்கள்ளி, அதில் தனது முகத்தைக் கவனித்தாள், உதட்டில் சிறிது காயம் இருந்தது. கன்னத்திலும் ஓரிடம். சிவந்து கிடந்தது. அவற்றைக் கண்டு தனது புன்முறுவலை மேலும் விகசித்துக் கொண்ட நிலக்கள்ளி, “அதை வைத்துவிட்டு வாருங்கள்” என்று உத்தரவிட, அப்படியே செய்து விட்டு வெளியே செல்ல முற்பட்ட அவனை “அதற்குள் கதவைத் திறக்க வேண்டாம். இப்படி வாருங்கள்” என்றாள். 

அவன் நின்றபடி. ஏதோ சிந்தித்துத் தலையை அர்த்தமில்லாமல் அசைத்துக் கொண்டான். பிறகு கட்டிலை நோக்கி வந்து அவள் அருகில் நின்று கொண்டு, ”இப்பொழுது என்ன செய்யவேண்டும்?” என்று விளவினான் மூர்க்கத்தனமாக. 

அவள் மெல்ல நகைத்துவிட்டு, “செய்ததைச் சீர்திருத்த வேண்டும்” என்று கூறி, கலைந்து கிடந்த தனது சேலை யைக் காட்டினாள். 

அவனும் நகைத்துவிட்டு, அவள் சேலையைச் சரி செய்து இடுப்பில் முடிச்சும் போட்டான். “இனி நீ எழுந்திருக்கலாம்” என்றான். “கடல் வேந்தன் இந்த நிலைக்கு வந்து விட்டான்” என்றும் சொன்னான். 

அவள் தனது பெரு விழிகளை அவன் மீது திருப்பி “எந்த நிலைக்கு?” என்று கேட்டாள். 

“போரில் வேலைப் பிடித்த கை, இப்பொழுது சேலையைக் கட்டுகிறது. நாணை இழுத்து முடிபோட்டு வில்லை வளைத்த கை, இப்பொழுது வேறு முடிச்சுப் போடுகிறது’ என்றான் கடல்வேந்தன். 

அவனை அன்புடன் நோக்கிய நோக்கிய நிலக்கள்ளி மெல்ல எழுந்து தலையைக் கோதிவிட்டு மேலாடையையும் போர்த்திக்கொண்டு அவனருகே வந்து, அவன் தோளின் மீது தனது கையொன்றைப் போட்டுக் கொண்டு “பாவம்!” என்று அவனை அனுதாபத்துடன் நோக்கினாள். 

அவன் கைகள் அவளை அணைந்தன. “வேடிக்கைக்குச் சொன்னேன் நிலக்கள்ளி! உனக்குப் பணிவிடை செய்வதில் எனக்குள்ள வேகம் போரில் கிடையாது” என்று கூறினான். பிறகு சாளரத்துக்கு வெளியே நோக்கினான். 

காலை நேரக் கடல் பார்ப்பதற்குப் பரம ரம்மியமா யிருந்தது. தூரத்தே வானம் கடல் மட்டத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதை அவளுக்கும் காட்டிய வேந்தன் ‘”நிலக்கள்ளி! நீயும்,நானும் வானத்தையும், கடலையும் போலத்தான்” என்று கூறினான். 

நிலக்கள்ளி இயற்கையின் அந்த அழகைப் பார்த்து உணர்ச்சி அலைகளில் சுழன்றாள். “என்னைக் கடலரசிக்கு உவமையாகச் சொல்லாதீர்கள்” என்றாள். 

“ஏன்?” குழப்பத்துடன் வினவினான் கடல்வேந்தன். 

”அதோ பாருங்கள். வானம் திடமாக நிற்கிறது. இவள் தான் தனது அலைக்கரங்களை உயர்த்தி உயர்த்தி, வானத்தை இழுக்க முயலுகிறாள். கடலரசி வெட்கம் கெட்டவள்” என்றாள் நிலக்கள்ளி. 

“நிலக்கள்ளி!” மெதுவாக அழைத்தான் கடல்வேந்தன்.

“என்ன என் வேந்தரே!” என்றாள் நிலக்கள்ளி. 

“பிறர் குற்றத்தையே நாம் கவனிக்கிறோம்.”

“அதாவது…?” 

“…நம் குற்றத்தை மறந்து விடுகிறோம்”

“புரியும்படி சொல்லுங்கள். 

“நேற்று இரவு அதோ அந்த அலைகளைப் போல் இரு கால்கள் எழுந்து என் கழுத்தையும் வளைத்தன”. இதை முடிக்கவில்லை அவன். “அப்படியா சமாசாரம்” என்று சீறிய நிலக்கள்ளி தனது இருகைகளாலும், அவனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே போய் அறைக்கு வெளியே தள்ளி, கதவையும் தாளிட்டாள். 

வேகமாகத் தள்ளப்பட்டதால் படி தடுக்கிக் கீழே விழுந்துவிட இருந்த கடல்வேந்தன், சமாளித்துத் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அவன் விழுந்ததைப் பார்த்து, ஒடிவந்த ஒரு மாலுமி, “எசமான்! ஏன்? படி தடுக்கி விட்டதா?” என்று வினவினான். 

“இல்லை. புயலடித்தது” என்று கூறிய கடல்வேந்தன் எழுந்து, “உபதளபதி செல்ல ஒரு படகு சித்தமாகட்டும்” என்றான். 

“உ.த்தரவு” என்றான் மாலுமி. 

”இன்று மாலை நமது மரக்கலங்கள் நகரும். அதையும் அறிவித்துவிடு நமது மாலுமிகளுக்கு” என்று உத்தரவிட்டு நீராடும் அறையை நோக்கி வேகமாக நடந்தான். 

37. வேந்தன் சோதிடம் 

முசிறியில் தமது மாளிகையிலிருந்து கடலையும், அதை அடுத்திருந்த முசிறியின் நிலப்பகுதியையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் அழும்பில்வேளின் முகத்தில் கவலையும், கலக்கமும். கலந்த உணர்ச்சிகள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் எதிரே யிருந்த கடல் அந்த மாலை வேளையில் ரம்மியமாகத்தான் இருந்தது. அதில் அக்கினிப்பிண்டம் போல் மூழ்கிக் கொண் டிருந்த மாலைக் கதிரவன் நிலப்பகுதியைப் பொன்மயமாக அடித்துக் கொண்டிருந்த காட்சி, யார் மனத்தையும் மயக் ரும்படியாகவே இருந்தது. கடலை அடுத்திருந்த யவனர் சேரியும், சற்றுத் தென்புறத்திலிருந்த அராபியர் குடி யிருப்பும் சிறிய வீடுகளையும், குடிசைகளையுமே கொண்ட தாயிருந்தாலும், கதிரவன் பூசிய பொன் மெருகால் அவை பெரும் அழகைப் பெற்றிருந்தன. கடலுக்குள் புகுந்த சுள்ளியாற்று நீர்கூட பொன்னிறம் பெற்றதால் அதன் சிற்றலைகள் தங்கப் பாளங்களைப்போல் எழுந்து, வீழ்ந்து கொண்டு, ஏதோ ஜால வித்தை காட்டிக் கொண்டிருந்தன. இத்தனை அழகையும் அமைச்சர் பார்த் தும், அதை ரசிக்கும் நிலையில் இல்லை அவர் மனம். சில நாள்களாக சஞ்சயன் கொண்டு வந்த செய்திகளி விருந்து, யவனர் குடியிருப்பிலிருந்தும், அராபியர் குடி விருப்பிலிருந்தும் எந்த நேரமும் புரட்சி கிளம்பலாம் உதிர்பார்த்த அழும்பில்வேள், அப்படி புரட்சி ஏற்படும் பட்சத்தில் தமது சிறுபடையைக் கொண்டு அதைச் சமாளிப்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். அதைப்பற்றி மன்னருக்கு அனுப்பிய செய்திக்கு அன்று வரை பதிலேதும் கிடைக்காதது, அவர் கவலையை உச்ச நிலைக்குக் கொண்டு போயிருந்தது. 

இத்தகைய மனநிலையிலிருந்த அழும்பில்வேளைப் பின்னாலிருந்து அணுகிய சேர தூதுவனான சஞ்சயன், “அமைச்சர் அதிகக் கவலையுடனிருப்பதாகத் தெரிகிறது” என்றான் மெதுவான குரலில். 

அமைச்சர் சற்றே தலையைத் திருப்பி சஞ்சயனை நோக்கி, “நீர் சில நாள்களாக அடுத்தடுத்துக் கொண்டு வந்த செய்திகளைக் கேட்டு, கவலையுடனில்லாமல் வேறு எப்படி இருப்பேனென்று எதிர்பார்க்கிறீர்?”  என்று உஷ்ணத்துடன் கேட்டார். 

“செய்திகளைக் கொண்டு வருவது என் கடமை..” என்று சஞ்சயன் இழுத்தான். 

“அவற்றைச் சமாளிப்பது என் கடமையாகும்?” என்று எரிச்சலுடன் பதில் சொன்னார் அமைச்சர். 

சஞ்சயன் மெல்ல இளநகை பூத்தான். “தாங்கள் அமைச்சரல்லவா? தாங்கள் பிரச்னைகளைச் சமாளிக்காமல் வேறு யார் சமாளிப்பார்கள்?” என்று வினவினான் சஞ்சயன் புன்முறுவலின் ஊடே. 

அமைச்சர் முகத்தில் கடுமை அதிகமாயிருந்தது. “இந்தப் பதவியை வேண்டுமானால் உமக்குக் கொடுத்து விடுகிறேன். வரப்போகும் புயலை நீர்தான் சமாளித்துப் பாருமே” என்று கூறினார் கடுமையைச் சொற்களிலும் காட்டி. 

“நெருக்கடி வரும்போது பதவியைத் துறப்பது யாருக்கும் எளிது” என்றான் சஞ்சயன், 

இதற்குப் பதில் சொல்லவில்லை அமைச்சர். “சரி, சரி, இன்றைக்கு என்னதான் சமாசாரம் கொண்டு வந்திருக்கிறீர்?” என்று எரிச்சலுடன் கேட்டார் அமைச்சர். 

சஞ்சயன் முகத்தில் கவலை தெரிந்தது. “அதிகமாகப் போனால் இன்னும் இரண்டு நாள்களுக்குள் கிளேஸியஸ் தலைமையில் யவனர்கள் முசிறியின் துறைமுகத்தைக் கைப்பற்றலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துவிட்டான்” என்றான் சஞ்சயன். 

“என்ன ஏற்பாடுகளோ?” என்று கேட்ட அமைச்சர் திரும்பி தாழ்வறைக் கைப்பிடிச் சுரில் சாய்ந்து கொண்டார். 

“யவனர்கள் இரண் பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டிருக்கிறார்கள். ஒரு பிரிவு கடலைப் பாதுகாக்கும். இரண் உடாவது பிரிவு நமது மாளிகைப்பகுதியை நோக்கி வரும்” என்ற சஞ்சயன் நிதானித்தான். 

”உம். மேலே சொல்லும் என்றார் அமைச்சர். 

சஞ்சயன் அமைச்சரை உற்று நோக்கிவிட்டு, “நமது யவனர் குடியிருப்பில் எத்தனை குடிமக்கள் இருந்தார்கள்?” என்று கேட்டான். 

“ஏழாயிரம் பேர்” என்றார் அமைச்சர். 

“இப்பொழுது இன்னும் மூவாயிரம் பேர். அக்கம் பக்கத்துப் பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள். ஆக பத்தாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுடன் ஐயாயிரம் பேர் அராபியர்களும் வந்திருக்கிறார்கள்”. 

“அதாவது மொத்தம் பதினாயிரம் பேர்.” 

“ஆம்.”

“இவர்களுடன் யவனர் மரக்கலங்களில் மட்டும் மூவாயிரம் மாலுமிகள் வந்திருக்கிறார்கள். கடல் போரில் இணையற்றவர்கள்” 

“நல்லது” 

“எது நல்லது?” 

“கடல்வேந்தன் இல்லாதபோது பவனர் போர்க் கலங்களும், மாலுமிகளும் நமது கடல் வாயிலை அடைத்து நிற்பது…” என்ற அமைச்சர், “இந்தச் சமயத்தில் இந்தக் கடல்வேந்தன் எங்கு தொலைந்தான்?” என்று அலுத்துக் கொண்டார். 

“யார் கண்டது?” 

“என் பெண்ணை வேறு அழைத்துப் போயிருக்கிறான். ஒரு வாரத்துக்குள் திருப்பி அனுப்புவதாகச் சொன்னான். வாரம் ஒன்றாயிற்று” என்றார் அமைச்சர். 

“வந்துவிடுவான்” என்ற சஞ்சயன் .சமாதானம் சொன்னான். 

”நீர் என்ன குடுகுடுப்பைக்காரனா, எனக்கு இஷ்டமானதைச் சொல்ல? வயது வந்த பெண்ணை அழைத்துப் போயிருக்கிறான். யாரும். கேட்பாரில்லை” என்று வேதனைப்பட்டுக் கொண்டார் அமைச்சர். 

அமைச்சரே கேட்காதபோது, மற்றவர்களை அவர் குறை சொன்னதை சஞ்சயனால் ஜீரணிக்க முடியவில்லை யென்றாலும், அதைப்பற்றி அவன கேட்காமல், “கடல் வேந்தன் நாணயஸ்தன். நிலக்கள்ளியும் சாதாரணப் பெண் அல்ல. அவளுக்கு எந்தத் தீங்கும் நேராது. கவலை வேண்டாம்” என்று சமாதானம் சொன்னான். 

அத்துடன் அந்தப் பேச்சை விட்ட அழும்பில்வேள், “சஞ்சயரே! நாளைக்கே யவனர்கள் புரட்சி செய்தால் வர்களைத் தடுக்க நம்மிடமிருக்கும் இந்தத் துறைமுகப் படை போதாது. நீர் எதற்கும் வஞ்சியின் சாலையில் இருக்கும் தளத்துக்குச் சென்று, ஒரு பகுதியை இங்கு அனுப்பச் சொல்லும்” என்று கூறியதன்றி, “வாரும் ஓலை எழுதித் தருகிறேன்” என்று தமது அறைக்குச் சஞ்சயனையும் அழைத்துக்கொண்டு சென்றார். அங்கிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து வஞ்சி சாலை ரகசியப்படைத் தளபதிக்கு ஓர் ஓலையும் எழுதி, ஓலையில் தமது சேர இலச்சினையை பொறித்தார். “அங்குள்ள படையின் ஒரு பகுதி நாளை மாலைக்குள் துறைமுகப் பகுதிக்கு வரட்டும். நீரும் இங்குள்ள நிலையை வற்புறுத்திச் சொல்லும் படைத்தலைவனுக்கு” என்றும் சொன்னார். 

அன்று இரவின் ஆரம்பத்திலேயே புறப்பட்ட சஞ்சயன், நள்ளிரவுக்கு முன்பாகவே படைத்தளத்தை அடைந்தான். படைத்தளம். மலையின் மறைவுகளிலும், தலயை அடுத்த காட்டுப் பகுதியிலும் சின்னஞ்சிறு குடிசைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் ஊடே சென்று, அந்தப் படைகளுக்கு நடுவில் அமைக்கப் பட்டிருந்த நாலைந்து கல் கட்டடங்களில் ஒன்றின் முன்பு நின்ற சஞ்சயன், அங்கிருந்த காவல் வீரனை நோக்கி, “படைத் தலைவரை உடனடியாகப் பார்க்கவேண்டுமென்று சொல்” என்றான். 

“இப்பொழுது யாரையும் பார்க்க முடியாது” என்று தத்துவனே பதில் சொல்லி விட்டான். 

“அமைச்சர் அழும்பில்வேளிடமிருந்து வருகிறேன்” சஞ்சயன் சினத்துடன் கூறினான். 

“யாரிடமிருந்து வந்தாலும் உள்ளே போக முடியாது. ஓலையிருந்தால் கொடுங்கள். நான் எடுத்துச் செல்கிறேன்”  என்று கையை நீட்டினான் 

“யாரிடமும் கொடுக்க முடியாது” உறுதியாகச் சொன்னான் சஞ்சயன் 

“என்னிடம் கூடவா?” என்று உள்ளிருந்து வந்த குரலை அடுத்து, குரலுக்குடையவரும் வெளியே வந்தார். 

புலவரை அங்கு முற்றும் எதிர்பாராத சஞ்சயன், “புலவர் பெருமானே! இது ரகசிய ஓலை. யாரிடமும் கொடுப்பதற்கில்லை” என்று கூறினான். 

“உங்கள் இஷ்டம்” என்று சொன்ன புலவர், மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். 

அவர் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் சேரர் படைத்தலைவரான வில்லன் கோதை வெளியே வந்தார். 

“சரி. ஓலையைக் கொடும்” என்று கையை நீட்டினார்.

சஞ்சயன் ஒரு விநாடி சிந்தித்தான். சேரர் தரைப் படைகளுக்கெல்லாம் வில்லவன் கோதை தலைவராத லால் அந்த சிறு தளத்தின் தலைவர் பார்க்கக்கூடிய ஓலையை அவர் பார்க்கலாம் “என்று தீர்மானித்தான் சஞ்சயன். ஓலையை அவரிடம் கொடுத்தான்.

அந்த ஓலையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்ற வில்லவன் கோதை, நீண்ட நேரம் வெளியே வராததால் சஞ்சயன் எதிரேயிருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டான். முசிறியில் புரட்சி ஏற்படக்கூடிய நிலையில் வில்லவன்கோதை, புலவர், காவலன் எல்லாரும் அலட் சியம் காட்டியதை நினைக்க பெரும் விந்தையாயிருந்தது சஞ்சயனுக்கு. அதைவிட விந்தையாயிருந்தது ஒரு நாழிகை கழித்து வந்து வில்லவன்கோதை சொன்ன செய்தி. அந்தப் படைவீட்டின் வாசலுக்கு வந்ததும் எட்ட இருந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்த சஞ்சயனை அழைத்து, “தூதரே! இதோ பதில் எழுதியிருக்கிறேன். எடுத்துச் செல்லும்” என்று ஓலையைக் கொடுத்தார். 

சஞ்சயன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. தனது புரவியில் ஏறிக்கொண்டு பறந்தான் முசிறியை நோக்கி. அவன் அமைச்சர் மாளிகையை அடைந்தபோது நடுநிசி தாண்டியிருந்தாலும், அமைச்சர் எழுந்து வந்து சஞ்சய னிடமிருந்து ஓலையைப் பெற்றுக்கொண்டு, ‘”சஞ்சயரே! வாரும். ஓலையைப் படிப்போம்” என்று சஞ்சயனையும் தமது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த விளக் த் தூண்டி, ஓலையைப் படித்தவர் தலைமேல் கையை வைத்துக்கொண்டார். 

”என்ன அமைச்சரே?” என்று அனுதாபத்துடன் கேட்டான் சஞ்சயன். 

”அமைச்சர் குட்டிச் சுவராகப் போனார்” என்ற அமைச்சர் அழும்பில்வேள் “ஓலையை நீரே படியும்” என்று சஞ்சயனிடம் கொடுத்தார். 

சஞ்சயலும் ஓலையை வாங்கிப் படித்துத் திக்பிரமை அடைந்தான். “தளத்திலிருந்து படையில் பாதியை செஞ்சிக்கு அனுப்பும்படி மன்னர் செய்தி அனுப்பினாராம். இங்கிருந்தவர்கள் அரசர் உத்தரவுப்படி பாதிப்படையை அனுப்பி விட்டார்களாம்”. 

“இனி அந்தத் தளமும் புரட்சிக்காரர்களால் சூறையாடப்படும்” என்ற அமைச்சர், “இந்த சமயத்தில் அந்தச் சனியன் பிடித்த கடல் வேந்தனாவது இருந்தால் நமக்குத் தைரியமாயிருக்கும்” என்று சற்று உரக்கவே சொன்னார்.

அறைக்கு வெளியே ஒரு நகைப்பொலி கேட்டது. கையில் விளக்கை ஏந்தி வெளியே வந்த அமைச்சர், கடல் வேந்தன் ஆஜானுபாகுவாகத் தாழ்வரையில் நிற்பதைக் கண்டார். அதனால் சிறிது துணிவு வரவே, ‘“கடல் வேந்தரே! உமக்கு ஆயுசு நூறு”  என்று ஆசீர்வாதம் செய்தார். 

“நன்றி” என்ற கடல்வேந்தன்,  “அமைச்சரே! இன்று அமாவாசை” என்றான். 

“ஆம்” என்றார் அமைச்சர், அன்று திதி அன்று திதி எதுவா யிருந்தால் என்ன என்ற எண்ணத்தால். 

“நாளைக்குப் பிரதமை” என்றான் மீண்டும் கடல் வேந்தன். 

”ஆம்” என்றார் அமைச்சர். 

“நக்ஷத்திரம் பூசம்” என்று கடல்வேந்தன் கூறினான்.

“வேந்தரே!” அமைச்சர் குரல் ஒலித்தது எரிச்சலுடன் 

“என்ன?”

“நீர் என்ன சோதிடரா?”

“அதுவும் தெரியும்!” 

“நாள் கிழமைக்கு என்ன வந்து விட்டது இப்பொழுது?” 

கடல்வேந்தன் சிந்திக்காமலே பேசினான். “நாளை பூசம் உச்சமாகத் தெரியும்போது முசிறி புரட்சியில் சிக்கும். கடலிலிருந்தும், நிலத்திலிருந்தும் யவனர் தாக்குதல் நடக்கும். அதற்குச் சித்தமாயிரும்” என்று கூறிவிட்டு, அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டான் கடல்வேந்தன் 

அமைச்சரின் கோபம் எல்லை கடந்தது. “வந்தான். சோதிடம் சொன்னான், போனான். புரட்சியை எதிர்க்க வழி சொல்லவில்லை – வழி சொன்னாலும் உதவிக்கு வரப் படை கிடையாது” என்று அவர் சீறினார். “சஞ்சயரே! உமக்கு லவலேசமாவது புத்தியிருக்கிறதா?” என்று தூதன் மேல் எரிந்து விழுந்தார். 

38. குட்டுவன் வந்தான் 

கடல்வேந்தன் அவசர அவசரமாக வந்து முசிறியில் புரட்சி ஏற்படப் போவதை அறிவித்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தம்மை உத்தரவிட்டுச் சென்றதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அமைச்சர் அழும்பிலவேளுக்கு, இத்தனைக்கும் அவன் அழைத்துப் போன தனது மகளைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் போய்விட்டதை நினைத்த அமைச்சரின் சினம் உச்சத்துக்குச் சென்றதாலும், அதைக்காட்ட அங்கு கடல் வேந்தன் இல்லாததாலும் சினத்தை சஞ்சயன் மீது திருப்பி எரிந்து விழுந்து, “உமக்குப் புத்தி ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். 

இந்த நிலையில் எரிகிற கொள்ளியை ஏறத்தள்ளுவது போல் சிறிது நகைச்சுவையைக் காட்டத் தொடங்கிய சஞ்சயன் “இருக்கிறது?” என்றான். 

அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இந்த் எத்த நகைச்சுவையையும் ரசிக்கும் மனநிலையில் “என்ன இருக்கிறது” என்று வினவினார் எரிச்சல் சிறிதும் தளராத குரலில். 

“புத்தி” என்றான் சஞ்சயன்.

“உமக்கா?” 

“ஆம். என்னைப்பற்றித்தானே கேட்டீர்கள்?”

“ஆம், புத்தி இருப்பதற்கு என்ன அடையாளம்?”

“இன்னும் இரண்டு நாள் விவகாரங்கள் இப்பவே நடந்தால் தெரியும்.” 

“என்ன தெரியும்?” 

“பைத்தியம் பிடித்துவிடும். புத்தி இருப்பதற்கு அதை விட வேறு அத்தாட்சி கிடையாது”. 

“உமக்குப் பிடிப்பதற்கு முன்னால் எனக்குப் பிடித்து விடும் போலிருக்கிறது”. 

“பிடித்தால் நல்லது” 

“நல்லதா?” 

“ஆம். மன்னர் நம்மிடமிருந்து பொறுப்பை நீக்கி விடுவார்.” 

“அது நல்லதாக்கும்?” 

“சந்தேகமென்ன? பொறுப்பில்லாவிட்டால் பிரச்சனைகளும் இல்லை. பிரச்சனைகள் இல்லாவிட்டால் புத்திக் குழப்பமில்லை, நிம்மதியாக வாழலாம்” இதைச் சொன்ன சஞ்சயன் நிம்மதியாகக் காலை நீட்டிக்கொண்டு தனது ஆசனத்தில் அமர்ந்தான். 

அமைச்சருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சஞ்சயன் தனது நிராதரவான நிலைகண்டு பரிகசிக்கிறாள் என்பதை மட்டும் புரிந்து கொண்டதால் தலையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு தாமும் ஆசனத்தில் சாய்ந்தார். அப்பொழுது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி கீழிருந்து தாழ்வறைக்கு வரும் மாடிப்படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் அமைச்சர், தூதர் இருவருமே சுறுசுறுப்பைக் காட்டி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். படிகளில் ஏறிவந்தவன் படிகளின் முகப்பிலேயே நின்று, “உள்ளே வரலாமா?” என்று இனிய குரலில் கேட்டான். 

“வரலாம்” என்று அமைச்சர் அனுமதிக் குரல் கொடுத்ததும் அந்த மனிதன் உள்ளே நுழைந்தான். வந்த வாலிபன் புலவர் மகன் குட்டுவன் என்பதை அறித்ததும், “இந்தச் சமயத்தில் இந்த பயங்கொள்ளி ஒருவன் தான் மீதி” என்று உள்ளூர வந்தவனை சபித்த அமைச்சர், அவன் தாழ்வறைக்குள் வந்ததும் அவன் உட்கார ஓர் ஆசனத்தைக் காட்டினார். அந்த ஆசனத்தில் உட்கார்ந்ததும் “நீங்கள் அமரத் தகுந்த ஆசனம் இது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

“முதன் முதலில் வீரனான கடல்வேந்தன் இந்த மாளிகைக்கு வந்தபோது அவன் அமர்ந்த ஆசனம் அதுதான்” என்று சஞ்சயன் விளக்கினான். 

“என் அண்ணன் ஆசனமா?” என்று வியப்பும் ஆவலும் கலந்த தொனியில் வினவினான் குட்டுவன். 

“ஆம், வீரமுள்ள யாரும் அதில் அமரலாம்” என்றார் அமைச்சர். 

குட்டுவன் தனது அழகிய விழிகளை மற்ற இருவர் மீதும் நிலைக்கவிட்டான் “அப்படியானால் நீங்கள் இருவரும் அதில் உட்காரவில்லை?” என்றும் வினவினான்.

சஞ்சயன் இளநகை கொண்டான் “அத்தனை வீரம் இருவருக்கும் கிடையாது” என்றான் இகழ்ச்சி ஒலித்த குரலில். 

குட்டுவன் நகைத்தான். தனது அழகிய விழிகளை சஞ்சயன் மீது திருப்பி “வருந்தத்தக்கது.” என்றான் நகைப்பின் ஊடே.

“எது?” என்று கேட்டார் அமைச்சர். 

“அமைச்சரும் தூதரும் ஆண்மையற்று இருப்பது” என்றான் குட்டுவன். 

“தாங்கள் எப்படியோ?” என்று அமைச்சர் கேட்டார். பல சமயங்களில் குட்டுவன் நடுங்கியதைப் பார்த்திருந்த காரணத்தால். 

குட்டுவன் அமைச்சரைக் கம்பீரமாக நோக்கி விட்டு அந்த ஆசனத்தில் சென்று அமர்ந்தான்; அமர்ந்து ஒரு முறை அசைந்தான். “இதில் போடப்பட்டுள்ள முதுகு அணை கெட்டியாயிருக்கிறது, மிருதுவாயில்லை” எனறு குற்றம் சாட்டினான் 

“வீரர்கள் அமரும் ஆசனமல்லவா?” என்றார் அமைச்சர். 

“ஆம். வீரன் மனம் போல் கெட்டியாகத்தானிருக்க வேண்டும். ஆனால், எனக்கு இந்தக் கெட்டி போதாது!” என்று அலுப்புடன் பேசினான் குட்டுவன். 

“ஏன்?” அமைச்சர் வினவினார் எரிச்சலுடன்

“என் மனம் இரும்பு.” 

“ஆகையால்?” 

“இரும்பாசனத்தை விரும்புகிறேன். கொண்டு வாரும் அமைச்சரே” என்று சற்றுக் கடுமையுடன் கூறினான். 

அமைச்சர் குட்டுவனைச் சந்தேகப் பார்வையாகப் பார்த்தார். பிறகு சஞ்சயனை நோக்கி “இவருக்கு…?” என்று இழுத்தார். 

“புத்தி இருக்கிறது” என்றான் சஞ்சயன். 

“இல்லாவிட்டால்….” அமைச்சர் மீண்டும் இழுத்தார் சொற்களை. 

“இந்த நிலை ஏற்பட நியாயமில்லை” என்றான் சஞ்சயன். 

இந்தச் சமயத்தில் குட்டுவன் சற்றுப் பெரிதாகவே நகைத்தான். “அமைச்சரே! என்னைப் பைத்தியமென்று நினைக்கிறீர். தூதரும் நினைக்கிறார். அப்படியானால் நீங்கள் இருவரும் எனது சகோதரர்கள்” என்றான் நகைப்பின் ஊடே. 

“எங்களுக்குப் பைத்தியம் ஏதும் இல்லை” என்றார் அமைச்சர் கடுப்பாக. 

“எந்தப் பைத்தியமும் இப்படித்தான் பேசும்” என்ற குட்டுவன், “சரி பேச்சை வளர்த்துவானேன், எனது தலைவனைக் கூப்பிடுங்கள்” என்று ஆணையிட்டான். 

அமைச்சருக்குக் கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகமும் விலகிவிட்டது. சஞ்சயனைப் பார்த்தார் சங்கடத்துடன். சஞ்சயனும் ஏதும் தெரியாமல் விழித்தான். அவர்கள் சங்கடத்தைப் பார்த்த குட்டுவன் “என் அடிமைகளான நீங்கள் இருவரும் எனது கட்டளையை ஏற்காததால், நானே அழைக்கிறேன் என்று சினத்துடன் கூறிவிட்டு, “உபதலைவரே! வாரும் உள்ளே” என்று இரைந்து கூவினான்.

மாடிப்படியில் தடதடவென யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது. அப்படி ஏறிவந்தவன் மாடிப்படிகளின் உசிரியப்படிக்கு வந்ததும் “அங்கேயே நில்லும்” என்று. கூவினான் குட்டுவன். 

வந்தவன் நின்றுவிட்டான். குட்டுவன் ஆணைப்படி. அடுத்து குட்டுவன் “சரி பாடும்” என்றான். 

அமைச்சர் முகத்தில் கிலி பிறந்தது. “சஞ்சயரே! குடி முழுகிவிட்டது. பரணர் வளர்ப்புப் பிள்ளை மன்னரின் மூத்தமகன், பைத்தியமாகி விட்டான். வாரும் அவனைப் பிடித்துக்கொள்வோம்” என்று கூறிக் கொண்டே குட்டுவனை நோக்கி நடந்தவர் சட்டென்று நின்று விட்டார். மாடி உச்சிப்படியிலிருந்து யாரோ பாடத் தொடங்கினார்கள். பாடியவன் கணீரெனப் பாடினான். “புலவர் புதல்வனே, புரவலன் அளித்த சேயே, முசிறியின் படைத்தலைவா, போற்றி போற்றி” என்று நன்றாக இசைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தவனைக் கண்ட அமைச்சர், சஞ்சயன் இருவருமே திடுக்கிட்டனர். 

அவர்கள் திகைப்பைப் பார்த்தாலும் பார்க்காதவன் போலவே பாடிக் கொண்டு உள்ளே நுழைந்த நற்கிள்ளி குட்டுவனுக்குத் தலைவணங்கி நின்றான். அந்த விநோதத்தைப் பார்த்த அமைச்சர், “நற்கிள்ளி! நீ எங்கு வந்தாய் இந்த நேரத்தில்?” என்று வினவினார். 

“முசிறியின் தரைப்படைத் தலைவர் ஆணைப்படி வந்தேன்” என்றான் நற்கிள்ளி. 

“இப்பொழுது பாடியது?” அமைச்சர் கேட்டார். “அவர் ஆணையால்!” இதைத் திட்டமாகச் சொன்னான் நற்கிள்ளி. 

“இவர்…” என்று இழுத்தார் அமைச்சர்.

“நமக்கெல்லாம் தலைவர் நாளை புரட்சியை அடக்கப் போகும் மகாவீரர்” என்றான் நற்கிள்ளி. 

“இவரா?” வாயைப் பிளந்தான் சஞ்சயன். 

“ஆம். இவரேதான்” நற்கிள்ளியின் குரல் சந்தேகம் ஏதுமின்றி ஒலித்தது. 

அந்தச் சமயத்தில் குட்டுவன் குரல் பலமாக ஒலித்தது, “நற்கிள்ளி! இவர்கள் எனது வீரத்தில் சந்தேகப்படுவதாகத் தெரிகிறது” என்று. 

“ஆம்.” நற்கிள்ளி பயபக்தியுடன் பேசினான்.

“அப்படியானால், எனது சக்தியைக் காட்ட வேண்டியதுதான்.” 

“வேண்டாம், வேண்டாம், மன்னித்து விடுங்கள். இவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை”. 

அடுத்து நிகழ்ந்தது விசித்திர சம்பவம். “புரிய வைக்கிறேன்” என்று கருவிக் கொண்டு, ஆசனத்திலிருந்து. எழுத்த குட்டுவன் அமைச்ச ரை இரண்டெட்டில் அடைந்து அவரைத் தனது இரு கைகளாலும் தூக்கித் தனது தலைக்குமேல் பிடித்துக் கொண்டான். ஒருமுறை அவரைத் தாங்கியபடி சுற்றினான். “இவரை வெளியே எறிந்து விடட்டுமா?” என்றும் கேட்டான் வெறி ஒலித்த நாலில், 

“பைத்தியங்களுக்குப் பலம் அதிகம்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டே சஞ்சயன் பின்னால் நகர ஆரம்பித்தான். 

“நற்கிள்ளி! படிக்கதவைத் தாளிடு. இவரை அனுப்பி இட்டு அவனைக் கவனிக்கிறேன்” என்ற குட்டுவன் அமைச்சரைத் தாங்கிய வண்ணம் கைப்பிடியை நோக்கிச் சென்று வெளியே எட்டிப்பார்த்தான். தலைகளிழ்ந்த நிலை அமைச்சரும் பார்த்தார். கீழே கிடுகிடுபாதாளம். எறியப்பட்டால் ஆற்றில் கரைக்கத் தனது குஸ்திகூடக் கிடைக்காது என்ற நினைப்பால் “வேண்டாம் வேந்தே! மன்னித்து விடுங்கள்” என்று அலறினார் அமைச்சர் அழும்பில்வேள். 

அந்த அலறலுக்குப் பிறகு சிறிது சமாதானமடைந்த குட்டுவன் அமைச்சரைக் கீழே இறக்கி விட்டான். “நற்கிள்ளி! இனி இவரிடம் ஓலையைக் கொடுக்கலாம்” என்று ஆட்டுவன் உத்தரவிட, மடியிலிருந்த இலையை எடுத்து பச்சரிடம் கொடுத்தான் நற்கிள்ளி.

அமைச்சர் உடலும், உள்ளமும் ஆடியிருந்ததால் நடுங்கும் கரங்களுடன் ஓலையை வாங்கிப் பிரித்து அதைப் படித்தார். அடுத்து அவர் தள்ளாடிய கால்களுடன் நடந்து வந்து குட்டுவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்து தலைவணங்கினார். சஞ்சயன் பிரமை பிடித்து நின்றான். 

39. குட்டுவன் தலைமை 

நற்கிள்ளி கொடுத்த ஓலையைப் படித்தவுடன் அமைச்சர் குணம் அடியோடு மாறிவிட்டதையும், அதுவரை குட்டுவனைப் பற்றி அலட்சியமாகப் பேசிக்கொண்டிருந்தவர் அவன் முன்பு மண்டியிட்டு வணங்கியதையும் கண்ட சேரதூதனுக்கு எதுவுமே விளங்காததால் பிரமை பிடித்து நின்று கொண்டே இருந்தான். அடுத்து எழுந்த அமைச்சரின் சொற்கள் அவனை இந்த உலகத்துக்கு இழுத்தன. “தூதுவரே! வணங்கும் நமது தலைவரை” என்று உத்தரவிட்டு எழுந்தவர், குட்டுவன் திருவடிகளைக் கையால் சுட்டிக் காட்டினார் சஞ்சயனுக்கு. அப்படியும் சஞ்சயன் இருந்த இடத்தை விட்டு அசையாததால், கையிலிருந்த அவனிடம் கொடுத்துப் “படித்துப் பாரும்” என்றார். 

சஞ்சயன் கையில் ஓலையை வாங்கிப் படித்தான்.. அதில் கண்டிருந்த செய்தி அவனைத் திகைக்க வைத்தது. “இதைக் கொண்டுவரும் குட்டுவன் முசிறியின் தரைப் படைகளுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டிருக்கிறான். அவன் கட்டளைகளை நமது கட்டளையாக நினைத்து அனைவரும் நிறைவேற்ற வேண்டியது என்றிருந்தது ஓலையில். அதில் மன்னரே கையெழுத்திட்டிருந்தார். ஓலையை ஒருமுறைக்கு இருமுறையாகப் படித்த சஞ்சயன் கையொப்பத்தையும் சோதித்தான். ஏதோ அதிலிருந்த முக்கிய காலங்களில் மிகப் பெரிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மன்னர் கையெழுத்திடுவது வழக்கமாதலால், இந்தச் சிறிய நியமனத்துக்கு அரசர் ஏன் கையெழுத்திட் டார் என்பது விளங்களில்லை தூதனுக்கு. ஆகவே, ஆகவே, அது அரசர் கையெழுத்துத் தானா என்பதை நிர்ணயித்துக் கொள்ள ஒருமுறைக்கு இருமுறையாகக் கையெழுத்தைப் பார்த்து, ”ஆம். மன்னர் கையெழுத்துத்தான், சந்தேக மில்லை’ என்று உள்ளூரச் சொல்லிக்கொண்டான். 

சஞ்சயன் மனத்திலோடிய எண்ணங்களைக் குட்டுவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே கேட்டான் உற்கிள்ளியை நோக்கி, “உபதலைவரே! தூதர் சந்தேகப் படுகிறாரா?” என்று, 

நற்கிள்ளி தூதனை நோக்கித் திரும்பி, “தூதரே! சந்தேகப்படுகிறீரா?” என்று வினவினான். 

“எதைப்பற்றி?” என்று சஞ்சயன் கேட்டான்.

“எதைப்பற்றி என்று கேட்கிறார்?” என்று வினவிவான் நற்கிள்ளி, குட்டுவனை நோக்கி. 

”ஓலையிலிருக்கும் கையெழுத்தைப் பற்றி. நாம் கள்ளக் கையெழுத்து போட்டிருப்பதாக நினைக்கிறார். அப்படி நினைப்பதற்கே தண்டனை உண்டு” என்றான் குட்டுவன். 

இதைக் கேட்டதும் சஞ்சயன் நடுங்கினான் “இல்லை இல்லை, அப்படி நினைக்கவில்லை” என்றும் சொன்னான் நடுங்கும் குரலில்: 

“அப்படியானால் ஓலையை ஏதற்காக திரும்பத் திரும்பப் பார்த்தீர்?” என்று குட்டுவன் கேட்டான். 

“விளக்கு வெளிச்சம் போதவில்லை” என்று சாக்குசொன்னான் சஞ்சயன். 

“போதவில்லை என்றால் விளக்கை நீர் ஏன் தூண்டவில்லை” என்று குட்டுவன் கேட்டான் அதிகாரக் குரலில். 

“தோன்றவில்லை”, சஞ்சயன் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னான். 

அடுத்து குட்டுவன், நற்கிள்ளியை நோக்கி, “உப தலைவரே! இவருக்குத் தோன்றவில்லை” என்றான்.

“அவரே ஒப்புக்கொள்கிறார்” என்றான் நற்கிள்ளி,

“எதுவும் தோன்றாத புத்தி எதற்கு உபயோகம்?”

“எதற்கும் உபயோகமில்லை”. 

“நாளை போர் வந்தால்?” 

“இவர் புத்தி வேலை செய்யாது”. 

“கை, கால்?” 

“என்றுமே வேலை செய்ததில்லை” 

“சரி! அப்படியானால், தூதரைச் சிறையில் அடைத்து வையும்” என்று குட்டுவன் உத்தரவிட்டான். 

சேரதூதன் குட்டுவன் கால்களில் விழுந்தான். “மன்னிக்க வேண்டும் படைத்தலைவரே” என்று கெஞ்சினான். 

குட்டுவன், நற்கிள்ளியை நோக்கித் திரும்பி, “இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான் 

“சரணாகதி செய்பவர்களை மன்னிப்பது இந்த மண்ணின் இயல்பு” என்றான் நற்கிள்ளி. 

“சரி எழுந்திரும். உம்மை மன்னித்தோம்” என்று கூறிய குட்டுவன் அமைச்சரை நோக்கி, “அமைச்சரே! நாளை புரட்சி ஏற்பட்டால் அதை அடக்க நம்மிடம் போதிய படை இருக்கிறதா?” என்று வினவினான். 

“இல்லை” இதைத் திட்டமாகச் சொன்னார் அமைச்சர். 

“அப்படியானால் மந்திராலோசனையில் இறங்குவோம்” என்று கூறிய குட்டுவன், அங்கிருந்த ஆசனத்தில் நனறாகச் சாய்ந்து கொண்டான். மற்றவர்களையும் தனக் கெதிரே உட்கார வைத்தான் “இனிக் கிளர்ச்சியை அடக்கும் முறைகளை யோசிப்போம்” என்று கூறினான். 

எல்லாரும் அமர்ந்ததும் அமைச்சர் சொன்னார். “படைத்தலைவரே! யவனர்களிடம் பத்தாயிரம் பேர் கை தேர்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்” என்று. 

“அதைப்பற்றி நமக்கென்ன கவலை?” என்று குட்டுவன் கேட்டான். 

“நம்மிடம் ஐயாயிரம் பேர் கூடக் கிடையாது” என்றார் அமைச்சர். 

”நல்ல வீரர்களாயிருந்தால் பத்தாயிரம் பேரை அடக்க ஐயாயிரம் பேர் அதிகம்” என்ற குட்டுவன், “மூவாயிரம் பேர் போதும், மீதி இரண்டாயிரம் பேரை நாளைக்கு நமது வஞ்சிப்பாதைப் பாசறைக்கு அனுப்பி விடுவோம்” என்றான். 

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. மீதி மூவாயிரம் பேர் முசிறியை ஒருநாளும் காக்க முடியாது என்பதை உணர்ந்ததால், “படைத்தலைவரே! யவனர் சிறந்த வீரர்கள்” என்று இழுத்தார். 

“யவன வீரத்துக்குச் சேரநாட்டு வீரம் குறைந்ததா?” சிற்றத்துடன் கேட்டான் குட்டுவன். 

”இல்லை. ஆனால்…” என்றார் அமைச்சர். 

“சேரநாட்டு வீரத்தில் உமக்கு நம்பிக்கையில்லை அமைச்சரே!. சேரநாட்டு மண்ணே போராடும், இந்த 
மண்ணில் வீரர்களே பிறக்கின்றார்கள். உதாரணத்துக்கு என்னையே பாரும்” என்றான் குட்டுவன். 

அமைச்சருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரிய வில்லை. அதைத் தவிர வேறொரு விஷயமும் வியப்பை அளித்தது, அவருக்கு. சமீப காலம்வரை பயங்கொள்ளி யாயிருந்த குட்டுவன் எப்படிப் போருக்குத் துணிந்தான் என்பது தெரியவில்லை அவருக்கு. அதைத் தவிர, தம்மை அவன் இரு கைகளாலும் தூக்கிச் சுழற்றியதை நினைத்து “இத்தனைபலம் இவனுக்கு எப்பொழுது வந்தது?” என்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளவும் செய்தார். 

இப்படி சிந்தனை வயப்பட்டிருந்த அவரை நோக்கிய குட்டுவன், “சிந்தனை செய்கிறீரா! நல்லது நல்லது” என்று சிலாகித்தான். 

“ஆம், சிந்தனை செய்கிறேன்” என்றார் அமைச்சர் எரிச்சலுடன். 

“இப்பொழுது மந்திராலோசனை செய்கிறோம். அதற்குச் சிந்தனை நல்லது” என்றான் குட்டுவன். 

அமைச்சர் சிந்தனையிலிறங்குவதையும் விட்டார். குட்டுவனை நோக்கி, “மீதி மூவாயிரம் பேரால் முசிறியைக் காப்பாற்ற முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்று வினவினார். 

“எனக்கு இதுவே அதிகம். ஆனால் படைகளை நடத்தப் போகிறவர் அபிப்பிராயம் எப்படியோ?” என்றான் குட்டுவன். 

“படைகளை நடத்தப் போவது வேறொருவரா?” அமைச்சர் வினவினார் வியப்புடன். 

“சந்தேகமென்ன? இந்தச் சிறு போரை நடத்த என்னைப் போன்ற படைத்தலைவன் வேண்டுமா?” என்று கேட்டான் குட்டுவன். 

மெல்ல மெல்ல குட்டுவன் சுயரூபம் வெளிவருவதாக நினைத்த அமைச்சர், “வேண்டாம். வேண்டாம்” என்று ஒப்புக்கொண்டு, “வேறு யார் படையை நடத்தப் போவது?” என்றும் வினவினார். 

“எனது உபதலைவன் நற்கிள்ளி” என்று அசட்டையாக பதில் சொல்லி ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டான் குட்டுவன். 

இதைக் கேட்டதும் நற்கிள்ளி ஆசனத்திலிருந்து எழுந்து குட்டுவனுக்குத் தலைவணங்கி “தங்கள் உப தளபதியானதே எனக்கு பாக்கியம். தவிர, தங்கள் பிரதிநிதியாகப் படைகளை நடத்துவது அதைவிடச் சிறந்த பாக்கியம். இந்த முசிறியைப் பிடிக்க இனி எவராலும் முடியாது” என்று வீராவேசத்துடன் பேசவும் செய்தான்.

அமைச்சர் அழும்பில்வேள் இந்த நாடகத்தைக்கண்டு அச்சத்தின் உச்சிக்குச் சென்றார், ‘இது மந்திராலோசனை இல்லை, ஏதோ பைத்தியக்கார நாடகம்’ என்று உள்ளூர நினைத்து விழுந்து கொண்டார். 

“நற்கிள்ளி!” என்று தொடங்கினார் அமைச்சர்.

“அவரைப் பட்டப்பெயரால் அழையும்” என்றான் குட்டுவன். 

“முசிறிப் படையின் உபதலைவரே!” என்று தொடங்கிய அமைச்சர், “மூவாயிரம் பேரையும் தற்காப்புக்கு எப்படிப் பயன்படுத்தப் போகிறீர் என்பதை நான் அறியலாமா?” என்று கேட்டார். 

நற்கிள்ளி நகைத்தான் மெதுவாக, “தற்காப்பு எதற்கு? முன்னே சென்று தாக்குவோம்” என்று கூறினான் நகைப்பின் ஊடே. 

“மூவாயிரம் பேரை மட்டுமே கொண்டு பத்தாயிரம் பேருடன் மோதுவீரா?” என்று கேட்டார் அமைச்சர்.

“ஆம். அப்பொழுதுதான் நான் யாரென்பது புரியும்” என்றான் நற்கிள்ளி. 

கடல்வேந்தனுடன் நீண்ட நாள் பழகிய நற்கிள்ளி இத்தனை முட்டாளாக இருப்பானென்று அமைச்சர் நினைக்காததால் எனன செய்வதென்று தெரியாமல் திகைத்தார், மூவாயிரம் பேரை கிளேஸியஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்து விடுவான் என்பது அவருக்குத் தெரிந்திருந்ததால், முசிறியின் கதியை நினைத்துக் கலங்கினார். ஆனால், மன்னர் ஓலையின் காரணமாக அவர் எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாமலே தவித்தார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல பேசினான் குட்டுவன். “நான் இங்கு படைத் தலைவனாகி விட்டதை அனைவருக்கும் அறிவித்து விடுங்கள். நாளை ஓர் ஓலை தருகிறேன். அதை கிளேஸியஸிடம் அனுப்பி விடுங்கள்” என்று கூறினான். 

“ஓலையை யார் மூலம் அனுப்பட்டும்?” என்று கேட்டார் அமைச்சர். 

“சந்தேகமென்ன? சேர தூதர் தான் ஓலையை எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற குட்டுவன், எழுது கருவிகளைக் கொண்டு வரச்சொல்லி அங்கேயே ஓர் ஓலையை எழுதி அமைச்சரிடம கொடுத்தான். “நாளை காலையில் இது போய்ச் சேரட்டும் கிளேஸியஸிடம்” என்று கூறி விட்டு “நற்கிள்ளி! வா. நாம் போவோம் எனக்கு உறக்கம் வருகிறது” என்றான! 

அவனுக்கும், நற்கிள்ளிக்கும் ஓர் அறையை அமைச்சர் காட்டவே, உடனே இருவரும் சென்று அதில் படுத்துக் கொண்டனர். அமைச்சர் சஞ்சயனிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு, தமது சயன அறைக்குச் சென்றார். எல்லாரும் சென்றதும் சஞ்சயன் மெதுவாகக் குட்டுவன் ஓலையைப் பிரித்துப் படித்தான். படித்ததும் பெரும் திகைப்பு முகத்தில் விரிய, அதிர்ச்சியுற்று அங்கிருந்த சனத்தில் உட்கார்ந்து விட்டான். அந்த ஓலையைத் தான் கொண்டு சென்றால் க்ளேஸியஸ் தன்னை அங்கேயே வெட்டிப் போட்டு விடுவான் என்று உணர்ந்து கொண்டான். அந்த ஓலையில் “கிளேஸியஸ்! உடனடியாகச் சரணடைந்துவிடு. உன் யவனர்களை மரக்கலங்களில் ஏற்றி உன் நாட்டுக்கு அனுப்பிவிடு. இல்லையேல் நீங்கள் நிர்மூலம் செய்யப்படுவீர்கள்-குட்டுவன்” என்று எழுதி யிருந்தது. 

“இந்த ஓலையைக் கொண்டு சென்றால் கிளேஸியஸ் கொன்றுவிடுவான். தூது போகாவிட்டால் குட்டுவன் சிறையில் தள்ளுவான். இதென்ன தர்ம சங்கடம்” என்று சஞ்சயன் தன் தலைவிதியை நொந்துகொண்டான். எதற்கும் விடிந்தால் பதில் கிடைக்கும் என்றும் எண்ணினான். விடிந்து கிடைத்த பதில் அதிக அதிர்ச்சியை விளைவித்தது. சஞ்சயன், அமைச்சர் இருவருமே திகைத்தார்கள். என்ன செய்வதென்று புரியாமல். மறுநாள் காலை குட்டுவனை மாளிகையில் காணவில்லை. நற்கிள்ளியை விசாரித்தார் அவனுக்கும் ஏதும் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொன்னான் நற்கிள்ளி. “காலையில் அந்த ஓலையை எப்படியும் கிளேஸியஸிடம் ஒப்படைக்கச் சொன்னார் தலைவர். கிளேஸியயை வில்லம்பு இலச்சினை இல்லத்தில் பார்க்கலாமென்றும் தெரிவித்தார்” என்று கூறினான்.

“வில்லம்பு இலச்சினை இல்லத்திலா!” என்று வினவினார் அமைச்சர் வியப்புடன். 

”ஆம்’ 

“அது நம்மைச் சேர்ந்ததல்லவா?” 

“நேற்றுவரை.” 

“இன்று?” 

‘கிளேஸியஸின் கைக்கு மாறி விட்டதாம்” என்றான் நற்கிள்ளி. 

“அதாவது…..” என்று இழுத்தார் அமைச்சர். 

“..போரின் பூர்வாங்கம்” என்றான் நற்கிள்ளி. அமைச்சருக்குத் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. மறு நாள் மற்றும் பல இடிகள் இறங்கலாயின. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குட்டுவன் தனது கைவரிசையைக் காட்டினான். ‘குட்டுவன் தலைமை குடி நாசம்’ என்று சபித்தார் அமைச்சர்.

40. தூதின் பயன் 

முசிறி தரைப்படையின் தலைமைப் பதவிக்கு மன்னரால் தலைவனாக நியமிக்கப்பட்ட குட்டுவன் முதல் இரவில் இட்ட உத்தரவுகளைக் கேட்டு கதிகலங்கி யிருந்த அமைச்சர் அழும்பில்வேள். மறுநாள் கிடைத்த செய்திகளால் பேரதிர்ச்சியடைந்தார். முசிறியிலிருந்து ஐயாயிரம் வீரர்களில் இரண்டாயிரம் பேரை மறுநாள் காலையிலேயே வஞ்சிநகர்ப் பாதைப் பாசறைக்கு குட்டுவனே அனுப்பிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் “கெட்டது குடி” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர். இரண்டாயிரம் வீரர்களை அனுப்பத் தமக்கு உத்தரவிட்ட குட்டுவன் மறுநாள் காலையில் உத்தரவை, தானே நிறைவேற்றிவிட்ட துரிதத்தை நினைத்து, குட்டுவன் தம்மை நம்பவில்லையென்பதைப் புரிந்து கொண்டதாலும், படை பலம் மிகவும் பலவீனப்பட்டு விட்டதாலும் ஏதும் சொல்லவோ, செய்யவோ தவித்தார் அமைச்சர். குட்டுவனுடைய முட்டாள் தனமான உத்தரவை மறுநாள் மன்னருக்கோ வஞ்சிநகர்ப் பாதைப் பாசறையிலிருந்த வில்லவன் கோதைக்கோ தெரிவித்து அதை மாற்றலாமென்று எண்ணியிருந்த அமைச்சரின் திட்டத்தில் குட்டுவன் கட்டளை மண்ணைப் போட்டுவிடவே, தாம் மேலும் அடைச்சராயிருப்பது உசிதமா? என்றும் நினைத்தார் அமைச்சர். 

அவர் இந்தவித இந்தவித யோசனைகளில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கையில் சஞ்சயன் வேறு அவரிடம் வந்து வயிற்றெரிச்சலைக் கிளறலானான். ”அமைச்சர் பெருமானே!” என்றழைத்த சஞ்சயனை மிகுந்த உக்கிரத்துடன் பார்த்த அமைச்சர் “என்ன தூதர் பெருமானே?” என்று பதிலுக்குக் கேட்டார். 

“நான் கிளேஸியைப் பார்க்க வேண்டியது தானா?” என்று தூதன் வினவினான். 

அத்தனை கோபத்திலும் இளநகை கொண்ட அமைச்சர் “பார்க்காமல் ஓலையை எப்படிக் கொடுப்பீர்?” என்று கேட்டார். 

தூதன் அடுத்த கேள்வியை வீசினான். “கொடுத்த பின்பு நான் உயிருடன் திரும்ப முடியுமா?” என்று. 

“அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை” என்றார் அமைச்சர். 

“செத்தால் சாகட்டுமென்கிறீரா?” என்று எரிச்சலுடன் கேட்டான் சஞ்சயன். 

“அப்படி நான் எதுவும் சொல்லவில்லை” அமைச்சர் பதில் திட்டமாயிருந்தது. 

“இந்த உத்தரவுக்கு வேறு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் சஞ்சயன். 

“உத்தரவிட்டது நானல்ல” என்றார் அமைச்சர். 

“அமைச்சரே!” சஞ்சயன் குரல் கோபத்துடன் ஒலித்தது. 

“என்ன தூதரே?”

“கடமையிலிருந்து நழுவப் பார்க்கிறீர்….” 

“இல்லை?” 

“என்ன இல்லை?” 

“எது கடமை என்பதே எனக்குப் புரியவில்லை”. 

“என்னதான் புரிகிறது உமக்கு?” 

“எதுவுமே புரியவில்லை.” 

இதைக் கேட்டதும் சினத்தின் உச்சிக்குச் சென்ற சஞ்சயன், “எதுவும் புரியாவிட்டால் ஏன் இன்னும் அமைச்சராயிருக்கிறீர்?” என்று வினவினான். 

அமைச்சரும் சளைக்காமல் பதில் சொன்னார் “இந்த அழகிய பதவியை விட வழியில்லாததால்” என்று. மேலும் தொடர்ந்த அமைச்சர், “தூதரே! இந்த நிமிஷமே இந்தப் பதவியை நீர் ஏற்றுக் கொள்ளும். நான் வேலையிலிருந்து மன்னருக்கு விண்ணப்பம் எழுதித் தருகிறேன். இப்பொழுது நாம் குட்டுவன் சொல்வதைக் கேட் தவிர வேறெதையும் செய்ய முடியாது. இதை நீர் புரிந்து கொள்வது நல்லது. உமக்கு ஏதாவது சந்தோகமிருந்தால் முசிறிப்படை உபதலைவரைக் கேளும்” என்று கூறினார். 

”ஆம். ஆம். அதுதான் நல்லது. எந்தச் சந்தேகத்தையும் என்னைக் கேட்கலாம்” என்று கூறிக்கொண்டு அந்த இடத்திற்கு நற்கிள்ளி வந்து சேர்ந்தான். 

அவனை நோக்கி வணங்கும் தோரணையில் தலைதாழ்த்திய சஞ்சயன், ”படைத்தலைவர் இப்பொழுது எங்கே?” இது வினவினான். 

“தெரியாது” என்றான் நற்கிள்ளி. 

சஞ்சயன் வியப்பின் எல்லையை எய்தினான். “தெரியாவிட்டால் அவர் உத்தரவுகளை எப்படி நிறைவேற்ற முடியுமா?” என்று கேட்டான் வியப்பு ஒலித்த குரலில், 

“உத்தரவை நிறைவேற்ற அவர் எதற்கு?” என்று கேட்ட நற்கிள்ளி “இன்னும் ஏன் இங்கே இருக்கிறீர்” என்றும் வினவினான்.

“வேறெங்கு இருப்பது?” என்று சஞ்சயன் கேட்டான். 

“வில்லம்பு இலச்சினை இல்லத்தில்?” நற்கிள்ளி இதைச் சாதாரணமாகச் சொன்னான். 

“அங்கு என்ன வேலை எனக்கு?” சஞ்சயன் கேள்வியில் பீதி இருந்தது. 

“படைத்தலைவர் இன்னும் ஓலையைக் கொடுக்க வில்லையா கிளேஸியஸிடம்?” நற்கிள்ளி கேள்வியில் சிறிது சினத்தைக் காட்டினான். 

“இல்லை.” 

“ஏன்?” 

“இனிமேல் தான் போக வேண்டும்.” 

“இப்பொழுது விடிந்து ஐந்து நாழிகைக்கு மேல் ஓடிவிட்டன.”

“இதோ கிளம்பப் போகிறேன்.”

“இது வெறும் பிரதிக்கினை அல்ல, இதோ செய்வேன், செய்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, சீக்கிரம் கிளம்பும். இல்லையேல்…” வாசகத்தை முடிக்க வில்லை நற்கிள்ளி. 

“இல்யையேல்?…” துணிவுடன் கேட்டான் சஞ்சயன். 

“உம்மைச் சிறை செய்து விடுவேன்!” என்றான் நற்கிள்ளி. 

“அப்படியே செய்யுங்கள். கிளேஸியஸிடம் சென்று உயிர் விடுவதைவிட நமது சிறையில் உயிருடனிருப்பது சாலச் சிறந்தது” என்ற சஞ்சயனின் சபலத்தைச் சட்டென்று உடைத்த நற்கிள்ளி, “உங்களைச் சிறை செய்து இங்கு வைக்க மாட்டேன். உங்கள் கை கால்களைக் கட்டி எதிரிப் பாசறை முன்பு எறிந்து விடுவேன். இது குட்டுவன் உத்தரவு” என்று விளக்கினான். 

அப்பொழுது பிரச்னையெல்லாம் எங்கு சாவது என்பது தான் என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சயன் “அப்படி யானால் நான் கிளேஸியஸின் கையாலேயே சாகிறேன். அவனாவது புத்திசாலி” என்று கூறிவிட்டு கூறிவிட்டு அமைச்சர் கையை விட்டுக் கிளம்பினான். தூதன் கிளம்பிய சமயத்தில் அவன் வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக் கொள்ள “நீரும் புத்திசாலி. உமக்கு சமுத்திரம் முழங்கால்” என்று கூறினான் நற்கிள்ளி. 

படிகளில் இறங்க முற்பட்ட சஞ்சயன் “சமுத்திரம் முழங்காலா” என்று வியப்புடன் வினவினான். 

“சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் என்பது தமிழ்ப் பழமொழி. இது உமக்குத் தெரியவில்லை யென்றால் நீர் தமிழனல்ல” என்று சிந்தனை செய்ததோடு நகைக்கவும் செய்தான் நற்கிள்ளி. 

இத்தகைய விருதுகளைப் பெற்றுக் கொண்டும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் இடித்த புளி போல் நின்றிருந்த அமைச்சரை நோக்கி, சீற்றம் மிகுந்த பார்வையை யை வீசிவிட்டுப் படிகளில் இறங்கிச் சென்றான் சஞ்சயன். அமைச்சர் மாளிகையிலிருந்து கீழிறங்கியதிலிருந்து முசிறி அடியோடு மாறியிருந்தாலும் அது தெரியாததைக் கவனித்து “முசிறிக்குப் புறை பிடித்திருக்கிறது. வெளிக்குத்தான் தெரியவில்லை” என்று எண்ணமிட்டான். அவன் மாளிகையிலிருந்து இறங்கிய போது மக்கள் இயல்பாக வாழ்க்கை நடத்துவதைக் கவனித்தான். சிலர் எண்டிகளைக் கட்டிக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் வெளியூர்களுக்கு செல்வதையும் பார்த்தான். எங்கும் அமைதியே குடிகொண்டிருந்தது. எங்கும் துரிதமோ, போர் எப்பொழுது தொடங்கக்கூடும் என்ற பீதியோ இல்லை. சுள்ளியாற்றுக்கு அக்கரையில் யவனர் நடமாட்டம் இருந்தும் அளவு மீறிய பாதுகாப்போ ஆயுத வண்டிகளோ தென்படவில்லை. சுள்ளியாற்றுப் படகுகளும் சாதாரணமாகவே போய் வந்து கொண்டிருந்தன. 

இந்த நிலையால் சிறிது துணிவடைந்த சஞ்சயன் ஒரு படகிலேறி அக்கரைக்குச் சென்றான். அங்கிருந்து மெதுவாக நடந்து வில்லம்பு இலச்சினை இல்லத்தை அடைந்தான். அங்கு மட்டும் வாசலில் சிறிது பாதுகாப்பு இருந்தது. யவன வீரர் நால்வர் அதைக் காத்து நின்றனர். சஞ்சயன் அந்த இல்லத்து வாயிலை அடைந்ததும்  யவனக் காவலர்கள் அவனை நிறுத்தி “யாரைப் பார்க்க  வேண்டும்?” என்று வினவினார்கள். 

“யவனர் தலைவரை” என்றான் சஞ்சயன். 

“யாரது யவனர் தலைவர்?” என்று ஒரு காவலன் கேட்டான். 

“கிளேஸியஸ்” என்ற சஞ்சயனைக் காவலரில் ஒருவன் உற்று நோக்கினான். “அவர் தலைவராக்கப்பட்டது உனக் கெப்படி தெரியும்?” என்று வினவினான் 

“கேள்விப்பட்டேன்” என்றான் சஞ்சயன். 

இதைக் கேட்ட காவலன் பெரிதாக நகைத்தான், பிறகு விசாரித்தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “எங்கு கேள்விப்பட்டாய்?” என்று. 

”சொல்ல அவசியமில்லை” என்றான் சஞ்சயன். 

“உன்னை உள்ளேவிடவும் அவசியமில்லை” என்றான் காவலன். 

“நான் கிளேஸியஸை அவசரமாகப் பார்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினான் சஞ்சயன். 

காவலன் சிறிது சிந்தித்துவிட்டு “இவனை உள்ளே அனுப்பலாமா?” என்று இன்னொரு காவலனைக் கேட்டான். 

”அதைத் தலைவரையே கேட்டுவிடு” என்றான் இன்னொரு வீரன். 

முதலில் சஞ்சயனுடன் உரையாடியவன், “சரி, தலைவர் அனுமதி கேட்டு வருகிறேன். உன் பெயர் என்ன சொல்?” என்று வினவினான். 

“சஞ்சயன்” என்று தூதன் பெயரைச் சொன்னதும் “அட்டா! இதை ஏன் முன்னமே சொல்லவில்லை?” என்று கேட்ட வீரன் உள்ளே ஓடினான். சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து “சேரதூதரே! வாருங்கள். தலைவர் காத்திருக்கிறார்” என்று சஞ்சயனை மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றான். 

வில்லம்பு இலச்சினை இல்லத்தில், கடல்வேந்தன் முன்பு வைத்துக்கொண்டிருந்த இரண்டாவது அறையில் கிளேஸியஸ் சஞ்சயனை வரவேற்றான். அந்தச் சமயத்தில் இத்துடன் வேறு இரு யவனரும் இருந்தனர். அவர்கள் இருந்த படாடோபமான ஆடையிலிருந்தும் பெரிய வால்களிலிருந்தும் அவர்களும் முக்கியஸ்தர்களென்பதை புரிந்து கொண்டான். தவிர கிளேஸியஸும் அன்று பெரிய வாளையும் பட்டினால் செய்யப்பட்ட சிவப்பு சட்டையையும் அணிந்திருந்தான். சற்று எட்ட இருந்த ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு தலையணை மகுடம் போலிருந்ததால் அதற்கும் கிளேஸியஸ்க்கும் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டுமென்று சஞ்சயன் தீர்மானித்தான். 

அவன் கண்கள் சென்ற இடங்களைக் கவனித்த கிளேஸியஸ் புன்முறுவல் கொண்டு “அது கிரேக்க நாட்டுப் படைத்தலைவர்கள் தரிக்கும் மகுடம். முசிறியின் யவனர்கள் என்னைத் தலைவனாக்கிய பிறகு அதை எனக்குக் கொடுத்தார்கள்” என்று கூறினான். பிறகு கேட்டான் “தூதரே! உமது தூது ஓலை எங்கே? கொடும்” என்று. 

“அப்படி திட்டமான அலுவலாக நான் வரவில்லை” என்று பொய் சொன்னான் சஞ்சயன். 

கிளேஸியஸின் முகத்தில் புன்முறுவல் அதிகமாகப் படர்ந்தது. “தூதராக வராவிட்டால் ஒற்றனாக வந்திருக்க வேண்டும். அப்படி ஒற்றனாக வந்திருந்தால் உம்மை உடனடியாகத் தூக்கிலிடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றான் புன்முறுவலின் ஊடே. 

இதைக் கேட்டதும், திகிலின் வசப்பட்ட சஞ்சயன், “இல்லை தூது இருக்கிறது” என்று தன்னை சமாளித்துக் கொண்டு கச்சையிலிருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான். 

அதைப் படித்தவுடன் கிளேஸியஸ் பெரிதும் வெகுண் டான். அவன் புன்சிரிப்பு முகத்தில் உறைந்தது. ஒரே எட்டில் சஞ்சயனை அணுகி, “உண்மையைச் சொல்லும். இப்பொழுது கடல்வேந்தன் எங்கே?” என்று கேட்டு சஞ்சயன் தோள்களைப் பிடித்து உலுக்கினான். 

“தெரியாது” என்றான் சஞ்சயன் ஏதும் புரியாமல்.

“தெரியாவிட்டால் தூக்கிலாடு” என்று கூவிய கிளேஸியஸ் “டேய் யாரங்கே? இந்தத் தூதனைச் சிறையில் தள்ளு” என்று உத்தரவும் இட்டான். 

அடுத்து சஞ்சயன் மீது பாய்ந்த இரு யவன வீரர், தூதனை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்துச் செல்ல லாயினர். சஞ்சயன் “பொறு கிளேஸியஸ் பொறு” என்று கூவினான். 

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *